Advertisement

காதல் வானவில் 24 2

மிருணாளினி விஸ்வநாதன் கூறியவற்றை முழுதவதும் கூறிவிட்டு விஜயின் முகத்தை காண அவனின் முகத்தில் யோசனை ரேகை.நெற்றி சுருக்கி எதையோ தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான்.அவனின் சுருங்கிய நெற்றியை நீவியவள்,

“நீ டென்ஷன் ஆகாத விஜய் விடு பார்த்துக்கலாம்…”என்று மிருணா கூற,அவளை கண்டு மெல்லிய புன்னகை புரிந்தவன் பின் ஒரு முடிவுடன்,

“ம்ம்….சரி கிளம்பு….போகலாம்….”என்று கூற,மிருணாளினி,

“விஜய்….அது…நான் எல்லாத்தையும் செட்டில் பண்ணிட்டு வரேன்….நீ இப்ப….”என்று அவள் கூற வருவதை தடுத்தவன்,

“கிளம்பு மிருணா…”என்று இறுக்கமாக மொழிய,அவனின் உடல் மொழியே கூறியது அவன் ஏதோ முடிவெடுத்துவிட்டான் என்று அதனால் அவளும் எந்தவித எதிர்வாதமும் கூறாமல் கிளம்பினாள்.இருவரும் இறங்கி கீழே வந்தனர் அங்கு மிருணா விஸ்வநாதனிடம் கொடுக்க வைத்திருந்த பத்திரங்கள் விஜயின் கண்களில் பட அதை எடுத்து பார்த்தவன்,

“நீ ரெடியாகு….நான் இன்னும் கொஞ்ச நேரத்தில வந்துடுவேன்….”என்று கூற,

“ஏய் இரு எங்க போற….”என்று விஜய்யிடம் கேட்க அங்கு அவன் இருந்தால் தானே.வேகமாக சென்றிருந்தான்.இவளுக்கு தான் என்ன என்று புரியவில்லை ஏற்கனவே மனசஞ்சலத்தில் இருந்தவளுக்கு எதையும் கவனிக்கும் மனநிலையில் இல்லை ஏதோ மனதை அழுத்துவது போலவே இருந்தது.அதற்காகவே இங்கிருந்து சென்றால் என்ன என்று தான் தோணியது அதனால் சென்னை கிளம்ப தயாரானாள்.

விஜயும்,மிருணாளினியும் சென்னை வந்து இரு நாட்கள் சென்றிருந்தது.மிருணாளினிக்கு வேலை பளு சற்று அதிகமாக இருந்தது அதனால் அவளின் வேலை இரவு வரை சில நாட்கள் நீடித்தது.அது போல் உள்ள நாட்களில் விஜய் இரவு அவளுடன் வீடு வரை சென்று விட்டு வருவான்.

அன்றும் அதே போல் தான் இரவு நேரமாகும் விஜயிடம் கூறிவிட்டு வேலையில் ஆழ்ந்துவிட்டாள்.தனது வேலை முடியும் நேரம் இரவு பதினோரு மணியாக முடித்துவிட்டு கீழே இறங்க அங்கு பார்க்கிங்ல் அவளின் ஸ்கூட்டியின் அருகில் தனது வண்டியில் அமர்ந்தபடி காதில் ஹியர் போனை மாட்டியபடி நின்றிருந்தான் விஜய்.தனக்காக தான் வந்திருப்பான் என்று தெரிந்தும் அவனை சீண்டாமல் விட்டால் அது மிருணா இல்லையே,

“ஓய்….இங்க என்ன பண்ற…”என்று கிண்டாலாக கேட்க,அவனோ,

“ம்ம் என் ஆளு…வருவா…அதான்….”என்று அவனும் புருவமுயர்த்தி கூற,

“ஓஓஓ….யார் சார் உங்க ஆளு…”என்று கேட்க,

“ம்ம் இப்ப வருவா பாரேன்….”என்று அவனும் அவளை போலவே கூறினான்.அதேநேரம் அவர்களுடன் வேலை செய்யும் ரீனா வர,

“ஹாய் ரீனா…வா வா…உனக்காக தான் வெயிட்டிங்….”என்று இவன் கூற அவளும் வாயெல்லாம் பல்லாக விஜயின் மீது மோதாத குறையாக ஓடி வந்து நின்றாள்.அவளுக்கு எப்போதும் விஜயின் மீது ஒரு கண் இருக்கும் அதனால் எப்போதடா என்று இருப்பவள் இன்று அவனே கூப்பிடவும் மிகவும் சந்தோஷமாகிவிட்டது.

“ஹாய் விஜி…”என்று குழைந்து கேட்க,இங்கு மிருணாளினிக்கு காதில் புகையாக வந்தது.கண்களால் இருவரை எரிக்கும் பார்வை பார்த்தவள் முறைத்தபடி நிற்க,

“விஜி…நீயும் இன்னைக்கு நைட் ஷிப்ட்டா….கிரேட்…என்னை ஹாஸ்ட்டல்ல டிராப் பண்ணேன் பேபி….”என்று விஜயின் கன்னத்தை பிடித்து கிள்ளி கேட்க,

“யா ஷீர்….கம்….”என்று கூறிவிட்டு அவன் வண்டியில் ஏற அவனின் மீதே சாய்ந்தபடி ரீனாவும் அமர,இதையெல்லாம் பார்த்த மிருணாளினி கண்களில் ரௌத்திரம் தாண்டவம் ஆடியது.அடுத்த நிமிடம் வேகமாக தன் வண்டியை எடுத்தவள் அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டாள்.அவள் வீடு சேரும் முன் அவளின் வீட்டின் முன் நின்றான் விஜய்.அவனை கண்டு கொள்ளாமல் தன் வண்டியை நிறுத்திவிட்டு செல்ல பார்க்க அவளின் கையை பிடித்து இழுத்தவன்,

“ஓய் என்னடி ஓவரா பண்ற…நீ தான கேட்ட நான் பதில் சொன்னா உனக்கு கோபம் வருதா…”என்று இதழில் தவழ்ந்தோடு சிரிப்புடன் கேட்க,

“ம்ம் இதேபோல நான் யார் கூடயாவது போனா….”என்று கேட்டு முடிக்கும் முன்,

“பளார்…”என்ற சத்தம் தன் கன்னங்களை பிடித்தபடி ஒருஎட்டு பின்னடைந்து நின்றாள் மிருணா.

“கொன்னுடுவேன் பார்த்துக்க….ஏதோ சும்மா விளையாட்டுக்கு பண்ணா…”என்று கூற,

“நானும் விளையாட்டுக்கு பண்ணா….”என்று அவளும் வீம்புக்கு கேட்க,

“ஏய் போதும்….நான் சும்மா உன்கிட்ட விளையாட்டுக்கு தான் பண்ணேன்….”என்றவன் தன் தலையை அழுந்த கோதிக் கொண்டான்.அவன் தன் கோபத்தை கட்டுப்படுத்திகுறான் என்று புரிந்தது.இரு நிமிடம் இருவரும் எதுவும் பேசவில்லை அமைதி மட்டுமே.தன் அருகில் நின்ற மிருணாளினி பார்த்தான்,தலை கலைந்து மிகவும் சோர்வாக தெரிந்தாள்.அடித்ததில் ஒரு பக்க கன்னம் சற்று வீங்கியிருந்தது,அவளை இழுத்து அணைத்தவன்,

“சாரி….”

“…..”

“ஓய் சாரி….இனி இப்படி செய்யமாட்டேன்….சும்மா உன்னை டெம்ப்ட் பண்ணாலாம்னு தான் செஞ்சேன்….சாரி….”என்று உணர்ந்து கூற அவனை கலங்கிய விழிகளுடன் ஏறிட்டவள்,

“ம்ம்….சரி விடு….”என்று அவனின் இறுகிய அணைப்பில் இருந்து விடுபட போராட,அவனோ மேலும் இறுகி அணைத்தான்.

“விஜய் விடு….”என்று அவளின் வாரத்தைகள் அவளுக்கே கேட்கவில்லை,வீம்புக்கு செய்கிறான் என்று புரிந்தாலும்,அவர்கள் நின்றது இருவீட்டிகள் இருக்கும் சிறிய இடைவெளியில் உள்ள நடைபாதையில் யாரேனும் வந்தால் என்று நினைத்தவள் அதை கூறவும் செய்தாள்.அவளைவிட்டவன் அவளின் பிறை நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டு,

“நீயும் சும்மா என்னை டெம்ப்ட் பண்ணாம இருடி….”என்று குழைந்து கூற,அவனை புரியாம் பார்த்தவள்,

“நான் என்ன செய்தேன்….”என்று கேட்டாள்.அவளின் பிறை நெற்றியில் செல்லமாக முட்டியவன்,

“ம்ம்….இப்படி ஒண்ணும் புரியாம முழிக்கிற பாரு…அதை முதல்ல நிறுத்து…..ஏற்கனவே நான் பிளாட் இதுல நீ இதுமாதிரி அப்பப்ப செஞ்சு என்னை இன்னும்ம்ம்….”என்று சொல்லும் முன் அவனின் வாயை தன் கைகளால் அடைந்திருந்தாள்.அவளின் கைகளை வேகமாக விலக்கியவன்,

“ஓய் உனக்கு காதலன் வாயை எப்படி அடைக்கனும்னு கூட தெரியலைடி….இரு நான் சொல்லி தரேன்….”என்றவன் அவள் என்னவென்று உணரும் முன் அவளின் பட்டு போன்ற அதரங்களை தன் அதரங்களால் அடைத்திருந்தான்.ஆழ்ந்த அழுத்தமான முதல் இதழ் முத்தமும் இதுவே இருவரும் தங்களை மறந்த நிலையில் இருந்தனர்.இருவரில் முதலில் தெளிந்தது விஜய் தான் முயன்று அவளிடம் இருந்து பிரிந்தவன்,அவளின் முகத்தை காண அவளது முகம் நிலவொளியில் செங்காந்தல் மலர் போல சிவந்து இருந்தது.

தன் முகசெம்மையை அவனிடமிருந்து மறைக்கும் பொருட்டு அவனின் நெஞ்சிலேயே தன் முகத்தை மறைத்தாள் மாது.எப்போதும் கேட்டுக்கும் அவனின் இதயத்தின் துடிப்பு இன்று முழுவதும் தனக்காக துடிப்பது போல் உணர்ந்தாள்.அந்த துடிப்பை ஆழ்ந்து அனுபவிக்கும் பொருட்டு அவள் மேலும் இறுகி அணைக்க,அவனும் இறுக்கமாக அணைத்தவன் கைகள் அவளது இடையில் ஊர்வலம் வர தொடங்கியது.இருவரும் நெகிழ்ந்திருந்த நேரம் தொலைவில் கேட்ட ஏதோ ஹாரன் ஒலியில் இருவரும் பிரிந்தனர்.

மிருணாளினிக்கு இவ்வளவு நேரம் அவனை அணைத்திருந்தது,அவன் கொடுத்த முத்தம் என்று அவளை சற்று தடுமாற செய்ய அவனின் முகத்தை பார்க்காமல் தலை குனிந்து நின்றாள்.விஜயும் தான் செய்த செயலால் தன் தலையை அழுந்த கோதியபடி தன்னை நிலை படுத்திக் கொண்டான்.இருவரின் மனதும் ஒருவரின் அருகாமையை அவ்வளவு ரசித்தது.இந்த மகிழ்ச்சியும்,நிறைவும் காலம் முழுக்க வேண்டும் என்று மிருணாளினி தன் மனதில் கடவுளுக்கு வேண்டுதல் வைத்தாள்.

பல இன்னல்களை கடந்து தனக்கென்று கிடைத்த ஒரு பந்தத்தை இழக்க மனது வரவில்லை.கடவுளே எனக்கு என் விஜய் மட்டும் போதும் அவனை மட்டும் எனக்கு கொடுத்துடு என்று தன் மனதில் கடவுளுக்கு வேண்டுதல் வைத்தவள் கண்கள் தன் போல் கலங்கியது மனத தடுமாற்றத்தில் உடல் குலுங்கியது.அவளின் நிலை உண்ர்ந்தவன் அவளை இழுத்து அணைத்து,

“மிருணா ம்மா…ப்ச் அழத டா….நாம சிக்கிரம் கல்யாணம் பண்ணிக்கலாம்…நான் எங்க வீட்ல பேசுறேன்….”என்று அவளின் மனதை படித்தது போல் கூற,அழுகையுடனே அவனை நிமிர்ந்து நோக்கியவள் முகத்தில் அளவு கடந்த நிம்மதியிருந்தது.இதை தானே அவன் எதிர்பார்த்து அவளது முகம் அமைதியாக இருக்க வேண்டும் என்று.அவளின் கலைந்த தலையை கோதியவன்,

“ம்ம் இப்ப நீ வீட்டுக்கு போகல ஏதாவது தப்பு தண்டா நடந்தா நான் பொறுப்பில்லை….”என்று தன் கைகளை விடுவித்து கூற,செல்லமாக அவனை அடித்தவள்,

“போ போ…நான் வீட்டுக்கு போறேன்…முதல்ல என்னை விடு….”என்று அவள் நாணம் மேலேற கூற,அவளின் காது மடலில் தன் உதடுகளால் கூசியவன் பின் மென்மையாக,

“மேடம் உன்னை நான் விட்டு ரொம்ப நேரம் ஆச்சு….நீ தான் என்னை விடாம பிடிச்சிருக்க…”என்று அவளிடம் ரகசியம் போல கூற,வேகமாக விலகியவள் அவனை பார்க்க வெட்கபட்டுக் கொண்டு,

“நான் வரேன் பைய்….குட் நைட்….”என்று கூறிவிட்டு ஓடிவிட்டாள்.சிறு குழந்தை போல் ஓடும் அவளைக் காண முகம் முழுவதும் சந்தோஷ சாரல் நினைத்தை போல் இருந்தது.ஆனால் இருவருக்கும் அதுவே கடைசியாக சந்திக்கும் தருணம் என்றும் அதன்பின் அவர்கள் வாழ்வில் இடி,மின்னல் என்று கனத்த மழை அவர்கள் வாழக்கையை புரட்டி போட போகிறது என்று தெரியாமல் போனது தான் விதி போலும்.

அதன் பிறகு மிருணாளினி விஜயை கண்டது உணர்வுகளற்று வெறும் கூடாக மருத்துவமனையில் தான். வானவில் மலர்வது அவ்வளவு எளிதல்ல அதே போல் தான் காதல் மலர்வதும் இதில் ஒருவர் சூரியன் என்றால் மற்றொருவர் மழை போல இருவரில் ஒருவர் இல்லை என்றாலும் காதல் வானவில் மலராது.

Advertisement