Advertisement

காதல் வானவில் 20

“ஹாப்பி பர்த் டே….”என்று விஜய் கூறிவிட்டு அவளின் கண் கட்டுகளை அவிழ்க்க சொன்னான்.

மிருணாளினி கண்களில் கட்டை அவிழ்த்து பார்க்க அவளது கைகளில் அழகாக மின்னியது விஜய் அணிவித்த பிரேஸ்லெட்.அதையே கண்கள் விரிய பார்த்துக் கொண்டிருந்தவள்,

“விஜய்…இது…இது….”என்று தடுமாற்றமாக கேட்க,

“ம்ம்….மேடம் இன்னைக்கு கடையில பார்த்தது தான்….”என்று அசராமல் கூறினான்.அவன் முகத்தை பார்த்தவள்,

“உங்களுக்கு எப்படி தெரியும்….”என்று கேட்க,அவனோ,

“தெரியும்….விடு…பிடிச்சிருக்கா….”என்று ஆசையாக கேட்க,

“நீ முதல்ல சொல்லு உனக்கு எப்படி தெரியும்…நீ கீர்த்தியோட தான பார்த்துக்கிட்டு நின்ன….”என்று விடாமல் கேட்க,

“ஏன் கீர்த்திக்கு பார்த்தா உன்னை நான் பார்க்கமாட்டேனா…”என்றவன்

“நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லல…கிப்ட் பிடிச்சிருக்கானு கேட்டேன்…”என்று மீண்டும் கேட்க,

“ம்ம்….ரொம்ப பிடிச்சிருக்கு….”என்றவள் அவனை கட்டிக் கொண்டாள்.

இன்று கீர்த்தியின் நிச்சியதார்த்ததிற்கு ஏதாவது வாங்க வேண்டும் என்று மிருணாளினி நகை கடைக்கு அழைத்து சென்றிருந்தாள்.கடையில் கீர்த்தனாவிடம் அவளுக்கு என்ன பிடிக்கிறதோ அதை எடுக்க சொன்னாள்.அவளோ தயங்க மிருணாளினி,

“ஏய் எதுக்கு இப்படி முழிக்கிற….உனக்கு என்ன வாங்கலாம்னு தோணுதோ அதையே வாங்கலாம்….”என்று கூற கீர்த்தனாவோ வருணின் முகத்தை தான் பார்த்தாள்.அதை கவனித்த மிருணா,

“ஓ….மேடம் இப்பவே சார் சொன்னாதான் வாங்குவியா….”என்று கிண்டல் பண்ண,

“ஓய் அதெல்லாம் இல்லை….அது சும்மா நான் பார்த்தேன்….”என்று தடுமாற்றமாக கூற,மிருணாளினியும்,விஜயும் சிரித்துவிட்டனர்.

“ஏய் என்ன கிண்டலா….போங்க நான் கோபமா இருக்கேன்….”என்று முறுக்கிக் கொள்ள,

“அச்சோ….சாரி கல்யாண பொண்ணே…..சாரி…”என்று மிருணாளினி கிண்டலாக கெஞ்ச என்றும் இல்லாத திருநாளாக கீர்த்தனாவிற்கு வெட்கம் வந்தது.வருணோ தன்னவளின் வெட்கம் கொண்ட சிவந்த முகத்தினை ரசித்தவாறே,

“அச்சோ…என் கீதூமா வெட்க்கப்பட்டுட்டா…அதுக்கே நான் ஏதாவது வாங்கி போடனும்….”என்று கூற கீர்த்தனா தாங்க முடியாமல்,

“விஜி…இங்க பாரு இரண்டு பேரும் என்னை ரொம்ப ஓட்டுறாங்க…”என்று எப்போதும் போல் விஜயிடம் முறையிட அவனோ சிரிப்பை விழுங்கியபடி நின்றிருந்தான்.பின் கீர்த்தனாவிற்கு வளையல் வாங்கலாம் என்று முடிவு செய்து டிசைன்கள் பார்த்துக் கொண்டிருக்க,அப்போது மிருணாளினி கடையை பொதுவாக நோட்டம் விட அப்போது அவளின் கண்களில் விழுந்தது அந்த பிரேஸ்லெட்.

சிறிய சிறய இதயங்களால் கோர்க்கப்பட்டு நடுவில் ஒரு பெரிய இதயத்தின் நடுவில் ஒரு ஆணும்,பெண்ணும் இருப்பது போல் இருந்ததது.அதனை ரசனையுடன் பார்த்தக் கொண்டிருந்தவளை கலைத்தது கீர்த்தனாவின் குரல்,

“ஏய் மிருணா…இது நல்ல இருக்கா…”என்று கேட்க,

“ஆங்…இதோ வரேன்….”என்று இதை விட்டுவிட்டு அவளிடமே சென்றுவிட்டாள்.வருணும்,விஜயும் கீர்த்தனாவுடன் தான் நின்றிருந்தனர் அதனால் அவர்கள் தன்னை கவனிக்கவில்லை என்று நினைத்திருக்க,விஜய் மிருணா கடையை கவனிக்க நகர்ந்தவுடன் அவளை ஒரு கண் வைத்திருந்தான்.அப்போது அவள் அந்த பிரேஸ்லெட்டை ஆசையாக பார்த்தது அனைத்தையும் பார்த்துவிட்டான்.அதனால் யாருக்கும தெரியாமல் அவன் மட்டும் கடைக்கு சென்று வாங்கி வந்துவிட்டான்.

காற்று கூட புகாத அளவுக்கு இறுக்கமாக அணைத்திருந்தாள் மிருணாளினி.விஜய்க்கு தான் அவளின் அணைப்பு சற்று மன சஞ்சலத்தை ஏற்படுத்தியது.முதல் முறை ஒரு பெண்ணின் அணைப்பில் தன்னை தொலைத்து நின்றிருந்தான்.சில நொடிகளில் தன் இயல்பிற்கு வந்த மிருணா விஜயின் அணைப்பில் இருந்த விடுபட முயல அவளால் நகரக் கூட முடியவில்லை.எப்போது அணைப்பு அவன் பக்கம் மாறியது என்று இருவரும் அறியார்.இப்போது மிருணாவிற்கு உடல் கூச,

“விஜய்…விஜய்…”என்று மெதுவாக அழைக்க அவனும் தன் நிலையடைந்தவன் வேகமாக அணைப்பில் இருந்து வெளிவந்தான்.சிறிது நேரம் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை.

மிருணாவிற்கு மனதில் உள்ளதை சொல்ல ஆயிரம் ஆயிரம் ஆசைகள் இருந்தாலும் ஏதோ ஒன்று அவளை தடுத்தது.விஜய்க்கு அவளிடம் வார்த்தைகளால் கூற முடியாமல் தான் தன் சிறு செயலால் உணர்த்த முயல்கிறான் ஆனால் அது அவளுக்கு புரிந்ததா என்பது தான் கேள்வி.

மறுநாள் மிருணாளினியின் பிறந்தநாளை அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாடினர்.நாளை மூவரும் மீண்டும் சென்னை திரும்பும் நாள் அதனால் இன்று எங்கு செல்லலாம் என்று பேசிக் கொண்டிருக்க,அப்போது வருண்,

“மிருணா எல்லா இடமும் போயாச்சு பப் மட்டும் தான் இன்னும் போகல…”என்று வருத்தம் போல கூற,

“உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா…என் முன்னாடியே பப்க்கு போகலனு சொல்லுவ….உன்னை….”என்று அடிக்க,வருணோ,

“ஏய் நான் சும்மா அங்க என்ன தான் இருக்குனு பார்க்கலாம்னு தான் சொன்னேன்…ராட்ச்சசி வலிக்குது விடுடி….”என்று சத்தம் போட,

“டேய் நீ கேக்குறதா பார்த்தா…அப்படி தெரியலையே மச்சி…உன் மனசுக்குள்ள இருந்த பல நாள் ஆசை போல இருக்கு….கீதூ நீ எதுக்கும் கொஞ்சம் யோசி…..”என்று அவளையும் உசுப்பி விட,கீர்த்தனாவோ வருணை மொத்து மொத்து என்று மொத்த தொடங்கினாள்.

“அச்சோ….விடு கீதூ…எதுக்கு இப்படி கோபப்படுற….வருண் சாதாரணமா தான் கேட்டார்….நாம வருண் கேட்ட மாதிரியே பப்க்கு போகலாம்….”என்று கூற,

“மிருணா நீயுமா…”என்று கீர்த்தனா கோபமாக கேட்க,விஜயோ அவளை தன்னால் முடிந்த மட்டும் முறைத்து தன் பிடித்தமின்மை தெரிவித்தான்.அதை உணர்ந்த மிருணாளினி,

“ஓய்…..ஹலோ….நீங்க நினைக்கிற மாதிரி பப் கிடையாது….அதெல்லாம் நைட் மட்டும் தான் இங்க செயல்படும்…அதுமட்டுமில்லாம அதுக்கு கிளப் கார்ட் இல்லாம உள்ள அனுமதிக்க மாட்டாங்க…நான் சொல்லறது குடும்பமா போறது…அதனால பயப்பட வேண்டாம்…..”என்று ஒரு உயர் தர ஹோட்டலுக்கு அழைத்து சென்றாள்.அந்த பாட்டீ ஹாலே மிதமான வெளிச்சத்தில் தான் இருந்தது.இவர்களுக்கான டெபிளில் புக் செய்து கொண்டு அமர்ந்தனர்.அங்கு உணவு பப்பே முறைதான் என்பதால் அவரவர் அவருகளுக்கு பிடித்த உணவை எடுத்துக் கொண்டு மீண்டும் தங்களின் டேபிளில் அமர்ந்து உண்டனர்.இன்று மிருணாளினியின் பிறந்தநாள் என்பதால் அவள் அனைவருக்கும் நான் டீரிட் என்று சொல்லிவிட்டாள்.

நண்பர்கள் அனைவரும் சலசலத்தபடி உண்டு முடிக்க கீர்த்தனா,

“ஏய் மிருணா…எனக்கு ஐஸ்கீரிம் வேணும் எங்கடி இருக்கு….”என்று கேட்க,அவளும் மிருணாவும் ஐஸ்கீரிம் எடுக்க சென்றனர்.கீர்த்தனா முதலில் தனக்கு பிடித்ததை எடுத்துக் கொண்டு சென்றுவிட,மிருணா தனக்கான பிளேவரை தேர்வு செய்து கொண்டிருந்தாள்.

“ஹாப்பி பர்த் டே….மை டியர் மிருணீ…”என்று அவளின் மிக அருகில் ஒரு ஆண் குரல் கேட்கவும் நிமிர்ந்து பார்க்க,அங்கு முகம் கொள்ள புன்னகையுடன் அவளையே விழுங்கு பார்வை பார்த்தபடி நின்றிருந்தான் ஹர்ஷா.

மிருணாளினிக்கு முதலில் தன் முன்னாள் நிற்பவனை அடையாளம் தெரியவில்லை.அவள் கல்லூரி முதல் வருடத்தில் ஹர்ஷாவைக் கண்டது.அப்போது ஆறடி சாக்லேட் பாயாக இருந்தவன்.இப்போது நன்கு வளர்ந்து அம்சமாக ஆண்மகனாக இருந்தான்.முதலில் கண்களை சுருக்கி யார் என்று யோசித்தவள் முன் சொடுக்கிட்ட ஹர்ஷா,

“ஓய் என்ன இப்படி பார்க்குற…பப்பிளிக் பிளேஸ்ல இப்படி பார்க்காத மிருணீ பேபி…அப்புறம் நான் ஏதாவது ஏடாகூடமா பண்ணிடுவேன்….”என்று விஷமமாக கூற,அவனின் மிருணீ பேபி என்ற அழைப்பில் தான் அவன் ஹர்ஷவர்தன் என்பது புரிந்தது மிருணாளினிக்கு.

“என்ன பேப்…இன்னும் அப்படியே பார்க்குற…”என்று கேட்டப்படி அவன் அவளை அணைக்க வர,அவளை பின்னோக்கி இழுத்தது ஒரு கரம்.இழுக்கப்பட்ட வேகத்தில் அவனின் மார்பில் மோதி நின்றாள் பெண்.அவளது காதுகளில் அன்று கேட்ட அவனின் இதயத்தின் ஓசை மீண்டும் கேட்டவாறே தன் முகத்தை நிமிர்ந்து பார்க்க அவனோ எதிரில் இருந்தவனை பார்வையாலே எரித்துக் கொண்டிருந்தான்.

தன்னை முறைத்துக் கொண்டிருப்பவனை ஒருமுறை ஏற இறங்க பார்த்த ஹர்ஷா,

“என்ன மேன் ஹீரோயிசமா….இதெல்லாம் பார்த்து பார்த்து போர் அடிச்சு போச்சு மேன்….நீ வேற ஏதாவது டிரை பண்ணு…”என்று நக்கலாக கூற,மிருணாளினிக்கு மனதிற்குள் அலாரம் அடித்தது போல் இருந்தது.இவ்வளவு நாட்கள் தொல்லை செய்யாமல் இருந்தவன் இப்போது பொது இடத்தில் எந்தவித பயமும் இல்லாமல் செய்கிறான் என்றால் ஏதோ இருப்பதாக மனதிற்கு பட்டது.

மிருணாளினி நினைப்பது சரியே என்பது போல் தான் இருந்தது அவனின் அடுத்தடுத்த நடவடிக்கைகளும்,

“கொஞ்சம் தள்ளு நான் என் பினான்ஸிக்கிட்ட பேசனும்…”என்று கூறிக்கொண்டே மிருணாவின் கையை பிடிக்கவர,ஒரு கையால் மிருணாவின் கையை பிடித்து தன் பக்கம் இழுத்த விஜயின் மற்றொரு கை ஹர்ஷாவின் மூக்கை பதம் பார்த்திருந்தது.விஜய் தன்னை அடிப்பான் என்று எதிர்பார்க்காதவன் எதிரில் இருந்த மேஜையின் மீது நெற்றி மோதி கீழே விழுந்தான்.

“அச்சோ விஜய் என்னதிது…ஏன் இப்படி பண்ணீங்க…”என்று மிருணா பதட்டமாக,

“டேய் என்னடா இது….”

“விஜி பயமாயிருக்கு விஜி….”என்று கீர்த்தி அழும் குரலும்,வருணின் பதட்டக்குரலும் அவன் அருகில் கேட்ட போதும் அவன் திரும்பவில்லை.அவனுக்கு தன் முன்னால் மிருணாவின் கையை வேறொருவன் தொடுவதா என்று மனதில் அளவு கடந்த ஆத்திரம்.இவர்களின் சண்டையைக் கண்ட ஹோட்டல் மேலாளர் விரைந்து வர,அதற்குள் நெற்றியில் குருதி வழிய எழுந்த ஹர்ஷா,

“ஏய் என் மேலேயே கை வைக்குறியா….உன்னை…”என்று விஜயின் சட்டையை பிடிக்கவர அவனின் கையை பிடித்து தடுத்தவன்,

“என்ன மேன் ஹீரோயிசமா….போ போ பார்த்து ரொம்ப போர்டிச்சு போச்சு….”என்று அவனை விட எள்ளலாக கூற,ஹர்ஷாவின் கோபம் எல்லைக் கடந்தது.

“ஏய் என்ன ஆள் வச்சு அடிக்கிறியா…உனக்கு இருக்குடி….என்னைக்கா இருந்தாலும் நீ என்கிட்ட தான் வந்தாகனும்….”என்று ஆணவமாக பேச,விஜய்க்கு ஆத்திரம் எல்லையை கடந்து கொண்டிருந்தது என்பது அவனின் இறுகிய பிடியிலேயே தெரிந்தது மிருணாளினிக்கு எங்கே இருவருக்கும் கை கலப்பு அதிகமாகிடுமோ என்று பயந்தவள்,

“விஜய் வேணாம் வா…போகலாம்….”என்று அவனை பிடித்து இழுக்க,அவளை தீர்க்கமாக முறைத்தவன் கண்களில் தீப்பொறி பறந்தது.

“டேய் பிரச்சனை வேண்டாம் வா டா…”என்று வருண் ஒருபுறம் அவனை இழுக்க,கீர்த்தனாவோ விஜயின் இந்த புதிய பரிமாணத்தில் நடுங்கியவாறே நின்றுவிட்டாள்.அதற்குள் அவர்களின் அருகே நெருங்கியிருந்த ஹோட்டல் மேலாளர்,

“சார் நீங்களா…”என்று ஹர்ஷாவை அடையாலம் கண்டு அருகில் வர,அவரை ஓங்கி அறைந்தவன்,

“என்ன மேன் ஹோட்டல் நடத்துர…இப்படி தான் ரௌடி பயலுக்கெல்லாம் உள்ள அனுமதி கொடுப்பியா….நான் நினைச்சா இந்த ஹோட்டலே இல்லாம பண்ணிடுவேன் ஜாக்கிரதை…”என்று தன் பல்லிடுக்கில் வார்த்தைகளை கடித்து துப்பினான்.அவன் பெரிய தொழில் துறை வாரிசு என்று நகரில் பல பேருக்கு தெரியும் அப்படி இருக்க தன்னை ஒருவன் அடித்துவிட்டு செல்லவதா அதோடு மிருணாவின் அவன் காட்டும் அதிகபடியான நெருக்கம் அவளும் அவனுடன் இணங்கி நிற்பதைக் கண்டவனுக்கு மனதில் வன்ம தீ பற்றி ஏறிந்தது.

வாழ்க்கையில் தோல்வி என்பதை கண்டிராத ஹர்ஷா மிருணாளினி விஷயத்திலும் தோற்றுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.அனைத்திலும் வெற்றி என்னும் மமதையில் இருப்பவனுக்கு எப்படியேனும் மிருணாளினி விஷயத்திலும் ஜெயிக்க வேண்டும் என்ற வெறியே உருவானது.ஆனால் அவன் ஒன்றை மறந்தான் கடையில் பொருளை வாங்குவதை போல் அன்பையும்,காதலையும் வாங்க முடியாது.

Advertisement