Advertisement

அத்தியாயம் 12

இனியா , சேனல் “சி” யில் தன் வேலையை மிகவும் ரசித்தாள் . மிகுவும் சந்தோஷமாக , தன் வேலையைச் செய்து கொண்டிருந்தாள் .

அன்று படப்பிடிப்பு தளத்தில், இனியா  பிரேக்கில் இருக்க , அப்போது அங்கே வந்த ராஜேஷ்,”இனியாம்மா  உங்களை டிஸ்கஷன் அறைக்கு வரச் சொன்னார்கள் “ என்று சொல்ல ,

“யார் அண்ணா? “

“அர்ஜுன் ஸார்… “ 

“ஓ.கே.”  என அவளும் ஜாலியாகச் செல்ல , உள்ளே விக்ரம் , அர்ஜுன் மற்றும் இரண்டு உதவி இயக்குனர்கள் இருந்தனர்.

“வா இனியா , உட்கார் “ என்று  இருக்கையை அர்ஜுன் காண்பிக்க , 

இனியா குழப்பத்தோடு அமர ,

“ புது குக்கரி ஷோவில் கலந்து கொள்கிறாயா ?”  எனக் கேட்டான்.

“தொகுப்பாளினியாகவா?” 

“இல்லை, நீ பங்கேற்பாளர், புது வீஜே” என  முடிவு செய்யப்பட்டுள்ளது.

இனியா சிறு கோபத்துடன் , “பாஸ் எனக்கு சமைக்கத் தெரியாது. “ 

“அதான் எனக்குத் தெரியுமே” எனத் தங்கவேலு ஸ்டைலில் அர்ஜுன் கிண்டல் செய்தான்.

 இனியா முறைக்க ,

உடனே சரண்டரான அர்ஜுன் , “சமையல் தெரிந்து இருக்க வேண்டிய அவசியமில்லை இனியா… , உனக்கு ஓ.கே.யா?” 

இனியாவிற்கு மனதில் ஒரு தயக்கம் , மேலும் இது தலயோட ஐடியா தான் என்ற எண்ணமும் ஓடிக் கொண்டிருந்தது . அதனால் விக்ரமைப் பார்க்காமலே பேசிக் கொண்டிருந்தாள் . 

 மீண்டும் அர்ஜூனிடம் , “ விளக்கமாகச் சொல்லுங்கள் பாஸ்”

உடனே அர்ஜுன் , “இது முழுமையான குக்கரி ஷோ இல்லை இனியா , முக்கியமாக இது காமெடி ஷோ” என விளக்கினான் .

 “ஒரு நல்ல குக் மற்றும் அவருக்குத் துனணயாக சமையலில்  அ.., ஆ..கூடத் தெரியாது நபரும் தான் ஜோடி சேர்ந்து சமைக்க வேண்டும் .”

“எப்படி…?” என இனியா விழிக்க ,

துவரம் பருப்புக்கும் , பாசி பருப்புக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள் , பொருட்களை எடுத்துக் கொடுத்து உதவி செய்வதால்  ஏற்படும் குழப்பங்கள் ,….

 பின்னர் சில நேரம் குக்குளின் மேற்பார்வையில், சமைக்கத் தெரியாதவர்கள்  சமைப்பதால் ஏற்படும் குழப்பங்கள் …. எனச்  சுற்றுகள் உள்ளன . 

ஆறு போட்டியாளர்கள் , ஆறு கோமாளிகள்  என இப்போதைக்கு எட்டு வாரம் பிளான் செய்துள்ளோம் . சனி , ஞாயிறுகளில் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது” எனப் பொறுமையாக விளக்கினான்.

“எனக்குக்   குழப்பமாக உள்ளது பாஸ், கொஞ்சம் யோசித்துச் சொல்கிறேன்…” என்று இனியா இழுக்க ,

விக்ரம் அவளைக் கூர்ந்து பார்த்து விட்டு , போனை நொண்டத் தொடங்கினான் .

அர்ஜுன் ஒருவித சங்கடத்துடன் இனியவைப் பார்த்து , சரி , நீ போகலாம்… , நாளை  கட்டாயம் உன் முடிவைச் சொல்லியாக வேண்டும் என்றான் கண்டிப்புடன்  .

“சரி” என்று கிளம்பிய இனியா , மீண்டும் அர்ஜூனிடம்,” நான் ஏதாவது சமையல் கத்துக்கனுமா ?” எனக் கேட்க ,

அர்ஜுன் வாய் திறப்பதற்குள் , “அந்த மாதிரி எந்த நல்ல காரியத்தையும் செய்து விடாதே . அறியாமை தான் இந்நிகழ்ச்சியின் கைலைட்” என்றான் விக்ரம் வேகமாக .

விக்ரம் பதில் அளித்ததைக் கண்டு வியந்த இனியா ,  “ஓ.கே. ஸார்…!  “என்று விட்டு, அர்ஜுனிடம் கண் ஜாடைக் காட்டி விட்டு நகர்ந்தாள்.

மேலும் வெளியே , சிலர் காத்திருப்பதைக் கண்டாள். பங்கேற்பாளருக்கானத் தேர்வு என்பதைப் புரிந்து கொண்டு , அர்ஜுனிடம் மேலும் விவரங்களைக்  கேட்க வேண்டும் என முடிவு செய்தாள்.

விக்ரம் சிறிது நேரம் அங்கிருந்து விட்டு, “ நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் அர்ஜுன்…”  என்று கிளம்பினான்.

பின் மற்ற பங்கேற்பாளர்களைக் கண்டு பேசிவிட்டு, அனுவையும் இனியாவையும் தேடி வந்தான் அர்ஜுன் .

அர்ஜுன் இனியாவிடம் , “அவனவன் வாய்ப்பு கிடைக்காதா? என அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்.  உனக்கு வாய்ப்புக் கிடைத்தால் , யோசித்துச் சொல்கிறேன் எனக் கெத்துக் காட்டுகிறாயா….?“ எனத் திட்டினான் .

“தொகுப்பாளினி என்றால் பராவாயில்லை பாஸ் , இது வேறு , அதான்….” என்று இழுத்தாள் .

இதில் உன் பிரச்சனை என்ன இனியா? என்று அர்ஜுன் கடுப்புடன் கேட்க ,

“பாஸ், எனக்கு சில விசயங்களில் தெளிவு தேவைப்படுகிறது , அதான்….”

அப்புறம் , “ஏற்கனவே எனக்கும் “தல”யுக்கும் நல்ல பொருத்தம் …,?  அதான் அங்கே வைத்து ஏழரையைக் கூட்ட வேண்டாம்” என நினைத்து , “யோசித்துச் சொல்கிறேன்” என வந்தேன் என்று விளக்கம் அளிக்க,

சமாதனமான அர்ஜுன்  , “சரி, சொல். என்ன விளக்கம் தேவை?”

உடனே இனியா , தன் கையை அர்ஜுன் முகத்திற்கு நேராக நீட்டி ,

ஒன்று என்று விரலைக் காண்பது “ டி.ஆர்.பி க்குக்காக தேவையில்லாமல் அசிங்கமாகத் திட்டுவது , அழ வைப்பது  என எந்த இடத்திலும் என்னுடைய தன்மானம் அடிபடக்கூடாது “, 

இரண்டு _  “அதே போல்  என் கௌரவத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் சக பங்கேற்பாளர்களுடன்   சேர்த்து வைத்துப் பேசுவது , ஓட்டுவது   போன்ற ஸிகிரிப்ட் எல்லாம் கூடவே   கூடாது  …“ என்று மணல்கயிறு கதாநாயகன் மாதிரி கண்டிஷன் போட்டாள்.

“ரொம்ப கஷ்டம் இனியா . இதெல்லாம் பார்த்தால் எப்படி மீடியாவில் நிலைத்து இருப்பாய்” என்று கவலையுடன் கேட்டான் .

இல்லை பாஸ் , “ மீடியாவிற்குள் வருவதற்கு முன் சில விசயங்களைத் தீர்மானமாக யோசித்துத்தான் வந்துள்ளேன் ” 

“ரொம்ப போட்டி நிறைந்த உலகம்டா இது, கொஞ்சம் வளைந்து கொடுக்க வேண்டும் இல்லையென்றால் கஷ்டம் இனியா …” என மேலும் விளக்கினான்.

“தெரியும் பாஸ், ஆனாலும் எனக்கென்று சில கொள்கைகள் இருக்கு. தேர்ந்தெடுத்து தான் செய்ய வேண்டும்” என நினைக்கிறேன். பார்க்கலாம்…,” என்றாள்  நம்பிக்கையாக .

“சேனல் சப்போர்ட் வேண்டாமா? சில நேரம் அவர்கள் சொல்வதற்குத் தலை ஆட்ட வேண்டும் இல்லையென்றால் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காது இனியா” என்று அர்ஜுன் எடுத்துரைக்க ,

“தெரியும் பாஸ், இங்கே இல்லையென்றால் வேற ஒரு சேனல் , அதுவும் இல்லையென்றால் இருக்கவே இருக்குது யூ டியூப்… என்று ஏதாவது ஒன்று பண்ணலாம் “ என்று கண் சிமிட்டினாள்.

அனு  ஆதரவாக தோளைத்  தட்ட ,

 இனியா சின்ன புன்னகையோடு , “ நிச்சயமாக திறமையும் , கடின உழைப்பும் பலன் தரும்” என நம்பிக்கை இருக்கிறது .” என்றாள் .

“ஓ.கே…, நீ தெளிவாக இருக்கிறாய் என்றால் சரிதான். இந்த நிகழ்ச்சியில் உனக்கு எந்தப் பிரச்சனையும் வராது . நான் இருக்கிறேன் பார்த்துக்கலாம்..” என்றான் அர்ஜுன் .

உடனே அனுவும் , “அப்புறம் என்ன இனியா…? ஓ.கேயா…?”

“பாஸ் சொல்லிவிட்டால் அப்பீல் ஏது? எனக்கு டபுள் ஓ.கே . “ 

 “என்னமோ நான் சொன்னதையெல்லாம் கேட்பது மாதிரி சீனனைப் பார்த்தாயா அனு…? “

“ நீங்க கவலைப்பட்டதெல்லாம் வேஸ்ட் , அவள் பிழைத்துக் கொள்வாள்…” என சேம் சைடு கோல் போட்டாள் அனு .

“கடைசியில் நான் தான் அவுட்டா?” என அர்ஜுன் தலையில் கைவைக்க , 

அனுவும் இனியாவும் கலகலத்தனர்.

அத்தியாயம் 13

விக்ரம் தன் அறைக்கு வந்த பின் இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தான். 

அவனுக்கு இனியாவின் செய்கையை நினைத்து , வியப்பாகவும் , குழப்பமாகவும் இருந்தது.

“ஏன் இப்படி நடந்து கொள்கிறாள் ? ஒருவேளை என் கவனத்தைக் கவர்வதற்காக இருக்குமோ? எனச் சிந்தித்தான்.

“லட்டு திங்க ஆசையா? என வாய்ப்பு கைக்கு வருகிறது . , யோசிக்கிறேன் என்கிறாளே…” எனக் கோபப்பட்டான்.

இப்படி பல்வேறு உணர்ச்சிகளில் ஆட்பட்டிருந்தான். இத்தகைய தவிப்புகள் அவனுக்குப் புதிதாக இருந்தது .இதுவரை அவன் சேனல் வளர்ச்சி தவிர வேற எதையும் பெரிதாகச் சிந்தித்து கிடையாது. 

ஆனால் இப்போது இனியா அவனை ஏதோவொரு விதத்தில் பாதிக்கிறாள் என்பது புரிந்தது . மேலும் அவளைப் பற்றி நினைக்கவும் வைக்கிறாள் என்பதையும் அவன் உணர்ந்தே இருந்தான். 

“இந்த உணர்வுகளைப் புரிந்து கொள்வதற்கும், தெளிவு பெறுவதற்காகவும் தான், அவன் கிரியேடிவ் ஹெட் ஆக இருக்கும் நிகழ்ச்சியில் அவளைப் பங்கேற்க வைத்தால் அடிக்கடி பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் , தெளிவும் வரும்…” என நினைத்தான்.

மேலும்,” அவளுடைய எக்ஸ்பிரஸிவ் முகம் , படபட பேச்சு , இந்த நிகழ்ச்சிக்குச் சரியாக வரும்” என்பதாலும்  இனியாவை பங்கேற்க வைக்க விரும்பினான் .

ஆனால், “அவளோ சொதப்பிகிறாளே…” எனப் புகைந்தான் .

பின் , “ என்றைக்கு நாம் நினைத்ததைச் செய்திருக்கிறாள்?  . எனச் சிரித்தான் . 

பின் அவன் தலையைக் கோதியவாறு ,” அது தானே தன்னை ஈர்க்கிறது…” என்றும் யோசித்தான் . 

பின் , “எப்படியும் அவளைத் தன் அருகே கொண்டு வர வேண்டும்” என முடிவு செய்து விட்டு தான் ரிலாக்ஸ் ஆனான்.

இரண்டு நாட்கள் கழித்து , அர்ஜுனை அழைத்து  நிகழ்ச்சி ஏற்பாடுகளைப் பற்றிக் கேட்டான்

“ஸார், பங்கேற்பாளர்கள், செஃப் , தொகுப்பாளர் எல்லாம் முடிவாகி விட்டது ….” 

“ஓ…! , லிஸ்டைக் கொடுங்கள் , பார்க்கலாம்…”  

அர்ஜுன் கொடுக்க , பட்டியலைப் பார்த்துக்கொண்டே வந்தவன் , சற்றே புருவத்தை சுருக்கியபடி , “ரோஜா…?”

“ஸார், கொஞ்சம் கிளாமர் இருந்தால் நன்றாக இருக்கும். மேலும்  முதல் சில வாரங்களுக்கு மக்களை உள்ளே இழுக்க வசதியாக இருக்கும்…”என்றான். 

“ஓ.கே.  ஆனால் எல்லை தாண்டக் கூடாது . இது குடும்ப நிகழ்ச்சி , ஞாபகம் இருக்கட்டும்” என்றான் கண்டிப்புடன் .

“நிச்சயமாக ஸார் “

“தென் , மேலே சொல்லுங்கள்…” என்பது போல் பார்க்க , “ ஃபில்டு அவுட் நடிகை , பிரபல சீரியல் நடிகைகள் , ஆண் நடிகர் , பாடகர், மற்றும் கோமாளிகளாகக் காமெடி நடிகர்கள் என அனைவரின்  தேர்வைப் பற்றி விளக்கினான் .

இறுதியில் இனியாவின் பெயரும் இருப்பதை உறுதி செய்து கொண்டான்.

பின் , “ ஓகே , நாம் பேசியது போல் அனைத்துத் ம் போட்டியாளர்கள்களைத் தேர்ந்தெடுத்து விட்டீர்கள் . குட்…”  எனப் பாராட்டினான்.

“இவர்களையே முடிவு செய்து விடுங்கள். தென் , கான்ஸப்ட்டும் ஒரு வடிவம் வந்து விட்டது , இனி அடுத்த நடக்க வேண்டியவற்றைக் கவனியுங்கள்” என்று கட்டளையிட்டான் .

“ஓ.கோ. ஸார்…” என்று அர்ஜுன் நகர ,

“ஒரு நிமிடம், இனியா விஷயம் என்ன? என்ன தயக்கம்?”

இனியாவின் பயம் பற்றிக் கூறினான் , “மேலும் உனக்கு எந்த பிராப்ளமும் இருக்காது . நீ ஸாரோடு தேர்வு  எனத் தைரியமூட்டிக் கலந்து கொள்ள வைத்துள்ளேன்….” எனக் கூறி , அப்படியே இனியாவின் வேண்டுகோளுக்குக் கியாரண்டியும் வாங்கினான் அர்ஜுன் .

விக்ரம் மனதிற்குள் , “ஸ்மார்ட் மூவ்…” என நினைத்தபடி , “வேண்டுகோளா ? கண்டிஷனா அர்ஜுன்?” எனப் புருவங்களைத் தூக்கி கேட்க ,

அர்ஜுன் ஒரு அசட்டுச் சிரிப்புடன் , அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். 

அத்தியாயம் 14

அடுத்தடுத்த நாட்களில் , சுற்றுகளைத் தீர்மானித்தல், படப்பிடிப்பு நேரத்தை முடிவு செய்தல் ,  செட் ரெடி செய்வது எனப் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள்.

இரவு படப்பிடிப்பு என முடிவு செய்யப்பட்டது . இதை அறிந்தவுடன் மூஞ்சியைத் தூக்கி வைத்துக்கொண்டாள் இனியா . 

“என்னாச்சு…?” என்று அனு விசாரிக்க ,

“எல்லாம் தலயோட சதி, நான் ஜாலியாக வந்து சென்றேன் . அவருக்குப் பொறுக்கவில்லை , அதான் இப்படிக் கோர்த்து விட்டுள்ளார்…” எனப் பொங்க 

 “இதெல்லாம் ஓவர் சொல்லிட்டேன் , நிறைய பிரபலங்கள் கலந்து கொள்வதால் , இரவு நேர படப்பிடிப்பு தான் சரியாக இருக்கும் . இது உனக்கு தெரியாதா? என்று அனு கேட்க ,

இனியா அசடு வழிந்தாள் .

உனக்குத் “தல”யை ஏதாவது சொல்ல வேண்டும்” என அனு திட்ட ,

“சரி, சரி, லெஸ் டென்சன்…, சும்மா தான் …, விளையாட்டுக்குத் தான் ” எனச் சரண்டரானாள்.  

அனு அவள் தோளில் இரண்டு அடி போட்டு , அடங்கவே மாட்டாயா…?”

இனியா சிரித்தபடி, “ஆனாலும் அர்ஜூன் இடத்தை நிரப்பி விட்டாய் . பாஸ் நல்லாத்தான் உன்னை டிரெயின் செய்திருக்கிறார்…” எனக் கேலி செய்தாள் .

அன்று வீட்டில் பெற்றோரிடம்  விவரத்தைச் சொல்ல, 

மீடியாவில் இதெல்லாம் சகஜம் என்பதை எதிர்பார்த்தது போல் , “  விளையாட்டுத்தனமாக இருக்காதே , ஜாக்கிரதை  குட்டிம்மா…” என்று நிறுத்திக் கொண்டனர் .

பெற்றவர்களின் கவலையை உணர்ந்தவள் , “கேப் பிக்கப் டிராப்பிற்கு வரும் . அது மட்டுமல்ல,  அர்ஜூனும் இருக்கிறார் அம்மா…” 

“சரிடா, ஆனால் ஏதாவது அசௌகரியம்…. ,  பிரச்சனை…,  “ என்றால் தயங்காமல் எங்களிடம் பேச வேண்டும் . “சரியா குட்டிம்மா?”  

“நிச்சயம் அப்பா, நான் கவனமாக இருப்பேன்.”  

அன்று முதல் நாள் படப்பிடிப்பு , பங்கேற்பாளர் ,தொகுப்பாளர் , ஜட்ஜ் என அனைவரும் அறிமுகப்படுத்திக் கொண்டனர் .  

இதில் பிரபல சின்னத்திரை நடிகை  ரோஜாவும் , வெற்றி பெற்ற சின்னத்திரை கதாநாயகன் கார்த்திக்கும் , முன்னாள் திரைப்பட நாயகி சீதாவும்  , நடுத்தர வயதான பாடகர் மணியும் மற்றும் முன்னேறும் கதாநாயகி மதியும் , மித்ராவும்  குக்குகளாகப் பங்கேற்க ,

 கோமாளிகளாக இனியாவும் , சின்னத்திரை காமெடியன்களும் பங்கேற்றனர் .

அதிலும் ரோஜா கிட்டதட்ட  ஏழு வருடமாகச் சின்னத்திரையில் இருந்தாலும் இப்போது தான் வெற்றிகளைச் சுவைக்கிறார் . பயங்கர சோஷியலாகப் பழகக் கூடியவர் . அனைத்து வாய்ப்புகளையும் பற்றிக் கொண்டு முன்னேறத் துடிப்பவர் . 

படப்பிடிப்பு தொடங்கியது . ஒரு குக் , கோமாளி என ஜோடி சேர்க்கப்பட்டனர்.  முதல்சுற்று _ சிம்பிள் சமையலாக முடிவு செய்யப்பட்டது.

முதல் நாள் படப்பிடிப்பு அறிமுகப்படலமும் , எளிய சமையலும் என எடுக்கப்பட்டது . 

கோமாளிகள் ஏதாவது கிறுக்குத்தனம் செய்ய , குக்குள் டென்ஷனாக என ஒரே ரகளையானது .

அடுத்த எபிஷோட் படப்பிடிப்பு , அடுத்த சனி , ஞாயிறு என முடிவு செய்யப்பட்டு இருந்தது . இந்த ஒரு வார இடைவெளியில் குக்குள் , தங்களுக்கு கொடுத்த உணவு பொருளுக்கான , உணவை முடிவு செய்து , அதை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது .

கோமாளிகளைப் பொருத்த வரை ஜாலிதான்.

இனியா காலையில் குட்டீஸ் ஷோ , வார இறுதி  இரவுகளில் “ருசிக்க , ரசிக்க “ (குக் ஷோ) எனப் பிஸியானாள் .

“செல்லமே “படப்பிடிப்பு நேரத்தில் சில மாற்றங்களைச் செய்து, இனியாவிற்குத் திங்கள் விடுமுறை வழங்கப்பட்டது.

தொடரும்…..

Advertisement