Advertisement

காதல் வானவில் 6

விஜய்,மிருணாளினியின் உறவு எப்போதும் ஏதோ டாம் அண்ட் ஜெர்ரி போல் தான் இருக்கும்.விஜய் எது கூறினாலும் அதற்கு எதிர்த்து பதில் கூறவது மிருணாளினியாக தான் இருப்பாள்.இருவரும் அடிக்கடி மோதிக் கொள்வர் இவர்களை சமாதனப்படுத்துவதே கீர்த்தனாவிற்கு பெரும் பாடாகி போகும்.

கல்லூரியில் வேலை வாய்ப்புக்கான நேர்காணலில் நண்பர்கள் அனைவரும் ஒரே மென்பொருள் நிறுவனத்தில் தேர்வாகியிருக்க அனைவருக்கும் பெருத்த மகிழ்ச்சி.கல்லூரி இறுதி நாளானா அன்று கீர்த்தனா தனது அறையில்,முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு அமர்ந்திருக்க,மிருணாவோ அவளை ஒரு கண் பார்பதும் பின் ஏதோ யோசனை செய்வதுமாக இருந்தாள்.அவளையே பார்த்துக் கொண்டு இருந்த கீர்த்திக்கு மனதில்,

“ஏதாவது பேசுறாளா பாரு….அழுத்தக்காரி….விஜி சொல்லுறது போல இவ சரியான திமிரு பிடிச்சவதான்….”

என்று தனக்குள் திட்டுவதாக எண்ணி வெளியில் திட்டிக் கொண்டிருக்க,மிருணாளினிக்ககோ சிரிப்பு தாங்க வில்லை இருந்தும் அடக்கிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.அவளின் மேல் உள்ள அன்பு தான் இந்த அக்கறைக்கு காரணம் அல்லவா அதனால் அவளை எதுவும் சொல்லவில்லை.

அனைவருக்கும் சென்னையில் தான் பயிற்சி வகுப்புக்கள் தொடங்க இருந்தது.விஜய்க்கும்,கீர்த்தனாவிற்கும் அதுவே சொந்த ஊர் என்பதால் எந்த பாதிப்பும் இல்லை.வருணும்,கார்த்தியும் வேறு ஊர் என்பதால் அவர்கள் ஆண்கள் தங்கும் விடுதியில் தங்க ஏற்பாடு செய்து கொண்டனர்.

கீர்த்தனா மிருணாவையும் தன்னுடன் தன் வீட்டில் தங்குமாறு கூற மிருணா பிடிவாதமாக மறுத்துவிட்டாள்.அதில் கீர்த்திக்கு சற்று வருத்தமே,அதனால் அவள் இரு நாட்களாக நீ வரவில்லை என்றால் உன்னுடன் பேசமாட்டேன்,சாப்பிடமாட்டேன் என்று பலவாறு மிரட்டி பார்த்துவிட்டாள் ஆனால் எந்த பயனும் இல்லாமல் போனது.அதனால் கோபமாக மிருணாளினியை முறைத்துக் கொண்டிருக்க,அவளோ இவளைக் கண்டு சிரிப்பை அடக்குவது தெரிய,தன் தலையனை எடுத்து வேகமாக அவளின் மீது வீசியவள்,

“இங்க நான் கோபமா இருக்கேன்…நீ என்னடானா என்னை பார்த்து சிரிச்சிக்கிட்டு இருக்க…திமிருபிடிச்சவளே….”என்று திட்டியவாறே மிருணாளினியை மொத்த,அவளோ

“ஏய் கீதூ….ஏய் கீதூ…வலிக்குது விடுடி…விடுடி…”என்று கத்தியவள் கீர்த்தனாவை தடுத்தபடி இருகைகளையும் பிடித்திருந்தாள்.

“அடியேய்….ஏன்டி…இந்த கொலைவேறி….”என்று மூச்சிறைக்க மிருணாளினி கேட்க,

“பின்ன நானே செம கோபத்துல இருக்கேன் நீ என்னை பார்த்துட்டு சிரிச்சுக்கிட்டு இருந்தா…கடுப்பா வராதா….அதான்…..”என்று கீர்த்தனா பல்லைக் கடித்துக் கொண்டு கூற,மிருணாளினிக்கு சிரிப்பாக இருந்தது.

“ஏய் கீதூ…எதுக்கு இவ்வளவு வைலன்ஸ்….”என்றவள் முகத்தை பார்க்க கீர்த்தனாவின் விழிகள் சற்று கலங்கியிருப்பதாகவே தெரிந்தது.வேகமாக அவளது முகத்தை தன் முகத்தை பார்க்குமாறு செய்தவள்,

“ஏய்…என்னடி அழுவுறீயா….”என்று கேட்க,கீர்த்தனாவோ ஆமாம் என்னும் விதமாக தலையாட்ட,

“ஏய்…என்ன இது சின்ன பிள்ளை தனமா….ஒருவேலை நான் வேலைக்கே வரலைனு சொல்லிட்டா என்ன செய்வ…”என்று சாதாரணமாக கேட்க,மிருணாளினியின் பதிலில் அதிர்ந்த கீர்த்தனா,

“என்ன வேலை வேண்டாமா….என்னடி பேசுற…”என்று பதட்டமாக கேட்க,மிருணாளினியோ சிரித்துக் கொண்டு,

“ஏய் நான் சும்மா உன்கிட்ட கேக்குறேன்….”என்று சாதாரணமாக கூறினாள்.கீர்த்தனாவோ மிருணாளினியை ஒருமாதிரி சந்தேகமாக பார்த்தாள்.அவளுக்கும் மற்றவர்கள் கூறுவது போல் மிருணாளினி ஏதோ பெரிய இடத்து பெண் என்பது மட்டும் புரிந்தது.ஆனால் அவளாக மிருணாளினியிடம் அதைக் கேட்டதில்லை.அதே போல் மிருணளினியும் அவளின் குடும்ப விஷயங்களை யாரிடமும் பகிர மாட்டாள்.தான் சொன்னவுடன் எந்த பதிலும் தராமல் தன்னையே வெறித்து பார்க்கும் தோழியை முன் சொடுக்கிட்டவள்,

“ஏய்….கீதூ….என்ன இப்படி ப்ரீஸ்….ஆகிட்ட…”என்று கேட்க,கீர்த்தனா தன் கலங்கிய விழிகளை தொடைத்துக் கொண்டு,

“உன் இஷ்டம் மிருணா…நான் எதுவும் சொல்லப்போறது இல்லை….இதோ….இது தான் என் வீட்டு அட்ரஸ்….உனக்கு டையம் இருந்தா வா….”என்று மிருணாளினியின் கையில் ஒரு சிறிய காகித்தை திணித்துவிட்டு தனது துணிகளை அடுக்க சென்றாள் கீர்த்தனா.

கலங்கிய விழிகளுடன் போகும் அவளையே பார்த்த மிருணாளினிக்கு மனதிற்கு கஷ்டமாக இருந்தது நீண்ட மூச்சை இழுத்துவிட்டவள் ஒரு முடிவுடன் தன் மொபைலை எடுத்துக் கொண்டு வெளியில் சென்றாள்.எதுவும் பேசாமல் போகும் மிருணாளினியை கண்ட கீர்த்தனாவிற்கு மனதிற்குள் மேலும் பாரம் ஏறி கொண்டது.

விஜய்க்கு அடுத்ததாக அவளின் மனதில் பதிந்த நட்பு மிருணிளினி தான்.அது என்னவோ அவளின்  மீது தனி பிரியம் கீர்த்தனாவிற்கு,அந்த அழகிய கண்களுக்கு பின் ஏதோ விவரிக்க முடியாத சோகம் இழையோடுவது போலவே அவளுக்கு தோன்றும்.அதனாலே அவளை யாரிடமும் விட்டு கொடுத்து பேசமாட்டாள்.அவ்வாறு மனதில் ஏற்பட்ட உரிமை உணர்வில் தான் அவளை தன் விட்டிலே தங்குமாரு அழைத்தது.ஆனால் அவள் மறுப்பாள் என்று தெரியும் ஆனால் மிருணாளினி தான் வேலைக்கு வருவதே சந்தேகம் என்று கூற கீர்த்தனாவிற்கு சற்று வருத்தமாக போய்விட்டது.

கைபேசியில் பேசிவிட்டு தங்கள் அறைக்குள் வந்த மிருணாளினி,

“ஏய் கீதூ…என்னோட சார்ஜ்ர் பாத்தியா…”என்று கேட்க,கீர்த்தனா எதுவும் பேசாமல் அவளின் சார்ஜரை எடுத்துக் கொடுத்துவிட்டு தன் வேலையை தொடர,

“என்ன மேடம் என் மேல கோபமா…”என்று கேட்டாள்.

”இல்லையே எனக்கு ஏன் உன் மேல கோபம் வர போகுது….”என்று ஏதோ விட்டேத்தியாக பதில் கூற,

“ஓய்…கீதூ…சாரி…சாரி…..நான் சும்மா தான் அப்படி சொன்னேன்….நான் கண்டிப்பா வேலைக்கு வருவேன்…”என்றுவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டிருந்த கீர்த்தனாவின் முகத்தை திருப்பி,

“நானும் உன்கூட உன் வீட்டுக்கு வரேன்…ஆனா அங்கேயே தங்கி எல்லாம் வேலைக்கு வரது எல்லாம் சரியாவராது….ஓகே வா…”என்று கூறிவிட்டு அவளின் பதில் எதிர்பார்த்து காத்திருந்தாள்.கீர்த்தனாவிற்கு அவள் ஏதோ பிரச்சனையில் இருப்பதாகவே அவளது முகம் காட்டிக் கொடுக்க,

“ஏய் மிருணா…ஏதாவது பிரச்சனையா…உன் முகம் ஏன் டல்லா இருக்கு…”என்று வேறு கேட்க,நொடி பொழுதில் தன் முகத்தை மாற்றிக் கொண்ட மிருணாளினி,

“அதெல்லாம் ஒண்ணுமில்லையே…ஏன் அப்படி கேட்குற….”என்று கேட்க,கீர்த்தனாவிற்கு இதற்கு மேல் அவள் பதில் கூற மாட்டாள் என்று புரிந்து போக ஒருவித சலிப்புடன்,

“என்னவோ போ…ஏதோ இருக்கு…ஆனா என்கிட்ட சொல்லமாட்டேங்குற….சரி விடு….நாளைக்கு காலையில கிளம்புனும்….நான் என்னோட திங்கிஸ் எல்லாம் எடுத்து வச்சுட்டேன்…வா உன்னோடதை சேர்ந்தே பேக் பண்ணலாம்….”என்று கூறினாள்.அதன் பின் தோழிகள் இருவரும் கதை பேசிக் கொண்டே தங்கள் பொருள்களை எடுத்து வைக்கத் தொடங்கினர்.

அடுத்த நாள் காலை நண்பர்கள் அனைவரும் ஒரே ரயிலில் சென்னை நோக்கி பயணம் செய்தனர்.இரயில் நிலையம் வந்ததும் தான் விஜய்க்கு மிருணாளினியும் தங்களுடன் வருகிறாள் என்பது தெரியும்.அவன் ஒரு முறை கீர்த்தனாவை முறைத்துவிட்டு செல்ல,மிருணாளினிக்கு எரிச்சலாக வந்தது.அவள் கீர்த்தனாவிடம் திரும்பி,

“ஏய்…நான் சொல்லல…இதுக்கு தான் நான் உங்க கூட வரலைனு சொன்னேன்…திமிர்பிடிச்சவன்….”என்று திட்ட,கீர்த்தனாவிற்கு எங்கே விஜயின் காதில் விழுந்துவிடுமோ என்று பயத்தில்,

“இப்ப எதுக்கு நீ அவனை பத்தி பேசிக்கிட்டு இருக்க…வா உள்ள…”என்று ரயிலின் உள்ளே இழுத்து சென்றாள்.விஜய்க்கு நேர் எதிரில் மிருணாளினியின் இருக்கை வேறு வர அதற்கும் இருவருக்கும் முட்டிக் கொண்டது.பின் கீர்த்தனா ஒருவழியாக இருவரையும் சமாதானம் செய்து உட்கார வைத்தாள்.விஜயுடன் சண்டை,சச்சரவுகள் இருந்தாலும் மிருணாளினிக்கு இந்த பயணம் மிகவும் இனிமையாக இருந்தது.

அவள் சிறு வயதில் பயணங்கள் சென்றது இல்லை என்பதைவிட யாரும் அவளை அன்புடன் அழைத்து சென்றதில்லை என்று தான் கூற வேண்டும்.மிருணாளினிக்கு குடும்பம் என்ற வார்த்தைகள் காதில் விழுந்தாலே கசப்பான முறுவல் மட்டுமே அரும்பும்.தனது குடும்பத்தை பற்றி பெரிதாக யாரிடமும் பகிர மாட்டாள் அதற்கு காரணம் அவளுக்கு என்று குடும்பம் என்பதே இல்லை.அவளது மனதில் சிறிவயதில் இருந்து ஏற்பட்ட காயங்களை இதோ தன்னுடன் இருக்கும் இவர்களுடன் தான் மறக்க நினைக்கிறாள் ஆனால் சில சமயங்களில் அவளையும் மீறி அந்த காயங்களும் அது ஏற்படுத்தி வலிகளும் அவள் முகத்தில் வந்துவிடுகிறது.

தனது கலங்கிய கண்களை யாரும் அறியா வண்ணம் தொடைத்துக் கொண்டு நிமிர,எதிரே அவளையே கூர்மையாக பார்த்தபடி அமர்ந்திருந்தான் விஜய்.அவனி்ன் பார்வையை கண்டவளுக்கு உடலில் ஒருவித சிலிர்ப்பு ஏற்பட,

“இவன் எப்போதிலேந்து என்னையே பார்க்குறான்….”என்று நினைத்தவள் எப்போதும் போல் அவனை அலட்சியம் செய்துவிட்டு மற்றவர்களுடன் இணைந்து கொண்டாள்.ஆனால் மிருணாளினியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த விஜய்க்கு,

“இவ முகம் ஏன் ஒருமாதிரி இருந்துச்சு…இப்ப எதுக்கு கண்ணு கலங்கினா…”என்று தனக்குள் கேள்வி எழுப்பியவாரே அமர்ந்திருந்தான்.கல்லூரி சேர்ந்த நாளில் இருந்து மிருணாளினி என்பவளை அவனும் கணிக்க முற்படுகிறான் ஆனால் அவனால் ஒருகட்டத்திற்கு மேல் அவளை அறியமுடியவில்லை.அதற்கு ஏற்றார் போல் அவளும் அவனிடம் திமிராகவே நடந்து கொள்ள விஜய்க்கு இயல்பாகவே தோன்றும் அலட்சிய பாவம் தலை தூக்கியது.

எப்போதும் இது போல் திமிராக பேசுபவர்களிடம் அவனும் அதேபோல் பேசி கடந்து சென்றுவிடுவான்.ஆனால் மிருணிளினி விஷயத்தில் மட்டும் அவனுக்கு அவ்வளவு எளிதாக கடக்க முடியவில்லை.தன் மீது முதன் முதலில் மோதிவிட்டு அலைபுரியும் கண்களுடன் நின்றவளை இன்றும் அவனால் மறக்கமுடியவில்லை.அவ்வபோது அந்த கண்கள் அவனை இம்சிக்கும்.அதுவும் அவளிடம் முகம் திருப்ப ஒரு காரணமாக அமைந்து போனது.இவ்வாறு மிருணாளினியை பற்றிய சிந்தனையிலேயே தன் வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.

ஒரே காம்போண்டிற்குள் இரு வீடுகள் பக்கத்தில் இருக்கும்.ஒன்று விஜயின் வீடு,மற்றொன்று கீர்த்தனாவின் வீடு.இருவரின் தந்தைகளும் நெருங்கிய நண்பர்கள்.அதனால் இருவரும் ஒன்றாக சேர்ந்து தான் இடத்தை வாங்கி வீடு கட்டியிருந்தனர்.இரு வீடுகளும் சிறிய வீடுகள் தான் என்றாலும் சுற்றிலும் பச்சை பசேல் என்று செடி கொடிகளால் நிறைந்து இருந்தது அந்த இடம்.சுற்றிலும் வண்ணமயமான பூக்கள் என்று பார்ப்பதற்கு சிறிய சோலைவனம் போல் இருந்தது.

கீர்த்தனா,மிருணிளினியை அழைத்துக்கொண்டு அவளின் வீட்டிற்கு வந்திருந்தாள்.மிருணாளினி இரு நாட்கள் இங்கு தான் இருப்பாள் என்று முன்பே விஜயிடம் கூறியிருந்தாள்.மிருணாளினியும் கீர்த்தியுடன் அவளின் வீட்டிற்குள் செல்லும் வரை சுற்றியிருந்த அந்த அழகான சோலையை ரசித்து பார்த்துக் கொண்டே நின்றாள்.அவளின் ரசனையான பார்வை பார்த்த விஜய்,

“அது எங்க வீடு…டையம் கிடைக்கும் போது வா…”என்று அவளிடம் கூற,முதன் முறையாக அவளிடம் தன்மையாக பேசுபவனை விழி விரித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.அவளின் பார்வையின் வீச்சை தாங்க முடியாதவனோ,

“இந்த முண்டகன்னி எதுக்கு இப்படி முழிய உருட்டி பார்க்குறா…”என்று தனது மனதிற்குள் சொல்லிக் கொள்ள,அப்போது,

“விஜிமா….எப்போடா வந்த….”என்று தேன் சிந்தும் தன் அன்னையின் குரல் வீட்டில் இருந்து வரவும்,

“ஓகே…பை…”என்று மிருணாளினியிடம் சொல்லிவிட்டு ஓடினான்.சிறுபிள்ளை போல் ஓடும் விஜயை காண்கையில் மிருணாளினிக்கு ஆச்சிரியமாக கூட இருந்தது.அவள் பார்த்த வகையில் எப்போதும் திமிருடனும்,அலட்சியத்துடன் இருப்பவன்,இன்று தன்னிடம் தன்மையாக பேசி சென்றது அவளுக்கு ஆச்சிரியமாக இருந்தது.அவள் விஜயை பற்றி சிந்தனையில் இருந்தவளை தடுத்தது கீர்த்தனாவின் குரல்.

“இங்க நின்னு என்னடி யோசனை செஞ்சிக்கிட்டு இருக்க…வீட்டுக்கு வா….”என்று அவளின் கைகளை பிடித்து அழைத்து போனாள் கீர்த்தனா.

விஜயின் சிந்தனையில் மிருணாளினி இருந்தது அவனது வீட்டை அடையும் வரைதான் தன் வீட்டை அடைந்தவுடன் அனைத்தும் மறந்து போனது.ஆனால் அவ்வளவு சீக்கிரம் நான் உன்னை விடுவதாய் இல்லை என்பது போல் சிரித்தது அவனின் விதி.

Advertisement