Advertisement

காதல் வானவில் 37

கோவில் சென்றுவிட்டு மாலையே வீடு திரும்பிவிட்டனர் மிருணாளினியும்,விஜயும்.

“மிருணா….நான் குளிச்சிட்டு வரேன்…எனக்கு….”

“என்ன காபி வேணுமா….”என்று மிருணா அவனின் வாக்கியத்தை முடிக்க,அவளின் கன்னங்களை செல்லமாக கிள்ளி,

“குட் பொண்டாட்டி…..என்னை கரட்டா புரிஞ்சி வச்சிருக்க….”என்று பேசிவிட்டு இரு கன்னங்களிலும் அழுத்தமாக முத்தம் பதித்து தனது அறைக்குள் ஓடினான்.மிருணாவிற்கு விஜயின் செய்கைகள் அனைத்தும் ரசிக்கும் படியாகவே இருந்தது.இருந்தும் மனதில் உள்ள சின்ன உறுத்தல் நீங்கிவிட்டால் தானும் அவனுடன் முழுதாக மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைத்தாள்.

விஜய் குளித்து வரும் போது மிருணா காபி தயாரித்து இருவருக்குமாக எடுத்துவந்தாள்.அவளும் குளித்திருந்தாள் வீட்டில் யாரும் இல்லாதால் முக்கால் பேண்ட்,டிஷர்டுன் வர அவளை ஒர மார்க்கமாக பார்த்துக் கொண்டே காபியை வாங்கியவன்,

“என்ன மேடம் இன்னைக்கு நீ கேட்ட கேள்வி எல்லாத்துக்கும் உனக்கு பதில் வேண்டாமா….”என்று கேட்க,மிருணா திருதிருவென முழிக்க அவளை இழுத்து தன் கை வளைவிற்குள் வைத்து அவளது கூந்தலில் வாசம் பிடித்தவாறே,

“ம்ம்…இப்படி நீ நின்னா நான் கண்டிப்பா பேசிக்கிட்டெல்லாம் இருக்கமாட்டேன் பேபி….”என்று கழுத்து வளைவில் முகத்தை புதைத்தவாறே கூற,அப்போது அவனின் எண்ணம் புரிந்தவள் அவனை வலுகட்டாயமாக தள்ளிவிட்டு அறைக்குள் ஓடினாள்.

மிருணா மீண்டும் வெளியில் வரும் போது எளிமையான ஒரு சுடிதார் அணிந்து வர விஜய் காபியை ரசித்துக் குடித்து கொண்டிருந்தான்.அவளை கண்டவுடன் புன்னகையை இதழ்களுக்குள் அடக்கியபடி,

“அப்ப பதில் தெரிஞ்சசே ஆகனும்ங்குற….”என்று நக்கலாக கேட்க,ஒற்றை விரலை காட்டி மிரட்டி விட்டு அவளும் தனது காபியை குடித்தாள்.

“நம்ம ரூமுக்கு வா மிருணா….”என்றுவிட்டு அவன் செல்ல,மிருணா வேகமாக தன் கையில் இருந்த காபி கோப்பைகளை கழுவி வைத்துவிட்டு தங்கள் அறைக்குள் செல்ல,அங்கு விஜய் அன்று தான் கண்ட அந்த பிறந்தநாள் புகைபடத்தின் முன் நின்றிருந்தான்.இவள் வந்தவுடன் திரும்பி இவளை வாவென அழைக்க அவனின் அருகில் சென்றவள் அவனின் கைவளைவிற்குள் தன்னை புகுத்திக் கொண்டாள்.இருவரும் எதுவும் பேசவில்லை அமைதியாக அந்த புகைபடத்தை மட்டுமே பார்த்திருந்தனர்.

மிருணா திரும்பி விஜயின் முகத்தை பார்த்தாள் அவனோ அந்த புகைபடத்தின் மீதே கண்ணாக இருந்தான்.கண்களில் அவ்வளவு ரசனை ததும்பியது.

“அழகா இருக்குல….”என்று விஜய் அவளிடம் கூற அவளும் ஆம் என்னும் விதமாக தலையை ஆட்டினாள்.

“என்னோட லைப்பையே மாத்துன போட்டோ இது…..”என்று கூற மிருணாளினிக்கு ஒன்றும் புரியவில்லை அவள் அவனையே பார்த்துக் கொண்டிருக்க,அவளை தன் முகம் பார்க்க திருப்பியவனிடம்,

“இது இந்த போட்டோ….எப்படி உங்ககிட்ட….”என்று மிருணா தயங்கி கேட்க,அவளை பார்த்து ஏளனமாக புன்னகைத்தவன்,

“ம்ம்ம்…திருடுனேன்….ஒருத்தி என்னோட மனசையும்,காதலையும் எடுத்துக்கிட்டு ஓட பார்த்தா….அவ மொபைலேந்து எடுத்தேன்….”என்று கூற மிருணா இப்போது மிரண்டு விழித்தாள்.

“என்ன புரியலையா அன்னைக்கு கீர்த்திக்கு நிச்சய பட்டு எடுக்க போனோம்ல அப்போ உன் மோபைல்ல நான் ஏதேச்சையா இந்த படத்தை பார்த்தேன்…அப்போ எடுத்தேன்….”என்றவன் அவளை தன்னிடம் இருந்து சற்று விலக்கி,

“சொல்லு….இந்த போட்டோ இது எப்போ எடுத்தது….சொல்லு….”என்று கேட்ட விஜயின் குரலிலும் அவன் உடலிலும் இப்போது கோபமும்,ஆத்திரமும் ஒருங்கே வெளிபட அதன் தாக்கத்தை அவனது பிடியில் உணர்ந்தாள் மாது.அவளது இருகைளையும் தன் பலம் கொண்டவரை பிடித்திருந்தவன்,

“சொல்லு….இது எப்ப எடுத்தது….சொல்லுடீ….”என்று ரௌத்திரமாக கேட்க,மிருணா பயந்து நடுங்கி போனாள்.

“வி….வி….விஜய்…..”என்று மெல்லிய குரலில் அழைக்க அவனோ அதை கேட்கும் நிலையில் இல்லை,

“நீ முதல்ல சொல்லுலுலு…..”என்று கோபமாக கத்தவே தொடங்க,

“என்னோட பிறந்தநாளுக்கு எடுத்தது…..என்னோட பிளாட் மாடியில….”என்று கூறியவுடன் அவளின் கைகளை விட்டவன்.

“நான் அன்னைக்கு தான் பிரப்போஸ் பண்ணினேனா…..”என்று கேட்க,மிருணா கலங்கிய விழிகளுடன் தலையாட்டினாள்.

“ஏன் இப்படி செஞ்ச…..ஏன் என்னை விட்டு போகனும் முடிவு பண்ண சொல்லு….”என்று அவளை தீர்க்கமாக பார்த்துக் கொண்டே கேட்க,மிருணா இப்போது தலை குனிந்தாள்.அவளின் தலையை வலுகட்டாயமாக நிமிர்த்தியவன்,

“நான் கேட்குற கேள்விக்கு பதில் தெரியனும் மிருணா….”என்று கேட்க,மிருணா தயங்கி தயங்கி அன்று நடந்த அனைத்தையும் கூறினாள் ஹர்ஷா தன்னை மிரட்டயது அவன் அனைவரையும் கொல்லுவேன் என்று கூறியது அனைத்தையும் கூறியவள்,

“எனக்கு பயமா இருந்துச்சு விஜய்….எங்க என்னால உங்க எல்லாருக்கும் பிரச்சனை ஆகிடுமோனு தான் உங்க எல்லாரையும் விட்டு தூரமா போக நினைச்சேன்…..”என்று முகத்தை மூடி கதறி அழ,அவளை தேற்றவில்லை விஜய் அமைதியாக அவளை தூர நின்று பார்த்துக் கொண்டிருந்தான்.

“நீ எதுக்கு அழுவுற மிருணா….நீ தான் எந்த பிரச்சனையும் வேணாம்னு தான போக பார்த்த….நல்லது தான செஞ்ச இதுக்கு நீ அழுவலாமா….”என்று நக்கல் தோணியில் விஜய் கேட்க,

“எனக்கு வேறு வழி தெரியலை விஜய்…..”என்று மிருணா தேம்பிய படி கூற,அவளின் அருகில் வந்தவன் அவளின் குனிந்த தலையை நிமிர்த்தி,

“ஏன் மிருணா ஒரு தடவை கூட என்கிட்ட இதெல்லாம் சொல்லனும் உனக்கு தோணலையா….என்னை,நம்ம காதலை விட்டுட்டு போக துணிஞ்ச உனக்கு ஏன் அந்த காதலுக்காவும் எனக்காவும் எதிர்த்து போராடனும் தோணல…..”என்று கூறியவன்,பின் தன் தலையை தட்டி,

“ஓஓஓஓ….இவனுக்கு தான் எல்லாம் மறந்து போச்சே….இவனுக்கு எங்க எல்லாம் நியாபகம் வரப்போகுதுனு நினைச்சியா….ஆனா பாரேன் நீ நினைச்சது மாதிரி தான் எனக்கு எதுவும் இன்னமும் நியாபகம் வரலை….”என்று கூற,மிருணா செயலிழந்து அமர்ந்துவிட்டாள்.அவன் கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில் கூற முடியவில்லை என்பதை விட இது மாதிரி ஒரு கோணத்தில் அவள் பார்க்கவில்லை என்பது தான் நிஜம்.

“கொஞ்சமாச்சும் என்னை பத்தி யோசிச்சியாடி நீ…..நீ இல்லாம நான்…..”என்று கூறமுடியாமல் தலையில் கைவைத்தவன் உடல் குலுங்க அழ,வேகமாக அவனிடம் நெருங்கிய மிருணா,

“விஜய்…ப்ளீஸ்….சாரி….நான் இதுமாதிரி….”என்று தன்னை புரிய வைக்கும் நோக்குடன் பேச முயல,

“என்னை தொடாத போடீ…தள்ளி போயிடு….அடிச்சே கொன்னுடுவேனோ பயமா இருக்கு…தள்ளி போ….”என்று அவளை உதறி தன்னிடம் இருந்து தள்ளினான்.

“பைத்தியம் மாதிரி திரிஞ்சேன் தெரியுமா….இந்த போட்டோ வச்சிக்கிட்டு எத்தனை நாள் இது எப்போ எடுத்தது எப்போ எடுத்தது நினைச்சு பார்த்து நியாபகம் வரமா தவிச்சிருக்கேன்….நீயா என்னைக்காவது என்கிட்ட இதை பத்தி சொல்லுவனு…தினமும் உன்முகத்தை பார்ப்பேன்….என்கிட்ட வரமாட்டியா எதாவது சொல்லமாட்டியானு மனசு கடந்து அடிச்சிக்கும்…..ஆனா நீ அப்படி செய்யவேயில்லை….என்னை விட்டுட்டு போக துணிஞ்சிட்ட…..”என்று விஜயின் கேள்வியில் மிருணா விக்கித்து நின்றுவிட்டாள்.

“விஜய்…..உனக்கு எப்படி…..”என்று தடுமாற்றமாக கேட்க,அவளின் அருகே அவேசமாக வந்தவன் அவளின் கைகளை பற்றி இழுத்து அவளின் முகத்தை தன் ஒற்றை கையால் அழுத்தமாக பிடித்து,

“ஏன் எனக்கு தெரியாது நினைச்சியா……நீ ஜாப் சேஞ்ச் பண்ண டிரை பண்ணது….எல்லாம் தெரியும்….நான் தான் உன்னை இருக்க வச்சேன்….அவ்வளவு சீக்கிரம் உன்னை விடக்கூடாதுல….என்னை அவ்வளவு ஈஸ்ஸியா விட்டுட்டு போகலாம் பார்த்தல்ல அதான்….”என்று ரௌத்திரமாக கூறினான்.

“இல்ல இல்ல விஜய்…..அப்படி இல்ல….”என்று ஏதோ கூறவர,

“இல்லையா…..வேற எப்படி நான் இதை எடுத்துக்க….ம்ம்ம்…சொல்லு…..”என்று அதே நிலையில் அவளை நிறுத்திவைத்துக் கொண்டு கேட்க,மிருணாளினியின் கண்கள் கலங்கி தவித்தது அவனின் பிடிவேறு அழுத்தமாக இருக்க அவளாள் எதுவும் பேசவும் முடியவில்லை.

“ஏய்….ஏய்…அழாத….அழுது என்னை கரைக்க பார்க்காத…..நீ செஞ்ச வேலைக்கு உன்னை கொன்னுதான் போட்டிருக்கனும் ஆனா என்னால செய்ய முடியலை….”என்றவன் உதறிவிட்டு மீண்டும் கட்டிலில் தலையை தாங்கியபடி அமர்ந்துவிட்டான்.அவனின் நிலை அறிந்து மிருணா அவனின் அருகில் வர பார்க்க,

“கிட்ட வராத….கண்டிப்பா அடிச்சிருவேன்….தூரமா இரு….”என்று கூறும் போதே அவள் அதை பொருட்படுத்தாமல் நெருங்க,

“ஏய்…..சொன்னா புரியாது….நான் இப்ப என்னோட கன்ட்ரோல்ல இல்லை….அதனால ப்ளீஸ்…..உன்னை அடிக்க வச்சு என்னை வருத்தபட வச்சிடாத….”என்று கத்த மிருணா அந்த இடத்திலேயே நின்றுவிட்டாள்.மனது முழிவதும் ரணம் அதைவிட தன்னவனின் இந்த நிலைக்கு தான் தான் காரணம் என்று நினைக்கையில் மேலும் மனதை குத்தி கிழிப்பது போல் இருந்தது.சற்று நேரம் மௌனம் மட்டுமே அங்கு நிலவியது இருவரும் எதுவும் பேசவில்லை விஜய் தலையை தாங்கியபடி அமர்ந்திருந்தான்.தன்னை நிலைபடுத்திக் கொள்ள முயல்கிறான் என்று புரிந்தது.

“உனக்கு யாருமே இல்லாத மாதிரி ஓட பார்த்தியே…..ஏன் உன் கீதூ கூட உனக்காக இருக்கமாட்டனு நினைச்சிட்ட அப்படி தான….என்னைவிட அவ தான்டீ துடிச்சி போயிருப்பா….எவ்வளவு அன்பு வச்சிருந்தா உன்மேல உனக்காக தான டெல்லி வரைக்கும் என்கிட்ட சண்டைபோட்டு வந்தா தெரியுமா….அவளை கூட நீ நினைக்கல….அவ்வளவு சுயநலம் உனக்கு….அப்படி தான….”என்று கேட்க மிருணா முற்றிலுமாக உடைந்தேவிட்டாள்.

“அய்யோ….நான் எவ்வளவு பெரிய முட்டாள்தனம் செய்யவிருந்தேன்….கீதூ…..கீதூ….அவளுக்கு தெரிஞ்சா எவ்வளவு வருத்தப்படுவா….நான் சுயநலமா இருந்துட்டேனே…..”என்று வாய்விட்டே அழுதாள்.

“நீயா ஏதாவது சொல்லுவனு பார்த்த எனக்கு ஏமாற்றம் தான் மிச்சம்னு புரிஞ்சுது…நான் வருணை பிடிச்சு அவன் கிட்ட கேட்டா…அவன் அவனுக்கு தெரிஞ்ச வரை எல்லாத்தையும் என்கிட்ட சொன்னான்….அதுக்கப்புறம் நான் டெல்லி போனேன்….உன்னோட பிளாட்டுக்கு போனேன்….எதாவது நியாபகம் வருதானு யோசிச்சு பார்த்து தலைவலி வந்தது தான் மிச்சம்…..நான் வந்தை எப்படியோ தெரிஞ்சிக்கிட்டு உங்க தாத்தா வந்தாரு என்னை பார்க்க…..”என்று கூற மிருணா அதிர்ந்து நிமிர்ந்து பார்த்தாள்.

“ஆமா…மிஸ்டர்.வெயிட் என்னை பார்க்க வந்தாரு….அவர நான் முன்னாடியே சந்திச்சதா சொன்னாரு….எனக்கு நியாபகம் இல்லை….அக்ஸிடென்ட்ல எனக்கு சில விஷயங்கள் மறந்து போச்சுனு சொன்னேன்….அவர் தான் என்னை தேத்தினாரு…..என் பேத்தி மனசுல நீ தான் இருக்கனு சொன்னாரு…அதை எப்படியாவது வெளியில கொண்டுவா…..அதுக்கு அப்புறம் அவ உன்னை விட்டு பிரியவேமாட்டானு சொன்னாரு….நானும் மனசுல நம்பிக்கையோடு வந்தேன்….உன்கிட்ட பேசலாம்னு அப்பதான் உன்னோட டில் என்கிட்ட நீ வேற இடத்துக்கு டிரான்ஸ்பர் கேட்டுருக்கனு சொன்னாரு….எனக்கு போன கோபம் மீண்டும் திரும்பிடுச்சு….”என்றவன் மெல்ல தன் பின்னங் கழுத்தை பிடித்துவிட,

“விஜய்….வேணாம் நீ எதுவும் சொல்ல வேணாம்….”என்று தடுத்தாள்.விஜய்க்கு தலையில் அடிப்பட்ட பொழுதில் அவனுக்கு தலைவலி ஆரம்பிக்கும் பொழுதுகளில் இவ்வாறு செய்யததுண்டு.மருத்துவர்கள் ரொம்ப யோசனை செய்யாதீர்கள் உங்க உடம்புக்கு நல்லதில்லை என்று கூறியதாலேயே மிருணா அவனிடம் இருந்து விலகி இருந்தது.இப்போது தன்னால் மீண்டும் அவனுக்கு ஏதாவது பிரச்சனை வந்துவிடுமோ என்று பயந்து கூற,அவளை நிமிர்ந்து பார்த்தவன்,

“பயப்படாத அவ்வளவு சீக்கிரம் உன்னை விட்டு….”என்று அவன் மேலும் கூறும் முன் அவனின் இரு கன்னங்கிளிலும் மாற்றி மாற்றி அறைந்தவள்,

“ஏன்டா ஏன்…..இப்படி எல்லாம் பேசி என்னை கொல்லுற….நான் செஞ்சது பெரிய தப்பு தான் என்னை வேணா நாலு அடிச்சிக்க….ஆனா இப்படி எல்லாம் பேசாதடா…..”என்று அவனின் மடியிலேயே கதற தன்னையும் அறியாமல் அவனின் கரங்கள் அவளின் தலையை வருடிவிட்டது.

“கீர்த்தி நிச்சயம் முடிஞ்ச உடனேயே உன்கிட்ட பேசலாம்னு தான் இருந்தேன்….அதுக்குள்ள மேடம் கோச்சிக்கிட்டு போய் அந்த ஹர்ஷாகிட்ட மாட்டிக்கிட்டாச்சு….நல்லவேளை உன் தாத்தா உன்னை டிரேஸ் பண்ணி சொன்னாரு இல்லனா ரொம்ப கஷ்டப்பட்டுருப்பேன்….”என்று கூற,

“விஜய் போதும் நீ என்கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம் ப்ளீஸ்….”என்று கெஞ்சியவள் அவனுக்கு குடிக்க தண்ணீர் எடுத்துவந்து கொடுத்தாள்.அவனும் மறுக்காமல் குடித்தான்.அவனின் அருகில் அமர்ந்து அவனின் பின் முதுகை நீவி விட அவளின் கைபட்டதால் உடம்பிலும்,மனதிலும் சற்று ஆசுவாசம் கிடைத்தது.வருடிவிட்ட கையை தனது கைகளுக்குள் வைத்தவன் அவளின் அழுது வீங்கி முகத்தை பார்த்து,

“ஒண்ணுமட்டும் சொல்லுறேன் மிருணா….இந்த போட்டோ கண்ணுல பாடமா இருந்தாலும் உன்னை நான் விட்டுறுக்கமாட்டேன்…..என்னைக்கு என் மேல மோதி நின்னியோ அப்பவே என் மனசுக்குள்ள நீ வந்துட்ட….உன்னோட திமிரால தான் ஒதுங்கி இருந்தேன்….ஆனா உன்கிட்ட என் மனசை சொல்லனும் நினைச்சு பக்கம் வரும் போதெல்லாம் ஏதாவது நம்மக்குள்ள சண்டை வந்திடும் நானும் கோப்பபட்டு போயிடுவேனே தவிர உன்னை நான் என்னைக்கும் வெறுத்ததே இல்லை….அந்தளவுக்கு நீ என்னை ஆக்கரமிச்சிருந்த….”என்று தன் உள்ளத்தை முழுவதும் கொட்டிவிட்டு மிருணா எவ்வளவு தடுத்தும் வெளியில் சென்றுவிட்டான்.

மிருணாளினி தான் அவன் காதலின் முன் பேச்சற்று நின்றாள்.அவன் மனதில் எவ்வளவு காதல் இருந்திருந்தாள் தனக்காக இவ்வளவு செய்திருப்பான்.ஆனால் நான் நான் என்ன செய்தேன்….அவன் கூறியதை போல எனது காதலுக்காக நான் எதுவும் செய்யவில்லையே…என்று நினைத்தவளுக்கு கண்ணீர் நிற்காமல் வந்தது.

இரவு சென்றவன் விடியற்காலை தான் வீட்டிற்கு வந்தான்.வீட்டின் கதவை கூட மூடமல் சோபாவில் படுத்திருந்தாள் மிருணா.கண்கள் இரண்டிலும் கண்ணீர் கோடுகள் நிரம்பியிருந்தன.

“ப்ச்….”என்று தன்னையே நொந்து கொண்டான் விஜய்.மெல்ல அவளின் தூக்கம் கலையாமல் அவளை தூக்க அவனின் ஸ்பரிசத்தை உணர்ந்தவள்,

“விஜய்….விஜய்…..”என்று கத்தி அவனை விட்டு இறங்க முற்பட,

“உஷ் நான் தான் மிருணா….தூங்கு….”என்று தங்கள் அறையில் அவளை கிடத்த,அவளோ அவனைக் கட்டிக் கொண்டு இறங்காமல்,

“ம்ஹம்….நான் படுக்கமாட்டேன்….நீ போயிடுவ…..”என்று அவனின் கழுத்தைக் கட்டிக்க கொண்டு கத்த,அவளின் வாயை பொத்தியவன்,

“கத்தாதடி…நான் போகமாட்டேன்…..உன்கூட தான் இருப்பேன்….”என்று கூற,

“முடியாது…முடியாது…..”என்று அவனை தன்னோட இறுக்கி கொள்ள,விஜயின் முகத்தில் தன்னை மீறிய ஆசுவாசம்.எதுவும் பேசாது அவளை கட்டிக் கொண்டு அவனும் படுத்துவிட சற்று நேரம் கட்டிக் கொண்டு இருந்தவள் நிமிர்ந்து அவனின் முகத்தை பார்த்து,

“போகமாட்டல்ல….என்னை விட்டு போகமாட்டல்ல….”என்று குழந்தை போல கேட்க,

“இல்லைடி…போகமாட்டேன்….தூங்கு….”என்று இறுக கட்டிக் கொண்டான்.பிணக்குகள் அனைத்தும் நீங்கியதால் இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு நித்திரையில் ஆழ்ந்தனர்.

Advertisement