Advertisement

அதுவும் தனுஜா முகத்தில் தந்தை இறந்த சோகத்தோடு, தனக்கு நிச்சயம் செய்த மாப்பிள்ளை தன் தந்தை இறந்த பின்  தன்னிடம் சரியாக, சரியாக என்ன பேசவே இல்லை என்று தான் தோன்றியது.

இந்த சமயத்தில் தான் எனக்கு ஆறுதல் தேவை. இப்படி பேசாது இருக்கிறானே, தானும் அழைத்தால் பல முறை எடுக்காது விட்டு, பின் தான் அழைப்பை ஏற்கிறான். அதுவும் என்ன விசயம்.? என்று கூட கேளாது. 

“ எடுக்கலேன்னா வேலையா இருப்பேன் என்று அர்த்தம். இந்த காமன்சென்ஸ் கூடவா இல்லை.” என்று கத்தி விட்டு பேசியை அணைத்த இவன் தான்  முன் எல்லாம்.

கை பேசியில்  இருவரும் பேசிக் கொண்டு இருக்கும் போது  அங்கு யாராவது அவனிடம் பேசும் சத்தம் கேட்டால்.. “ வேலை இருந்தால் நான் வேணா பின் அழைக்கட்டுமா..?” என்று கேட்ட போது.

“ உன்னை விட எனக்கு வேலை பெரியது இல்ல தனு.” என்று சொன்னவன் தான் தன்னிடம் காமன்சென்ஸ் பத்தி பாடம் எடுக்கும் போது,  ஏதோ விபரிதமாக  நடக்க போகிறதோ என்ற பயத்தோடு, இப்போது மனேஜர் சொன்ன  ..

சம்மந்தி வீட்டில் பேசுங்க என்ற வார்த்தையில், இது தெரிந்தால் இன்னும் அவர்கள் என்ன சொல்வார்களோ என்று பயந்து போனாள்.

பார்த்திபன்… மூன்று  தலைமுறைக்கு முன் பிறக்க வேண்டியவன். பெண் வீட்டை விட்டு வெளியில் போக கூடாது. ஆண் சொல்வதை கேட்டு நடக்க வேண்டும்.

பெண்களை படிக்க வைத்ததிற்க்கு காரணம். நாளை மாப்பிள்ளை  பார்க்கும் போது இப்போது எல்லாம் படித்த பெண்ணாக தானே கேட்கிறார்கள். அதனால் தான் படிக்க வைக்கிறேன்.

அதுவும் தன் பெரிய பெண் கொஞ்சம் கால் தாங்கல். தாங்கல்  என்றால், ஒரு கால் அளவில் கொஞ்சம் சிறியதாக இருக்கும் அவ்வளவே.. அது நடக்கும் போது கொஞ்சம் ஏற்ற தாழ்வாக தெரியும்.

அதை வைத்து கூட சொந்த மகள் என்று கூட பாராது.. “    ஏற்கனவே கால் பிரசனையில் இருக்கு. இதில் படிக்காம விட்டா அது வேறு ஒரு குறை என்று நாள பின்ன மாப்பிள்ளை பார்க்கும் போது அவங்க சொல்வாங்க.

அதோடு  சீர் செனத்தி,  எல்லாம் அதிகம் செய்தா தான் பெரியவளை கரை ஏத்த முடியும். என்பது போல் வார்த்தைகளும் அவ்வப்போது பார்த்திபன் வாயில் இருந்து வந்து விழும். 

 கூடவே  கெளசல்யாவை பார்த்து “ போனவ தான் பொட்ட பிள்ளைய பெத்து கொடுத்தா என்று பார்த்தா.. நீயும் பெட்டையா பெத்துட்ட.” என்று சத்தம் போட்டு சொல்லும்  பார்த்திபன் அடுத்து பேச்சான.

“ அவனுக்கு மட்டும் ஆம்பிளை பிள்ளைய பெத்து கொடுத்த..” என்று அந்த வார்த்தையை என்ன தான் அவர் மெல்ல சொன்னாலுமே, அவர் கோபத்தை அடக்கி அதை பேசுவதால், அவரின் அருகில் இருப்பவர்களின காதில் அந்த வார்த்தை   விழவே செய்யும்.

பல முறை இந்த வார்த்தையை கெளசல்யா கேட்டு இருக்கிறார்.  அந்த வார்த்தை எவ்வளவு வீரியம் மிக்கது .. அதுவும் அந்த குழந்தையை நியாபகம் படுத்தும் வார்த்தை.  இருந்தும் முகத்தில் அந்த குழந்தையை பற்றிய  சிந்தனை வரவில்லை என்று காட்ட வேண்டியாவது அவள் முகத்தை சாதரணமாக வைத்து கொள்ள வேண்டும். 

இல்லை என்றால் என்ன  அந்த பைய்யன் நியாபகமா..? இல்ல அந்த பைய்யனோட அப்பன் நியாபகமா..? என்று கேட்டு வைப்பார். சில சமயம் அந்த வார்த்தைகள் வாங்கியதால், இது போல் பெண் குழந்தையை பெத்தது பற்றி பேச்சு வந்தாலே, கெளசல்யா அடுத்த வார்த்தையை கேட்க கூடாது என்றே வேலை இருப்பது  போல் சென்று விடுவார்.

பார்த்திபன் சொன்னதில் எது உண்மையோ இல்லையோ..  பெரிய பெண்ணுக்கு சீர்  செனத்தி , நிறைய செய்தால் தான் மாப்பிள்ளை வருவான்.

அந்த வார்த்தை நூற்றுக்கு நூறு உண்மையாக போனது. ஆம் இப்போது தனுஜாவுக்கு இருபத்திஏழு வயது.

அவர்கள் இனத்தில் இருபது என்பதே அதிக வயதுடையது. தனுஜாவுக்கும் அவள் கல்லூரி முடித்த ஆண்டில் இருந்தே பார்க்க ஆரம்பித்து விட்டனர்.

ஆனால் வந்த அனைவரும்  ஒன்று போல் கேட்டது பார்த்திபனின் மொத்த சொத்தையும்  கொடுத்தால் கட்டுவேன் என்றது. இல்லை உங்க இரண்டாம் பெண்ணை எடுத்து கொள்கிறோம் என்று..

போக  போக பார்த்திபனே வெறுத்து போய் “ பேசாது நம்ம ஷைலஜாவுக்கே முடித்து விடலாமா..?” என்று கேட்டதற்க்கு, 

ஒரு மனைவியாக கணவனிடம்.. “  அது தப்புங்க. மூத்த பெண் இருக்க, அதே வீட்டில் இருக்கும் சின்ன பெண்ணை கட்டி கொடுப்பது நியாயம் இல்லை.” என்று  மற்றவள் பெற்ற குழந்தைக்கு நியாயம் பார்த்த கெளசல்யா தன் குழந்தைக்கு  நியாயம் செய்யவில்லை என்பது தான் நிஜம்.

பின் தான் நிறைய சவரம் போடுகிறோம் என்று இந்த இட்த்தை பார்த்திபன் தன் பெண்ணுக்கு முடித்தார்.

வயதில் நாம் செய்யும் சில தவறுகள். வயதான போது தான் அதை அறுவடை செய்ய நேரும் என்று சொல்வார்கள். அது உண்மை என்பது போல் தான் கெளசல்யா தான் செய்த பாவத்துக்கு எல்லாம் அறுவடை செய்யும் காலம் வந்து விட்டது என்று தெரியாது.

தங்கள் மேனஜர் சொன்னது போல் தன் சம்மந்தம்  பேசியவர்களிடம் தந்தையை விட்டு பேசியில்  சொக்கலிங்கம் பேசினார். அங்கு சொல்லப்பட்ட விசயம் இது தான்.

“பெரிய இடத்து சம்மந்தம் என்று ஏமாந்து நிச்சயம் செய்துக்கிட்டோம் . நல்ல வேலை கல்யாணத்துக்கு முன் உங்க மருமகன் இறந்து விட்டதால தான் .. அங்கு இருக்கும் உண்மையான  போஷி  எங்களுக்கு தெரிந்தது. இல்லேன்னா நாங்க ஏமாந்து தானே போய் இருப்போம்.” என்ற அவர்கள் பேச்சில் தான் சொக்கலிங்க விசயம் வெளியில் பணம் போனது மட்டும் கிடையாது.’

இன்னும் ஏதோ இருக்கிறது என்று  அவர் மனது சொன்னாலும், கேட்டு விட்டார்.  “  என்ன இப்படி பேசுறிங்க .. வெளியில் பெரிய தொகை போய் இருக்கு. மாப்பிள்ளை இருந்து இருந்தா எல்லாம் அவர் வசூலித்து இருந்து இருப்பார்.

இப்போ  அவர் இல்லாததால், பெண்கள் தானே என்று ஏமாத்த பார்க்கிறாங்க. நான் வயதானவன். மாப்பிள்ளை கேட்டா நல்லா இருக்கும் என்று தான்.  நாங்க நினச்சது.” என்று பெரியவர் சொக்கலிங்கம் சொன்னதும்.

“ஓ விசயம் அவ்வளவு தானா. சரி சரி நாங்க நம்பிட்டோம். நீங்க என்ன செய்யிறிங்க இப்போ என் மகனை அங்கு அனுப்புறோம். உங்க மருமகன் தன் பெரிய  பெண்ணுக்கு  போடுறதா சொன்ன ஐநூறு சவரன் காட்டுங்க.. வெறும் காட்டினால் மட்டும் போதும். 

குறித்த  முகூர்த்தத்தில் திருமணத்தை முடித்து விடலாம்.” என்று  அவர்கள்  சொன்னதுமே, இங்கு சொக்கலிங்கத்திற்க்கு வேர்க்க ஆரம்பித்து விட்டது இருந்தும்.

“ அது எங்கே போயிட போறது. வீட்டில் இருக்கும். இல்லேன்னா பேங்லாக்கரில் இருக்க போகுது.” என்று சொக்கலிங்கம் சொன்னதுமே.

சம்மந்தி வீட்டுக்காரர்கள். “நீங்க சொன்னது போல பேங்கில் தான் இருக்கு. மொத்தமும் அடமானத்தில். ஐநூறு இல்லாது உங்க வீட்டில் இருக்கும் எல்லா நகையுமே..

எங்க உறவுக்காரர்  பேங்கில் நகை தரம் பார்ப்பதில் இருப்பதால், விசயம் இது பெரிம்மா பார்த்து நடந்துக்குங்க என்று சொல்லி விட்டார். இல்லேனா நாங்க ஏமாந்து தானே போய் இருப்போம்.” என்று என்னவோ அவர்கள் கொடுத்த நகைகளை, இவர்கள் அடகு வைத்தது போல் தான் அவர்கள் பேச்சு இருந்தது.

கேட்ட சொக்கலிங்கத்திற்க்கு இவர் என்ன எல்லாம் செய்து விட்டு போய் இருக்கிறார் என்று மருமகன் போன துக்கத்தை விட,  அடுத்து அடுத்து நடந்தது தான் பெரிய விசயமாக இருந்தது.

பின் அந்த சம்மத்தி வீட்டு ஆட்களே போன் செய்து ஒரு ஹபர் சொன்னார்கள். அதாவது சொக்கலிங்கத்திற்க்கு சொந்தமாக ரயில் நிலையம் அருகில், அவர் மனைவி  சரஸ்வதி பெயரில் பாத்திரகடையும், ஜவுளிக்கடையும் இருக்கிறது.

அதை  மாப்பிள்ளை பெயருக்கு எழுதி வைத்தால், கல்யாணத்தை வைத்து கொள்ளலாம் என்று சொன்னதுமே, இது எப்படி சாத்தியம் என்று நினைத்தார்.

ஆனால் கெளசல்யாவோ.. அது எல்லாம் சாத்தியம் ஆகும் என்று தான் தந்தையிடம் பேசியது.

“ அப்பா தனுக்கு ஐந்து வருடமா பார்த்தோம். ஒரு இடம் கூட முடியல. இது தான் வந்ததிலேயே நகை அதிகமா கேட்டது. மத்தவங்க எல்லாம்  சொத்தே மொத்தமா கொடு என்று சொன்னது.

அந்த மாப்பிள்ளை  கூட தனு போனில் மூன்று மாதமா பேசுறா.. மனசுல ஆசையை  வளர்த்து விட்டுட்டு இப்போ முடியலேன்னா.. எப்படிப்பா..

அவங்க கேட்டது போல அதை மாப்பிள்ளை பேருக்கே எழுதி கொடுத்து விடுங்கப்பா.” என்று  கெளசல்யா சொன்னார்.

“ அது எப்படிம்மா உன் மகள் ஷைலஜாவுக்கு என்றாலும் பரவாயில்ல. அந்த பெண்ணுக்கு. அது மட்டும் இல்லாம  இங்கும் நிலை சரியில்ல. இன்னும் என்ன என்ன என்று முழுவிவரமும் தெரியல..

 இதுல என் சொத்து இருந்தா தானேம்மா உனக்கு பாதுகாப்பா இருக்கும்.” என்று தந்தையின் பேச்சை கெளசல்யா ஏற்றுக் கொள்வதாக இல்லை.

“ இந்த வீடு இருக்குப்பா. அது போதும், இப்போ முதல்ல தனுஜா கல்யாணம் நல்ல முறையில் முடியனும்.  அது தான் முக்கியம்.” என்ற மகளின் பேச்சை சொக்கலிங்கம் அப்போதும் ஏற்றுக் கொள்ளாது..

“ இல்லேம்மா ஷைலஜா..” என்று மீண்டும் தன் சொத்து அந்த பெண்ணுக்கு தானே என்பது போல் பேசினார்.

“ உங்களுக்கு என்ன ஷைலு ஒத்துக்கிட்டா அவங்க சொன்னது போல செய்விங்க தானே…” என்றதற்க்கு சொக்கலிங்கமும் ஆமாம் என்று சொல்லி விட..

தன் பெண்ணை அழைத்து விசயம் சொல்லவும். தாய் தான் வேறு. தந்தை ஒன்று தானே.. அது தவிர ஒன்றாக வளர்ந்த அந்த பாசம் ஷைலுவும் ..

“ அம்மா சொன்னது போல செய்து விடுங்க தாத்தா. எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.” என்று சொல்லி விட்டாள்.  

இவர்கள் ஒன்றை மறந்து விட்டார்கள். அந்த சொத்துக்கு பாத்தியம் பட்டவன்  இன்னொருவனும் இருக்கிறான் என்று . அவன் அனுமதியும் தேவை என்பதையும்.. 

Advertisement