Advertisement

காதல் வானவில் 35 1

வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது அந்த பெரிய திருமண மண்டபத்தின் நுழைவாயில்.மண்டபத்தின் நுழைவாயிலில் அழகான வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்ட வானவில் போல அரைவட்ட வடிவிலான டூம்கள் அமைக்கப்பட்டிருந்தது.மண்டபத்தின் அமைப்பும் வானவிலை போலவே பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.மலர்களின் நடுவே ஒரு ராஜாவை போல் அமர்ந்து மந்திரங்களை ஓதி திருமண சடங்குகளை செய்து கொண்டிருந்தான் விஜய்.

ஆனந்தன் பரபரப்பாக அங்கும்இங்கும் அலைந்து கொண்டிருக்க அவரை பிடித்து வந்து மேடையில் விட்டான் வருண்.

“இனி நீங்க இதை விட்டு இறங்குனீங்க……”என்று மிரட்டுவது போல கூற,

“ஏதே….”என்று ஆனந்தன் அதிர்ந்து கேட்க,

“ப்பா…ப்ளீஸ்….அப்படி பார்க்காதீங்க….என்னை அடிச்சே கொன்னுடுவான் உங்க பிள்ளை….”என்று வருண் விட்டால் அழுதுவிடுபவன் போல் கூற ஆனந்தன் அடக்கமாட்டாமல் சிரித்தார்.அவரின் பக்கத்தில் இருந்த நீலவேணியும் தன்னை மீறி சிரித்துவிட,அதனை கண்ட வருண்,

“ப்பா…அம்மா சிரிச்சிட்டாங்க….”என்று கூற உடனே வேணி தன் முகத்தை மாற்றிக் கொண்டார்.இதை விஜயும் பார்த்துக் கொண்டிருந்தான்.அவனது முகம் மலர்ந்து விசிககித்தது.அப்போது மணமகள் அறை திறக்கப்பட்டு மெதுவாக நடந்துவந்த மிருணாளினி விஜயின் அருகில் அமர்ந்தாள்.அவளுக்கு அந்த அரக்கு நிற பட்டு மிகவும் பொருத்தமாக இருந்தது.மணமகளுக்கான எளிமையான அலங்காரத்தில் தேவதை போல் தெரிந்தாள் மிருணாளினி.முகத்தில் தேஜஸ் கூடி இருந்தது போல் இருந்தது.ஆனால் அவளது கண்கள் மட்டும் ஒருவித அலைபுரிதலுடன் வேணியை தீண்டி கொண்டிருந்தது.அதை உணர்ந்த விஜய் அவளின் காதருகே குனிந்து,

“அடியே….ஒழுங்க சிரிச்ச முகமா இரு…இல்லை எல்லா போட்டோலையும் அழுமூஞ்சியா தான் இருப்ப…அப்புறம் நம்ம பிள்ளை ஏன் அம்மா இப்படி அழுதுகிட்டு இருக்காங்கனு என்னை தான் கேட்கும்….”என்று சிரிக்காமல் கூற மிருணாளினி அதிர்ந்து அவனை நோக்க அவனோ அவளை பார்த்து கண்ணடித்துவிட்டு திரும்பிவிட்டான்.அவளோ அவன் கூறியவற்றில் இருந்து இன்னும் மீளாமல் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஏய்….ஏய்….”என்று கீர்த்தனா அவளின் தோள்களை தட்ட,அதில் நிகழ்வுக்கு வந்தவள்,

“ஆங்…..”

“உன் புருஷனை அப்புறம் பார்க்கலாம்…இப்ப முன்னாடி பாரு….”என்று சிரிப்பை அடக்கி கொண்டு கூற,

“கீதூஊஊஊ….”என்று பல்லை கடித்து அவளை முறைத்துவிட்டு திரும்பியவள் விஜயையும் முறைக்க தவறவில்லை.ஆனால் அதெல்லாம் கருத்தில் கொள்ளும் நிலையில் விஜய் இல்லை.அவன் ஒருமோனநிலையில் இருந்தான்.முக மலர்ச்சி ஒருமனிதனை அத்தனை அழகாக காட்டுமா காட்டியது அவனை.அவனது அழகிற்கு மேலும் அழகு சேர்த்தது போல் இருந்தது அவனது சிரித்த முகம்.மிருணாளினி ஓரக்கண்ணால் அவனை பார்த்து ரசித்துக் கொண்டிருப்பதும் பின் வேணியை ஒருபுறம் பார்பதுமாக இருந்தாள்.

“வேணிமா….இன்னும் கொஞ்சம் உன் முகத்தை சிரிச்ச மாதிரி தான் வைய்யேன்…..மருமகபொண்ணு உன்னையே தான் பார்க்குது….”என்று ஆனந்தன் கூறினார்.மெல்ல மிருணாளினியின் அருகில் வந்த வேணி மிருணாளினியின் தோள்களை பிடித்து,

“சந்தோஷமா இரு….இது உனக்கான நாள்….டோன்ட் மிஸ்ட்….ஆல் வில் பி ஓகே….”என்று கூற அவரை நிமிர்ந்து நோக்கியவளின் கண்கள் கலங்கி இருந்தது.

“ச்சு….என்னதிது….அழுதா மேக்கப் கலைஞ்சிடும்….”என்று கிண்டல் போல சொல்ல.அவரின் கைகளை பிடித்த மிருணா,

“ஆ….ஆன்டீ….ஆர் யூ ஹேப்பி…..”என்று தொண்டை அடைக்க கேட்க,

“என் பிள்ளை கல்யாணத்தில நான் சந்தோஷமா இல்லாம எப்படி…..ஐ ம் ஹேப்பி….வெரி ஹேப்பி….இப்ப நீயும் சிரிச்ச முகமா இரு….”கூறி அவள் தலையை செல்லமாக ஆட்டிவிட்டு சென்று ஆனந்தனுடன் இணைந்து நின்று கொண்டார்.

“என்ன மாமியார் சொன்னா தான் சிரிப்பியா….இருடீ இதுக்கும் சேர்த்து இருக்கு உனக்கு….”என்று கூறியவன் முன் வருசையில் அமர்ந்திருந்த மல்லிகாவை பார்த்து கட்டை விரலை காட்ட அவரும் இவனுக்கு சிரித்துக் கொண்டே கட்டை விரலை காட்டி மகிழ்ந்தார்.இருவரின் சம்பாஷனையும் பார்த்துக் கொண்டிருந்த மிருணாளினிக்கு இப்போதும் அன்றைய நாளை எண்ணி ஒருபக்கம் சிரிப்பாகவும் ஒருபக்கம் கோபமாகவும் இருந்தது.

மல்லிகா பூர்ணிமாவின் ஜாதகத்தை கொடுக்க நீலவேணி அதை வாங்க முற்படும் சமயம் உள்ளே நுழைந்தான் விஜய்.அந்த சமயத்தில் விஜயை எதிர்பார்க்காத வேணியின் கைகள் தன்போல நடுக்கம் கொண்டது.இதை மிகவும் சிரம்மபட்டு அடக்கினார்.

விஜய் வீட்டில் நுழைந்தவுடன் அமர்ந்திருந்த மல்லிகாவை ஒருநிமிடம் யார் என்று புருவம் சுருக்கி யோசித்தவன்,பின்

“ஓ….அன்னைக்கு கல்யாணத்தில பார்த்தோமே அவங்களா…..”என்று நினைவு கூர்ந்தான்.அவனுக்கு பூர்ணிமாவின் அம்மா என்ற எண்ணமெல்லாம் இல்லை.அவனை பொறுத்தவரை மல்லிகா தன் அன்னையின் தோழி….அவ்வளவே….

“ஹலோ ஆன்டீ….வாங்க….”என்று அவரை புன்னகை முகமாகவே வரவேற்றான்.

“வா விஜய்…..எங்க வெளியில போயிருந்தியா…..எப்படி இருக்க….”என்று இயல்பாக கேட்க,அவனும் இயல்பாக பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.இதில் எதிலேயும் கலந்துகொள்ளாமல் நின்றிருந்தார் வேணி.விஜயை பார்ப்பதும் பின் மேலே மாடியை பார்ப்பதுமாக இருந்தார்.முதலில் தன் அன்னை கவனிக்காதவன் பின் அவர் முகத்தில் தெரிந்த பதட்டத்தை கண்டு கொண்டான் அதே சமயம் அவர் தன் அறையை பார்ப்பதை கவனித்தவன் யார் கவனத்தையும் கவராமல் பார்க்க அங்கு அவனின் தேவதை நின்றிருந்தாள்.என்ன புன்னகை முகமாக இல்லாமல் அவனை முறைத்தபடி நின்றிருந்தாள்.

“ம்க்கும்….இவ சிரிச்சா தான்….அதிசயம் சரியான முசுடு…..முசுடு….”என்று தனக்குள் திட்டிக் கொண்டான்.அப்போது மல்லிகா சொல்வதை கவனிக்கவில்லை,

“சரி வேணி நீ ஜாதகத்தை பார்த்துட்டு சொல்லு…..நான் கிளம்புறேன்….”என்று கூறிவிட்டு எழ அப்போது தான் அவர் கடைசியாக கூறிய வார்த்தைகளை கவனித்தான்.சற்று அதிர்ந்து தன் தந்தையை நோக்க அவரோ அமைதியாக இருந்தார்.சில கணங்கள் தன்னை தன் நிலைக்கு கொண்டு வந்தவன்.

“ஆன்டீ….ஒருநிமிஷம்…..இருங்க எங்க வீட்டுக்கு வந்துட்டு இப்படி ஒண்ணும் சாப்பிடாம போனா எப்படி….”என்று கூற அவனைக் கண்டு புன்னகை பூத்தார் மல்லிகா.வேணிக்கோ நெருப்பின் மேல் நிற்பதை போல் இருந்தது.அதுவும் அவன் தந்தையை பார்த்துவிட்டு தன்னை நிலைபடுத்தியதிலே அவன் மனது எவ்வளவு பாடுபட்டிருக்கும் என்று ஒருதாயாக அவருக்கு தெரிந்திருந்தது.வேணி இவ்வாறு யோசித்துக் கொண்டிருக்க,

“ஓய்….என்ன அங்கேயே நின்னுட்ட….கீழ வந்து வந்திருக்கவங்களுக்கு காபி போட்டுக் கொடு….”என்று அதிகாரமாக கூற,மிருணாளினி அவனை கோபமாக முறைத்தபடி இறங்கி வந்தாள்.

“போ…போ எனக்கும் சேரத்து காபி எடுத்துட்டு வா….”என்று கூற அவள் பற்களை கடிக்கும் சத்தம் அவனுக்கும் கேட்டது.அவனை முறைத்துக் கொண்டே சமையலறை நோக்கி சென்றாள்.மாடியில் இருந்து இறங்கி வந்தவளையே விழி அகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்த மல்லிகாவிற்கு அப்போது தான் கீர்த்தனாவின் நிச்சியத்தில் பார்த்த பெண் என்று நியாபகத்திற்கு வர,

“ஏன் வேணி இந்த பொண்ணு உனக்கு தெரிஞ்ச பொண்ணா…..எவ்வளவு அழகா இருக்குல்ல…..அன்னைக்கே மண்டபத்தில பார்த்தேன் தேவதை மாதிரி இருந்தது….ரொம்ப வேண்டபட்ட பொண்ணா????இல்ல எனக்கு தெரிஞ்ச பையனுக்கு கேட்கலாம்னு தான்….”என்று கேட்க வேணி என்ன பதில் சொல்வது என்று புரியமல் விழிக்க விஜயின் முகம் ஒருநிமிடம் இருண்டு பின் மீண்டது,

“ஆமா தெரிஞ்ச பொண்ணுதான்….ஆன்டீ……நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு….”என்று கண்களில் காதல் பொங்க கூறினான்.மல்லிகா அதைக் கேட்டவுடன் அதிர்ந்துவிட்டார் என்றால் வேணியோ சிலை போல நின்றுவிட்டார்.மகன் இப்படி உடைத்து கூறுவான் என்று அவர் நினைக்கவில்லை.

“என்ன….என்ன சொன்ன விஜய்….”என்று மல்லிகா கேட்க,

“நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு ஆன்டீ…..”என்றான் அதே ரசனையான பார்வையுடன் கூறிக் கொண்டிருக்க,அதற்குள் மிருணாளினி அவர்களுக்கு காபி போட்டு எடுத்து வந்து கொடுத்தாள்.அழுதழுது முகம் வீங்கியிருந்தாலும் அதுகூட அவளுக்கு அழகாக தான் இருந்தது.மல்லிகா மிருணாளினியே அதிர்ச்சி விலகாமல் பார்த்துக் கொண்டிருக்க விஜய் தான் தொடர்ந்தான்,

“என்ன ஆன்டீ எப்படி என்னோட செலக்‌ஷன்…..”என்று கேட்க மிருணாளினி அவனை முறைத்துவிட்டு வெளியில் சென்றுவிட்டாள்.அவளை பார்த்தவாறே தோள்களை குலிக்கியவன் மல்லிகாவிடம் திரும்பி,

“ப்ச்…..கொஞ்சம் என் மேல கோபம் ஆன்டீ….அதான்….நீங்க தப்பா எடுத்துக்காதீங்க….”என்று கூற மல்லிகாவிற்கு இதை எப்படி கையால்வது என்று தெரியவில்லை.மனதிற்குள் ஒரு புயல் அடிப்பதை போல் உணர்ந்தார் விஜயின் வீட்டிற்கு செல்ல மகள் வற்புற்திய போது அவள் முகத்தில் இருந்த மகிழ்ச்சியை கண்கூட பார்த்தவருக்கு இப்போது விஜயின் பதில் சற்று அதிர்ச்சியாக தான் இருந்தது.

சற்று நேரம் கனத்த மௌனம் மல்லிகா ஏதோ பேசும் முன் விஜய்,

“சாரி ஆன்டீ….நான் உங்களை கஷ்டப்படுத்தனும் பேசலை…..அவ….என் மிருணா ஏற்கனவே ரொம்ப கஷ்டப்பட்டுட்டா அதான்…அப்படி பேசினேன்….”என்று வருந்தியே கூறியவன் மேலும் தொடந்தான்,

“ஆன்டீ….அம்மாக்கு நான் விரும்புனது தெரியாது…..நானே இப்ப தான் சொன்னேன்….அதனால இதுல என்று வேணி கையில் இருக்கும் ஜாதக நோட்டை சுட்டி காட்டிவிட்டு அவங்க தப்பு எதுவும் இல்லை…..”என்று கூறியவன் நீண்ட மூச்சொன்றை இழுத்துவிட்டு,மல்லிகாவின் கைகளை பற்றியபடி தரையில் அமர்ந்து,

“ஆன்டீ…ப்ளீஸ்….எங்க அம்மாக்கிட்ட சொல்லுங்க…..எங்க காதல் கல்யாணத்துக்கு ஒகே சொல்ல சொல்லுங்க ஆன்டீ…..எனக்கும் வயசு ஆகிட்டே போகுது இல்ல….இவங்க சம்மதம் இல்லாம அந்த முசுடு கல்யாணத்துக்கு ஒத்துக்காது….ப்ளீஸ்….”என்று கெஞ்ச,மல்லிகாவிற்கு மனதில் இருந்த கோபம் போய் சிரிப்பு பீரிட்டது.

“ஹா…..ஹா…..டேய் விஜய்….நீ இன்னும் மாறவேயில்லை டா…..”என்று அவனை செல்லமாக தோள்களில் தட்டியவரே கூற,சற்று நேரத்தில் பூகம்பம் போல் வெடிக்கவிருந்த பிரச்சனை ஒன்றுமில்லாது போனது.

“ம்ம்….எனக்கு கோபம் இருக்கு தான் உன்னை என் பொண்ணு மிஸ் பண்ணிட்டானு….ஆனா அதுக்காக வில்லி மாதிரி உன்னை திட்டி என்ன ஆகப்போகுது….எனக்கு என் பொண்ணு எப்படியோ அதே போல தான் நீயும்…..திருமணம் அப்படீங்கிறது இரண்டு மனங்களின் இணைவு தான்….”என்றவர் வேணியிடம் திரும்பி,

“நீ ஏன் அந்த பொண்ணை வேணாம்னு சொல்லுற எனக்கு தெரியாது….ஆனா உன் பிள்ளை மனசில ரொம்ப ஆழமா பதிஞ்சவளை நீக்கிட்டு உன்னால வேறு ஒரு பொண்ணை நிரப்ப முடியாது….அதனால கொஞ்சம் யோசி…..வேணி….”என்றவர்,விஜயிடம் திரும்பி,

“என்னடா இது போதுமா இல்லை இன்னும்….”என்று கூற அவரை அணைத்துக் கொண்டான் விஜய்.

“தேங்க்ஸ்….ஆன்டீ….என்னை புரிஞ்சிக்கிட்டதுக்கு…தேங்க்ஸ்…”என்று மனதார கூறினான்.அவனின் தலையை பிடித்து ஆட்டியவர்,

“டேய்….நீ சரியான ஆளு தான்…..”என்று அவனின் கன்னங்களை பிடித்து கிள்ளிவிட்டவர்.

“அப்புறம் வேணி…..என் பொண்ணு ஜாதகத்தை உனக்கு தெரிஞ்சவங்ககிட்ட கொடு….”என்று கூற வேணியின் கண்களில் கண்ணீர் சுரந்தது.அவரின் நிலை உணர்ந்த மல்லிகா,

“ஏய் என்னதிது…..கண்ணு கலங்கிட்டு….எனக்கு இதுல எந்த வருத்தமும் இல்லை…இன்னும் சொல்லபோனா கல்யாணத்துக்கு முன்னாடியே தெரிஞ்சதுல சந்தோஷம் தான்….நீ தேவையில்லாம மனசை போட்டு குழப்பிக்காத….அப்புறம் இவன் இல்லைனா என் பொண்ணுக்கு பையனா கிடைக்கமாட்டான்….விடு….”என்று கூற,

“ஆமா அதான…என்னை விட நல்ல பையனே கிடைப்பான்….”என்று விஜய் கூற,

“டேய் போதும்டா….ரொம்ப ஓவரா இருக்கு….உங்க அம்மா கண்டிப்பா கல்யாணத்துக்கு ஒத்துப்பா….அதுக்காக நானே ரொம்ப கஷ்டபட்டு உருக்கமா பேசிக்கிட்டு இருக்கேன் நீ என்னடான அதையும் காமெடி ஆக்குற….”என்று கூற அங்கே சிரிப்பலை எழுந்தது.பேராசை,பொறாமை நிறைந்த இந்த உலகத்தில் மல்லிகா போன்ற நல்ல உள்ளங்களும் இருக்கின்றன.மல்லிகா நினைத்திருந்தாள் வேணியின் மனதை கெடுத்து தன் மகளை திருமணம் செய்திருக்கலாம் ஆனால் அவர் தன் மகளின் விருப்பத்தை மட்டும் மதிக்காமல் விஜயின் விருப்பதிற்கும் மதிப்பு கொடுத்தால் தன் மகளின் வாழ்வுவோட அவர்களின் அழகிய நட்பும் காப்பற்றபட்டது.

நல்ல உள்ளங்களின் ஆசிர்வாதத்துடன் விஜய்,மிருணாளினி திருமணம் நடந்தேரியது.தன் பேத்தியின் புன்னகை ததும்பிய முகத்தை கண்கள் கலங்க பார்த்து அவர்களை ஆசிர்வதித்தார் விஸ்வநாதன்.விஜய் தெளிவாக கூறிவிட்டான் நீங்கள் தான் முன்னிருந்து உங்கள் பேத்திக்கு அனைத்தும் செய்ய வேண்டும் இல்லை என்றால் இந்த திருமணம் நடக்காது என்று.அதுமட்டுமில்லாது மிருணாளினியை சபையில் தங்கள் பேத்தியாக தான் அறிமுகபடுத்த வேண்டும் என்று கட்டளை போலவே கூறியிருந்தான்.விஸ்வநாதனுக்கும் விஜயின் இந்த ஆளுமையான செய்லகள் தானே கவர்ந்தது அதனால் அவர் அனைத்திற்கும் சம்மதம் தெரிவித்து அதன் படியே திருமணத்தை நடத்திவிட்டார்.

மிருணாளினிக்கு மனது முழுவதும் மகிழ்ச்சி ததும்பியது குனிந்து தன் மார்பில் தொங்கும் தாலியை தொட்டு தொட்டு பார்த்துக் கொண்டிருந்தாள்.கண்களில் கண்ணீர் திவளைகள் ஆனால் இது அதீத மகிழ்ச்சியினால் வந்தது.அவளையே கவனித்துக் கொண்டிருந்த விஜய் அவளின் காது அருகில் குனிந்து,

“என்னடீ….என்னமோ ரொம்ப கஷ்டபட்டு என்னை கல்யாணம் செஞ்ச மாதிரி பீல் பண்ணிக்கிட்டு இருக்க….”என்று நக்கலாக கேட்க,அவனை முறைத்தவள்,

“சும்மா ஏன் என்னை வெறுப்பேத்திக்கிட்டு இருக்கீங்க….ஏதாவது குதர்க்கமா பேசாதீங்க….”என்று கோபமாக சொல்ல,

“ஏன்டீ சொல்லமாட்ட….என்னை விட்டு போக நினைச்சவதான நீ…..உன் காதலை கூட நான் அந்த நாடகம் நடத்தனால சொல்லிருக்கமாட்ட தான…..எல்லாம் இவனுக்கு மறந்து போச்சேனு விட்டுட்டு போக பார்த்தவதான….”என்று கேட்க மிருணாளினிக்கு அதிர்ச்சியாக இருந்தது என்ன பேசுகிறான் இவன் என்று அவனது முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் அதில் அவ்வளவு கோபம் வழிந்தது.

“என்ன விஜய்…ஏன்….உங்களுக்கு தான் எல்லாம் நியாபகம் வந்துருச்சே….”என்று தடுமாற்றமாக அவள் கேட்க,

“அப்படினு யார் சொன்னா….எனக்கு இப்ப வரைக்கும் எதுவும் நியாபகம் வரலை….”என்று அழுத்தம் திருத்தமாக கூற மிருணாளினி சிலை போல நின்றாள்.

Advertisement