Advertisement

காதல் வானவில் 25

இன்று,

தன் நிகழ்வுகளில் மூழ்கி இருந்த மிருணாளினியை யாரோ பலமாக உலுக்கவும் தன் பழைய நினைவுகளில் இருந்து வெளி வந்தவள்,தன் முன்னே நின்ற வருணை பதட்டத்துடன் பார்க்க அவனோ,

“மிருணா…இந்தா இந்த காபியை முதல்ல குடி…”என்று அவளின் முன் காபி கோப்பை நீட்ட,

“வேணாம் வருண்….எனக்கு பசிக்கல….”என்று கூற,அவளின் கையை பிடித்து பிடிவாதமாக கோப்பை திணித்தவன்,அவளின் மடியில் அழுத படி படித்திருந்த கீர்த்தனாவை எழுப்ப சென்றுவிட்டான்.

“கீதூ….எழுந்திரி…முதல்ல இப்படி அழுவறத நிறுத்து…நீ இப்படி அழுதா வேணி ஆன்டியை யார் தேத்துறது….”என்று சற்று கோபமாக கூற,அவனது வார்த்தை சற்று வேலை செய்ததது போலும் கீர்த்தனா எழுந்தமர்ந்து காபி கோப்பை வாங்கிக் கொண்டாள்.

வருண் கூறியவுடன் தான் மிருணாளினிக்கு விஜயின் பெற்றோர் நியாபகம் வர அவர்களை பார்த்தாள்.இருவரும் ஓய்ந்து போய் அமர்ந்திருந்தனர்.அவர்களின் கண்கள் அந்த அவசர சிகிச்சை பிரிவையே பார்த்தபடி இருந்தது.யாரேனும் வந்து தங்கள் மகனுக்கு ஒன்றுமில்லை நன்றாக உள்ளான் என்று கூறிவிடமாட்டார்களா என்று தவிப்பில் அமர்ந்திருந்தனர்.நீலவேணியோ கடவுள் மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு அவசர சிகிச்சை பிரிவின் வாயிலேயே பார்த்துக் கொண்டிருந்தார்.

கீர்த்தனா நீலவேணியின் அருகில் அமர்ந்து ஏதோ கூறி அவளின் கையில் இருந்த காபியை அவருக்கு புகட்ட அவரோ வேண்டாம் என்று மறுத்தபடி இருக்க அவளோ பிடிவாதமாக புகட்டிக் கொண்டிருந்தாள்.ஆனந்தனை தேற்றி அவரின் கைகளில் காபி கோப்பை கொடுத்து பருகும் படி கூறிக் கொண்டிருந்தான் வருண்.மிருணாளினிக்கு அவர்களிடம் உரிமையுடன் நெருங்க முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும்,அதை மறைத்துக் கொண்டு,

“ஆன்ட்டி…ப்ளீஸ் சாப்பிடுங்க…நீங்க தெம்பா இருந்தான…விஜயை பார்த்துக்க முடியும்…ப்ளீஸ்….”என்று வேணியின் அருகில் அமர்ந்து அவருக்கும்,தனக்கும் சேர்த்தே ஆறுதல் கூற,அவரோ உடைந்து அழுதுவிட்டார்.

“அவன் தான்மா எங்களுக்கு எல்லாம்….அவன் இல்லனா நாங்க இல்லை…என்னால முடியலையே எப்போதும் துருதுருனு இருப்பவனை இப்படி படுக்கையில பார்க்க முடியலையே…”என்று அவர் கதறி அழ,மிருணாவிற்குமே அடக்கி வைத்திருந்த அழுகை பீறிட்டது கூடவே,

“உங்களுக்கு மட்டுமா எனக்கும் அவன் தான் எல்லாம் அவன்  இல்லனா….அய்யோ என்னால நினைச்சு பார்க்கக் கூட முடியலையே….”என்று தனக்குள் ஊமையாக அழுதாள்.

அன்றைய நாள் முழுவதும் அனைவரையும் அழ வைத்துவிட்டு மாலையில் கண்விழித்தான் விஜய்.மருத்தவர்கள் அவனை பரிசோதித்துவிட்டு அனைவரிடமும்,

“உங்க மகன் அபாய கட்டத்தை தான்டிவிட்டார்…இனி பயமில்லை….”என்று கூறியவுடன் அனைவரின் மனமும் அமைதி அடைந்தது.நீலவேணிக்கோ தன் மகனை காண வேண்டும் என்ற பிடிவாதம் எழ,

“டாக்டர்…நான் ஒரே தடவை என் பிள்ளையை பார்த்துக்குறேன்….ப்ளீஸ்….”என்று கேட்க,

“ஓகே….ஒருத்தர் மட்டும் போங்க….பேஷண்டை தொந்திரவு செய்யாதீங்க….”என்று வலியுர்த்திவிட்டு சென்றுவிட்டார்.வேணி மகனிருக்கும் அறைக்குள் செல்ல,அங்கு தலையில் கட்டுடன் படுத்திருந்தான் விஜய்.அவனைக் கண்ட வேணிக்கு நெஞ்சம் அடைத்து போல் இருந்தது.தன் மகனை இவ்வாறு காண்பார் என்று அவர் கனவிலும் நினைக்கவில்லை.உள்ளே சென்ற வேகத்தில் வெளியில் வந்துவிட்டார் எங்கே அவனின் முன் அழுது அவனை தொந்திரவு செய்துவிடுமோ என்று பயந்து தான் வந்துவிட்டார்.

ஆனந்தன் தன் மனைவியின் நிலை அறிந்து அவரை அணைத்து ஆறுதல் கூறினார்.

“வேணிமா…அதான் நம்ம விஜய் வந்துட்டான்ல….அப்புறம் இப்படி அழலாமா…இப்படி உன்னை பார்த்தான் எதுக்கு என் அழ வைச்சீங்கனு என்னை தான் உதைப்பான்…”என்று கனமான சூழ்நிலை சற்று இலகுவாக்க முயன்றார்.

விஜய் முழித்துவிட்டான் என்று தெரிந்தவுடன் வருண் கீர்த்தனா,மிருணாளினி மற்றும் கீர்த்தனாவின் தந்தையை வீட்டிற்கு செல்லும் படி கூறினான்.போகமுடியாது என்று மறுத்தவர்களை,

“நீங்க போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு….காலையில எங்களுக்கு சாப்பாடு எடுத்துட்டு வாங்க…நாங்க காலையில போறோம் அப்ப நீங்க இருந்து பார்த்துக்குங்க….”என்று கூற,அனைவருக்கும் அவன் கூறுவது சரியெனபட கீர்த்தனா,மிருணாளினி மற்றும் சிதம்பரம் மூவரும் வீடு திரும்பினர்.

வீடு திரும்பிய மூவரும் வெவ்வேறு மனநிலையில் இருந்தனர்.கீர்த்தனாவிற்கும்,சிதம்பரத்திற்கும் விஜய் மீண்டு வந்ததே பெரியது என்று மனதிற்கு சற்று நிம்மதி தந்ததது.மிருணாளினிக்கு விஜய் எப்போதடா நேரில் காண்பது என்ற எண்ணம் தான் மனது முழுவதும் அவனுடன் செலவிட்ட நிமிடங்களை நினைத்தவாரே அந்த இரவை கடத்தினாள்.காலை எழுந்தவுடன் மூவருக்கும் உணவை எடுத்துக் கொண்டு கீர்த்தனாவும்,மிருணாளினியும் கிளம்பினர்.

மருத்துவமனையில் காலை விஜய் கண்விழித்தவனை காண நீலவேணியும்,ஆனந்தனும் சென்றனர்.மகனின் தலைகோதிய நீலவேணி,

“ஒண்ணுமில்லடா ராஜா….சீக்கிரம் எழுந்து வா……”என்று தேற்றினார்.ஆனந்தனோ மகனை கண்களால் நிரப்பிக் கொண்டார்.தன் தாய்,தந்தையின் கைகளின் தன் கையை வைத்தவன் அழ வேண்டாம் என்று தலையை இடவலமாக ஆட்டினான்.அவனுக்கு தலையின் காயம் சற்று வலித்துக் கொண்டிருப்பதால் மருத்துவர்கள் அவனை தேவையில்லாமல் பேச வேண்டாம் என்று கூறியிருந்தனர்.

கீர்த்தனாவும்,மிருணாளினியும் மருத்துவமனை வந்தவுடன் வருண் விஜய் காலை கண்விழித்தது மருத்துவர் கூறியது அனைத்தையும் கூறியவன்,பின் தனக்கு வெளியில் வேலையிருப்பதாக கூறிவிட்டு சென்றான்.கீர்த்தனா வேணிக்கும்,ஆனந்தனுக்கும் உணவை கொடுத்துவிட்டு இருவரையும் வீட்டிற்கு சென்று சிறிது நேரம் இருந்துவிட்டு வர சொல்ல இருவரும் மறுத்துவிட்டனர்.

இவ்வாறு ஒருவாரம் சற்று கனமான மனநிலையுடனே கழிந்தது அனைவருக்கும்.விஜய் தைரியசாலி என்பதால் சற்று வேகமாகவே தேறி வந்தான்.இன்று அவனை சாதாரண அறைக்கு மாற்றியிருந்தனர்.முன் போல் அல்லாமல் இப்போது பேசலாம் என்று மருத்தவர் கூறியிருந்தார்.அதனால் அனைவரிடமும் சிறிது நேரம் பேசினான்.

கீர்த்தனா,வருண்,மிருணாளினி மூவரும் இன்று தான் விஜயை காண்பதால் அவர்களுக்கு இப்போது மனது சற்று நிம்மதி அடைந்திருந்தது.வருண் கீர்த்தனாவிடம் சொல்லி தான் அழைத்து வந்திருந்தான்,

“நீ உள்ள வந்ததும் அழுவறதா இருந்தா உள்ள வராத….அவனுக்கு நாம ரொம்ப டென்ஷன் கொடுக்காம இருக்கனும் என்று டாக்டர் சொல்லியிருக்கார்….புரியுதா…”என்று மிரட்டலாக கூற அவளும் சரி என்று கூறியிருந்தாள்.அதனால் மூவரும் அமைதியாக அவனை பார்த்துக் கொண்டிருந்தனர்.மிருணாளினிக்கு விஜயின் மீதிருந்து பார்வையை அகற்ற முடியவில்லை அவனை தலை முதல் கால் வரை தனது கண்களால் நிரப்பிக் கொண்டாள்.

விஜய் மருத்துவமனை வாசம் மேலும் ஒருவாரம் சென்றது விஜய்யும் ஒரளவிற்கு தேறியிருந்தான்.மிருணாளினி விஜயை பார்த்துவிட்டு வருவாளே தவிர அவனிடம் பேச முயன்றது இல்லை.எப்போதும் அவனை சுற்றி யாரேனும் இருந்து கொண்டிருப்பார்கள் அதனால் அவள் அருகில் கூட நெருங்க முயற்சி செய்யவில்லை. நாளை அவனை வீட்டிற்கு செல்லாம் என்று மருத்துவர்கள் கூறியிருந்தனர்.மகனை வீட்டிற்கு அழைத்து செல்ல வேண்டிய வேலைகளை ஆனந்தன் காண சென்றிருந்தார்.நீலவேணி அன்று தான் வீட்டிற்கு சென்றிருந்தார் மகன் வருவதற்குள் வீட்டை சுத்தப்படுத்த வேண்டும் என்று.

மிருணாளினி அலுவலக வேலை முடிந்து மருத்துவமனை வந்திருந்தாள்.விஜயின் அறையில்,

“ம்ம் என்ன கீதூ….என்ன ரொம்ப பிராகாசமா இருக்குற…என்ன விஷயம்….”என்று விஜய் கீர்த்தனாவிடம் ஏதோ வம்பலத்து கொண்டிருந்தான்.வருண் அவர்கள் இருவரையும் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.அப்போது மிருணாளினி உள்ளே வர விஜயின் பேச்சு நின்றது அவளை கூர்மையாக பார்த்தான்.அவளும் அவனை தான் பார்த்துக் கொண்டு வந்தாள்.இன்றாவது அவனிடம் பேச முடியுமா என்று நினைத்துக் கொண்டு தான் வந்தாள்.வருணுக்கு விஜய்,மிருணாளினி விஷயம் ஓரளவிற்கு தெரியும் என்பதால்,

“கீதூ….கொஞ்சம் வா…..எனக்கு ஒரு வேலையிருக்கு….”என்று கூற,

“போடா நான் வரலை….”என்று கீர்த்தனா கூற,

“இவ ஒருத்தி நிலைமை புரியாம….இவகிட்ட பேசின நம்மள தான் டேமேஜ் பண்ணுவா….இவளை…..”என்று நினைத்தவன் அவள் பேச பேச காதில் வாங்காமல் வெளியில் அழைத்து சென்றுவிட்டான்.

அவர்கள் செல்வதற்காகவே காத்திருந்தது போல் மிருணாளினி வேகமாக வந்து விஜயை கட்டிக் கொண்டு,

“பயந்துட்டேன் விஜய்….உயிரே இல்லை….”என்று அவனின் நெஞ்சில் சாய்ந்து கூறினாள்.அவனை முகத்தை தன் இரு கைகளாலும் ஏந்தி,

“ஏன் இப்படி பயமுறுத்தினீங்க….”என்று அழுது தேம்பியபடி கேட்க,அவனோ அவளை அதிர்ந்த பார்வை பார்த்துக் கொண்டிருந்தான்.அவனது புரியாத பார்வை கண்டவளுக்கு,

“என்னாச்சு விஜய்…..தலை வலிக்குதா….”என்று தான் கட்டிபிடித்ததில் அவனுக்கு ஏதாவது வலிக்க தொடங்கிவிட்டதோ என்று வேகமாக அவனிடம் இருந்து விலகி கேட்க,அவன் அதே புரியாத பாவனையுடன் அமர்ந்திருந்தான்.அவனது முகபாவனை அவளுக்கு பயத்தை தர,

“என்னாச்சு விஜய்….நல்லா தான இருக்க….இரு நான் டாக்டரை கூப்பிடுறேன்….”என்று அவள் போக பார்க்க,

“இல்லை வேண்டாம் நான் நல்லா தான் இருக்கேன்….”என்று அவனது வாய் முத்துகள் உதிர்ந்தது.அவளோ அவனை நம்பாத பார்வை பார்க்க,

“ஐ ஐ ம் பைன் மிருணா…”என்று தடுமாற்றமாக கூற,அவனது முகத்தையே பார்த்தபடி அவள் நின்றாள்.ஏதோ ஒன்று குறைவது போல் இருந்தது அவளுக்கு அது என்ன என்று தான் புரியவில்லை.அவனும் அவளை தான் பார்த்தபடி அமர்ந்திருந்தான் இருவருக்குள்ளும் அசாத்திய அமைதி நிலவியது யார் அதை உடைப்பது என்று யோசனையிலேயே இருந்தனர்.

இருவரும் எவ்வளவு நேரம் அவ்வாறு இருந்தனர் என்று இருவரும் அறியார் வெளியில் பேச்சுக் குரல் கேட்கவும் மிருணாளினி தன் கண்களை துடைத்துக் கொண்டு விஜயிடம் இருந்து சற்று நகர முயல முடியாமல் போனது.என்ன என்று திரும்பி அவனை காண அவனோ அவளை ஒரு முறை பார்த்துவிட்டு அவளது கரத்தை சுட்டிக் காட்ட அதுவோ அவனது கரத்துடன் இணைந்திருந்தது.மெல்லிதாக புன்னகைத்துவிட்டு அவனிடம் இருந்த கரங்களை விலக்கிவிட்டு நகர சரியாக அப்போது அறைக்குள் நுழைந்தாள் பூர்ணிமா.

விஜய்க்கு விபத்தானது அலுவலகத்தில் யாருக்கும் தெரியாது.வருண் தான் யாருக்கும் கூற வேண்டாம் என்று கூறியிருந்தான்.விஜய்க்கு தற்போது தேவை நல்ல உறக்கம்,உணவு இவை மட்டுமே வீணாக அவனை யாரும் தொந்திரவு கொடுக்க வேண்டாம் என்று மருத்துவர் கூறியிருந்தால் வருண் அலுவலகத்தில் யாருக்கும் விபத்தானது கூறாமல் அவன் வேறு வேலையாக வெளியில் சென்றுள்ளதாக கூறியிருந்தான்.

பூர்ணிமாவுக்கு தான் விஜய் இல்லாமல் அலுவலகத்தில் இருக்க முடியவில்லை.அவளாக இருமுறை வருணிடம் கேட்க அவனோ விஜய் வெளி வேலையில் இருப்பதால் வரவில்லை என்று கூறி சென்றுவிட்டான்.கீர்த்தனா தன் வீட்டிலிருந்த படியே வேலை பார்க்க அவளிடமும் பூர்ணிமாவால் கேட்க முடியவில்லை.இன்று ஏதோ கேட்க என்று டீல்லின் அறைக்கு சென்ற போது அவர் வருணிடம் விஜயை பற்றி கேட்டுக் கொண்டிருந்தார்.

“இப்ப விஜய்க்கு எப்படி இருக்கு வருண்….”

“இப்ப கொஞ்சம் தேவலாம் சார்…ஆனா இன்னும் கொஞ்ச நாள் அவன் ரெஸ்ட் எடுத்து தான் ஆகனும்…..இப்ப பிராஜக்ட் அவன் இருக்கும் போதே அவன் ஒரளவிற்கு முடிச்சிட்டான் அதனால பிரச்சனையில்லை சார்…..”என்று கூற,

“ம்ம்…ஓகே வருண்….விஜய் எந்த ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்கு….எனக்கு அதோட விபரம் எல்லாம் கொடுங்க நான் இன்சூரன்ஸ்க்கு ஏற்பாடு பண்ணிடுறேன்….”என்ற கூறினார்.வருண் விஜயின் இன்சூரன்ஸ் பற்றி கேட்க தான் வந்திருந்தான்.அவர் நான் செய்து தருகிறேன் என்றவுடன் அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு வந்தான்.வருண் வருவதற்குள் தன் இருக்கைக்கு வந்தவளுக்கு அவ்வளவு கோபம் வருணின் மீது மனதில் அவனை திட்டி தீர்த்தவள் மாலை நேராக மருத்துவமனைக்கு வந்துவிட்டாள்.

“விஜய் எப்படி இருக்கீங்க….”என்று கேட்டபடி வேகமாக வந்த பூர்ணிமா விஜயின் அருகில் வந்து அவனது காயங்களை தொட்டு பார்த்தாள்.அவளது செய்கையை பார்த்துக் கொண்டிருந்த மிருணாளினிக்கு உள்ளம் பற்றி எரிந்தது.ஆனால் பூர்ணிமாவிற்கு மிருணாளினி என்ற ஒருவள் அருகே இருக்கிறாள் என்ற எண்ணம் கூட இல்லாது விஜயின் நலத்தை விசாரிக்கிறேன் என்ற பெயரில் அவனை நெருங்கி பேசிக் கொண்டிருந்தாள்.அப்போது சரியாக உள்ளே நுழைந்தனர் வருணும்,கீர்த்தனாவும்.

வருணும்,கீர்த்தனாவும் உள்ளே வர அங்கு நின்ற பூர்ணிமாவைக் கண்டு இருவரும் திகைத்துவிட்டனர்.

“ம்ம் வாங்க….ஏன் வருண் என்கிட்ட பொய் சொன்ன….”என்றவள் கீர்த்தனாவையும் ஒரு முறை முறைக்க தவறவில்லை.அதன் பிறகு அந்த அறையில் பூர்ணிமா மட்டுமே பேசிக் கொண்டிருக்க,மற்றவர்கள் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.சற்று நேரத்திற்கு பிறகு மருத்துவர் வருவார் என்று கூறி நர்ஸ் அனைவரையும் வெளியில் அனுப்பினார்.

வெளியில் வந்தும் பூர்ணிமா வருணிடம் சண்டைக்கு நிற்க அவளை சமாதானப்படுத்தி அனுப்பவே அவனுக்கு பெரிய வேலையாக இருந்தது.ஒருவழியாக பூர்ணிமா சென்ற பின் தான் வருணுக்கு மூச்சே வந்தது.

“ப்பா பேசியே கொன்னுடுவா போல….”என்று வருண் சலித்துக் கொண்டான்.கீர்த்தனா அவனின் நிலை கண்டு சிரிக்க கடுப்பானவன்,

“ஏய் எதுக்குடி சிரிக்கிற….அவ அந்த பேச்சு பேசுறா…காப்பதனும் தோணிச்சாடி உனக்கு….”என்று கேட்டு அவளின் தலையில் ஒரு கொட்டு வைக்க,

“ஏய் எதுக்குடா என்னை அடிச்ச….”என்று கீர்த்தனாவும் சண்டைக்கு கிளம்ப,

“போதும் உங்க சண்டையை அப்புறம் வைச்சிக்கலாம்….இது ஹாஸ்பிட்டல் சத்தம் போடாதீங்க….”என்று மிருணாளினி கூறிய பின் தான் இருவரும் அடங்கினர்.

மருத்தவர்கள் விஜயை பரிசோசித்து சென்றவுடன் மூவரும் ஒரு சேர உள்ளே நுழைந்தனர்.

“விஜி….இப்ப எப்படி இருக்கு…டாக்டர் என்ன சொன்னார்….”என்று கீர்த்தனா கேட்க,

“ம்ம் நல்லா இருக்கேன் கீதூ…”என்றவன் கண்கள் என்னவோ மிருணாளினியை தான் ஆராச்சியாக பார்த்துக் கொண்டிருந்தது.அதை அவளும் உணர்ந்தாள் தான் ஆனால் அமைதியாக நின்று கொண்டாள்.அவளுக்கு மனதிற்குள் ஒரு நெருடல் ஆனால் அதை யாரிடமும் கூறாமல் தன்னை நிலை படுத்திக் கொண்டு நின்றாள்.

புயலுக்கு முன் வரும் அமைதி கூட மிகவும் பயங்கரமானது தான்.அது போல் தான் இருவருக்குள்ளும் ஏற்பட்ட அமைதி விஜய்க்கு எப்படியோ ஆனால் மிருணாளினிக்கு மனதை வதைத்துக் கொண்டிருந்தது.அவள் நினைத்தது போல் தான் அடுத்த நாள் அவளது வாழ்வில் புகுந்த புயல் கடந்து செல்லும் போது அனைத்தையும் எடுத்து சென்றிருந்தது.மீண்டும் யாரும் அற்றவளாய் நின்றாள் இல்லை இல்லை நிற்க வைத்தான் அவளவன்.

Advertisement