Advertisement

காதல் வானவில் 36

தூரத்தில் தெரிந்த பச்சை பசேல் என்று பரந்தவிரிந்த வயல் பரப்பையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள் மிருணாளினி.ஜில்லென்ற காத்தும்,அமைதியான சுற்றுபுரமும் மனதை அமைதியாக்கியது.

“மிருணா…..”என்று பின்னே வேணியின் குரல் கேட்டது.

“வரேன் அத்தை….”என்று கூறிவிட்டு வேகமாக அந்த இடம் விரைந்தாள்.வயல் பரப்புகளின் நடுவில் அமைந்திருந்தது அந்த கோவில்.சிறிய கோவில் தான் என்றாலும் மிகவும் நேர்த்தியாக இருந்தது.விஜயின் குலதெய்வ கோவில் தான் அது.குடும்பமாக வந்திருந்தனர்.திருமணம் முடிந்த அடுத்த இரண்டு நாள் கழித்து வந்திருந்தனர்.

“அத்த….”என்று தன் பக்கத்தில் சிரித்த முகமாக வந்து நின்ற மருமகளை வாஞ்சையாக பார்த்தவர்,

“இந்த விஜி வெளியில போனான்….கூப்பிட்டு வாமா…அபிஷேகம் முடிய போகுது….”என்று கூறி அனுப்பினார்.அதுவரை சிரித்த பூவாக இருந்த மிருணாளினியின் முகம் கருத்து சிறுத்தது.அதை வேணியிடம் காட்டும் எண்ணமில்லாமல் அகன்றாள்.

பின்னே இரண்டு நாட்களாக அவளும் அவனிடம் பேச முயல்கிறாள் ஆனால் அவளை பேசவிடாமல் செய்துவிடுகிறான்.அதன் தாக்கம் இதோ அவள் பிணக்குடன் இருக்கிறேன் என்று அவனிடம் காலையிலிருந்து காட்டிக்கொள்ள முயல்கிறாள் ஆனால் அவன் எதையும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. மனதில் அவனை திட்டியபடி வெளியில் வந்தாள்.கோவிலின் வெளியில் இவர்கள் வந்த காரில் தான் சாய்ந்து போன் பேசிக் கொண்டிருந்தான்.

“அப்படி யார்கூட தான் பேசுவானோ….திமிருபிடிச்சவன்….”என்று மனதிற்குள் அவனை திட்டினாலும் வெளுர் நீல முழுநீள சட்டை சந்தன நிற பேண்ட் என்று அவளை வசீகரித்தான்.

“ம்க்கும்….எப்படி பார்த்தாலும் அழகா தான் இருக்கான் மாயக்காரன்….ஏதாவது பேசி மயக்கிடுறான்….இல்ல இல்ல எங்க பேசுறான்….பேசவே விடுறதில்லை….”என்று மனதிற்குள் மட்டும் திட்டிக் கொண்டாலும் அவளின் கன்னங்கள் தன்போல் செம்மையுற தான் செய்தது.நீலவண்ண பட்டு,கழுத்தில் தொங்கிய புதிய மஞ்சள் கயிறு கூடுதலாக முகத்தில் தெரிந்த மலர்ச்சி என்று அவளும் குறையாத அழகில் மிளிர்ந்தாள்.

“விஜய்….உன்னை அத்தை கூப்பிடுறாங்க……”என்று அவனின் முகத்தை பார்க்காமல் கூறிவிட்டு திரும்பி நடந்தவள் சிறிது தூரம் சென்று மீண்டும் திரும்பி பார்க்க அவனோ அவளையே பார்த்தபடி காரில் சாய்ந்து நின்று கொண்டிருந்தான்.

“வா….”என்று இவள் இங்கிருந்தே வாயசைக்க,அவனோ முடியாது என்னும் விதமாக தலையை மட்டும் அசைத்தான்.

“ப்ச்…..திமிரு…திமிரு….உடம்பு பூரா திமிரு…..”என்று திட்டிக் கொண்டே வேகமாக அவனிடம் நெருங்கி அவனின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு கோவிலின் உள்ளே நுழைந்தாள்.மகனையும்,மருமகளும் இணைந்து வருவதைக் கண்ட வேணிக்கும்,ஆனந்தனுக்கும் மனது நிறைந்து இருந்தது.சிரித்த முகமாக வரும் மகனும்,அவனின் கைபிடித்தபடி ஏதோ திட்டியபடி வரும் மருமகளையும் பார்க்கையில் சிரிப்பு தான் வந்தது இருவருக்கும்.

“ம்ம்…உங்க பிள்ளை ஏதோ குறும்பு பண்ணிக்கிட்டே தான் இருப்பான் போல….அந்த பொண்ணை ஏதாவது டென்ஷன் பண்ணி பார்க்கறதுல அப்படி அவனுக்கு என்ன சந்தோஷமோ….”என்று வேணி ஆனந்தனிடம் புலம்ப,

“ம்ம்…அவன் குடுத்துவச்சவன்….அவன் குறும்பு பண்ணாலும் அவன் மனைவி செல்லமா திட்டுறா….”என்று ஏக்கமாக கூறுவது போல கூற வேணி அவரை முறைத்த முறைப்பில் மனிதர் அந்த இடத்தை காலி செய்துவிட்டார்.பின்னே மனைவியின் காளி அவதாரத்தை அவரால் சமாளிக்க முடியாது.

அனைவரும் சாமி கும்பிட்டு விட்டு அங்கிருந்து கிளம்பினர்.மிருணாளினிக்கு குடும்பமாக அதுதான் முதல் பயணம் அதனால் அவள் அதை ரசித்துக் கொண்டே வந்தாள்.வழியில் ஒரு இடத்தில் அனைவரும் சாப்பிட்டனர்.பின் விஜய் ஆனந்தனிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தான்.

“மிருணா….வீட்ல மாவு இருக்கு போனதும்….அதையே எடுத்துக்கோ….அப்புறம்….”என்று மேலும் ஏதோ கூறவர,

“அத்த நீங்க எங்க போறீங்க….எங்க கூட தான வரீங்க….”என்று அவர் எடுத்து வந்திருந்த பையை பார்த்துக் கொண்டே கேட்க,அவளை நிமிர்ந்து பார்த்த வேணி,

“என்னமா உன்கிட்ட விஜய் சொல்லையா….”என்று கேட்க,மிருணா பேந்த பேந்த முழித்தாள்.அவளின் பார்வையே அவன் எதுவும் கூறவில்லை என்பதை எடுத்துரைக்க,

“ம்ம்…..நல்ல பிள்ளைங்க போ….நானும் மாமாவும் இங்க பக்கத்தில இருக்குற சில சிவ தலங்களுக்கு போறோம்….எப்ப இங்க வந்தாலும் இந்த மாதிரி போயிட்டு தான் வருவோம்….அதோட இந்த தடவை விஜய்க்கு வேண்டிக்கிட்டு இருந்தேன் அதையும் நிறவேத்தனும்….”என்று கூற,

“அத்த நானும் உங்க கூட வரேன்….எனக்கும் கோவில் பார்க்க ஆசையா இருக்கு….”என்று கேட்க,இப்போது திருதிருவென முழிப்பது வேணியின் முறையானது.மகன்,மருமகள் தனிமை கொடுப்பதற்கா வும் தான் இந்த ஏற்பாடே அதில் மருமகள் இப்படி குட்டையை குழுப்புவாள் என்று அவர் என்ன கனவா கண்டார்.

“என்னமா ஏன் இப்படி நிக்குறீங்க….”என்று கேட்டபடி அவர்கள் அருகில் வந்தான் விஜய்.வேணி மகனிடம் இதை எப்படி கூறுவது என்று தயங்கி நிற்க,

“நானும் அவங்க கூட கோவிலுக்கு வரேன்னு சொன்னேன்…அதான் அத்த இப்படி ஷாக் அகிட்டாங்க போல…..”என்று மிருணா போட்டுடைக்க,இப்போது மகனும்,தாயும் ஒருவரை ஒருவர் பரிதாபமாக பார்த்துக் கொண்டனர்.

“விஜய் நான் போகவா….”என்று அவனிடம் வேறு பர்மிஷன் கேட்க,அவளை வெட்டவா,குத்தவா என்று பார்த்தவன்,

“நீ இப்ப போகவேண்டாம்….அவங்க போயிட்டு வரட்டும் நாம அப்புறமா போகலாம்….”என்று மனையாளுக்கு புரியவைக்கும் நோக்குடன் கூற,அந்த மங்குனி அமைச்சருக்கு புரிந்தால் தானே,

“ப்ச் என்ன விஜய்……நான் இதுவரைக்கும் இந்த மாதிரி கோவிலுக்கு எல்லாம் போனதே இல்லை….இவ்வளவு அமைதியா அழகா இருக்கும் கூட எனக்கு தெரியாது….அதனால தான் போறேன்னு சொல்லுறேன்….ப்ளீஸ்….”என்று கெஞ்ச,பார்த்துக் கொண்டிருந்த வேணிக்கும்,ஆனந்தனுக்கும் கண்கள் கலங்கிவிட்டது என்றால் விஜய்க்கு தலைவலியே வந்துவிட்டது.

கால்மணிநேரம் கழித்து மிருணா முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு காரில் வர விஜயோ அவளை பார்ப்பதும் பின் ரோட்டை பார்ப்பதுமாக இருந்தான்.முகத்தில் எள்ளும் கொல்லும் வெடித்து சிதற காத்துக் கொண்டிருந்தது.மிருணாளினியும் அவனை பார்பதும் பின் திரும்புவதுமாக இருக்க,

“ஓய்….என்ன முறைப்பு….”என்று விஜய் தான் முதலில் தொடங்கி வைத்தான்.அவள் மௌனமாக வர கடுப்பானவன்,வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு,அவளின் புறம் நன்கு திரும்பி,

“ஏய்….கேட்குறேன்ல…பதில் சொல்லமாட்டியா….”என்று கோபத்தில் கத்த,

“ப்ச்….விஜய் எதுக்கு இப்படி கத்துறீங்க…..”என்று சலிப்புடன் கேட்க,அவளின் கைகளை பிடித்து இழுத்தவன்,

“என்ன அதுக்குள்ள நான் உனக்கு சலிச்சுபோயிட்டேனா….”என்று வார்த்தைகளை விட,மிருணாவின் கண்களில் கண்ணீர் கோடாக கன்னங்களில் இறங்கியது.அதைப் பார்த்தவனுக்கு மேலும் கோபம் தலைக்கேற,

“அழுவாதடி….அழுது என்னோட கொஞ்சநஞ்ச உயிரையும் எடுக்காத…..எரிச்சலா வருது….நாம இரண்டு பேருக்கும் தனிமை கொடுக்கனும் தான் அவங்க போறாங்க….அதோட அவங்களுக்கு தனிமை தேவைப்படுத்து….போதுமா…..நீ கேட்ட கேள்விக்கு பதில் கிடைச்சிடுச்சா….”என்றவன் மீண்டும் அவளை தன் முகம் நோக்கி இழுத்து,

“அழுதழுது காரியத்தை சாதிச்சிக்குற இல்ல…..இப்படி தான அன்னைக்கு ஹாஸ்பிட்டல்லையும் அழுதுகிட்டே ஓடுன….”என்றவன் அவளின் விரிந்த கண்களில் தன் அதரத்தை பதித்து விலகினான்.அவனது இதழ் ஒற்றலில் புறாவின் சிறகை போல தன் இமைகளை சிமிட்டியவளை பார்த்து தன் கோபத்தை குறைத்தவன் மீண்டும் அந்த இமைகளுக்கு தன் இதழ்களால் தண்டனை தர அவளும் அவனது தண்டனையை ஏற்கும் குற்றவாளியை போல் அமைதியாக ஏற்றுக்கொண்டிருந்தாள்.

சிறிது நேரம் நீடித்த அந்த தண்டனை எப்போது இதழ்களுக்கு இடம் பெயர்ந்தது என்று இருவருமே அரியார்.விஜய் வன்மையாக மிருணாவின் இதழ்களுக்கும் தண்டனை தர மிருணாளினிக்கு வலியுடன் கூடிய இதம் தந்தது அவனது தண்டனைகள்.எவ்வளவு நேரம் இருவரும் ஒருவருக்குள் மூழ்கி இருந்தனர் என்று தெரியவில்லை.கைபேசியின் அழைப்பு தொடர்ந்து அழைக்க முதலில் தெளிந்த மிருணா விஜயை பிடித்து தள்ளிவிட்டாள்.

“ப்ச்….என்னடீ…..”என்று விஜய்க்கு தன் மிட்டாயை பாதியில் பிடுங்கிக் கொண்டதில் கோபம் வர மேலும் ஆவேசமாக அவளை இழுக்க,

“விஜய்….விஜய்….”என்று மிருணா தடுமாறி அவனிடம் இருந்து விடுபட போராட,கோபத்தில் அவளை உதறியவன்,

“போ…போ…இங்கிருந்து போடீ….”என்று கோபமாக கத்த,அவளோ வேகமாக அவனின் கைபேசியே தேடி எடுத்து அவனிடம் நீட்ட,அவளை முறைத்தவன்,

“இதை முன்னாடியே சொன்னா என்ன….”என்று கேட்க,

“நீ சொல்லவிட்டியா…..”என்று அவளும் மறுகேள்வி கேட்க,இதழ்களுக்குள் சிரித்து கொண்டு கைபேசியை வாங்கினான் அவளது கள்ளன்.வேணி தான் அழைத்திருந்தார் அவர்கள் தங்கள் ஹோட்டலுக்கு சென்றுவிட்டனர் என்றவர் தங்களையும் நல்லபடியாக ஊர் சென்றடைந்து பிறகு பேசவும் என்று கூறி வைத்தார்.

விஜய் பேசும் வரை தன் முகத்தை வெளியில் திருப்பி பார்த்துக் கொண்டிருந்தவள் அவன் பேசி முடித்தாலும் திரும்பாமல் அமர்ந்திருக்க,வண்டி நகர்ந்தபாடில்லை.தான் திரும்பாமல் வண்டியை அவன் எடுக்கபோதில்லை என்றுணர்ந்தவள் திரும்பி அவனை பார்க்க,அவனும் அவளை தான் விழுங்கும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.

“ப்ச் விஜய்….போகலாம்….”என்று மிருணாளினி அவஸ்தையாக கூற,

“ம்ம் போகலாமே….சீக்கிரம் போனா என்ன தருவ….”என்று விஷம்மாக கேட்க மிருணாவின் முகம் செந்தாமரையாக சிவந்து போனது தன் முகத்தை மறைக்க இங்கே அங்கே திரும்பியவளை தன் நெஞ்சின் மீது சாய்த்தவன்,

“உன்னோட எல்லா தேவைக்கும் நான் இருப்பேன் மிருணா….அதை மறந்திடாத…..”என்று கூற நிமிர்ந்து அவனை பார்க்க அவனது முகம் ஒருநிமிடம் இறுகி பின் இலகியது போல் இருக்க,அதை உணர்ந்து கொண்டவள்,

“விஜய்……நீ ஏன் அடிக்கடி ஏதோ போல பேசுற….என்கிட்டேயும் எதுவும் சொல்ல மாட்டேங்குற…ப்ளீஸ் இப்பவாது என்கிட்ட சொல்லு….”என்று கேட்க அவளின் கன்னங்களை மென்மையாக கிள்ளி முத்தமிட்டவன்,

“ம்ம் சொல்லுறேன்….சொல்லுறேன்….உன்னை தவிர யார்கிட்ட சொல்ல முடியும்….”என்று கூற,அவனிடம் இருந்து தன்னை பிரித்துக் கொண்டவள்,

“எங்க சொல்லுற….இதையே தான் இரண்டு நாளா சொல்லி என்னை ஏமாத்துற….போடா….”என்று செல்லமாக கோபம் கொள்ள,அவளின் தலையை செல்லமாக ஆட்டியவன்,

“நான் என்ன பண்ணுறது உன்கிட்ட பேசலாம்னு தான் நினைக்கிறேன்….ஆனா உன்னை நேர்ல பார்த்தவுடனே எல்லாம் மறந்து போயிடுது….எல்லாம் உன்னால தான்….என்னை மயக்கிட்ட….”என்று அவளை குறைவேற கூற,அவனை முறைக்கமட்டும் முடிந்தது அவளால்.இவ்வாறு சிறிது ஊடல்,சிறிது சீண்டல்கள் என்று அவர்களின் முதல் பயணம் நல்லமுறையில் தான் அமைந்தது.

அடுத்த நாள் காலை மிருணா மனது முழுவதும் கலக்கத்துடன் அமர்ந்திருந்தாள்.அவளது கைகளில் கைபேசியில் அழைப்பு விடுத்துக் கொண்டே இருக்க,அவன் எடுக்கவேயில்லை.இரவு அவன் மனது முழுவதையும் கொட்டி தீர்த்தவன் கோபத்தில் வெளியில் சென்றிருந்தான்.எங்கு சென்றான் என்று அவளாள் ஊகிக்க முடியவில்லை.

“நான் பைத்தியம் மாதிரி திரிஞ்சேன்டீ உன்னால…….எப்ப என்கிட்ட எல்லாத்தையும் சொல்லுவனு எத்தனை நாள் எதிர்பார்த்தேன் தெரியுமா….ஆனா நீ செய்யவேயில்லை…என்னைவிட்டு போக துணிஞ்சிட்ட…..எப்படி மனசு வந்துச்சு…..”என்று அவன் கேட்ட கேள்விகள் மிருணாவை முற்றிலுமாக செயலிழக்க செய்திருந்தது.

“ப்ளீஸ்….விஜய் வந்திடு….சாரி….எல்லாம் என் தப்பு தான்….இனி இது மாதிரி செய்யவேமாட்டேன்….ப்ளீஸ்…..வந்திடு….”என்ற வார்த்தைகளை தான் அவளது உதடுகள் முனுமுனுத்துக் கொண்டு இருந்தன அவன் சென்றதிலிருந்தது.

விஜய்க்கு தன்னை பற்றி அனைத்தும் மறந்ததலிருந்து அவனைவிட்டு சென்றுவிடுவதிலேயே குறியாக இருந்தாளே தவிர தன் மனதை ஒருமுறையேனும் அவனிடம் கூறவேண்டும் என்ற எண்ணமில்லை. அதை அவன் கூறியதில் இருந்தே மனது முழுவதும் அத்தனை ரணம்.தன் காதலை தான் அவனிடம் உணர்த்தியிருக்க வேண்டுமோ என்று காலம் கடந்து யோசனை வந்து என்ன பயன்.

காதலில் முக்கிய விதியே ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காமல் இருப்பது அதுவே இங்கு பொய்த்து போயிருக்க அதைதான் தாங்கமுடியவில்லை விஜயினால்.தன்னை விட்டு செல்லதுணிந்தவளால் தன்னுடன் இணைந்து அனைத்தையும் எதிர்கொள்ள ஏன் தோணவில்லை என்று விஜய் அவளிடம் கேள்வி கணைகளை எழுப்பி அவளை சுழற்றியடித்திருந்தான்.

Advertisement