Advertisement

காதல் வானவில் 33 2

“ஏய்….ஓஓஓ…..நம்ம பிளான் சக்‌ஸஸ் மிஸ்டர்.வெயிட்……யாஹூ…..ஏய்….ஐ ம் ஹாப்பி…..”என்று விஜயை மிருணாளினியை தோளில் அழுந்த பற்றிக் கொண்டு கத்த,

“யா யெங் மேன்…..வி வின்….வி வின்….”என்று விஸ்வநாதனும் விரல்களை மடக்கி காட்டி தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்.இவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டு நின்ற மற்ற அனைவரும் குழம்பி போய் இருவரையும் மாற்றி பார்த்தனர்.இதில் முதலில் தெளிந்தது நீலவேணி தான் மகன் ஏதோ திட்டம் போட்டு தான் இவ்வாறு பேசியுள்ளான் என்று அவருக்கு புரிய அவர் மகனை முடிந்த மட்டும் முறைத்தார்.

விஜயோ வேணியின் பார்வை மாற்றத்தை உணர்ந்து தன் கண்களால் அவரிடம் மன்னிப்பை யாசிக்க அவரோ கண்களால் அவனை எரித்துவிடுவது போல பார்த்தார்.ஆனந்தனுக்கும் இப்போது சற்று புரிந்திருந்தது மகனை முறைக்க முயன்று தோற்று தான் போனார் மனிதர்.உண்மையில் வேணியை விட மகனின் மேல் கொள்ளை பிரியம் அவருக்கு.அதனாலே மகனின் விருப்பங்களை அவனின் முகத்தை வைத்தே கண்டுகொள்வார்.மிருணாளினியின் விடயத்திலும் அவ்வாறே மகனின் மலர்ந்த முகமே அவன் காதலில் விழுந்துவிட்டான் என்று கூறிவிட்டது இருந்தும் அவனின் வாயாலே வரட்டும் என்று அமைதி காத்தார்.

அப்போது மாடியிலிருந்து ஏதோ ஒரு பொருள் உருண்டு விழ அனைவரும் மேலே பார்க்க அங்கு தன் நெஞ்சில் கை வைத்தபடி நின்றிருந்தாள் கீர்த்தனா.அவளது விழிகள் இரண்டு தெரித்து கீழே விழுந்துவிடும்படி மிருணாளினியையும்,விஜயையும் பார்த்துக் கொண்டே நிற்க,விஜய்க்கு சிரிப்பு தாளவில்லை.அத்தோடு அச்சோ இவளையும் இப்போ சாமளிக்கனுமே என்று மனதில் ஓடமல் இல்லை.

தன் மீது அட்டை போல் ஒட்டிக் கொண்டிருந்த காதலியைக் கண்டவனுக்கு மேலும் சிரிப்பு பொங்கியது.அவளோ தான் காண்பது கனவா,நினைவா என்ற ரீதியில் நின்றாள்.அவளது தலையில் செல்லமாக தட்ட,அவனை பாவமாக திரும்பி பார்த்தாள்.

“ஓய் என்ன வாய் பார்த்துக்கிட்டு இருக்க போ….போய் எல்லாருக்கும் காபி கொண்டுவா….போ….”என்று விரட்ட,திருதிருவென்று முழித்துக் கொண்டு இருக்க,மேலும் இரண்டு கொட்டு கொட்டி அவளை வலிக்க செய்தவன்,

“என்னடீ…..ஏதோ காட்டுக்குள்ள மாட்டிக்கிட்ட மாதிரி முழிச்சிக்கிட்டு இருக்க…போ….காபி எடுத்துட்டுவா….அப்படியே மிஸ்டர்.வெயிட்டுக்கு பிளக்காபி…..போ…..”என்று விரட்ட,அவன் கொட்டியதில் வலித்த தலையை தடவிக் கொண்டே அவள் பாவமாக வேணியை பார்க்க,அவளின் பார்வை புரிந்தவன்,

“ஓய்….அங்க என்ன பார்வை….இனி நீதான் எல்லாம் செய்யனும்…எங்க அம்மா உட்கார்ந்து தான் இருப்பாங்க போ….”என்று மிரட்ட,அவனை முறைத்தவள் திரும்பி தன் தாத்தாவை பார்க்க,

“என்ன யெங் மேன்…..எனக்கு உங்க விட்ல காபி கொடுக்க இவ்வளவு யோசிக்குறாங்க….”என்று மீண்டும் கிண்டல் பண்ண,இதை எல்லாம் பார்த்து மயக்கம் வருவதை போல் இருந்தது மிருணாளினிக்கு,

“ஓய் மயங்கி கியங்கி விழுந்துடாத…போ போய் எல்லாருக்கும் காபி போட்டு எடுத்துட்டுவா….”என்றான்.அவனை முறைத்துவிட்டே உள்ளே சென்றாள்.

“பார்த்தியா என் மகனை எப்படி அவன் அம்மாவை பார்த்துக்குறான்….நீ என்னடான அவனை திட்டுற….”என்று ஆனந்தன் வேணியின் காதில் ரகசியம் பேச,

“ஆமா…ஆமா…உங்க பிள்ளை எனக்கு சப்போர்ட் பண்ணுறானா….இல்லை….”என்று சமையல் அறை பக்கம் பார்க்க அங்கு மிருணாளினி அனைவருக்கும் காபி கலந்து கொண்டிருந்தாள்.உண்மையில் மிருணாளினி மீது கோபம் என்று எல்லாம் இல்லை வேணிக்கு அவருக்கு மகனிற்கு அமையும் பெண் குடும்பம் பெரிதாக இருக்க வேண்டும் தாம் தான் இப்படி யாரும் இல்லாம் இருந்துவிட்டோம் அவனுக்காவது அனைத்தும் அமைய வேண்டும் என்ற எண்ணம்.இப்போதும் அவரது நினைவில் எந்த மாறுதலும் இல்லை.

விஜய் மாடியில் ஏறி கீர்த்தியின் கை பிடிக்க அப்போது சுயத்திற்கு வந்தவள்,தான் கண்ட காட்சி உண்மையா பொய்யா என்று நினைத்து சுற்றிமுற்றி பார்த்தவள் குழம்பி போய்,

“டேய் விஜி….நான் இப்ப பார்த்தது….”என்று திக்கி திணற,அவளை செல்லமாக தலை தட்டியவன்,

“ஓய் எல்லாம் உண்மை தான்….”என்று கூற,அவளோ ஆவென்று வாயை பிளந்தவாறே கீழே இறங்கி வந்தாள்.அப்போது தான் மிருணாளினி அனைவருக்கும் காபி கலந்து கொண்டு வந்து கொடுக்க அவளையே பார்த்துக் கொண்டிருந்த கீர்த்தியிடமும் வந்து ஒரு கோப்பையை நீட்ட,

“நீ இப்ப என்ன சொன்ன மிருணா….அதை திருப்பி சொல்லு….”என்று சந்தேகமாக கேட்க,அவளோ விஜயை பாவமாக பார்த்தவாறே அவனிடமும் ஒரு கோப்பையை நீட்ட,

“ம்ம்….சொல்லு….உன் பிரண்ட் கேக்குறாள்ல சொல்லு…..”என்று நிலைமை புரியாமல் மேலும் வெறுப்பேற்றினான்.அவனை முடிந்த மட்டும் முறைத்துவிட்டு ஆழ்ந்த மூச்சொன்றை இழுத்துவிட்டவள்,

“நான் விஜயை விரும்புறேன் கீதூ….”என்று ஒருவழியாக கூறி முடிக்க,இப்போது ஆஆ வென்று முழிப்பது கீதுவின் முறையானது.அவளின் முகமாற்றத்தை பார்த்தவாறே அவளிடம் வந்த மிருணா,

“ஏய் ஏய்…அப்படி பார்க்காதடீ….”என்று கெஞ்சுதலாகவே கேட்க,

“ஹா…..ஹா…..ஹா…..”என்று விஜய் விழுந்து சிரிக்க தொடங்கினான்.இப்போது சிரித்தால் கீர்த்தனா கோபப்படுவாள் என்று நன்கு உணர்ந்த மிருணாளினி விஜயை கையில் வைத்திருந்த தட்டால் ஒரு அடி வைத்து,

“ஷ்ஷ்ஷ்….விஜய்….அவளுக்கு கோபம் வரும்….வாயை மூடு….”என்று கோபமாக கூறினாள்.அவள் கூறியது போல கீர்த்தனாவிற்கு மூக்கின் மேல் கோபம் வந்தது.

“ஓஓஓஓ….இரண்டு பேரும் லவ் பண்ணிட்டு என்கிட்ட சொல்லவேயில்லைல….போங்க….போங்க….நான் பேசமாட்டேன்….போங்க….”என்று அழுது கொண்டு தன் வீட்டிற்கு ஓடிவிட்டாள்.

கீர்த்தனா சென்றவுடன் மிருணா விஜயை முறைக்க,

“என்ன முறைப்பு….போ….”என்று கூற,

“மிருணா…..இங்க வாடா….”என்று விஸ்வநாதன் அழைக்க,அவரை பார்த்தவள் திரும்பி மீண்டும் விஜயை பார்க்க அவனோ போ எண்ணும் விதமாக தலையசைத்தான்.மெல்ல நடந்து அவரிடம் வந்தவளை அவரின் அருகில் அமரசெய்தவர் நிமிர்ந்தமர்ந்து ஆனந்தனிடமும்,வேணியிடமும்,

“என் பேத்தியை உங்க பையன் விஜய்க்கு கொடுக்க நினைக்கிறேன்….நீங்க எண்ண நினைக்கிறீங்க…..”என்று நேரடியாகவே கேட்டுவிட,ஆனந்தன் என்ன பேசவென்று தெரியாமல் வேணியின் முகத்தை பார்க்க வேணி பேசும் முன் விஜய்,

“எங்க வீட்ல என்னோட சந்தோஷம் தான் அவங்களுக்கும்…அதனால….”என்று கூறிக்கொண்டே வேணியை இறைஞ்சும் பார்வை பார்க்க அவரோ அவனை முறைத்தபடி அமர்ந்திருந்தார்.

மிருணாளினிக்கு மனது என்ன நினைக்கிறது என்றே தெரியவில்லை தான் எது நடக்காது என்று நினைத்தோமோ அது இப்போது நடந்துகொண்டிருக்கிறதை நினைத்து சந்தோஷிக்கவா இல்லை விஜயின் வீட்டினர் இதை எப்படி எடுத்துகொள்வர் என்று கலங்கவா என்று இருந்தது அவளின் நிலை.மனதின் பாரம் உடலிலும் வெளிப்பட்டதோ என்னவோ அவளது கை,கால்கள் நடுங்கி கொண்டிருந்தது அதை உணர்ந்த விஸ்வநாதன் அவளின் கையின் மீது தன் கையை வைத்து அழுத்தம் கொடுத்தார்.அதுவே நான் உனக்கு இருக்கிறேன் என்று கூறுவது போல் இருந்தது நிமிர்ந்து விஜயை காண அவனும் அவளை தான் முறைத்தபடி அமர்ந்திருந்தான் இருந்தும் கண்களால் தைரியமாக இரு என்று கூறினான்.

விஸ்வநாதனே பேச்சை தொடர்ந்தார்,

“நீங்க உங்க வீட்ல கலந்து பேசிட்டு எனக்கு முடிவு சொல்லுங்க….எப்படியும் கல்யாணம் சீக்கிரம் வைக்கிறது தான் எனக்கு நல்லதுனுபடுது….”என்று தன் மனதில் நினைத்ததையும் சேர்த்தே கூறிவிட்டார்.விஜயின் பெற்றோர் தான் அதிர்ந்து அமர்ந்திருந்தனர் ஏதோ தாங்கள் சம்மதித்த மாதிரி இவர் கல்யாணம் வரை சென்றது அவர்களுக்கு பிடிக்கவில்லை அந்த அதிருப்பத்தியை முகத்தில் காட்ட விஜயை அமைதியாக அமர்ந்திருந்தான் என்றால் மிருணாளினிக்கு தான் ஏதோ முள்ளின் மீது நிற்பது போல் இருந்தது.

விஸ்வநாதனுக்கு அவர்களின் அதிருப்பதி புரிந்தது அதனால் மேலும் பேசினார்,

“எனக்கு உங்க எண்ணம் புரியது ஏன் சீக்கிரம் கல்யாணம் வைக்க சொல்லுறேன்னு நீங்க யோசிக்கலாம்….ஆனா அது தான் மிருணாவுக்கு நல்லது….சில விஷயங்களை நான் இப்ப தள்ளிபோடுற நிலைமையில இல்லை….எனக்கு என் பேத்தி நல்லபடியா இருக்கனும்….அவ்வளவு தான்…..”என்று அனைத்தையும் கூறி முடிக்க அங்கே நிசப்பதம் மட்டுமே சிறிது நேரம் வேணி தான் தன்னை மீட்டுக் கொண்டு பேச தொடங்க,

“ம்மா….அது….”என்று விஜய் ஏதோ கூறவர,

“விஜய் உன் கல்யாணத்துக்கு என் ஆசிர்வாதம் வேணும்னு நினைச்சா பேசாத….”என்று கண்டிப்புடன் கூற,விஜய் அதிர்ந்து நின்றுவிட்டான்.ஆனந்தனோ,

“வேணிமா கொஞ்சம் அமைதியா இருமா….”என்று சூழலை இலகுவாக்க முற்பட,

“நீங்க அமைதியா இருங்க….உங்களுக்கு மட்டும் அவன் மகன் கிடையாது எனக்கும் தான்….”என்று தீர்க்கமாக கூற அவரும் அமைதியாகிவிட்டார்.

“எனக்கு என் பையனுக்கு வரபோற பொண்ணை பத்தி சில கனவுகள் இருக்கு….நான் நினைச்சபடி இங்க எதுவும் இல்லை….ஆனா….”என்றவர் மகனின் முகத்தை பார்க்க அவனது முகம் கசங்கி போய் இருந்தது இருந்தும் தன் மனதில் என்ன உள்ளது என்று கூறிவிட வேண்டும் என்ற வேகம் அவருக்கு,

“இப்ப உடனே எல்லாம் என்னால முடிவு சொல்ல முடியாது….எனக்கு யோசிக்கனும்….”என்று குரல் கமற கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.ஆனந்தனுக்கு மிகுந்த சங்கடமாக போனது அவர் விஸ்வநாதனிடம்,

“மன்னிச்சிடுங்க…அவ ஏதோ கொஞ்சம் டிஸ்டர்பா இருக்கா….”என்று விளக்க முற்பட,அவரோ சிரித்துக் கொண்டே,

“ஐ நோ….ஐ நோ….எனக்கு புரியுது….யெங் மேன்….இனி நீ தான் யோசிச்சு சொல்லனும்…..நானும் மிருணாவும் இப்ப கிளம்ப….”என்று முடிக்கும் முன்,

“மிருணா எங்கேயும் வரமாட்டா….”என்று அழுத்தமாக விஜயின் குரல் வந்தது.ஆனால் மிருணாளினிக்கு இருந்த சிறு நம்பிக்கையும் இப்போது இல்லை என்பதால் அவள் தன் தாத்தா கூறியவுடன் எழுந்துவிட்டாள்.அவள் எழுந்தவுடன் எங்கிருந்து தான் விஜய்க்கு அவ்வளவு கோபம் வந்ததோ,

“ஏய் என்னடீ…நான் இங்க சொல்லிகிட்டு இருக்கேன் நீ பாட்டுக்கு எழுந்திருக்கிற…..உட்காரு….நீ எங்கேயும் போகபோறது இல்லை….”என்று கையை ஓங்கியவாரே கத்த,அவனின் சத்ததில் உள்ளே சென்ற வேணி மீண்டும் வெளியில் வந்தவர் மகனின் அந்த ரௌத்திரத்தைக் கண்டு மிரண்டு தான் நின்றார்.

“விஜய்….என்னதிது….”என்று ஆனந்தன் அதிர்ந்து கேட்க,விஸ்வநாதனுக்கு விஜயின் செயல் பிடிக்கவில்லை என்பது அவரின் முக மாற்றத்திலேயே தெரிந்தது.

“சார் நான் என் பேத்தியை கூட்டுட்டு கிளம்புறேன்….”என்று தீர்மானமாக கூற,

“மிருணா எங்கேயும் நீ போகக்கூடாதூஊஊ….”என்று விஜயும் தன்னிலை மறந்து கத்தினான்.அவ்வளவு ரௌத்திரம் அவனது கண்களில் மிருணாளினிக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை ஆனால் விஜயை முறைத்துக் கொண்டே,

“தாத்தா நீங்க கிளம்புங்க….நான் கீர்த்தி வீட்டுக்கு போறேன்…..”என்று கூறியவள் யாரின் பதிலை எதிர்பாராமல் அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்.அவளுக்கு விஜய் தனக்காக வாதாடினாலும் அவனின் தாய்,தந்தையை எதிர்பது பிடிக்கவில்லை.தான் தான் அனைத்தும் இழுந்து நிற்கிறோம் எங்கே அவனும் தன்னை போல தனித்து நின்றுவிடுவோனோ என்ற பயம் பிடித்துக்கொண்டது.அழகிய குருவிக் கூடு போல் இருந்த அவனது குடும்பம் இப்படி சிதைவதை அவளால் பார்க்க முடியவில்லை அதுவும் தன்னால் என்னும் போது மேலும் வலித்தது.மனது,உடலும் வலிக்க சென்றுவிட்டாள்.

விஜய் போகும் அவளின் முதுகையே வெறித்தவாரே நிற்க விஸ்வநாதன் ஆனந்தனிடம் சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டார்.வேணிக்கு மகனின் வேதனை ததும்பும் முகம் நெஞ்சை பிசைந்தது ஏதோ தவறு செய்துவிட்ட உணர்வு அவரை ஆட்கொள்ள தன் அறைக்குள் நுழைந்து கொண்டார்.ஆனந்தனுக்குமே இந்த சூழலின் கனத்தை எவ்வாறு குறைக்க என்று புரியாமல் தடுமாற வேணியை தேடி சென்றார்.யாருமற்றவனாக தனித்து நின்ற விஜய்க்கு மனது சொல்லான வேதனையும் வலியும் நிறைந்து இருக்க அதன் கனம் தாங்காமல் மடிந்து சோபாவில் அமர்ந்து கைகலால் தலையை தாங்கிய படி அமர்ந்துவிட்டான். 

புயலுக்கு முன் இருக்கும் ஆழ்ந்த நிசப்பத்தை போல் இருந்தது விஜயின் நிலை மனது தன்னிலை இல்லாமல் சுழன்று கொண்டு இருக்க புயலில் அடித்து செல்லப்படுமா அவர்களது காதல் இல்லை புயலுடன் போராடி வெளிவரும் வண்ண வானவில் போல வண்ணங்களை நிரப்புமா…

Advertisement