Advertisement

காதல் வானவில் 38

தன் முன்னே இருந்த மடிக்கணினியை வெறித்தபடி அமர்ந்திருந்தாள் மிருணாளினி.மனது வேலையில் ஈடுபட மறுத்தது.திருமணம் முடிந்து இதோ மேலும் இரண்டு வாரங்கள் ஓடிவிட்டது.ஆனந்தனும்,வேணியும் இரு நாட்களுக்கு முன் தான் வீடு திரும்பியிருந்தனர்.வீடு இப்போது சற்று பழைய நிலைக்கு திரும்பியிருந்தது.ஏதோ யோசனையில் இருந்தவளை கலைத்தாள் வனிதா.அவளுடன் பணிபுரிபவள்.

“ஓய் மிருணா….”என்று இரண்டு முறை அழைத்தும் அவளிடம் அசைவில்லை என்று புரிந்து அவளின் தோள்களை பலமாக உலுக்க,

“ஆங்….என்ன வனி….”என்று கேட்க,

“ம்ம்….சுத்தம்….என்ன புதுபொண்ணு….இன்னும் கனவுலேந்து வெளியில வரலையா….”என்று கிண்டலாக கேட்க,அவளை மிருணா முறைக்க,

“அய்யோ…நான் பயந்துட்டேன் மா….”என்று பயந்தவள் போல நடிக்க,மிருணா அவளின் பக்கத்தில் இருந்த நோட் பேடை எடுத்து அடித்தாள்.

“என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க இரண்டு பேரும்….”என்று அவர்களின் டில் வந்து சத்தம் போட,

“சாரி சார்…..”என்று இருவரும் ஒருசேர கூற,அவர்களை முறைத்தவர் மிருணாளினியிடம் திரும்பி,

“மிருணா கம் டூ மை கேபின்….”என்று கூறிவிட்டு சென்றார்.

“எல்லாம் உன்னால தான்….”என்று வனிதாவை இன்னும் இரண்டு மொத்து மொத்துவிட்டு சென்றாள். டில்லின் அறைக்கு செல்ல,

“வா மிருணா உட்கார்….”என்று எதிரில் இருக்கும் இருக்கையை காட்டினார்,

“மிருணா….உங்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேச தான் கூப்பிட்டேன்….”என்று பீடிகை போட,மிருணாவிற்கு ஏதோ மணியடிப்பதை போல் இருந்தது.ஆனாலும் தன் முகத்தில் எதுவும் காட்டாமல் அமர்ந்திருந்தாள்.

“அது….விஜய் டீம்ல இப்ப ஒரு ஆள் குறையுது உன்னை அவர் டீம்க்கு கேக்குறார்….அவங்க புராஜக்ட் ஆன்கோயிங்ல இருக்கு இன்னும் ஒன் வீக்கல அவங்க சப்மிஷன் பண்ணியாகனும்…நீங்க ஏற்கனவே அந்த புராஜக்ட்ல ஓவர்க் பண்ணவங்க தான அதான் கேக்குறார்…”என்று கேட்க,மிருணா அமைதியாக அவர் கூறுவதைக் கேட்டவள்,

“சார்….நான் ஏற்கனவே அந்த புராஜக்ட்ல சரியா ஒவர்க் பண்ணலனு தான் இங்க என்னை சேஞ்ச் பண்ணாங்க….அதுமட்டுமில்லாம எனக்கு இப்ப அந்த டீம்ல ஜாயின் பண்ண விருப்பமில்ல…ஐ ம் சாரி….”என்று அவரிடம் மறுத்துவிட்டு வந்துவிட்டாள்.

தனது இருக்கைக்கு வந்தவளுக்கு கோபம் கோபம் மட்டுமே திமிருபிடிச்சவன் எல்லாம் அவன் நினைச்ச மாதிரி நடக்கனும் நினைப்பு.எத்தனை தடவை மன்னிப்பு கேட்டிருப்பேன் பேசுனான இப்ப இவன் கூப்பிட்டா நான் போகனுமா முடியாது என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

மிருணாளினிக்கும்,விஜயக்கும் பனிப்போர் நிகழ்ந்து கொண்டிருந்தது.அன்று தன் மனதை கொட்டியதற்கு பிறகு மிருணாளினி எவ்வளவோ முறை அவனிடம் மன்னிப்பை யாசித்துவிட்டாள் அவனோ மனம் இறங்க மறுக்க மிருணாளினிக்கு என்ன செய்து அவனை மலையிருக்குவது என்று புரியவில்லை.இதில் மற்றவர்கள் முன் எப்போதும் போல் பேசுபவன் தனிமையில் அவளிடம் பேச்சை குறைத்துக் கொள்வான் அவள் பேசினாலும் இருவார்த்தைகளில் பதில் வரும்.

மதிய இடைவேளையில் மிருணாவும்,கீதூவும் அமர்ந்து ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்.கழுத்தில் முன்பைவிட சற்று கனமான தாலி சங்கிலி நெற்றியில் போட்டு வகுட்டில் குங்குமம் உதட்டில் மின்னும் சிரிப்பு என்று முன்பைவிட ஒளிர்ந்தாள் மிருணாளினி. அவளையே ரசனையுடன் கீர்த்தி பார்க்க,அவளின் முகத்தின் முன்னே சொடுக்கிட்டவள் என்ன என்று கேட்க,

“நீ இப்ப தான் மிருணீ ரொம்ப அழகா இருக்க….”என்று கூற,மிருணாவின் முகத்தில் வெட்க புன்னகை.

“ஏய்….கீதூ….என்ன நான் சொல்ல வேண்டியது எல்லாம் நீ சொல்லிக்கிட்டு இருக்க….”என்று கேட்டபடி வந்து அமர்ந்தான் விஜய்,

“அதான மச்சான்….”என்று ஒத்து ஊதியபடி கீர்த்தியின் அருகில் அமர்ந்தான் வருண்.

விஜய் மிருணாளினியின் அருகில் அமர்ந்தவுடன் யாரும் அறியாமல் அவனின் கையை கிள்ள அதே போல் அவனும் அவள் கையை கிள்ளினான்.வருண் இதையெல்லாம் கவனித்தாலும் கவனிக்காதது போல கடந்துவிடுவான்.அவனது கீதூவோ எப்போதும் போல் பேச்சிலேயே கவனமாக இருப்பளே தவிர இதையெல்லாம் கவனிக்க தெரியாது.

“ப்பா…..இந்த பூர்ணி போனதுக்கு அப்புறம் தான் கொஞ்சம் டீமே நிம்மதியா இருக்குற மாதிரி இருக்கு….”என்று கீர்த்தனா கூற,மிருணா ஒருமுறை விஜயை கூர்மையாக நோக்கிவிட்டு கீர்த்தியின் புறம் திரும்பிவிட்டாள்.ஆம் பூர்ணிமா வேறு ஒரு பிரான்ஞ்சிற்கு மாறிவிட்டாள்.விஜய் தான் அவளுக்கு உதவி செய்தது மாறுவதற்கு.புராஜக்ட் முடியும் தருவாயில் இருப்பதால் மாற்ற முடியாது என்று அவனின் மேளாலர் கூற இவன் அனைத்தையும் தான் பார்த்துக் கொள்ளவதாக கூறி அவளுக்கு வேறு கிளையில் மாற்றல் வாங்கி கொடுத்தான்.இதை அனைத்தையும் அவன் மல்லிகா என்னு ஒருவருக்காகவே செய்தான் என்பதை மிருணாவும் அறிவாள்.

“மச்சி எல்லா வேலையும் நீ மட்டும் எப்படிடா முடிப்ப….நான் ஹெல்ப் பண்ணவரேன்டா….”என்று வருண் கேட்க,

“நீ முதல்ல கல்யாண வேலையை பாரு….இதை பத்தி எல்லாம் டென்ஷன் எடுத்துக்காத….நான் பார்த்துக்குறேன்….”என்று விஜய் அழுத்தமாக கூறினான்.

“விஜி….விஜி….நான் பண்றேன்டா உனக்கு ஹெல்ப்…..”என்று கீதூ பெருந்தன்மையாக கூற,

“மச்சி வா இப்பவே நாம டீல்கிட்ட சொல்லிட்டு வந்துடுவோம் இந்த புராஜக்ட்லேந்து நாங்க விலகிக்கிறோம்னு….”என்று வருண் தீவிர முகபாவத்துடன் கூற கீர்த்தி அவனின் தோள்களை அடித்து புண்ணாக்கினாள்.வெகுநாட்களுக்கு பிறகு நண்பர்கள் அனைவரும் சிரித்து பேசிக் கொண்டிருந்துவிட்டு மீண்டும் வேலையை தொடங்க கிளம்பினர்.

“நாளையிலேந்து நான் லீவ்….எனக்கு போர் தான் அடிக்கும்….மிருணா நீயும் லீவ் போடுடி…..”என்று தோழியின் தோள்களை பற்றிக் கொண்டு கேட்க அவளோ விஜயை பார்த்தாள்.அவளும் கீர்த்தியுடன் இருக்க லீவ் போடலாம் என்று தான் இருந்தாள் ஆனால் எங்கே கணவன் முறைத்துக் கொண்டு இருந்தான் அதனால் போடவில்லை.இப்போது வரை இருவரும் மௌன பேச்சாளர்கள் தான் தேவைக்கு அதிகமாக பேசவில்லை என்பதை விட பேசி இருவரும் ஒருவரை ஒருவர் புண்ணாக்கிக் கொள்ள விரும்பவில்லை என்பது தான் உண்மை.

“நீ லீவ் போட்டா அவளும் போடனுமா….போடி….”என்று விஜய் கீர்த்தியை தலையில் தட்ட,

“போடா ரொம்ப தான் பண்ணுற….மிருணீ வீட்டுக்கு போனதும் இவன் மண்டையில நாலு தட்டு தட்டி வைடீ….”என்று மிருணாவிடம் புகார் வாசிக்க மிருணாளினியின் முகத்தில் விரிந்த புன்னகை.அழகிய பிங்க் நிற அம்பரல்லா சுடிதாரில் தேவதையென இருந்தவளை இழுத்து அணைக்கும் வேகம் எழுந்தது விஜய்க்கு இருந்தும் இருக்கும் இடம் உணர்ந்து தன்னை நிதானபடுத்திக் கொண்டான்.வருணும்,கீர்த்தியையும் முதலில் போக சொல்லியவன் மிருணாவிடம் திரும்ப அவள்,

“சொல்லுங்க….என்கிட்ட என்ன சொல்லுனும்…..”என்று கேட்டாள்.அவளை நிதானமாக தலை முதல் கால் வரை பார்க்க,அவளுக்கு தான் அவஸ்தையாகி போனது தன் உடலை நெளித்து,

“ம்க்கும்….இது ஆபிஸ்….”என்று நியாபக படுத்த,

“ம்ம்…எனக்கும் தெரியும்…”என்று அவனும் தோரணையாக கூறினான்.

“திமிருபிடிச்சவன்….”என்று அவள் இதழ்கள் முணுமுணுக்க,

“இந்த திமிருபிடிச்சவனுக்கு ஏத்த திமிருபிடிச்சவதான நீ….”என்று சிரியாமல் அவன் கூற,மிருணாவால் அவனை முறைக்க மட்டுமே முடிந்தது.

“ம்ம் சரி….நான் இன்னைக்கு ஈவினிங் வரமாட்டேன்….நீ கேப்ல போயிடு….”என்று கூற,

“இதுக்கு தான் நான் என்னோட ஸ்கூட்டில வரேன்னு சொன்னேன்….”என்று பல்லைக் கடித்துக் கூற,அவளை முறைத்தவன்,

“இன்னும் இரண்டு நாளைக்கு அட்ஜஸ் பண்ணிக்க…வேற வழியில்லை உனக்கு….”என்று அவன் அசராமல் கூற,அவனை அறையலாமா என்று தான் இருந்தது மிருணாளினிக்கு.எல்லாம் இவன் இஷ்டம் என்று மனதிற்குள் மட்டுமே திட்ட முடிந்தது.

திருமணத்திற்கு முன் அனைத்திலும் அவள் முடிவு தான் ஆனால் திருமணத்திற்கு பின் அனைத்தும் விஜயின் முடிவாகி போனது.அவனின் கண்டிப்பு அனைத்திலும் அவளுக்கான அக்கறை ஒளிந்திருக்கும் அதுவே அவளை அவனிற்கு அடிபணிய செய்யும்.இதை தானே தேடினாள் தனக்காக ஒருவர் வேண்டும் அக்கறையாக,கண்டிப்பாக அனைத்திலும் தன்னுடன் வர வேண்டும் என்று.அவள் தேடிய அனைத்தையும் அவளுக்கென தந்தான் அவளது கணவன்.

மாலை ஆறு மணி போல மிருணாளினி தன் வேலைகளை முடித்துக் கொண்டு கேப்பிற்காக வேகமாக கீழே வர அங்கு அவளுக்காக காத்திருந்தான் விஜய்.

“விஜய் நீ எங்க இங்க….”என்று கேட்க,

“ப்ச் பேச நேரமில்லை சீக்கிரம் ஏறு….நான் உன்னைவிட்டு திரும்பி ஆபிஸ்க்கு வரனும் வேலையிருக்கு….”என்று கூற,அவளோ அவனை முறைத்தபடி நின்றாள்.

“ப்ச் என்னடி….”என்று சலிப்பாக கேட்க,அவள் அதே நிலையில் இருக்க,

“மிருணா விளையாட இது நேரமில்லை….நிஜமா எனக்கு நிறைய வேலையிருக்குடி….”என்று கூறினான்.

“நீ உன் வேலையை முடிச்சிட்டே வா….நான் கேப்ல போயிக்குறேன்….”என்று அவள் அழுத்தமாக கூற,அவளை முறைத்தவன்,

“என்னடீ விளையாடுறியா….உனக்காக நான் வேலை எல்லாத்தையும் விட்டுட்டு வந்துருக்கேன்….நீ என்னடானா கேப்ல போறேன்னு சொல்லுற….”என்று இப்போது கோபமாகவே கேட்க,மிருணாளினி நிதானமாக,

“விஜய் ப்ளீஸ் கோபப்படாத…..நீ ஏற்கனவே வொர்க் டென்ஷன்ல இருக்க….இதோட என்னை டிராப் பண்ணிட்டு திரும்பி வரது எல்லாம் சரியா வராது….”என்று எடுத்துக் கூற,

“ப்ச் போடி…..”என்று சலிப்பாக முகத்தை திருப்பினான்.அவனுக்கு அவளுடன் சில நிமிடங்கள் இனிமையாக கழிக்க வேண்டும் வீட்டிற்குள் சென்றால் தன்னை போல சில வேண்டாத நியாபகங்கள் வந்து அவன் மனதை அலைக்கழிக்க அவளிடம் அதை கோபமாக கொட்டிவிடுகிறான்.அதனாலே வெளியிடங்களில் அவளுடன் கழிக்க விரும்புகிறான்.மிருணாளினிக்கும் அவனின் எண்ணம் புரிந்து தான் இருந்தது ஆனால் அதே போல் அவனின் நலனிலும் அக்கறையுன்டு அதனாலே அவள் மறுத்தாள்.சற்று நேர யோசனைக்கு பின் மிருணா,

“சரி ஒண்ணுபண்ணலாம் நீ முடிச்சிட்டு வர வரைக்கும் நானும் வெயிட் பண்ணுறேன்….”என்று கூற,

“அது சரிவராது…..எனக்கு வேலை நிறையா இருக்கு மிருணா லேட் நைட் ஆகும்….”என்று கூற,

“ப்ச்….ஒண்ணு நானே போயிக்குறேன் இல்லை….நீ உன் லேப்டாப்பை தூக்கிட்டு வந்து வீட்ல வேலை பாரு…..”என்று கடுப்பாக கூற,

“வீட்டுக்கு வந்தா வேலை பார்க்குற மூடே வரமாட்டாங்குது நான் என்ன பண்ண….”என்று விஷமாக கூற,அவனை முறைத்த மிருணா,

“நான் போறேன்…..நீ நான் சொல்லுறு மாதிரி வந்தா வா….இல்லை வேலையை முடிச்சிட்டு வா….போயிட்டு திரும்பி வரது இந்த வொர்க் டென்ஷன் டையத்துல நான் ஒத்துக்கமாட்டேன்…..”என்று அழுத்தமாக கூற,அவள் கழுத்தை நெறிப்பது போல் வந்தவன் கையை உதறிவிட்டு,

“இங்கேயே இரு லேப்டாப்பை எடுத்துட்டு வரேன்….”என்று கூறிவிட்டு சென்றான்.மனைவி கூறுவதில் உள்ள கருத்தை விஜய் எப்போது மிதப்பு கொடுப்பான் அதே போல் தான் அவளும் இருப்பாள் அதுவே அவர்களை பல சிக்கல்களில் இருந்து வெளி வர உதவியது.இருவரும் ஒருசேர வீடு வந்தனர்.வீட்டில் நுழைந்தவுடன் விஜய்,

“ம்மா….எனக்கு வேலையிருக்கு எனக்கு சாப்பாடு மேல கொடுத்துவிட்டுருங்க……இன்னும் நாலு நாளைக்கு சாப்பாட்டுக்கு எல்லாம் என்னை எதிர்பார்க்காதீங்க….”என்று படபடவென கூறிவிட்டு தனது அறைக்கு சென்றுவிட்டான்.

“ம்ம்….என்ன ஆச்சு உன் புருஷனுக்கு….”என்று வேணி நொடித்துக் கொண்டு கேட்க,

“என்ன ஆச்சு “உங்க பிள்ளைக்கு”….ஒண்ணுமாகலையே….நல்லாதான இருக்காரு….”என்று மிருணாளினியும் சிரிக்காமல் கூற,ஆனந்தன் அடக்கமாட்டாமல் சிரித்துவிட்டார்.வேணி அவரை முறைக்க,

“அங்க ஏன் அத்தை முறைக்கிறீங்க….என்னைவேனா முறைச்சுக்குங்க…”என்று மேலும் அவரை சீண்ட,

“வர வர ரொம்ப பேசுற நீ…..”என்று வேணி அவளை மிரட்டுவது போல கூற,அதில் துளி கூட கோபம் இல்லை மாறாக தன்னிடம் உரிமையாக வம்பு பண்ணும் மருமகளை மிகவும் பிடித்து தான் இருந்தது.எந்தவித பாசாங்கும் இல்லாமல் கலகலப்பாக இருக்கும் இந்த மிருணாவை மிகவும் பிடித்துதான் இருந்தது அவருக்கு.மொத்ததில் அழகனா குருவி கூட்டிற்குள் தன்னை அழகாக புகுத்திக் கொண்டாள் மிருணாளினி.

தங்கள் அறைக்குள் மிருணாளினி நுழைய விஜய் அதற்குள் குளித்து தனது வேலையை தொடங்கிவிட்டான்.இன்னும் ஒரு வாரத்தில் கீர்த்தனாவின் திருமணம் இருப்பதால் வேலைகள் அணிவகுத்து இருந்தன அவனுக்கு.அலுவலக வேலையை சீக்கிரம் முடித்துவிட்டு திருமண வேலைகளை செய்யவேண்டும் என்று திட்டமிட்டிருந்தான்.ஆனந்தனும்,சிதம்பரமும் அனைத்து வேலைகளை ஒரளவிற்கு முடித்துவிட்டிருந்தனர் தான் இருந்தும் அவனது வேலைகளும் சிலவை பாக்கி இருந்தது அதையும் முடிக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தான்.

மிருணாளினி குளித்து வந்தவள் கீழே சென்று தனக்கும்,கணவனுக்குமாக காபி கலந்து எடுத்து வந்தாள்.சுடசுட காபியும் அதனுடன் பிஸ்கட்டும் எடுத்துவந்திருந்தாள்.வேலையில் கவனமாக இருந்தவன் மனைவி முகத்தின் முன்னே நிட்டிய காபி வாசத்தை நன்கு உள்ளிழுத்து வாங்கி கொண்டான்.காபியை பருகி முடிக்கும் வரை இருவரும் பேசிக்கொள்ளவில்லை.காலிகோப்பையை வாங்கும் போது மிருணா,

“நான் வேணா ஹெல்ப் பண்ணவா…”என்று கேட்க,அவளை முறைத்தான் விஜய்.அவன் எதற்கு முறைக்கிறான் என்று உணர்ந்தவள்,

“ப்ச்….விஜய்….எனக்கு அது சரியா வராது….அதனால தான் நான் வரலைனு சொன்னேன்….”என்று அவள் டீம் மாறாததற்கு விளக்கம் கொடுக்க,

“உனக்கு சோம்பேறி தனம்னு வேணா சொல்லு….எப்போதும் கோடிங்க பண்றதுனா மேடத்துக்கு கஷ்டமா இருக்கும் அதனா….”என்று அவளை சரியாக கணித்து கூற,மிருணா அசடு வழிந்தாள்.

“போடி….திட்டிவிட்டுருவேன்….”என்று கோபம் போல கூறினான்.

விஜயின் வேலை நேரத்தில் அவள் எந்த தொந்தரவு செய்யாமல் இருந்தாள்.நடு இரவு வரை அவனை பார்பதும் படுக்கையை பார்ப்பதுமாக அவள் சோபாவில் அமர்ந்து இருக்க,

“நீ தூங்குமா…எனக்கு இப்ப முடியாது….”என்று திரும்பாமலே கூறினான் விஜய்.மேலும் ஒருமணிநேர வேலை முடிக்கும் வரை அவள் அதே நிலையில் இருக்க,அவளை திரும்பி ஒருமுறை பார்த்தவன் தன் லேப்டாப்பை மூடி வைத்துவிட்டு அவளிடம் வர அவளும் அவனுக்காக காத்திருந்தது போல தன் கைகளை சிறுபிள்ளை போல விரிக்க அப்படியே அள்ளிக் கொண்டான்.படுக்கையில் அவளை அணைத்து படுத்தவன்,

“ம்ம்….இப்ப சொல்லு என்ன சொல்லனும் என்கிட்ட….”என்று கூற,வேகமாக அவனின் இரு கன்னத்திலும் முத்தமிட்டாள் மிருணாளினி.

“இதெல்லாம் போக்காட்டம்டீ….எனக்கு இங்க வேணும்….”என்று அவன் அதரங்களை சுட்டிக்காட்ட,

“ம்ம்….அவ்வளவு தான் நான் பேச வந்ததெல்லாம் மறந்துடும்….”என்று சிரித்துக் கொண்டே கூற,

“சரி சொல்லு….”என்றவன் குரல் இப்போது முற்றிலும் மாறியிருந்தது.அதில் அன்னிய தன்மையை உணர்ந்தாள் மிருணா,நிமிர்ந்து அவனை கலக்கமாக பார்க்க,

“ப்ச் சொல்லு மிருணா….நீ பழசை பத்தி தான் பேச போறனு நல்லவே தெரியுது….”என்று ஒருவித எரிச்சலில் கூறினான்.

“விஜய் ப்ளீஸ்….கோப படாத….எல்லாம் என் தப்பு தான் அதனால தான் மன்னிப்பு கேட்குறேன்….”என்று மீண்டும் அதே பல்லவியை அவள் பாட விஜய் அமைதியாகிவிட்டான்.இது தான் இருவருக்குள்ளும் இருவாரமாக நடக்கிறது அவள் மன்னிப்பை கோறுவதும் இவன் அமைதியாக கடப்பதும்.அதன் பிறகு மிருணா எது கேட்டாலும் பதில் இருக்காது ஒருவித இறுக்கம் அவனின் முகத்தில் குடிகொண்டுவிடும்.தன்னை அவள் விலகி செல்ல பார்த்தாள் என்பதிலேயே மனது சுழல அதிலிருந்து எழமுடியாமல் தவிக்கிறான்.அதனாலே அவளிடம் பேச்சை குறைத்தது பேசினால் கண்டிப்பாக அவளை காயப்படுத்திவிடுவோம் என்பது திண்ணம்.

மிருணாளினி கலங்கிய விழிகளுடன் விஜயை பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் இனி எதுவும் பேச போவதில்லை என்றுணர்ந்து திரும்பி படுத்துக் கொண்டாள்.மனதில் மீண்டும் ரணம் குடிகொண்டது கண்களில் தன் போல கண்ணீர் விழ அதை தொடைக்கும் எண்ணமில்லாமல் எங்கோ வெறித்துக் கொண்டிருந்தாள்.அப்போது ஒருகரம் அவளின் கண்ணீரை அழந்த துடைக்க அந்த கரத்தை இழுத்து தன் கன்னத்திற்கு அடியில் வைத்துக் கொண்டவள்,

“சாரி விஜய்…..வெரி சாரி….என்னை மன்னிக்க டிரை பண்ணேன் விஜய்….நான்….நான்….”என்று குலுங்கி அழ,அவளை தன் புறமாக திருப்பியவன்,அவளை இறுக அணைத்துக் கொண்டான்.மிருணாளினியின் உடல் அழுகையில் குலுங்க அவள் முதுகை நீவி விட்டான்.மெல்ல அவளது அழுகை ஓய்ந்து விசும்பலாக மாற இப்போது விஜய் பேசினான்,

“மிருணா….என் மனசுல பட்டது ஆறமுடியாத காயம்….என்னை நீ விட்டுட்டு மட்டும் போயிருந்தேனு வைய்யேன் சத்தியமா உன்னை கொல்ல கூட துணிஞ்சிருப்பேன்…..அவ்வளவு கோபம் உன்மேல…ஒருமுறை கூட இவ என்னை நினைக்கவேயில்லைலனு மனசு கடந்து அடிச்சுக்குது….ஆனா நடந்ததையே நினைச்சுக்கிட்டு இப்ப இருக்குறதையும் நான் இழக்க விரும்பலை….சில காயங்கள் சீக்கிரம் ஆறாது காலப்போக்குல தான் ஆறும்…அதனால விடு….எல்லாம் சரியா போகும்…..”என்று அவளை தேத்தினான்.

விஜய்க்கு மனதில் இன்னுமே கோபம் தணியவில்லை அதன்பொருட்டே அவன் மனதில் உள்ளதை உள்ளபடி கூறினான்.நாளை இதுபோல் ஏதாவது என்றால் மிருணா தன்னைவிட்டு போக நினைக்கவே கூடாது மாறாக எதிர்த்து நிற்க வேண்டும் என்ற எண்ணம் அவள் மனதில் தோன்ற வேண்டும் அதற்காகவே மன்னிக்காமல் அவளை வதைக்கிறான் அவனும் சேர்ந்து வதைபடுகிறான்.

காலம் ஒரு சிறந்த மருந்து சில காயங்களை மறக்க செய்யும்.அதே போல் தான் இங்கும் விஜயின் மனகாயத்தை காலம் மறக்க செய்யும் அதற்கு அவன் மிருணாவின் காதல் தூரிகை போல அந்த காயத்திற்கு மருந்திட்டு மறக்க வைத்துவிடும் என்று நம்பினான்.

Advertisement