Advertisement

காதல் வானவில் 28

இரண்டு மாதங்கள் முடிந்திருந்தது விஜய்க்கு மறைந்த விடயங்கள் எதுவும் நியாகபத்திற்கு வரவில்லை.அவனும் மருத்துவர்கள் கூறுவது போல் மருந்து,நடை பயிற்சி,தியானம் என்று அனைத்தும் செய்தான்.ஆனால் அவனுக்கு அந்த ஒரு மாத காலம் என்பது கருப்பு பக்கம் போல் மறைந்து தான் போயிருந்தது.அவனும் பல முறை தன் நியாபக அடுக்கில் தேடிவிடுவான் ஆனால் அவனுக்கு உடல் சோர்வும்,மனசோர்வும் சேர்ந்த வர,அதைக் கண்ட வேணி,

“போதும் ரொம்ப யோசிக்காத விடு….உனக்கா தன்னால நியாபகம் வந்தா வரட்டும் இல்லையா விடு….ப்ளீஸ் எனக்காகடா நீ இப்படிஅப்பப்ப இப்படி இடிஞ்சு போய் உட்கார்ந்து இருக்கறத பார்த்தா எனக்கு பயமா இருக்குடா….”என்று கண்ணீர் மல்க கூற அதனுடன் நிறுத்திக் கொண்டான்.அன்னை சொல்லுவது போல் தானாக நியாபகம் வந்தால் வரட்டும் என்று விட்டுவிட்டான்.

ஆனால் அவன் மனதை அழுத்தும் ஒரே விஷயம் மிருணாளினி.அவள் அவனின் மனதில் புகுந்து அவனை கொஞ்சம் கொஞ்சமாக அவனை ஆக்கரமித்துக் கொண்டிருந்தாள்.அன்று மருத்திவமனையில் பார்த்த பிறகு அவள் தன் முன்னே வரவில்லை என்று தெரிந்தவுடன் அவளை அவள் அறியாமலே பின் தொடர தொடங்கியிருந்தான்.

அவ்வாறு பின் தொடரும் சமயங்களில் அவன் அறிந்த விடயம் அவளும் தன்னை தான் அறியாமல் பார்க்கிறாள் என்பது மட்டுமே.அவள் பார்வையில் தெரியும் ஏக்கத்தை காண்பவனுக்கு மனதில் தன்போல் ஒரு அழுத்தம் பரவும் அதுவே அவனுக்கு கூறியது அவள் தன்னிடம் எதையோ மறைக்கிறாள்  என்று.விடை தெரியாத வினாதாள் போல் அவளின் பார்வையிருக்க அதை மறக்கவும் முடியாமல்,புறக்கணிக்கவும் முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறான்.

கீர்த்தனா விஜயின் வீட்டிற்கு வந்தாள்.அவளது முகம் முழுக்க புன்னகை தவழ்ந்தது.

“விஜி…..விஜி….”என்று அவள் உரக்க அழைக்க,அதற்குள்  சமையல் அறையி்ல் இருந்த வேணி,

“ஏன்டி இந்த கத்து கத்து கத்தற….என்ன….என்ன ஆச்சு….”என்று பதட்டமாக கேட்க,

“போ வேணிமா….உன்கிட்ட சொல்லமாட்டேன்….விஜி எங்க சொல்லுங்க….”என்று சிணுங்கிக் கொண்டு சொல்ல,அதற்குள் கீர்த்தியின் குரலில் விஜயே அவனது அறையிலிருந்து கீழே வந்திருந்தான்.

“ஏய் வாலு….என்ன காலங்காத்தாலே இங்க விஜயம்….”என்று அவளின் தலையை தட்டியவாறே கேட்க,

“ஆஆஆ….எதுக்குடா என் தலையை தட்டுன…உன்கிட்டயும் சொல்லமாட்டேன் போ….”என்று முறுக்கிக் கொள்ள,

“சரி போடி….நீ சொல்லாத….”என்று அவனும் அவளிடம் விளையாட,

“அட இப்படி இரண்டு பேரும் சண்டை போடுறத நிறுத்துங்க….ஏய் கீர்த்தி என்ன விஷயம்னு சொல்லு….அண்ணா ஏதாவது சொன்னாரா….”என்று கேட்க,அவளோ இல்லை என்னும் விதமாக தலையை மட்டும் ஆட்டினாள்.

“ஏன்டி வாய திறந்து சொல்லேன்….”என்று வேணி கத்தவே தொடங்க,

“விடும்மா….அவளுக்கு வேணும்மானா அவளே சொல்லட்டும் நீ ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுற….”என்று விஜய் இலகுவாக கூற,விஜயின் வார்த்தையில் கீர்த்திக்கு முணுக்கென்று கண்ணீர் வந்துவிட்டது.அதை கவனித்த வேணி,

“ஏய் விஜி நீ சும்மா இரு…..அவ அழறா பாரு….”என்று மகனை அதட்டி கீர்த்தியிடம்,

“என்னடா….அவன் சும்மா தான சொன்னான் அதுக்கு போய் கண்ணுலெல்லாம் கலங்கிட்டு….என்னனு சொன்னா தானா தெரியும்….”என்று அவளின் தலையை தடவியவாறே கூறினார்.

“போ வேணிம்மா…நானே இன்னும் கொஞ்ச நாள் தான் இங்க இருக்க போறேன்னு அப்பா இன்னைக்கு என்கிட்ட கிண்டல் பண்றுரார்…இங்க வந்தா இவன் என்னை கிண்டல் பண்ணுறான்….இன்னைக்கு வருண் வீட்டுலேந்து போன் பண்ணாங்க….அடுத்தவாரம் வெள்ளிகிழமை நாள் நல்லாயிருக்கு அன்னைக்கே நிச்சியம் வச்சிக்கலாம்னு சொன்னாங்க….அதை சொல்ல தான் வந்தேன்…இவன் என்னை கிண்டல் பண்ணிட்டான் போடா….”என்று விஜயிடம் முகத்தை திருப்ப,அவளை அதரவாக தோளணைத்தவன்,

“ஏய் வாலு….எங்க போக போற இங்க பக்கத்துல இருக்கு கிண்டிக்கு தான….நினைச்ச பத்து நிமிஷத்தில இங்க வந்துடலாம்…அதுக்கு இப்படி போய்  முகத்தை தூக்குற….போ போ இப்ப இருந்தே முகத்துக்கு ஏதாவது போடு அப்பதான் நிச்சயத்திலாவது நல்லா இருப்ப….”என்று மேலும் கிண்டல் பண்ண,

“டேய் உன்னை இருடா…..என்ன பண்ணுறேன்னு பாரு….”என்று கீர்த்தி விஜயை துறத்த அவன் அவள் கைகளில் அகப்படாமல் ஓடிக் கொண்டிருந்தான்.இருவரையும் பார்த்திருந்த வேணியின் முகத்தில் சிந்தனை ரேகைகள் சூழ்ந்திருந்தது.

தனது கணினியில் மும்முரமாக வேலையில் இருந்த மிருணாளினி முன் நிழலாட நிமிர்ந்தாள்,அவளுடன் வேலைபார்க்குபம் நித்யா தான்,

“ஹாய் மிருணா….உன்னை டீல் கூப்பிட்டார் ப்பா….”என்று கூற அவளிடம் தலையசைப்பை மட்டும் தந்துவிட்டு எழுந்து டீல்லின் அறைக்கு சென்றாள்.அறைக் கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைய,அவளை புன்னகை முகத்துடன் வரவேற்றார் கிஷோர்,

“வா மிருணா…உட்காரு….”என்றவர்,

“நீ கேட்ட மாதிரி உனக்கு பூனே பிரான்ச்சில வொவர்க் சேஞ்ச் கிடைச்சிருச்சு….ஆனா எனக்கு நீ இந்த ஒரு புராஜக்ட் மட்டும் முடிச்சிக் கொடுத்துட்டு போமா….இது கொஞ்சம் வொர்க் லோட் அதிகம் அதனால தான் கேக்குறேன்….”என்று கூற,

“நோ பிராபிளம் சார்….வொர்க்க முடிச்சிக் கொடுத்துட்டே போறேன்….”என்று கூறிவிட்டு தனது இடத்துக்கு வந்துவிட்டாள்.

இரவு தங்கள் அறையில் இருந்த ஆனந்தனிடம் வேணி,

“எங்க நம்ம விஜய்க்கும் பொண்ணு பார்க்க ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்…நீங்க என்ன நினைக்கிறீங்க….”என்று கேட்க,

“அதுக்கு என்னமா தாராளமா பாரு….அவன்கிட்டேயும் ஒரு வார்த்தை கேட்டுக்க….அவன் மனசுல என்ன இருக்குனு…”என்று தந்தையாக கூறினார்.

“அவனுக்கு எது நல்லது எனக்கு தெரியாதா….நான் பார்த்தா அவன் வேண்டாம்னா சொல்ல போறான்….”என்று கேட்க,

“நீ பார்கறத நான் வேண்டாம்னு சொல்லல வேணி….அவன் மனசுல யாராவது இருக்காங்கலானு ஒருவார்த்தை கேட்டுக்கோ….”என்றார் ஆனந்தன்.அவரின் பதிலில் சற்று நேரம் அமைதியாக இருந்த வேணி,

“அப்படி ஏதாவது இருக்கும்னு நீங்க நினைக்கிறீங்களா….”என்று தயக்கமாக கேட்க,

“ம்ம் அப்படி நான் எதுவும் நினைக்கல வேணி….ஆனா நாம கேக்குறது நல்லது எனக்கு தோணுது….”

“ம்ம் சரிங்க நாளைக்கே பேசுறேன்….”என்றார் குரலில் சுரைத்தை இல்லாமல்.அவரின் உடல் மொழியை வைத்தே அதை கண்டு கொண்ட ஆனந்தன்,

“என்ன வேணி….ஏன் ஒரு மாதிரியாகிட்ட….”என்று கேட்க,

“ஒண்ணுமில்லங்க….அவனுக்கு மனசுக்கும்,நம்ம மனசுக்கும் பிடிச்ச மாதிரி இருந்தா நல்லது….”என்று கூற,அவரை ஒரு மாதிரி பார்த்த ஆனந்தன்,

“வேணி நீயா மனசுல எதையும் நினைச்சுக்கிட்டு மனச குழப்பிக்காத….”என்று கூற,வேணியும் தன் கணவர் கூறுவதில் உள்ள உண்மை புரிந்து அமைதியானார்.

மிருணாளினி தனது இரவு நேர உணவை வாங்கி கொண்டு வந்தவள்,அதை டீப்பாயின் மீது வைத்துவிட்டு அமர அவளின் கைபேசி சிணுங்கியது.இந்த நேரத்தில் யாராக இருக்கும் பயத்துடன் திரையை பார்க்க கீர்த்தி தான் அழைத்திருந்தாள்.

“ம்ம் சொல்லு கீர்த்தி….”

“என்னடி ஊர்ல தான் இருக்கியா….உன்னை பார்க்கவே முடியறதில்ல….”என்று எடுத்தவுடன் சண்டையிட,

“கொஞ்சம் வேலை அதிகம்டி அதான்….”என்று மிருணிளினி மழுப்ப,

“ம்ம்…நினைச்சேன்….அதான் ரெடிமேடா ஒரு காரணம் வச்சிருப்பியே….உன் கிட்ட முக்கியமான விஷயம் பேச தான் கூப்பிட்டேன்….”என்று கூற,

“சொல்லு….”

“வருண் வீட்ல அடுத்த வாரம் வெள்ளிகிழமை நிச்சயம் பண்ணலாம்னு சொல்லிட்டாங்க….அதனால வர ஞாயிறு புடவை எடுக்க போறோம் நீ என் கூட வர…அதுக்கு தான் போன் போட்டேன்….”என்று கூற,மிருணாளினி தனக்கு வேலையிருப்பதாக கூறினாள்.கீர்த்தனா  எவ்வளவு கூறியும் மிருணாளினி வர மறுத்துவிட கீர்த்தனாவும் அவளிடம் கோபமாக பேசினாள்,

“ஓ…அப்ப நீ வர மாட்ட….அப்படி தான….”என்று கீர்த்தி கேட்க,மறுபக்கம் மௌனம்.அதுவே அவள் வரப்போவதில்லை என்பதை உணர்த்த,

“சரி இனி என்கூட பேசவே பேசாத….”என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டாள்.

மிருணாளினியோ தனது கையில் உள்ள கைபேசியையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.அவள் மனதில் அவ்வளவு வலி அப்பிக் கிடந்தது.

“நான் வேண்டாம் கீதூ….நான் வேண்டாம்…..நான் வந்தா உனக்கும் ஏதாவது ஆபத்து வந்துடுமோனு பயமா இருக்குடி….”என்று வாய்விட்டு புலம்பியவள்,தன் படுக்கையில் விழுந்து வெடித்தழுக ஆரம்பித்தாள்.

“அய்யோ கடவுளே எனக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது…நான் என்ன பாவம் செஞ்சேன்….முதல்ல என்னோட விஜயை என்கிட்டேந்து பிரிச்ச…..இப்ப என்னோட கீர்த்தியையும் என்கிட்டேந்து பிரிச்சிட்ட….ஏன் ஏன் இப்படி பண்ணுற….”என்று சத்தம் போட்டு அழுதவள் நினைவுகள் இரண்டு மாதங்கள் முன்பு சென்றது.

தனது கைபேசியில் வந்த புது எண்ணை யோசனையோடு பார்த்தவாரே ஏற்று காதில் வைத்தாள்.

“ஹாய் மிருணீ டியர்….எப்படி இருக்க….”என்ற ஹர்ஷாவின் குரலில் மிருணாளினிக்கு மனதில் ஏதோ சரியில்லை என்று தோன்ற,எதுவும் பேசாமல் அமைதியாக போனை வைக்க போக,

“ஓய் மேடம்  போனை வைச்சிடாத…..எப்படி இருக்கான் உன் காதலன்….”என்று கேட்டுவிட்டு அவளின் பதிலுக்காக காத்திருந்தான்,மிருணாளினிக்கு ஹர்ஷாவின் அழைப்பே சற்று பயத்தைக் கொடுத்திருந்தது.இதில் அவன் விஜயை பற்றிக் குறிப்பிடவும் மேலும் மனதில் கிலி பிடிக்க கைகள் தன் போல் நடுங்க துவங்கியது.

“என்ன மிருணீ….உன் காதலனை பத்தி பேசவும் அப்படியே பிரீஸ் ஆகிட்டியா…..எப்படி இருக்கான்….”என்றவன் பின்,

“ஓ ச்ச….நான் இப்படி கேட்கனும் இல்ல உயிரோட இருக்கானா இல்லையா….”என்று கேட்க அதுவரை மௌனம் காத்த மிருணாளினி,

“என்….என்ன சொல்லுற  ஹர்ஷா நீ…..”என்று அவளின் குரல் நடுக்கத்துடன் ஒலிக்க,அதை சரியாக கண்டுகொண்டவன்,

“என்ன செல்லம் உன் குரல் நடுங்குது…..உன் காதலன் இப்போ இல்லையோ….”என்றுவிட்டு அடக்கமாட்டாமல் சிரிக்க,மிருணாளினிக்கு மூச்சே நின்றது போல் ஆனது.

“டேய் என்னடா சொல்லுற….”என்று மிருணாளினி கோபமாக கத்த,

“கத்து…கத்து….இந்த பதட்டம்,இந்த பயம் இதை தான் நான் எதிர்பார்த்தேன் உன்கிட்ட….என்ன புரியலையா…..நான் தான் உன் காதலனை அடிச்சேன்….”என்று,

“ஹர்ஷா……”என்று மிருணாளினி அவளையும் மீறி கத்திவிட்டாள்.

“எஸ்…..ஹர்ஷா தான் உன் பின்னாடி சுத்துன அதே ஹர்ஷவரதன் தான்….ஏய் நல்லா கேட்டுக்கோ….நீ எனக்கு மட்டும் தான்…எனக்கு மட்டும் தான்…..உன்னை யார்கிட்டேயும் விட்டுக் கொடுக்க மாட்டேன்….அதனால மரியாதையா என்கிட்ட நீயா வந்துட்டா உனக்கு நல்லது இல்லை வர வைப்பேன்….உன் கிட்ட இருக்குறவங்கள கொஞ்சம் கொஞ்சமா பிரிச்சா நீயா வருவ வருவடீ…..”என்று காட்டு கத்தலாக கத்திவிட்டு வைத்துவிட,மிருணாளினிக்கு சம்பித்த நிலை தான்.

விஜய்க்கு நிகழ்ந்தது விபத்து அல்ல அது ஹர்ஷாவின் சதி செயல் என்று தெரிந்து கொண்டவளுக்கு மனது ஆறவேயில்லை.ஹர்ஷாவை கொல்லும் வெறியே உருவானது. தன்னவன் தன்னை மறந்துவிட்டான் என்பதிலேயே பாதி உயிர் நீத்திருந்தவள் இப்போது இவை அனைத்திற்கும் காரணம் தான் தான் என்று தெரிந்தவுடன் நெஞ்சுகூடே காலியானது போல் ஆனது.

அன்று மருத்துவமனையில் விஜயின் பெற்றோர்கள் எவ்வளவு வேதனை பட்டனர் அவர்களுக்கு இந்த விடயம் தெரிந்தால் என்று நினைக்கவே பயமாக இருந்தது.அதோடு ஹர்ஷா கடைசியாக கூறிய உன்னை நெசிப்பவர்களை உன்னிடமிருந்து பிரிப்பேன் என்ற வாக்கியம் மிருணாளினியின் மனதில் ஆழப் பதிந்து தான் போனது.

ஹர்ஷாவிடம் பேசிய அடுத்த நாளே மிருணாளினி தனக்கு பூனேவிற்கு இடம் மாற்றம் வேண்டும் என்று கேட்டு தனது டில்லிடம் கேட்டு எழுதி கொடுத்திவிட்டாள்.அதன் பிறகு அவள் விஜயை பார்பதையே தவிர்த்தாள்.அவள் யாரிடம் இருந்து ஓட நினைக்கிறாளோ அவன் அவளை விடாமல் பின் தொடர்ந்து கொண்டிருந்தான்.அவன் இவளை விடப்போவதுமில்லை,விலகப்போதுமில்லை என்பதை அவள் அறிய மறந்துவிட்டாள்.

தன்னால் தன் தன்னவனுக்கும்,தன் நண்பர்களுக்கும் ஆபத்து என்று அவள் விலக நினைக்க அவளை எங்கேயும் நகரவிடாமல் மீண்டும் அவனிடமே இழுத்து சென்றது விதி.

காலைவேளை மிருணாளினி வீட்டின் காலிங் பெல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்க,மிருணாளினியோ இரவு கீர்த்தியுடனான சண்டைக்கு பின் வெகு நேரம் அழுகையில் கரைந்தவள் அப்படியே உறங்கியும் இருந்தாள்.விடாமல் மணி அடிக்க லேசாக தூக்கம் கலைந்தவள் எழுந்து வந்து கதவை திறக்க அங்கு வசீகரிக்கும் புன்னகையுடன் நின்றிருந்தான் விஜய்.

Advertisement