Advertisement

காதல் வானவில் 35 2

தன்னை சுற்றி அமர்ந்திருந்தவர்கள் ஏதேதோ பேசிக் கொண்டிருக்க,மிருணாளினியின் மனமோ தன்னவன் கூறியதிலேயே இருந்தது.

“எனக்கு நியாபகம் வந்துடுச்சினு நான் எப்படி சொன்னேன்….”என்று பல்லைக் கடித்துக் கொண்டு அவன் கேட்டதும் மிருணாளினிக்கு உடலில் உயர் மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது.

என்ன என்ன சொல்லிகிறான் இவன்….இவனுக்கு எதுவும் நியாபகம் இல்லையா….அப்புறம் எப்படி இது சாத்தியம் ஆகும்…என்று நினைத்துக் கொண்டே அவனை ஏறிட அவனோ வந்தவர்களிடம் பேச கொண்டிருந்தான்.முகம் முழுக்க புன்னகை அப்பிக்கிடந்தது.ஒருவேலை தன்னிடம் விளையாடுவதற்காக கூறியிருப்பனோ என்று நினைத்துக் கொண்டிருக்க எதேர்ச்சையாக திரும்பிய விஜய் அவளின் எண்ணவோட்டங்களை சரியாக கணித்துவிட்டான்.அவளிடம் நெருங்கி வந்து,

“என்ன மேடம் என்ன யோசனை பலமா இருக்கு….ஓஓ…நான் உன்கிட்ட விளையாடுறேனு நினைக்கிறியா….”என்று கேட்க மிருணாளினிக்கு மனதிற்குள் திக்திக் என்று இருந்தது.அவள் மலங்க விழித்துக் கொண்டே தலையை இடவலமாக ஆட்ட,எப்போதும் போல் அவள் விரிந்த கண்களில் சிக்குண்டவன்,

“ம்ம்….இப்படி முழிச்சி பார்க்காதடீ…..இப்படி முழிச்சி பார்த்துதான் என்னை மயக்கிட்ட ராட்சசி….”என்று கூறிவிட்டு வேறுபுறம் திரும்பி நின்று கொண்டான்.இப்போது மிருணாளினிக்கு தான் தலையே வெடித்துவிடும் போல் இருக்க எப்படியும் அவனிடம் கேட்டு தான் ஆக வேண்டும் என்று முடிவு எடுத்துக் கொண்டு,

“விஜய்….”என்று அழைக்க முதலில் திரும்பவில்லை,

“திமிரு….திமிரு…..வேணும்னே என்னை அழ வைக்கிறான்….”என்று மனதிற்குள் திட்டிக் கொண்டு அவனின் தோள்களை சுரண்ட திரும்பியவன்,

“என்ன அம்மணிக்கு ஏதாவது வேணுமா….”என்று அந்த வேணுமா என்பதில் அழுத்தம் கொடுத்து கேட்க மிருணாளினி சுற்றும்முற்றும் பார்த்தாள்.திருமணம் முடிந்து அனைவரும் கலைந்து கொண்டிருந்தனர்.

“அங்க என்னடீ பார்வை என்ன வேணும் கேளு….”என்று கேட்க,அவனை முறைத்தவள்,

“ஏய் நீ என்னை வேணும்னே சீண்டுற…”என்று ஒருநிமிடம் பழைய மிருணாளினியாக மிரட்டல் விட,அவளின் நீண்ட விரலை அழுத்தி பிடித்தவன்,

“இந்த விரல் நீட்டுற பழக்கமெல்லாம் என்கிட்ட வச்சுக்காத…..”என்றுவிட்டு அவளின் நீண்ட விரலில் தன் அதரங்களில் ஒற்றி எடுக்க,மிருணாளினிக்கு மூச்சே நின்றுவிடும் உணர்வு வேகமாக அவனிடம் இருந்து விரலை பிடுங்கி கொண்டு,

“ஏன் விஜய் இப்படி பண்ணுற….யாராவது பார்த்துட போறாங்க….”என்று திக்கி திணறி கூற,

“அப்ப யாரும் இல்லாத இடத்துக்கு போயிடலாமா பேபி….”என்று அவளின் கன்னத்தை ஒற்றை விரல் கொண்டு வருடியவாறே கேட்க,மிருணாளினிக்கு உடலில் உள்ள அத்தனை ரோம்பங்களும் குத்திட்டு நின்றது.அவனின் விரல் செய்யும் ஜாலங்கள் அவளை மதியிழக்க செய்ய அதை தடுக்கும் விழி தெரியாமல் தடுமாறி நின்றாள் பெண்.

விஜய் சிலநிமடங்களிலேயே அவளிடம் இருந்து விரலை எடுத்துவிட்டான் ஆனால் மிருணாளினியால் அவனின் தொடுகை ஏற்படுத்திய குறுகுறுப்பில் இருந்து மீளமுடியாமல் ஏதோ மாய உலகத்தில் நிற்பவள் போல் நிற்க விஜய்க்கு மேலும் ரசனை கூடியது.அவளது கன்னத்தை கிள்ளிவிட்டு,

“என்ன பொண்டாட்டீ…..செம பார்ம்ல இருக்கீங்க போல இருக்கே….”என்று கிண்டல் செய்ய அப்போது தான் நிதானத்திற்கு வந்தவள்.செவ்வானமாய் சிவந்த கன்னங்களை அவனிடம் காட்டாமல் திரும்பிக் கொள்ள நினைக்க அவனோ அவளின் தோள்களில் கையை போட்டுக் கொண்டு அவளை திரும்ப விடாமல் செய்து,

“ப்ப்பா….என் பொண்டாட்டிக்கு எப்படி கன்னம் சிவக்குது…..”என்று கூற அவனின் கைகளில் வேகமாக அடித்தவள் தன் முகசிவப்பை வேறு புறம் திரும்பி மறைத்துக் கொண்டாள்.

“ப்ப்பா இவன் சரியான மாயக்காரன் தான்….எப்படி மயக்குறான்….”என்று நினைத்தவளுக்கு தான் எதற்காக அவனை அழைத்தோம் என்று நினைவில் வர தலையில் லேசாக தட்டிக் கொண்டு திரும்ப,அவன் அவளை தான் விழுங்கும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.

“அய்யோ….இவன் பார்வையாலே இன்னைக்கு என்னை சுவாகா பண்ணிடுவான் போலேயே….”என்று நினைத்தவள் பின் வேகமாக தலையை உலுக்கிவிட்டு அவனின் முகத்தை பார்க்காமல்,

“விஜய்….நீ…..நீ இப்ப கொஞ்ச நேரம்  முன்னாடி….உனக்கு நியாபகம்….”என்று கூறிவிட்டு அவனை நிமிரந்து பார்க்க அவன் இப்போதும் அப்படியே நிற்க,

“விஜய் ப்ளீஸ்….டோன்ட் பிளே வித் மை எமோஷன்…..ப்ளீஸ்….”என்று கெஞ்சலாக கேட்க,

“ஏதே உன் எமோஷோனோட நான் பிளே பண்ணுறேனா….இது நல்லாயிருக்கே….”என்று மீண்டும் அதே நக்கல் தோணியில் கூற,இம்முறை மிருணாளினிக்கு பொறுமை எல்லை கடந்தது,

“என்ன பேசுற விஜய்….ஏன் இப்படியெல்லாம் என்னை கஷ்டபடுத்துற….என்னால தாங்கிக்க முடியலை….”என்று கூறிவிட்டு தன் முகத்தை வேறு புறம் திரும்பிக் கொள்ள,நீண்ட மூச்சொன்றை இழுத்துவிட்டவன்,

“இப்ப உனக்கு என்ன தெரியனும்…எனக்கு நியாபகம் வந்துட்டா இல்லையானா…”என்று கேட்டுவிட்டு அவளை பார்க்க அவளும் தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடனும் மனதில் ஒருவித ஏக்கத்துடனும் அவனை நோக்கினாள்.

“நிஜமா இல்லை மிருணா…….எனக்கு எதுவும் நியாபகம் இல்லை….அப்புறம் எப்படி உனக்கு தெரிஞ்சது…..அதை  நானே சொல்லுறேன்…அதுவரை இதை பத்தி என்கிட்ட பேசாத ப்ளீஸ்…..எனக்குமே உன்னை இப்படி கஷ்டபடுத்தி பார்க்கனும் ஆசையில்லை…..லெட்ஸ் எஞ்ஜாய் த மொமன்ட்…….”என்று கூறிவிட்டு திரும்பிவிட்டான்.

மிருணாளினிக்கு தான் ஏதோ பெருத்த ஏமாற்றமாக இருந்தது.மனதில் சூறாவளி அடித்துகொண்டிருந்தது.ஆனால் அதை பற்றி யாரிடமும் பகிரவும் முடியாமல் அல்லாடினாள்.அவ்வபோது விஜய் ஆறுதலாக அவளின் கையை பற்றி அவளை இயல்புக்கு கொண்டு வந்து கொண்டிருந்தான்.காயம் செய்தவனே மருந்துமிட்டான்.

இதோ மண்டபத்தில் இருந்து விஜயின் வீட்டிற்கு வந்துவிட்டனர்.விஜயின் உறுவுகளுக்கு அவர்களின் திடீர் திருமணத்தில் சற்று விருப்பமில்லை தான்.அதோடு பெண் வேறு அழகாகவும் வசதியானவளாகவும் இருக்க வந்தததில் பல பேர்,

“என்ன வேணி பெரிய ஆளா பிடிச்சிட்ட போல அதான் இப்படி திடீர்னு கல்யாணம் வச்சிட்டியா….”என்று நேரிடையாகவே கேட்டுவிட்டு செல்ல,வேணிக்கு இரத்த அழுத்தம் கூடி போனது தான் மிச்சம்.அவர்களிடம் வாதிட்டும் பயணில்லை என்று நன்கு உணர்ந்தவராயிற்றே அதனால் தன்னை கட்டுபடுத்திக் கொண்டே நின்றார்.ஆனால் அவராலும் எவ்வளவு நேரம் தான் தன்னை கட்டுபடுத்தமுடியும் அதிலும் சிலர் மகனை தகாத வார்த்தைகளை கொண்டு பேச செய்யவும் வேணி சண்டைக்கு கிளம்ப ஆனந்தன் தான் தடுத்துவிட்டார்.

“என்ன பேசுறாங்க பார்த்தீங்களா….இவங்க எல்லாம் மனுஷங்களே கிடையாது….”என்று கோபம் கொப்பளிக்க கூற,மனைவியின் பின்முதுகை நீவி விட்டவர்,

“விடு வேணிமா இவங்கள பத்தி நமக்கு முன்னாடியே தெரியுமே….நம்மளையே ஒருகாலத்தில பேசினவங்கதான….இன்னைக்கு நாம இப்படி வளர்ந்து நிக்கவும் அவங்களால அதை ஏத்துக்க முடியலை அவ்வளவு தான்….இந்த மாதிரி ஆட்களுக்கு எல்லாம் நாம முக்கியதுவம் கொடுக்க கூடாது…..விடு….”என்று கூறியவர்,

“நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு நான் பார்த்துக்குறேன்….”என்று மனைவியை அறையில் வற்புறுத்தி படுக்க வைத்துவிட்டு வந்தார்.

உறவினர்கள் ஒருவர் பின் ஒருவராக கிளம்பிக் கொண்டிருந்தனர்.கீர்த்தனா மிருணாளினியுடனே தான் இருந்தாள்.அவளுக்கு அவ்வளவு சந்தோஷம் தன்னை நேசிக்கும் நட்புடன் கூடிய உறவு கிடைத்துவிட்டது என்று நினைத்தாள்.மிருணாளினிக்கு அனைத்து உதவியும் செய்து அவளுக்கு உணவு கொடுத்தவள்,

“மிருணீ….நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு….”என்று கூறிவிட்டு வெளியேறினாள்.மெத்தையில் விழுந்த மிருணாளினிக்கு மனதில் பல கேள்விகள் சுழன்று கொண்டு இருக்க அதோடு அவளின் கண்களும் சுழன்று எப்போது உறங்கினாள் என்றே தெரியவில்லை.ஆழ்ந்த உறக்கத்தில் யாரோ தன் பக்கத்தில் வந்து தன் தலை கோதியது போல் இருந்தது.பின் சற்று நேரம் பக்கத்தில் பேச்சு சத்தம் கேட்டது.அவள் மிகவும் சிரமபட்டு கண்களை திறக்க முயல அதற்குள் ஒருகரம் அவளின் தலையை மென்மையாக வருட தன்போல் கண்கள் மூடிக் கொண்டது.

மிருணாளினி மீண்டும் கண்விழிக்கும் போது அவளின் இடையின் மேல் ஒரு கரம் இருக்கவும் பயந்து எழ அவளை அணைத்தபடி உறங்கி கொண்டிருந்தான் விஜய்.இவன் எப்போது வந்தான் என்று நினைத்துக் கொண்டிருக்கும் நேரம் அவர்களின் அறை கதவு தட்டப்பட்டது.மிருணா வேகமாக எழ அதில் விஜயின் தூக்கமும் கலைந்தது.

“ப்ச்….ஏய் என்ன எதுக்கு இப்படி எழற….”என்று தூக்க கலக்கத்திலேயே கேட்க,அவள் பதில் சொல்லும் முன் மீண்டும் கதவு தட்டப்பட்டது.

“ப்ச்…டையம் ஆச்சா….அதான்….நீ போய் கதவை திற….”என்றவன் எழுந்து குளியலறைக்கு சென்றான்.

கதவை திறக்க கீர்த்தனா நின்றாள்.மிருணாளினியின் கலைந்த தோற்றத்தைக் கண்டு அவள் அசடு வழிய,

“ச்சு…சாரிடீ…நான்….நான்….”என்று கூற முடியாமல் தவிக்க மிருணாவிற்கு ஒன்றும் புரியவில்லை.அவள் தான் பாதி தூக்கத்தில் இருந்தாளே அவள் விழித்துக் கொண்டு நிற்க அதற்குள் விஜய் வந்துவிட்டான். அசடு வழிந்தபடி நின்ற தோழியையும்,மலங்க மலங்க விழித்தபடி நிற்கும் மனைவி கண்டவனுக்கு சிரிப்பு பீரிட்டது.

“ஏய் வாலு….என்ன பண்ண என் பொண்டாட்டியை….”என்று கேட்க,

“போடா நான் ஒண்ணும் பண்ணலை நீதான் ஏதோ பண்ணிட்ட….”என்று அவள் சாதரணமாக தான் சொன்னாள்,மிருணாளினிக்கு தான் பக்கு என்று ஆனது,

“அடியே….என்ன பேசுற…அப்ப….அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல….”என்று தலையில் அடித்துக் கொண்டவள் வேகமாக குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

விஜயும்,மிருணாளினியும் பக்கத்தில் உள்ள கோவிலுக்கு சென்று வந்தனர்.இரவு நெருங்க நெருங்க மிருணாளினிக்கு தன்போல் மனதில் பயம் சூழ்ந்து கொண்டு தான் இருந்தது ஆனாலும் அதை மிகவும் சிரமபட்டு விழங்கி கொண்டிருந்தாள்.விஜய் மிருணாளினியின் அனைத்து உணர்வுகளையும் புன்னகையுடன் படித்து கொண்டு தான் இருந்தான்.ஒருவழியாக அவள் எதிர்பார்த்த நேரமும் வந்தது.விஜயின் அத்தை முறை ஒருவர் அவளை அலங்காரம் செய்து அறைக்கு அனுப்பி வைத்தார்.

ஒருவித நடுக்கத்துடன் மிருணாளினி அந்த அறைக்குள் பிரவேசித்தாள்.இதற்கு முன் இரண்டு முறை இந்த அறைக்குள்  வந்திருக்கிறாள் தான் அப்போது தோன்றாத உணர்வுகள் எல்லாம் இப்போது ஒன்றே தோன்றி அவளை ஆட்டிபடைக்க தன் கண்களை ஒருநிமிடம் மூடி திறந்து தன்னை நிலை படுத்திக் கொண்டாள் பெண்.

நிதானமாக அறையின் உள்ளே வர அங்கு விஜயை காணவில்லை.

“ஊப்ப்ப்….”என்று மூச்சை இழுத்துவிட்டவள் அவனை கண்களால் தேட பால்கனியின் கதவை தட்டும் சத்தம் கேட்டது.அவன் தான் யாரிடமோ கைபேசியில் பேசிக் கொண்டிருந்தான்.அதனால் இரண்டு நிமிடம் என்று கைகளை காட்டிவிட்டு திரும்பி பேச்சை தொடர்ந்தான்.அவளும் தலையை ஆட்டிவிட்டு மெதுவாக அந்த அறையை நோட்டமிட ஆரம்பித்தாள்.

விஸ்தாலமான அறை அதில் ஒரு மூலையில் புத்தகங்கள் அடங்கிய ஒரு அலமாறி,பக்கத்தில் பெரிய நிலை கண்ணாடியுடன் கூடிய மேஜை இருந்தது.அழகிய வேலைபாடுகளுடன் இருந்த மேஜை தடவி பார்த்துக் கொண்டிருந்தவள் தன் உருவத்தை கண்ணாடியில் பார்த்தாள்.புதுபெண்ணிற்கே உண்டான அழகுடன் மிளிர்ந்தாள்.அப்போது எதிர் புற சுவற்றில் இருந்த புகைப்படம் அவளை கவர முதலில் கவனிக்காதவள் பின் ஊன்றி கவனிக்க அவளின் அழகிய கண்கள் மேலும் விரிந்தது.வேகமாக அந்த புகைப்படத்தின் அருகில் சென்றவளுக்கு மூச்சுவிடவே முடியவில்லை.எப்படி இந்த புகைப்படம் இவனிடம் என்று யோசனையிலேயே சிலை போல நின்றுவிட்டாள்.

ஆம் அது மிருணாளினியும்,விஜயும் இணைந்து அவளின் பிறந்தநாளின் போது எடுத்த புகைபடம்.அந்த புகைபடம் மிருணாளினியின் கைபேசியில் மட்டும் தான் இருந்தது.விஜய் ஒருவனை தவிர வேறு ஒருவருக்கும் அந்த படத்தை பத்தி தெரியாது.தங்களின் காதலை பகிர்ந்து கொண்ட அழகிய தருணத்தை அவளால் மறக்கவே முடியாதல்லவா.கண்கள் கலங்க இது எப்படி இது எப்படி இவனிடம் வந்தது என்று யோசித்துக் கொண்டு நிற்கும் நேரம் அவளின் இடையை ஒரு வன்கரம் வளைத்தது.அவளின் தோள்களில் தலையை வைத்து,

“ம்ம்ம்….நைஸ் செமல் மிருணா…”என்று அவள் தலையில் சூடியிருந்த மல்லிகை சரத்தினை முகர்ந்தவாறே கூற,மிருணாளினிக்கு அப்போது தான் நினைவு வந்தது போல் அவனை விலக்க பார்க்க,அவனின் அணைப்பு இறுகியதே தவிர இலகவில்லை.

“விஜய்…..”என்ற மிருணாளினியின் அழைப்பு அவளுக்கே கேட்கவில்லை,அவனின் விரலின் ஊர்வலத்தில் உடலில் ஒவ்வொரு அணுவும் துடிப்பதை போல் உணர்ந்தவள்,அவனின் விரலை பிடிக்க,

“ப்ச் மிருணா பேபி….”என்று பிதற்றலாக அழைக்க,மிருணாளினிக்கு அடிவயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறந்தது.மெல்ல அவளை தன்னை நோக்கி திருப்பியவன் அவளின் நெற்றியில் முதல் அச்சாரத்தை பதிக்க அவளின் உடல் துடித்து அடங்கியது.

“விஜய்…விஜய்….அது நான்….”என்று ஏதோ அவள் கூற வர,

“ம்ம்….நீ….”என்று அவன் அதரங்களை கன்னத்தில் பதித்துக் கொண்டே கேட்க,அதில் மேலும் தடுமாறிய மிருணா,

“நான்….நான்…..”என்று கூறமுடியாமல் தடுமாற,விஜயின் உடல் மெல்ல சிரிப்பில் குலுங்கியது,

“ம்ம்…நீ….நீ….”என்று மேலும் அவன் ராகம் பாட,அவளோ தன்னை விடாமல் அச்சாரம் பதிக்கும் அதரங்களை தன் ஒரு கையினால் பொத்திக் கொண்டு மறுகையால் சுவற்றில் இருந்த புகைபடத்தை காட்டி,

“இது…..உனக்கு எப்படி….கிடைச்சது….”என்று ஒருவாறு கேட்டுவிட்டாள்,அவனோ மனைவியின் கரங்களை விலகி விட்டுவிட்டு,

“ம்ம்ம்….சொல்லுறேன்…..ஆனா….இப்ப இல்லை…..”என்று கூறிக் கொண்டே அவள் உணரும் முன்பே அவளின் அதரங்களை சிறை செய்திருந்தான்.நீண்ட நெடிய முத்தம் இருவரும் தங்களை மெல்ல மெல்ல மறக்க தொடங்கினர்.அவனின் ஆளுகைக்குள் அவள்.சேர்த்து வைத்திருந்த காதல் அனைத்தையும் அவன் அச்சாரங்களாக அவளிடம் சேர்க்க பெற்ற பரிசை அவனிடம் மீண்டும் அவனிடமே அவள் சேர்க்க என்று இருவரின் உணர்வுகளும் கட்டவிழிந்தது.

காதல் என்னும் புயல் காற்றில் அடித்து செல்லபட்டவர்கள் தங்களின் உணர்வுகளை பகிர்ந்து கரை ஒதுங்கும் நேரம் அழகிய வானவில்லை உருவாக்கியதை போல் புன்னகையுடனும், மனநிறைவுடன் ஒருவரை ஒருவர் தழுவியபடி உறங்கினர்.

Advertisement