Advertisement

காதல் வானவில் 19

டெல்லியில் விஸ்வநாதன் குரூப் எவ்வளவு வலிமை மிக்கதோ அதே அளவு வலிமை மிக்கது வரதன் குரூப்.இரண்டு தொழில் நிறுவனங்களும் ஒரே தொழிலை செய்தாலும் இருவருக்குள்ளும் எந்தவித மோதல்களும் இருக்காது.அதற்கு ஒரு காரணம் விஸ்வநாதன் மற்றும் வரதனின் தந்தை நீலகண்டனின் நட்பு இருவருமே குடும்ப நண்பர்கள்.மற்றொரு காரணம் தங்களின் பலவீனம் மற்றவர்களுக்கு சாதகமாகிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர்.அதே நட்பு இன்றளவும் இருக்கிறது அவர்களிடம்.

வரதன் குரூப்பின் எதிர்கால சேர்மேன் தான் ஹர்ஷவர்தன்.ஆறடி உயரம்,வெண்ணையில் கடைந்து எடுத்தது போன்ற நிறம் என்று ஆளை அசத்தும் ஆணனழகன்.அவன் பிறப்பிலிருந்தே பணத்தை பார்த்து வளர்ந்தவன்.அவன் எதை நினைக்கிறானோ எந்த வழியலாவது நினைத்து முடிக்கும் வல்லமை பெற்றவன்.அப்படிபட்டவனின் பார்வை வட்டத்தில் விழுந்தாள் மிருணாளினி.

ஹர்ஷவர்தன் படித்த பள்ளியில் தான் மிருணாளினியும் படித்தாள்.இருவரும் பத்தாம் வகுப்பு வரை ஒன்றாக தான் படித்தனர்.மிருணாளினி பத்தாம் வகுப்பு படித்தவரை அவளை யார் என்று கூட தெரியாது ஹர்ஷாவிற்கு.பார்பதற்கு அழகாக இருக்கிறாள் அவ்வளவே அதை தான்டி அவன் அவளை பார்த்ததும் இல்லை.அவனது நோக்கம் முழுதும் தனது படிப்பு,அதை தொடர்ந்து எவ்வாறு பணம் ஈட்டுவது என்பதிலேயே இருந்தது.

எல்லாம் சரியாக போய்கொண்டிருந்த போது தான் ஹர்ஷாவின் தாயார் மிருணாளினியை அடையாலம் கண்டு கொண்டு மகனிடம் கூறினார்.இரு குடும்பங்களும் காலம் காலமாக நண்பர்கள் என்பதால் இருவீட்டில் நிகழும் அனைத்தும் அடுத்தவருக்கு தெரியும்.அவரவர் ரகசியங்கள் அவரவர் உடனே நின்றுவிடும் அதை வெளிவுலகிற்கு கொண்டுவரமாட்டார்கள் அதில் இருவருமே திறமைசாலிகள் தான்.அதே போல் தான் நிரஞ்சனா விஷயமும் வரதனின் வீட்டில் உள்ளவர்கள் அனைவருக்கும் தெரியும்.

மிருணாளினி மணிமேகலையின் மறுவுருவமாக இருந்ததால் ஹர்ஷவாவின் தாயாருக்கு அவளை நன்றாக அடையாலம் தெரிந்தது.அன்று பள்ளி ஆண்டுவிழாவில் தான் அவர் மிருணாளினியைக் கண்டது.அவர் தான் ஹர்ஷாவிற்கு அவள் யார் என்று கூறியது.முதலில் ஹர்ஷா வேண்டாவெறுப்பாக தான் கேட்டான்.ஆனால் அவனின் தாயார் தான் அவனை திசை திருப்பியது.பெண் நன்றாக இருக்கிறாள் அவளை விஸ்வநாதன் தான் பார்த்துக் கொள்கிறார் அதனால் கண்டிப்பாக அவளுக்கு என்று ஏதாவது வைத்திருப்பார் என்று மகனின் மனதில் ஆசையை தூண்டிவிட்டார்.அதுவரை தன் படிப்பு தன் வேலை என்று இருந்தவன் மிருணாளினியை கவனிக்க தொடங்கினான்.

இயல்பிலேயே அழகியான மிருணாளினிக்கு மேலும் அழுகு சேர்க்கும் விஷயம் அவளின் நிமிர்வு.எப்போதும் அவளின் பார்வை நேர் கொண்டு தான் இருக்கும் அது அவளுக்கு மேலும் அழுகு கூட்ட அதில் விரும்பியே விழுந்தான் ஹர்ஷா.ஆனால் அவன் ஒன்றை மறந்து போனான்.அவனது விருப்பம் மட்டும் போதும் என்று நினைத்தவன் அவளின் விருப்பத்தை கேட்கவில்லை அவனாகவே எடுத்துக் கொண்டான்.அதுவே தவறாகி போனது.ஆம் அவன் நிதானமாக தன் காதலை வெளிப்படுத்தியிருந்தால் கூட மிருணாளினி சற்று யோசனை செய்திருப்பாள் ஆனால் அவன் காதலை அவளின் மேல் திணிக்க முற்பட அவளோ வேண்டவே வேண்டாம் என்று விலகினாள்.

நினைத்த அனைத்தையும் பெற்ற ஹர்ஷவர்தனுக்கு ஒரு சிறு பெண்ணின் நிராகரிப்பு கோபம் கொள்ள செய்ய அவளை விடுவதாக இல்லை என்று தனக்குள் முடிவு செய்து கொண்டான்.அதன்விளைவு ஹர்ஷா மிருணாளினியை பள்ளியில் மறைமுகமாக சீண்ட தொடங்க முதலில் விலகியவள் பின் அவனை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை.அவள் தன்னை ஒரு பொருளாக கூட மதிக்காமல் இருந்தது ஹர்ஷாவின் தன்மானத்தை மேலும் சீண்டுவிட்டது.

மிருணாளினி பதினொன்றாம் வகுப்பில் கணினி பிரிவை தேர்ந்தெடுக்க,ஹர்ஷா வணிகவியல் பிரிவை தேர்ந்தெடுத்திருந்தான் அதனால் அவர்கள் இருவரும் பார்ப்பது அரிதாகி போனது.மிருணாளினிக்கு ஹர்ஷாவின் தொந்திரவு விட்டது என்று நினைத்திருக்க அவனோ அவ்வபோது அவளின் வகுப்பிற்கே வந்து அவளை சீண்ட தொடங்கியிருந்தான்.

மிருணாளினிக்கு ஹர்ஷாவை பற்றி விஸ்வநாதனிடம் கூறலாமா வேண்டாமா என்ற எண்ணம் தான்.மனதிற்குள் பயம் எங்கே இதை காரணம் காட்டி தன் படிப்பை நிறுத்திவிட்டால் என்ன செய்வது.ஆதரவற்ற தன் நிலையை எண்ணி பல நாட்கள் கண்ணீர்விட்டாள்.பின் இந்த கண்ணீர் தன்னை பலவீனமாக்கும் என்று தனக்குள் கூறிக் கொண்டவள் முயன்று தன் படிப்பில் கவனம் செலுத்த தொடங்கினாள்.அவளது நல்லநேரம் பொது தேர்வுகள் தொடங்கியதால் ஹர்ஷாவும் அவனது பாடத்தில் கவனம் செலுத்த தொடங்கினான்.என்ன தான் அவனுக்கு மிருணாளினியின் மீது  நாட்டம் இருந்தாலும் தன் படிப்பு விஷயத்திலும் அவன் கெட்டியாக இருந்தான்.

பொது தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து மிருணாளினிக்கு டெல்லியில் பெரிய கல்லூரியில் மெரிட்டில் சீட் கிடைத்தது.ஆனால் அவளின் துரிதிஷ்ட்டம் அதே கல்லூரியில் தான் ஹர்ஷாவும் சேர்ந்திருந்தான்.அவன் படிப்பில் ஒருகண் வைத்திருந்தான் என்றால் மிருணாளினியின் மீதும் ஒரு கண் வைத்திருந்தான்.அதனால் அவள் எங்கு சேருகிறாள் என்று கவனித்து அதிலேயே சேர்ந்தான்.

கல்லூரியிலும் ஹர்ஷா தன் காதல் லீலைகளை மீண்டும் தொடங்க மிருணாளினிக்கு விட்ட தலைவலி மீண்டும் வந்தது போல் இருந்தது.எப்போதும் போல் ஒதுக்கிவிடலாம் என்று அவள் நினைத்திருக்க ஹர்ஷாவோ அவளை விடுவதாக இல்லை.எப்போதும் போல் அன்றும் அவளை சீண்டி கொண்டிருக்க அவளோ அவனை மதிக்காமல் செல்ல,வேகமாக அவளின் கைகளை பற்றியவன்,

“ஏய் என்ன நானும் பார்க்குறேன் ரொம்ப பண்ணுற…இதோ பார் என்ன இருந்தாலும் என்னோட வருங்கால மனைவி நீ அதனால தான் உன்னை விட்டா….நீ ரொம்ப துள்ளுர…”என்று அவளின் கைகளை பற்றி தன்னை நோக்கி இழுத்தபடி கேட்க,மிருணாளினியோ தன் கைகளை அவனிடம் இருந்து பிரிக்க போராடிக் கொண்டிருந்தாள்.ஆனால் அவளின் கையை சிறிதளவுக் கூட அசைக்கமுடியவில்லை அந்தளவிற்கு அவனின் பிடி இறுகி இருந்தது.

“என்கிட்டயிருந்து நீ தப்பிச்சு போக முடியாது மிருணா…..நான் விரும்பிய எதையும் விட்டது இல்லை…”என்றவன் அவளை இழுத்து அணைக்க முற்பட,அவனிடம் இருந்து திமறி விலக முற்படும் நேரம்,ஹர்ஷாவின் கை பட்டு மிருணாவின் உடை கிழிந்துவிட்டது.இதை அவனும் எதிர்பார்க்கவில்லை அவன் என்ன என்று உணரும் முன் மிருணாவின் கைகள் அவனின் கன்னத்தில் பதம் பார்த்தது.

“யூ இடியட்…..எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி செய்வ…”என்றவள் தன் ஷாலால் கிழிந்த பகுதியை மூடியவிட்டு வேகமாக சென்றுவிட்டாள்.அது தான் அவளை ஹர்ஷா கடைசியாக கண்டது.அதன் பிறகு அவள் கோவையில் படிக்க சென்றுவிட்டாள் என்பதை மட்டும் தெரிந்து கொண்டான்.அவனும் தன் விஷயம் விஸ்வநாதனுக்கு சென்று விடக் கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தான்.

அவன் நினைத்து போலவே மிருணாளினி அவனின் பெயரை எடுக்காமல் வேறு ஏதோ காரணம் கூறி சென்றிருந்தது அவனுக்கு வசதியாகி போனது.தனது நல்லவன் வேடத்தை எப்போதும் போல் கடைப்பிடித்தான்.அதே போல் மிருணாளினியை பற்றி அவ்வபோது தகவல்களையும் கேட்டு தெரிந்து கொள்வான்.

அவனது அன்னை கூட ஒரு முறை அவனுக்கு நிரஞ்சனாவின் மற்றொரு மகள் ப்ரீத்தியை திருமணம் செய்ய கேட்டார்.ஆனால் ஹர்ஷா வேண்டாம் என்று முடிவாக மறுத்துவிட்டான்.அவனின் மனதில் மிருணாளினியை எப்படியாவது திருமணம் செய்து அவளை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே.அதன்படி அவன் காய்களை கச்சிதமாக விஸ்வநாதனிடம் நகர்த்தி திருமணம் வரைக் கொண்டு வந்திருந்தான்.

ஹர்ஷா மிருணாளினி கல்லூரி முடித்து இங்கு வந்துவிடுவாள் என்று நினைத்திருக்க அவளோ வேலைக்கு செல்ல வேண்டும் என்று விஸ்வநாதனிடம் கேட்டு சென்றுவிட அவனுக்கு எரிச்சலாக இருந்தது.அவளை எப்படியாவது தனியே சந்திக்க முயன்றாலும் முடியாதபடி செய்திருந்தார் விஸ்வநாதன்.அவரை மீறி அவனால் எதுவும் செய்ய முடியாது மீறி முயன்றால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்று அவன் நன்கு அறிவான்.அதனால் அவன் அமைதிகாக்க ஆனால் இன்று மிருணாளினியை வேறு ஒரு ஆடவனுடன் நெருக்கமாக பார்க்கவும் துணுக்குற்று அதை விஸ்வநாதன் காதுகளுக்கு நிரஞ்சனாவின் மூலம் கொண்டு சென்றான்.ஆனால் அதற்கு விஸ்வநாதன் எந்த எதிர்வினையும் புரியாது அமர்ந்திருந்தது அவனுள் எரிகின்ற நெருப்பில் மேலும் எண்ணேயை ஊற்றி இருந்தது.

விஸ்வநாதனுக்கும் ஹர்ஷாவை நிராகரிக்க எந்த காரணமும் இல்லை.அவனும் தன்னை போலவே அந்தஸ்திலும்,குணத்திலும் இணையானவர்கள் என்பதே அவருக்கு போதுமானதாக இருந்தது அதனால் அவரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருந்தார்.ஆனால் விஸ்வநாதனும் ஒன்றை மறந்தார் திருமணம் என்பது இருமணங்கள் இணையும் பந்தம்.இதில் ஒருவரின் சம்மதம் மட்டும் போதும் நினைத்துவிட்டாரா இல்லை மிருணாளினி தன் கைபாவை தானே தான் கூறினால் ஒத்துக்கொள்வாள் என்று நினைத்துவிட்டாரா என்பது அவருக்கே வெளிச்சம்.

மிருணாளினியும்,விஜயும் தங்களின் கண்ணாமூச்சி விளையாட்டை தொடர்ந்து கொண்டிருந்தனர்.அவர்களின் ரகசிய கண்ஜாடைகளை மற்ற இருவருக்கும் தெரியாத படி பார்த்துக் கொண்டனர்.இதோ நண்பர்கள் வந்து இரு தினங்கள் ஓடியிருந்தது.காலை எழுந்தவுடன் வெளியில் ஊர் சுற்ற செல்பவர்கள் இரவு தான் வருவார்கள்.மிருணாளினியை பொறுத்தவரை இவ்வளவு நாள் தனியாக இருந்தவளுக்கு தன்னுடன் தனக்கென்று சுற்றும் நண்பர்களை மிகவும் பிடித்துவிட்டது.அதுவும் விஜயுடன் செலவிடும் மொட்டை மாடி கலாட்டக்களும் நிறம் இழந்த அவளின் வாழ்வில் அழகான வண்ணங்களை சேர்த்து என்று தான் கூற வேண்டும்.

மிருணாளினியும் சரி,விஜயும் சரி தங்களின் மன எண்ணங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளவில்லை ஏனோ இருவரிடமும் ஒருவித தயக்கம் குடிகொண்டிருந்தது.மிருணாளினிக்கு மனதிற்குள் பயம் எங்கே தான் கூறி அவன் மறுத்துவிட்டால் அவனின் நட்பையும் இழக்க நேரிடுமே என்று.விஜய்க்கும் அதே போல் பயம் இருந்தது தான் அதையும் விட மிருணாளினியின் செல்வசெழிப்பும் அவனை யோசிக்கவைத்தது.தனக்கே உறுதியில்லாத ஒன்றை பற்றி நண்பர்களிடமும் பகிர விரும்பவில்லை அவன்.மிருணாளினிக்கும் அவனின் எண்ணம் புரிந்ததோ என்னவோ அவளும் அமைதியாக இருந்து கொண்டாள்.

இரவு நேரம் மொட்டை மாடியில் எப்போதும் போல் டெல்லியின் அழகை ரசித்தபடி மிருணாளினி அமர்ந்திருந்தாள்.பக்கத்தில் அவளை ஒரு கண்ணும்,வெளியில் ஒரு கண்ணும் ரசிப்பதுமாக இருந்தான் விஜய்.ஏனோ எப்போதும் குழந்தை போல் பேசுபவள் இன்று மிகவும் அமைதியாக இருந்தாள்.அவளாக பேசபோவது இல்லை என்று அறிந்தவன்,

“ம்ம்….என்ன மேடம்…இன்னைக்கு மௌனவிருதமா…”என்று கேட்க,அவனை பார்த்து அழகாக புன்னகைத்தவள்,

“ப்ச் அப்படியெல்லாம் இல்லை…சும்மா தான்…”என்று கூறிவிட்டு அமைதியாக திரும்பிக் கொள்ள,அவளின் தோளை பற்றி திருப்பியவன்,

“என்ன மனசுல ஓடுது சொல்லு….இப்படி இருக்காத நல்லாயில்ல…”என்று கூற அதற்கும் புன்னகை மட்டுமே பதிலாக தந்தாள்.

“ப்ச்….இப்ப சொல்ல போறீயா இல்லையா….”என்று அவளின் தாடையை பற்றி கேட்க,அவளின் கண்களில் ஈரம் கண்டான்,

“என்னடீ….ஏன் அழுவுற….”என்று பதட்டமாக கேட்க,அவளின் கைகளை பற்றியவள்,

“இன்னைக்கு நாம நகை கடைக்கு போயிருந்தோம் இல்ல….அங்க….”என்று கூறிவிட்டு நிறுத்த,பதட்டமான விஜய்,

“என்னடி…என்ன ஆச்சு சொல்லு….”என்று பரபரப்பாக கேட்டான்.அவனுக்கு விஸ்வநாதனை பற்றி தான் கவலை.தாங்கள் வந்த அன்று அவர் பேசியதோடு சரி அதன் பின்னால் அவர் பேசவில்லை என்றாலும் அவர் தங்களை கண்கானிப்பது போலவே தோன்றும் அவனுக்கு.ஆனால் அதை அவளிடம் அவன் கூறி மேலும் அவளை மனவுளைச்சலுக்கு ஆளாக்க விரும்பவில்லை.

“ப்ச்…மிருணா…இப்படி உனக்குள்ளே எல்லாத்தியும் வச்சுக்காத…சொல்லுடி….”என்று அவளின் அமைதி கண்டு கடுப்பாக கேட்க, மிருணாளினி,

“நாம இன்னைக்கு நகை கடைக்கு போனம் இல்ல அங்கு நான் என் அப்பாவை பார்த்தேன்….”என்று கூற,விஜய்க்கு அதுவரை மனதில் அடைத்து வைத்திருந்த பாரம் இறங்கியது.

“ஓய் அவர பார்த்துக்கா…இப்படி கலங்கி உட்கார்ந்து இருக்க…”என்று கேட்க,மிருணாளினி முகத்தை வேறு புறம் திருப்பி,

“ம்ம்….உனக்கு இது சாதாரணம் விஜய்…ஆனா எனக்கு இது….எப்படி சொல்லனே தெரியலை….எனக்கு பெருசா அவர் மேல பாசம் எல்லாம் இல்லை தான்…ஆனா அதே சமயம்….ஒன்னு சொல்லுவாங்கள்ல,தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்னு…அது போல தான்….எனக்கு அவரை பார்த்ததும்…ப்ச் என்ன தான் நான் பழசை நினைக்கக் கூடாதுனு நினைச்சாலும் என்னையும் அறியாம அந்த நினைப்பு என்னை சூழ்ந்துடுது…”என்று அவள் கரகர குரலில் கூற,அவள் அன்றைய நாளின் ரணத்தைக் குறுப்பிடுகிறாள் என்று உணர்ந்தவன் அவளை மீண்டும் தன்னை பார்க்குமாறு முகத்தை திருப்பி,

“ப்ச்…சாரி…வெரி சாரி….நான் இப்படி யோசிக்கல….”என்று கூற,அவனின் கைகளை செல்லமாக தட்டிவிட்டாவள்,

“விடு விஜய்….நீ சொல்லுறது போல அவங்க எல்லாம் அவ்வளவு ஓர்த்து இல்லை தான்….நான்…என்னையும் அறியாம..ப்ச்…விடு….”என்று சலிப்பாக கூறினாள்.சிறிது நேரம் இருவரும் பேசவில்லை அமைதியாக இருந்தனர்.விஜய் மட்டும் அவனின் செல்லில் அவ்வவபோது மணியை பார்த்துகொண்டிருந்தான்.

சற்று நேரத்தில் மிருணாளினியின் கண்களை கருப்பு துணி கொண்டு கட்டினான் விஜய்.

“ஏய் விஜய் என்ன பண்ற….”என்று அவள் கேட்க அவனோ பதில் ஏதும் கூறாமல் அவளின் கைகளை பிடிக்க,அவளின் உடல் நடுங்கியது,

“விஜய்…என்ன பண்ற…”என்று படபடப்புடன் கேட்க,

“ச்ச்…கொஞ்ச நேரம் அமைதியா இருடி ராட்ச்சசி….”என்று ஒரு அதட்டல் போட,அவளும் அமைதியாகி போனாள்.அவளின் கைகளில் ஏதோ ஊர்வது போல் இருந்தது.

“ம்ம்…இப்ப கட்டை அவரு….”என்று விஜய் கூற,அதற்காகவே காத்திருந்தவள் போல வேகமாக கட்டை அவிழ்த்தாள்.கட்டை அவிழ்த்தவள் கண்களில் பலபலவென மின்னியது கைகளில் அவன் மாட்டிய தங்க பிரேஸ்லட்.அதைக் கண்டவள் கண்கள் சாசர் போல் விரிய,

“ஏய் விஜய்….இது….இது….”என்று கேட்க,அவனோ,

“ஹாப்பி பர்த் டே மிருணா….”என்று கூற,அவளோ உணர்ச்சி பெருக்கில் அவனை இறுக்கமாக கட்டிக் கொண்டாள்.இங்கு இவர்கள் காதலில் முன்னுரை எழுத தொடங்க அங்கு விஸ்வநாதன் இவர்கள் காதலுக்கு முடிவுரை எழுதவிருந்தார்.

Advertisement