Advertisement

முன் கோபம் மறந்து கூட  சக்தி அந்த வரவேற்ப்பு பெண்ணிடம்.. “ மேடம் என் குழந்தை இங்கு இருந்தா..” என்று  பேச ஆரம்பித்தவளின் பேச்சை கூட கேளாது.

“ தெரியாது. நன் பார்க்கல. சீக்கிரம் இட்த்தை காலி பண்ணுங்க. இப்போ சார் வெளியில் கிளம்பிட்டு இருக்கார்.  இது போல் க்ரவுடா இருந்தா என்னை தான் திட்டுவார்.” என்ற அவள் பேச்சில்,இப்போது கோப்ம் கொள்ள முடியாது தன் குழந்தை தான் முக்கியம் என்பது போல்  அவளை தேடிக் கொண்டு இருக்கும் போது தான் இரண்டு பேர் நல்ல உயரமாக பார்க்கவே முரட்டு தோற்றத்தில் இருக்கு இரு ஆண்கள்.

“ குழந்தை எங்க சார் கிட்ட, அவர் அறையில் தான் இருக்கா..  சார்  உங்களையும் அங்கு அழச்சிட்டு வர சொன்னார்.” என்ற அவர்களின் பேச்சில் நம்பி  போகலாமா..? என்ற பயம் சக்திக்கு மனதில் எழுந்தாலுமே, குழந்தை சாரிடம் தான் இருக்கு என்று அவர்கள் சொன்னதில் எதுவும் மறுக்காது அவர்க்ச்ள் பின் வந்தாள்.

ஆனால் இங்கு ஷ்யாமின் தன்மையான பேச்சில் நம்பிக்கை வர பெற்றவளாக அவன் கேட்டதும் அனைத்தும் சொல்லி விட்டாள். தன் தந்தை இப்போது இல்லாததையும் சேர்த்து தான்.

சக்தியின்பேச்சை பொறுமையாக ஷ்யாம் மட்டும் இல்லாது சூர்யாவும் தான் கேட்டு  கொண்டு இருந்தான்.

அனைவரையும் வெளியில் அனுப்பிய ஷ்யாம் சூர்யாவை மட்டும் போக விடாது தன் அறையிலேயே ஜாடையில் இருக்கும் படி கண் காட்டி இருக்க வைத்தான்.

காரணம் அனைவரையும்  வெளியில் அனுப்பி விட்டால், சக்தி தன்னை தவறாக நினைக்க வாய்ப்பு இருக்கிறது என்பதால் தான்.

மற்றவர்களின் எண்ணத்திற்க்கும், கருத்துக்கும் ஷ்யாம் எப்போதும் முக்கியத்துவம் கொடுத்தது கிடையாது.

ஆனால் சக்தியின் எண்ணத்தில் கூட தன்னை தவறாக நினைக்க  கூடாது என்பதில் மிக தெளிவாக இருந்தான்.

சக்தியின் பேச்சில் சூர்யா.. “ நாற்பது லட்சம் ஷ்யாம் விட்டு விடுவானா..?” என்று அவன் யோசிக்கும் போதே ஷ்யாம் அவனிடம்..

ஷ்யாம் தன் முன் இருக்கும் கணினியில்  சக்தி சொன்ன விவரத்தை வைத்து ர்ப்போது எவ்வள்ச்வு வாங்கியது என்று அனைத்து விவரத்தையும் பார்த்தவன்.

“ஆமா நீங்க சொன்னது  சரி தான். உங்க அப்பா பணம் வாங்கல வெறும் ஜமீன் கையெழுத்து தான் போட்டு இருக்கார்.” என்று சக்தி சொன்ன விசயம் தான் அதை வேறு மாடுலேஷனில் பேசிக் கொண்டு இருந்த ஷ்யாமை சூர்யா பல்லை கடித்துக் கொண்டு பார்த்திருந்தான்.

ஜாமின் கையெழுத்து என்றாலே அது தானேடா ராசா.. ஆனா நாம வாங்கினவன்  பணம் கொடுக்காது தப்பித்து  விட்டால், ஜாமீன் கையெழுத்து போட்டவன் கழித்து மேல தானேடா துண்டை போடுவோம் என்று அவன் நினைக்கும் போதே..

ஷ்யாம்.. “ நீங்க பணம் கொடுக்க வேண்டி இருக்காது என்று நான் நினைக்கிறேன். இரண்டு நாள்  முன் தான் பணம்  வாங்கின உங்க அப்பாவோட பிரண்ட் இருக்கும் இடம் தெரிந்தது.. அதனால நான்  ஸ்டைட்டா அவனையே பிடித்து வாங்கி கொள்கிறோம்..

நீங்க இதை எல்லாம் நினைத்து ஒரி  பண்ணிகாதிங்க..” என்றவனின் பேச்சில், சூர்யா இன்னைக்கு எவ்வளவு தான் நீ  எனக்கு அதிர்ச்சி கொடுப்ப.. இதோட முடிந்ததா இல்ல இன்னும் இருக்கா.. என்று தான் நினைத்தான்.

ஷ்யாமுக்கு சூரியாவின் நினைப்பு எல்லாம் இல்லை என்பது போல்   சக்தி  தான் சொன்னதும்  அவள் முகத்தில் வந்த நிம்மதியில் இவன் மகிழ்ந்து போய் அவளையே பார்த்து கொண்டு இருந்தான்.

சூர்யா தான்  அவள் கல்யாணம் ஆனவள் டா.. ஒரு குழந்தைக்கு தாய்  என்று நினைத்தவன் கூடவே இவன்   இப்படி செய்ய மாட்டானே..

கடன் கொடுத்தவர்கள் திருப்பி கொடுக்கவில்லை என்றால், அந்த வீட்டு ஆண் மீது தான் கை வைப்பது. அப்படியும் கொடுக்கவில்லை என்றால்  அந்த வீட்டின் ஆணை தான் கஸ்ட்டியில் எடுப்பானே தவிர பெண் பக்கம் இது வரை அவன் பார்வை சென்றது கிடையாது.

இப்போது  ஒரு குழந்தையின் தாய்க்கு, சில்லரை நோ நோ லட்சங்கள் சிதற விடுகிறான்.. இப்போது சூர்யா, ஷ்யாமை அதிர்ச்சியுடன் பார்க்கவில்லை. ஆராய்ச்சியோடு பார்த்து கொண்டு இருந்தான்.

சக்தி சிரித்த முகத்துடன்.. “ ரொம்ப ரொம்ப தேங்ஸ் சார்.  இது போல் பைனான்ஸ் பண்றவங்க கிட்ட இறக்கம் எதிர் பார்க்க கூடாதுன்னு சொல்வாங்க.. ஆனா  நீங்க க்ரேட் சார்.” என்று சொன்ன சக்திக்கு சூர்யாவின்  மனம் பேசுவது கேட்கவில்லை.

ஏன் என்றால் அவன் ஷ்யாமை அப்படி திட்டி கொண்டு இருந்தான்.. மத்த பைனான்ஸ்காரனே மேல் இவன் தான் இருப்பதிலே எமாகாதகன்.. இவனை நீ நல்லவன் என்று நினைத்துக் கொண்டு இருக்க.. நினை.. நினை என்று..

அனைத்தும் நல்லவிதமாக முடிந்ததில் சக்தி மன நிம்மதியோடு.. “ அப்போ நான் வர்றேன்.” என்று  விடை பெற்ய்ம் வகையாக அவள் எழுந்துக் கொள்ள பார்த்தவளை,

“ என்ன எதுவும் சாப்பிடாது  கிளம்புறிங்க.. அதுவும் க்யூட் பேபிக்கு நான் எதுவும் கொடுக்காது விட முடியுமா..?” என்ரு சாருவை பார்த்து கொண்டே ஷ்யாம் கேட்க..

இவன் க்யூட் பேபி என்று யாரை சொல்றான். குழந்தையையா.. ?  இல்லை அம்மாவையா..? என்று திரும்பவும் சக்தி இங்கு வந்த்தில் இருந்து வாய் திறந்து பேசுவதை விட மனதோடே பேசிக் கொள்வது போல் இதையும் பேசிக் கொண்டான்.

பாவம் அவன் மனது உரையாடலில் ஷ்யாம் தன்னிடம் அவங்களுக்கு ஏதாவது குடிக்க கொண்டு வா என்றதை கவனிக்காது விட்டு விட..

“ சூர்யா என்ன இது கனவு ஏதாவது காண்கிறிங்களா..? அதுக்கு உண்டான இடம் இது இல்ல.. போங்க போ இவங்களுக்கு குடிக்க ஏதாவது  கொண்டு வாங்க.” என்று  அதட்டவும்

என்னையாடா  மிரட்டுற…? என்னையாடா கொண்டு வர சொல்ற..? என்று ஒரு பார்வை பார்த்துக் கொண்டே அந்த அறையை விட்டு போக பார்த்தவனின் காதில் ஷ்யாம் சொன்ன..

“பேபிக்கு என்ன வேண்டும் என்று  கேட்டுட்டு போ..” என்றதில், மனதில் நினைத்ததை வார்த்தையாக..

“ எந்த பேபிக்கு..” என்று கேட்டு விட்டான்.

அதற்க்கு அவன் பார்த்த அணல் பார்வையில் பயந்து போய் அந்த அறையை விட்டு ஓடியவன் சாருக்கு  என்ன வேண்டும் என்று கேட்காது வந்து விட்டதால்,

 பால்.. ஐஸ்கீரிம், சாக்லெட், என்று  அனைத்டும் ஏற்பாடு செய்தவன், சக்திக்கு  காபியை  அங்கு இருந்த வேலையாட்களின் சொல்லி இவை அனைத்தும் வாங்கி வாங்கி வர அரை மணி நேரம் பிடித்தது.

அனைத்தையும் எடுத்து வந்து ஷ்யாம் முன் வைத்தான். தெரியும் ஏன் இவ்வளவு லேட் என்று கேட்க மாட்டான். இதே வேறு சமயமாக இருந்து இருந்தால், கேட்பது என்ன அந்த திட்டு திட்டுவான்.  நண்பன் என்று கூட பாராது.

இப்போ ஏன் திட்ட போறான்.. இந்த அரை மணி நேரத்தை சக்தியிடம் நிறைய பெசி இருப்பான் போல்.. ஷ்யாமின் சாதரண கேள்விக்கு சக்தி எந்த பிகுவும் செய்யாது..

அவள் ஆபிஸ் டைமில் இருந்து சொல்லிக் கொண்டு இருந்ட பேச்சை கேட்டுக் கொண்டே ப்ளாஸ்க்கில் இருந்த காபியை  சூர்யா கப்பில்  ஊற்றுவதற்க்கு முன் ஷ்யாமே எழுந்து  முதலில் குழந்தைக்கு எது தேவை என்று கேட்டு அவளிடம் கொடுத்து விட்டு, மூன்று கப்பில் காபியை ஊற்றியவன், முதலில் சக்தி பக்கம் ஒரு கப்பை  நகர்த்தி விட்டு இன்னொன்றை தன் பக்கம் நகர்த்தவும் தான் சூர்யா பரவாயில்லை.. என்னை மறக்காது இருக்கிறானே அது  வரை போதும் என்று நினைத்து கொன்டான்.

சக்தி கடைசியாக கிளம்பும் போது தான் ஷ்யாம் சூர்யாவை அறிமுகம் படுத்தி வைத்தான்.

“ இவன் சூர்யா.. எனக்கு பி.ஏவா இருக்குறதுக்கு முன்ன என் நண்பனா இருந்தான்.” என்று அவன் பேசிய விதத்தில்..

‘ஏன்டா உனக்கு இப்படி எல்லாம் கூட பேச வருமாடா’ என்று அவனை ஒரு பார்வை பார்க்க, அவன் கண் சிம்மிட்டலில் பயந்து போய் இவன் தான் அய்யோ என்று சக்தியின் முகத்தை பயபக்தியுடன் பார்க்க ஆரம்பித்து விட்டான்.

தன் பார்வையை சக்தி.. “ அலோ..” என்று சொல்லி விட்டு குழந்தையோடு அந்த இடத்தில் இருந்து விடைப்பெற்றாள். 

விடை பெறும்  போது கூட ஷ்யாம்  பைனல்  டச் என்பது போல்.. “ பேபி நீ  அடிக்கடி இந்த அங்கிளை பார்க்க வரனும் என்ன..” என்று அந்த குழந்தையின் கன்னம் தட்ட வந்தவன் முன்  சாரு சொன்ன  பேட் ஹபிட் அவன் நியாபகத்தில் வந்த்தும் எடுத்த கையை தொடாது கீழே இறக்கி விட்டான்.

அதை கவனித்த சாரு.. “  யூ ஆர் குட் அங்கிள்”  என்று சொல்லி சக்தியின் பிடியில் இருந்த குழந்தை எக்கி  ஷ்யாமின்  கன்னத்தில் வைத்த அந்த முத்தம் இனித்ததா..?

இல்லை சாருவின் அந்த எக்கலில் சக்தியும் ஷ்யாமின் நெருக்கத்தில் வந்ததால் தன் உடலோடு  அவள் உடலின் லேசான அந்த உராய்வு நடந்ததே அது இனித்ததா..? அது அவனுக்கே வெளிச்சம். மொத்தத்தில் சக்தியையும் மகிழ்வித்து தானும் மகிழ்வது போல் தான் சக்தி ஷ்யாமின், சக்திக்கு முதல் முறையும், ஷ்யாமுக்கு இரண்டாம் முறையும் சந்தித்த அந்த நிகழ்வு நடந்து முடிந்தது..

சக்தி போன பின் எப்போதும் இல்லாது மன நிறைவோடு உதடு ஏதோ ஒரு பாடம் முனு முனுக்க தன் இருக்கையில் கண் மூடி கிடந்தவனை உலுக்கி நிகழ் உலகத்திற்க்கு கொண்டு வந்த சூர்யா..

“ என்ன நடக்குது ஷ்யாம்..? விளையாட்டு எல்லாம் வேண்டாம். எப்போதும் பண விசயத்தில் அப்படி கறாரா இருப்ப.. இப்போ என்ன..? 

எனக்கு தெரியும் கடன் வாங்கினவனை நாம் இன்னும் கண்டு பிடிக்கவில்லை என்று.. நான் எப்போதும் அதுக்கு நாம முக்கியத்துவம் கொடுக்க மாட்டோம்.. ஆடு போல்  ஜாமின் கையெழுத்து போட்டவனை தான்  நாம் பிடிப்போம் என்று..

இது என்னவோ எனக்கு நல்லதா படல ஷ்யாம்..  அதுவும் நாற்பது லட்சம்  விட்டது..” என்ற   சூர்யாவின்  பேச்சுக்கு ஷ்யாம் ஒரே வார்த்தையில்..

“ என் சொத்து மொத்தமும் அவளுக்கு தான்  எனும் போது..” என்ற அவன் வார்த்தையில் சூர்யா  அதிர்ந்து தான் போனான்.. ஏன் என்றால் அவனை பொறுத்த வரை சக்தி  திருமணமானவள்.. ஒரு குழந்தைக்கு தாய்.. அந்த வகையில் யோசித்தால் அவன் அதிர்ர்சி ஆக தானே செய்வான்.

 

Advertisement