Advertisement

காதல் வானவில் 32 2

விஜய் தன்னிடம் பேசி சென்றதில் இருந்து அழுது கரைந்த மிருணாளினி தன் கண்களை துடைத்துக் கொண்டு வெளியில் வந்தாள்.அவளது முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை இங்கிருந்து செல்லவேண்டும் அதுவே தன்னை நேசிப்பவர்களுக்கு நல்லது என்று முடிவு எடுத்தவள் யாரையும் காணும் திறானியற்று வேகமாக மண்டபத்தைவிட்டு வெளியில் செல்ல தொடங்கினாள்.

மிருணாளினி அறையில் இருந்து வெளியில் வந்ததில் இருந்து அவளையே கவனித்துக் கொண்டிருந்த விஜய்க்கு அவளின் எண்ணம் புரிந்துவிட வேகமாக அவளின் பின்னே செல்ல தொடங்கினான்.ஆனால் அதற்குள் அவள் வெளியில் சென்றிருந்தாள்.விஜய் அவளின் பின்னே ஓடிவந்து வெளியில் தேட அவள் சென்றிருந்தாள்.ஆனால் விஜய் தான் துணுக்குற்றான்.எப்படி அதற்குள் அவள் சென்றிருக்க முடியும்.அவள் வண்டியில் வந்திருந்தாள் கூட இவ்வளவு வேகமாக சென்றிருக்க வாய்ப்பில்லை என்று நினைத்தவனுக்கு ஏதோ தவறாகவே பட்டது.

விஜயின் மூளை வேலை நிறுத்தம் செய்ய என்ன செய்வது என்று புரியாமல் நின்றிருந்தான்.அப்போது அவனது கைபேசி ஒலிக்க அதனை இயக்கி காதில் வைத்தவன் மறுபக்கம் கூறப்பட்ட செய்தியில் ஒருநிமிடம் உலகம் நின்று சுழன்றது அவனுக்கு.

“என்….என்ன சொன்னீ்ங்க….”என்று திக்திக் மனதுடன் அவர்கள் கூறுவது உண்மை தானா எண்ணும் ரீதியில் அவன் கேட்க மறுபக்கம் ஆம் என்று பதில் வரவும் உடலும்,மனமும் ஒருசேர செயலிழந்ததை போல் இருந்தது.அவனை மேலும் சிந்திக்க விடாதபடி மறுமுனையில் மேலும் சில விபரங்களை தர என்னயேது என்று யோசிக்கும் நிலையில் அவன் இல்லை எப்படியேனும் தன்னவளை காப்பாற்ற வேண்டும் என்பது மட்டுமே சிந்தனையில் ஓடியது.

ஆம் மிருணாளினி கடத்திவிட்டனர் என்று தான் அவனுக்கு கைபேசியில் அழைத்த நபர் கூறியிருந்தார்.அதோடு அவர்கள் எங்கு சென்று கொண்டிருக்கின்றனர் என்று அவர் கூறியிருக்க விஜய் தன் வண்டியை எடுத்துக் கொண்டு அவர்கள் கூறிய திசையில் பயணிக்க தொடங்கினான்.

மிருணாளினி மண்டபத்தை விட்டு வெளியில் வந்தது தான் தெரியும் யாரோ அவளின் மூக்கில் கர்சீபை வைக்க அவள் மயங்கிவிட்டாள்.அவளை புதிதாக கட்டிடம் அமைந்து கொண்டிருக்கும் இடத்திற்கு கொண்டு வந்தவர்கள் அங்கு இருக்கும் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் வைத்திருந்தனர்.

“டேய்…சாருக்கு போன போடு….வேலையை முடிச்சாச்சுனு சொல்லு….”என்று அந்த இருவரில் ஒருவன் கூற,மற்றொருவன் போன் கூற மறுபக்கம் என்ன கூறப்பட்டதோ அதற்கு அவன் சரி சரி என்று தலையாட்டி வைத்துவிட்டு,

“ண்ணே….இன்னும் கொஞ்ச நேரத்தில வந்துடுவாறாம்…அதுவரை அவங்க பக்கத்துல கூட யாரும் போகக்கூடாதாம்…”என்று கூற,

“சரி சரி….பார்த்துக்கலாம் விடு…”என்றவன் பார்வை மிருணாளினியை ருசித்துக் கொண்டிருந்தது.

“ண்ணே இது பெரிய இடத்து விவகாரம்…வேணாம்னே….”என்று கூற,

“டேய் எல்லாம் எனக்கு தெரியும் போடா….”என்று அவனை தள்ளிவிட்டு அவளை நெருங்கினான்.மிருணாளினி அரைகுறையாக மயக்கம் தெளிய தொடங்க தன் முன்னே யாரோ வரும் அரவம் கேட்கவும் மிகவும் சிம்பட்டு கண்களை திறக்க தன் முன்னே நின்ற புதியவனைக் கண்டு அலற தொடங்கினாள்.

“ஆஆஆஆ…ஏய் யா….யாரூ….”என்று குளறாக கத்த,அவளின் வாயை அடைத்தவன்,

“டேய் எருமை…சீக்கிரம் அந்த துணியை எடுடா…”என்று கத்த,அவன் துணியை தரவும் மிருணாளினியின் வாயை சுற்றி கட்டினான்.

“ண்ணே…வாண்ணே….வெளியவே நிப்போம்….எனக்கு பயமா இருக்கு….”

“டேய் சரியான தொட நடுங்கி பயல போய் கூட்டியாந்தேன் பாரு…என்னை சொல்லனும்….”என்று கூறி வெளியில் வர,அங்கு அவரகளின் முன் ருத்ரமூர்த்தியாக விஜய் நின்றான்.

விஜய் மிருணாளினியின் இருக்கும் இடத்தை கண்டு கொண்டு வர,அது புது கட்டிடங்கள் கட்டிக் கொண்டிருக்கும் இடம் என்பதால் மிருணாளினியின் அலறல் நன்கு வெளியில் கேட்டது.மின்னல் வேகத்தில் வந்தவன் அவர்களை கண்மண்தெரியாமல் அடித்து நொறுக்கிவிட்டான்.அதற்குள் அவன் காவல் துறையினரும் அந்த இடத்திற்கு வந்திருந்தனர்.காவல்துறையினரைக் கண்டதும் அவன் புரியாமல் விழிக்க,

“எங்களுக்கு ஒரு பொண்ணை இவங்க கடத்தியிருக்கிறதா தகவல் வந்தது….”என்று அவர்கள் கூற,விஜய்க்கு புரிந்தது இது யாரின் வேலை என்று.அமைதியாக அவர்களை காவல் துறையினரிடம் ஒப்படைத்தவன் மிருணாளினியை காண சென்றான்.

காலையில் தேவதை போல கண்டவளை இப்போது வாடிய கொடி போல காணக் கூட சகிக்க முடியவில்லை அவனால்.அவர்கள் அவளை பிடித்து இழுத்து வண்டியில் ஏற்றியிருப்பர் போலும் அவளது உடை சற்று நலுங்கி இருக்க காலிலும்,கையிலும் சிராய்த்தது போல் இருந்தது.மனது தாளவேயில்லை விஜய்க்கு,

“ஏன்டீ…ஏன் என்னை விட்டு போன….”என்று மனதிற்குள் அழுதவன் அவளை அலுங்காமல் கட்டுகளை அவிழ்த்து தூக்க,மிருணாளினி தன்னை யாரோ மீண்டும் தொட முயற்சி செய்கின்றனர் என்று அவள் அலறி விஜயை தன் கைகளால் தள்ள முயன்று இவள் கீழே விழ கீழே கிடந்த கல் அவளின் தலையில் குத்தியது,

“ஆஆஆ…”என்று அலறலுடன் அவள் மீண்டும் மயங்கிவிட்டாள்.வேகமாக அவளை தூக்கிக் கொண்டு கீழே வந்து கால் டாக்ஸிக்கு புக் செய்தான்.டாக்‌ஸி வந்தவுடன் அவளை கிடத்தி நேராக தன் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான்.

“ஏய் யாருடி உன்னை கடத்துனது…எதுக்காக கடத்துனாக….”என்று கீர்த்தி கேட்க,மிருணாளினிக்கு ஹர்ஷாவின் மீது தான் சந்தேகம் இருந்தது அவனாக இருக்கும் என்று கீர்த்தியிடம் கூறினாள்.

“என்ன கதையெல்லாம் கேட்டுடாச்சா….”என்று விஜய் நக்கலாக கேட்க மிருணா அவனை முறைத்தாள்.

“என்ன முறைப்பு வேண்டிகிடக்கு….இந்தா இதை குடி….”என்று அவளுக்கு என்று எடுத்து வந்திருந்த பாலை நீட்டினான்.அவளும் அதை மறுக்காமல் குடித்தாள்.

“கீதூ….நீ இங்கேயே தூங்கு….எதாவது தேவை என்னை கூப்பிடு….”என்று கூறி வெளியேற பார்க்க,

“விஜய்….நான்….நான்….கிளம்புறேன்….”என்று கூற,கீர்த்திக்கே இப்போது அவளை அடித்து கொல்லும் வெறி வந்தது.அவள் கத்தும் முன் விஜய்,

“அடிப்பட்டிருக்குனு பார்க்குறேன் இல்லை…..”என்று நாக்கை மடித்து ஒற்றை விரலை காட்டி எச்சரித்தவன்,

“படுடீ…..கிளம்புறுளாம்…கொன்னுடுவேன் பார்த்துக்க….”என்றுவிட்டு அவன் சென்றுவிட,மிருணா ஏதோ கீர்த்தியிடம் கூற வரும் முன் அவள் வாயை ஒரு துணி கொண்டு கட்டியவள்,மற்றொரு துணி கொண்டு இரண்டு கைகளையும் கட்டிவிட்டாள்.மிருணாளினி என்னவென்று திமிர அவளை கட்டிலில் தள்ளியவள்,

“இப்படியே படு….உனக்கு இதுதான் சரி….எருமை…அவன் அவ்வளவு சொல்லுறான்…நீ உன் இஷ்டத்துக்கு பேசுற…கொன்னுடுவேன்….”என்று மிரட்டிவிட்டு அவளும் விளக்கை அணைத்து படுத்துவிட்டாள்.படுக்கையில் மிருணா சிலநிமிடங்கள் வரை திமரிக் கொண்டிருந்தவள் சற்று நேரத்தில் உறங்கிவிட்டாள்.அவள் ஆழ்ந்து உறக்கத்திற்கு சென்றுவிட்டாள் என்று அறிந்த பின்னே கீர்த்தி அவளின் கட்டுகளை அவிழ்த்துவிட்டாள்.மருந்துகளின் வீரியத்தில் அவள் உறங்கவிட கீர்த்திக்கும் சற்று நிம்மதியானது.

கீழே விஜய் வரவேற்பறையில் அமர்ந்திருந்தான்.மனது முழுவதும் தன் அன்னையை எப்படி சமாளிப்பது என்ற நினைப்பே ஓடிக் கொண்டிருந்தது.வரவேற்பறை சோபாவிலேயே அவன் உறங்கியும் விட சரியாக விடியற் காலை பொழுது விஜய் வீட்டின் காலிங் பெல் அடிக்க விழித்த விஜய் சற்று நேரம் தன்னை நிதானபடுத்திக் கொண்டு கதவை திறந்தான்.அங்கு அமைதியான முகத்துடன் நின்றிருந்தார் விஸ்வநாதன்.

Advertisement