Advertisement

காதல் வானவில் 11

விஜய் தனது மடிகணினியின் முன் தீவிரமாக எதையோ பார்த்துக் கொண்டிருந்தான்.அப்போது அவனின் அருகில் வந்து யாரோ நிற்கும் அரவம் தெரியவும் நிமிர்ந்து பார்க்க,அங்கே அவனை கண்டு புன்னகைத்தவாறு நின்றிருந்தாள் பூர்ணிமா.அவளை கண்டு பதில் புன்னகை புரிந்தவன்,

“என்ன பூர்ணிமா…என்ன விஷயம்…ஏதாவது சந்தேகமா….”என்று கேட்க,அவளோ,

“என்ன விஜய் எப்போதும் புராஜக்ட்,பைல்,ஆபிஸ்….இதுமட்டும் தான் உங்க கண்ணுக்கு தெரியுமா….”என்று கேட்க,விஜயக்கு முதலில் அவள் என்ன கேட்கிறாள் என்றே புரியவில்லை.அதனால்,

“என்ன பூர்ணிமா எனக்கு புரியலை….”என்று குழம்பியவாறு கேட்க,அவனை கண்டு முறைத்தவள்,

“அப்ப நீங்க மறந்திட்டீங்க….அப்படி தான….”என்று சிறு குழந்தை போல் உதடுபிதுக்க,விஜய்க்கு என்ன என்ன நான் மறந்தேன் என்பதிலேயே மண்டை சுழன்றது.இவ்வாறு அவன் முழித்துக் கொண்டு இருக்க,

“ஹலோ…பர்த்டே பேபி….எப்போ  எங்களுக்கெல்லாம் டிரீட்….”என்று பின்னிருந்து வருண் கேட்க,விஜய்க்கு அப்போது தான் நியாபகத்திற்கு வந்தது அன்று பூர்ணிமாவின் பிறந்தநாள் என்று நேற்றே கூறியிருந்தாள் தான் அவன் தான் மறந்துவிட்டான்.

“அச்சோ….”என்று தலையில் அடித்துக் கொண்டவன்,பூர்ணிமாவிடம் திரும்பி,

“சாரி…அண்ட் ஹேப்பி பர்த்டே….”என்று வாழ்த்த,அவளோ அரை மனதாக ஏற்றுக் கொண்டாள்.

பின்னே அவள் நேற்று தனக்கு பிறந்தநாள் என்று எல்லாரிடமும் கூறியதற்கு முக்கிய காரணம் விஜய்க்கு தெரியபடுத்தவே தான்.நேற்று இரவிலிருந்து அவன் தனக்கு வாழ்த்து சொல்லுவான் என்று அலைபேசியை பார்த்தபடி அமர்ந்திருந்த பூர்ணிமாவுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.

விஜய் டீம் லீடர் என்ற முறையில் நல்ல பழுகுபவன் மற்ற நேரங்களில் அனைவரிடமும் சற்று ஒதுங்கியே இருப்பது போல் தோன்றும் அதை போக்கவே அவள் அவ்வபோது அவனிடம் சந்தேகம் என்று கூறிக் கொண்டு அவனிடம் பேசுவதே அவனும் அவளிடம் வேலையில் அனைத்தையும் சொல்லிக் கொடுப்பான்.மற்ற விஷயங்கள் ஏதாவது பேசினால் அவனிடம் வெறும் புன்னகை மட்டுமே பதிலாக கிடைக்கும்.அதனால் இன்று அவனிடம் எப்படியேனும் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது பேசிவிட வேண்டும் என்று தீர்மானித்த பூர்ணிமா அவனையும் தனது பார்டீக்கு அழைத்தாள்.

“விஜய் இன்னைக்கு சாய்ந்திரந்தம் ஒரு சின்ன பார்டீ இருக்கு நீங்க கண்டிப்பா வரனும்…”என்று தேன்சிந்தும் குரலில் கேட்டாள்.விஜயோ இரண்டு நிமிட யோசனைக்கு பின்,

“சரி….வரேன் பூர்ணிமா…”என்று கூறிவிட்டு வருணுடன் இணைந்து கொண்டான்.

பூர்ணிமாவுக்கு விஜய் வருகிறேன் என்று கூறியதே தனக்கு கிடைத்த முதல் வெற்றி என்று நினைத்தவள்.அடுத்து அவனிடம் எப்படி தன் மனதை உரைப்பது என்று நினைவுகளில் மூழ்கிபோனாள்.ஆனால் அவள் ஒன்றை மறந்தாள் அவளுக்கு விஜயை பிடித்தது போல் விஜய்க்கும் தன்னை பிடித்திருக்குமா என்று எல்லாம் அவள் யோசிக்கவில்லை.அவள் மனதில் தன்னை யாரும் நிராகரிக்க முடியாது என்ற கர்வம் இருந்தது அதுவே அவளுக்கு வருங்காலத்தில் எதிரியாக போகிறது என்பதை அவள் அறியவில்லை.

அன்று மாலை பூர்ணிமாவின் பிறந்தநாளிற்கு கிளம்பிக் கொண்டிருந்தான் விஜய்.அப்போது அவனின் அன்னை நீலவேணி,

“என்னடா விஜி….எங்க கிளம்பிட்ட….”என்று கேட்டவாறே அவனுக்கான காபி கோப்பையை நீட்ட,

“ம்மா…நான் சொன்னேன்ல என்னோட டீம் மெட் பூர்ணிமா….அவளுக்கு இன்னைக்கு பிறந்த நாள்….அதுக்கு பார்டீ கொடுக்குறா….அதான் கிளம்புறேன்….”என்றவன் தன் அன்னை கொடுத்த காபியை பருகியவாறே பதில் தந்தான்.

“அது யாருடா….புது பொண்ணா….”என்று வேணி ஆர்வமாக கேட்க,அவனும் காபியை ரசித்துக் கொண்டே ம்ம் கொட்டினான்.

“பேரு என்னடா சொன்ன…”என்று கேட்க,அவரை முறைத்தவன்,

“எதுக்கு கேக்குறீங்க….”என்று ஒருமாதிரி கேட்க,அவனின் தலையில் செல்லமாக தட்டியவர்,

“ம்ம் நீ திடீர்னு யாரையாவது கூட்டிட்டு வந்து நின்னா…அதுக்கு தான் நான் சுதாரிப்பா இருக்கேன்….அதுவும் நீ அந்த மிருணா பொண்ணை பத்தி பேசும் போது எனக்கே சந்தேகமா இருந்துச்சு…”என்று கூற அதுவரை தன் அன்னை தந்த காபியை ரசித்துக் கொண்டிருந்தவனுக்கு புரையேறியது.

“டேய் டேய்….”என்று அவனின் தலையை தட்ட வர,அவனோ வேகமாக எழுந்து,

“ம்மா….என்ன இது இதை நீங்க அந்த குட்டிபிசாசு கீர்த்தி கிட்ட ஏதாவது சொன்னீங்களா….”என்று பதட்டமாக கேட்க,அவரோ இல்லை என்பதாக தலையாட்டினார்.

“நல்லவேளை செஞ்சீங்க….நீங்க பேசுனது மட்டும் அந்த முசுடுக்கு தெரிஞ்சிது என்னை உண்டு இல்லைனு ஆக்கிடுவா….”என்று வேகமாக கூற,நீலவேணியோ சத்தமாக சிரித்தவர்,

“அவ்வளவு பயமாடா அந்த பொண்ணுக்கிட்ட…உனக்கு சரியான ஆளு தான் போ….நான் சும்மா தான்டா கேட்டேன்….எனக்கு என் பையன் மேல நம்பிக்கை இருக்கு….”என்று கூறிவிட்டு செல்ல,விஜயோ,

“இப்ப இவங்க என்ன சொல்லவாரங்க….என்னை லவ் பண்ணுனு சொல்லுராங்களா இல்லை பண்ணாதனு சொல்லுராங்களா….”என்று தனக்குள் புலம்பினான்.

இவ்வாறு விஜய் தனக்குள் புலம்பியவாறே கீழே கிளம்பி வர,அப்போது வரவேற்பறைக்குள் புயலென வந்தாள் கீர்த்தனா.அவளது முகமே அழுதது போல் இருந்தது.வந்தவள் வேகமாக விஜயை நெருங்கி,

“விஜி….உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசனும்….வா….”என்று அழைத்தாள்.

“ஏய் கீதூ…என்ன ஆச்சு…ஏன் இப்படி இருக்க….”என்று பதட்டமாக கேட்க,அவளோ பதில் ஏதும் கூறாமல் அவனது கைகளை பற்றிக் கொண்டு தோட்டத்திற்கு அழைத்து சென்றாள்.

“விஜி….விஜி….”என்று ஏதோ தடுமாற,விஜய்க்கு பொறுமை பறந்தது.

“ஏய் என்னனு சொல்லபோறியா இல்லையா….என்ன ஆச்சு…”என்று உரக்க கத்த,அதில் நடுங்கியவள்,

“மிருணா காணும் விஜி….”என்று கூறிவிட்டு அவனது நெஞ்சில் மோதி அழ தொடங்கினாள்.விஜய்க்கு ஒன்றும் புரியவில்லை,

“என்ன…”என்று அவன் கேட்க,கீர்த்தனாவோ எதையும் காதில் வாங்காமல்,

“இரண்டு நாளா அவ என்னோட மெஸேஜ் எதையும் பார்க்கல விஜி….எப்போதும் நான் மெஸேஜ் அனுப்பிச்சா பார்பா….நானும் ஏதோ ரொம்ப வேலையா இருக்காளோ நினைச்சு அவளோட யூனிட்க்கு சாதாரணமா போற மாதிரி போய் பார்த்தேன்….அங்க அவ இல்லை…அங்க உள்ளவங்க கிட்ட கேட்டா இரண்டு நாளா வரலை ஏதோ எமெர்ஜன்சினு சொல்லிட்டு போயிருக்காளாம்….என்னனு கேட்டா தெரியலைனு சொல்லுறாங்க…..எனக்கு என்னமோ பயமா இருக்கு….”என்று கூறி அழ,விஜய்க்கு கோபம் கட்டுக் கடங்காமல் வந்தது.

“அவ எங்க போனா உனக்கு என்ன…அவ தான் உன்கிட்ட பேசுறது இல்லை தான அப்புறம் என்ன…விடு…”என்று விட்டேத்தியாக கூறினான்.அவனுக்கு உள்ளுக்குள் கோபம் தான் இருந்தும் அதை கீர்த்தனாவிடம் காட்டவில்லை.

“என்ன விஜி இப்படி சொல்லிட்ட…அவ நம்ம பிரண்ட்…யார் சொன்னா அவ என்கிட்ட பேசலனு….நாங்க நேரடியா பேசிக்கல அவ்வளவு தான் ஆனா நான் தினமும் அவகிட்ட பேசிட்டு தான் வேலைக்கே வருவேன்….எப்போதும் எங்காயாவது போனா கண்டிப்பா என்கிட்ட சொல்லாம போகமாட்டா….இப்படி திடீர்னு சொல்லாம போயிருக்கா என்னனு தெரியலை….”என்று கூறிக் கொண்டிருக்க,

“டேய் நீங்க இங்க இருக்கீங்களா….”என்றபடி வந்தான் வருண்.அவர்களின் அருகில் வந்தவன் கீர்த்தனாவின் அழுது வீங்கிய முகத்தைக் கண்டு,

“ஏய் என்னடி…ஏன் இப்படி இருக்க…என்ன ஆச்சு….”என்று கேட்க,அவளோ அவனை முறைத்து பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டாள்.அவளது செயலில் கடுப்பானவன் அவளது கரத்தை பற்றி திருப்பி,

“என்னடி நான் கேட்டா பதில் சொல்லாம திரும்பிக்கிற….என்ன…”என்று கேட்க,அவளோ,

“ஏன் உனக்கு தெரியாதா…நான் ஏன் இப்படி இருக்கேன்னு…”என்று மறுகேள்வி கேட்டாள்.அப்போது தான் வருணுக்கு புரிந்தது.மிருணாவை பற்றி அவனிடமும் கூறி அவனை மிருணாவின் வீட்டிற்கு அழைத்தாள் ஆனால் அவன் வர மறுத்துவிட்டான்.அதனால் இந்த கோபம் என்று புரிந்தவன் அலட்சாயமாக விஜயிடம் திரும்பி,

“நீ வா மச்சி…இவளுக்கும் வேற வேலையில்லை…இவ பிரண்டுக்கும் வேற வேலையில்லை….”என்று கோபமாக மொழிந்துவிட்டு விஜயை அழைத்தான்.அவனுக்கும் மிருணாளினியின் மீது வருத்தம் விஜய் பேசியது மிகவும் தவறுதான் என்றாலும் அவள் நடந்து கொண்டதும் நல்லதாக படவில்லை அதனால் தான் கீர்த்தனா அவளை பார்க்க அழைத்த போது கூட மறுத்துவிட்டான்.

“ஓ…உங்க இரண்டு பேருக்கும் தான் அவ எதிரியாச்சே….வேணாம் யாரும் வரவேணாம்…நானே போயிக்குறேன்….”என்று கோபமாக பேசிவிட்டு கீர்த்தனா சென்றுவிட,வருணோ,

“நீ வா மச்சி…அவ எங்கேயும் போக மாட்டா…சும்மா நம்மகிட்ட பேசுறா….வா பூரணி பர்த்டே பார்டீக்கு போகனும்….அவ வேற கிளம்பிட்டீங்காளானு இதோட இரண்டு மூனுவாட்டி போன் பண்ணிட்டா…..”என்று பேசிக் கொண்டே அவனை அழைத்து சென்றான்.

Advertisement