Advertisement

காதல் வானவில் 2

கோவையில் ஒரு புகழ்பெற்ற கல்லூரியில்,

புதிய வருட மாணவர்கள் சேர்க்கை முடிந்து கல்லூரி தொடங்கி  ஒரு செமஸ்டர் முடிந்திருந்தது.

“டேய் விஜய்…உன்னை நம்ம டிபார்மென்ட் ஹச்.சோ.டி கூப்பிடுறாரு போ…”என்று கேண்டினில் நண்பர்கள் பட்டளாத்துடன் அமர்ந்திருந்த விஜயிடம் கூறினான் வருண்.

“எதுக்கு மாப்பிள….அவரு கூப்பிடுறாரு….”என்றான் கார்த்தி.

“அதெல்லாம் படிப்பாளிங்க வேலைடா மச்சான்…நமக்கு எதுக்கு…நீ வா நாம சமோசா சாப்பிடுவோம்…”என்று கூறிவிட்டு சமோசா வாங்க சென்றான் வருண்.

விஜயோ வருண் கூறியபடி ஹச்.சோ.டி இருக்கும் அறைக்கு சென்று கொண்டு இருக்கையில் தவறுதலாக ஒரு பெண்ணின் மீது வேகமாக மோதிவிட,அவளோ நிலைதடுமாறி விழப்போனாள்.அவளது இடையில் கரம் கொண்டு படித்து நிறுத்தினான் விஜய்.ஏதோ அவசரத்தில் இருந்திருப்பாள் போலும் பிடிமானத்திற்கு விஜயின் சட்டையை இறுக்கி பிடித்தவாறு இரண்டு நிமிடம் நின்றுவிட்டாள்.

விஜய்க்கு அறிமுகமற்ற அந்த பெண்ணின் நெருக்கம் மனதில் சற்று சலனத்தை ஏற்படுத்த,

“ஹலோ…ஆர் யூ ஓகே???”என்றான் மென்மையாக அவளது முகம் சற்று நிமிர்த்த முயன்றவாறே,

“ம்ம்…”என்ற முனகல் மட்டுமே அவளிடம்.விஜய்க்கு தான் அவஸ்தையாகி போனது யாராவது தங்களை இந்த நிலையில் கண்டுவிட்டால் பிரச்சனையாக கூடும் என்று கருதியவன்,அவளை வலுக்கட்டாயமாக தன்னிடம் இருந்து பிரிக்க,அதில் சுயத்திற்கு வந்தவள்.வேகமாக அவனிடம் இருந்து விலகினாள்.இப்போ எதுக்கு இப்படி வேகமாக விலகுறா என்று தன் மனதில் நினைத்தவாறே முதன் முதலில் அவள் முகத்தைக் கண்டான்.

அழகிய வட்ட முகம். அவள் உடுத்தி இருந்த பிங்க் நிற குர்த்தி அவளது நிறத்திற்கு போட்டி போட்டபடி இருந்தது.தனது முடியை குதிரைவால் போல் போட்டிருந்தாள்.அகன்ற விழிகளில் ஒருவித படபடப்பு இருந்தது போலவே தோன்றியது விஜய்க்கு,தன்னை நிலை படுத்திக் கொள்ள அந்த விழிகளை மூடி மூடி திறந்தாள்.அதுவே விஜய்க்கு பட்டாம் பூச்சியின் சிணுங்கள் போல் இருந்தது.அதை காண்கையில் அவளுக்குள் இருக்கும் படபடப்படப்பு இவனுக்கு வந்துவிடும் போல இருக்க,மெதுவாக அவளிடம்,

“ஆர் யூ ஓகே….சாரி நான் ஏதோ….”என்று மேலும் என்ன கூறியிருப்பானோ,அதற்கு முன்,

“இடியட்…பார்த்துவரமாட்ட…இப்படி தான் வந்து மோதுவியா…”என்று சாட்டையாக வந்தது அவளின் வார்த்தைகள்,விஜய் அதிர்ந்து அவளை நோக்கும் முன்பே அவனை கடந்து வேகமாக சென்றிருந்தாள் அவள்.சற்று முன் ரசித்த விஜயின் கண்களில் இப்போது கோபம் குடிகொண்டது.என்னனு முழுசா கேட்காம இப்படி பேசிட்டு போறா திமிர் பிடிச்சவ என்று தன் மனதில் அவளை திட்டினான்.

கேண்டினில்,

“டேய் மச்சான்…முதல்ல நம்ம நாயர் சரியில்லைனு நம்ம பிரின்ஸிக்கிட்ட கம்பளைன்ட் பண்ணும் டா….”என்றான் வருண்.

“ஆமா டா மச்சான்…இப்ப தான் பிரேக் ஹவர் அதுக்குள்ள சாமோசா தீந்து போச்சுனு சொன்னா கடுப்பா வருது மாப்பிள….”என்று வயிற்றை தடவியபடியே வருத்தப்பட்டுக் கொண்டிருந்தான் கார்த்தி.அப்போது வேகமாக அவர்களின் அருகில் வந்த விஜய்,பக்கத்தில் உள்ள நாற்காலியில் அமர்ந்தான்.அவனது முகமே கூறியது ஏதோ கோபமாக உள்ளான் என்று.அவனை விநோதமாக நோக்கினர் நண்பர்கள் இருவரும்.சற்று என்று அவர்களை பார்த்தவன்,

“என்னடா என் மூஞ்சிய அப்படி பார்க்கிறீங்க…எனக்கு தலைய வலிக்குது ஒரு டீ வாங்கிட்டு வாடா கார்த்தி…”என்றான் கோபமாகவே,அவனோ இவனை ஒரு முறை பார்த்தவன்,பின் திரும்பி வருணை பாரத்துவிட்டு டீ வாங்க சென்றான்.வருணும் தன்னை விநோதமாக பார்பதை போல் தெரிய,அருகில் பிளேட்டில் இருந்த பிஸ்கட்டை எடுத்து அவனது முகத்தை நோக்கி அடித்தான் விஜய்.

“டேய்…என்னை ஏன்டா அடிக்கிற…”என்று தன் தலை மேல் விழுந்து இருந்த பிஸ்கட் தூள்களை தட்டியபடி வருண் கேட்க,

“ஏன்டா கேட்க மாட்ட வந்திலிருந்து ஏதோ புது பொண்ணை பார்க்குற மாதிரி பார்க்குறீங்க இரண்டு பேரும்…”என்று பல்லிடுக்கில் வார்த்தைகளை கடித்து துப்ப,

“ம்ம்…ஹச்.சோ.டிய பாக்க போன என் நண்பன் விஜயை காணும் அதான் பார்த்தேன்……”என்று ராகமாக வருண் பேசினான்.அவனது பதலில் மேலும் கோபமான விஜய்,வேகமாக எழுந்து பக்கத்தில் உள்ள நாற்காலியை தூக்க,விஜயின் கோபம் அறிந்த வருண்,

“டேய்…டேய் மச்சான்….விட்டுடா…தெரியாம பேசிட்டேன்….”என்று கால்களில் விழ,சற்று கோபம் தனிந்து தன் நாற்காலியில் தொப்பு என்று அமர்ந்தான்.மேஜையின் மேல் தலையை பிடித்தபடி விஜய் அமரவும்,கார்த்தி டீயுடன் வரவும் சரியாக இருந்தது.டீயை வாங்கி பொறுமையாக பருக,அவனின் அருகில் அமர்ந்த கார்த்தியோ,

“அப்புறம் மச்சான்..எப்போதிலேந்து இந்த பழக்கமெல்லாம்…”என்று கிண்டல் தோணியில் கேட்க,விஜயின் முகம் மீண்டும் இறுக தொடங்கியது.வருணோ,

“சும்மா இருக்குற சாத்தான…இவன் திரும்பியும் பிரண்டி விட்டுறுவான் போல…”என்று தனக்குள் சொல்லிக் கொண்டு கார்த்தியின் காலை வேகமாக தன் காலால் தட்டியவாறே,

“டேய் விஜய் நீ ஹச்.சோ.டிய பார்த்திட்டியா….”என்றான் பேச்சை மாற்றும் விதமாக கேட்க,

“இப்ப எதுக்கு நீ ஏன் காலை தட்டிக்கிட்டு இருக்க….”என்றான் விஜய்.

“அய்யோ…எனக்கு இன்னைக்கு நேரமே சரியில்லை…”என்று சத்தமாகவே புலம்ப,

“இன்னும் பார்க்கலை….”என்றான் விஜய்.

“ஏன்டா…அவரை பார்க்கதான போன…”என்று வருண் கேட்க,அதற்கு விஜய் பதில் கூறும் முன்,

“விடு மச்சி…அவனோட ஆளை பார்த்துட்டு வந்திருப்பான்….”என்று கார்த்தி நக்கலாக கூற,கார்த்தி அமர்ந்திருந்த நாற்காலியை வேகமாக எட்டி உதைத்த விஜய் வேகமாக எழுந்து சென்றுவிட்டான்.

“அப்பா….நம்ம தப்பிச்சோம்….”என்று நீண்ட பெரும் மூச்சை இழுத்துவிட்டான் வருண்.

“டேய் எருமை நான் இங்க விழுந்து கிடக்குறேன்….நீ என்னடானா அவனையே பார்த்திக்கிட்டு இருக்க….வாடா என்னை தூக்கி விடு…”என்று தரையிலிருந்து எழ முடியாமல் கார்த்தி கத்த,வேகமாக அவனிடம் வந்த வருண்,

“உனக்கு இது தேவையா மச்சான்…நான் தான் பேசாதனு செய்கை காட்டுறேன்ல….இப்ப பாரு இடுப்பை உடைச்சிட்டு போயிட்டான்…..”என்று அவனை தூக்கியவாறே கேட்க,

“ஏன்டா பேசமாட்ட என்னை அடிச்சிட்டு அவன் போறான்…நீ அவனுக்கு சப்போர்ட் பண்ணுற….உன்னை….”என்று பல்லை கடிக்க,

“இப்ப உன்னால ஒண்ணும் பண்ண முடியாது வாடா….கிளாஸ்க்கு போவோம்….”என்று கூறியவாறே கார்த்தி இழுத்துக் கொண்டு சென்றான் வருண்.

 முதலாம் ஆண்டு பொறியில் தொழில்நுட்ப பிரிவு வகுப்பில்,தனது இறுக்கையில் கோபத்துடன் அமர்ந்திருந்தாள் மிருணாளினி.

“இடியட்…இடிச்சிட்டு எப்படி நிக்குறான்….இடியட்….”என்று தன் மனதிற்குள் சற்று முன் கண்டவனை திட்டியபடி அமர்ந்திருந்தாள்.

வகுப்பில் உள்ள அனைவர் கண்ணும் அவளின் மீது தான் இருந்தது.ஆண்கள் அவளின் அழகில் மயங்கியவாறே பார்த்துக்கொண்டு இருக்க,பெண்களோ இவ்வளவு அழகா என்று பொறாமையில் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

மிருணாளினி பார்பவரை கவரும் ரகம்.அவளது காதில் சிறிய தொங்கட்டான்,கழுத்தில் ஒரு தங்க செயின் கையில் வாட்ச் இது தான் அவளது அணிகலன்கள்.சாதாரணமான உடையிலும் அவளது மாசுமறுமவற்ற முகம் அடுத்தவரை ஒருமுறையேனும் பார்க்க தூண்டும்.உடுத்தும் உடையின் நேர்த்தியா இல்லை அவளது பிறப்போ அவளை மேல்தட்டு பெண் என்று சொல்லாமலே சொல்லும்.

“எப்படி மிருணா யாருனே தெரியாத ஒருத்தன்கிட்ட அவ்வளவு நேரம் தோள் சாஞ்சி நின்ன….”என்று தன்னை தானே கேள்வி எழுப்பிக் கொண்டு இருந்தாள் மிருணாளினி.இப்போதும் அந்த அறிமுகமற்றவனின் இதயத்துடிப்பு அவளின் காதுகளில் விழுவது போல் ஒரு பிரம்மை இருகைகளாலும் தன் காதை மூடி திறந்தவள்,பின் தன் தலையை குலுக்கி விட்டு நிமிர்ந்து அமர்ந்து வகுப்பை நோட்டம் விட அப்போது தான் அனைவரும் அவளையே அவ்வபோது பார்ப்பதும் பின் ஏதோ பேசுவதுமாக இருப்பதைக் கண்டவளுக்கு மனதில் மீண்டும் எரிச்சல் மூண்டது.

கார்த்தியிடம் சண்டையிட்டு வந்த விஜய் நேராக ஹச்.சோ.டியை பார்க்க அவரது அறைக்கு சென்றான்.தனது வேலையில் இருந்தவர் அவனைக் கண்டவுடன் சிநேகமாக புன்னகைத்து அமருமாறு கூறினார்.

“என்ன விஜய்…எப்போதுலேந்து சட்டையில தொங்கட்டான் பொடுற பழக்கம்…..”என்று அவர் கேட்க,விஜய்க்கோ முதலில் ஒன்றும் புரியவில்லை,

“சார்…என்ன சொல்லுறீங்க….”என்று புரியாமல் கேட்க,அவனது இடது புற சட்டையில் மாட்டியிருந்த தொங்கட்டானை அவர் சுட்டிக் காட்ட,விஜய்க்கு தான் சற்று சங்கடமாக போனது.

“இதை தான் அவனுங்க அப்படி பார்த்தான்களா…பாவி பயலுக ஒருவார்த்தை சொல்லியிருக்க கூடாது…இப்படி அசிங்கபட வச்சிட்டானுங்க….இன்னைக்கு ஹாஸ்ட்டல்ல இருக்குடி மாப்பிள உங்களுக்கு….”என்று தன் நண்பர்கள் இருவரையும் மனதில் தாளித்தவன்,தன் சட்டையில் மாட்டியிருந்த தொங்கட்டானை எடுத்து தனது சட்டை பாக்கெட்டில் பொட்டுக் கொண்டு,

“சாரி சார்…இது…”என்று அவன் தடுமாற,

“இட்ஸ் ஓகே மேன்…கவனமா இரு…அவ்வளவு தான் சொல்லுவேன்….நல்ல படிக்கிற பையன் படிப்பு வீணாகாம பார்த்துக்கோ….”என்று அவனுக்கு பொதுவாக அறிவுரை வேறு வழங்க விஜய்க்கு வெறுத்தே போனது. இரண்டு நிமிடம் தன் முன் நிழலாடியவளின் தோற்றம் அவன் மனகண்ணில் வந்து மேலும் இம்சிக்க தொடங்க தன் தலையை குலுக்கி கொண்டான்.

இனி அந்த திமிர் பிடிச்சவளபத்தி நினைக்கவே கூடாது என்று நினைத்திருக்க ஆனால் இவள் தான் உனக்கு அடுத்தது பெஸ்ட் பிரண்டு விஜி என்று கீர்த்தனா மிருணாளினியை அறிமுகபடுத்தும் வரை தான் அவனது சபதம் எல்லாம் நீடித்தது.

Advertisement