Advertisement

காதல் வானவில் 30

தனது வீட்டில் இரவு உணவை உண்டு கொண்டிருந்தான் விஜய்.அவனுக்கு பரிமாறி கொண்டிருந்தார் நீலவேணி.கைகள் மகனுக்கு சாப்பாட்டை போட்டாலும் கண்கள் கணவனிடம் பேசுமாரு சமிஞ்ஞை செய்து கொண்டிருந்தது.அவரோ சற்று பொறு என்னும் விதமாக கண்களால் பதிலித்தார்.

அடர் சிவப்பு நிற டீ-ஷெர்ட்,நீல ஜீன்ஸ் என்று எங்கோ வெளியில் செல்வதர்கான உடை அணிந்திருந்தான் முன்பை விட இப்போது அழகாக தெரிந்தான்.வேணியின் கண்கள் மகனின் அழகை ரசித்தாலும் அவர் மனதில் ஆயிரம் கேள்விகள் அவரைக் குடைந்து கொண்டிருந்தன அதுவும் இரு தினங்களாக மகனின் செயல்பாடுகள் பொற்றோர் இருவருக்கும் சற்று கலக்கத்தையே கொடுத்தது.

விஜய் சாப்பாட்டுக் கொண்டிருந்தாலும் அவனது கவனம் இங்கில்லை என்பது அவனது யோசனை படிந்த முகமே கூறியது.அவனின் முன்னே அமர்ந்திருந்த ஆனந்தனும் அவனைக் கவனித்துக் கொண்டிருந்தார்.ஆனால் அவனிடம் எதுவும் கேட்காமல் இருக்க வேணியால் அப்படி இருக்க முடியவில்லை.அவரும் இரு தினங்களாக பார்க்கிறார் அவனது முகம் ஏதோ இறுக்கத்துடன் இருப்பதை அவனிடம் கேட்லாம் என்றால் கணவன் அவனே கூறுவான் வேண்டாம் என்று தடுத்துவிட்டார்.இன்றும் அதே நிலை தொடரவும் வேணியால் பொறுக்க முடியவில்லை,

“விஜி….”என்று அழைக்க அவனிடம் எந்த பதிலும் இல்லாமல் போகவும் அவனின் தோள்களை தொட்டு,

“டேய் விஜி….”என்று உலுக்கினார் அப்போது தன்னிலைக்கு வந்தவன்,

“ஆங்….என்னம்மா….என்ன….”என்று ஏதோ தூக்கத்தில் இருந்து எழுந்தவன் போன்று கேட்க,

“டேய் என்ன தான் நினைச்சிகிட்டு இருக்க….நானும் இரண்டு நாளா பார்க்குறேன்….இப்படி எதையோ துலைச்சவன் மாதிரி போற வர….சில சமயம் எங்க போறன்னு கூட யார்கிட்டேயும் சொல்லமாட்டேங்குற….உன் மனசுல என்ன தான் நினைச்சுகிட்டு இருக்க….”என்று கத்த,ஆனந்தனோ,

“வேணிமா…..கொஞ்சம் அமைதியா இரு….”என்று கூற,அவரை தீயாக முறைத்தவர்,

“உங்களை முதல்ல சொல்லனும்….எப்பொதும் அவனுக்கு சப்போர்ட் பண்ணிகிட்டு இருக்கீங்க….நானும் இரண்டு நாளா அவனா சொல்லுவான் அவனா சொல்லுவான்னு பார்த்தா….அவன் இந்த வீட்ல நாம இரண்டு பேர் இருக்கோம்ன்ற எண்ணமே இல்லாம அவன் நினைச்ச நேரத்துக்கு வரான் போறான்….இன்னைக்கு எனக்கு பதில் சொல்லாம அவன் எங்கேயும் போகபோறது இல்லை…..”என்று திட்டவட்டமாக கூறிவிட்டு அவனின் வண்டி சாவியையும் பிடுங்கி கொண்டார்.

“ப்ச் ம்மா….நான்….”என்று ஏதோ கூறவந்து பின் ஆழ்ந்த மூச்சொன்றை இழுத்துவிட்டவன்,

“ம்மா….கொஞ்சம் வேலை அதான்….”என்று கூற,வேணி அவனை நம்பாத பார்வை பார்த்தார்.அவருக்கு நன்கு தெரியும் மகன் வேலை விஷயமாக அலையவில்லை என்று,

“ம்ம்….எப்போதிலிருந்து இப்படி பொய் சொல்ல கத்துகிட்ட விஜி….”என்று அழுத்தமாக கேட்க,அவரின் கேள்வியில் திகைத்தவன்,

“ம்மா…என்னம்மா….ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க…..நான் ஏன் பொய் சொல்ல போறேன்….”தன் அருகில் இருந்த தந்தையிடம்,

“ப்பா என்னபா இது…அம்மா ஏன் இப்படியெல்லாம் பேசுறாங்க….”என்று வேதனை பொங்க கேட்க,அவனின் தோள்களை தொட்ட ஆனந்தன்,

“விஜி…..விடு….அவளுக்கு மனசுகுள்ள பயம்…அதான் ஏதோ கோபத்தில பேசிட்டா….”என்றவர்,

“வேணிமா….நீ கொஞ்சம் அமைதியா இரு…..நான் பேசிக்கிறேன்….”என்று மனைவியையும் சமாதானபடுத்தினார்.

“ம்ம்ம்…இப்படி சொல்லி சொல்லி தான் என்னை இரண்டு நாளா பேசவேவிடலை….இன்னைக்கு நான் கேக்குறதுக்கு அவன் பதில் சொல்லிட்டு போக சொல்லுங்க…..”என்று வேணி திட்டவட்டமாக கூற,விஜய்க்கு அவரின் பிடிவாதத்தை கண்டு சிரிப்பாக இருந்தது.

“ம்மா…ம்மா….என்ன ம்மா….என்னாச்சு உனக்கு இன்னைக்கு……இப்படி குழந்தை போல செய்யுற…..ஆனா நல்லா இருக்கு….”என்று வேணி இரு கன்னங்களையும் பிடித்து செல்லமாக ஆட்டிவிட்டு,

“சரி இப்படியே நீங்க இரண்டு பேரும் சண்டை போட்டுட்டு இருங்க….நான் அதுக்குள்ள வெளி வேலை முடிச்சுட்டு வந்துடுறேன்….ஓகே ப்பா பை….”என்று கூற அவரின் தலை ஆடவும்  பக்கத்தில் அடக்கப்பட்ட சிரிப்புடன் அமரந்திருந்த ஆனந்தனிடம் கண்ணை காட்டிவிட்டு ஒடிவிட்டான்.

மகன் சென்று இரண்டு நிமிடம் வரை அதே நிலையில் இருந்தார் வேணி.அவரின் மீது ஒரு கரம் விழவும் தன்னிலைக்கு வந்தவர் சுற்றி முற்றியும் பார்த்துவிட்டு,

“எங்க….விஜய் எங்க போனான்….”என்று பாவமாக கேட்க,ஆனந்தனோ சிரித்துக் கொண்டே,

“வேணிமா…..அவன் கிளம்பி பத்து நிமிஷம் ஆகுது….”என்று கூற,

“என்ன…ஆனா அவன் வண்டி சாவி தான் என்கிட்ட இருக்கே…. “என்று கைகளை விரிக்க கைகளில் எதுவும் இல்லை,விஜய் அவரை கொஞ்சிக் கொண்டிருக்கும் போதே அவரின் கைகளில் இருந்து அதை பரித்திருந்தான்.

“ம்ம்….உன் மகன் உன்னை கவுத்துட்டு போறான்….நீ இப்படி ஏமாந்து உட்கார்ந்து இருக்க……”என்று சிரித்தபடி கூற,நீலவேணிக்கு முகத்தில் கோபக் கணல் சுழன்றது.

“எல்லா நேரமும் நான் ஏமாறமாட்டேன்ங்க….அதுவும் அவன் வாழ்க்கை விஷயத்துல நான் ஏமாறமாட்டேன்…..”என்று அழுத்தமாக கூற,அவரின் கைகளை பற்றிய ஆனந்தன்,

“ப்ச்….வேணிமா என்னதிது….ஏன் இவ்வளவு கோபம்….”என்று கேட்க,அவரை முறைத்தவர்,

“உங்களுக்கு தெரியாது பாருங்க….”என்று வெடுக்கென்று கூறிவிட்டு கைகளை பிடுங்க,ஆனந்தனோ,

“ம்ம்…..எனக்கு நீ நேத்து சொன்னது கொஞ்சம் முன்னாடியே தெரியும் வேணி….நான் இதை எதிர்பார்த்தேன் தான்….”என்று கூற,அவரை அதிர்ந்து நோக்கினார் வேணி.

நேற்று மளிகை பொருட்கள் வாங்கிவிட்டு வீடு திரும்பும் போது சிக்னலில் மகனையும்,மிருணாளினியும் பார்த்துவிட்டார்.முதலில் எதுவும் தவறாக தெரியவில்லை,ஆனால் மிருணா ஏதோ கேட்க அதற்கு விஜய் பதில் சொல்ல மிருணா அவனை அடிப்பது இதை எல்லாம் பார்த்தவருக்கு மனதில் இருவருக்குள்ளும் ஏதாவது இருக்குமோ என்ற எண்ணம் வலுப்பெற்றது.வீடு வந்ததும் அதையே கணவரிடமும் கூறியிருந்தார்.

“என்ன சொன்னீங்க….என்ன சொன்னீங்க….உங்களுக்கு முன்னாடியே இது தெரியுமா…..”என்று ஆற்றாமையுடன் கேட்க,ஆனந்தன் அவரின் கைகளை தட்டிக் கொடுத்தபடியே,

“ம்ம்…கொஞ்சம் சந்தேகம் தான்….”என்று கூற,

“விஜய் ஏதாவது உங்ககிட்ட சொன்னானா….”என்றார் கரகரப்பான குரலில்,எப்போதும் தன்னிடம் எதையும் மறைக்காமல் கூறும் மகன் தனது வாழ்க்கையின் துணை தேர்ந்தெடுக்கும் போது தன்னை ஒதுக்கிவிட்டதாக மனதில் வலி ஏற்பட்டது.

“ச்சே…ச்சே….அதெப்படி என்கிட்ட மட்டும் சொல்லுவான்….நானா கணிச்சேன்…..மிருணாவ பார்க்கும் போது அவன் முகத்துல வந்து போகும் சிரிப்பு….அவன் கண்ணுல அந்த பொண்ணுக்காக தெரியுற அக்கறை….இதெல்லாம் வச்சு அவனுக்கு அந்த பொண்ணை பிடிச்சிருக்குனு புரிஞ்சிது….”என்று நீண்ட விளக்கம் கொடுத்தார்.வேணி அவரை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாரே தவிர  வேறு எதுவும் கூறவில்லை,அவரின் யோசனை படிந்த முகத்தை பார்த்த ஆனந்தன்,

“ஏன் வேணி உனக்கு அந்த பொண்ணை பிடிக்கலையா….நல்ல பொண்ணு தான் வேணி….”என்று கூற,

“ம்ம்…எனக்கு அந்த பொண்ணை பிடிக்கலனு நான் சொல்லல…ஆனா அந்த பொண்ணை பார்த்தா பணக்கார வீட்டு பொண்ணு மாதிரி தெரியுது…அதுமட்டுமில்லாம இதுவரைக்கும் நான் அந்த பொண்ணோட அப்பா,அம்மாவை பத்தி கேள்வி கேட்டா அவகிட்டேந்து எந்த பதிலும் வராது….எனக்கு அப்போவ புரிஞ்சு போச்சு ஏதோ சரியில்லைனு… “

“ம்ம்….அது அவுங்க குடும்ப விஷயம் வேணி நாம எப்படி கேட்க முடியும்….”என்று கேட்க,

“ப்ச் என்னங்க நீங்க அந்த பொண்ணை தான் விஜய் விரும்புனா….அவளை பத்தி நாம எல்லாம் தான தெரிஞ்சிக்கனும்…..அதுமட்டுமில்லாம எனக்கு விஜய்க்கு அமையுற பொண்ணு மட்டுமில்ல அவளோட குடும்பமும் நல்ல குடும்பமா இருக்கனும்னு எனக்கு ஆசை….அவனுக்கு தான் யாருமில்ல தனியா வளர்ந்திட்டான் அவன் மனைவிக்காவது குடும்பம் பெரிசா இருந்தா நல்லதுனு மனசுக்கு தோணுது….”என்றவர் சிறிது நேர  தீவிர யோசனைக்கு பின்,

“நான் இப்பவே தரகர்கிட்ட விஜய் ஜாதகத்தை கொடுத்து பொண்ணு பார்க்க சொல்லுறேன்….”என்று கூற,

“என்ன வேணிமா இது அவசரபடாத….”என்று தடுக்க,

“நான் அவசரம்படலை இதுதான் அவனுக்கு சரியான வயசு பொண்ணு பார்க்குறேன்….அவ்வளவு தான்….”என்று கூற

“ப்ச்…விஜய்யோட மனசுல என்ன இருக்குனு தெரிஞ்சுக்காம நீயா முடிவு செஞ்ச நல்லா இருக்காது….அதுக்கு தான் சொல்லுறேன்….”என்று பொறுமையாக ஆனந்தன் கூற,வேணி எதையும் காதில் வாங்கவில்லை அவருக்கு மகனை ஒரு நல்ல இடத்தில் திருமணம் முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே.

“அதை பத்தி பேச தான் இன்னைக்கு அவனை புடிச்சு வச்சேன்…அவன் என்னையவே ஏமாத்திட்டு போறான்….இனி அவனா வந்து சொல்லட்டும் அவனுக்கு எது வேணும்னு…..”என்று கூறிவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.ஆனந்தனுக்கு வேணியின் பேச்சு சற்று பயத்தைக் கொடுத்தது எப்போதும் முடிவு எடுத்துவிட்டு தான் பேசுவார் ஆனால் இம்முறை அவரின் முடிவு மகனுக்கு நல்லது செய்யுமா என்று கேட்டால் கேள்வி குறி தான்.

தனது வீட்டு கூறையை வெறித்தபடி படுத்திருந்தாள் மிருணாளினி.அவளது நினைவு முழுவதும் விஜயை சுற்றியே இருந்தது.இன்னும் சில நாட்களே அவனை காண முடியும் அதன் பிறகு நினைத்து பார்க்க முடியவில்லை.மெல்ல கண்களை மூட தன்னவன் நினைவே மீண்டும் மீண்டும் வர தன் தூக்கத்தை தொலைத்தவளின் கவனத்தை கலைத்தது அவளின் கைபேசி,புது எண்ணில் இருந்து அழைப்பு வர யோசனையுடன் எடுக்க,

“மிருணீ பேபி….என்கிட்டேந்து தப்பிக்க பிளான் போட்டுருக்க போல….நீ எங்க போனாலும் உன் பாதை போய் முடியுற இடம் நானா தான் இருப்பேன்….வேஸ்டா சுத்தாம நீயா என்கிட்ட வந்துடு உனக்கு நல்லது….”என்று அகங்காரமாக ஒலித்த ஹர்ஷாவின் குரலில் மிருணாளினியின் உடல் நடுங்கியது.

“என்ன மேடம் எனக்கு எப்படி தெரியும்னு நினைக்கிறியா….உன்னோட ஒவ்வொரு செய்கையும் நான் கவனிச்சுகிட்டுதான் இருப்பேன்….அப்புறம் மிருணீ செல்லம் இதெல்லாம் உங்க தாத்தாக்கிட்ட சொல்லாம்னு யோசனைக்கு எல்லாம் போயிடாத அதுக்கும் சேர்த்து என்கிட்டேந்து வாங்குவ…,ஒழுங்கா  வந்து கல்யாணத்துக்கு சம்மதம்னு சொல்லுற…..”என்றவன் அவள் பேச அனுமதியே தராமல் கைபேசியை அணைத்திருந்தான்.

“ஹலோ…ஹலோ….ஹர்ஷா…..”என்று மிருணாளினி என்று கத்த மறுபக்கம் பேசி அணைக்கப்பட்டிருந்தது.மிருணாவின் மனதில் பயபந்து உருள எப்படியேனும் இங்கிருந்து சென்றுவிடவேண்டும் என்ற எண்ணம் உறுதியானது.

தனது அறையில் படுத்திருந்த பூர்ணிமாவிற்கு மனதிற்குள் அவ்வளவு புகைச்சல்.

“ஆளு நல்லா இருக்கும் போதே சந்தேகப்பட்டேன் எப்படி வெறும் பிரண்டுனு சொல்லுராங்கனு….ச்ச….”என்றவள் ஓங்கி தன் தலையணையில் ஒரு குத்துவிட்டுவிட்டு,

“விஜய்….நீ எனக்கு மட்டும் தான் உன்னை யாருக்கும விட்டு தரமாட்டேன்…”என்று கண்களை மூடியவள் முன் அன்று சிரித்த முகத்துடன் வண்டியில் சென்ற விஜயும்,மிருணாளினியும் தெரிய மனதிற்குள் மேலும் மேலும் வன்மம் துளிர்த்தது.

Advertisement