Advertisement

காதல் வானவில் 17

காலைவேளை உணவு கலட்டாக்கள் முடிந்தவுடன் கீர்த்தனா,

“ம்ம் மிருணா…எப்ப கிளம்பலாம்….சொல்லு டிக்கெட் புக் பண்ணனும்….”என்று கேட்க,மிருணாளினியின் முகம் ஒருநிமிடம் யோசனையை தத்ததெடுத்தது.வருணும்,விஜயும் அவர்களின் உரையாடலை பார்த்தபடி இருந்தனர் எதுவும் பேசவில்லை.விஜயோ காலை கீர்த்தனா செய்த கலாட்டாவினால் மிருணாளினி தன் மீது கோபமாக உள்ளாளோ என்று அவள் முகத்தை நொடிக் ஒருமுறை பார்த்தபடி இருந்தான்.

மிருணாளினி சற்று நேரம் எதுவுமே பேசவில்லை.அமைதியாக தன் விரல் நகங்களை பார்த்தபடி இருந்தாள்.அவளது தோளை தொட்ட கீர்த்தனா,

“என்னடி என்ன யோசனை….”என்று கேட்க,

“ஒண்ணுமில்லை டி…நான் இங்க எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு…அதை முடிச்சிட்டு இங்க எல்லாத்தையும் குளோஸ் பண்ணிட்டு சென்னை வந்திடலாம்னு இருக்கேன்….”என்று கூற,அதுவரை அவள் என்ன கூறுவாளோ என்று பயத்தில் இருந்த கீர்த்தனாவிற்கும்,விஜய்க்கும் மனது சற்று சமன் பட்டது.

“ரொம்ப நல்லது….உடனே அந்த வேலை எல்லாம் முடி நாளைக்கே நாம கிளம்புவோம்…”என்று கீர்த்தி கூற,அவளை கண்டு சிரித்த மிருணா,

“அது அவ்வளவு ஈஸி இல்லை கீர்த்தி…உனக்கு புரியாது….விடு…”என்றுவிட்டு சுவற்றை வெறிக்க,

“சரி நீ உன்னோட வேலை எல்லாம் முடிச்சிட்டு வா….நாங்க நாளைக்கு கிளம்புறோம்….ஆபிஸ்லயும் ரொம்ப லீவ் சொல்ல முடியாது….”என்று வருண் கூறினான்.

“என்ன வரு நீங்க…மிருணாவ இங்க தனியா எப்படி விட்டுட்டு போறது….அதெல்லாம் முடியாது….நான் இருந்து அவளை அழைச்சிக்கிட்டு தான் வருவேன்…”என்று பிடிவாதமாக கூறினாள்.

“ப்ச்…கீதூ..புரிஞ்சிக்கோ…மிருணாக்கும் கொஞ்சம் டையம் கொடு…நீ நினைக்கிற மாதிரி அவ வரதுன்றது எல்லாம் அவ்வளவு ஈஸியான விஷயம் இல்லை….இந்த விஷயம் அந்த பெரிய மனுஷருக்கு தெரிஞ்சா என்ன பிரச்சனை வருமோ….”என்று வருண் நிதசற்தனத்தை கூறினான்.

கீர்த்தனாவிற்குமே அப்போது தான் மிருணாளினியின் யோசனை பதிந்த முகம் எதனால் என்று புரிந்தது.இருந்தும் தோழியை இந்த நிலையில் விட்டு செல்ல மனது இல்லை அவளுக்கு,

“மிருணா…உன் வேலை எல்லாம் சீக்கிரம் முடியாதா…உங்க தாத்தா ஏதாவது பிரச்சனை செய்வாரா…”என்று பதட்டமாக கேட்க,மிருணா பதில் ஏதும் கூறாமல் கீர்த்தனாவின் முகம் பார்த்தாளே தவிர பதில் ஏதும் சொல்லவில்லை.அவளுக்கே இந்த முடிவின் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்று புரியவில்லை அதனால் கீர்த்தனாவிடம் எதுவும் கூறவில்லை.ஆனால் அதே சமயம் தோழியை பயமுறுத்தவும் விரும்பவில்லை அதனால்,

“நீ பயப்படுற மாதிரி எதுவும் ஆகாதுடி…வருண் சொல்லுற மாதிரி இங்க எல்லாம் முடிய இன்னும் ஒருவாரமாவது ஆகும்….”என்றவள் கீர்த்தியின் முகம் காண அதுவோ கூம்பி போய் இருந்தது.விஜய் எதுவும் பேசவில்லை அவனது நினைவு முழுவதும் மிருணா கூறிய விஷயத்திலேயே சுழன்றது.வருண் கூறுவது போல் மிருணா டெல்லியில் இருந்து கிளம்புவது அவ்வளவு எளிது அல்ல என்று அவனுக்கு தெரியும்.அவனது மனது இதில் விஸ்வநாதனின் முடிவு என்னவாக இருக்கும் என்பதிலேயே இருந்தது.

“விஜி….விஜி….என்ன ஆச்சு விஜி….நீ ஏன் அமைதியா இருக்க….”என்று கீர்த்தனா கேட்க,விஜயோ பதில் ஏதும் சொல்லாமல் திரும்பி மிருணாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஒண்ணுமில்லை என்னும் விதமாக தலையாட்டினான்.

“என்ன விஜி….வரு ஏன் இப்பவே போகனும் சொல்லுரான்….நீ எதுவும் சொல்லமாட்டேங்குற….”என்று சற்று பறிதவிப்பாகவே கேட்டாள்.அவளுக்கு மிருணாளினியை இங்கு தனியே விட்டு செல்வதில் கொஞ்சமும் விருப்பமில்லை.அதுவும் அவளின் குடும்ப பிண்ணனி தெரிந்த பின் கொஞ்சம் பயமும் வந்திருந்தது.எங்கே அவர்கள் மிருணாவை எதாவது செய்துவிடுவார்களோ என்ற பயமும் இருந்தது.

கீர்த்தனாவின் கலங்கிய முகத்தை கண்ட மிருணாளினி,

“ம்ம்….நான் ஒரு ஐடியா சொல்லவா…”என்று கேட்க,அனைவரும் அவளை விசித்திரமாக பார்க்க,அவளோ மென்மையாக புன்னகைத்துவிட்டு,

“இன்னைக்கு வியாழன்,நாளைக்கு ஒரு நாள் தான் நமக்கு ஆபிஸ்…அப்புறம் இரண்டு நாள் லீவ் தான…அதனால இங்க இருங்க….சண்டே ஈவினிங் போகலாம்….நானும் அதுக்குள்ள என்னால முடிஞ்ச அளவுக்கு வேலைகளை முடிச்சிடுறேன்….”என்று கேட்க,

“எனக்கு ஓகேப்பா….நான் இருக்கேன்….”என்று முதல் ஆளாக பதில் தந்தாள் கீர்த்தனா.வருண்,விஜயை நோக்க அவனோ யோசனையில் இருந்தான்.அதை உணர்ந்த மிருணா விஜயின் கைகளில் தன் கைகளால் அழுத்தம் கொடுக்க,தன்னுர்வு பெற்றவன் நிமிர்ந்து மிருணாளினியை காண அவளோ கண்களால் அவனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

காலையில் இருந்து என்னை படுத்தினல இருடி உனக்கு இருக்கு இப்ப பாரு,என்று தன் மனதில் நினைத்தவன்,

“ம்ம் பார்க்கலாம்…நான் ஆபிஸ்ல பேசிட்டு சொல்லுறேன்…அதேமாதிரி நீங்க இரண்டு பேரும் ஆபிஸ்ல பேசுங்க…அப்ப தான் அங்க என்ன நிலவரம்னு தெரியும்…அப்புறம் பார்க்கலாம்…”என்றுவிட்டு சென்றுவிட,மிருணாளினிக்கு முகம் சுருங்கி போனது.அவளுக்கு தெரியாதா டீம் லீடரே இவன் தான் அங்கு என்ன வேலை இருக்கும் என்று இவனுக்கு தெரியாதா வேண்டுமென்றே செய்கிறான் என்று அவளுக்கு புரிந்து போனது.சரிதான் போடா என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

மதியம் வரை விஜய் எதுவும் பேசாமலே இருக்க மிருணாளினிக்கு உள்ளுக்குள் கோபம் பொங்கியது.

“கீதூ…நீ கிளம்ப ரெடியா இரு…உன் லீடர் கொஞ்ச நேரம் கழிச்சு வந்து சொல்லுவான் பாரு…கீதூ…நாம ஊருக்கு போறோம்….ரெடியாகுனு….”என்று மிருணாளினி விஜயை போலவே பேசிக் கொண்டிருந்தாள்.

“ம்ம்….நான் அப்படி சொல்லவே இல்லையே கீதூ…நான் சண்டே ஈவ்னிங் கிளம்புலாம்னு நினைச்சேன்….ஆனா கீதூ…உன் பிரண்டுக்கு நாம இங்க இருக்குறது பிடிக்கல போல…முக்கியமா நான்….”என்று விஜயின் குரல் பின்புறம் இருந்து கேட்க,இருவரும் திரும்பி பாரத்தனர்.

“நிஜமாவா விஜி….ஐ ஜாலி….”என்று கீர்த்தனா குதுகலிக்க,

“ஏய் போதும்டி…குதிச்சு எங்காயாவது விழுந்து வைக்காத என்னால ஹாஸ்பிட்டல் எல்லாம் உன்னை தூக்கிட்டு அலைய முடியாது….”என்று வருண் கிண்டலாக கூற,

“நீ இங்க வந்ததிலிருந்து கொஞ்சம் ஓவரா தான் போற உனக்கு நல்லதுக்கு இல்ல….சொல்லிட்டேன்….”என்று ஒற்றை விரல் காட்டி அவள் மிரட்ட,

“ஓஓஓ…மேடமுக்கு அவ்வளவு கொழுப்பா…என்னடி செய்வ….”என்று வருணும் மல்லுக்கு நிற்க,

“ம்ம்…அத்தை நேத்தி என்கிட்ட அடுத்த மாசமே நல்ல நாள் இருக்கு உனக்கு சரியா வரும்னா கல்யாண தேதி குறிச்சிடலாம்னு சொன்னாங்க….இப்ப நீ பண்றத எல்லாம் பார்த்தா இன்னும் இரண்டு மாசம் கழிச்சு குறிங்கனு சொல்லிடுவேன்….”என்று சாவகாசமாக கூற வருணோ நெஞ்சில் கை வைத்து அமர்ந்துவிட்டான்.அவளுக்கு அப்போது தெரியவில்லை அவளது வாக்கு பளிக்கப்போகிறது என்று.

“அடியே அப்படி எல்லாம் செஞ்சிடாதடி…”என்று அவன் கீழே இறங்கி வர,

“ம்ம் அது அந்த பயம் இருக்கட்டும்….”என்று கெத்தாக கூறினாள் கீர்த்தனா.இவர்களின் விளையாட்டை ரசித்தபடி இருந்த மிருணாவின் அருகில் சென்ற விஜய்,

“என்ன மேடம் நான் கிளம்பட்டுமா….”என்று கிசுகிசுப்பாக கேட்க,

“ம்ம்…கிளம்பி தான் பாரேன்…கொன்னுடுவேன்…”என்று செல்லமாக மிரட்ட,விஜயோ,

“இதுக்கு கீதூவே தேவலாம் போல…”என்று குறும்பாக கூறி சிரித்தான்.

“ஓய் அங்க என்ன ரகசியம் பேசுறீங்க….”என்று கீர்த்தனா கேட்கவும்,விஜயும்,மிருணாவும் திருதிருவென்று முழிக்க,

“நான் என்ன கேட்டுடேன்னு இதுங்க ரெண்டும் இப்படி முழிக்குதுங்க….”என்று கீர்த்தனா வருணிடம் புலம்பினாள்.அவனோ,

“அதை நீ இப்ப தான் பார்க்குறியா….”என்று தன் மனதிற்குள் கூறியவன்,அவர்களை காப்பாற்றும் பொருட்டு,

“ம்ம்ம்….இங்க வீட்டுக்குள்ளே தான் இருக்கனுமா…நான் டெல்லி வந்தது இது தான் முதல் முறை எங்காயாவது போகலாம்….”என்று வருண் மிருணாளினியிடம் கேட்க,

“ம்ம் சரி போகலாம்….நீங்க ரெடியாகுங்க நான் கூட்டிட்டு போறேன்…”என்று கூறிவிட்டு கீர்த்தனாவை அழைத்துக் கொண்டு கிளம்ப சென்றாள்.

வருணும்,விஜயும் கிளம்பி வெளியில் வர கீர்த்தனா தயாராகி சோபாவில் அமர்ந்திருக்க,அவளையே ரசித்தபடி வந்த வருண்,

“ம்ம் மேடம் சூப்பரா இருக்கீங்க…”என்று கூற,விஜயோ,

“டேய் நல்லவனே நானும் இங்க தான் இருக்கேன்….”

“அது தான்டா எனக்கு கஷ்டமா இருக்கு…சீக்கிரம் லவ் பண்ணி தொலை…எனக்கு ரூட் கிளயர் ஆகும்….”என்று வருண் புலம்பியவரே கூற,சரியாக அதே நேரம் தனது அறையில் இருந்து வெளியில் வந்தாள் மிருணாளினி.

மஞ்சள் நிற குர்த்தியில்,தலையை லூசாக விட்டு ஒற்றை கிளிப்பில் அடக்கியிருந்தாள்.நெற்றியில் ஒரு சிறிய பொட்டு,இரு கைகளிளும் மெட்டல் வளையல்கள்,காதில் சற்று பெரிய தொங்கட்டான் என்று பார்பவரை மேலூம் கவரும் வண்ணம் இருந்தது அவளின் அழகு.விஜய் அவளின் இந்த புதிய பரிமாணத்தில் விழிகள் தெறிக்க நின்றான்.அவன் கண்களில் அவளது அழகு வதனம் பித்தனாக்க செய்தது.எவ்வளவு நேரம் அவளையே பார்த்தபடி இருந்தான் என்று அவனுக்கே தெரியாது கீர்த்தனா,

“வாவ்…மிருணா சூப்பரா இருக்க…ரொம்ப அழகா இருக்குடி…”என்று கூறிவிட்டு தோழியை அணைத்துக் கொள்ள,மிருணா விஜயின் பார்வையில் முகம் சிவந்து நின்றாள்.

“இவன் நம்மளை தான் ரொமான்ஸ் பண்ணவிடமாட்டேங்குறான்…ஆனா இவன் நல்ல சைட் அடிக்கிறான்….பாவி….”என்று மனதிற்குள் விஜயை வறுத்தபடி இருந்தான் வருண்.

அனைவரும் கிளம்பி கீழே வர அங்கே அவர்களுக்காக காத்திருந்தது ஆடிக் கார்.மிருணா வந்தவுடன் கார் சாவியை அவளிடம் கொடுத்துவிட்டு செக்யூரிட்டி சென்றுவிட,வருணோ,

“வாவ்…ஆடி காரா…சூப்பரா இருக்கு மிருணா…”என்று கண்களில் கனவு மின்ன கூற,

“நீ வேணா டிரைவ் பண்ணுறீயா வருண்….”என்று மிருணா அவனிடம் சாவியை நீட்ட,

“அய்யயோ…வேணாம்….”என்று கத்தினாள் கீர்த்தனா.

“ஏய் ஏன்டி….ஏன் வேணாம்னு சொல்லுர….”என்று மிருணா கேட்க,கீர்த்தனாவோ,

“ஏன் உன் கார் நல்லா இருக்குறது உனக்கு பிடிக்கலையா…இவனை நம்பி கொடுக்குற….”என்று கீர்த்தனா கூற,

“டேய் உன் சிநேகிதிய ஒழுங்க இருக்க சொல்லு….இல்ல…”என்று வருண் விஜயிடம் பேச,அவன் பேசியதை காதில் வாங்கிய கீர்த்தனா,

“இல்லனா என்ன செய்வ…சொல்லு….”என்று அடுத்த சண்டைக்கு தயாராக,மிருணாவோ,

“அய்யோ….போதும் நிறுத்துங்க…இப்படியே சண்டை போட்டா…நாம எப்படி கிளம்புறது….”என்றவள் வருணிடம் திரும்பி,

“இன்னைக்கு நான் டிரைவ் பண்ணுறேன் வருண்….”என்றுவிட்டு இறுக்கையில் அமர,முன்னிறுக்கையில் கீர்த்தனா அமரும் முன் விஜய்,

“நீயும்,வருண் பின்னாடி உக்காருங்க…”என்றுவிட்டு அவளின் பதிலைக் கூட எதிர் பாராமல் முன்னிறுக்கையில் அமர்ந்து கொண்டான்.

“விஜி…நான் இவன் மேல கோபமா இருக்கேன்…நான் உட்காரமாட்டேன்…”என்று குழந்தை போல் சண்டைபிடிக்க,வருணோ,

“இவளை…அவனே இப்ப தான் கொஞ்சம் ப்ரியா விடுறான்…இவளே கெடுத்துடுவா போல…”என்று மனதில் திட்டிவிட்டு பின் பக்க கதவை திறந்தவன் கீர்த்தனாவை உள்ளே தள்ளிவிட்டு தானும் ஏறி அமர்ந்து கொண்டான்.

மிருணாளினி வண்டி ஓட்ட,விஜயோ அவ்வபோது அவளின் அழகை ஓரக் கண்ணால் பருகியபடி வந்து கொண்டிருந்தான்.பின் இறுக்கையில் இருந்த இருவரும் அவ்வபோது சண்டை பின் வெளி இடத்தை ரசிப்பது என்று இருந்தனர்.மிருணாளினிக்கு வெகு நாட்களுக்கு பிறகு அந்த பயணம் மிகவும் இனிமையாக இருந்தது.

டெல்லியின் புகழ்பெற்ற இடமான இந்தியாகேட் என்னும் இடத்தில் இருந்தனர் நால்வரும்.இரவு நேர விளக்குகளின் வெளிச்சத்தில் அந்த இடமே ஏதோ இந்திர லோகம் போல காட்சியளித்தது.கீர்த்தனா அவளையும் அறியாமல் வருணின் கரங்களில் தன் கரங்களை கோர்த்துக் கொண்டு செல்ல,மிருணாவோ அமைதியாக அந்த இடத்தின் அழகை ரசித்தபடி வந்தாள்.

“ம்க்கும்…”என்று அழைப்பு கேட்கவும் முன்னால் நடந்த மிருணா திரும்பி பார்க்க,தனது பேண்ட் பாக்கேட்டுகளில் கை விட்டபடி நின்றிருந்தான் விஜய்.மிருணாளினி என்ன என்று கண்களால் வினவ அவளது விழி அசைவுகளில் மயங்கியவன்,

“நானும் இப்ப தான் முதல் முறையா டெல்லி வரேன்…எனக்கும் சுத்தி காட்டலாம்…”என்று கூற,

”ஓ….அப்படியா….அங்க பின்னாடி பாருங்க….”என்று கூற விஜயும் அவள் கூறிய இடத்தை திரும்பி பார்க்க,

“பார்துட்டீங்களா….இப்ப இந்த பக்கம் பாருங்க….”என்று கூறி அடுத்தபக்கம் காட்டினாள்.

“ம்ம் இப்ப நான் சுத்திக் காட்டிடேன்….போதுமா…”என்று கிண்டலாக கூற,அப்போது தான் அவளின் கிண்டலை உணர்ந்தவன்,

“ஓய்…என்ன கிண்டலா…”என்று கேட்டு கைகளை ஓங்க,

“அச்சோ பயமா இருக்கே…”என்று மிருணா அஞ்சுவது போல் நடிக்க,

“ராட்சசி…மாட்டாமளா போயிடுவ…அப்ப பார்த்துக்குறேன் உன்னை…”என்று தன் வாயிற்குள் முனவினான்.

“என்ன சார் ஏதோ உங்களுக்குள்ள பேசுறீங்க என்ன…”என்று மிருணா கேட்க,அவளை நெருங்கியவன் அவளது முகத்தில் விழுந்த முடிகற்றைகளை தன் ஒற்றை விரலால் ஒதுக்கி,

“ம்ம்…கண்டிப்பா சொல்லுனுமா….”என்று ஹஸ்க்கி குரலில் கேட்க,மிருணாளினியின் கண்கள் அகல விரிந்தது அவனையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.இவர்களின் இந்த சந்தோஷ நிமிடங்களை தூரத்தில் இரு கண்கள் வன்மத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தது.

டெல்லியில் மேலும் சில இடங்களை சுற்றி பார்த்துவிட்டு நால்வரும் வீட்டிற்கு வந்தனர்.வெளியிலேயே சாப்பிட்டு வந்ததால் அனைவரும் தங்களின் படுக்கறைக்கு சென்றுவிட்டனர்.விஜய்க்கு வெகு நேரமாகியும் தூக்கம் வராமல் புரண்டவன் தன்னால் வருணின் தூக்கம் கெட வேண்டாம் என்று நினைத்து அறையைவிட்டு வெளியில் வந்து சமையல் அறையில் தண்ணீர் அருந்திவிட்டு வரும் போது மிருணாளினியின் அறையிலிருந்து வெளிவந்த ஒரு உருவம் வெளி கதவை திறக்க முயன்று கொண்டிருந்தது.

Advertisement