Advertisement

அத்தியாயம்…3 

ஷ்யாம் குழந்தையை இறக்காது, தன் பக்கத்தில் நின்று கொண்டு இருந்தவர்களிடம்… “ யார் குழந்தை என்று பார்.” என்று சொன்னவன், மீண்டும் தன் கவனத்தை அந்த குழந்தையிடம் செலுத்தினான்.

“உனக்கு எப்படி கூகுலில் எல்லாம் சர்ஜ் பண்ண தெரியுது..? என் நேம், என் கம்பெனி நேம்  ஸ்பெல்லிங் உனக்கு எப்படி தெரியும்..?” என்று அந்த குழந்தையிடம்  கேட்டான்.

ஷ்யாம் அந்த குழந்தையின் பேச்சில்  அதிசயத்து  சாருவிடன் பேச்சு கொடுத்தான் என்றால், ஷ்யாம் அந்த குழந்தையிடம் இவ்வளவு அன்பாக பேசுவதை அவன் கூட இருந்தவர்கள் அதிசயத்து பார்த்து கொண்டு இருந்தனர்.

பின் இருக்காதா..?  அவன் இது போல் எல்லாம் யாரிடமும் பொறுமையாக பேசி அவர்கள் பார்த்து இருக்க மாட்டார்கள். இன்னும் கேட்டால் பணம் கொடுக்காதவர்களிடம் மிரட்டி பணம் வாங்க வேண்டி தான் அதற்க்கு என்று ஆளை தேர்வு செய்து இருக்கிறான்.

அவர்களுக்கும் கனிவு இருக்க கூடாது. தொழில் அப்படி.. ஒரு சில சமயம்  ஷ்யாம் நியமித்த ஆட்கள்  கூட கடன் வாங்கியர்கள் ஏற்றுக் கொள்ளும் படி  காரணம் சொன்னால்..

“ சரி ஒரு வாரம் தான் டைம் ..” என்று சொல்வார்கள்.

அதற்க்கே ஷ்யாமிடம் அவ்வளவு பேச்சு வாங்குவார்கள்.. “ சரி அவங்க அடுத்த வாரமே கொடுக்கட்டும்.. நீ என்ன செய்யிற  உன் பணத்தை பைனாஸ்  கம்பெனி கிட்ட கொடு.. அவங்க அடுத்த வாரம் கொடுக்கும் பணத்தை நீ வாங்கிக்க..” என்று அவர்கள் செய்த தவறுக்கு   சாதரணமாக  தண்டனையாக சொல்லி விடுவான். ஒரு சிலரிடம் அவன்  செய்தும் காட்டி இருக்கிறான்.

ஆனால் ஒன்று மகேந்திரா பைனான்ஸிடம் முதல் முறை கடன் வாங்க வருபவர்களிடம் தெளிவாக சொல்லி விடுவான். தன் பைனான்ஸின் விதிமுறைகளை.. அச்சிட்ட காகிதத்தையும் கொடுத்து.

“ பொறுமையா வீட்டில் படித்து பார்த்து விட்டே வாங்க.” என்று..  

ஆனால் பணம் வாங்கிய பின், தன் பைனான்ஸில் விதி முறைகளை  ஒன்றை கூட தகர்க்க நினைக்க மாட்டான்..

“ அனைத்திற்க்கும் ஒத்துக் கொண்டு தானே பணம் வாங்கினிங்க.” என்று ஒரு சிலரிடம் அடாவடியாக தான் பணம் வசூலிப்பது போல் ஆகி விடும் அவனுக்கு,

அது என்னவோ கடன் வாங்கும் போது இருக்கும் அந்த பவ்யம், அதை திருப்பி கொடுக்கும் போது இருப்பது இல்லை.

வாங்கும் போது தெரியாத  அந்த அநியாய வட்டி. கொடுக்கும் போது தான் தெரிகிறது போல்.. வட்டியோடு அவனுக்கு பல வித சாபமும் வந்து சேரும். அதை எல்லாம் அவன் பெரிதாக நினைக்க மாட்டான்.   அவன் தொழிலில் ஏமாற்றவும்   கூடாது.ஏமாறவும் கூடாது. இது தான்   அவன் பாலிசி.

அவன் தன் தன்மையான பேச்சை வீட்டோடு முடித்துக் கொள்வான்.. இங்கு எப்போதும் சிடு சிடு தான். எப்போதும் அப்படி பார்க்கும் ஷ்யாமை, அவனின் இந்த மென்மையான பேச்சில் அதிசயத்து பாக்க..

அவனோ சாருவிடம் தான் கேட்ட கேள்விக்கு அவள் சொன்ன பதிலான.. “ நேத்து  அம்மா தான் முதலில் உங்க இந்த கம்பெனி எங்கு இருக்கு என்று  கூகுலில் அட்ரஸ் தேடுனாங்க.. அப்போ  அவங்க பக்கத்தில் படுத்து இருந்த நான் அவங்க டைப் பண்ணும் போது  ஸ்பெல்லிங் பார்த்தேன்.” என்ற அந்த குழந்தையின் பதிலில், அது எப்படி..? இப்போது அவனுக்கு கொஞ்சம் சந்தேகம் வந்தது..

ஆனால் குழந்தை சொல்லி கொடுத்து சொல்வதற்க்கும், தானாக சொல்வதற்க்கு வித்தியாயம்  தெரியும்  அல்லவா..?  அதனால் அதன் படி பார்த்தால் வந்த சந்தேகம் மறைவது போல்..

சரி குழந்தையின் அம்மாவை பார்த்து விடலாம் என்று இவன் எண்ணும் வேளயில் அந்த தளத்தில்  சாருவை தேடிக் கொண்டு வந்த  சக்தியை பார்த்தான்.

உடனே குழந்தையிடம் “ அவங்க தான் உன் மம்மியா.? என்று ஏதோ தெரிந்து கொள்ளும் வேகம் அவ்னின் கேள்வியில் மறைந்து இருந்தது.

“ ஆமாம் அங்கிள்.” என்று சொன்ன சாரு, “ உங்களுக்கு என் மம்மிய தெரியுமா..?” என்று கேள்வி வேறு கேட்டு வைத்தாள்.

அதற்க்கு தெரியும். தெரியாது என்று பதில் சொல்லாது இரு பக்கமும் பொதுவாக தலையாட்டியவன். 

தூக்கிய குழந்தையை எடுத்துக் கொண்டு தன் அறை பக்கம் நடையை போட்டவன் தன் பின் வந்தவர்களிடம்.

சக்தி பக்கம் கை காட்டி.. “ அவங்களை என் ரூமுக்கு அனுப்புங்க.” என்று சொன்னவன் கூடவே தன் அறைக்கு போனான்.

அவன் அறையில் ஷ்யாமின் நண்பனும் அவனின் உதவியாளடும் ஆன சூரியா போன வேகத்தில் வந்த ஷ்யாமை பார்த்து.

“ என்ன ஷ்யாம் அந்த பில்டர் பணம் வாங்கிட்டு பிரச்சனை பண்றான்  இப்போ போனா தான் உண்டு, இல்லேன்னா அவனை ஒரு வாரம் கழித்து தான் பிடிக்க முடியும் என்று அவ்வளவு வேகமா போன.. இப்போ என்ன திரும்பி.” என்று வேகமாக பேசிக் கொண்டு வந்த சூர்யா அப்போது தான் ஷ்யாம்  தூக்கி வைத்து இருந்த குழந்தையை பார்த்தான்.

“ பேபி யாருடைது ஷ்யாம்… க்யூட்டா இருக்கா.” என்று கேட்டுக் கொண்டே குழந்தையின் கன்னத்தை கிள்ளினான் சூரியா..

“ இப்படி கன்னத்தை தொட கூடாது அங்கிள். அது பேட் ஹாபிட். எனக்கு இங்கு ரேடிஷ் மாதிரி வரும்.” என்று சொன்ன அந்த குழந்தையின் பேச்சில் இப்போது சூரியா அதிசயத்து தான் போய் விட்டான்.

“யார் குழந்தை  ஷ்யாம். “ என்று திரும்பவும் கேட்டான்.

அவனுக்கு பதில் அளிக்காது தான் அமரும் அந்த சுழல் இருக்கையில் அந்ர்ஹ குழந்தையை அமர வைத்தவன் சாரு அந்த சேரில் அமர்ந்ததும்,  அந்த  சேரை சுழல விட்டான்.

அதில்  சாரு கல கல என்று சிரிக்கும் அழகை கண் எடுக்காது பார்த்தவனை, சூர்யா வேற்று கிரகவாசியை போல்  பார்த்து வைத்தான்.

எப்போது ஷ்யாம் அந்த இருக்கையில் வேறு எவரும் அமர விட மாட்டான். சூர்யாவே அவன் எதிர் இருக்கையில் தான் அமர்வான். அவனே சில சமயம் கேட்பான்.

“ அது என்ன முதல்  அமைச்சர் நாற்காலியா..? இப்படி ஓவர பண்ணிக்கிற.. என்று.

அதற்க்கு  “ நீ சொன்ன அந்த இருக்கை அவங்களுக்கு ஐந்து வருடம் என்று கூட உறுதி இல்ல. ஆட்சியை கலைத்து விட்டால், போயிடும். ஆனால் என்னுடைய இந்த இருக்கை எனக்கு எனக்கு மட்டுமானது. இதில் இருந்து யாரும் என்னை இறக்க  முடியாது.” என்று சொல்லி கால் மேல் கால் போட்டுக் கொண்டு அவன் பேசும் கெத்தை பார்த்து சூரியாவே நினைத்துக் கொள்வான். அவனுக்கு தான் இந்த இருக்கை பொறுத்தம் என்று..

அப்படி   அவன் போற்றும் அந்த இருக்கையில் அந்த குழந்தையை அமர வைத்து அவன் அழகு பார்க்க, இவன் திரும்ப யார் குழந்தை என்று கேட்கவில்லை.

அதற்க்குள் அந்த அறைக்கு  சக்தியை அழைத்து கொண்டு ஷ்யாமின் ஆட்கள்  வந்து விட்ட்தால், இப்போது சூர்யா சக்தியை  யார்..? என்பது போல் பார்த்து வைத்தான்.

சக்தி அந்த இருக்குகையில் சாரு இருப்பதை பார்த்து.. “ என்ன இங்கு இருக்கா..?” என்று குழந்தையிடம் இறங்கு என்பது போல் கண் காட்டியவாறு ஒரு முன் எச்சரியுட்ச்ன் தன் சக்தி ஷ்யாமையும், சூர்வையாவையும் பார்த்தது.

சக்தியின் பார்வையில் ஷ்யாம் என்ன உணர்ந்தானோ. “ உங்க பேபி பிர்லியன்ட்டா இருக்கா. சோ க்யூட்.” என்று குழந்தையை பாராட்டி பேசவும், சக்தி முகத்தின் தன்னால் புன்னமை வந்தது மகளின் பெருமையில்.

அவளிடம் பேசும் எவரும் இதை தான் சொல்வர். ஒரு சிலர் அவளின் சில செயல்களில் அதிசத்தும்  வியந்தும் பார்த்து இருக்கின்றனர். ஒரு தாயாக சாருவின் இந்த பேச்சில் அவள் மனது அவ்வளவு துள்ளும். இவள் என் வளர்ப்பு என்பதில்.

ஷ்யாமின் பாராட்டை தன் சிரிப்பில் ஏற்றுக் கொண்டவள். சாருவிடம்.. “ சாரும்மா வாடா அங்கு எல்லாம் நீ உட்கார கூடாது எழுந்து  மம்மி பக்கத்தில் உட்கார்.” என்று அன்னை அழைத்ததும் சாருவிம் அடம் பிடிக்காது எழுந்து சக்தியின் கை பற்றிக் கொண்டாள்.

இதை எல்லாம் சூர்யா ஏதோ நாடகம் பார்ப்பது போல் தான் பார்த்து கொண்டு இருந்தான்.

சக்தியை எதிர் இருக்கையில் அமர சொன்ன ஷ்யாம் “ நீங்க வந்த விசயம். என்ன என்று தெரிந்து கொள்ளலாமா..?” என்று தன்மையுடனும் , மரியாதையுடனும் ஷ்யான் சக்தியிடம் வினாவினான். இதையும் சூர்யா  அதிசயத்து தான் பார்த்து கொண்டு இருந்தான். என்ன நடக்குது என்பது போல்.

சக்திக்கு ஷ்யாமை இவ்வளவு எளிதாக பார்த்து விடுவோம் என்று இனைத்து கூட பார்க்க முடியவில்லை. காரணம் சிறிது நேரத்திற்க்கு முன் வர வேற்ப்பு பெண் அவளிடம் பேசிய பேச்சு அப்படி.

முதலில் பார்க்க முடியாது. அப்பாயிண்ர் மென்ட் இல்லாது அவர் எப்போதும் யாரையும் இது வரை பார்த்த்து கிடையாது என்று அந்த வர வேற்ப்பு பெண் கொடுத்த பில்டப்பில் என்னடா இது கொடுப்பது வட்டிக்கு, என்னவோ  இன்டர் நேஷனல் அளவில் பிசினஸ் செய்வது போல் ஒரு பில்டப்ப கொடுக்கிறாங்க என்று அந்த வரவேற்ப்பு பெண்ணிடம் தான் வந்த காரணத்தை மிக பொறுமையாக சொன்னாள். அப்போதாவது பார்க்க விடுவாள் என்று நினைத்து.

இவள் சொன்ன விசயத்தை கேட்ட அந்த வர வேற்ப்பு முன் முனோடு மிக மோசமாக ஒரு லுக் விட்டு கொண்டு..

“ பணம் வாங்கி கொடுக்க முடியாத பார்ட்டியா..?” என்று அவள் கேட்ட தினுசே  அவள் தன்னை எவ்வளவு கேவலமாக நினைக்கிறாள் என்று சொல்லியது.

சக்தி அப்போதும் பொறுமையாக தான் “ பணம்  என் அப்பா வாங்கல அவர் வெறும் ஜாமின் கைய்யெழுத்து தான் போட்டார்.” என்று சொல்லியும், இரண்டும் ஒன்று தான் என்று சொன்னதில் தான் அவளுக்கு பொறுமை பறந்து கோபம் வந்து விட்ட்து.

பின் அவள் ஏதோ பேச தான் பேச என்று அந்த இடைப்பட்ட நேரத்தில் தான் குழந்தை தன் கை பிடியில் இருந்து நழுவியது. சிறிது நேரம் கழித்து தான் குழந்தை தன் பிடியில் இல்லை என்பதே சக்தி உணர்ந்தது.

பின் ஷ்யாமை பார்பதை மறந்தவளாக பதட்ட்த்துடன் குழந்தையை தேட ஆரம்பித்து விட்டாள். குழந்தை மிக புத்திசாலி தான். நல்லவர்கள் பார்த்து விசாரித்தால் தங்கள் வீட்டு முகவரியில் இருந்து , தன் வீட்டில் இருஇக்கும் இரன்டு பேசியின் எண் வரை சரியாக சொல்லி விடுவாள் தான்.  நல்லவர்கள் பார்க்காது . இப்போது தான் கை குழந்தையையும் பத்திரமாக வைத்து கொள்ளும் காலமாக உள்ளதே, 

Advertisement