Advertisement

காதல் வானவில் 40 (நிறைவு பதிவு)

ஐந்தாண்டுகள் கழித்து,

தனது அறையில் கண்ணாடியின் முன் சிகையை சரி செய்து கொண்டிருந்தான் விஜய்.முகத்தில் எப்போது குடிகொண்டிருக்கும் குறுஞ்சிரிப்பு அவனின் அழகுக்கு அழகு சேர்க்கும்.தன் முழுகை சட்டையை மடித்துவிட்டு ஒருமுறை தன்னை கண்ணாடியில் பார்த்தவனுக்கு இப்போது முழுவதும் திருப்பதி.

“ப்பா….ப்பா….”என்று அழைத்தபடி ஓடி வந்தாள் அவனின் ஐந்து வயது மகள்  அதிதி.புள்ளி மான் போல துள்ளி வந்த மகளை தூக்கியவன்,

“என்னடா குட்டி….இன்னைக்கும் அம்மா துரத்துறாளா….”என்று அவளின் மூக்கை பிடித்து ஆட்ட,

“ம்ம்….ஆமா ப்பா….என்னை இங்க என்று கன்னத்தை காட்டி கிள்ளிட்டா….”என்று புகார் வாசித்தது அவனின் சிட்டு.பார்பதற்கு மிருணா போல இருந்தாலும் செய்வது எல்லாம் தந்தையை போல் தான் அதனாலே தாய்க்கும் மகளுக்கும் எப்போது முட்டிக் கொள்ளும்.

“ஏய் அதி….எங்கடீ இருக்க….”என்று கத்திக் கொண்டே வந்தாள் மிருணா.

“அச்சோ அம்மா வந்துட்டா…என்னை காப்பாத்து ப்பா….”என்று அவனை செல்லம் கொஞ்சி அவனின் பின்னே ஒளிந்து கொண்டாள் மகள்.தங்கள் அறைக்கு வந்த மிருணா,

“விஜய்…எங்க உன் பொண்ணு….டெய்லி இதே வேலையா போச்சு….இன்னைக்கு இருக்கு அவளுக்கு எங்க அவ….”என்று கூறிக் கொண்டே அறையை கண்களால் அலச,விஜயோ தாய்மையின் அழகில் மிளிர்ந்தவளை ரசித்துக் கொண்டே அவளின் கைகளை இழுத்து தன் கை வளைவிற்குள் வைத்துக் கொண்டவன் அவளின் கொழுத்த கன்னங்களில் அழுந்த முத்தம் கொடுத்தான்.

“ப்ச்…விடு…விஜய் எனக்கு வேலை இருக்கு….எங்க அதி….”என்று கேட்க,அவளின் கழுத்தில் தன் முகத்தை தேய்த்தவாரே,

“அவ எங்க இங்க வந்தா….”என்று கூற மிருணாளினி அவனை நம்பா பார்வை பார்த்துவிட்டு மீண்டும் அறையை பார்க்க,அவளின் முகத்தை தன் புறம் திருப்பியவன்,

“கொஞ்சம் என்னையும் கவனிடீ…பொண்டாட்டி….”என்று கூறிக் கொண்டே அவளின் நெற்றியில் முத்தமிட்டவாரே பின்னே நின்ற மகளிற்கு கண்ணை காட்ட அவள் சத்தம் எழுப்பாமல் வெளியில் சென்றுவிட்டாள்.மகள் சென்றவுடன் இன்னும் வசதியாக மனைவியை இறுக்கி அணைத்தவன்,அவளின் கன்னம்,கழுத்து என்று அச்சாரங்களை பதிக்க அவளும் கணவனிடம் தன்னை ஒப்புக் கொடுத்துவிட்டு நின்றாள்.

“ஞ….ஞ்ஞா….ஞ்ஞா….”என்று குழந்தை அழும் சத்தம் கேட்க,அதுவரை கணவனின் நெஞ்சில் சாய்ந்துபடி நின்றவள் வேகமாக அவனை தள்ளிவிட்டு அவர்களின் கட்டில் பக்கத்தில் இருந்த தொட்டிலை நோக்கி சென்றாள்.அங்கே கண்களை உருட்டியபடி விஜயின் ஜாடையில் ஒற்றை விரலை வாயில் வைத்தபடி கத்திக் கொண்டிருந்தான் விஜய்,மிருணாளினியின் செல்ல மகன்.

“அச்சோ என்பட்டு எந்திரிச்சிடீங்களா….”என்று மகனை வாரி முத்தம் பதிக்க,

“வர வர எல்லாம் உன் பிள்ளைக்கு தான் போகுது…..இது சரியில்லை….”என்று அவர்களின் அருகில் வந்தவன் தன் மகனை வாங்கி உச்சி முகர்ந்தான்.பிறந்து இன்றோடு இருபது நாட்கள் தான் ஆகிறது.தந்தையின் அடர்ந்த மீசை குத்த தன் குட்டி கண்களை சுருக்கி பார்த்துவிட்டு மீண்டும் மூடிக் கொண்டான்.

“பார்த்தியா உன் பையனை என்னை பார்த்துட்டு கண்ணை மூடிக்கிறத….”என்று மகனின் கன்னங்களை மீசை முடியால் மீண்டும் தீண்ட,மகனிற்கு அது பிடிக்காமல் முகத்தை சுழித்து அழுகைக்கு தயாராக வேகமாக அவனிடம் இருந்து மகனை வாங்கிய மிருணா,

“போங்க….எதுக்கு இப்ப என் பிள்ளை அழ வைக்கிறீங்க….”என்று கணவனின் முதுகில் இரண்டு அடி போட்டாள்.

“ஓய் என்னடீ கை எல்லாம் நீளுது….”என்று அவளை பின்னிருந்து அணைத்துக் கொண்டு,

“பேபி….என்னை கவனிக்கறதே இல்லை….”என்று மீண்டும் குறைபாட,

“ம்ம்….ஆமா உங்களை கவனிக்காம தான் இப்ப இருந்தேனா….என்னை மயக்கி உங்க பொண்ணை தப்பிக்க வச்சீங்கல்ல….”என்று அவள் மகனை கொஞ்சியவாரே கணவனின் வயிற்றில் இடிக்க,

“ஹா…ஹா…பார்த்துட்டியா….”

“சிரிக்காதீங்க விஜய்….கோபம் கோபமா வருது….உங்களால தான் அவ ரொம்ப அடம்பிடிக்க ஆரம்பிச்சிட்டா….”என்று முறைத்துக் கொண்டு கூற,அவளின் தலையை செல்லமாக ஆட்டியவன்,

“சரி சரி நான் பார்த்துக்குறேன்….”

“என்ன என்ன பார்த்துக்குறேன்….தினமும் அவ இதையே தான் செய்யுறா….அத்தையால அவகூட ஓட முடியல,எனக்கு இப்ப உடம்பு நல்லா இல்லை உங்களுக்கு தெரியும் தான….”என்று மிருணா படபட பட்டாசாக பொரிந்தாள்.மகள் கருவில் இருக்கும் போது மிருணாளினிக்கு ஊட்டசத்து குறைபாடு ஏற்பட அதனால் அவள் பிரசவத்தில் மிகவும் கஷ்டபட்டுவிட்டாள்.அதோடு அவளுக்கு தாய்பால் தட்டுபாடு வேறு ஏற்பட அதற்கும் மருந்து மாத்திரை என்று மகள் பிறந்து அவளால் சரியாக உண்ணகூட முடியாமல் போய்விட்டது.இதில் மகளும் சேர்ந்தே பாதிக்கப்பட்டாள் அடிக்கடி உடம்பு நோவு வந்து மகள் படுத்த வீடே இரண்டாக மாறிவிடும் அவளின் அழுகையில்.தகப்பன் கையில் மட்டுமே சற்று அடங்குங்வாள்.அதனால் மகளுக்கு ஊட்டசத்து உள்ள கஞ்சி,முட்டை என்று சிலபல பொருட்களை வேணி செய்து தருவார்.ஆனால் அதிதியை சாப்பிட வைப்பது தான் பெரும் வேலையே.இன்றும் அதே வேலை தான் கீழே வேணி அவளுக்கு கஞ்சி கலந்து வைத்திருக்க சாப்பிடமாட்டேன் என்று அடம் பண்ணிகொண்டு தன் தந்தை பார்க்க ஓடி வந்துவிட்டாள்.

விஜய்க்கு மகள் என்றால் தனி பிரியம் அதனால் அவளை யாரும் திட்டவோ அடிக்கவோ விடமாட்டான்.

“போங்க இன்னைக்கும் கஞ்சியை குடிக்க போறது இல்லை….”என்று மிருணா வருத்தப்பட,

“நான் பார்த்துக்குறேன்….நீ தம்புகுட்டிய பாரு….”என்றுவிட்டு நகர போக அவன் சட்டை பிடித்து இழுத்தவள் வன்மையாக அவனின் அதரங்களை தன் அதரத்தால் மூடினாள்.இருவருமே அவர்களின் உலகில் சஞ்சரிக்க தொடங்க,

“ஞ்ஞா….ஞ்ஞா….”என்று மகன் மீண்டும் அழ,கணவனை விட்டவள் தன் முகத்தை வேறு புறம் திரும்பி மறைக்க,விஜயோ அவளின் முகத்தை திருப்பி,

“ம்ம்ம்….தேங்க்ஸ் பேபி….”என்று இரு கன்னங்களிலும் முத்தமிட்டவன்,வேகமாக அவளிடம் இருந்து விலகி,

“ம்ம்…உன் பக்கத்தில இருந்தாலே நான் நானா இருக்குறது இல்ல….டையம் ஆச்சு…கிளம்புறேன்….”என்று கூற,மிருணா சிரித்துக் கொண்டு தலையை ஆட்டினாள்.

விஜயும்,வருணும் சேர்ந்து இப்போது தனியாக ஐடி கம்பெனி ஒன்றை நடத்திவருகின்றனர்.அவர்களின் தெழிலும் நல்லமுறையிலேயே செல்கிறது.மிருணாளினிக்கு முதல் பிரசவத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவளை வேலைக்கு செல்ல வேண்டாம் என்று விஜய் கூறிவிட்டான்.மிருணாளினிக்கு வேலைக்கு செல்வது மிகவும் பிடித்தவொன்று தான் என்றாலும் தன் உடல்நிலை கருத்தில் கொண்டே கணவன் கூறுகிறான் என்று புரிந்து கொண்டு வேலையை விட்டுவிட்டாள்.

மிருணாளினி மகனுக்கு பசியாற்றிவிட்டு அவனை தூக்கி கொண்டு கீழே வர அங்கு அதிதி சமத்தாக கஞ்சியை குடித்துக் கொண்டிருந்தாள்.அவளின் பக்கத்தில் விஜய் சாப்பிட்டு கொண்டிருந்தான்.

“ம்ம்…சீக்கிரம் கஞ்சி குடிச்சிட்டு ஒன் இட்லி மட்டும் சாப்பிடுவியாம்….”என்று விஜய் மகளுக்கு ஊட்ட,அதுவும் தகப்பனிடம் சமத்தாக வாங்கியது.

“ம்ம்….பார்த்தியா அப்பா கொடுத்தா தான் வாங்குவியா….”என்று வேணி பேத்தியை செல்லமாக கடிய,அவளோ நாக்கை துருத்தி பாசாங்கு காட்டினாள்.

“ஏய்….என்ன இது பழக்கம் அதி….பெரியவங்க கிட்ட இப்படி எல்லாம் பிகேவ் பண்ணக்கூடாது….”என்று மிருணாளினி கண்டிப்புடன் கூறினாள்.அதிதி பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு தகப்பனை பார்க்க அவனோ அமைதியாக இருந்தான்.

“நீ பண்ணது தப்புடா அதான் அம்மா அதட்டுரா….இனி இப்படி பண்ணாத சரியா….”என்று விஜய் பொறுமையாக எடுத்துக் கூறினான்.அவளும் சரி என்னும் விதமாக தலையாட்டினாள்.

“விஜய்…..நாளைக்கு பங்ஷனுக்கு எல்லாம் ரெடியானு நீயும் ஒருவாட்டி சரிபார்த்துடுப்பா….”என்றபடி வந்து அமர்ந்தார் ஆனந்தன்.விஜயின் மகனுக்கு பெயர் சூட்டும் விழா நாளை.

வேணி மிருணாளினியிடம் இருந்த பேரனை வாங்கி கொண்டு,

“நீ சாப்பிடுமா….பசிக்கும்….”என்று கூற அவளும் மறுக்காமல் அமர்ந்துவிட்டாள்.மிருணாளினிக்கு குழந்தையில் கிடைக்காத அத்தனை பாசமும் அன்பும் இப்போது கிடைத்தது.அதிலும் வேணி எப்போதும் ஒருகண்டிப்புடன் தான் இருப்பார் இருந்தாலும் அதில் அவ்வளவு அன்பு நிறைந்திருக்கும்.அதனால் மிருணாளினிக்கு வேணியின் மீது தனி பிரியம் உண்டு.

“என்ன எல்லாரு என்னை மறந்துட்டீங்கலா….”என்று கேட்டபடி தன் ஒருவயது ஆண் குழந்தையை தூக்கிக் கொண்டு வந்தாள் கீர்த்தனா.

“வாடி….சாப்பிட்டியா….”என்ற மிருணா அவளுக்கும் ஒரு தட்டை எடுத்து இட்லி வைத்து கொடுத்தாள்.அனைவரும் அமர்ந்து பேசியை கொண்டே சாப்பிட்டனர்.வேணிக்கு இவர்களை காணும் போது மனது நிறைந்து இருந்திருந்தது.வெறும் ரத்த சொந்தங்கள் எல்லாம் கூட ஒரு எல்லையில் நின்றுவிடும் ஆனால் அன்பால் பிணைந்த சொந்தங்கள் வாழ்வின் கடைசி வரை வரும் என்பதை இதோ கண்கூடாக காண்கிறார்.

அடுத்த நாள் காலை வீடு முழுவதும் சொந்தங்களால் நிறைந்திருந்தது.ஆனந்தனும்,சிதம்பரமும் வந்தவர்களை கவனித்துக் கொண்டிருந்தனர்.வருண் தனது மகன் அகரனையும்,விஜயின் மகள் அதிதியும் வைத்துக் கொண்டு சாமாளித்துக் கொண்டிருந்தான்.இருவரும் ஒன்று சேர்ந்தாள் சேட்டை அதிகாமாக தான் இருக்கும் இருவரையும் பார்பதற்கே தனியாக ஒரு ஆள் இருக்க வேண்டும்.

தங்கள் அறையில் மிருணாளினி தயாராகி கொண்டிருந்தாள்.பச்சை நிற பட்டு உடுத்தி அதற்கு ஏற்ப ஆபரணம் அணிந்து பார்பதற்கு அப்ஸரஸ் போல இருந்தாள்.அதிதிக்கும் அதே பச்சை வண்ண பட்டு பாவாடை சட்டை,விஜயும் பச்சை சட்டை வெள்ளை வேட்டி அவர்கள் நால்வரும் ஒரே கலரில் உடை அணிந்திருந்தனர்.கண்ணாடியில் பொட்டை வைத்துக் கொண்டிருக்க அப்போது உள்ளே வந்த விஜய்,மிருணாளினியை கண்டு ஒருநிமிடம் மூச்சை அடைத்து நின்றுவிட்டான்.ஏற்கனவே அவள் அழகு தான் இப்போது அனைவரின் கவனிப்புலும் இன்னும் அழகாக தெரிந்தாள்.

தன்னை இமைக்காமல் பார்க்கும் கணவனை பார்த்து ஒற்றை புருவத்தை அவள் ஏற்றி இறக்க அதில் மொத்தமாக விழுந்தவன்,அவளிடம் நெருங்கி இடைவளைத்து,

“பேபிமா….ரொம்ப அழகா இருக்க….அப்படியே உன்னை எங்காவது தூக்கிட்டு போயிடலாமானு இருக்கு….”என்று அவளின் காதுகளில் கிசுகிசிப்பாக கூற,அவனின் நெஞ்சில் அடித்தவள்,

“போங்க விஜய்….நீங்க கூட தான் அழகா இருக்கீங்க….”என்று அவனை இறுக்கமாக கட்டிக் கொண்டு,

“தேங்க்ஸ் விஜய்….தேங்கயூ சோ மச்….எல்லாத்துக்கும்….”என்று மனமுருகி கூற,அவளின் தலையில் தன் தலையை முட்டி,

“ஏய் என்னடா இது நல்ல நாளும் அதுவுமா கண்கலங்கிட்டு….”என்று அவளின் கண்ணீரை துடைத்துவிட்டு,

“வா போகலாம்…எல்லாரும் நமக்கு தான் வெயிட் பண்ணுறாங்க….இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா நான் கண்டிப்பா என்னோட கண்ட்ரோலை இழந்துடுவேன்….”என்று கூற,அவனது நெஞ்சில் செல்லமாக தட்டிவிட்டு அவனின் கைகோர்த்து நடந்தாள்.இனி வாழ்நாள் முழுவதும் அவனின் கையை அவள் விடப்போவதும் இல்லை அவனும் விடபோவதுமில்லை.

உறவினர்கள் நண்பர்கள் அனைவரின் ஆசிர்வாதத்துடன் விஜய்,மிருணாளினி மகனுக்கு தீரன் என்று பெயரிட்டனர்.பெயரிட்டு விழா முடிந்ததும் விஜய் மிருணாளினி குழந்தைகள் உடன் குடும்பமாக புகைப்படம் எடுக்க அவர்களின் முகத்தில் உறைந்திருந்த சிரிப்பு அவர்களின் வண்ணமயமான வாழ்க்கை எடுத்துரைத்தது.

புயலில் சிக்கிக் கொண்ட அவர்களது காதல் இப்போது வானவில்லாக மாற துவங்கியுள்ளது.அதன் நிறங்கள் பிராகசிக்க பொறுமையும்,அன்பும் வேண்டும் என்று விஜயும்,மிருணாளினியும் நன்கு உணர்ந்திருந்தனர்.அதனால் அவர்களின் காதல் வானவில் போல நெடுநாள் பிராகாசிக்கட்டும் என்று வாழ்த்தி விடைபெறுவோம்.

சுபம்.

Advertisement