Advertisement

காதல் வானவில் 22

தன் நினைவுகளில் இருந்தவள் அதே இடத்தில் உறங்கியும் விட காலை இளம் வெயில் உடலில் பட்டதும் தான் விழிப்பு வந்தது.கால்,கைகளை அசைக்க முடியாமல் சற்று நேரம் சிரமபட்டவள் சற்று நேரம் அவைகளை மடக்கி,தேய்த்து பிறகு ஒருவாராக எழுந்து கீழே சென்றாள்.கதவை திறந்து சுற்றுமுற்றும் பார்த்தவள் யாரும் எழுந்து இருக்கும் அரவம் இல்லை என்றதும் சற்று ஆசுவாசம் ஆக வேகமாக தன் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

அவள் வந்ததில் இருந்து அவளையே பார்த்தபடி சமையல் அறையில் தூணின் பின் நின்ற விஜயை அவள் கவனிக்கவில்லை.மிருணா உள்ளே சென்ற பின் சமையலறையில் இருந்து வெளிவந்தவனும் தூக்கத்தை துளைத்த விழிகளுடன் நின்றிருந்தான்.இரவு முழுவதும் மிருணாளினி பற்றிய நினைவில் இருந்தவனுக்கு தூக்கம் தூரப் போனது.அவனுக்கு தெரியும் இன்றும் தனக்காக அவள் வெளியில் காத்துக் கொண்டிருப்பாள் என்று தெரியும் இருந்தும் வெளியில் செல்லக் கூடாது என்று வீம்பு மனதிற்குள் வந்தது.

“இன்னைக்கு அந்த வெள்ளபன்னி பேசினதுக்கு அவன் மூஞ்சு,முகரை எல்லாம் பேர்த்து எடுத்துருப்பேன் எல்லாம் இவளால என்னையவே அடக்க பார்க்குறா.உனக்கு இருக்குடி….”என்று மனதில் அவளை திட்டியபடி இருந்தவனை,

“நீ ரொம்ப ஒழுங்கு அவளை என்னவெல்லாம் பேசின….எப்படி துடிச்சிருப்பா…அதுக்கே அவ தான் உன்னை வச்சு செய்ய போறா பாரு….”என்று அவனின் மனசாட்சி அவனையே கேள்வி கேட்க சற்று தடுமாறி தான் போனான்.ஒருகட்டத்திற்கு மேல் அவனால் அறையில் இருக்க முடியாமல் வெளியில் வந்து சோபாவில் அமர்ந்தான்.அவளைக் காண மொட்டை மாடிக்கு செல்ல கால்கள் துடித்த போதிலும் வேண்டாம் சென்றால் அவளை பேசியே மேலும் காயப்படுத்திவிடுவோமோ என்ற பயமும் இருக்க சோபாவிலேயே அமர்ந்திருந்தான்.

தண்ணீர் குடிக்க சமையலறை சென்ற போது தான் மிருணாளினி உள்ளே வந்தது.அழுதழுது கண்கள் இரண்டும் சிவந்தும்,வீங்கியும் இருந்தன யாரனேனும் எழுந்துள்ளார்களா என்று பார்த்தவள் வேகமாக தன் அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள்.அவளையே பார்த்துக் கொண்டிருந்த விஜய்க்கு மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

காலை பத்து மணியளவில் மிருணாளினியை தவிர மற்ற மூவரும் கிளம்பி தயாராகியிருந்தனர்.மதியம் பனிரெண்டு மணிக்கு விமானம் என்பதால் இப்போதே கிளம்பினால் தான் சரியாக இருக்கும் என்று மிருணாளினி கூற மற்றவர்களும் கிளம்பினர்.கீர்த்தனாவிற்கு மிருணாளினியை இங்கு தனியே விட மனதே இல்லை இரவு முழுவதும் அவளிடம் கேட்டும் பார்த்துவிட்டாள் ஆனால் அவள் வர மறுக்க இவளால் ஒன்றும் செய்யமுடியவில்லை.அதனால் முகத்தை தூக்கி வைத்தபடி இருந்தாள்.

“ஓய் நான் அடுத்த வாரம் வந்துடுவேன்னு சொல்லுறேன்ல….ஏன் இப்படி மூஞ்சிய வச்சுக்கிட்டு உட்கார்ந்து இருக்க….”என்று மிருணாளினி அவளை திட்ட அவளோ காதில் வாங்காமல் முகத்தை திருப்பிக் கொண்டாள்.அவளின் தோளைத் தட்டி சிரித்துக் கொண்ட மிருணாளினி வருணிடம்,

“வருண் போன உடனே எனக்கு கால் பண்ணுங்க…”என்று கூற அவனும் சரியென்னும் விதமாக தலையசைத்தான்.மறந்தும் மிருணாளினி விஜயின் பக்கம் திரும்பவில்லை.அவனும் இவளை கண்டு கொண்டதாக காட்டிக் கொள்ளவில்லை.இருவருக்கும் இடையே பனிபோர் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.

“திமிர் பிடிச்சவன்…..பேசலைனா போடா….எனக்கு என்ன….நான் இருப்பேன் நீ இல்லாமல் இருப்பேன்……”என்று தனக்குள் கூறிக் கொண்டாள்.அதே சமயம் விஜய்,

“திமிர் பிடிச்சவ….ஊருக்கு கிளம்புறானே….பேசனும்னு தோணுதா….அவ்வளவு கொழுப்பு….போடி….”என்று இவனும் மனதிற்குள் திட்டிக் கொண்டிருக்க,

“கிளம்பலாம் டையம் ஆச்சு….”என்று வருண் கூற,கீர்த்தனா விட்டாள் அழுதுவிடுபவள் போல் முகத்தை வைக்க,

“ஏய் மிருணா தான் ஒன் வீக் முடிஞ்சு வரேன்னு சொல்லிட்டாள்ல அப்புறம் என்ன…அழுகையை நிப்பாட்டு….அவளை கொஞ்சம் புரிஞ்சுக்க முயற்சி பண்ணு….”என்றவன் மிருணாளினியின் புறம் திரும்பி,

“மிருணா…அது….அது….”என்று ஏதோ கூற தயங்க,

“என்ன வருண் சொல்லு….”என்று மிருணா ஊக்க,

“நேத்து ஹோட்டல் நடந்தது உனக்கு உங்க தாத்தா போன் ஏதாவது பண்ணாறா….எனக்கு என்னமோ அவருக்கு இந்த விஷயம் எல்லாம் போயிருக்கும் தான் தோணுது….எதுக்கும் நீ கொஞ்சம் ஜாக்கிரதையா இரு….”என்று அவள் நலனில் அக்கறைக் கொண்டு கூற,

“ம்ம் சரி வருண் நான் பார்த்துக்குறேன்….”என்றவள் மனதிற்குள்ளும் ஆயிரம் ஆயிரம் யோசனைகள் தான் இருந்தும் அதை யாரிடமும் பகிர முடியவில்லை.அவளது மனதின் ரகசியங்களை பகிர்ந்த ஒருவனும் இன்று அந்நியன் போல் ஒதுங்கி நிற்க மீண்டும் தனியானதொரு உணர்வு.முயன்று தன்னை சமன் செய்தவள் அனைவருக்கும் புன்னகையை மட்டுமே பதிலாக தந்தாள்.

விஜய்க்கு வருண் கூறிய பின் தான் விஸ்வநாதன் பற்றிய நினைவே வந்தது அவரை எப்படி மறந்தேன் நான் என்று தனக்குள் கேட்டுக் கொண்டான்.நேற்றைய நிகழ்வு அவன் மனதில் அவ்வளவு பெரிய தாக்கத்தை தந்திருப்பது என்னவோ உண்மை இல்லையேல் இதை எப்படி மறப்பேன் நான்.ஒருவேளை அதனால் தான் மிருணா அமைதியாக நின்றாளோ என்று இப்போது யோசித்தான்.அச்சோ எவ்வளவு பெரிய பிரச்சனையை நான் ஏற்படுத்திவிட்டன் அவளுக்கு என்று மனது முழுவதும் கலக்கம் அப்ப தொடங்கியது.

“டேய் விஜய்….டேய்…..”என்று வருணின் குரலில் தன்னிலைக்கு வந்தவன்,

“ஆங்….என்னடா…”என்று கேட்க,

“வா போலாம்….”என்று அவனின் கையை பிடித்து இழுக்க,அவனோ மிருணாவை தான் தேடினான்.அதை உணர்ந்த வருணும்,

“எல்லாரும் கீழ போயிட்டாங்க….”என்று கூற,மூச்சை இழுத்துவிட்ட விஜய் கீழே செல்ல அங்கு காரின் முன் இருக்கையில் கீர்த்தனா அமர்ந்து இருந்தாள்.

“ஓய் கீதூ…எங்க மிருணா….”என்று கேட்க,

“அவ கார் சாவி மறந்துட்டாளாம் எடுக்க போயிருக்கா…”என்று கூறினாள்.மிருணாளினியிடம் பேச இது தான் வாய்ப்பு என்று உணர்ந்த விஜய் எதை பற்றியும் யோசிக்காமல்,

“டேய் நானும் என்னோட பர்ஸ்ஸ மறந்து வச்சுட்டு வந்துட்டேன்….”என்றுவிட்டு வேகமாக செல்ல வருணுக்கு சிரிப்பாக இருந்தது.

தன் அறையில் காரின் சாவி கிடைக்காமல் போக ஹாலில் உள்ள மேஜையில் சாவியை தேடிக்கொண்டிருந்தவள் பின்னே ஏதோ அரவம் கேட்கவும் திரும்ப தடித்த மார்பின் மீது மோதி நின்றாள்.நிமிராமலே புரிந்தது அது தன்னவன் தான் என்று இருந்தும் அவனிடம் பேசி காயப்பட விரும்பாமல் சாவியை தேட திரும்பும் நேரம் விஜயின் இரும்பு அணைப்பில் இருந்தாள் மிருணாளினி.

காற்றுக் கூட புகாத அளவிற்கு இருந்தது அவனின் அணைப்பு முதலில் திமறிய மிருணாளினி அவனை அடித்து அடித்து ஓய்ந்து போய் அவனையே துவண்டு போய் அணைத்துக் கொண்டாள்.விஜயும் அவள் தன்னை அடித்து ஓயும் வரை அணைப்பை தளர்த்தவில்லை.எப்படியேனும் தன் மீதுள்ள கோபம் போக வேண்டும் என்பதே அவனின் எண்ணம்.அவள் அடித்து துவளவும் அணைப்பை சற்று தளர்த்தியவன்,

“சாரி சாரி டி…நான்….நான்….ச்சு….எல்லாம் என் தப்பு தா ன்….எப்போதும் பொறுமையா இருக்குறவன் நேத்து எப்படி அப்படி மாறினேன்னு எனக்கே தெரியலை…அதிலேயும் அவன் உன்னை கல்யாணம் அது இதுனு சொல்லவும் ரொம்ப கோபம் வந்துடுச்சு…சாரி….சாரிடி பட்டு…ப்ளீஸ்….என்னை பாரேன்….”என்று தன் நெஞ்சில் முகம் புதைந்து இருப்பவளை நிமிர்த்த முயற்சி செய்ய அவளோ மாட்டேன் என்பது போல் அவனின் நெஞ்சில் மேலும் புதைந்தாள்.வலுக்காட்டாயமாக அவள் முகத்தை நிமிர்த்தியவன்,

“ப்ளீஸ் டி….நான் செஞ்சது தப்பு தான்…நான்…அய்யோ…எப்படி எப்படி மறந்தேன் உன் தாத்தாவை பத்தி….”என்று தன்னை தானே திட்டிக் கொண்டிருந்தவனை பார்த்தவளுக்கு பார்க்க பாவமாக இருந்தது.

“ப்ச் விடு விஜய்…நீ தப்பு செய்யல….நீ அடிக்கலானும் நானே அவனை அடிச்சிருப்பேன்….ஆனா எனக்கு என்னவோ அவன் ஏதோ மனசுல வச்சுக்கிட்டு தான் இதெல்லாம் செய்யுறான்னு தோணுது அதனால் தான் அவன் எந்தளவுக்கு போறான்னு பார்க்க தான் அமைதியா இருந்தேன்….”என்று அன்றை நாளிற்கான விளக்கம் கொடுக்க,விஜய்க்கு மேலும் குற்றவுணர்வு அதிகரித்தது.

“சாரிடி……நான் ஏதோ வேகத்தில அப்படி பண்ணிட்டேன்….இப்ப என்ன செய்றது எனக்கே புரியலை…அவன் கண்டிப்பா சும்மா இருக்க மாட்டான்….நான் வேணா உன் கூட இருக்கேன்….”என்று கூற,மிருணாளினிக்கு அதுவரை இருந்த தனிமை உணர்வு நீங்கியது.

“வேணாம் விஜய் நீ இப்ப கிளம்பு….நா நினைக்கிற மாதிரி இருந்தா….அந்த பெரிய மனுஷர் தானாவே எனக்கு கால் பண்ணுவாரு….நான் பார்த்துக்கிறேன்….ஒரு வேளை ரொம்ப பிரச்சனை ஆச்சுனா உனக்கு தான் கூப்பிடுவேன்….அதனால என்னை பத்தி நீ கவலை படாம கிளம்பு….”என்று அவனுக்கு அவள் தைரியம் கூறினாலும் விஜயக்கு மனது ஆறவேயில்லை ஏதோ நடக்க போவதாகவே மனது கூறியது.

போகமுடியாது என்று நின்றவனை ஒருவாறு சாமாதனம் செய்து கிளப்ப செய்தாள் மிருணாளினி.கிளம்பும் முன் தினமும் என்னிடம் பேச வேண்டும் என்றும் மேலும் சில நிபந்தனைகள் விதித்துவிட்டு தான் கிளம்பினான் விஜய்.வீட்டைவிட்டு வெளியில் வரும் முன் மீண்டும் அவளை இறுகி அணைத்தவன் அவளின் முன் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டு,

“தினமும் பேசனும்…எதுவா இருந்தாலும் எனக்கு சொல்லனும்….ஓகே வா…”என்று அவளிடம் கூறிவிட்டு தான் இருவரும் கீழே இறங்கினர்.

மிருணாளினியும்,விஜயும் வார்த்தைகளால் வடிக்க முடியாத காதலை தங்களின் நுண்ணிய உணர்வுகளை வெளிபடுத்தி கூறிக் கொண்டனர்.காதல் என்னும் வானவில் இவர்களின் வாழ்வில் பல வண்ணங்களை சேர்க்கும் என்ற நம்பிக்கையில் இந்த இரண்டு உள்ளங்கள் இருக்க,வானவில் வருவது அவ்வளவு சுலபம் இல்லையே அதற்கு முன் பல இன்னல்களை இவர்கள் சமாளிக்க நேரிடும் அவற்றை எல்லாம் இவர்கள் சமாளிக்க வேண்டும்.

Advertisement