Advertisement

காதல் வானவில் 33 1

அந்த  நீண்ட வரவேற்பறையில் கண்களை மூடியிருந்த விஜய்க்கு முகத்தில் மட்டும் அமைதி இருந்து.உள்ளம் உலைகளம் போல் கொதித்துக் கொண்டிருந்தது.இதில் மிருணாளினியின் புரிந்து கொள்ளாத தனத்தில் மேலும் கோபமும்,விரக்த்தியும் சேர்ந்தே எழுந்தது.

“நீ எப்போ தான்டீ என்னை புரிஞ்சுப்ப….”என்று மனதிற்குள் கூறிக் கொண்டான்.கண்கள் தன்போல் வீட்டு கடிகாரத்தை பார்த்தது.அவன் எதிர்பார்க்கும் நபர் இன்னும் சில மணிநேரங்களில் வந்துவிடுவார்.அவர் வந்தவுடன் எவ்வாறு பேச வேண்டும் என்று தனக்குள் சொல்லிக் கொண்டவனுக்கு தன்போல் தாய்,தந்தையிடம் எப்படி தன் முடிவை கூறுவது என்று சிறு தயக்கம் இருக்க தான் செய்தது ஆனாலும் தன் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்ற உறுதி இருந்தது.

“இவங்க எல்லாரையும் கூட சாமாளிச்சுடுவேன் போல….அந்த பிசாசு என்று மிருணாவை வஞ்சனை இல்லாமல் திட்டினான்.இவ்வாறு பலவேறு எண்ணங்களில் அவன் சிக்கி தவித்துக் கொண்டிருந்த நேரம் தான் வீட்டின் மணி இசைந்தது.யாராக இருக்கும் என்று நன்கு தெரியும் இருந்தும் எந்த பதட்டமும் காட்டாமல் தன்னை நிலைபடுத்திக் கொண்டு கதவை திறந்தான்.அங்கு அமைதியான முகத்துடன் நின்றிருந்தார் விஸ்வநாதன்.

“உள்ள வாங்க….”என்று சற்று இறுக்கமாகவே ஒலித்தது விஜயின் குரல்.அவரும் அவனை அளவிட்டவாறே உள்ளே வந்தார்.

“எங்க மிருணா….”என்று கேட்க,விஜயோ,

“தூங்குறா….உட்காருங்க….”என்று எதிரில் இருந்த இறுக்கையை காட்டினான்.ஆனால் அவருக்கு உட்காரும் எண்ணமெல்லாம் இல்லை போல,

“இல்லை நான்…..நாங்க கிளம்புனும்….மிருணாவை கூப்பிடு….”என்று தான் ஒரு அதிகார வர்க்கம் என்று நிரூபித்தார்.அவரை ஏளனமாக உதடு சுளித்தவன்,

“ம்ம் நீங்க கிளம்புனும் ம்ம்ம்…..யூ மீன் நீங்களும் மிருணாவுமா….கிளம்பலாம்…..கிளம்பலாம்…..”என்று வேணுடும் என்றே கேட்க,எதிரில் நின்றவர் பல்லை கடிக்கும் சத்தம் நன்கு கேட்டது அவனுக்கு.

“இங்க பாருங்க….நான் ரொம்ப டையர்டா இருக்கேன் நான் உக்கார போறேன்….அப்புறம் சின்ன பையன் என்னை மதிக்கலை அப்படி இப்படினு சொல்ல கூடாது…..”என்று மேலும் அவரை வெறுப்பேற்ற விஸ்வநாதனும் இப்போது அவனின் போக்கிற்கே தான் செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டு அமைதியாக உட்கார்ந்தார்.

விஸ்வநாதனின் கண்கள் அந்த வீட்டையே நோட்டம் விட்டபடி இருந்தது.

“யாரு விஜய்…..”என்றபடி வந்தார் ஆனந்தன்.வந்தவர் வரவேற்பறையில் அமர்ந்திருந்த புதியவரைக் கண்டு கண்களை சுருக்கினார்.அவரின் பார்வை உணர்ந்த விஜய்,

“ப்பா….இவங்க மிருணாவோட தாத்தா விஸ்வநாதன்….”என்று அறிமுகபடுத்த,மரியாதை நிமித்தமாக அவரை கை கூப்பி வணகினார் ஆனந்தன்.விஸ்வநாதனுக்கு பதிலுக்கு மரியாதை செய்ய பிடித்தம் இல்லை என்றாலும் எதிரில் அமர்ந்து தன்னையே அளவிடும் பார்வை பார்த்துக் கொண்டிருந்த விஜயையும் அவனின் ஏளன புன்னகையும் கூறியது நீ என்ன அப்பாவை மதித்து தான் ஆக வேண்டும் என்று.அதனாலே அவர் பதிலுக்கு கை கூப்பி வணங்கிவிட்டு மீண்டும் அமர்ந்தார்.

“நான் மிருணாவை கூட்டிட்டுக்கிட்டு கிளம்புறேன்….எங்க அவ….”என்று ஆனந்தனிடம் கூற,அவரோ விஜயின் முகத்தை பார்த்தார்.விஸ்வநாதனுக்கு பிபி ஏகத்துக்கும் எகிறியது மகன் இரவில் ஒரு பெண்ணை அழைத்து வந்து வைத்திருக்கிறான் அவனை திட்டி திருத்தாமல் இப்படி இருக்கிறாரே என்று நினைக்க,

“எங்க வீட்ல நான் சொல்லுறது தான்….ஏன்னா அவங்களுக்கு என் மேல அவ்வளவு நம்பிக்கை….”என்று விஜய் அவரின் நினைப்பை சரியக கணித்து கூற,

“இருக்கட்டும்….எங்க என் பேத்தி….கூப்பிடு…நாங்க கிளம்புறோம்….இன்னும் இரண்டு நாள்ல அவளுக்கு நிச்சியம்….”என்று வேண்டும் என்றே அவனை நோகடிக்க கூறினார்.ஆனால் அவர் எதிர்பார்த்த மாற்றம் தான் அவனிடம் இல்லை.அவன் அதே ஏளன பார்வையுடன்,

“ஓஓ…நிச்சியம் தான பேஷா நடத்திடலாமே….”என்று கூற,

“என்ன என்ன சார் உங்க பையன் ஏதோ போல பேசிக்கிட்டே இருக்கான்….நீங்களும் பார்த்துக்கிட்டே இருக்கீங்க….”என்று விஸ்வநாதன் ஆனந்தனிடம் கூற,

“விஜய் என்னப்பா இது…..”என்று ஆனந்தன் சங்கடமாக கேட்க,அதற்கு விஜய் பதில் கூறும் முன்,

“என் பையன் சரியா தான் பேசுறான்….நீங்க தான் தேவையில்லாதது எல்லாம் பேசிக்கிட்டு இருக்கீங்க….”என்று கூறியபடி வந்தார் நீலவேணி.தன் அன்னையின் குரலைக் கேட்டவுடன் விஜய்க்கு மனதில் சிறு சாரல் அந்த மலர்ச்சி அவனது முகத்திலும் பிரதிபலித்தது.வேணிக்கு மகனின் எண்ணம் புரிந்தாலும் யாரோ மூன்றாம் மனிதர் முன் தன் மகனை விட்டு தர மனமில்லை அதனால் அவனை முறைத்துக் கொண்டே தான் பேசினார்.

விஸ்வநாதனுக்கு தான் இப்போது பெருத்த அவமானமாகி போனது தான் இத்தனை கூறியும் இவர்கள் மகனை தாங்கி தான் பேசுகின்றனர் என்று.

“இப்ப என் பேத்தியை பார்க்க முடியுமா முடியாதா….”என்று விஸ்வநாதன் சற்று கோபமாகவே கேட்க,

“முடியாது….”என்று அழுத்தமாகவே வந்தது விஜயின் பதில்,அதில் கடுப்பானவர் வேகமாக எழுந்து நிற்க,ஆனந்தன் தான்,

“சார் ப்ளீஸ்…உக்காருங்க….என்ன விஜய் இது வயசுல பெரியவங்க கிட்ட இப்படி தான் நடந்துபியா…..நல்லயில்லப்பா….”என்று கூற,

“அதுக்கு பெரியவங்க முதல்ல பெரிய மனுஷ தனமா நடந்துக்கனும்….”என்று நறுக்கென்று பதில் வந்தது வேணியிடம் இருந்து.

“என்ன சார் குடும்பமா என்னை அவமதிக்கிறீங்களா…..”என்று விஸ்வநாதன் கத்த தொடங்க,

“தாத்தா…..”என்று அவரை விட இரண்டு மடங்கு கோபமாக கத்தினாள் மிருணாளினி.பேத்தியின் குரலை கேட்டவுடன் வேகமாக திரும்பி பார்க்க மாடியிலிருந்து கலைந்த சிற்பம் போல் நடந்து வந்தாள்.வேகமாக அவளிடம் நெருங்கியவர்,

“மிருணா….என்னடா இப்படி ஆகிட்ட….”என்று அவளின் தலையை கோதியவர்,கண்கள் தன் போல கசிந்தது.என்ன தான் ஒதுக்கியே வைத்தாலும் அவரின் செல்ல பேத்தி அல்லவா தன் மனைவியின் மறுவுருவமாக நிற்கும் பேத்தியை தன் கண்களால் நிரப்பிக் கொண்டார்.

“நீ எதுக்கு இப்ப இறங்கி வந்த மேல போ….”என்று அதிகாரமாக ஒலித்தது விஜயின் குரல்,அவனை ஏறிட்டவள்,

“விஜய் நான்…..”என்று ஏதோ கூற வர,

“நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம்….போ முதல்ல…”என்று கடுமையாகவே கூற,

“ஏய் என்ன என் முன்னாடியே என் பேத்திய மிரட்டுர….”என்று விஸ்வநாதன் கோபத்தில் கத்த,

“தாத்தா….ப்ளீஸ்….பேசாம இருங்க….”என்று மிருணாளினி அவரை தான் அடக்கினாள்,பின்னே விஜயின் பார்வை தான் தீப்பிழம்பு போல் அவளை எரித்துக் கொண்டிருந்ததே.அதை எல்லாம் எங்கு அவர் உணர்ந்தார் அவருக்கு எப்படியேனும் மிருணாவை இங்கிருந்து கூட்டிக் கொண்டு போய்விட வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே.

“நீ ஏன் மிருணா பயப்படுற….வா நாம போகலாம்….”என்று அவளின் கையை பிடித்து இழுக்க,அவள் ஒரு பாதத்தை முன் வைத்த நேரம் ஏதோ கண்ணாடி பொருள் விழுந்து நொருங்கும் சத்தம் கேட்டது.மிருணா திடுக்கிட்டு பார்க்க விஜய் தன் பக்கத்தில் இருந்த பூ ஜாடியை உடைத்து நொருக்கியிருந்தான்.அவனது கண்கள் கோவை பழம் போல் சிவந்திருக்க,

“போயிடுவியாடி….போ…பார்ப்போம்….போஓஓஓஓ…..”என்று வீடே அதிரும் படி கத்த,

“விஜய்…….”என்ற கூவலுடன் அவனை ஓடிவந்து அணைத்துக் கொண்டாள் மிருணாளினி.

“போக மாட்டேன் விஜய்…போகமாட்டேன் விஜய்…..”என்று அழுது கொண்டே கூற,விஜயின் இறுகிய உடம்பு தன் போல் சற்று தளர்ந்து கைகள் அவளை இடைவளைத்து பிடித்தது.சிவந்திருந்த கண்களிலிருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்தது.

“கேட்டீங்கில்ல…அவ வரமாட்டா….வரவும் விடமாட்டேன்…..”என்று கூற மிருணாளினியின் பிடி மேலும் இறுகியது.இதை தானே எதிர்பார்த்தாள் அவள் மீது இருக்கும் நேசத்தை வெளிபடுத்த வேண்டும் என்று இதோ இன்று காட்டிவிட்டானே தன்னவன்.இதற்காக எத்தனை போரட்டங்களை அவள் ஏற்க வேண்டியாதயிற்று.நிமிர்ந்து அவனை பார்த்தாள் கண்கள் சிவந்து கோபத்தில் உடல் இறுகி நின்றான்.இமைக்க மறந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்ன என்ன சொல்லுற நீ….மிருணா முதல்ல இங்க வா…..”என்று விஸ்வநாதன் கத்த,அதில் தன்னிலை பெற்ற மிருணா வேகமாக திரும்பி தன்னவனை மறைப்பது போல் நின்று,

“முடியாது….வர முடியாது….நான் விஜயை தான் விரும்புறேன்….அவனை தான் கல்யாணம் செஞ்சுப்பேன்…..என்னை விட்டுருங்க தாத்தா….”என்று திடமாக கூறியவள் கடைசி வரி கூறும் போது உடைந்து அழுதே விட,அவளின் தோள்களை பற்றி தன் புறம் திருப்பியவன்,

“ஏய் எதுக்குடி நீ இப்ப…அழுவுற….அழுகையை நிறுத்து….நிறுத்து முதல்ல….நீ அழுத வரைக்கும் போதும்….”என்று அவள் கண்களை துடைத்துவிட்டவன்.விஸ்வநாதனை வெற்றி பார்வை பார்க்க அவரோ இப்போது இதழில் குறுநகை பூக்க விஜயிடம் தன் வெற்றியை விரல் மடக்கி காண்பித்தார்.இதை அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த விஜயின் பெற்றோர் திகைத்து நிற்க,மிருணாவோ விஜய்,விஸ்வநாதன் பார்வை பரிமாற்றத்தில் குழம்பி போய் அவர்களை பார்த்தாள்.

“ஓஓஓ…..ஓய் மிஸ்டர்.வெயிட்….நம்ம பிளான் சக்சஸ்…..”என்று விஜய் ஆர்பாட்டமாக கத்த,

“யா யங் மேன்…..நாம ஜெயிச்சிட்டோம்….வி வின்…..”என்று அவனை விட வேகமாக சத்தம் போட்டார் விஸ்வநாதன்.இவை அனைத்தையும் பார்த்தக் கொண்டிருந்த மற்றவர்களுக்கு தான் ஏதோ புரியாத மொழியில் படம் பார்ப்பதை போல் இருந்தது.

Advertisement