Advertisement

காதல் வானவில் 21

கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தபடி தன் எதிர் பக்க அறையை பார்த்தபடி நின்றாள் மிருணாளினி.மனது வெதும்பி துடித்தது ஏன் எனக்கு மட்டும் ஏன் இவ்வாறு நடக்கிறது என்று ஊமையாக அழுதாள் அந்த மாது.சிறிது நேரம் நின்று பார்த்தாள் கதவு திறப்பதர்க்கான அறிகுறி இல்லை என்பது புரிந்து போக வேகமாக தன் விருப்பமான இடத்திற்கு சென்றுவிட்டாள்.

சிறு வயதில் இருந்து பழகிய தனிமை தான் ஆனால் இன்று அந்த தனிமையை மிகவும் வெறுத்தாள்.கடந்த சில தினங்களாக தன்னுடன் இணைந்திருந்த மற்றொரு நெஞ்சத்தை மனது தன் போல் தேடியது.அவன் வரமாட்டான் என்று புத்தி எடுத்துரைத்த போதும் மனது வந்துவிட மாட்டானா என்று தான் எங்கியது.என்னவெல்லாம் பேசிவிட்டான் எப்படி அவனால் பேச முடிந்தது என்று தனக்குள் கேட்டுக் கொண்டவளுக்கு மனதில் ரணம் போல வலி எழும்ப செய்தது.நினைக்காதே மனமே என்று மனதிற்கு கடிவாளமிட்டாளும் அதையும் மீறி மனது கடந்து வந்த நிமிடங்களுக்கே சென்றது.

எத்தனை அழகாக இருந்தது இன்றைய காலை பொழுது.வெகு நாட்களுக்கு பிறகு தன் பிறந்தநாளை கொண்டாடினாள்.அதுவும் தன் மனம் கவர்ந்தவனின் பரிசு அவளை மேலும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது என்று தான் கூற வேண்டும்.தன் மனிதல் நினைப்பது போல் தான் விஜயும் நினைக்கிறான் என்று அவனது செய்கையில் அவன் உணர்த்தியிருக்க இத்தனை நாள் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் காணாமல் போனது போல் ஒரு பிரம்மை.

அனைத்தும் நல்ல விதமாகவே சென்றது ஹர்ஷவரதன் வருகைக்கு முன்பு வரை.வெகு நாட்களுக்கு பிறகு தன் வாழ்க்கையில் நிறைந்த வண்ணமயமான நினைவுகளுடன் இருந்தவளை மீண்டும் கார் இருளுக்குள் தள்ளியது போல் ஆனது ஹர்ஷாவின் வருகை.தன்னை மறந்து இருப்பான் என்று அவள் நினைத்திருக்க அவனோ தன்னை மனைவி என்று கூற மிருணாவிற்கு சர்வமும் அடங்கியது என்று தான் கூற வேண்டும்.

இத்தனை நாட்களாக யாருக்கும் தெரியாமல் தொல்லை செய்தவன் இன்று ஒரு பொது இடத்தில் அனைவரும் முன்னும் தன்னை வருங்கால மனைவி என்பது போல் பேசியது மனதில் பெரும் பதட்டத்தை விளைவித்தது என்வோ உண்மை தான்.ஏதோ திட்டத்துடன் தான் இவ்வாறு செய்கிறான் என்பது நன்கு புரிந்து போனது.ஆனால் ஏன் என்று தான் புரியவில்லை.எதற்காக என்னைவிடமால் துறத்துகிறான் என்ன காரணமாக இருக்கும் என்று தான் புரியவில்லை.

மிருணாளினிக்கு ஹர்ஷாவின் குடும்பம் விஸ்வநாதனின் குடும்பத்துடன் நட்பு என்ற வகையில் தெரியுமே தவிர அது எந்தளவிற்கு என்று எல்லாம் தெரியாது.முதலில் எல்லாம் அவனின் நடவடிக்கையை வைத்து அவன் யாரோ ஒருவருக்கு பயப்படுகிறான் அதனால் தான் வெளியில் காட்டிக் கொள்ளாமல் இருக்கிறான் என்று புரிந்து வைத்திருந்தாள்.ஆனால் இப்போது அவனின் அத்துமீறும் நடவடிக்கைகளை பார்த்தபிறகு அவனின் பின் யாரோ இருக்கிறார்கள் என்பது புரிந்து போனது.

மிருணாளினிக்கு தெரிந்த விடயங்கள் யாவும் விஜய்க்கு தெரியாதே.அவனோ ஹர்ஷாவின் உரிமையான பேச்சில் வெகுண்டுவிட்டான்.இருவரும் கைகளைப்பு அதிகமாவதை உணர்ந்த மிருணாளினி விஜயின் கையை பிடித்து இழுத்து,

“போதும் விஜய்…இப்ப வரப் போறீங்களா இல்லையா….”என்று கேட்டுக் கொண்டே இழுக்க,அவனோ அவளை வேகமாக உதறியவன்,

“என்னை ஏன் இழுக்குற….அவன் ஓவரா பேசுறான் நீ என்னை ஏன் கண்ட்ரோல் பண்ணுற…”என்று உறும,மிருணாளினிக்கு எதையும் இப்போது அவனிடம் விளக்கமாக கூற முடியாமல் தடுமாற,அவளது தடுமாற்றத்தை கண்ட விஜய்க்கோ கோபம் தலைக்குமேல் ஏறியது,

“ஓ மேடமுக்கு இதெல்லாம் முன்னாடியே தெரியுமா…அதான் என்னை கிளப்ப பார்க்குற அதான….சொல்லு….”என்று மிருணாளினியின் கைகளை பிடித்து இழுத்து கேட்க,மிருணாளினிக்கு கைகள் இரண்டும் துண்டாவதை போல் இருந்தது விஜயின் இரும்பு பிடியில்.

“டேய் எவ்வளவு தைரியம் இருந்தா என் முன்னாடியே அவ கையை பிடிப்ப…”என்று கேட்டுக் கொண்டே மீண்டும் விஜயை அடிக்க பாய்ந்தான் ஹர்ஷவர்தன்.

“சார் சார் ப்ளீஸ்….உங்க அப்பாக்கு தெரிஞ்சா பிரச்சனை ஆகிடும்…ப்ளீஸ்….”என்று அந்த ஹோட்டல் மேளாலர் கூற ஹர்ஷாவின் கோபம் சற்று மட்டுப்பட்டது தந்தையின் பெயரைக் கேட்டவுடன்.ஆனால் இங்கு நடக்கும் எதையுமே காதில் வாங்காத விஜய் மிருணாளினியின் கையை பிடித்தபடி அவளை உலுக்கி வார்த்தைகளால் அவளைக் கொன்று கொண்டிருந்தான்,

“எப்போதும் ஓயாம பேசுறவ இன்னைக்கு என்ன எதுவும் பேசமாட்டேங்குற ஆங்…கேக்குறேன்ல சொல்லுடி….எல்லாம் தெரிஞ்சு தான் என் கூட….”என்று அவன் முடிக்கும் முன்,

“போதும் விஐய் நிறுத்து….ரொம்ப பேசிட்ட….”என்று கத்தினாள் மிருணாளினி.கீர்த்தனாவிற்கு அங்கு நடப்பது எதுவும் புரியவில்லை.எப்போதும் சிரித்த முகத்துடன் வளைய வரும் தன் நண்பனின் முகத்தில் இத்தனை கடிமையை கண்டவளுக்கு அவனிடம் பேசவே நா எழவில்லை.வருணுக்கு இப்போது விஜயின் மனநிலை தெளிவாக புரிந்து போனது.தன் நண்பன் காதலில் விழுந்துவிட்டான்.அதன் வெளிபாடு தான் இந்த உரிமை,கோபம் எல்லாம் என்று நன்கு புரிந்தது.

தன் பேச்சை ஒருமுறையேனும் கேட்காமல் இப்படி கத்துபவனிடம் பேசுவதே வீண் என்று உணர்ந்த மிருணாளினி விஜயின் கைகளை உதறிவிட்டு வேகமாக வெளியில் சென்றுவிட்டாள்.அதுவரை அதிர்வில் இருந்த கீர்த்தனாவை வருண் ஒரு இடி இடித்து,

“கீதூ….போ….”என்று கூற,அவளோ,

“ஆங்….”என்று கேட்டுவிட்டு திருதிருவென முழிக்க,

“அடியேய்…போ மிருணா அழுதுகிட்டு போறா….பாரு….போ…”என்று கூற,கீர்த்தனா மிருணாளினியின் பின்னே சென்றாள்.

அதீதகோபத்தில் நின்று கொண்டிருந்தான் விஜய்.அவனது மனதில் நேற்று வரை இருந்த இதமான மனநிலை இப்போது சிறிதும் இல்லை.மனம் எங்கும் கோபம்,கோபம்,கோபம் மட்டுமே.தன் முன்னே தன்னவளை வேறொருவன் உரிமை கோர அவனால் தன்னை கட்டுப்படுத்த முடியவில்லை.அதனால் தான் அவனையும் மீறி கையை ஓங்கி விட்டான்.ஆனால் ஹர்ஷா பேசியதற்கு மிருணாளினி எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதியாக நின்றது அவனுக்கு மேலும் கோபத்தை தூண்டியது என்றால் அதில் அவனையே அமைதியாக வரும்படி அழைத்தது மேலும் எரிகின்ற நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போல் ஆனது.

விஜய்க்கு தான் மிருணாளினியிடம் என்ன பேசினோம் என்பது எல்லாம் நினைவில்லை அவனுக்கு தெரிய வேண்டியது ஒன்று தான் ஹர்ஷவரதன் கூறுவது அவளுக்கு தெரியுமா இல்லையா என்பதில் தான் இருந்தது.அவளை வார்த்தைகளால் தான் வதைத்துவிட்டோம் என்பதைவிட அவள் கடைசி வரை தனக்கு பதில் தராமல் சென்றது ஆத்திரத்தை கிளப்பியது.

“ச்சை….ம்ம் ஆஆஆஆ…”என்று தன் கால்களை உதைத்துவிட்டு கத்த.அவனின் மேல் விழுந்தது வருணின் கரம்,

“மச்சி….போதும் வா போகலாம்….ரொம்ப டென்ஷன் ஆகாத…வா போகலாம்….”என்று கூற,

“ப்ச்…விடுடா நான் வரலை நீங்க போங்க….”என்று கடுகடுவென்று கூற,வருண் பலவாறு கூப்பிட்டும் விஜய் வர மறுக்க அவன் மிருணாளினிக்கு அழைத்துவிட்டான்.

விஜய் தன்னை எவ்வாறு கேட்கலாம் என்று மனது வெதும்பி அவனை தள்ளிவிட்டு வந்தவள் நேரே தன் காரில் ஏறி அமர்ந்து கொண்டு ஸ்டெயிரிங்கில் தலையை சாய்த்து கண்களை மூடிவிட்டாள்.அவளையும் மீறி கண்களில் கசிந்து கொண்டிருந்தது.மனது முழுக்க வெறுமை சூழ்ந்து கொண்டது.எவ்வளவு ஆசையாக வந்தாள் இன்று தன் காதலை விஜயிடம் கூறலாம் என்று ஆனால் நடந்து கொண்டிருப்பது எதுவும் மனதிற்கு சரியாக படவில்லை.

வருண் கூறியபடி மிருணாளினியிடம் வந்த கீர்த்தனா அழைக்க அவளோ எழவேயில்லை அழுகையில் உடல் மட்டும் குலுங்குவது தெரிந்தது.அப்போது தான் மிருணாவின் அலைபேசி ஒலி எழுப்பியது அவளோ அதை எடுக்கும் எண்ணமில்லாமல் இருப்பது போல் அமர்ந்திருக்க கீர்த்தனா தான் யார் அழைக்கிறது என்று பார்க்க வருண் தான் அழைத்திருந்தான்,

“ஹலோ,சொல்லு வரு….”என்று கூற அந்த பக்கம் என்ன கூறப்பட்டதோ,

“என்ன?????”என்று இவள் சற்று பதட்டமாக கேட்க,மிருணாளினி கீர்த்தனாவிடம் இருந்து கைபேசியை பிடுங்கியிருந்தாள்.அவள் கீர்த்தனாவின் வரு என்ற அழைப்பிலேயே வருண் தான் பேசுகிறான் என்று புரிந்து கொண்டவள் மீண்டும் அங்கு ஏதும் பிரச்சனையோ என்று பயந்து தான் பிடுங்கினாள்.

“ஹலோ….வருண்….நான் மிருணா பேசுறேன்….”என்று அவள் அழுகையுடனே கூற,

“மிருணா…நீ கொஞ்சம் இங்க வா மிருணா…இவன் மலையிறங்க மாட்டேங்குறான்….”என்று கூற,மிருணாவிற்கு பதட்டம் கூடிக் கொண்டது வேகமாக காரை விட்டு இறங்கியவள் விஜய் இருக்கும் இடம் நோக்கி ஓட அங்கு விஜயும்,ஹர்ஷாவும் ஒருவரின்,சட்டையை ஒருவர் பற்றிய படி இருந்தனர்.வருண் ஒரு பக்கம் விஜயை பிடித்து இழுத்தபடி இருக்க,ஹோட்டலின் மேலாளர் ஹர்ஷாவை பிடித்து இழுத்தபடி இருந்தனர்.

“அய்யோ கடவுளே….”என்று தன் தலையில் அடித்துக் கொண்டவள் வேகமாக அவர்களை நோக்கி ஓடினாள்.

“விஜய் விடு…விடுன்னு சொல்லுறேன்ல…”என்று அவனை வலுக்கட்டாயமாக இழுத்தவள்,ஹர்ஷாவிடம் அதே கோபத்துடன் திரும்பி,

“ஸ்டாப் பிட் ஹர்ஷா….நீ ரொம்ப ஓவரா போற….இது தான் உனக்கு லாஸ்ட் வார்னிங்….இதுக்கு மேல என்னை தொந்தரவு செஞ்ச நான் சும்மா இருக்கமாட்டேன்…..”என்று அவனையும் எச்சரித்தவள்,அவன் பதில் பேசும் முன் விஜயின் கையை பிடித்து தரதரவென்று இழுத்து வந்தாள்.வரும் வழியெல்லாம் விஜயை வார்த்தைகால் வருத்தபடி தான் வந்தாள் மிருணா,

“உனக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லை விஜய்….அவன் இங்க பெரிய ஆள் அவன் நினைச்சா என்னவேனா செய்யலாம்….இடியட்….இடியட்…..”என்று அவனை இழுத்து வந்து காரில் ஏற்றினாள்.அவர்களின் பின்னே வருணும் ஏறி கொள்ள,காரை எவ்வளவு வேகம் செலுத்த முடியுமோ அவ்வளவு வேகம் செலுத்தி தன் வீட்டை அடைந்தாள்.

நால்வரும் வீட்டை அடைந்தவுடன் விஜய் வேகமாக சென்று ரூமில் தன்னை அடைத்துக் கொண்டவன் தான் அதன் பிறகு சாப்பிடுவதற்கு வருண் வற்புற்தி அழைக்கவும் வெளியில் வந்தவன் நாளை காலை மூவரும் சென்னை கிளம்ப வேண்டும் என்று தகவலாக கூறிவிட்டு சென்றுவிட்டான்.கீர்த்தனா ஏதோ கேட்க வர அவளை பார்வையாலே அடக்கிவிட்டு சென்றுவிட்டான்.

மிருணாளினிக்கு விஜய் தன்னை புறக்கணிக்கிறான் என்று நன்கு புரிந்தது.அவளுக்கும் அவன் மீது கோபம் அதிகமாக இருந்தது அதனால் அவள் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தாள்.அன்று இரவு எப்போதும் போல் மொட்டை மாடிக்கு செல்ல வெளியில் வந்து விஜய் வருவான இரண்டு நிமிடம் நின்றவள் அவன் வரப்போவதில்லை என்பதை உணர்ந்தவள் மேலே சென்றுவிட்டாள்.

Advertisement