Advertisement

காதல் வானவில் 14

மிருணாளினியின் முகம் முழுவதும் அவ்வளவு சந்தோஷம் நிரம்பி வழிந்தது.சற்று முன்வரை அழுதுவடிந்த முகத்தில் இப்போது மகிழ்ச்சியின் சாரல்.தான் தனியாக இல்லை என்று ஒரு உணர்வு தன்னை நேசிக்கும் நட்பு தனக்கு இருக்கிறது.அதே நட்பை அவள் கடந்த மூன்று நாட்களாக நினைவு கூட கொள்ளவில்லை என்பதை எல்லாம் வசதியாக மறந்து போனது பெண்ணிற்கு.அனைத்தையும் இழந்து தனிமையில் வாடியவளுக்கு இப்போது துணை கிடைத்தொரு உணர்வு.

“சீக்கிரம் வீட்டை கீளின் பண்ணுங்க…..அப்புறம் ஏதாவது சவுத் இண்டியன் சாப்பாடு செய்ங்க சீக்கிரம்…”என்று புன்னகை முகமாக கூறியவள்.குனிந்து தன்னை பார்க்க நேற்றைய கசங்கிய உடையில் தான் இருப்பது புரிய வேகமாக குளியல் அறைக்குள் புகுந்தவள் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வெளியில் வர சரியாக வீட்டின் அழைப்பு மணியின் சத்தம்.தன் தாயைக் காண ஓடிவரும் கன்று போல ஓடி வந்து கதவை திறந்தாள்.

வீட்டின் வாசலில் நின்றிருந்த மூவருக்கும் மிருணாளினியின் தோற்றத்தைக் கண்டு அதிர்ந்து தான் விட்டனர்.கீர்த்தனா வேகமாக வந்து தன் தோழியைக் கட்டிக் கொண்டு,

“என்னடி ஆச்சு…ஏன் எங்க கிட்ட சொல்லாம வந்த….உன் போன் எங்க….எத்தனை தடைவ போன் பண்ணேன் தெரியுமா….”என்று அழுகையுடன் கேட்க,மிருணாளினியின் கண்கள் கலங்கியது அவளது அன்பில் தவறு செய்த குழந்தை போல் அவளின் அணைப்பில் அடங்கி நின்றாள் மிருணாளினி.

விஜய்க்கு மிருணாளினியின் தோற்றத்தைக் கண்டு நெஞ்சம் நடுங்கியது.என்னவாயிற்று இவளுக்கு ஏன் இவ்வாறு உள்ளாள் முகத்தில் அவ்வளவு சோர்வு அப்பிக் கிடந்ததது.அவளது கைகளில் இருந்த டிரிப்ஸ் போட்டத்தற்கான அடையலாத்தைக் கண்டவனுக்கு மனதில் ஒரு வலி ஏற்பட்டது என்னவோ உண்மை.

“கீதூ…முதல்ல அவளை விடு…அவ கையில டிரிப்ஸ் வேற போட்டுருக்காங்க போல கை எப்படி வீங்கி இருக்கு பாரு….”என்று விஜய் சற்று கண்டிப்புடன் கூற,அப்போது தான் கீர்த்தனா மிருணாளினியின் கைகளை ஆராய்ந்தவள்,

“என்னடி இது…”என்று அடுத்த கேள்வி கேட்க தொடங்க,அதற்குள் வருண்,

“முதல்ல உள்ள போ கீர்த்தனா…அப்புறம் பேசலாம்…”என்று சற்று கடுமையாக கூற,

“அய்யோ….ஐ ம் சாரி…நான்….என் தப்பு தான்…..சாரி உள்ள வாங்க….”என்று தன் தலையில் தட்டிக் கொண்டு அவர்களை உள்ளே அழைத்தாள் மிருணாளினி.அவர்களை சோபாவில் அமர சொன்னவள் வெளியில் நின்றிருந்த காவலாளியிடம் நன்றி தெரிவித்துவிட்டு தனக்கு தேவையான சில பொருட்களின் லிஸ்டை கொடுத்து வாங்கி வரும் படி கூறினாள்.

வீட்டின் பிரம்மான்டத்தை கண்ட மூவரும் சற்று அதிசயத்து தான் போனர்.வீட்டின் வரவேற்பறையே விஜய்,கீர்த்தனாவின் வீடு அளவிற்கு இருந்தது.அதுவரை தோழியைக் காண வேண்டும் என்ற நினைவில் இருந்த கீர்த்தனா அப்போது தான் வீட்டின் பிரம்மான்டத்தைக் கண்டு வியந்த வாரே,

“வீடு ரொம்ப அழகா இருக்கு இல்லை வரு….”என்று கேட்க அவனோ,

“இத இப்ப தான் பாரக்குறீயா…”என்று நக்கலாக கேட்க,அவனை முறைத்தாள் கீர்த்தனா.அவளது முறைப்பைக் கண்டு கொள்ளாதவன்,

“இந்த அப்பார்மென்டே லக்சூரியஸ் அப்பார்மென்ட்…அப்போ வீடு எல்லாம் அப்படி தான் இருக்கும்…..”என்று கூறினான்.கீர்த்தி மேற்கொண்டு ஏதோ கேட்கும் முன் அவர்களின் முன் வந்த மிருணாளினி,

“எல்லாரும் பிரஷ் ஆகிட்டு வாங்க…காபி சாப்பிடலாம்…”என்று கூறினாள்.அவளது மனதில் அவ்வளவு தடிமாற்றம் அதுவும் விஜய்யைக் கண்டு மனதிற்கு அவ்வளவு சந்தோஷம்.ஆம் முதலில் அவள் கீர்த்தனா மட்டும் தான் வந்திருப்பாள் என்று நினைத்திருந்தாள்.ஆனால் விஜயும் வந்திருப்பதைக் கண்டவளுக்கு மனதிற்கு இதமாக இருந்தது.ஆனால் வந்ததிலிருந்து அவனது கூர் பார்வையின் பொருள் தான் அவளுக்கு விளங்கவில்லை.

“கீதூ…நீ இந்த ரூம்ல போய் பிரஷு பண்ணிக்கோ….வா…”என்று கீர்த்தனா கையை பிடித்து இழுத்துக் கொண்டு போய் அறையில் விட்டாள்.பின் வேகமாக வெளியில் வந்து,

“வருண்,விஜய்….நீங்க இரண்டு பேரும் இந்த ரூம்ல பிரஷ் பண்ணிக்கோங்க….”என்று எதிரே இருந்த ரூமைக் காட்டினாள்.வருண் சரி என்னும் விதமாக எழுந்து செல்ல விஜயோ அமைதியாக அமர்ந்தபடி இருந்தான்.அவனது கூர் விழிகள் மிருணாளினியை ஊசி போல குத்தியது.அதிலே என்ன நடந்தது என்று நீ கூற வேண்டும் என்ற பொருள் மறைந்திருந்தோ என்னவோ.அதை உணர்ந்த மிருணாளினி சுற்றும் முற்றும் பார்த்தாள்.

அது மூன்று படிக்கை அறைகள் கொண்ட பெரிய வீடு.வரவேற்பறையில் இருந்து சமையல் அறை பார்க்கும் வண்ணம் இருக்கும்.அதனால் தான் மிருணாளினி வேகமாக சமையல் அறையை பார்க்க அங்கு அந்த பெண் அடுப்பின் பக்கம் திரும்பி ஏதோ செய்து கொண்டிருந்தாள்.அதை கவனித்தவள் வேகமாக விஜயின் அருகில் உள்ள மேடையில் உள்ள புத்தகத்தை எடுப்பது போல் வந்து,

“ப்ளீஸ் விஜய்….நான் நீங்க கேட்குற கேள்வி எல்லாத்துக்கும் பதில் சொல்லுறேன்….ஆனா இப்ப இல்லை ப்ளீஸ்….என்னை கொஞ்சம் புரிஞ்சிக்கோங்க….”என்று மன்றாடலாக கூற,விஜய்க்கு அவளது அருகாமையும்,அவளது மென்மையான பேச்சிலும் மனது சற்று சமன்பட்டது.இருந்தும் அவளது கைகளை சுட்டிக் காட்டி,

“உடம்புக்கு என்ன….டிரிப்ஸ் போட்ட கை ஏன் இப்படி வீங்கி இருக்கு…”என்று சற்று அழுத்தமாக கேட்டான்.அவளோ சற்று தயங்கியவள் பின் அவனது முகம் காண அதில் நீ சொல்லியே ஆக வேண்டும் என்ற பார்வை பதிந்து இருந்தது.இவன் சொல்லாமல் விட போவது இல்லை என்பதை உணர்ந்தவள்,

“கொஞ்சம் பீவர் ஹெவி ஆகிடுச்சு…அதான் டிரிப்ஸ் போட்டாங்க….நான் இந்த கை மேலேயே தலையை வச்சு தூங்கிட்டேன் போல அதான் வீங்கிடுச்சு நினைக்குறேன்….”என்று கூற,அவளை மேலும் முறைத்தான்.அவனது குற்றம்சாட்டும் பார்வையை கண்டவள் வேகமாக தன் கைகள் இரண்டையும் தன் காதுகளில் வைத்து,

“சாரி…நிஜமா வேணும்னு செய்யல….நான் நேத்தி…ப்ச் விடுங்க….”என்று கண்கள் கலங்க கேட்க விஜய்க்கே ஒருமாதிரி ஆகி போனது.அவளது கலங்கிய கண்களை காண பிடிக்காதவன்,

“சரி…சரி….விடு….”என்று அவன் கூறும் நேரம் வீட்டின் அழைப்பு மணி அடிக்கவும் சரியாக இருந்தது.

“செக்யூரிட்டி வந்துட்டாரு….”என்று கூறிவிட்டு சென்று கதவை திறக்க செல்ல,விஜயோ அவளை பார்த்துக் கொண்டே அறைக்குள் நுழைந்தான்.

விஜய் குளித்து முடித்து வெளி வரும் போது மற்ற மூவரும் டைனிங் டேபிளில் குழும்பி இருந்தனர்.மிருணாளினியும் குளித்து வேறு உடைக்கு மாறி இருந்தாள்.முகம் சற்று பளிச் என்று இருந்தது.அவனது பார்வை உணர்ந்தாளோ என்னவோ டேபிளில் பழங்களை நறுக்கிக் கொண்டிருந்தவள் நிமிர்ந்து பார்த்தவள்,

“ஏய் விஜய்…வா…சாப்பிடலாம்…நாங்க எல்லாரும் உனக்காக தான் வெயிட் பண்றோம்….”என்று சிரித்த முகமாக அழைத்தாள்.அதற்குள் கீர்த்தனாவும்,

“வா விஜி…சாப்பிடலாம்…ரொம்ப பசிக்குது….சீக்கிரம் வா….”என்று பரபரத்துக் கொண்டு அழைத்தாள்.அவளது அழைப்பே கூறியது அவளுக்கு நல்ல பசி என்று.

“டேய் நல்லவனே வாடா…இல்லனா நமக்கு எதுவும் கிடைக்காது போல….சாப்பாட்டு ராணி முழுசையும் திண்ணுடுவா….வா….”என்று வருண் அழைக்க,அவனது தலையில் பிளேட்டால் அடித்தாள் கீர்த்தனா.

“ஆஆஆஆ….ஏய் ராட்சசி….ஏன்டி என்னை அடிச்ச….”என்று வருணும் சண்டைக்கு கிளம்ப,மிருணாளினிக்கு இவர்களின் சண்டைகளை ரசித்து கொண்டு சிரித்துக் கொண்டும் இருந்தாள்.அதற்குள் விஜயும் அவர்களிடம் நெருங்கி இருந்தான்.அவனுக்கும் அந்த காலை பொழுது வெகு நாட்களுக்கு பிறகு ரம்மியமாக இருந்தது.அதுவும் மிருணாளினியின் மலர்ந்த முகம் மேலும் அவனை வெகு நாட்களுக்கு பிறகு சற்று இம்சித்தது.நொடிக் ஒருமுறை அவளிடம் செல்லும் தன் விழிகளுக்கு கடிவாளமிட மிகவும் சிரம்மபட்டு தான் போனான்.

“போதும் போதும்…..நிறுத்துங்க டா உங்க காமெடிய…”என்று விஜய் கூற,வருணோ,

“ஏன்டா சொல்லமாட்ட அவ என்னை அந்த அடிக்கிறா….நீ அதை காமெடினு சொல்லுரியா….இருடா நான் உனக்கு சாபம் கொடுக்குறேன் நீயும் என்ன மாதிரியே உன் பொண்டாட்டிக் கிட்ட அடிவாங்குவ பாரு….அப்ப தெரியும் என் நிலைமை….”என்று வருண் கூற,

“என் பொண்டாட்டி அப்படியெல்லாம் இருக்கமாட்டா…”என்று கூறியவன் விழிகளோ மிருணாளினியின் மீதே இருந்தது.அதே நேரம் அவளும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.இருவரின் பார்வையும் ஒன்றுடன் ஒன்று கலந்து மீண்டது.வருண் இந்த பார்வை பரிமாற்றங்களை கவனித்தும் கவனிக்காதது போல் இருந்து கொண்டான்.

“போதும் எல்லாரும் பேசினது…சாப்பிடுங்க…”என்று மிருணாளினி கூறினாள்.அனைவரும் சாப்பிட அமர்ந்தனர்.மிருணாளினி மட்டும் வேலை செய்யும் பெண்ணை வருமாறு செய்கை செய்து வெளியில் அழைத்தாள்.

“நீங்க சாப்பிடுங்க…இதோ நான் வந்துடுறேன்…”என்றுவிட்டு சென்றாள்.மற்ற மூவரும் சாப்பிட ஆரம்பிக்க,சற்று நேரத்திற்கு எல்லாம் வரவேற்பறையில் மிருணாளினியின் குரல் ஓங்கி ஒலித்தது.மூவரும் பாதி சாப்பாட்டில் எழுந்து வெளியில் வர அங்கு,வேலை செய்யும் பெண் கைகளை பிசந்தபடி நிற்க மிருணாளினி முறைத்துக் கொண்டு நின்றாள்.

“இப்ப என்ன உன் முதலாளி சொன்னா கேட்பதான….இரு….”என்று கடுமையாக பேசியவள்.வேகமாக வீட்டின் அலைபேசியில் யாருக்கோ தொடர்பு கொள்ள,மறுபக்கம் எடுக்கப்பட்டதும்,

“நான் மிருணாளினி பேசறேன்…”என்றவுடன் எதிர் முனையில் என்ன கூறப்பட்டதோ,

“இங்க பாருங்க இப்ப நான் பேசியே ஆகனும்…இப்ப அவரு பிஸினா நான் நேரா கம்பெனிக்கு வருவேன்…அப்புறம் உங்க முதலாளிக்கு தான் பிரச்சனை பார்த்துக்கோங்க….”என்று கூறிவிட்டு பேசியை வைத்தாள்.அங்கு நடக்கும் அனைத்தையும் மற்ற மூவரும் ஏதோ நாடகம் போல் பார்த்துக் கொண்டிருந்தனர்.என்ன என்று கேட்க சென்ற கீர்த்தனாவை வருண் கைகளை பிடித்து தடுத்திருந்தான்.

மிருணாளினி கோபமாக பேசிவிட்டு அடுத்த ஐந்து நிமிடத்தில் அலைபேசி அலறியது.அதை வெறித்தவளின் இதழ்கள் இகழ்ச்சியில் வளைந்தன,அந்த அலைபேசியை எடுத்து காதில் வைத்தவள்,

“எனக்கு என்னை பார்த்துக்க தெரியும் தாத்தா…நீங்க எனக்காக கஷ்டபட வேண்டாம்…”என்று கூற,மறுபக்கம் என்ன கூறப்பட்டதோ வேகமாக தன் நண்பர்களை திரும்பி பார்த்தவள் விஜயிடம் தன் பார்வை நிலைக்கவிட்டவாறே,

“அதான் உங்களுக்கு தெரிஞ்சிடுச்சே….அப்புறம் எதுக்கு என் கிட்ட கேட்குறீங்க….ஆமா வந்திருக்காங்க….இங்க என்கூட தங்க போறாங்க….இனி இந்த மாதிரி வேவு பார்க்குற வேலையெல்லாம் வச்சுக்காதீங்க எனக்கு பிடிக்கல…இப்ப அந்த பொண்ணை அனுப்பிடுறேன்…வைக்குறேன்….”என்று மறுமுனையில் பேசுவதற்கு வாய்ப்பே அளிக்காமல் வைத்துவிட்டாள்.

அலைபைசியை வைத்தவுடன் நீண்ட மூச்சொன்றை இழுத்துவிட்டவள்,அந்த பெண்ணிடம் திரும்பி தனது கை பை எடுத்து பணத்தை திணித்தாள்.அவளோ வாங்க மறுக்க,

“பிடி…வச்சுக்கோ…உன்னோட தம்பிக்கும்,தங்கைக்கும் படிக்கிற செலவுக்கு உதவும்…”என்றவள்,

“ஒரு நிமிஷம் இரு….வரேன்…”என்று உள்ளே சென்றாள்.அவள் வெளியில் வரும் போது கையில் சில பைகள் இருந்தது.அனைத்தும் உயரக உணவங்களில் இருந்து வந்திருந்தது.

“இந்தா சாப்பாடு…”என்று கொடுக்க,அந்த பெண்ணோ,

“வேண்டாம்….”என்னும் விதமாக தலையை மட்டும் ஆட்ட,அவளின் அருகில் வந்த மிருணாளினி,

“பிடி ராக்‌ஷி….எப்படியும் இங்கேயிருந்து சாப்பாடு எடுத்துட்டு போக மாட்ட….உன்னை எப்படி வெறும் வயித்தோட அனுப்புறது….எனக்கு கஷ்டமா இருக்கும்….என்னாலையும் நிம்மதியா சாப்பிட முடியாது….”என்று கூற அப்போதும் அந்த பெண் உணவை வாங்க மறுக்க,

“ம்ம்…சரி…நான் ரெண்டு நாளா சாப்பிடல…இன்னைக்கும் சாப்பாடு இல்லைனு எனக்கு எழுதியிருக்கு போல…”என்று கூறி முடிக்கும் முன் அந்த உணவுகளை வாங்கியிருந்தாள் ராக்‌ஷி.வாங்கியவள் கலங்கிய விழிகளுடன்,

“அப்படியெல்லாம் சாப்பிடாம இருந்துடாதீங்க….நான் மதியத்துக்கும் தான் சேர்த்து சமைச்சிருக்கேன்…கண்டிப்பா நீங்க சாப்பிடனும்…இல்லை நான் திரும்பி வருவேன்….”என்று கலங்கியவாறே கூற,

“ஏய் ஏய் அழாத….நான் கண்டிப்பா சாப்பிடுவேன்….நீ போ…அப்புறம் அம்மாவை நான் வர சொன்னேன்னு சொல்லு…புரியுதா….”என்று சற்று அழுத்துடன் கூற அவளும் தலை நன்கு உருட்டி விட்டு நகர போனவள் பின் என்ன நினைத்தாளோ,

“அம்மாவை எதுவும் சொல்லாதிங்க…அவங்க மேல தப்பு இல்லை…”என்று கூற,

“ஆமா….ஆமா…தப்பே இல்லை தான்…அதான் படிக்கிற பொண்ணை இந்த வேலைக்கு அனுப்பியிருகாங்க….பயப்படாத நான் எதுவும் சொல்லமாட்டேன்…தைரியமா போ….”என்று கூற மிருணாளினியை நன்றி பார்வை பார்த்தவள்,

“நீங்க அம்மா சொன்னமாதிரியே தான் இருக்கீங்க…”என்று கூற மிருணாளினி,

“என்ன சொன்னாங்க….”என்று கேட்க,

“அப்படியே பெரியம்மா மாதிரி….அவங்களும் இப்படி தான் இருப்பாங்களாம்….”என்று கூறினாள்.அவள் கூறியதை கேட்டு சிரித்தவள் பதில் ஏதும் கூறவில்லை.ஒருவாறு ராக்‌ஷி விடைபெற்று சென்றவுடன்.உள்ளே வந்த மிருணாளினி தன் நண்பர்களை நோக்கி,

“சாரி…ஏன் பாதி சாப்பாட்டுல எந்திரிச்சு வந்தீங்க வாங்க….”என்று அழைத்து வந்து அமர வைத்து தனக்கும் உணவை எடுத்து வைத்து உண்ண தொடங்க,மற்றவர்களோ அவள் உண்ணுவதை பார்த்துக் கொண்டிருக்க,

“என்ன ஆச்சு…சாப்பிடுங்க….”என்று மூவரையும் பார்த்து கூற,அவர்களோ என்னதான் நடக்கிறது என்னும் ரீதியில் அவளை காண,அதை புரிந்து கொண்டவளோ,

“ப்ளீஸ் சாப்பிடுங்க….நான் நீங்க கேட்குற எல்லா கேள்விக்கும் பதில் சொல்லுறேன்….நான் இரண்டு நாளா சாப்பிடல எனக்கு ரொம்ப பசிக்குது….நீங்க சாப்பிட்டால் தான நானும் சாப்பிட முடியும்….”என்று கெஞ்சலாக கூற,

“ஏய் எதுக்கு இப்படி எல்லாம் பேசுற….இப்ப என்ன நாங்க சாப்பிடனும் அவ்வளவு தான சாப்பிடுறோம்….”என்று கூறிவிட்டு கீர்த்தனா சாப்பிட தொடங்க,ஆண்களும் சாப்பிட தொடங்கினர்.சாப்பிட்டு முடிக்கும் வரை அங்கு மௌனம் மட்டுமே.யாரும் பேசும் நிலையில் இல்லை சற்று முன் இருந்த இதமான மனநிலை இப்போது இல்லை.

சாப்பிட்டு முடித்து அனைவரும் வரவேற்பறையில் சோபாவில் அமர யாரும் கேட்காமலே மிருணாளினியே பேச்சை தொடங்கினாள்.

“உங்க எல்லாருக்கும் வி.வி குரூப்ஸ் பத்தி தெரியுமா….இங்க டெல்லியில ரொம்ப பெரிய புள்ளி…”என்று கூற,

“எனக்கு தெரியாதே….நான் கேள்விபட்டது இல்லை….”என்றாள் கீர்த்தனா.

“ம்ம் உனக்கு தெரிஞ்சிருக்காது…இங்க நார்த் சைடு தான் அவங்க பெரிய ஆளுங்க….”என்று கூற,அவள் கூறியதை ஆமோதிப்பது போல் வருணும்

“ஏன் தெரியாது இங்க நார்த் சைடு முழுசும் அவங்க கால் பதிக்காத இடமே இல்லை…அது எவ்வளவு பெரிய குரூப்….நானே இரண்டு தடவை அங்கு வேலைக்கு டிரை பண்ணேன் ஆனா கிடைக்கல…”என்று வருண் கூற,

“ம்ம்….ஆமா…இங்க சாப்ட்வேர் அன்ட் ஹார்ட்வேர்ல அவங்க முதல் இடம்….அந்த கம்பெனி சிஇஒ மிஸ்டர்.விஸ்வநாத ராவ்….அவரு என்னோட தாத்தா…”என்று கூற,

“என்ன என்ன என்ன சொன்ன…”என்று அதிர்ச்சியில் மயங்கி விழுந்துவிட்டான் வருண்.

Advertisement