Advertisement

காதல் வானவில் 39

ஒற்றை படுக்கை கொண்ட அறையில் இருந்த பெரிய கண்ணாடி ஜன்னல்களின் வழியே வெளியே தெரிந்த ஓங்கி உயர்ந்த மலைகளையே பார்த்துக் கொண்டிருந்தாள் மிருணாளினி.மலைகளின் மீது வெள்ளை போர்வை போர்த்தியது போல இருந்தது பனி,அதன் மீது மிதமான சூரிய ஒளி படர இன்னும் அழகாக தெரிந்தது அந்த இடம்.பார்க்க பார்க்க தேவிட்டாத காட்சி மெதுவாக அதனை உள்வாங்கியபடி நின்றிருந்தாள்.

இயற்கையை ரசிக்கும் மாதுவின் இடையை இறுக்கமாக வளைத்தது ஒரு வன்கரம்.அந்த கரம் மெல்ல ஊர்ந்து அவளின் இடையை சுற்றி வளைத்து அவளை தன் அணைப்பிற்குள் கொண்டுவந்தது.அவளும் அவனின் உடல் கதகதப்பிற்குள் விரும்பியே தன்னை கொடுத்தாள்.அவளின் ஒற்றை தோளில் தன் தலையை வைத்து அவளது கன்னங்களில் அதரங்களினால் கோலமிட்டவாரே,

“ம்ம்….மேடத்துக்கு என்மேல உள்ள கோபம் போகலையா…..”என்று குரல் குழைந்து கேட்டான் விஜய்.மிருணாளினி பதில் தரவும் இல்லை அவனை நோக்கி திரும்பவும் இல்லை அமைதியாக வெளியில் தெரிந்த காட்சிகளை பார்த்தபடி இருந்தாள்.முகத்தில் அரும்பி இருந்த குறும்புன்னகை கூறியது அவள் கோபமாக இல்லை என்று இருந்தும் கணவனிடம் சிறிய பிணக்கு என்பது போல் காட்டிக் கொள்ள முயன்றாள்.அவளை அறியாதவனா அவளவன் முகத்தில் கூத்தாடிய குறும்புடன் அவளின் அங்க வளையவுகளை அளந்தபடியே,கழுத்தில் அதரங்களால் கூசி அவளை சிலிர்க்க வைத்து,

“ம்ம்….என் பேபிக்கு கோபம் இல்லை போலையே….சும்மா கோபம் போல பாவலா காட்டுறாளே…..ம்ம்ம்….இதுவும் நல்லா தான் இருக்கு…..”என்று அவளை மேலும் மேலும் சிவக்க வைத்துக் கொண்டே பேச,

“போதும்….போதும்….விடுங்க….”என்று அவனிடம் இருந்து விடுபட போராட,அவனின் அணைப்பு இன்னும் இறுகியதே தவிர தளரவில்லை.

“ம்ம்….இவ்வளவு நேரம் இப்படி நின்னு தான ரசிச்ச…..இப்ப மட்டும் என்னடீ…..”என்று அவளின் பின்கழுத்தில் அழுத்தமாக இதழை பதித்தவாரே கேட்க,மிருணாளினிக்கு ஒருமுறை உடல் சிலிர்த்து அடங்கியது.

“அச்சோ விடுங்க விஜய்….நான் வீட்டுக்கு பேசனும்….அத்தை வெயிட் பண்ணுவாங்க….”என்று அவனிடம் கூற,

“இவ்வளவு நேரம் உங்க அத்த நியாபகம் உனக்கு இருந்த மாதிரியே தெரியலையே….இப்ப மட்டும் என்ன….சும்மா இருடி….அதெல்லாம் நாளைக்கு பண்ணிக்கலாம்…..”என்று அவளை கொஞ்சம் கொஞ்சமாக தன் வசமாக்க முயல,சற்று என்று அவனை தள்ளிவிட்டவள்,

“ஒதை வாங்குவீங்க….போங்க….எனக்கு பசிக்குது ஏதாவது சாப்பாடு வாங்கிட்டு வாங்க போங்க….”என்று அவனை விரட்ட,அவனோ அவளின் கைகளை பிடித்து இழுத்து அவளை தன்மேல் போட்டுக் கொண்டு,

“ம்ம்…எனக்கும் தான் ரொம்ப பசிக்குது பேபி…..”என்று கூற,அவனை முறைத்தவள் இப்போது போராடினால் கண்டிப்பாக கோபப்படுவான் என்று உணர்ந்தவள்,

“ப்ச்….விஜய்….நிஜமா எனக்கு பசிக்குது….நேத்து நைட் சாப்பிட்டது….ப்ளீஸ்…..”என்று கெஞ்ச,கண்கள் திறந்து அவளை பார்த்தான் அவளது வாடிய முகம் அவள் கூறுவது உண்மை என்று கூறியது.

“நிஜமா ப்பா….ரொம்ப பசிக்குது….”என்று அவள் வயிற்றை பிடித்தவாறு கூற,விஜயின் முகத்தில் குறுநகை.அவனின் புன்னகையுடன் கூறிய முகத்தை இருகைகளிலும் தாங்கியவள் அவன் கண்களை பார்த்துக் கொண்டே,

“ஐ லவ் யூ…..ஐ லவ் யூ சோ மச்…..”என்று இரு கன்னங்களையும் மாற்றி மாற்றி முத்தம் கொடுத்தாள்.வெகுநாட்களுக்கு பிறகு மனையாள் கொடுத்த முத்தம் தித்திப்பாக இனிக்க,அவனும் அவளின் இருகன்னங்களிலும் முத்தம் பதித்தவன் அவளை விட்டு விலகி,

“சரி ரெஸ்ட் எடு நான் போய் சாப்பாடு வாங்கிட்டு வரேன்….”என்று கூறிவிட்டு வெளியில் போனான்.அவன் சென்றவுடன் மூச்சை இழுத்துவிட்டவள்,

“ப்பா….எப்படியெல்லாம் பேசி அனுப்ப வேண்டியதா இருக்கு…..மாயக்காரன் பேசியே மயக்கிடுவான்….அவன் வரதுக்குள்ள அத்தைகிட்ட பேசிடுவோம்…..”என்று பேசிக் கொண்டே திரும்பி தன் கைபேசியை தேட அங்கு அறையின் வாசலில் தோரணையாக நின்றிருந்தான் விஜய்.

“அச்சோ….இவன் இன்னும் போகலையா….ஆண்டவா….இப்ப என்ன சொல்லி அனுப்புறது….ஒருவேளை நான் பேசினது எல்லாம் கேட்டுருப்பானோ….என்று தனக்குள் சொல்லிக்கொண்டு திருதிருவென முழித்தாள்.அவளின் அருகில் அவன் நெருங்கி வர இவள் பயந்து பின் நகர கட்டிலில் தடுக்கி விழுந்தாள்.அவனோ நிதானமாக குனிந்து அவளுக்கு அருகில் இருந்த பர்ஸை எடுத்து கொண்டு வெளியில் செல்ல இருந்தவன் கதவின் அருகில் சென்று திரும்பி அவளை பார்க்க அவளோ பிடிபட்டதில் முழிக்க,

“வந்து வச்சுக்குறேன் டீ….உன்னை….”என்று அவளை மிரட்டிவிட்டே சென்றான்.அவன் சென்றவுடன்,

“போடா….ரொம்ப தான் மிரட்டுர….எல்லாம் உன் இஷ்டம் தான….திமிருபிடிச்சவன்…..”என்று தன் பக்கத்தில் இருந்த தலையணையை எடுத்து கதவை நோக்கி வீச அதே நேரம் மீண்டும் உள்ளே நுழைந்தவன் முகத்தில் தலையணை விழுந்தது.

“அச்சோ போச்சு….இன்னைக்கு எனக்கு நேரம் சரியில்லை….”என்று மிருணா தன் விரலை கடிக்க,விஜயோ அவளை முறைத்துவிட்டு,

“இதுக்கும் சேர்த்து இருக்குடீ உனக்கு….”என்று நாக்கை மடித்து மிரட்டிவிட்டே சென்றான்.அவளுக்கு என்ன உணவு வேண்டும் என்று கேட்க வந்தவன் முகத்தில் பஞ்சனை வந்து விழ,எதிரில் தன் விரலை கடித்த படுத்திருந்த மனையாளை மனதில் செல்லமாக திட்டிக் கொண்டு உணவு வாங்க சென்றான்.

கேஷ்மீர் வந்திருந்தனர் இருவரும் தேன்நிலவிற்காக.கீர்த்தியின் திருமணம் முடிந்து இரண்டு நாட்கள் கடந்திருந்தது.மிருணாளினி கீர்த்தியுடன் இருந்து அனைத்தும் ஒரு அன்னையை போல செய்திருந்தாள்.விஜயிடம் எதுவும் கேட்கவில்லை விஜயும் அவளிடம் எந்தவித மறுப்பும் கூறவில்லை.அத்தனை சந்தோஷம் கீர்த்தனாவிற்கு எப்போதும் மிருணாளினியின் மீது தனி பாசம் உண்டு இப்போது அது மேலும் வலுப்பெற்றது.நீலவேணிக்கும் மனதில் திருமணத்திற்கு முன் இருந்த கலக்கம் இப்போது இல்லை தன் மகனிற்கு அனைத்தும் உறவுகளையும் கடவுள் கொடுத்துவிட்டார் என்றே எண்ணினார்.

திருமணம் முடிந்து இருதினங்களாக மிருணாளினி கீர்த்தனாவின் வீட்டில் தான் இருந்தாள்.சிதம்பரத்திற்கு வீட்டில் அனைத்தும் உதவியும் செய்து அவரை தனியாக விடாமல் பின்னாடியே சுற்றினாள்.

“மிருணாமா….நான் சந்தோஷமா தான் இருக்கேன்டா….கீர்த்தி எங்க பக்கத்தில தான போறா…..அதான் என்னை பார்த்துக்க நீ இருக்கியே…..அப்புறம் எனக்கு என்ன கவலை….”என்று சிதம்பரம் கூறியேவிட்டார்.இருந்தும் மிருணாவினால் அவரை தனியாக விட மனம் வரவில்லை.கீர்த்தி வேறு அத்தனை முறை கூறி சென்றிருந்தாள் தந்தையை கவனித்துக் கொள்ளும்படி.அப்போது தான் விஜய் திடீர் என்று ஊர் பயணம் என்று கூறி அவளை அழைத்து வந்தது.ஏர்போட் வரும் வரை அவளுக்கு தெரியாது எங்கு போகிறோம் என்று தெரிந்தவுடன் அகத்தில் மகிழ்ச்சி தான் என்றாலும் தன்னிடம் கூறவில்லையே என்று சிறுபிணக்கு இருக்க தான் செய்தது.

அதோ இதோ என்று கேஷ்மீர் வந்து இரண்டு நாட்கள் கடந்துவிட்டது.தேன்நிலவு ஜோடிகள் ரூமே கதி என்று கிடந்தனர் என்று நீங்கள் நினைத்தால் அது தான் தவறு மிருணாளினியும்,விஜயும் கேஷ்மீரில் உள்ள முக்கிய இடங்களை இந்த இருநாட்களாக நன்றாகவே ரசித்தனர்.இரவு தூங்குவதற்கு மட்டுமே ரூமிற்கு வருவர்.இரவில் ஒருவரைஒருவர் அணைத்துக் கொண்டு தூங்குவர் அவ்வளவே.

அன்று மிருணாளினிக்கு எழவே மனதில்லை நேற்று இரவில் இருந்து குளிர் அதிகமாக இருக்க இதமாக அந்த ராஜையைக்குள்ளேயே இருக்க வேண்டும் போல் இருந்தது.படுக்கையின் பக்கத்தில் பார்க்க கணவனை காணவில்லை அவன் எங்கு என்று பார்க்க,குளியலறையில் குளிக்கும் சத்தம் கேட்டது.குளித்து தலையை தோட்டிக் கொண்டே வந்த விஜய்,

“என்ன மேடம் கிளம்பிலையா….சீக்கிரம் கிளம்பி வா….”,

“என்ன இந்த குளிர்ல வெளில போறோமா….நான் வரலை….”என்று சோம்பலாக கூற,

“ஏய்….இந்த ரூம்லேயே இருக்கவா நான் இவ்வளவு தூரம் டிக்கெட் புக் பண்ணி வந்திருக்கேன்….”என்று விஜய் கடுகடுவென கூற,தான் போர்த்தியிருந்த போர்வையை அவனின் மேல் எறிந்தவள்,

“போறேன்….மூஞ்சியை பாரு….”என்று திட்டிவிட்டு செல்ல,

“ஓய் என்மூஞ்சிக்கு என்னடீ….”என்று விஜயும் கத்தினான் பதிலுக்கு.

குளித்து முடித்து வந்தவள் கண்ணாடியின் முன் தலையை வாரிக் கொண்டும்,கணவனை திட்டிக் கொண்டும் இருந்தாள்.

“எல்லாரும் தேன்நிலவுனா பொண்டாட்டிய சுத்துவாங்க….ஆனா இங்க…..எல்லாம் என் நேரம்….”என்று அவள் பாட்டிற்கு புலம்ப,

“என்ன சொன்ன….”என்று பக்கத்தில் கேட்ட கணவனின் குரலில் திடுக்கிட்டு திரும்ப,இடையில் கையை வைத்து முறைத்தபடி இருந்தான் விஜய்.

“ஒண்ணுமில்லையே….”என்று மிருணாளினி வேகமாக கூறிவிட்டு மீண்டும் கண்ணாடியை பார்த்து திரும்பி கொள்ள,அவளை தன்னை பார்க்க திருப்பியவன்,

“ஓய் என்ன சொன்ன….ஊர் சுத்துறத விட்டு உன்ன சுத்த சொல்லுறியா….”என்று அவளை இடைவளைத்தவாறே கேட்க,அவனிடம் இருந்து விடுபட முயன்று கொண்டே,

“ம்ம்….ஆமா இவர் அப்படியே என்னை சுத்தி வந்துட்டாலும்….போடா….”என்று அவனின் நெஞ்சில் குத்த,அடக்கமாட்டாமல் சிரித்தான் விஜய்.

“சிரிக்காத….சிரிக்காத….அதை நானே சொல்லனும் தான நீ எதிர்பார்த்த….திமிருபிடிச்சவனே….”என்று கணவனை சரியாக கணித்து கூற,அதற்கும் அவனிடம் சிரிப்பு மட்டுமே கோபத்தில் அவனின் கன்னத்தை கடிக்க,அவனும் அவளின் கன்னத்தை கடிக்க,

“ஆவ்….”என்று கத்தி அவனை தள்ளிவிட்டு ஓட,அவளை பிடித்து தன் வளைவிற்குள் கொண்டுவந்தவன் அவளின் முகம் எங்கும் முத்தமிட்டு,

“ம்ம்….பேபி நீ மட்டும் தான் என்னை பத்தி கரக்டா தெரிஞ்சி வச்சுருக்க….”என்று கூறிக் கொண்டே அவளை தன் வசமாக்கிக் கொண்டான்.அதன்பின் கேஷ்மீரில் இருந்து கிளம்பும் வரை இருவரும் ஒருவரை ஒருவர் சுற்றி வந்தனர்.

அன்று இருவரும் கிளம்பு நாள் இரவு ஒன்பது மணிக்கு பிளைட் காலையிலிருந்தே மிருணாளினி ஏதோ யோசனையாகவே இருந்தாள்.அவளாக தன்னிடம் கூறட்டும் என்று விஜயும் விட்டுவிட்டான்.மதியம் வரை அதே நிலையில் அவள் இருக்க அவளின் தலையை தட்டிய விஜய்,

“என்னடீ இல்லாத மூளையை வைச்சு யோசிக்கிட்டு இருக்க….”என்று கிண்டல் செய்ய,அவனை முறைத்தவாள் முகத்தை திருப்பிக் கொண்டாள்.அவளின் மடியில் சாவகாசமாக படுத்தவன் அவளின் முன் உச்சி முடியை ஒதுக்கிய வாரே,

“என்னடீ…..இங்கு இருந்து போக பிடிக்கலையா….”என்று கேட்க,

“ம்ம்ம்….பிடிக்கல தான்….ஆனா போகனுமே….”என்று உண்மையை ஒத்துக் கொண்டாள்.

“அடியே அப்ப நிஜமாவே இதை நினைச்சு தான் காலையிலேந்து மூஞ்சிய உம்னு வச்சிருக்கியா….”என்று விஜய் அதிர்ந்து கேட்க,

“அதுவும் ஒரு காரணம்….”என்று அவள் தன் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு கூற,அவளின் தலையை செல்லமாக தன் தலையோடு மோதியவன்,

“அப்ப நான் நினைச்சது சரி தான் வேற என்ன இந்த மண்டைக்குள்ள ஓடுது…..”என்றவன் அவளின் முகத்தையே கூர்ந்து பார்த்தான்.

“அடேய்….நீ நினைக்கிற மாதிரி எதுவும் நினைக்கல….”என்றவள்,

“அது….இன்னைக்கு தாத்தா போன் பண்ணாங்க….அவருக்கிட்ட அந்த ஹர்ஷா பத்தி கேட்டேன்….அவரு என்னடானா அவனை பத்தி நீ ஏன் யோசிக்கிற….நீ உன் லைப்ப என்ஜாய் பண்ணு சொல்லிட்டு வச்சுட்டார்…..”என்று ஏதோ சோகம் போல அவள் கூற,விஜயோ அவளை முறைத்தபடி மடியில் படுத்திருந்தான்.அவனின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

“ஹி ஹி ஹி…..அது நம்ம சேப்டிக்கு தான் கேட்டேன்….”என்று அவள் அசடு வழிய,

“இந்த நல்ல நேரத்துல எதுக்குடீ அந்த மங்கிய பத்தி பேசுற எரிச்சலா வருது….”என்று விஜய் கோபமாக கூற,

“அச்சோ கோச்சிக்காத விஜய்….அவன் மீண்டும் நம்ம ஏதாவது தொல்லை செஞ்சானா அதுக்கு தான்….”என்றாள் மனதில் ஒருவித பயத்துடன்.அவளை தன் முகம் நோக்கி இழுத்தவன்,

“இங்க பாரு மிருணா…..எவன் வந்தாலும் நாம சேர்ந்து சாமாளிப்போம்…. நீ டென்ஷன் எடுத்துக்காத….அவன் இனி நம்ம பக்கமே வரமாட்டான்….அதுமாதிரி உன் தாத்தா செக் வச்சுட்டார்….”என்று கூற அவனை புரியாமல் பார்த்தாள் மிருணாளினி.

“என்ன பார்க்குர….அவனோட ஷேர் எல்லாம் இப்ப உங்க தாத்தா கையில போயிடுச்சு….அதனால அவன் அதை மீட்டு எடுக்குறதுல இப்ப பிசி ஆகிட்டான்……அவனை அடிச்சே கொன்னுருப்பேன்….ஆனா உங்க தாத்தா தான் நான் பார்த்துக்குறேன் சொல்லிட்டார்…..அதனால விட்டேன்….”என்று அன்றைய நிகழ்வின் தாக்கம் இன்றும் குறையாமல் பேசினான் விஜய்.

“சரி சரி….விடு விஜய் இனி அவனை பத்தி கேட்க மாட்டேன்….”என்று அவள் கூற,

“அதெல்லாம் முடியாது நீ இப்ப என்னோட மூட ஸ்பாயில் பண்ணிட்ட அதுக்கான தண்டனை உனக்கு உண்டு….”என்று அவளை தன் பாணியில் தண்டித்தான்.இருவரின் வாழ்வும் கொஞ்ச கொஞ்சமாக வண்ணம் பூச தொடங்கியது.

Advertisement