Advertisement

அத்தியாயம்…7…2

இங்க ஷைலஜாவும், சூர்யாவும்  பேசி முடித்த அதே நேரம், இன்று வீட்டுக்கு நேரத்தில் வந்து  நிற்கும் ஷ்யாமை பார்த்து தனம் அவசர அவசரமாக சமையல் கட்டுக்கு சென்றவர் சமையலம்மாவிடம்.

“ சீக்கிரம் கல்ல பருப்பை  வெண்ணீரில் ஊற வை.  அப்போ தான் சீக்கிரம் ஊறும்.” என்று சொல்லி விட்டு தன் பேரனுக்கு இஞ்சி மணக்கும் டீயை தன் கைய்யால் போட்டு கொண்டு நடக்க முடியாது மூட்டு வலியால் காலை தாங்கி  நடந்து  வந்துக் கொண்டு இருந்த தனம்மாவை பார்த்து ஷ்யாமுவுக்கு .

‘ இதுக்கு தான் நான் நேரத்துக்கு  வருவது கிடையாது. தன்னை பார்த்தால் போதும் அவங்க வயசு கூட மறந்து என்னவோ சின்ன வயசு போல கிச்சனுக்கும், ஹாலுக்கும் நடையா  நடக்க வேண்டியது.

இதை இங்கு இருந்து குரல் கொடுத்தா,  சமையல்காரம்மா கொண்டு  வந்து கொடுக்க போறாங்க. இவங்க ஏன் இது எல்லாம் செய்யிறாங்க.” என்று தன் பாட்டியை மனதில் திட்டினாலும், அவரிடம் எதுவும் சொல்லாது அவசரமாக எழுந்து தன்னை நோக்கி வரும் பாட்டியை  இவன் விரைந்து சென்று அந்த  டீ கப்பை வாங்கி கொண்டவன், இங்கு இருந்தே சமையல்காரம்மாவிடம்.

“அங்கு இன்னொரு டீ இருக்கும். அதை எடுத்துட்டு வாங்க.” என்று சொல்லி ஒரு கையில் டீ கப்பையம், மறு கையில் பாட்டியை  பற்றிக் கொண்டு நடந்தவன், இருக்கைக்கு  அருகில் வந்ததும் பாட்டியை, அமர  வைத்து விட்டு, சமையல்காரம்மா கொண்டு வந்து டீயை தன் பாட்டியிடம் கொடுத்தவன் அவனும் தன் தனம்மா பக்கத்தில் அமர்ந்தான்.

சமையல்காரம்மாவிடம். “ தனம்மா கிச்சனுக்கு வந்து என்ன சொன்னாங்க.?” என்ற ஷ்யாமின் கேள்விக்கு, அவனுக்கு பதில் கொடுக்காது, தயக்கத்துடன் தனம்மாவை அந்த சமையலம்மா பார்த்தார்.

அதை கவனித்த ஷ்யாம். “ அங்கு என்ன பார்வை. நான் தானே உங்க கிட்ட கேட்டேன். என்னை பார்த்து  பதில் சொல்லுங்க.” என்ற  ஷ்யாமின் அதட்டல் குரலுக்கு,  அவர் ஏதோ வாய் திறப்பதற்க்குள் தனம்மா.

“ நீ போய் வேலையை பார்.” என்று அவசரப்படுத்தி சமையல் கட்டுக்கு அனுப்பி விட்டு தன் பேரனை பார்த்த தனம்மா.

“ அது ஒன்றும் இல்ல ராசா. உனக்கு மசால் வடை பிடிக்கும் தானே.” என்ற  பாட்டியின் பேச்சுக்கு, ஷ்யாம்.” அதுக்கு.” என்றதில்.

திக்கி திணறி. “ அது தான் ராசா  கொஞ்சமா கல்ல பருப்பை ஊற வைக்க சொன்னேன். வேறு ஒன்னும் இல்லடா ராசா. நீ எப்போவாவது தான் நேரத்தோடு வீட்டுக்கு வர்ற.

 உனக்கு பிடிச்சத கொடுக்க நான் நினைக்க கூடாதா..?”  ஷ்யாமின் கோபம் முகத்தை பார்த்து அவன் தாடையை பிடித்துக் கொண்டு  பேசியவரின் கையை பற்றி கொண்ட ஷ்யாம்.

“ எனக்கு பிடிச்சது செய்து தர்றிங்க. அது எல்லாம் ஓகே தான் அம்மா. ஆனா அதை நீங்க தான் செய்யனும் என்று நினைக்கிறிங்க பார். அது தான் எனக்கு சுத்தமா பிடிக்கல. உங்க வயசு உங்களுக்கு நியாபகம் இருக்கா.? இல்லையா.?” என்று முதலில்  கோபத்துடன் ஆரம்பித்த தன் பேச்சை கிண்டலுடன்  முடித்தான் .

திரும்பவும் ஷ்யாமின் பாட்டி தனபாக்கியம். “ அது இல்ல ராசா.   எண்ணையை ரொம்ப காய விட்டு ஸ்டவ்வ சின்னது செய்யாம அப்படி அப்படியே வடையை தட்டி மாடு கணக்கா போட்டு எடுத்துடுறாங்க.

அது உள்ளே வேகாம வெளியில் கலர் மட்டும் வெந்தா மாதிரி  இருக்கவும் இவங்களும் வேலை  முடிந்தா போதும் என்று தட்டில் எடுத்து வந்து கொடுத்துடுறாங்க. நாம பக்கத்தில் இருந்தா தான் பதமா எடுப்பாங்க.” என்று பாட்டி சொன்ன விளக்கத்தில் ஷ்யாம்.

“ நீங்க சொல்வது போல் சமைக்கலேன்னா சமையல் செய்யிறவங்களை  மாத்திடலாம். ஆனால் நீங்க எப்போவும்  கிச்சன் பக்கம் போக கூடாது. சொல்லிட்டேன்.” என்று ஷ்யாம் தன் தனம்மாவிடம் திட்ட வட்டமாக சொல்லி விட்டான்.

ஷ்யாமின் இந்த பேச்சை கேட்டுக் கொண்டே  கையில் வடை தட்டோடு ஓடி வந்த சமையலம்மா. “ தம்பி நான்  நல்லா தான் பெரியம்மா சொன்னது போல் தான் சமைப்பேன். ஆனா இவங்க  தான் என் பேரனுக்கு என் கையால் கொடுத்தா தான் திருப்தி என்று என்னை தள்ளிட்டு இவங்க  செய்வாங்க தம்பி.

இந்த வீட்டு சம்பளத்தை நம்பி தான் சீட்டு பிடிக்கிறேன். வேறு யாரையும் பார்க்காத தம்பி.” என்று தன் வேலை பரிபோய் விடுமோ என்ற பயத்தில் உண்மையை போட்டு உடைத்தார்.

ஷ்யாம் சிரித்துக் கொண்டே. “ எனக்கு தெரியும். நீங்க பயப்படாது போய் வேலை பாருங்க.” என்று சொல்லி அவர்களை அனுப்பி விட்டு தன் பாட்டியிடம்.

“உங்க அலம்பல் தாள முடியல தனம்மா.” என்று சொன்னவன் தட்டில் இருந்த வடையை பாட்டிக்கு கொடுத்து விட்டு தானும் உண்டவன்,

தான்  எதற்க்கு  சீக்கிரம் வந்தோமோ அந்த பேச்சை எப்படி பாட்டியிடம் ஆரம்பிப்பது என்று அவன் யோசித்து கொண்டு இருக்கும் போதே, அவன் தாத்தா கிருஷ்ணமூர்த்தியும்  வீட்டுக்கு வந்து விட்டார். பின் பேச்சு வேறு விதமாக சென்று கொண்டு இருந்தது.

கிருஷ்ணமூர்த்தி இன்றும் தன் பேரனுக்கு உதவியாக தொழிலை மேற்பார்வை  பார்ப்பது.  கடை வாடகையை வசூலித்து கொண்டு வருவது.  என்று  வாரத்துக்கு நான்கு நாட்கள் ஏதாவது வேலைக்கு வெளியில் சென்று  கொண்டு தான் இருக்கிறார்.

அதே தான் தனபாக்கியமும். பேரனுக்கு என்றால் தன் வயதையே மறந்து  தானே அவனுக்கு அனைத்தையும் செய்து கொடுக்க நினைப்பார்.

 அதாவது ஒரு மகனுக்கு தாய் தகப்பன் என்ற ஸ்தானத்தை  பாட்டி தாத்தா பூர்த்தி செய்து கொண்டு இருக்கின்றனர்.

ஷ்யாம்   அவனுடைய ஐந்தாம் வயதில் அன்னையை விட்டு பிரிந்து, வந்த புதியதில் அழுதாலும் பின் தன் நிலை உணர்ந்து தன்னை மெல்ல தேற்றிக் கொண்டவனாக, தன் தாத்தா பாட்டியையே அவர்கள் சொன்னது போல் அப்பா அம்மாவாகவே நினைக்க ஆரம்பித்து விட்டான்.

அவர்களின் வயதின்  மூப்பு அவனின் பன்னிரெண்டாம் வயதில் தான் அவன்  உணர்ந்தான். அந்த  வயதில்  தாத்தா ஆபிஸ் செல்வதோ, பாட்டி தனக்காக அவர்கள் எழுந்து அனைத்தையும் செய்து கொடுப்பதோ அவன் பெரியதாக உணரவில்லை.

ஏழாவது படிக்கும் போது செய்த  விளையாட்டு தனத்தால், ஒரு பையனுக்கு காயம் ஏற்பட்டு ரத்தம்  கொட்ட. இரு   வீட்டுக்கும் தகவல் போக.  அடித்து காயப்படுத்திய வீட்டில் அவன் அம்மா  வேக வேகமாக வந்து தன் மகனின் காயத்தை ஆராய்வதை பார்த்தவன்.

பின் தன் பாட்டி மூட்டு வலியால் நடக்க முடியாது மெல்ல முகம் முழுவதும் பதட்டத்தில் இருக்க, நடந்தவரின் நிலை பார்த்து ஷ்யாம் அப்போது தான் அவர்களின் வயது.

தனக்காக இந்த வயதிலும்,  அவர்கள் செய்யும் வேலைகள் அனைத்தும் கணக்கிட்டவனாக தன் பாட்டிக்கு மேலும் சங்கடத்தை ஏற்படுத்த கூடாது என்று நினைத்து,

தான் காயம் ஏற்படுத்தியவன் அருகில் சென்றவன் அவன் கை பிடித்து  கொண்டு..

“ சாரி சூர்யா நான் தெரியாம அடித்து விட்டேன். என்னை மன்னித்துக் கொள். “ என்று அவனிடம் மன்னிப்பு வேன்டியவன்,  பக்கத்தில் தன்னையே பார்த்துக் கொண்டு இருந்த சூர்யாவின் அம்மாவிடமும்.

“ சாரி ஆன்ட்டி. நான் தெரியாம  அடித்து விட்டேன். இவ்வளவு போர்ஸா  அந்த அடி விழும் என்று நான் எதிர் பார்க்கவில்லை  சாரி ஆன்ட்டி.” என்று மன்னிப்பு  கேட்ட சிறுவனை அந்த தாய்க்கு ஏனோ பிடித்து விட்டது.

“ சரிப்பா. இனி இப்படி கை ஓங்க கூடாது என்ன.?” என்று அவர் கேட்கவும். ஷ்யாம் வேகமாக தலையாட்டினான்.

பின் மெல்ல. “ அவங்க தான் என் பாட்டி.” என்று நடந்து வருபவர்களை சுட்டி காட்டி சொன்னவன் பின் தயங்கி

“ பிரின்ஸ் கிட்ட என்னை திட்டுவது போல பேசாதிங்க ஆன்ட்டி. அப்புறம் பாட்டி ரொம்ப கஷ்டப்படுவாங்க.” என்று அவன் சொல்லும் போதே ஷ்யாமின் குரல் உடைவதை பார்த்து சூர்யாவின் அன்னை.

“ விடுப்பா விடு.”  என்று சொல்லி அவனை அணைத்துக் கொண்டவர்.

“ உன் பெயர் என்னப்பா .?” என்றும் கேட்டர்.

“ ஷ்யாம்.” என்று சொல்லும் போது தான் தனம்மா மெல்ல நடந்து வந்து இவர்கள் அருகில் வந்தது.

வந்தவர் என்ன ஏது என்று விசாரிக்கும் முன்னவே சூர்யாவின் அன்னை. “ அது ஒன்றும் இல்ல அம்மா. சின்ன பசங்க  விசயம். இதை பெரியது பண்ணி நம்மளை வர வழைத்து விட்டாங்க.” என்ற அன்னையின் பேச்சை கேட்ட சூர்யா தன் நெற்றியில் வழியும் ரத்தத்தை  துடைத்து, அதை பார்த்தவன் தன் அன்னையையும் ஒரு பார்வை பார்த்தான்.

அதை பார்த்த  ஷ்யாம் சிரித்து விட, அன்றில் இருந்து அவர்களுக்கு இடையே ஒரு அழகான நட்பு மலந்து இதோ இன்று வரை தொடர்கிறது.

ஷ்யாமுக்கு அன்று சூர்யாவின் நட்பு மட்டும் கிட்ட வில்லை. ஷ்யாம் தன்னையே உணர்ந்த நாள் அன்று என்று தான்  சொல்ல வேண்டும்.

பன்னிரெண்டு வயதுக்கு உண்டான விளையாட்டு தனம் மறைந்து, தன் பாட்டி  தாத்தாவின் நலன் கருதியே  அவன்  செயல்கள் அனைத்தும் இருந்தது.

முதலாவதாக அவன் செய்தது, பாட்டி எது சமைத்து கொடுத்தாலும், “ நல்லா இல்ல. உங்களுக்கு இதை தவிர  வேறு எதுவும் சமைக்க  தெரியாத  அம்மா. என் பிரண்ட் இன்னைக்கு இது சமைத்து கொண்டாந்தான். நல்லா இருந்தது.” என்று சொல்லி அப்போது பெண்மணிகள் சமைக்கும்  உணவின் பெயரை தன் பாட்டிக்கு தெரியாது என்று உணர்ந்தே அவன் சொன்னான்.

தனபாக்கியமும் “ நான் இந்த  பெயரை கூட கேட்டது இல்லையடா.” என்று  வருந்தும் பாட்டியின் முகத்தை பார்க்க ஷ்யாமுவுக்கே  பாவமாக தான் இருக்கும்.

இருந்தும் அடம் பிடித்து அன்றைய உணவாக சிலது சொல்லி “ இது எல்லாம்  உங்களுக்கு தெரியாது. சமையல் செய்யிறவங்களை வேலைக்கு வைங்க.” என்று  அன்றே திட்ட வட்டமாக சொல்லி விட்டான்.

அவனின் தனம்மாவும் அதை எளிதில் ஒத்துக் கொள்ளவில்லை. “அவங்க எல்லாம் எப்படி செய்வாங்களோ, நான் உன் உடம்புக்கு ஏத்தது போல் பார்த்து  செய்வேன் ராசா.” என்று சொல்லியும் கேளாது அடமாக அடுத்த வாரமே சமையலுக்கு என்று ஒரு ஆளை நியமித்து விட்டான்.

அதே போல் தான் தன் தாத்தா கிருஷ்ணமூர்த்தியோடு  தான் அவன் விடுமுறை நாட்கள் செல்லும். அந்த வயதில் அவனால் தொழிலில் தாத்தாவுக்கு உதவி செய்ய முடியாது. ஆனால் கற்று கொள்ளலாம் தானே.

அவன் இங்கு வரும் போது   தாத்தாவுக்கு   ஐம்பது வயது இருக்கும். ஆனால் அவர் தன் முப்பது வயது போல் தன் வாழ்க்கையை  பின் நோக்கி நகர்த்தி இதோ ஓடி கொண்டு இருக்கிறார்.

அவன் நினைத்தது போல்  தொழிலை அவனே ஏற்றுக் கொண்டு தன் தாத்தாவுக்கு முழு ஓய்வு கொடுக்க நினைத்தாலும் எங்கு, இதோ பாட்டியை போல் தான் அவரும்.

“ எனக்கு என்ன வயது ஆயிடுச்சி.” என்று அவரே ஒரு சிலதை பார்த்துட்டு இருக்கிறார் என்று தன் தாத்தா இன்றும் சுறு சுறுப்பாக இருப்பதை பார்த்துக் கொண்டே பழைய நினைவுகளில் மூழ்கியன் அதில் இருந்து வெளிவந்து.

“எப்படி விசயத்தை ஆரம்பிப்பது என்று  அவன் யோசிக்கும் போதே கிருஷ்ணமூர்த்தி. “ சக்தி யாரு தம்பி.” என்று அவர் நேரிடையாக கேட்டதும். ஷ்யாமும் சுற்றி  வளைக்காது.

“ தனம்மாவின் மருமகள் .” என்று சொல்லி விட்டான்.

கிருஷ்னமூர்த்தியும் நான் உனக்கு தாத்தாடா என்று நிருபிக்கும் வகையாக.

“ ஓகே முடிவு செய்திட்டா உடனே அதை செயல் படுத்தி முடித்து விட வேண்டும். வா போகலாம்.” என்று பேரனின் கை பிடிக்க, அவர்கள் இருவரின் கையையும் பற்றிய தனபாக்கியம்.

“ என்ன இரண்டு பேரும் விளையாடுறிங்களா.?  இதுக்கு எல்லாம் நல்ல நாள் பார்க்கனும். நம்ம பேரனுக்கு பிடித்த பெண்ணை வெறும் கைய்யோட எல்லாம் பார்க்க நான் வர மாட்டேன்.” என்று சொன்ன மனைவியின்  கையில்  ஒரு நகை பெட்டியை கொடுத்தவர்.

“ இன்று முகூர்த்த நாள்.  இப்போ போகலாமா.?” என்று கேட்ட தாத்தாவை எப்போதும் போல் ஷ்யாம் வியப்புடன் பார்த்தான்.

Advertisement