Advertisement

காதல் வானவில் 29

தனது அறையின் கதவு வேகமாக தட்டப்பட தூக்கம் கலைந்த மிருணாளினி கதவை திறக்க அங்கு புன்னகை முகமாக நின்ற விஜயைக் கண்டு அதிர்ந்துவிட்டாள்.தன் முன்னே அழுகு ஓவியம் போல் நிற்கும் பெண்னைக் கண்டு விஜய்க்கும் மூச்சடைத்து தான் போனது.முட்டிக் கால் வரை பேண்ட்,டீஷர்ட் என்று அவளைக் காண சிறு பெண்போல் தெரிந்தாள்.

மிருணாளினிக்கு விஜயைக் கண்டவுடன் மனது கூத்தாட்டம் போடத குறை தான்.ஒருவேளை அவனுக்கு அனைத்தும் நினைவிற்கு வந்துவிட்டதோ அதனால் தான் காலையே வந்துள்ளானோ என்று நினைத்து அவனின் கண்களை ஆராய்ந்தபடி அவள் நிற்க,அவனோ தன் முன்னே கலைந்த ஓவிய பாவையவளை ரசித்துக் கொண்டிருந்தான்.இருவரும் அவரவர் விழிகளில் விழுந்தபடி நின்று கொண்டிருந்த சமயம்,

“தள்ளு விஜி….எவ்வளவு நேரம் தான் நிப்ப….”என்று கீர்த்தனா விஜயை தள்ளிக் கொண்டு வர முதலில் விஜய் தான் தெளிந்தான்.

“ஆங்…நீ போ….”என்றுவிட்டு நகர,மிருணாளினிக்கு அப்போது தான் புரிந்தது கீர்த்தனா தான் அழைத்துவந்துள்ளாள் என்று.ஒருநிமிடத்திற்குள் அவள் நினைவுகள் சென்ற இடத்தை நினைத்தவளுக்கு விரக்கிதியான நிலை.

“நீ இன்னும் தூக்கத்திலேந்து எந்திரிக்கலையா….”என்று அவளை ஒரு இடி இடித்துவிட்டு உள்ளே வந்தாள் கீர்த்தி.

“கீதூ…நீ பேசிட்டு வா…நான் வெளியில வெயிட் பண்றேன்….”என்றுவிட்டு விஜய் நகரப்பார்க்க,

“உள்ள வா விஜய்….ஏன் வெளியில நிற்குற….”என்று தடுத்து நிறுத்தியது மிருணாளினியின் குரல்,திரும்பி அவளை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்தவன் உள்ளே வர,

“உக்காருங்க…..இதோ வரேன்…..”என்று குளியல் அறைக்குள் தன்னை புகுத்திக் கொண்டவளுக்கு தன்னிலை எண்ணி கோபமும்,ஆற்றாமையும் சேர்ந்தே வர விழிகளில் வழிந்த உவர்ப்பு நீரை முகத்தை கழுவி துடைத்தாள்.அவளது மனதின் வெறுமை முகத்தில் நன்கு பிறதிபலிக்க,மீண்டும் தண்ணீரால் முகத்தை கழுவி விட்டு வெளியில் வந்தாள்.

“வாங்க மேடம்….எப்படி இருக்கீங்க….”என்று நக்கலாக கேட்டாள் கீர்த்தனா.அவளை முறைத்த மிருணாளினி,

“ப்ச்…கீதூ…..”என்று சலிப்பாக கேட்க,

“என்ன என்னடி…..இங்க பாரு மிருணா….நீ ரொம்ப ஓவரா பண்ற….”என்று கீர்த்தனாவும் கடுப்பாக பதில் தர,மிருணாளினி தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டாள்.

விஜயின் கண்கள் வந்ததிலிருந்து மிருணாளினியை மட்டுமே கவனித்துக் கொண்டிருந்தது.கதவை திறந்தவுடன் அவள் கண்களில் தெரிந்த தேடல் பின் கீர்த்தியை கண்டவுடன் அவளது பார்வையில் ஏற்பட்ட ஏமாற்றம் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தான்.ஏற்கனவே அவள் தன்னிடம் எதையோ மறைக்கிறாள் என்று நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு இப்போது மேலும் உறுதிபடுத்துவது போல் இருந்ததது அவளது செய்கை.

“ஏய் என்னடி தலையில கை வைச்சுகிட்டு நீ உட்கார்ந்துட்டா…..நான் விட்டுடுவேனா….ஒழுங்கா ஞாயிறு கிளம்புற வழிய பாரு….இல்லை நான் இங்கே தான் டேரா….”என்று கீர்த்தனா கூறிவிட்டு அமர்ந்து கொள்ள மிருணாளினிக்கு மேலும் மன அழுத்தம் கூடுவது போல் இருந்தது.

“கீதூ….ப்ளீஸ் நான் சொல்லறத….”என்று அவள் ஆரம்பிக்கும் முன் அவளை கையுர்த்தி தடுத்த கீர்த்தி,

“இப்ப என்ன தான் மிருணா உன் பிரச்சனை….திரும்பவும் ஏன் எங்கிட்டேந்து ஓடனும் நினைக்கிற….”என்று கீர்த்தனா தன் தோழியை சரியாக கணித்து கேட்க,மிருணாளினி திகைத்து விழித்தாள்.அவளின் அருகில் அமர்ந்த கீர்த்தனா,

“இங்க பாருடி இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் நீ இப்படி ஓடி ஒளிஞ்சுகிட்டு இருப்ப….என்ன பிரச்சனைனு கேட்டாலும் சொல்ல மாட்ட…இப்படியே எத்தனை நாளைக்கு தான் உன்னை வருத்திக்கிட்டு இருக்கபோற….என் கல்யாண புடவை எடுக்க நீ வந்தா எனக்கு மனசுக்கு சந்தோஷமா இருக்கும் நான் நினைக்கிறேன்….அப்புறம் உன்னிஷட்டம்….இதுக்கு மேல உன்னை வற்புறுத்த நான் விரும்புல….”என்று கூறிவிட்டு எழுந்தவள் விஜய்க்கு கண்ணை காட்டிவிட்டு வெளியில் சென்றுவிட்டாள்.

மிருணாளினி கீர்த்தி பேசும் போது எப்படி அமர்ந்திருந்தாளோ அப்படியே அமர்ந்துவிட்டாள்.அவள் மனது முழுவதும் கீர்த்தனாவின் வார்த்தைகளே சுழன்று கொண்டிருந்தது.தன்னை நேசிக்கும் நெஞ்சகளை தான் எந்தளவிற்கு கஷ்டபடவைக்கிறோம் என்று நினைத்தவளுக்கு தன்னையும் அறியாமல் கண்ணீர் சுரந்தது.ஆனால் அதே நேரம் ஹர்ஷாவின் வன்மமக் குரலும் அவள் காதுகளில் ஒலிக்க தன் காதுகளை பொத்திக் கொண்டவள்,

“நோ…நோ….”என்று கத்த தொடங்க,அவளின் அருகில் நிதானமாக வந்த விஜய்,அவளின் கைகளை விலக்கி விட்டுவிட்டு,தன் கைகளில் இருந்த தண்ணீரை திணித்தான்.மிருணாளினி அதிர்ந்து விழிக்க,தன் பார்வையாலே பருகுமாறு செய்கை செய்ய,அவளும் அவன் கூறியதை போல் பருகினாள்.

“எல்லா விஷயத்துக்கும் அழுகை பதிலா மாறிடாது….”என்றவன் அவளை ஆழ்ந்த பார்வை பார்க்க,மிருணாவிற்கு குடித்த தண்ணீர் புரையேறியது.அவளை குழப்பத்தில் ஆழ்த்திவிட்டு அவன் சென்றுவிட,அவன் எதற்காக இவ்வாறு கூறினான் என்று புரியாமல் விழிப்பது இப்போது மிருணாளினியின் முறையானது.

கீர்த்தனா முகத்தில் புன்னகையுடன் அந்த துணி கடையில் தனக்கு பிடித்த கலர் புடவைகளை தன் மேல் வைத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.எதிரில் வருண் பாவமாக அமர்ந்து இருந்தான்.

“இது எப்படி இருக்கு….”என்று கீர்த்தி கேட்க,வருண் வெறும் தலையை மட்டும் ஆட்டிக் கொண்டிருந்தான்.கீர்த்தனாவிற்கு பின் நின்ற மிருணாளினி வாயை பொத்தி தன் சிரிப்பை அடக்க பெரும் பாடு பட்டுக் கொண்டிருந்தாள்.கீர்த்தனாவிற்கு தலையை ஆட்டிவிட்டு நிமிர்ந்த வருண் மிருணாளினி சிரிப்பை அடக்கிக் கொண்டிருப்பதை பார்த்து முறைக்க,தான் ஒன்றும் சொல்லவில்லை என்னும் விதமாக தலையை மட்டும் ஆட்டினாள் மிருணாளினி.

அன்று கீர்த்தனா கூறி சென்றபின் மிருணாளினியே அவளே அழைத்து தான் வருவதாக கூற கீர்த்தனாவிற்கு மிகவும் சந்தோஷமாகிவிட்டது.கீர்த்தனாவின் விருப்பபடி புடவை தேர்வு செய்ய சொல்லிவிட்டு பெரியவர்கள் மற்றவர்களுக்கு பார்க்க சென்றுவிட்டனர்.அதோ இதோ என்று கடந்த ஒருமணி நேரமாக அவளும் தேர்வு செய்கிறேன் என்ற பெயரில் ஒவ்வொன்றையும் எடுத்து வைப்பதுமாக இருக்க வருண் தான் பாடத பாடு பட்டுக் கொண்டிருக்கிறான்.அதைக் கண்டு தான் மிருணாளினி சிரிப்பை அடக்கமுடியாமல் சிரிக்க,

“ஓய் உனக்கு என்னை கண்டா சிரிப்பா இருக்கா….”என்று வருண் ஆத்தமாட்டாமல் கேட்டான்.

“இல்ல இந்த ஒரு நாளைக்கே இப்படி உட்கார்ந்துட்ட….அதான் தான் சிரிச்சேன்….”என்று மிருணாளினியிம் திருப்பிக் கொடுக்க,

“ம்ம்….எல்லாம் என் நேரம்…..வேற என்ன செய்ய….”என்று அவனும் தன்னை நொந்து கொள்ள,

“ஓய் ரெண்டு பேரும் சேர்ந்துகிட்டு என்னை கிண்டலா பண்ணறீங்க…..ஏய் மிருணா இவ்வளவு பேசுற நீ எனக்கு செலக்ட் செஞ்சு தரலாம்ல….”என்று மூக்கு விடைக்க கீர்த்தி கேட்க,

“ப்ச் கீதூ….எனக்கு புடவை எல்லாம் செலக்ட் பண்ண தெரியாதுடி….”என்று பாவமாக கூற,

“ம்ம்….உன் கல்யாணத்துக்கு நீ செஞ்சு தான ஆகனும்…..அப்ப என்னடி செய்வ….”என்று கீர்த்தி எதார்த்தமாக கேட்க,மிருணாளினியின் முகம் ஒருநிமிடம் இருண்டு மீண்டும் பழைய நிலைக்கு மீண்டது.அதை அந்த நிமிடம் உள்ளே வந்த விஜய் கண்டு கொண்டான்.ஏன் இவ்வளவு முகம் கசங்குது இவளக்கு என்று யோசனையுடன் வர,

“ஏய் முதல்ல நீ உனக்கு செலக்ட் பண்ணு…..அப்புறம் பேசிக்கலாம்…..இன்னும் கொஞ்ச நேரத்தில அம்மா வந்துடுவாங்க…..”என்று வருண் பேச்சை மாற்றினான்.அவனும் மருணாளினியின் முகமாற்றத்தை கவனித்தான் அதனால் மேலும் அந்த பேச்சை வளர்க்க விரும்பவில்லை.

“அச்சோ….ஆமாம் அத்தை வந்தா என்னை திட்டுவாங்க…..ஏய் மிருணா…..எனக்கு கலர் மட்டுமாவது சொல்லுடி ப்ளீஸ்…..”என்று கூற,மிருணாவும் கீர்த்தனாவிற்கு பொருத்தமான கலர்களை எடுத்து கொடுத்தவள் அதில் அவளுக்கு எது நன்றாக இருக்கும் என்று பார்க்க சொன்னாள்.ஒருவழியாக அடர் பச்சை நிறத்தில் அன்னபட்சிகள் போட்ட புடவை அனைவருக்கும் பிடித்துவிட அதையே எடுத்தனர்.

கீர்த்தனாவிற்கு மேலும் வீட்டிற்கு போட்டுக்கொள்ள சில உடைகள் எடுக்க வேண்டும் என்பதால் மிருணாளினியும் அவளும் பார்க்க செல்ல,வருண் விஜயின் அருகில் வந்தான்.

“மச்சி முடியலடா….எப்படிடா இத்தனை நாள் சமாளிச்ச……”என்று பெரிதாக குறைபட,

“ம்ம் முடியலானா விட்டுட்டு மச்சி வேற பார்த்துக்கலாம்…..”என்று விஜய் இலகுவாக கூற,

“அடேய் கிராதகா…..ஏன்டா ஏன்டா ஏன் எனக்கு இருக்குற ஒன்னையும் புடுங்க பார்க்குற பாவி….”என்று வருண் புலம்ப அவனை செல்லமாக தோளில் தட்டிய விஜய்,

“தெரியுதுல….வாடா….”என்று பேசிக் கொண்டே வெளியில் வர,வருணின் அம்மா மிருணாளினியிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்.

“என்ன எடுத்தாச்சா….”என்று வருண் கேட்க,

“ம்ம் முடிஞ்சுடிச்சு கீதூ டிரஸ்ஸிங் ரூம் போயிருக்கா….”என்று மிருணா கூற,அதற்குள் கீர்த்தனா அழைக்க மிருணாளினி சென்றாள்.அப்போது வருணின் அருகில் வந்த அவனின் அம்மா,

“டேய் இந்த பொண்ணு ரொம்ப அழகா இருக்கால்ல…..நம்ம வினீத்துக் கேட்கலாமா….”என்று கேட்க,வருணுக்கு ஒருநிமிடம் தூக்கி போட்டது தன் போல் அவன் விழிகள் விஜயை நோக்க அவனோ முகத்தை எங்கோ வைத்துக் கொண்டு நின்றான்.இதுஏதடா வம்பாக போச்சு என்று நினைத்தவன்,

“ம்மா…சும்மா இரு….”என்று அன்னையை அதட்ட,

“டேய் நான் என்ன இப்ப தப்பா சொல்லிட்டேன்….பொண்ணு பார்க்க அழகா இருக்கா…..அதனால கேட்டேன் அதுக்கு ஏன்டா இப்படி மூஞ்சிய திருப்பற….”என்று கோபம் போல கேட்க,

“ப்ச் ம்மா….இப்ப என் கல்யாணத்தை பத்தி மட்டும் யோசி…..புரியுதா…..”என்று சற்று கடுப்புடன் கூற,

“சரி சரிடா…..கோபபடாத…….”என்று அவரும் அத்துடன்  நகர,அன்னை இப்போதைக்கு மட்டுமே இந்த விஷத்தை விடுவார் என்று மட்டும் வருணுக்கு புரிந்தது.பெருமூச்சொன்றை விட்டுவிட்டு திரும்ப விஜய் முகம் ஏதோ சிந்தனையில் இருக்க,அவனின் தோள்களை தொட்டவன்,

“என்னடா ஏதோ யோசனையில் இருக்குற….”என்று கேட்க,ஒண்றுமில்லை என்று தலையை மட்டும் ஆட்டினான்.

“இவனுக்கு எல்லாம் சீக்கரம் நியாபகம் வந்தா நல்லது…..”என்று தன் மனிதற்குள் வேண்டிக் கொண்டான்.இப்போது இருக்கும் நிலைக்கு அவனால் அதை மட்டுமே செய்ய முடியும்.

நிச்சயத்திற்கு தேவையான அனைத்தும் வாங்கிவிட்டு வெளியில் வர வருணின் வீட்டார் கிளம்பிவிட மீதம் நண்பர் பட்டாளம் மட்டுமே இருந்தது.வருணும்,கீர்த்தியும் ஏதோ பேசிக் கொண்டிருக்க,மிருணாளினி அவர்களிடம் சென்றவள்,

“சரிடி நான் கிளம்புறேன்….”

“அதுக்குள்ள என்ன அவசரம்….இரு சாப்பிட்டு போகலாம்….”என்று கீர்த்தனா கூறினாள்.மிருணாளினிக்குமே பசியெடுக்க அவளும் சரியென்றாள்.பின் அனைவரும் பக்கத்தில் இருந்த உணவகத்தில் உணவருந்திவிட்டு வந்தனர்.

“ஏய் வாலு….உன்னோட டிரஸ் எல்லாம் இப்பவே தைக்க கொடுத்திடு….அப்புறம் நேரம் இருக்காது…..”என்று வருண் கூற,

“ம்ம் நானும் அதை தான் நினைச்சேன்…..மிருணா வீட்டுக்கிட்ட ஒருத்தர் நல்லா தைப்பாங்க…..நீயும் வா அங்க கொடுத்திடலாம்…..”என்று கூற

“ஏன்டி எல்லாத்துக்கும் என்னை இழுத்து உயிர எடுக்குற…..நீ மட்டும் போ….”என்று வருண் கூற நொடியில் கீர்த்தியின் முகம் மாறிவிட்டது,

“வருண்…..ஏன் இப்படி கோபமா பேசற….பாரு அவ முகமே விழுந்து போச்சு….நீ வந்தா உனக்கு ஏதாவது டிஸைன் பிடிச்சிருந்தா சொல்லுவ அதான் கூப்பிடுறா….”என்று மிருணாளினி கீர்த்தியை அனைத்துக் கொண்டு கூறினாள்.

“மச்சி ஓவரா போற…..உனக்கு நல்லதுக்கு இல்லை பார்த்துக்கோ…..”என்று விஜய் கீர்த்தியை கண்காட்டி கூற,வருண்

“அய்யோ…..நானே தேவையில்லாம ஆரம்பிச்சிட்டனோ….மாட்டுனேன்…..”என்று நொந்து கொண்டு அவளை சமாதானம் செய்ய தொடங்கினான்.அதைக் கண்ட மற்ற இருவருக்கும் சிரிப்பாக இருந்தது.ஒருவழியாக அவளை சமாதானம் செய்து அழைத்து வந்தவன்,

“வாங்க போகலாம்…..”என்று கூற,

“நீங்க போங்க நான் ஆட்டோல வரேன்….”என்றாள் மிருணாளினி.அன்று தன் வண்டி பழுதடைந்துவிட்டதால் ஆட்டொவில் தான் வந்திருந்தாள்.

“ஏய் எதுக்கு ஆட்டோ….நீ விஜய் கூட வா….”என்று கீர்த்தனா எதார்த்தமாக கூற,மிருணாளினி தயக்கமாக விஜயை நோக்கியவள்,

“இல்லடி நான் ஆட்டோல வரேன்…..”என்று கூற

“கீதூ….நீ அவன் கூட கிளம்பு….நான் அழைச்சிட்டு வரேன்…..”என்று விஜயின் குரல் சற்று அழுத்தமாக ஒலித்தது.மிருணாளினி மேலும் மறுக்க வர,

“ப்ச் கீதூ…..நீ கிளம்பு…..டேய் அழைச்சிட்டு போ….”என்று கூறி அவர்களை அனுப்பியவன் தனது வண்டியை எடுத்துவந்து மிருணாளினியின் முன் நிறுத்திவிட்டு திரும்பி ஏறுமாறு சமிங்கை செய்தான்.

“ம்க்கும் எல்லாத்தையும் மறந்துடுவான்…..ஆனா இந்த முறைப்புக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை…..”என்று மனதிற்குள் திட்ட,

“நான் எதை மறந்தேன்னு நீ தான் சொல்லேன்…..”என்று விஜயின் குரலில் தூக்கிவாரி போட அவனை நிமிர்ந்து பார்த்தாள்.அவனோ அவளை துளைக்கும் விழிகளுடன் நின்றிருந்தான்.மிருணாளினிக்கு ஒருநிமிடம் மூச்சே நின்றது போல் ஆனது.அவள் அவனை திகைத்த விழிகளால் பார்த்துக் கொண்டிருக்க,அவளின் முன்னே சொடுக்கிட்டவன்,

“ஏறு….”என்று கூற,

“இப்…..இப்ப…என்ன கேட்ட விஜய்….”என்று மிருணாளினி திக்கிதிணறி கேட்க,

“நான் என்ன கேட்டேன்….நான் எதுவும் கேட்கலை…..ஏறு டையம் ஆச்சு….”

“இல்லை நீ இப்ப….”என்று அவளை மேலே பேசவிடாம்ல கை நீட்டி தடுத்தவன்,

“ஏறு மிருணா….டையம் ஆச்சு…அவங்க போயிருப்பாங்க….”என்று விட்டு திரும்பி கொள்ள,மிருணாளினிக்கு தான் அவன் தன்னிடம் கேட்டது உண்மை தானா என்ற யோசனையுடனே அவனின் பின்னே ஏறினாள்.

விஜயின் கையில் வண்டி பறக்க மிருணாளினிக்கு தான் சற்று பயமாக இருந்தது.இப்போது தான் தேறி வந்திருக்கிறான் ஏன் இவ்வளவு வேகம் என்று நினைத்தவள் அதைக் கூறவும் செய்தாள்,

“விஜய்…..ஏன் இவ்வளவு வேகம்  கொஞ்சம் பொறுமையா தான் போயேன்…..”என்று கூற,அவனோ மேலும் வண்டியின் வேகத்தைக் கூட்ட,அவனின் தோள்களில் வேகமாக அடித்தவள்,

“டேய் சொல்லுறேன்ல பொறுமையா போ னு….பொறுமையா போ….”என்று அடித்துக் கொண்டே கூற விஜயின் இதழ்களில் மென்னைகை அத்துடன் வண்டியின் வேகத்தையும் குறைத்து ஓட்ட,

“இதை முன்னாடியே செஞ்சிருக்க வேண்டியது தானே….”என்று மிருணாளினி பொரும,

“நீயும் இப்படி கிட்ட வந்து அடிச்சு சொல்லிருக்க வேண்டியது தானே….”என்று அவனும் கிண்டலாக கேட்க,

“ஆங்….என்ன என்ன சொன்ன….”

“ம்ம்….நான் ஒண்ணும் சொல்லையே….”என்று பழைய பல்லவியே பாட,

“டேய்….உன்னை….”என்று அவள் வீடு வரும் வரை அவனின் முதுகில் அடித்த வண்ணம் தான் வந்தாள்.வெகு நாட்களுக்கு பிறகு இருவருக்குமே அந்த பயணம் மிகவும் பிடித்திருந்தது.ஆனால் அவர்கள் வரும் வழியில் இரு ஜோடி விழிகள் அவர்களை கவனித்தை அவர்கள் அறியார்.அதில் இருவிழிகள் அவர்களை குழப்பமாக பார்த்திருக்க,மற்றொரு ஜோடி விழிகளோ அவர்களை வன்மமாக பார்த்தது.

Advertisement