Advertisement

Chapter 24

சிறிது நேரம் கழித்து, தீபா மெல்லத் தலையை உயர்த்தி அவனைப் பார்த்தாள். அந்தக்கண்கள், மனதிலிருந்த அவன் மீதான காதவை முழுவதுமாகப பிரதிபலித்தது. அவன் இமையோரம் துளிர்த்திருந்த கண்ணீர், அவனது காதலின் ஆழத்தை அவளுக்கு முழுவதுமாக உணர்த்தியது.

“ஸாரி மாமா! நான் இவ்வளவு நாளா நீங்க சொல்ல வந்ததைப் புரிஞ்சுக்கவேயில்ல. படிப்புலயே என் முழு கவனமும் போயிடுச்சி, மத்த எதுலயும்… அறிவேயில்ல.”

“இப்ப மட்டும் அந்த அறிவு, எங்கிருந்து இந்தத் தலைக்குள்ள உதிச்சது?”  கேட்டபடி செல்லமாக அவள் தலையை ஆட்டினான்.

“நேத்து பரிட்சை எழுதினதுல டயர்டாகி மத்யானம் தூங்கினவ, இன்னிக்குக் காலைல தான் எழுந்தேன். ரூம்ல உங்களைக் காணுமேன்று அம்மாவைக் கேட்டான். அம்மாவைக் கேட்டேன். அம்மா நீங்க வக்கீலைப் பார்க்கப் போயிருக்கீங்கன்னு சொன்னங்க. அதைக் கேட்டவுடனேயே எனக்கு அதிர்ச்சியாயிருந்தது. இன்னிக்கு நமக்குக் கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆயிடுச்சே. அதனால நீங்க சொன்னபடி வக்கீலை பார்க்க போயிட்டிங்களோ-ன்னு நினைச்சு ஒரே பதட்டமா இருந்தது.

உங்களை எப்படியாவது அதுக்கு முன்னால பார்த்து, என் மனசுல இருக்கறதச் சொல்லணும்னு ஒரே பரபரப்பு. ஆனா, அந்த நேரத்துல தான் மாமா, நான் என் மனசையே முழுசாப் புரிஞ்சுகிட்டேன். நீங்க இல்லாத என்னுடைய எதிர்காலத்தை என்னால நினைச்சுக்கூட பார்க்க முடியல. நீங்க என் கூட இல்லன்னா, என்னோட எந்த முன்னேற்றமும் ஒண்ணுமே இல்லன்னு புரிஞ்சது. இந்த அஞ்சு மணி நேரம் உங்களை வந்து பாக்கங வரைக்கும் ஐந்தாயிரம் எண்ணங்கள்” சொல்லும் போதே தீபாவின் குரல் தழுதழுத்தது.

“ஏய் மக்கு! இதுக்கு ஏன் நான் வக்கீலைப் பார்க்க கடலூர் வரைக்கும் வரணும்? நான் இங்கு வந்தது, நாம இங்க சிப்காட்ல வச்சிருக்கிற ஷெட் சம்பந்தமான ஒரு பிரச்னைக்காக அதுக்காகத் தான் இங்கயே கடலூர்ல இருக்கிற வக்கீலைப் பார்க்க வந்தேன்.”

தீபா அசடு வழிய சிரிக்க, செல்லமாக அவள் கன்னத்தை நிமிண்டியபடி மேலே தொடர்ந்தான்.

“நீ வரதுக்கு முன்னால அக்கா போன் பண்ணாங்க. நான் வக்கீலைப் பார்க்க வந்திருக்கேன்னு தெரிஞ்சதும், உடனே நீயும் அங்கேருந்து கிளம்பிட்டேன்னு சொன்னாங்க. கல்யாணம் ஆகி ஒரு வருஷம் முடிஞ்சிடுச்சு. அதுக்கு மேல உன்னால ஒரு நாள் கூட காத்திருலுக்க முடியலியான்னு எனக்கு ஒரே வேதனை. என்ன செய்தும் என்னால உன் மனதை என் பக்கம் திருப்ப முடியலியேன்னு விரக்தி.

நீ வேற நல்ல அலங்காரம் பண்ணிட்டு சந்தோஷமா என் முன்னாடி வந்து நின்னியா? என்னை விட்டு விலகிப் போறதுல உனக்கு அவ்வளவு சந்தோஷமான்னும் ஒரே கோபம். அந்தப் பிரவீனை கல்யாணம் செஞ்சுக்க அவ்வளவு ஆர்வமா ன்னு ஒரு வெறி. அதான் தாங்க முடியல.”

”மாமா! நீங்களும் மக்குதான். பிரவீனும், வசந்தியும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பறாங்க. அவங்க ரெண்டு பேருக்கும் தான் கல்யாணம். நான் தான் அப்பவே சொன்னேனேஃஃஃ அவங்க எல்லாம் தோணினதேயில்லையே. இந்த அலங்காரம் என்னை, என் மனசை ஒரு பெண்ணாக உணர்ந்த பிறகு செய்து கொண்டது. முதல் முறையாக உங்களைப் பார்க்க வரும்போது, நான் நல்லா இருக்கணும் னு செய்துகிட்டது. நல்லா இருக்கா மாமா?” என்று கேட்டு, அவளும் சராசரிப்பெண்தான் என்று நிரூபித்தான். வந்தவுடனே அவள் அலங்காரத்தை எண்ணி தான் நினைத்தது வேறு, இப்போது, அவள் தனக்காக மட்டுமே, அவளை இப்படி அலங்கரித்துக் கொண்டு வந்திருக்கிறாள் என்பது தெரிந்ததும் ஆனந்தத்தில் தீக்கு முக்காடிப் போனான் ஜெய்.

“நீ சாதாரணமாவே சூப்பராயிருப்பே….. இப்ப அசத்தறே!” என்று அவளை அணைத்துத் தன் அன்பைப் பொழிந்தான். சிறிது நேரம் கழித்து தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு, தீபாவின் தலையைக் கோதியபடி “தீபா    இதுக்கு மேலஇ நாம இங்க இருந்தோம்னா சரிவராது. நம்முடைய வாழ்க்கையை நாம முதல்முறையா ஆரம்பிக்கும்போது, நம்ம வீட்ல தான் ஆரம்பிக்கனும்னு நினைக்கிறேன். அதனால வா! நாம் அக்காகிட்ட சொல்லிட்டு, ஊருக்குப் போகலாம்” என்று கரகரத்த குரலில் கூறினான்.

அவன் சொல்ல வந்ததைப்  புரிந்து கொண்டு முகம் சிவந்தவளாய் ‘மாமா’ நம்ப கல்யாணத்துக்கு முன்னால வசந்தி ‘நீங்க ரொம்ப அன்பானவர். உங்களைக் கல்யாணம் பண்ணிக்கறவ ரொம்ப லக்கி’ன்னு சொன்னாள். உங்களை, உங்க அன்பை, உங்க காதலை நான் இப்போ முழுமையா உணர்றேன். நான்  ரொம்ப லக்கிதான் மாமா” என்று கூறினாள்.

“நீ எவ்வளவு லக்கின்னு, இன்னிக்கு நைட் நம்ம வீட்ல மாமா காட்டறேம்மா. நீ இப்பக் கிளம்பு. இதுக்கு மேல தாங்காது” என்று பெருமூச்சோடு கூறினான் ஜெய்.

”மாமா! பஸ்ல வரும்போது ஒரு பாப்பாவை மடில வெச்சிருந்தேன். குழந்தை புடவையை ஈரமாக்கிடுச்சு. நீங்க போய் சித்திகிட்டே சொல்லுங்க. நான் ட்ரஸ்ஸை மாத்திட்டு வந்திர்றேன்” என்று கூறியபடி புடவையை மடித்து தோள்பட்டையில் குத்தியிருந்த பின்னை எடுத்தாள் தீபா.

”ஓ! அப்ப ட்ரெஸ்ஸெல்லாம் கூட எடுத்துட்டு, செட்டப்பா தான் வந்திருக்கே! என்று ஜெய் சிரிப்புடன் கூற,

“பின்ன! நான் திரும்பி ஊருக்குப் போறதாயிருந்தா, உங்களோட தான் போறதுன்னு சபதம் எடுத்தேனாக்கும்!” என்றாள் தீபா.

“அப்பச் சரி! நீ ட்ரெஸ்ஸை மாத்து. நாம ரெண்டு பேரும் சேர்ந்தே போகலாம்!” என்று ஜெய், அருகிலிருந்த நாற்காலியில் வசதியாக உட்கார்ந்தா.

“மாமா! ப்ளீஸ், நீங்க போங்க. எனக்கு வெக்கமாயிருக்கு” என்று சிணுங்கினாள் தீபா.

“இன்னிக்கு நைட் வரைக்கும் தான் இந்த ஜெய் ஒரு ஜென்டில்மேன். அதுக்கப்புறம் தான. அவன் எவ்வளவு பெரிய ரௌடின்னு நீ பாக்கப்போறே!”””” என்று சிரித்தபடியே நடந்து கதவருகே செல்லச் செல்ல, இன்று வராதிருந்தால் தான் எப்படி ஒரு நாளில் தன் வாழ்க்கையையே தொலைத்திருப்போம் என்று எண்ணிய தீபா, தன்னை அடக்க முடியாமல் “மாமா” என்று உணர்ச்சி மிகுதியில் கூவினாள்.

அவள் கூவலைக் கேட்டு திரும்பிய ஜெய், அந்த நொடியில் தன் மனதில் தோன்றிய எண்ணங்கள் முழுவதும் அவள் முகத்தில் பிரதிபலிப்பதைக் கண்டான். நாலே எட்டில் திரும்பி அவளை அடைந்தவன், அவளை இறுக அணைத்தான்.

ஐந்து ஆண்டுகளாக அவன் மனதில் அடக்கி வைத்திருந்த தாபம் முழுவதையும், அவள் மேல் பெரு மழை போல் பொழிந்தான். அவன் கைகள் அன்று கண்ணால் கண்ட வளைவுகளைத் தொட்டுப் பார்த்து பரிச்சயம் செய்து கொண்டன.

அவனுடைய உணர்ச்சிப் பெருக்கைத் தாங்க முடியாமல். நடுங்கிய தீபாவின் உடலெங்கும் மின்சாரம் பாய்ந்தது. கால்கள் நிற்க இயலாமல் தொய்ந்தன. தன் வேகத்தைத் தாங்காமல் அவள் துவள்வதை சிறிதுநேரம் கழித்தே முணர்ந்த ஜெய், மெல்லத் தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டு, தன் கைகளைத் தளர்த்தினான்.

         அவளைத் தள்ளி விலக்கி நிறுத்தி கரகரத்த குரலில், “கீழே வெயிட் பண்றேன் வ!” என்று கூறிவிட்டு அறையை விட்டு வெளியேறினான்.

தங்கம் அவர்கள் கிளம்புவதற்கு லேசில் விடுவதாக இல்லை. இரண்டு நாட்களாவது இருந்து விட்டுத் தான் போகவேண்டுமென்று அடம்பிடித்தாள். ஜெய், ஏதேதோ சொல்லிச் சமாளித்தான். கடைசியில் அடுத்த மாதத்திற்குள் இருவரும் வந்து தங்கிவிட்டுப் போக வேண்டுமென்ற வாக்குறுதியோடு தான் அவர்களைப் போகவிட்டார்.

இருவரும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பும் போதே மணி ஐந்தரை ஆகிவிட்டது. காரிலேறிய இருவருக்கும் பேசுகிற மனநிலை இல்லாமல் அமைதியை அனுபவித்தபடி வந்தனர். ஊர் எல்லையைத் தாண்டியதும், ஜெய் காரிலிருந்த ஸ்டீரியோவில் மெல்லிசைப் பாடல்களைப் போட்டான்.

அத்தனையும் காதல் ரசம் சொட்டும் பாடல்கள் என்பதால் அவர்களது மனநிலைக்கு ஏற்றதாக இருந்தது. அருகில் அமர்ந்திருந்த தீபாவின் வலது கையை, தனது இடது கரத்தால் இழுத்துத் தனது தொடையில் வைத்து அவளது கைகளைப் பற்றியபடியே ஒரு கையாலேயே காரை ஓட்டினான்.

அவனைத் திரும்பிப் பார்த்த தீபா, கண்களாலேயே அவனது மனநிலையை உணர்ந்து கொண்டு, அவனை நெருங்கி அமர்ந்தாள்.

Advertisement