Advertisement

காதல் வானவில் 5

கோவையில் உள்ள பெரிய மாலில் இருந்தனர் விஜயும் அவனது நண்பர்களும்.மிருணாளினி போன் பேசி வைத்த சில நிமிடங்களிலேயே கிளம்பிவிட்டான் விஜய்.அவனுடன் வருணும்,கார்த்தியும் வந்திருந்தனர்.அவர்கள் வந்து அரைமணிநேரமாகியும் கீர்த்தனாவும்,மிருணாளினியும் இன்னும் வந்தபாடில்லை.மால் முழுவதும் சுற்றி கலைத்தவர்கள் உணவு அருந்தும் இடத்திற்கு வந்து ஒரு இடத்தில் அமர்ந்தனர்.

“டேய் மச்சி…என்னடா நம்மல வர சொல்லட்டு இவங்க ரெண்டு பேரையும் காணும்….எனக்கு இப்பவே காலை வலிக்குது…”என்று கார்த்தி அலுப்புடன் கூறினான்.

“நாங்க வர கொஞ்சம் லேட் ஆகும்னு அவ அப்பவே சொல்லிட்டு தான் போனை வச்சா…வந்திட்டு இருப்பாங்க…உன்னால முடியலைனா நீ கிளம்பு….”என்று விஜய் கூற,

“இல்ல….இல்ல….நான் இருக்கேன்…எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை….”என்று உடனே கார்த்தி பதறி மறுக்க,அவன் எதுக்கு இப்படி மறுக்கிறான் என்று உணர்ந்த விஜய்க்கு கோபமாக வந்தது.

“டேய் அவ உன்னை மதிக்கவேயில்லைனு சொல்லுறேன்…திரும்ப திரும்ப அவ பின்னாடியே சுத்திகிட்டு திரியுற….எருமை….எருமை…”என்று கோபமாக கத்த,கார்த்தியோ பல்லை காட்டிய படி அமர்ந்திருந்தான்.

“ஏன்டா நான் திட்டுறேன்…இவன் இப்படி பல்லை காட்டிக்கிட்டு இருக்கான்….”என்று விஜய் வருணிடம் கூற,அவனோ,

“மச்சி நீ இப்ப என்ன சொன்னாலும் அவனுக்கு மண்டையில ஏறாது….அங்க பாரு…”என்று கூறிவிட்டு கண்ணை காட்டினான்.வருண் காட்டிய திசையை நோக்கினான் விஜய்.அங்கு,

மெரூன் கலர் குர்த்தியில் பளிச் சென்று வந்து கொண்டிருந்தாள் மிருணாளினி.அதே அளவான புன்னகை தான் இன்றும்.ஆனால் இந்த அடர் மெரூன் கலர் அவளது வென்னிற உடலுக்கு மிக பொருத்தமாக இருந்து அனைவர் கண்ணையும் கவர்ந்தது.அவளுடன் கை கோர்த்து கொண்டு ஏதோ கதை பேசிக் கொண்டு வந்து கொண்டிருந்தாள் கீர்த்தனா.இன்று கீர்த்தனாவும் தலை குளித்தால் தலைமுடியை தளர விட்டபடி வந்திருக்க வருணுக்கு அவளிடம் இருந்து கண்ணை எடுக்க முடியவில்லை.

விஜய்க்கு மிருணாளினியின் அழகு ஒரு நிமிடம் கண்ணை கவர்வது போல் இருந்தாலும் அதை விட கண்களில் மிதமான புன்னகையுடன் அவளின் கைகளை பிடித்த படி வரும் தன் சிறு வயது தோழி கீர்த்தனாவைக் கண்டவனுக்கு சற்று பொறாமையாக கூட இருந்தது.தன் தோழியை தன்னிடம் இருந்து அவள் பிரித்துவிட்டதாகவே தோன்றியது அவனுக்கு.அதே யோசனையுடன் தன் டேபிளுக்கு திரும்ப அங்கே கண்களில் ஜோள்ளுடன் பார்த்துக் கொண்டிருந்த கார்த்தியைக் கண்டு,

“டேய் பார்த்து இங்க எல்லாரும் ஜோள்ளு மழையில மூழ்கிட போறாங்க….கொஞ்சம் வாயை மூடு….”என்று கூறி அவனது வாயை பிட்ஸா கொண்டு அடைத்தான்.அதற்குள் அவர்களை நெருங்கியிருந்தனர் தோழிகள் இருவரும்.

“ஹாய்…”என்று அனைவருக்கும் பொதுவாக கூறியவர்கள் அவர்களுடன் இணைந்து அமர்ந்துகொண்டனர்.விஜய் கீர்த்தனாவைக் கண்டவுடன் முகத்தை திருப்பிக் கொள்ள கீர்த்தனாவிற்கு கண்கள் மீண்டும் குளம் கட்டியது.அதை உணர்ந்தவன்,

“டேய் அவளை அழ வேண்டாம்னு சொல்லு….”என்று வருணிடம் சத்தமாக கூறியவன்,

“செய்யறது எல்லாம் செஞ்சிட்டு அழுகைய பாரு…”என்று முணுமுணுப்பாக கூற,

“விஜி….எது பேசனும் இருந்தாலும் என்கிட்ட நேரா பேசு…இப்படி பண்ணாத எனக்கு கஷ்டமா இருக்கு…”என்று விம்மியபடி கூறினாள்.இதை இப்படியே விட்டால் சரிவராது என்று நினைத்த வருண்,

“நீங்க இரண்டு பேரும் உங்க சண்டையை பேசி முடிவுக் கொண்டு வாங்க…”என்றவன் மிருணாளினியிடம் திரும்பி,

“வா நாம போய் ஏதாவது சாப்பிட வாங்கிட்டு வரலாம்…”என்றவன்,

“டேய் நீயும் தான்டா வா….”என்று கார்த்தியையும் அழைக்க,அவனோ மிருணாவிடம் பேச நினைத்து சரி என்றான்.அவர்கள் மூவரும் எழுந்து சென்றவுடன் விஜயின் அருகில் அமர்ந்த கீர்த்தி,

“விஜி…என்னை பாரேன்….என்கிட்ட பேசமாட்டியா…”என்று கரகர குரலில் கேட்க,

“யார் நான் தான் உன்கிட்ட பேசலை…நல்ல ஜோக் கீதூ…”என்று நக்கலாக கேட்க,கீர்த்தியோ பதில் கூற முடியாமல் தலை குனிந்தாள்.குனிந்த அவளின் தலையில் செல்லமாக தட்டியவன்,

“அப்படி என்ன என்னை விட நேத்து வந்த அவ உனக்கு முக்கிமா போயிட்டா….”என்று மிருணாளினி பத்தி கேட்க,மென்மையாக புன்னகைத்த கீர்த்தனா மிருணானளினியை ஒரு பார்வை பார்த்துவிட்டு,

“எனக்கு தெரியல விஜி…அவளும் உன்னை மாதிரியே என்னை ரொம்ப கேர் எடுத்துகுறா….அதான்…அதுமட்டும் காரணமில்லை விஜி…நான் அன்னைக்கு உடம்புக்கு முடியலைனு உங்கிட்ட பொய் சொன்னேன்….”என்று கூற,

“என்ன ஏன் பொய் சொன்ன….”என்று விஜய் முகம் சுழித்து கேட்க,கீர்த்தியின் தலை மேலும் குனிந்தது.அதுவே அவள் எதையோ தன்னிடம் மறைக்கிறாள் என்பதை உறுதிபடித்தியது.அவள் சிறு வயது பழக்கம் ஏதாவது தவறு செய்துவிட்டாள் இவ்வாறு தான் தலையை தொங்க போட்டுக் கொண்டு நிற்பாள்.அதே போல் இன்றும் இருக்க விஜய்க்கு அவளின் மீது உள்ள கோபம் எல்லாம் காணாமல் போக,

“என்ன கீதூ…என்ன என்கிட்டேந்து மறைக்கிற….சொல்லு….”என்று சற்று அழுத்தமாக ஒலித்தது.அவனை சற்று தயக்கத்துடன் பார்த்தவள் சொல்ல யோசிக்க,அந்த பயமே கூறியது விஷயம் பெரியது என்று,

“என்ன ஆச்சு கீதூ….சொல்லுரீயா…இல்ல நான்…”என்று கூறி அவன் மிருணாளினியை கூப்பிட திரும்ப வேகமாக அவனை தடுத்த கீர்த்தி,

“இல்ல நானே சொல்லுறேன்….ஆனா நீ கோப்படக்கூடாது….”என்று கூற அவளது பதட்ட முகத்தை கண்டு துணுக்குற்றவன்,

“அது நீ சொல்லுர விஷயத்தை பொறுத்து இருக்கு….”என்று அழுத்தமாக விஜய் கூற,இதற்கு மேல் அவனிடம் மறைக்க முடியாது என்று நினைத்த கீர்த்தனா,

“நான் முதல்ல நாள் ஹாஸ்ட்டல் போனதுலேந்தே என்னை அங்க தங்கியிருக்க சீனியர் பொண்ணுங்க கிண்டல் பண்ணாங்க….எனக்கு கோபம் வந்து தான் போய் வார்டன் கிட்ட அவங்களை பத்தி புகார் கொடுத்துட்டேன்.அதனால அவங்களுக்கு என் மேல கோபம் அதனால நான் ஹாஸ்ட்டல்ல எங்க போனாலும் என்பின்னாடியே வந்து தொந்தரவு பண்ண ஆரம்பிச்சிட்டாங்க…..நான் உன்கிட்ட சொல்லாம்னு தான் நினைச்சேன் அப்புறம் பெரிய பிரச்சனை ஆகிடும்னு நினைச்சு அமைதியாகிட்டேன்….ஆனா அன்னைக்கு அவங்க ரொம்ப பேசிட்டாங்க எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு….”என்று கூறிவிட்டு முகத்தை மூடி அழ,அதுவே அவர்கள் எந்தளவிற்கு அவளை தொந்திரவு செய்துள்ளனர் என்பது புரிய விஜயின் முஷ்டிகள் இறுகியது.

“என்ன மாதிரி பெண்கள் இவர்கள்…ஒரு சிறு பெண்ணை பயமுறுத்தி அதில் சுகம் காணும் இவர்கள் பெண்கள் உருவத்தில் இருக்கும் பேய்கள்….”என்று தனக்குள் அவர்களை திட்டி தீர்த்தவன்,தன் முன்னே முகம் மூடி அழுபவளை முகம் நிமிர்த்தி,

“கீதூ….இங்க பாரு…என்னை பாரு…என்ன நடந்துச்சு முழுசா சொல்லு…”என்று கேட்க,கீர்த்தனாவும் அன்றைய நிகழ்ச்சியை கூறினாள்.

அன்று,

காலையில் குளித்து முடித்து சாப்பிட சென்றாள் கீர்த்தனா.அப்போது அங்கு அமர்ந்திருந்த சில சீனியர் மாணவிகள் இவளை கண்டதும் இவளை சூழ்ந்து கொண்டு,

“ஏய் இங்க பாருங்கடி…உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா….இவளுக்கு ஒன்னு இல்ல மூணு ஆளுங்க இருக்காங்கடி….”என்று கூற,கீர்த்தனாவின் உடலோ தூக்கி போட்டது,அதில் அவளது கண்களும் கலங்க துவங்க,

“ஏய் கண்ணு கலங்குது பா….”என்று இன்னொருத்தி கூற,அதற்கு மற்ற இரு பெண்களும் பலமாக சிரிக்க தொடங்கினர்.

“அவங்க எல்லாம் என்னோட பிரண்ட்ஸ்….தப்பா பேசாதீங்க….”என்று கீர்த்தனா திக்கி திணறிக் கூற,அவர்களோ,

“எல்லாருமா உனக்கு பிரண்ட்….”என்று நக்கலாக கேட்க,அவர்களின் பேச்சு அத்து மீறி போவதை தடுக்கும் வழி தெரியாமல் கீர்த்தனா விழித்துக் கொண்டு நிற்க,

“கொஞ்சம் தள்ளுங்க…அந்த பொண்ணு முகம் தெரியலை…”என்று குரல் கேட்க அனைவரும் திரும்ப அங்கே அவர்களை எல்லாரையும் படம் பிடித்தபடி நின்று கொண்டிருந்தாள் ஒரு பெண்.

“ஆங் இப்ப தான் நல்லா தெரியுது…உங்க முகத்தை கொஞ்சும் தூக்கி காட்டுங்க….”என்று கீர்த்தியை கூற அவளோ கலங்கிய விழிகளுடன் அந்த பெண்ணை நோக்கினாள்.

“பர்வெக்ட்….இப்ப ஓகே…”என்று கூறிவிட்டு தனது மொபைலை தனது பேக்கிற்குள் வைத்துக் கொண்டாள்.அதற்குள் கீர்த்தனாவை விட்டு அந்த புது பெண்ணிடம் நகர்ந்த அந்த சீனியர் கும்பல்,

“ஏய் யார் நீ….எதுக்கு எங்களை வீடியோ எடுத்த….ஒழுங்கா அந்த மொபைலை கொடுத்துடு…”என்று அவள் கூறி முடிக்கும் முன்,

“இல்லைனா என்ன பண்ணுவ….ஆங் என்ன பண்ணுவ….”என்று அவள் இவர்களை விட மிதப்பாக கேட்க,அவளை சுற்றி இருந்த அந்த சீனியர் கேங்கிற்கு சற்று பயம் பிடித்துக் கொண்டது இருந்தும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல்,

“ஏய் நாங்க யார் தெரியுமா…”என்று இன்னொருத்தி மிதப்பாக கேட்க,

“நீ யாரவேன இருந்துட்டு போ….எனக்கு என்ன வந்தது….”என்று அவளும் திமிராகவே பதில் தர,அதற்குள் ஒருவள்,

“ஏய் இவளை பார்த்தா ஏதோ பெரிய இடம் போல இருக்கு….நமக்கு எதுக்கு தேவையில்லாத பிரச்சனை…”என்று அவளின் காதில் கிசுகிசுக்க,அவர்களில் ஒருவள்,

“ஏய் நீ என்ன இவளுக்கு எல்லாம் பயப்படுற….”என்று சற்று தெனாவட்டாக கூற,

“சரி எனக்கு பயப்பட வேண்டாம்…ஆனா போலீஸ்க்கு பயப்படுவீங்க தான…”என்று கூறி அவர்களை ஏற இறங்க பார்க்க,அவர்களோ வெளியிலும் சற்று பயந்து தான் போனர் இருந்தும்,

“உன்னை அப்புறம் பார்த்துக்குறோம்….”என்று அவளிடம் கூறிவிட்டு கீர்த்தனாவையும் அவர்கள் முறைக்க,

“என்ன செய்யனுமோ செய்ங்க….ஆனா அதுக்கு முன்னாடி….நீங்க ராக் பண்ண வீடியோ என் கையில இருக்கு அதை மறந்துட வேண்டாம்….நான் நினைச்சா உங்களை இப்பவே போலீஸ்ல பிடிச்சுக் கொடுக்க முடியும்….அதையும் சேர்த்து நியாபகத்தில வச்சுக்கோங்க…”என்றவள்,மேலும் அவர்களிடம்,

“காலேஜ் போனாவுடனே உங்களை பிரன்சிபால் கூப்பிடுவாரு…அதுக்கும் தயாராகி போங்க….”என்றுவிட்டு சென்றுவிட,அந்த சீனியர் கும்பலுக்கு கிலி பிடித்தது.அவர்கள் ஒருவித பயத்துடனே செல்ல அவர்கள் கல்லூரி சென்ற சில நிமிடங்களிலேயே அவர்களை பிரன்சிபால் அழைப்பதாக பியூன் கூற,அனைவருக்கும் பயத்துடன் சென்றனர்.அங்கு அவர்களை பிடித்து வெளுத்து வாங்கியவர் இன்னோரு முறை இது போல் நடந்து கொண்டால் காலேஜ் விட்டு நீக்க படுவீர்கள் என்று கூறி வெளியில் அனுப்பினார்.

“எல்லாம் அவளால வந்தது….அவளை…”என்று பல்லைக கடித்தவாறே ஒருவள் கூற,

“ஹலோ…சீனியர்ஸ்….என்ன செம்ம வைத்தியம் போல இருக்கே….”என்று நக்கலாக கூற,

“ஏய்….”என்று ஒருவள் எகிற

“என்ன அடுத்து என்னை என்ன செய்யலாம்னு யோசிக்கிறீங்க போல….அப்படி எல்லாம் கனவுல கூட நினைச்சிடாதீங்க…அப்புறம் உங்களுக்கு தான் கஷ்டம்….”என்று மிதப்பாக கூறிவிட்டு பிரன்சிபாலை காண சென்றாள்.

“இவளுக்கு எவ்வளவு தைரியம்….”என்று அவள் மீண்டும் குதிக்க,அதற்கு மற்றவர்களோ,

“ஏய் வாயை வச்சிக்கிட்டு சும்மா இருடி….அவளை பார்த்தா லேசுபட்டவாளா தெரியலை….இனி இதுமாதிரி யார் செஞ்சாலும் இனி நம்மளை தான் பிடிப்பாங்க….எனக்கு பயமா இருக்கு….நான் வரலைப்பா….”என்று ஒருவள் கூறிவிட்டு சென்றுவிட,மற்றவர்களும் அவள் கூறுவது தான் சரி என்பது போல் சென்றுவிட்டனர்.இவர்களுக்கு தலைவி போல் செயல்பட்டவளும் வேறு வழியில்லாமல் அவர்களுடன் சென்றாள்.

அன்று கல்லூரி முடிந்து ஹாஸ்ட்டல் வந்த மிருணாளினி தனது அறைக்கு செல்ல அங்கு தனக்கு அடுத்த கட்டிலில் அமர்ந்திருந்த கீர்த்தியை பார்த்துவிட்டு குளிக்க சென்றுவிட.அவள் வந்ததிலிருந்து அவளையே வைத்த கண்வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்த கீர்த்திக்கு,

“என்ன எதுவும் பேசாம போறாங்க….என்னை அதுக்குள்ள மறந்துட்டாங்களா….”என்று யோசித்தவாறு அமர்ந்திருக்க,அப்போது குளியல் அறையில் இருந்து வந்த மிருணாளினி தனது மொபைலை எடுத்துக் கொண்டு அமர்ந்துவிட,அவளாக பேச போவதில்லை என்று உணர்ந்த கீர்த்தனா,

“ஹாய்…என்னை நியாபகம் இல்லை….”என்று கேட்க,

“ஏன் இல்லை….அதான் காலையில பார்த்தோமே….”என்று மொபைலில் இருந்து கண்ணை எடுக்காமலையே பதில் வந்தது.

“இல்லை….அது….”என்று கீர்த்தி அவளிடம் பேச தடுமாற,அவளை திரும்பி பார்த்த மிருணாளினி,

“என்ன….”என்று கூர்மையாக கேட்க,கீர்த்தனா பதில் கூற முடியாமல் தடுமாற,அவளை பார்த்த மிருணாளினிக்கு என்ன தோன்றியதோ,

“இங்க பாரு….சாரி….உன் பேரு என்ன….”என்று கேட்க,

“கீர்த்தனா….”என்று பதில் வந்தது.

“ம்ம்…என் பேரு மிருணாளினி….”என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டவள்,கீர்த்தனாவிடம்,

“ம்ம்…கீர்த்தி….யாராவது நம்மை தொந்திரவு பண்ணா….அழுதுக்கிட்டு இருக்க கூடாது….எப்படி தைரியமா அவங்களை எதிர்கொள்ளனும் தான் யோசிக்கனும்….புரியுதா….”என்று பொறுமையாக கூற,அந்த நிமிடம் அவளின் கண் முன்னே மிருணாளினியின் உருவத்தில் விஜய் தெரிந்தான்.அவனும் இவ்வாறு தானே எப்போதும் கூறிவான் என்று நினைத்தவளுக்கு அந்த நிமிடமே மிருணாளினியை மிகவும் பிடித்துவிட,வேகமாக எழுந்து அவளை கட்டிக் கொண்டவள்,

“ரொம்ப தேங்க்ஸ் மிருணா….நான் ரொம்ப பயந்துட்டேன்….தேங்க்ஸ்….எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சி போச்சு…நீ தான் என்னோட அடுத்த பெஸ்டி….”என்று அணைத்துக் கொண்டே கூற மிருணாளினிக்கு அவளது குழந்தை தனம் மிகவும் பிடித்துவிட,முதல் முறையாக தனக்ககென்று ஒரு நட்பை உருவாக்கிக் கொண்டாள்.

விஜயிடம் அனைத்தையும் கூறி முடித்த கீர்த்தனா,அவனின் முகத்தை பார்க்க,அவனோ ஏதோ யோசனையில் இருப்பது போல் இருந்தது.அவனது தோள்களை தொட்டவள்,

“என்ன யோசனை விஜி….”என்று கேட்க,அவனோ ஏதோ யோசனையில் இருந்தவன்,

“ஒண்ணுமில்லை கீதூ….”என்று கூறிவிட்டு திரும்பி மிருணாளினியை பார்க்க அவளோ வருணிடமும்,கார்த்தியிடமும் ஏதோ பேசியிபடி இருந்தாள்.அவளை ஒருவித புருவ சுழிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்ன விஜி….நான் கேட்டுட்டே இருக்கேன்…நீ ஒண்ணும் சொல்லமாட்டேங்குற….”என்று மீண்டும் கேட்க,

“ம்ம்…ஒண்ணுமில்லை….அதான் நீ அந்த மேடத்தை உன்னோட பெஸ்டினு சொல்லுரியா….”என்று கேட்க,

“ஏய் அவளை எனக்கு பார்த்த உடனே பிடிச்சு போச்சு…ரொம்ப நல்ல பொண்ணு…விஜி…ப்ளீஸ்…விஜி…அவளை எதுவும் சொல்லாத….”என்று அவனிடம் கெஞ்ச,அவனுக்கோ சற்று சிரிப்பாக கூட வந்தது,மெல்லிதாக புன்னகைத்தவன்,

“சரி….சரி பொழைச்சு போ…”என்று கூற,அவர்கள் சிரிப்பை தூரத்தில் இருந்து பார்த்த வருண்,மிருணாளினி மற்றும் கார்த்தி.இவர்களை நோக்கி வந்தனர்,

“என்னடா பேசிட்டியா…”என்று வருண் கேட்க,

“அதான் சிரிச்சிக்கிட்டு உக்கார்ந்து இருக்காங்கலே இதுலே தெரியலை….”என்று கார்த்தி கூறினான்.பின் அனைவரும் சிறிது நேரம் அரட்டை அடித்துவிட்டு தங்கள் விடுதிக்கு கிளம்பினர்.

இதில் விஜயும் மிருணாளினியிடம் பேசவில்லை,மிருணாளினியும் விஜயிடம் பேசவில்லை,ஏன் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்கக் கூடவில்லை என்று கூறலாம்.அன்று தொடங்கிய அவர்களின் கண்மூச்சு விளையாட்டு அதன் பின் அவர்கள் கல்லூரி முடியும் வரையுமே தொடர்ந்தது.இதில் அவ்வபோது இருவருக்கும் அதிகமாக முட்டிக் கொள்ளும்,அதை சமாளிப்பது எப்போதும் கீர்த்தனாவாகிபோனாள்.

Advertisement