Advertisement

காதல் வானவில் 4

இருவாரங்கள் கடந்திருந்தது கீர்த்தனா விஜயிடம் பேசி,அவனே அவளிடம் வலிய போய் பேச சென்றாலும் பேசாமல் முகத்தை திருப்பிக் கொண்டு சென்றுவிடுவாள்.இன்றும் அதேபோல் விஜயிடம் முகத்தை திருப்பிக் கொண்டு அவள் சென்றிருக்க,விஜயக்கு அவ்வளவு குமுறலாக இருந்தது.அதை எல்லாம் வருணிடம் அவன் ஒப்பிவித்துக் கொண்டிருந்தான்.

“டேய்….இன்னைக்கும் என்கிட்ட பேசாம முகத்தை திருப்பிக் கிட்டு போறாடா கீதூ….வரவர அந்த பிசாசோட சேர்ந்து இவளும் கேட்டு போயிட்டா…எல்லாம் அவளாள….”என்று மிருணாளினியை விஜய் திட்ட தொடங்க,

“ஏய் கீதூ பேசலைனா அதுக்கு மிருணா என்னடா பண்ணுவா…அவளை ஏன் மச்சி திட்டுற….”என்று கார்த்தி மிருணாளினிக்கு ஆதரவாக வர,தன் கையில் வைத்திருந்த கிரிகேட் மட்டையை அவன் மீது வேகமாக எடுத்து வீசினான்.அது அவனின் தோள்களில் பதம் பார்த்தது.

வின் வின் என்று எரிந்த தோள்பட்டையை தேய்த்துக் கொண்டே,

“டேய் வருண்….இவனுக்கு என்னடா எப்பா நான் மிருணாளினியை பத்தி பேசினாலும் அவ்வளவு கோபம் வருது….”என்று கார்த்தி சிலிர்த்து கொண்டு கேட்க அதற்கு வருண் பதலளிக்கும் முன்,

“ம்ம்…அடுத்தவாரம் பரீட்சை வருதுல….விஜய் நோட்ஸ் குடு அதை குடுனு வா…அப்ப பேசிக்கிறேன்…ஏன் அந்த திமிர் பிடிச்சவ கிட்ட போய் கேளு அவ கொடுப்பா….நீ எத்தனை தடவை அவகிட்ட பிரண்டிலியா பேசியிருக்க என்னைக்காவது உன்னை மதிச்சு பதில் பேசியிருக்களா….பெருசா பேச வந்துட்டான்….”என்று கோபமாக விஜய் கத்த கார்த்தியின் வாய் தன் போல் கம் போட்டது போல் ஒட்டிக் கொண்டது.

பின்னே அவனுக்கு பரீட்சையில் அனைத்தும் படிக்க சொல்லிக் கொடுத்து உதவுவது விஜய் தான் அவனை பகைத்தால் தனக்கு தான் நஷ்டம் என்று உணர்ந்தவன் அமைதியாகிவிட்டான்.அதோடு அவனுக்கு விஜய் மிருணாளினியை பற்றி கூறுவதும் சரியெனவே பட்டது.

விஜய் கூறியது போல் தான் மிருணாளினி இருப்பாள்.யாரிடமும் சற்று என்று பேசிவிட மாட்டாள்.அனைவரிடமும் ஒரு ஒதுக்கம்.சிலரிடம் ஒரு அலட்சிய பாவம் மட்டுமே காட்டுவாள்.அதுவே அவளது வகுப்பு முழுவதும் அவளை மிகவும் திமிர் பிடித்தவள் என்று பலரை கூற வைத்தது.கீர்த்தனா ஒருவளே அவளது உற்ற தோழி.அவளிடம் மட்டும் தான் சற்று இளக்கமாக இருப்பது போல் தெரியும்.ஆனால் அவளிடமும் மிருணாளினி சில விஷயங்களை பகிரமாட்டாள்.

அந்த அறையில் சில நிமிடங்கள் அமைதியில் கரைய,

“ப்ச்….கீதூ என்கிட்ட இப்படி முகம் திருப்பனது எல்லாம் கிடையாது டா….சின்ன வயசுல நான் எவ்வளவு சண்டை போட்டலும் அடுத்த நாளே என்கிட்ட வந்து பேசிடுவா….எனக்கு என்னமோ ரொம்ப கஷ்டமா இருக்கு…”என்று உண்மையான வருத்தத்துடன் விஜய் கூறினான்.

“டேய் மச்சி விடு…என்ன இது சின்ன பிள்ளை மாதிரி….நாளைக்கு நான் அவகிட்ட பேசுறேன்….”என்று வருண் கூற,

“ஒரு மண்ணும் வேண்டாம்…..என்கிட்ட முறுக்கிட்டு போறாள்ல அவளே வரட்டும்…”என்று முறுக்கி கொண்டு விஜய் எழுந்து சென்றுவிட,

“திரும்பியும் முதல்லேந்தா…”என்று தங்கள் தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டனர் வருணும்,கார்த்தியும்.

மகளிர் விடுதியில் கீர்த்தனாவும் விஜயை பற்றிய நினைவுடன் அமர்ந்திருக்க,

“ஏய் கீதூ…என்ன ஆச்சு ஏன் ஒரு மாதிரி இருக்க…”என்று மிருணாளினி அவளின் பக்கத்தில் அமர்ந்து கேட்க,கீர்த்தனாவிற்கு சற்று என்று விஜயின் நினைவு வர அவளின் மடியில் தலை வைத்து படுத்துவிட்டாள்.மிருணாளினிக்கு அவளது செய்கை சற்று அதிர்ச்சி தான் என்றாலும் தன்னிடம் இவ்வளவு உரிமையாக பழகுபவளை தள்ளி நிறத்தவும் முடியவில்லை அவளாள்.கீர்த்தனா அவளின் மடியில் படுத்ததும் மிருணாளினியின் கைகள் தன்போல் அவளது தலையை கோதிவிட,

“என்ன கீதூ…என்ன ஆச்சு…”என்றாள் மென்மையாக.

“எனக்கு விஜி நியாபகம் வந்திடுச்சு….அதான்…”என்று பாவமாக கூற,மிருணாளினிக்கு ஒன்றும் புரியவில்லை,

“அவனை தான் இப்ப காலேஜ்ல பார்த்ததான அப்புறம் என்ன…”என்று கேட்க,அவளது மடியில் இருந்து எழுந்த கீர்த்தி,

“பார்த்தேன் தான் ஆனா பேசலை…அதான் என்னவோ போல இருக்கு….”என்று கூறினாள்.

“ஏன் பேசலை நீ…”என்று மிருணாளினி கேட்க,அன்று நடந்ததை அனைத்தையும் அவளிடம் கூற,அவளோ கோபமாக,

“என்ன பண்ணிவச்சிருக்க கீதூ நீ….எனக்காக இப்படி அவன்கிட்ட ஏன் சண்டை போட்ட….அவனுக்கு என்னை பிடிக்கலை அதனால என்னை உங்க பிரண்ட் லிஸ்டல சேர்த்துகல…இதுல என்ன இருக்கு….நீ ஏன் அவன்கிட்ட இதுக்கு போய் சண்டை போட்ட….”என்று திட்ட தொடங்க,கீர்த்தனாவிற்கு அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை கேவலாக வெடிக்க மிருணாளினியை கட்டிக் கொண்டு அப்படி ஒரு அழுகை.

“நான் தப்பு பண்ணிட்டேன் மிருணா….எங்க அம்மா இறந்ததுக்கு அப்புறம் எனக்கு எல்லாமே விஜி தான்….அப்பாவை விட விஜினா அவ்வளவு பிடிக்கும் எனக்கு…அவனுக்கும் நானா உயிர்…அவன் தான் அன்னைக்கு ஏதோ கோவத்தில பேசிட்டான்னா நானும் அவன்கிட்ட அப்படி பேசாம இருந்திருக்கக் கூடாது….”என்று புலம்பிக் கொண்டே அழ மிருணாவிற்கு இது அனைத்தும் தன்னால் தான் என்று குற்றவுணர்வு அதிகரித்தது.

“ஏய் கீதூ…சரி அழதா…கிளம்பு….”என்று அவளை தேற்ற,

“எங்க போறோம் மிருணி…நான் எங்கேயும் வரலை…”என்று தேம்பிக் கொண்டே கூற,

“உன் பெஸ்டியை பார்க்கக்கூட நீ வரலையா…”என்று கூற,கீர்த்தனாவின் கண்கள் மின்ன,

“என்ன விஜயை பார்க்கவா…எப்படி நாம தான் இப்ப ஹாஸ்ட்டல் வந்துட்டோமே எப்படி பார்க்குறது….”என்று பரபரப்பாக கேட்க,மிருணாளினிக்கு அவளின் குழந்தை தனத்தில் சிரிப்பு தான் வந்தது.

“ஓய்…இப்ப மணியை பாரு மூணு தான் ஆகுது…இப்ப நாம வெளியில போயிட்டு….அப்படியே உன் பெஸ்டியை பார்த்துட்டு ஆறு மணிக்குள்ள ஹாஸ்ட்டல் வந்துடலாம்….என்ன ஓகே தான….”என்று கேட்க கீர்த்தனாவின் தலை வேகமாக ஆடியது.இன்று வகுப்பு அரைநாள் தான் என்பதால் மதியமே விடுதி வந்திருந்தனர் இருவரும்.

“நம்ம போறோம் சரி…விஜி அங்க எப்படி வருவான் மிருணி…”என்று அதி முக்கிய சந்தேகத்தை கீர்த்தனா கேட்க,சிரிப்பை மறந்த மிருணாளினி இன்று தன்னையும் மீறி சிரித்து இருந்தாள்.அவளது சிரிப்பை ஏதோ அதிசியம் போல் பார்த்துக் கொண்டு இருந்தாள் கீர்த்தனா.அவளும் வந்ததிலிருந்து மிருணாளினியை கவனிக்கிறாள் தானே அவளது முகத்தில் எப்போதும் ஒரு இறுக்கம் இருக்கும்.சிரிப்பது போல் பாவனை மட்டுமே காட்டும் அவளது முகம்.ஆனால் இன்று அனைத்தும் இறுக்கங்களும் மறந்து சிரிக்கிறாள் போலும் அவ்வளவு அழகா இருந்தது அவளது முகம்.அதிலும் அவளது கன்னத்தில் விழுந்த குழி அவளை மேலும் பேர்ரழகியாகவே காட்டியது.கீர்த்தனா மிருணாளினியை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டு இருக்க அவளின் முன்னே சொடுக்கிட்ட மிருணாளினி,

“என்ன மேடம் அப்படி பார்க்குற…”என்று கேட்க,

“ம்ம்…நீ சிரிச்சா ரொம்ப அழகா இருக்க மிருணி…இன்னைக்கு தான் நீ இப்படி சிரிச்சு பார்க்குறேன்….”என்று மனதை மறையாமல் கூறினாள் கீர்த்தனா.சற்று என்று மிருணாளினியின் முகம் இறுக்கம் என்னும் முகம்முடியை போட்டுக் கொண்டது.அதை கீர்த்தனா கவனித்தாள் தான் ஆனால் எதுவும் கேட்கவில்லை.ஏனென்றால் அவள் ஏதாவது கேட்டாள் மிருணாளினியிடம் பதில் இருக்காது.இது அவள் மிருணாளியிடம் பழகிய இந்த சிறிது காலங்களில் அவள் தெரிந்து கொண்டது.

“சரி சொல்லு…எப்படி நாம போற இடத்துக்கு விஜி வருவான்…”என்று விட்ட இடத்தில் இருந்து கீர்த்தி கேட்க,

“ஏய் மண்டு…அதான் உன்கிட்ட அவன் நம்பர் இருக்குல்ல….கால் பண்ணி சொல்லு….”என்று மிருணாளினி கூற,

“அட ஆமா இல்லை….இரு கூப்பிடுறேன்…”என்று கூறிவிட்டு தனது கைபேசியை எடுக்க,மிருணாளினி முகம் அலம்ப சென்றாள்.அவள் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வெளி வரும் போது கீர்த்தி தன் போனை வைத்துக் கொண்டு ஏதோ யோசனையில் இருக்க,

“ஏய் என்னடி…போனை வச்சுகிட்டு யோசனை பண்ணிகிட்டு இருக்க….”என்று கேட்டாள்.கீர்த்தியோ பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு,

“மிருணி…ப்ளீஸ்…எனக்காக நீ உன் மொபைலிருந்து கால் பண்ணி வர சொல்லேன்….நான் கால் பண்ண கண்டிப்பா என் நம்பரை பார்த்துட்டு கட் பண்ணாலும் பண்ணுவான்….எனக்கு இன்னும் கஷ்டாமா இருக்கும்…ப்ளீஸ்….”என்று கெஞ்ச,மிருணாளினி தன் கைபேசியிலிருந்து விஜய்க்கு அழைத்தாள்.

விடுதியில் மொட்டை மாடியில் கையில் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு ஏதோ பராக்கு பார்த்துக் கொண்டு இருந்தான் விஜய்.வருணும்,கார்த்தியும் அடுத்த நாள் சமர்பிக்க வேண்டிய பணிதாள்களை எழுதிக் கொண்டிருந்தனர்.அப்போது விஜயின் கைபேசி சிணுங்கியது அவன் யார் என்று பார்க்க புது எண் என்பதால் அதை எடுக்கவா வேண்டாமா என்று யோசனை செய்து கொண்டிருக்க,

“டேய் மச்சி…என்னடா போனையே வெறிச்சு பார்த்துக்கிட்டு இருக்க அட்டன் பண்ணு….”என்று வருண் கூறினான்.

“இல்லடா ஏதோ புது நம்பர் அதான்….”என்று விஜய் யோசனையாக கூற,

“மச்சி என்கிட்ட கொடு நான் பேசுறேன்…”என்று கார்த்தி ஆர்வமாக கேட்க,அவனை முறைத்த விஜய் கைபேசியை இயக்கி காதில் வைத்தான்.

“ஹலோ….”என்று தயக்கமாக வந்தது ஒரு பெண்ணின் குரல்.விஜய்க்கு அந்த குரலே காட்டிக் கொடுத்தது அது மிருணாளினி தான் என்று.இத்தனைக்கும் அவளிடம் அவன் பேசியதே கிடையாது.ஆனாலும் அவளின் குரல் அவனது மனதில் பதிந்து போயிருந்தது.அது எப்படி என்று அவன் யோசனை செய்து கொண்டிருக்க மிருணாளினியோ,

“ஹலோ….நான் மிருணாளினி பேசுறேன்….”என்று அவனுக்கு தன்னை அறிமுக படுத்தும் விதமாக பேச,

“தெரியும் சொல்லு….”என்றான் விஜய்.

“ஆங்…எப்படி தெரியும்…”என்று மிருணாளினி கேட்க,தன்னை வெளிபடுத்திவிட்டதை உணர்ந்தவன் உடனே சுதாரித்து,

“நீ எதுக்கு கால் பண்ண…கீர்த்திக்கு ஏதாவது பிரச்சனையா…”என்று கேட்க,அவன் வேண்டும் என்று தான் பேச்சை மாற்றுகிறான் என்று மிருணாளினிக்கு புரிந்தது.மதியம் வந்ததிலிருந்து கீர்த்தனா அழுது கொண்டிருப்பதை கூறியவள் கல்லூரி எதிரில் இருந்த ஒரு காபி ஷாப்பிற்கு வர சொல்ல,விஜய்,

“காப்பி ஷாப்பெல்லாம் வேண்டாம்….யாராவது பார்த்தா நல்லா இருக்காது….”என்றுவிட்டு சற்று தொலைவில் இருந்த மாலிற்கு வரும் படி கூறிவிட்டு போனை வைத்தான்.கைபேசியை வைத்தவன் தன் கைபேசியில் இருந்த மிருணாளியின் எண்ணை வெறித்து நோக்கிவிட்டு அதை அழிக்க கை வைத்தவன் பின் என்ன நினைத்தானோ முசுடு என்று பெயரை வைத்து சேமித்து வைத்தான்.

அதேபோல் மிருணாளினியும் விஜயின் எண்ணை ஹார்ட்பீட் என்று பதிவு செய்தாள்.ஆம் இன்றும் அவனது இதயத்துடிப்பு அவளின் காதுகளில் கேட்பது போல் ஒருவித பிரம்மை.அதனாலே அந்த பெயரை வைத்தாள்.சிலரை பார்த்த சில நிமிடங்களில் பிடித்துவிடும் அது போல் தான் மிருணாளினிக்கும் விஜயின் மீது ஒருவித பிடித்தம் இருப்பது உண்மை ஆனால் அவனது திமிரான பேச்சு இவளையும் தூண்டிவிட மிருணாளினியும் அவனைக் கண்டு கொள்ளமாட்டாள்.

இந்த இரண்டாம் சந்திப்பிலாவது இருவரும் பேசுவார்களா இல்லை முட்டிக்கொள்வார்களா என்று இருவரும் யோசனை செய்தவாறே கிளம்பினர்.வண்ணங்கள் அற்ற மிருணாளினியின் வாழ்வில் விஜயின் மீது ஏற்பட்ட பிடித்தம் வானவில்லை போல் வண்ணங்களை தோற்றிவிக்குமா இல்லை இருளை கொண்டுவருமா என்பதை அவர்களின் விதி தான் முடிவு செய்யும்.

Advertisement