Advertisement

அத்தியாயம்….5

சொக்கலிங்கம் கெளசல்யா சொத்தை தனுஜாவின் வருங்கால கணவன் பெயரில் மாற்ற சொன்னதை தன் மனைவி சரஸ்வதியிடம்  சொன்னார்.

சரவஸ்தி.. “ அது எப்படி முடியுங்க…? அதுவும் அங்கு  இப்போ பணம் விசயத்தில் அவ்வளவு பிரச்சனை இருக்கும் போது. இருப்பதை அந்த பெண்ணுக்கே கொடுத்தால்,  அப்போ நம்ம பேத்திக்கு…? இரண்டா பிரிங்க என்று சொன்னா கூட ஒரு நியாயம் இருக்கு. அந்த பெண்ணும் நம்ம பார்த்து வளர்ந்த  பெண் தான்.

அதுவும் நம்ம மகள் மீது அவ்வளவு பாசம் வைத்து இருக்கா… கொடுப்பதில் தப்பு கிடையாது. ஆனால் மொத்தமா என்றால், நாளை நமக்கு,  நமக்கு அடுத்து நம்ம மகள்…  இப்படி எல்லாம் யோசித்து தானே முடிவு செய்யனும்.” என்று சொன்ன சரஸ்வதி அம்மாவின்  நியாபகத்தில் கூட ஷ்யாம் வராதது  தான் ஏன் என்று தெரியவில்லை.

அதுவும் மருமகன் இறப்பில் தன் பேரனை அப்படி வளர்ந்த ஆண் மகனா பார்த்த பின். உறவு மொத்தமும் தன் பேரனை வியந்து “என்னம்மா இருக்கான் . யார் இவன்…?   என்று விசாரிக்கும் போது எல்லாம் மொத்தமாக நம் உரிமையை கொடுத்து விட்டு விட்டு இருக்க கூடாதோ என்று நினைத்தவருக்கு, கூட இப்போது இந்த சொத்தில் அவனும் உரிமை பட்டவன் என்று  ஏன்  தோன்றவில்லை.

ஒரு சம்யம் இதை எதிர் பார்த்து தான், பார்த்திபன் ஷ்யாமை இங்கு அம்மா வழி பாட்டி வீட்டில் கூட இருக்க கூடாது என்று சொன்னாரோ, தெரியவில்லை.

இப்படி ஷ்யாமையே நினைத்து பாராது அந்த சொத்தை பற்றி  சரவஸ்வதியும் சொக்கலிங்கமும் ,. “  சரி இப்போது அவசரத்தில் எந்த முடிவும் எடுக்க வேண்டாம்.  கொஞ்சம் ஆற போடலாம்.” என்று ஒரு முடிவுக்கு வந்தனர்.

ஆனால் அதை செயல் படுத்த விடாது தனுஜாவுக்கு பார்த்த இடம்.. “ அடுத்த வாரம் வரை தான் டைம். எங்களுக்கு உங்களோட வேறு நல்ல இடம் வருது. இன்னும் கேட்டால் அந்த பெண் கிட்ட எந்த குறையும் கிடையாது. அப்படி இருந்தும் நான் உங்கள் வீட்டு பெண்ணை  என் மகனுக்கு  கல்யாணம் செய்ய நினைக்கிறேனா.. 

அதுக்கு காரணம் இரண்டு பேருக்கும் நிச்சயம் ஆகிடுச்சு, அதோட பாவம் உங்க வீட்டு பெண்ணுக்கு ஐந்து வருஷமா தேடியும் மாப்பிள்ளை கிடைக்காது இருந்தது.   பாவம் பார்த்து உங்களை யோசிக்க வைக்கிறது.

அதுவும் அப்போ  உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல, பணம் வசதியா இருக்கும்  போதே உங்க  பெண்ணின் அந்த குறையால் இடம் கூடல.

இதுல எல்லாம் போய்.. வெளியில் போன பணம் கூட திரும்ப வருமா வராதா..? என்ற நிலையில், இனி இடம் வருமா.. வயது வேற கூட.. அதுக்கு அடுத்து உங்க பெண் வேறு  இருக்கா.. எல்லாம் பார்த்தும் நான் ஒத்துக்குறேன்னா அதுக்கு  எங்க பெரிய மனசு தான் காரணம்.” என்ற  அவர்களின் பேச்சு கெளசல்யாவுக்கு, இன்னும் பயம் கொள்ளும் படி ஆனது.

ஆம் அவர்கள் சொல்வது சரி தானே.. அவர் இருக்கும் போது,  பணம் விசயத்தில் எந்த பிரச்சனையும் இல்லாத போதே, தனுஜாவுக்கு இடம் தழையவில்லை. இப்போது.. பணம் பிரச்சனை.  ஆண் இல்லாத வீடு. 

இதில் நிச்சயம் ஆகி திருமணம் நின்று விட்டது என்ற பெயரும் தானே சேர்ந்து வரும்  என்று நினைத்த கெளசல்யா.. 

தன் பெற்றோர்களிடம்  திட்ட வட்டமாக சொல்லி விட்டார்.. . “ எது என்றாலும், நான் பார்த்து கொள்கிறேன். அடுத்த வாரமே கடைகளை  மாப்பிள்ளை  பெயருக்கு மாற்றி எழுதி விடுங்க..” என்று.

சொக்கலிங்கத்திற்க்கும் , சரஸ்வதியம்மாவுக்கு, இதில் விருப்பம் இல்லாத போதும், மகளின்  வற்புறுத்தலால் ஒத்துக் கொண்டதும்  அந்த விசயம் சம்மந்தியிடம் சொல்ல பட..

எப்போது எப்போது என்று காத்துக் கொண்டு இருந்தவர்கள். அடுத்த நல்ல நாளில் பத்திரபதிவை வைத்துக் கொள்ள திட்ட  மிட்டு இருந்தனர்.

அதன் படி திங்கட் கிழமை அனைவரும் ரிஜிஸ்ட்டர் ஆபிசில் கூடி  விட்டனர். இது வரை பேசாத  தனுஜாவின் வருங்கால கணவன் இப்போது..

“ எனக்கு கொஞ்சம் வேலை அதிகமா இருந்த்து தனு. அது தான் உன்னை கூப்பிட முடியல.” என்று சொன்னவனின் பேச்சை ஆமோதிப்பது போல் தலையை ஆட்டினாளே தவிர, அடுத்து அவள் அவனிடம் பேச முயலவில்லை. மனது விட்டு விட்டது அவளுக்கு..

பிறந்த  உடன்  தாயை இழந்து. பிறக்கும் போதே குறையோடு பிறந்து என்று சோதனை அவளுக்கு பிறந்ததுமே ஆரம்பமாகி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனால் கெட்டதிலும் ஒரு நல்லது என்று அவள் வாழ்க்கையில் வந்தது என்றால், அது கெளசல்யா  அம்மா தான்.

இது வரை அவர்கள் தன்னிடம் வேற்றுமை பாராட்டியதே கிடையாது. ஷைலாஜாவோடு தனக்கு அதிகம் செய்வார்களே .. ஒழிய தன்னோடு  ஷைலாஜாவுக்கு அதிகம் என்று இது வரை அவர்கள் செய்தது கிடையாது.

தன் தந்தை கூட தன்னை சில சமயம் மனது புண்படும் படி பேசி இருக்கிறார். ஆனால் அம்மா.. கிடையாவே கிடையாது. அதே போல் தான் தங்கை ஷைலுவும். ஒரே தாய் வயிற்றில் பிறந்த குழந்தை போல் தான் வளர்ந்து வருகிறோம்.

சரி பிறக்கும் போது கொடுத்த பிரச்சனையே போதும் என்று கடவுள் நினைத்து விட்டார் என்று அவள் நினைக்கும் போது, அடுத்து அவள் திருமணம் விசயத்தில் வந்த தடைகள்.

இருபத்தி ஏழு வயது என்பது இந்த காலத்தில்  திருமணத்திற்க்கு அதிக வயது  என்று எல்லாம் சொல்ல முடியாது தான்.

ஆனால் அது வீட்டில் திருமணம் என்ற பேச்சு எடுக்காத போது அது பெரிய விசயமாக அந்த பெண்ணுக்கு தெரியாது. 

பெண் பார்க்க வந்து விட்டு ஏதோ ஒரு காரணத்தால் தடைப்பட்டு போனால், அதுவும் திருமணத்திற்க்கு பேசுகிறார்கள் என்று உறவு  முறைகளுக்கு தெரிந்த பின்..

“ என்ன இன்னுமா முடியல..” என்று பார்க்கும் இடத்தில் எல்லாம் கேட்கும் அந்த கேள்விகள் மூலம், தன்னால் அந்த பெண்ணுக்கு  அது ஒரு மன உளச்சலை கண்டிப்பாக கொடுத்து விடும்.

அந்த நிலையில் தனுஜா இருக்கும் போது தான் இதோ இந்த வரம்  முடிந்தது. அப்பா இருந்த வரை இனித்த அந்த இடம், இப்போது ஏனோ கசக்க ஆரம்பித்து விட்டது.

முதலிலேயே சவரன் அதிகம் கேட்டார்கள் தான். மற்றவர்கள் சொத்தை கேட்டதற்க்கு இது பரவாயில்லை என்று தான் அப்போது அவளுக்கு நினைக்க தோன்றியது.

அதுவும் அவர்கள் இனத்தில் சவரன் என்பது கிலோ கணக்கில் தான் கொடுப்பார்கள். அதனால் அது அவளுக்கு தவறாகவும் படவில்லை. அதோடு என் அப்பா எனக்கு வாங்கி தானே வைத்து இருக்கிறார். அது எனக்கு தானே இது நான் கணவன் வீட்டுக்கு எடுத்து கொண்டு போகிறேன் இதில் என்ன இருக்கு..? இதை தான் அவள் நினைத்தாள்.

ஆனால் இப்போது இதோ இந்த பத்திர பதிவு. யார் சொத்தை யார் கேட்பது..? என்று தான் அவள்  நினைத்தாள். அதுவும் இது ஷைலஜாவுக்கு சேர வேண்டிய சொத்து.

படித்த பெண் யாரின்  சொத்து யாருக்கு உரிமை என்பது நன்கு அறிந்த பெண் தான். தன்னை கெளசல்யா அம்மா சொந்த மகள் போல் பார்த்து கொண்டாலும், அவர்கள் அம்மா வீட்டு சொத்து, அவர் சொந்த மகளுக்கு தானே போய் சேர வேண்டும். அது தானே நியாயம் என்று நினைக்கும் தனுஜா கூட.. இந்த சொத்தில் ஷ்யாம் என்ற உரிமைப்பட்டவனும் இருக்கிறான் என்பது நியாபகத்தில் இல்லாது போய் விட்டது தான் வியப்பு..

ஒரு சமயம் வியப்பு இல்லையோ.. ஏன் என்றால் ஒருவர் விடாது அந்த சொத்து ஷ்யாமுக்கு சொந்தம் என்று ஏன் நினைக்கவில்லை.

ஒரு சமயம் இது கூட இருக்கலாமோ..அவனுக்கே அவ்வளவு இருக்கும் போது, இதை ஏன் அவன் எதிர் பார்க்க போகிறான் என்று..

அவர்களுக்கு தெரியவில்லை .. ஒரு சில  சொத்து பணத்தை மட்டுமே கொண்ட  விசயம் கிடையாது. அதில் அவர்கள் உரிமை உணர்வும் கலந்து  இருக்கும் என்று..

அதோடு தனுஜாவுக்கு தன் தந்தை இறந்ததில் இருந்து ஒரு  பாதுகாப்பற்ற உணர்வை அவள் உணர்ந்தாள். இன்னும் சொல்ல போனால் கெளசல்யா அம்மா இப்போது இல்லை எப்போதும்  தன்னை நல்லா பார்த்து கொள்வார்கள் தான் . அதில் எந்த வித சந்தேகமும் அவளுக்கு கிடையாது.

ஆனால் அதையும்  தான்டி அவள் மனது, தன் தந்தையை வைத்து தானே கெளசல்யா அம்மாவுக்கும் தனக்குமான உறவு.. தந்தையே போன பின்.. என்ற நினைப்பும் இப்போது எல்லாம் அவளுக்கு வருகிறது.

அதனால் தனக்கு என்று ஒரு உறவு வேண்டும் என்று அவளின் மனது எதிர் பார்க்க செய்யும் அதே வேளை.. இதோ இந்த சொத்தை கொடுத்து வரும் உறவு நல்லதா..?  இதுவும் அவளுக்கு தோன்றுகிறது.

எதிலும் ஒரு நிலையில்லா யோசனையில் தான் தனுஜா இருந்தாள்.  அந்த நிலையிலேயே பத்திர பதிவு அடுத்து உங்களுக்கு என்று அழைப்பு வந்தது.

அதன் உள்ளே போகும் போது கூட தனுஜா இது நல்லதிற்க்கா கெட்டதிற்க்கா.? என்ற யோசனை தான் அவளுக்கு..

அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று சரிப்பார்த்து   சொக்கலிங்கம்  தன் கைய்யெப்பம் இடும் வேளையில் சரியாக அந்த இடத்திற்க்கு ஷ்யாம் வந்து சேர்ந்தான்.

சொக்கலிங்கம் அவனை பார்த்ததும் கைய்யெப்பம் இடுவதை கூட மறந்து.. “ ராசா வா.. வா எப்படிப்பா இருக்க..?”  என்று அவன் கன்னம் தொட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். 

அதே மகிழ்ச்சியை  சரஸ்வதியும் வெளிப்படுத்த, அதை ஒரு நாடகம் பார்ப்பது போல் தான் ஷ்யாம் பார்த்து கொண்டு இருந்தானே தவிர..

அதற்க்கு எதிர் வினையாக எதுவும் பேசாது அவர்களை பார்த்தவன், தன் கையில் இருக்கும் சில பேப்பர்களை சூர்யாவிடம் கொடுத்து அங்கு கொடுக்கும் மாறு சொன்னான்.

அதை பார்த்த சொக்கலிங்கம்.. “ நீ ஏதாவது  சொத்து பதிவு செய்ய வந்து இருக்கியா  ராசா..” என்று மகிழ்ச்சியுடன் கேட்டார்.

சொக்கலிங்கத்திற்க்கு தன் பேரன்  உயர்ந்த நிலையில் மேன் மேலும் வளர்வதை பார்த்து ஒரு தாத்தாவாக அவருக்கு ஏக பெருமை தான்.. அவரும் ஷ்யாமின் வளர்ச்சியை  கேட்டு  கொண்டு  தானே இருக்கிறார்.

ஒரு சில உறவுகள் மூலம் சொக்கலிங்கத்தின் காதுக்கு விசயம் வரும். “ உங்க பேரன் எங்கேயோ போய் விட்டான். என்ன  ஒன்று தொழில்ல ரொம்ப கறார் போல.. அதனால சில பேரை  பகைத்து கொள்கிறான். “ என்று சொல்லும் போது சொக்கலிங்கத்தின் கண்ணில் வந்து போன பயத்தை பார்த்து ..

“அதை பத்தி கவலை பட தேவையில்ல. உங்க பேரனுக்கும் அரசியல் பலம். ஆள் பலம் எல்லாம் இருக்கு தான். “ என்று சொன்னதும் தான் அவருக்கு நிம்மதி ஏற்பட்டது..

ஷ்யாம் வரும் பணத்தை எப்போதும் சொத்தாக தான் வாங்கி போடுகிறான் என்று தான்  சொக்கலிங்கம் கேள்விப்பட்டது. அதன் தொட்டே  பத்திர பதிவு செய்ய வந்து இருக்கிறான் என்று நினைத்து அவர் கேட்டார்.

அதற்க்கு ஷ்யாம் பதில் சொல்லாது இருக்கும் போது  பத்திர பதிவு செய்யும் இடத்தில் இருந்து சொக்கலிங்கத்திற்க்கு அழைப்பு வந்தது.

என்ன என்று பார்க்கும் போது  பத்திர பதிவில் இருக்கும் அதிகாரி சொன்னது இது தான். 

“இந்த சொத்தில் உங்க பேரனுக்கும்  உரிமை இருக்கும்  பட்சத்தில்  எப்படி அவருடைய கைய்யெப்பம் இல்லாது நீங்க பத்திர பதிவு செய்ய முடியும்..?” என்று  கேள்வி கேட்டதும் சொக்கலிங்கம் திரு திரு என்று முழித்தார்.

ஆம் உண்மை தானே தன் சொத்தில் அவனுக்கும் உரிமை இருக்கிறது தானே என்று நினைத்து  அதிர்ச்சி அடைந்து  ஷ்யாமை பார்த்தார்.

ஆனால் ஷ்யாம் அவர் பக்கம் தன் பார்வையை செலுத்தவே இல்லை. அந்த அதிகாரியிடம் ஏதோ பேசிக் கொண்டு இருந்தான்.

கெளசல்யா கூட அங்கு தான் நின்று கொண்டு இருந்தார். அவருக்கு ஒரு பக்கம் அதிர்ச்சி என்றால், இன்னொரு பக்கம் தன் மகனை இவ்வளவு அருகில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்ததில் அவ்வளவு  மகிழ்ச்சி. கெளசல்யா ஷ்யாம் அருகில் செல்லும் போதே அந்த இடத்தை விட்டு நகர்ந்தவன் பின்  கெளசல்யாவின் பார்வைக்கு படாது நின்று கொண்டான்.

அதற்க்குள் விசயம் கேள்வி பட்ட  சம்மந்தி வீட்டு ஆட்கள்.. “ அது தானே பார்த்தேன். என்ன தான் இருந்தாலும் அவள் சக்களத்தி பெத்தவள் தானே..  என்னடா இது மாத்தா தாய் பெண்ணுக்கு தன் சொத்தையே  கொடுக்கிறாங்களேன்னு நானும்  பெருமையா நினைத்தேன்.

இங்கு கொடுக்கிறேன் என்று விட்டு, அந்த பக்கம் மகனுக்கு சொல்லி அனுப்பிட்டு இருக்கிங்க போல. பரவாயில்ல பலே கில்லாடியா தான் இருக்கே..” என்று இன்னும் என்ன என்னவோ பேசிக் கொண்டு சென்றாள் அந்த பெண்மணி..

அதன் பின் தனுஜாவுக்கு என்று பார்த்த மாப்பிள்ளை.. “ இனி என்ன நமக்கு இங்கு வேலை.” என்று அழைத்து சென்று விட..

ஷ்யாமும் சூர்யாவோடு போக  பார்த்தவனின் முன்   ஷைலஜா ஓடி வந்து அவன் முன்   நின்றாள். ஷ்யாமுக்கு அந்த பெண் யார்  என்று தெரியவில்லை. அதனால் தன் முன் ஓடி வந்து நின்றதில்  தன் மீது விழுந்து விடுவாளோ என்ற எச்சரிக்கை உணர்வில் சட்டென்று ஒரு அடி பின் நோக்கி சென்றவனின் முன் இன்னும் நெருக்கமாக வர பார்த்தவளை..

“  வேறு யாரையாவது ட்ரைப் பண்ணு. நீ என்ன முயற்ச்சி செய்தாலும் நான் மடங்க மாட்டேன்.” என்று சொன்னவனின் பேச்சில் ஷைலஜா மட்டும் அல்லாது அவள் பின் வந்த தனுஜாவும் அதிர்ச்சியாகி அப்படியே நின்று விட்டாள்.

ஷ்யாம் பார்த்திபன்  இறந்த அன்று கெளசல்யா பக்கத்தில் தான் அவர் இரு பெண்களும் இருந்தார்கள், ஷ்யாம் கெளசல்யாவை தவிர்க்க எண்ணி அந்த பக்கமே அவன் பார்வையை செலுத்தவில்லை. அதனால் அவன் தனுஜாவையும் சரியாக கவனிக்கவில்லை. ஷைலஜாவையும் கவனிக்கவில்லை.

சில சமயம் பெண்கள் அவன் மீது  இது போல் மேல  விழுந்து பழக பார்த்து இருக்கிறார்கள். அவர்கள் போல் என்று நினைத்து அவன் வார்த்தைகளை கொட்டி விட்டான்.

சொக்கலிங்கம் அங்கு வரவும் ஷைலஜா.. “ தாத்தா..” என்று அழைத்துக் கொண்டே அவரை கட்டி பிடித்து அழுகவும் தான் ஷ்யாமுக்கு அவள் யார்..? என்று தெரிந்தது. தெரிந்த விசயம் அவனுக்கு அதிர்ச்சி தான்.

அதுவும் என்ன முறை.. நான் பேசியது என்ன வார்த்தை என்று வருந்தியவன் கூடவே.. அடையாளம் தெரியாத அளவுக்கு உறவை ஆக்கியது அவர்கள் தானே..

இதில் என் தவறு என்ன இருக்கிறது என்று நினைத்து தோளை குலுக்கி கொண்டு சென்று விட்டான்.

ஏதோ நினைத்து  ஏதோ நடந்து முடிந்தது அன்றைய நாள்.. இன்னும் அவர்களுக்கு காத்து கொண்டு இருப்பது போல் தான்  அன்று மாலையே  கெளசல்யாவின் வீட்டு முன் சில ஆட்கள் வந்து  பார்த்திபன் கைய்யெப்பம் இட்ட  பத்திரத்தை காட்டி..

“ என் கிட்ட இவ்வளவு வாங்கினார்..” என்று ஆள் ஆளுக்கு ஒரு தொகையை சொல்ல கெளசல்யாவுக்கு ஒன்றும் புரியவில்லை.

என்ன இது.?  எதுக்கு இவர் இவ்வளவு வாங்கி இருக்கிறார்..? நான் இதை எல்லாம் எப்படி கொடுப்பேன். அதுவும் இரண்டு பெண் பிள்ளைகளை வைத்து கொண்டு.

Advertisement