Advertisement

காதல் வானவில் 23

தனது அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடை பயின்று கொண்டிருந்தான் ஹர்ஷவர்தன்.முகத்தில் அவ்வளவு கடுமை குடி கொண்டிருந்தது.என்னையவே வேணாம்னு சொல்லுரீயா உனக்கு இருக்குடி என்ன செய்யுறேன்னு பாரு என்று தனக்குள் மிருணாளினியை வன்மமாக கருவியபடி இருந்தான்.இந்த கிழவனுக்கு என்ன தான் ஆச்சு இன்னைக்கு நடந்த விஷயம் எல்லாம் தெரிஞ்சும் ஏன் அமைதியா இருக்காரு என்று விஸ்வநாதனையும் மனதில் திட்டியபடி இருந்தான்.

இன்று மிருணாளினியின் மனதில் இருப்பதை அறியவே அவளை பின் தொடர்ந்து சென்றது.அவளுக்கும் விஜய்க்குமான நெருக்கத்தை வைத்தே ஓரளவு அவன் கணித்திருந்தான் தான் இருந்தும் அது மட்டும் அவனுக்கு போதாதே.அதனால் தான் இன்று அவளின் முன் சென்று அவ்வாறு பேசியது அதற்கு அவன் எதிர்பார்த்தது போல் தான் எதிர்வினை கிடைத்தது ஆனால் அது விஜயிடம் இருந்து வந்தது தான் அவன் எதிர்பார்க்காதது.

தான் பேசியதற்கு மிருணாளினி ஏதாவது பேசுவாள் என்று பார்த்தவனுக்கு முதலில் அவளிள் அதிர்ந்த முகம் மகிழ்ச்சியை தந்தது என்னவோ உண்மை தான்.ஆனால் அடுத்தது அவள் பேசாது தன்னை சரியாக கணித்துவிட்டாள் என்பது அவள் விஜயை பேசவிடாமல் தடுத்ததிலேயே புரிந்து கொண்டான்.அதில் அவனுக்கு சற்று பெருமையும் கூட தன்னை சரியாக கணிக்கிறாள் என்று.இருந்தும் அனைத்தும் அவளை தன்னிடம் இருந்து காத்துக் கொள்ளவே செய்கிறாள் என்பது அவனுக்கு மேலும் கோபத்தை தூண்டியது.

“எவ்வளவு நாள் ஓடுறனு பார்க்குறேன் மிருணீ….என்னைக்கா இருந்தாலும் நீ என்கிட்ட வந்து தான் ஆகனும் இல்லை வரவெப்பேன்….”என்று தன் மனதில் கருவிக் கொண்டவனுக்கு ஒன்று மட்டும் விளங்கவில்லை அது விஸ்வநாதனின் அமைதி.ஆம் அவருக்கு அனைத்தும் தெரியும் அதாவது மிருணாளினி இங்கு வந்திலிருந்து நடந்து கொண்டிருப்பது அனைத்தும் தெரியும் இருந்தும் ஏன் அமைதி காக்கிறார் என்று தான் புரியவில்லை.

நேற்றும் அவரை சந்தித்து அவரிடம் மிருணாளினி பற்றி தூபம் போட்டுவிட்டு தான் வந்தான் ஆனால் மனிதர் முகத்தில் எந்தவித உணர்வும் இல்லை மாறாக தான் காண்பித்த புகைபடத்தை ஏதோ அதிசயத்தை போல் பார்த்துக் கொண்டிருந்தார்.ஆம் அவன் அவருக்கு மிருணாளினி விஜயுடன் இருந்த புகைபடத்தை காட்டி தான் சண்டையிட்டான்,

“என்ன அங்கிள் இது…பார்த்தீங்களா உங்க பேத்தி பண்ற வேலையை…”என்று அந்த புகைபடத்தை அவரிடம் கொடுக்க,அவரோ அதற்கு எந்தவித எதிர்வினையும் புரியாது மிக பொறுமையாக ஹர்ஷா கொடுத்த படங்களை பார்வையிட்டார்.

“என்ன அங்கிள் அமைதியா இருக்கீங்க….அவன் என் மேலேயே கைவச்சுட்டான் உங்க பேத்தி என்னனா அவனுக்கு சப்போர்ட் பண்ணி அழைச்சிக்கிட்டு போறா…இதெல்லாம் நல்லதுக்கு இல்லை…”என்று கூற அதுவரை அமைதியாக இருந்த விஸ்வநாதன்,

“உனக்கு அவ மேல இவ்வளவு சந்தேகம் இருந்தா….இந்த கல்யாணம் என்பதே வேண்டாம் ஹர்ஷா….எனக்கு என் பேத்தி பத்தி நன்கு தெரியும்….”என்று சற்று கடுமையாகவே கூற ஹர்ஷாவிற்கு அனைத்தும் சற்று ஆடிதான் போனது.என்னடா இது தான் ஒன்று நினைத்து வந்தால் இங்கு நடப்பது வேறொன்றாக இருக்கிறது.முதலுக்கே மோசமாகிவிடும் போலவே என்று நினைத்தவன் உடனே,

“அச்சோ அங்கிள் என்ன இப்படி பேசுறீ்ங்க….நான் அப்படியெல்லாம் நினைக்கல ஆனா அந்த பையன் அவன் பார்வை அது சரியில்லை,மிருணாளினி நட்பா பழகினாலும் அவன் பார்வை அப்படி இல்லை அதனால தான் சொன்னேன்….”என்று நன்றாக மழுப்ப,

“ம்ம்….நான் பார்த்துக்கிறேன்…இனி நீ அவ பின்னாடி போகாத….கல்யாணம் பேச்சு நான் பேசுறவரைக்கும் நீ அவளை பார்க்கவேண்டாம்…”என்று கூறிவிட்டு செல்ல ஹர்ஷாவிற்கு சப்பென்று ஆனது இருந்தும் ஒன்றும் செய்யமுடியாதே அனைத்து அதிகாரமும் அவரின் கையில் அல்லவா வைத்திருக்கிறார் மனிதர்.இன்னும் சிறிது காலத்திற்கு நாம் சற்று அமைதி காத்து தான் ஆக வேண்டும் என்று தனக்குள் சொல்லிக் கொண்டான் ஹர்ஷா.

கீர்த்தனா,விஜய்,வருண் மூவரும் சென்னை வந்து இரண்டு நாட்கள் ஓடிவிட்டது.கீர்த்தனா வந்த அன்று மிருணாளினியிடம் பேசியது தான் அதன் பிறகு அவள் பேச முயலும் போது எல்லாம் மிருணாளினி ஏதோ வேலை இருப்பதாக கூறி வைத்துவிடுவாள்.அவளது குரலும் ஏதோ போல் இருக்க இங்கு கீர்த்தனாவிற்கு தான் மனது ஒருநிலையில் இல்லாமல் தவித்தது.அவள் தவிக்கிறது போதாது என்று வருணையும்,விஜயையும் ஒரு வழியாக்கிக் கொண்டிருந்தாள்.விஜய் தினமும் மிருணாளினியிடம் பேசிவிட்டு தான் தூங்கவே போவான் என்பதால் அவனுக்கு மிருணாளினி எவ்வாறு உள்ளாள் சற்று தெரிந்தது தான் ஆனால் அவன் கூறினால் கீர்த்தனா நம்ப மறுத்தாள்,

“நீ சும்மா சொல்லாத விஜய்….அவளை கண்டாலே உனக்கு ஆகாகது….அதான் இப்படி சொல்லுற….”என்று அவனிடம் காய்வாள்.

“அடியே அவனுக்கு தான்டி டெய்லி அப்டெட் தெரியும்….அவன் ஒரு தனி ரூட்டுல போயிட்டு இருக்கான்….உனக்கு தான் புரியலை….”என்று தனக்குள் நொந்து கொண்டான் வருண்.பின்னே விஜயை விட்டால் அவனை தான் ஒருவழியாக்கிக் கொண்டிருந்தாள் அவளின் இம்சைராணி.

இங்கு மிருணாளினிக்கும் பொழுதுகள் சற்று கடினமாகவே சென்றது.டெல்லியில் இருந்து முழுவதுமாக விடுபட தேவையான சில காரியங்களை செய்தவள் தான் தங்கியிருக்கும் வீட்டின் பத்திரம் அவளுக்கு என்று வங்கியில் விஸ்வநாதன் போடும் பணம் என்று அனைத்தையும் ஒன்று திரட்டிவிட்டு அந்த பெரிய மனிதரிடம் பேச முன்பதிவு செய்தும் வைத்துவிட்டாள்.விஸ்வநாதனிடம் பேச வேண்டும் என்றால் முன்பதிவு செய்து வைக்க வேண்டும் அந்தளவிற்கு அவர் பிஸியான பிஸ்னெஸ் மேன்.

இன்று அவரிடம் பேசிபோகிறேன் என்று நேற்று இரவே விஜயிடம் சொல்லிவிட்டாள்.அவன் காலை முதலே இரண்டு நிமிடத்திற்கு ஒரு முறை அழைத்துவிட,இதோ இப்போதும் அவனிடம் தான் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

“விஜய் இப்ப தான பேசுன அதுக்குள்ள என்ன….”என்று இவள் பொரிய அந்த பக்கம் என்ன சொல்லப்பட்டதோ,

“ஓய்….நீ ஆபிஸ்ல தான இருக்க….சும்மா இரண்டு நிமிஷத்துக்கு ஒருமுறை போன் பண்ணிக்கிட்டு இருக்க….போ போய் வேலையை பாரு….நான் அவர் பேசி முடிச்சவுடனே உனக்கு தான் பேசுவேன் ஓகே….”என்று கூற அவனோ,

“நான் லைன்லே இருக்கேன்….நீ பேசு….எனக்கு என்னவோ மனசுக்கு சிலது சரியா படல….”என்று இவன் வாதம் பண்ணிக் கொண்டுருந்தான்.மிருணாளினிக்கு என்ன சொல்லி இவனுக்கு புரிய வைப்பது என்று தெரியவில்லை.

மிருணாளினிக்கும் விஜய் கூறுவது புரிகிறது தான் இருந்தும் அந்த பெரிய மனிதர் பேசினால் தான் சில முடுச்சுகள் அவிழும் அதனாலே இவள் அமைதி காக்க,அவனவனாள் முடியவில்லை என்பது தான் உண்மை.

விஜய் கூறுவது போல் தான் இருந்தது விஸ்வநாதனின் நடவடிக்கையும் ஏனென்றால் அவர் இதுவரை ஹர்ஷா விஷயத்தை பற்றி மிருணாளினியிடம் பேசவில்லை.அவருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் இருந்தும் ஏன் பேசவில்லை என்பது தான் புரியாத புதிராகவே இருந்தது.நண்பர்கள் டெல்லியில் இருந்து போகும் வரை அவரிடம் இருந்து எந்த அலைபேசி அழைப்பும் வரவில்லை.அதேபோல் அவர்கள் சென்ற பின்னும் அவர் அழைக்காமல் இருந்தது வேறு அவளை மேலும் குழப்பமடைய செய்தது.

“ஓய்….ஓய்….மிருணா….ஓய்ய்ய்ய்….”என்று விஜயின் பதட்டமான குரலில் நிகழ்வுக்கு வந்த மிருணாளினி,

“ஆங்….சொல்லு விஜய்….”என்று கேட்க அதே சமயம்,

“ஹாய் விஜய்….எனக்கு இதுல சில டவுட் இருக்கு….”என்று அருகில் யாரோ பேசும் அரவம் கேட்கவும் மிருணாளினி,

“சரி விஜய் நீ பாரு நான் அப்புறம் பேசுறேன்….”என்று அவனின் பதிலை கூட எதிர்பாராது வைத்துவிட்டாள்.

மிருணாளினி வைத்தது கூட தெரியாது இருமுறை “ஹலோ…ஹலோ…”என்று கத்தியவன்,பின் அலைபேசியில் பீப்,பீப் என்ற ஒலியில் தான் அவள் வைத்துவிட்டாள் என்று உணர்ந்து அவனும் வைக்க,

“என்ன விஜய்….கொஞ்சம் டென்ஷனா இருக்குற மாதிரி இருக்கு….ஏதாவது பிரச்சனையா….”என்று கேட்ட படி அவனின் அருகில் அமர்ந்தாள் பூர்ணிமா.

தனது பிறந்தநாள் கொண்டாத்தில் பாதியில் சென்றவன் மீது அளவுகடந்த கோபம் இருந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் கடந்த இரு தினங்களாக அவனிடம் அவளும் பேச்சை வளர்க்க முயறிச்சி செய்கிறாள் ஆனால் அவன் தான் பிடி கொடுக்காமல் சென்றுவிடுவான்.அதே போல் தான் இன்றும்,

“ப்ச் பூர்ணி….எனக்கு கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு…இதை நாளைக்கு பார்த்துக்கலாம்….நீங்க மத்த வேலையை பாருங்க….”என்று விட்டு அவளின் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் எழுந்து சென்றுவிட்டான்.பூர்ணிமாவிற்கு விஜய் தன்னை அவமானபடித்தியதாகவே தோன்றியது.

“என்னை ஒதுக்கிறியா விஜய்…அது நடக்காது…அவ்வளவு சீக்கிரம் நான் உன்னை விடமாட்டேன்….நீ எனக்கு மட்டும் தான்….”என்று மனதிற்குள் கருவிக் கொண்டு எழுந்து தன் இருக்கைக்கு சென்றாள்.

பூர்ணிமாவிடம் சொல்லிவிட்டு கேண்டினிற்கு வந்த விஜய் மீண்டும் மிருணாளினிக்கு அழைக்கும் முன் அவளே அழைத்தாள்.

“ஹலோ…விஜய்….”என்று அவள் மேலும் பேசும் முன்,

“ஓய் என்ன உங்க தாத்தா பேசினாரா….என்ன சொன்னார்…..”என்று இவன் கேள்விகளை அடுக்க தொடங்கினான்.இவன் வரிசையாக கேள்வி கேட்க மறுபக்கம் மவுனம் மட்டுமே பதிலாக வந்தது.

“ஓய்….மிருணா….ஓய்….இருக்கியா….”என்று  விஜய் கத்த,

“ப்பா கொஞ்சம் மூச்சு விடு விஜய்….”என்று அவள் கூற,

“என்ன நிலைமை உனக்கு நக்கலா இருக்காடி….கொன்னுடுவேன் பார்த்துக்க….”என்றவன்,

“சரி அதை விடு….அவர் போன் பண்ணாறா இல்லையா….”என்று கேட்க,

“அதுக்கு தான் பேச வந்தா நீ முதல்ல என்னை பேசவிட்டியா….என்றவள் இன்று மாலை விஸ்வநாதன் தன்னை நேரில் காண வருவதாக கூறினாள்.அவள் கூறியதைக் கேட்ட விஜய்க்கு அவர் ஏதோ திட்டத்தோடு தான் வருவதாக உள் மனது எச்சரிக்கை செய்ய அவன் யோசனையில் ஆழ்ந்த நேரம்,

“விஜய்….ஹலோ….விஜய் இருக்கியா…”என்று மிருணாளினி இரு முறை அழைத்த பிறகு தான் தன் சுயத்திற்கு வந்தவன்,

“ம்ம் சொல்லு…நான் கேட்டுட்டு தான் இருக்கேன்…”என்றான்.மனது முழுவதும் விஸ்வநாதனின் திட்டம் என்னவாக இருக்கக் கூடும் என்று ஒரளவிற்கு கணித்தும் வைத்திருந்தான்.அவன் கணித்தது படி நடந்தால் மிருணாளினி இங்கு வருவது சற்று கடினம் தான் என்று உணர்ந்தும் இருந்தான்.அதனைக் கொண்டு அவன் சில திட்டங்களை தீட்டினான்.

“விஜய் அவர் இங்க வீட்டுக்கு வரேன்னு சொல்லிருக்கார்…எனக்கு என்னமோ அந்த ஹர்ஷா விஷயம் பேச வருவாருனு தான் தோனுது….பார்க்கலாம் என்ன சொல்லுறானு….”என்று மிருணாளினி கூற,விஜய்,

“ம்ம் நானும் அது தான் நினைக்கிறேன் மிருணா….நீ அவர் வந்துட்டு போனதுக்கு அப்புறம் எனக்கு கால் பண்ணு….”என்று கூறி வைத்துவிட்டான்.

அன்று இரவு எப்போதும் போல் தனக்கு பிடித்த இடத்தில் அமர்ந்து இருந்த மிருணாளினியின் கண்களில் கண்ணீர் வழிந்தபடி இருந்தது கைகளோ அலைபேசியில் யாருக்கோ அழைத்தபடி இருந்தது.ஆனால் அவள் அழைக்கும் நபர் தான் அழைப்பை ஏற்காமல் போகவே மேலும் இயலாமையில் இதயம் விம்மி அழுதாள்.அவள் ஒன்று நினைத்திருக்க ஆனால் நடந்து கொண்டிருப்பதோ வேறாக இருக்க அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.தோள்கள் குலுங்கியபடி அழுதுக் கொண்டிருந்தவளின் தோள்களின் மேல் ஒரு கரம் விழ,விளுக்கென்று நிமிர்ந்து பார்க்க அங்கே அவளையே கூர்மையாக பார்த்தபடி நின்றிருந்தான் விஜய்.

Advertisement