Advertisement

அத்தியாயம்…4

ஷ்யாமின் பேச்சை உள் வா ங்கிய சூர்யா அதிர்ந்து போனவன்.. “ ஷ்யாம் இது தப்பு.” என்று ஒரு  நல்ல நண்பனாக, திருமணம் ஆன பெண்மீது ஆசைப்படுகிறானே நண்பன்  என்று நினைத்து  கண்டிப்பது போல் சொன்னான்.

ஷ்யாமோ “எது தப்பு.?” என்று எதுவும் புரியாதது போல பேசியவனின் பேச்சில், சூர்யாவுக்கு கோபம் இன்னும்  கூடியது… 

“ நாம படிக்கும் போது எத்தனை  பெண்கள்  உன் பின்னாடி வந்தாங்க.  அப்போ ஏன்டா உனக்கு எந்த பெண் மீதும் பிடித்தம் இல்லையா.? என்று கேட்டதற்க்கு “ இது படிக்கும் வயது.” என்று சொன்ன.

சரி ஆமாம். அது படிக்கும் வயது தான். பரவாயில்ல நம்ம நண்பன் பெண்களே மேல வந்து விழுந்தாலும், ஸ்டெடியா இருக்கானே என்று பெருமை பட்டு போனேனடா.

அப்புறம் கூட உன்  தாத்தாவுக்கு பின் இந்த பைனான்ஸ் அவர் பார்த்த தொழில் எல்லாம் நீ கையில் எடுத்த பின், தொழில் முறை பெண்கள் என்று நிறைய பெண்கள் அவங்க தன் விருப்பத்தை  உன் கிட்ட சொன்ன போது என்ன சொன்ன.

இப்போ தான் நம் தொழிலை கத்துக்க ஆரம்பித்து இருக்கோம். இப்போ நம்ம கவனம் வேறு எங்கும் போக கூடாதுனு நீ என் கிட்ட சொன்னப்ப, அப்படியே எனக்கு  புல்லரிச்சி  போயிடுச்சிடா..

 அதுக்கு  பின் கேட்ட போது, வயசு ஆயிடுச்சி. இப்போ எல்லாம் எந்த பெண்ணை பார்த்தாலும், எந்த தாட்டும் வரல.. இனி என்ன வீட்டில் அப்பா அம்மா பார்க்கும் பெண்ணை கல்யாணம் செய்துக்க வேண்டியது தானே என்று சொன்னவனாடா..

ஒரு கல்யாணம் ஆன பெண் மீது. ஒரு  குழந்தைக்கு தாயான பெண் மீது ஆசை வரும். சொல்லுடா..?” என்று சூர்யா ஷ்யாமை காலரை பிடித்து கேட்காதது தான் பாக்கி, அப்படி ஆவேசத்துடன் பேசினான் சூர்யா.

சூர்யாவை பேச விட்டு வேடிக்கை பார்த்தவன் தன் சுண்டு விரலை காதில் போட்டு குடைந்த வாறு.. “ ஏன்டா இப்படி சத்தமா பேசுற..? நீ இப்படியே பேசிட்டு இருந்தா என் காது செவிடா தான் போகும். 

அப்புறம் என் பேபி கேட்கும் அறிவு பூர்வமான கேள்விக்கு எல்லாம் நான் எப்படி பதில் சொல்வேன்.” என்று சூர்யா  பேசியதை எதையும் கேட்காதது போல் பேசிய  ஷ்யாமை, இவனை  என்ன செய்தால் தகும்  என்பது போல் ஒரு பார்வை பார்த்து வைத்தான்.

சூர்யாவின் அந்த பார்வையை பார்த்து கிண்டலாக சிரித்தவனிடம். “ வேண்டாம் ஷ்யாம்  எனக்கு நீ செய்யிறது சரியா படல. அதுவும் இது   வரை அவ்வளவு நல்லவனா இருந்துட்டு இப்போ..  அந்த பெண்ணுக்கு  புருஷன் இருக்கான்டா ” என்ற அவனின் பேச்சில் ஷ்யாம் தன் விளையாட்டை கை விட்டவனாக.

“ சக்திக்கு புருஷன் இருக்கான் என்று அவள் சொன்னாளா.?” என்ற நண்பனின் பேச்சில்,

“அப்போ அப்போ அந்த பெண் விதவையா.?” என்ற  சூர்யாவின் கேள்விக்கு, ஷ்யாம் இல்லை என்பது போல் தலை ஆட்டினான்.

“அப்போ டைவஸ் ஆனவங்களா.?” என்று அது தான் இருக்கும் என்று தெரிந்தாலுமே,  அதை உறுதி படுத்திக் கொள்ள   கேட்டான்.

அதற்க்கும் ஷ்யாம் இல்லை என்று தலையாட்டவும், ஷ்யாமின் பேச்சில் சூர்யாவுக்கு மண்டை காய்ந்தது தான் மிச்சம். அதன் பின் ஷ்யாமிடம் எதுவும்  கேட்காது தலை மீது கை வைத்து அமர்ந்து விட்டான்.

அவன் தலையில் இருந்த கையை எடுத்து விட்ட ஷ்யாம், அவன் பக்கத்தில் அமர்ந்தவன். “ சக்திக்கு இன்னும் கல்யாணம் ஆகல. அதனால உன் நண்பன் எப்போவும் போல பெண்கள் விசயத்தில் நல்லவன் தான் போதுமா.?” என்று அவன் சொன்னதில், சூர்யாவுக்கு அவ்வளவு நிம்மதி. மகிழ்ந்து போய்  ஷ்யாமை பார்த்தான்.

சிரித்துக் கொண்டே.. “ எனக்கு தெரியாதாடா என் நண்பனை பற்றி.  இருந்தாலும் இருந்தாலும்.” என்று இழுத்தவனை தலையில் ஒரு போடு போட்டு விட்டு,

“ என்னை ஒரு இராவணன் ரேஞ்சுக்கு பேசிட்டு, இப்போ என்ன சமாளிப்பு.” என்று கேட்டவனின் கையை பற்றிக் கொண்ட சூர்யா.

“இல்லடா நான் நிஜமாவே ரொம்ப பயந்துட்டேன்டா..  அதுவும் நாற்பது லட்சம். நீ பணம் விசயத்தில் எவ்வளவு கரார் என்று தான் எனக்கு தெரியுமே, அப்படி பட்டவன் அவ்வளவு பெரிய தொகை ஒரு பெண்ணுக்கா விடுறேன் என்றதும், அதுவும் நீ என்னை பயப்படுத்துவது போலவே  பேசவும் தான்.. சாரிடா .” என்று வருந்தியவன் பின் ஏதோ நினைவு வந்தவனாக.

“ஆமாம் அந்த  குழந்தைக்கு அப்பா.” என்று கேட்கவும். “ நான் தான்.” என்று சொல்லி ஷ்யாம் சூர்யாவின் தலையில் மீண்டும் ஒரு  இடியை போட்டான்.

இப்போது சூர்யா அவனை பாவமாக பார்த்து கொண்டே.. “ ஏன்டா.. ஏன்..?”என்று அழுது விடுபவன் போல்  பேசியவனை பார்த்து சிரித்த வாறே..

“இப்போ சக்தி தான் அந்த குழந்தைக்கு அம்மா என்றால், நான் தானே அப்பா. நான் அந்த அர்த்தத்தில் தான்டா சொன்னேன்.” என்று சொன்னவனிடம், சூர்யா இப்போது எதுவும் கேட்கவில்லை அவனே சொல்லட்டும் என்று.

சூர்யா நினைப்பது போல் தான்  ஷ்யாமே.. “ நாம சக்தியை பார்ப்பது இது முதல் முறை கிடையாது.”என்று   அவன் சொன்னதுமே.

“ சக்தியை நானும் பார்த்து இருக்கேனா.?” என்று கேள்வியாக ஷ்யாமிடம் கேட்டான்.

ஷ்யாம் சக்தியை பார்ப்பது இது முதல் முறை கிடையாது என்பதை அவனின் நடவடிக்கையை வைத்தே சூர்யா  தெரிந்துக் கொண்டான்.

இவன் நானும் பார்த்தேன் என்கிறானே எப்போ என்று அவன் யோசிக்கும் போதே ஷ்யாம்..

“ இரண்டரை வருடம் முன் ***** ஒட்டலில் ஒருவனை  அழைத்து மிரட்டி விட்டு  அவன்  போன பின் நாம காபி குடித்து கொண்டு இருந்தோமே நியாபகம் இருக்கா.?” என்று ஷ்யாம் கேட்டதும்.

சூர்யாவுக்கு இது தான் மீண்டும் தோன்றியது. “ ஏன்டா..? ஏன்..?” நாம் ஒருவரையா அழைத்து மிரட்டி இருக்கோம். நம்ம கிட்ட காசு வாங்கினவங்களில்  பாதி பேர் தான் பிரச்சனை செய்யாது கொடுப்பாங்க. 

மிச்ச பேர் கிட்ட மிரட்டி தானேடா வாங்கி இருக்கோம். இதில் இரண்டரை வருடம் முன் வேற..  போவீயா என்பது போல் தான் இருந்தது அவனின் பார்வை.

“ நீ என்ன நினைக்கிற என்று எனக்கு புரியுது. நாம மிரட்டதாவங்க யாருன்னு தானே.. அதுவும் சரி தான்.” என்று அவனே ஒத்துக் கொண்டவன்.

பின் “ இது சொன்னா நியாபகத்துக்கு வரும். காபி குடிக்கும் போது ஒரு ப்ரேக்கப் பேச்சு நடந்ததே.” என்று ஷ்யாம் சொல்லும் போதே சூர்யா அதிர்ந்தவனாக.

“ஷ்யாம் அந்த பெண்ணா..?” என்று அதிர்ச்சியும், ஆச்சரியுமாக கேட்டான். ஷ்யாம் அதற்க்கு ஆமாம் என்று தலையாட்டவும்,

சிறிது யோசித்த சூர்யா தயங்கிய வாறு.. “ உனக்கு உனக்கு  அந்த பெண்  ஏற்கனவே  காதலித்து ப்ரேக்கப் ஆனவள்  என்ற தாட் தோனலையா  ஷ்யாம்..?” என்ற நண்பனின் கேள்விக்கு,

“ இல்ல .. இல்லவே இல்ல. காதலிக்கிறது ப்ரேக்கப் ஆவது எல்லாம் இப்போ சகஜமா தான் போயிட்டு இருக்கு.  அதுவும்  காரணம்  முதல்ல எனக்கு ஏத்தவன் நீ என்று நினைத்தேன்.

 இப்போ என்னவோ உனக்கும், எனக்கும், செட்டாகுமான்னு தெரியல என்ற  காரணத்தை சொல்றது.  இல்ல காதலிக்கும் போது வராத பயம் அவள் காதலை வீட்டில் சொல்ல  பயந்து வேண்டாம் என்று சொல்வாங்க அதுவும் ப்ரேக்கப் தான்.

ஆனால் என்  சக்தி அந்த குழந்தைக்காக.. பார்த்த தானே  அந்த பைய்யன் எப்படி இருந்தான்.  எல்லாம் பெண்ணும் இது போல் இருப்பவனை தான் கல்யாணம் செய்ய நினைப்பாங்க.

அவளுக்கு அந்த வாய்ப்பு இருந்தும், குழந்தையின் சுமையை நீ ஏத்துக்குறதா இருந்தா  நம்ம கல்யாணத்தை பத்தி யோசிக்க வேண்டி வரும் என்று அந்த பைய்யன் சொன்ன செகண்ட்,  சக்தி சொன்னாளே.

“ நாம பிரிந்து விடலாம் என்று.” அதன் பின் அவன் செய்த சமாதானம் ஒன்றையும் காதில் வாங்காது..

கடைசியா அவள் சொன்ன. “ எப்போ நீ குழந்தையை சுமை என்று சொன்னியோ,  நீ எனக்கு கணவனாக ஆக முடியாது. ஏன்னா என் குழந்தைக்கு அப்பாவா இருக்கவன் மட்டும் தான் எனக்கு கணவனா ஆக முடியும் என்று.

“அக்கா குழந்தை தானே அது எப்படி உன் குழந்தையா ஆக  முடியும். அம்மா இறந்துட்டாங்க அப்பா இருக்கான்லே என்று அவன் பேச்சை எதாவது காதில் வாங்கினாளா..  இந்த காலத்தில் யார்டா  அக்கா குழந்தைக்காக தன்  காதலை துறப்ப..

சொந்த அம்மாவே தன் எதிர் காலத்துக்காக பெத்த குழந்தையை விட்டு  விட்டு தனக்கு ஒரு வாழ்க்கை தேடிக் கொள்ளும் காலத்தில்,” என்ற நண்பனின் வேதனையான குரலில் அவன் தோளை பற்றிய சூர்யா.

“ விடுடா விடு. நான் தான் எதேதோ கேட்டு உன் சந்தோஷமான மனநிலையை கெடுத்துட்டேன்.” என்று மன்னிப்பு வேண்ட,  அதன் பின் பேச்சு திசை மாறி கடைசியாக ஷ்யாம்.

“அம்மா அப்பா கிட்ட சொல்லி முறையா தான் சக்தி வீட்டுக்கு சம்மந்தம் பேசனும் சூர்யா.. காதல் என்று சொல்லிட்டு அவள் முன் நின்னா ஒத்துப்பா என்று எனக்கு நம்பிக்கை இல்லை.” என்ற நண்பனின் பேச்சை சூர்யாவும் ஆதரித்தான்.

ஷ்யாம் இங்கு நல்ல மனநிலையில் இருக்க, ஷ்யாமை பெற்ற   அன்னை,   அங்கு தன் முன் பேசிக் கொண்டு இருந்த தங்கள் பைனாஸின் மேனஜர்  துரை நாஜ்.

“ நிறைய பணம் வெளியில் போய் இருக்கு மேடம். அதுவும் ஒரு பெரிய அமெண்ட் ****அந்த அரசியல் வாதி  வாங்கிட்டு தரல.  கடந்த ஆறு மாசமா சார் அந்த மன உளச்சல்ல தான் இருந்தார்.

இப்போ சட்டுன்னு சார் ஹார்ட் அட்டக்கில் இறந்ததும், மத்தவங்களும் வட்டி என்ன அசல் கொடுக்க கூட யோசிக்க ஆரம்பித்து  விட்டாங்க மேடம் .. இது இப்படியே போனால், “ என்று சொல்லிக் கொண்டே அங்கு  இருந்த கெளல்யாவின் அப்பா அம்மா இரண்டு பெண்களை பார்த்த வாறு..

“  பிரச்சனை வேறு மாதிரி தான் முடியும்.” என்ற துரை ராஜ் பேச்சில்.  கெளசல்யாவின் தந்தை சொக்கலிங்கம் ..

“ சரி பார்க்கிறேன்.” என்று சொன்னார். துரை ராஜ் அப்போதும் விடாது  “ எது என்றாலும்  சீக்கிரம் செய்ங்க. “ என்றவர்

பின்..  கெளசல்யாவின் பெரிய மகள் அது தான் பார்த்திபனின் முதல் மனைவியின்  பெண்  தனுஜாவை காட்டி.. “ பெண்ணுக்கு நிச்சயம் செய்து இருக்கிங்கலே.. அவங்க வீட்டிலும் பேசுங்க.  அதாவது பாப்பாவோட வருங்கால கணவர் பைனான்ஸ் கம்பெனிக்கு வந்தா நல்லா இருக்கும் என்று எனக்கு தோனுது.

நம்ம கிட்ட பணம் வாங்கினவங்க ஏமாத்த நினைக்கும் காரணம். பார்த்திபன் சாருக்கு மகன் கிடையாது. இரண்டுமே பெண் தான்.. இது போல் விசயத்தில் அவங்களாள் என்ன செய்ய முடியும்…?  அசிங்கமாக இரண்டு வார்த்தை பேசினால் போதும் .இந்த தாட் தான் அவங்க மனசுல ஓடுது.

ஏன்னா இதை ஒருவன் வெளிப்படையாவே சொன்னான்.” என்று சொன்ன துரை ராஜ்  போகும் போது கூட.. பார்த்து செய்ங்க என்று விட்டு தான் சென்றார்.

துரை ராஜ் சென்ற உடன் சொக்கலிங்கம் தன் மகளிடம்..” என்ன கெளசல்யா  திடிர் என்று பணம் நிறைய  போய் இருக்கு என்று சொல்றாங்க. உனக்கு இதை பத்தி முன்னவே தெரியுமா..? என்று கேட்டார்.

“தெரியாதுப்பா. அவர் எப்போ தொழில் பத்தி எல்லாம் வீட்டில் பேசி இருக்கார். ஆனால் கொஞ்ச நாளா முகம் வாட்டாமா  தான் இருந்தது. நான் என்ன என்று கேட்டதுக்கு கூட பெண் கல்யாணம். அது தான் அலச்சல் என்று  சொன்னார்.” என்று கெளசல்யா சொன்னதும்,

சொக்கலிங்கம் தனுஜா, ஷைலஜாவை பார்த்து..  பணத்தை  பத்தி அப்பா உங்க கிட்ட ஏதாவது சொன்னாராமா..?” என்று கேட்டதற்க்கு..

“ சொல்லலே தாத்தா…” என்று சொன்ன  இருவர் முகத்திலும்  அப்படி ஒரு பயம்.

Advertisement