Advertisement

இந்த அம்மா பேசுவது நம்ம வீட்டை பத்தியா.. அய்யோ என்ன இது..? என்று  இரு பெண்ணை பெற்ற தாயாய் அந்த வார்த்தை அவரை பதற  வைக்க போது மானதாக இருந்தது.. ஏன் இந்த அம்மா இப்படி பேசுறாங்க என்று குணசேகர் தான் யோசித்தார்..

ஆனால் சக்தி சசிகலாவிடம்.. “ என்ன அந்த அம்மா பைய்யனை லவ் பண்றியா..?” என்று தாய் தந்தையர்  முன்னவே கேட்டு விட..  சசிகலா சக்தியின் பேச்சுக்கு  மறுக்காது அமைதியாக  இருந்து விட, அவளின் அமைதியே சொல்லாமல் சொல்லி  விட்டது.. அவள் அந்த  எதிர் வீட்டு பைய்யன்  சரணை விரும்புகிறாள் என்று..

இப்போது வீட்டுக்குள்  தன் மகளிடம் விசாரணை  செய்யவா..? வெளியில்  சத்தம் இடும் அந்த அம்மாவிடம் பேச வேண்டுமா..? எப்படி வெளியில் போவது..? கெளரவமா வாழ்ந்த இடத்தில்  அனைவரும் பார்க்க, என்ன இது என்று காதல் என்ற வார்த்தைக்கே அந்த பெற்றோர் அப்படி நடுங்கி  போய் இருந்தனர்..

ஆனால் இதற்க்கே இப்படி நடுங்கி விட்டால் எப்படி.. ? இது ஆரம்பம் மட்டும் தான் என்பது போல் தான் அடுத்து அடுத்து நடந்தது..

சரணின் குரல் அவன் அம்மாவோடு ஓங்கி.. “ இப்போ எதுக்கு கத்திட்டு இருக்க.. சசி  என் காதலி இல்ல பெண்டாட்டி “ என்ற பேச்சில் அந்த  வீதியில் தங்கள் வீட்டு வாசப்படியின் அருகில் நின்று கேட்டுக் கொண்டு இருந்த அனைவரின்  காதிலும்  அந்த வார்த்தை மிக  தெளிவாகவே விழுந்தது…

சரணின் இந்த வார்த்தையில்  குணசேகர் குடும்பம்  மொத்தமும்  வீதிக்கு வர.. அவர்கள் வீட்டு விசயம் வீதியில் பேசப்பட்டது..

சரண் சொன்னது போல் அவர்கள் காதல் திருமணத்தில், அதாவது பதிவு திருமணத்தில் முடிந்து மாதம் ஒரு கடந்து விட்டது என்று அவன்  பதிவு திருமணசான்றிதழ் காட்ட..

சில பல பேச்சுக்கள்.. ஏச்சுக்களுக்கு  பிறகு  சசிகலா இந்த வீட்டு  பெண்ணில் இருந்து, எதிர் வீட்டு மருமகளாக இடம் மாறி போக.. அதன் பின் தான் எதிர் வீடு  வெளியில் பார்க்க மட்டும் தான் அழகு.. உள் சென்றால்  அது எவ்வளவு அசிங்கம் பிடித்தது என்று தெரிந்தது..

சசிகலாவுக்கு காதல் மயக்கம் தெளிந்து நிதர்சனம் புரியும் போது அவள் வயிற்றில் ஐந்து மாத கருவாக சாரு வளர்ந்து இருக்க, முதலில் மாமனார் மாமியார் பேச்சுக்கள் கேட்டவளுக்கு, தன் கணவன் தனக்கு இருக்கிறான் என்ற தைரியத்தில்  அனைத்தையும் தாங்கி கொண்டவளுக்கு, பின் காதல் கணவனின் அந்த அலட்சியமான  அந்த வார்த்தைகள், போக்கு ..

முதலில் ஏன் என்று தெரியாது இருந்தவளுக்கு தெரிந்த விசயம்.. அவனுக்கு இன்னொரு பெண் மீது காதலாம்.. “ “ அது எப்படி வரும்.. ? அதுவும் என்னை காதலித்து கல்யாணம் செய்த பின்..” என்று கேட்டதற்க்கு,

அவன் சொன்ன பதில்..” உன் மீது எனக்கு வந்தது காதலே கிடையாது.. ஈர்ப்பு “ என்று சொல்லி சுலபமாக தப்பித்துக் கொண்டான்..

சசிகலாவுக்கு சரண் சொன்னது போல் அவன் மீது  ஈர்ப்போ, இல்லை காதலோ, ஆனால் அவள் வாழ்க்கைக்கு அவன் மட்டும் தான் என்று நினைத்து தான் தன் வாழ்க்கையை அவனிடம் ஒப்படைத்தது.. இப்படி விட்டு விடுவான் என்று நினைத்தும் அவள் பார்க்கவில்லை…

அதுவும் கூடவே அவன் சொன்ன.. “ நான் காதல் சொன்னதும் ஒரு நிமிடம் கூட யோசிக்காது நீ எப்படி சட்டுன்னு ஒத்துக்கிட்ட.. அதோட   வீட்டில்  நம்ம கல்யாணத்துக்கு  ஒத்துக்க மாட்டாங்க…

அதனால முதலில் நாம் பதிவு திருமணம் செய்துக்கலாம்.. பின் அவங்களுக்கு வேறு வழி இல்லாது நம்ம கல்யாணத்தை ஏத்துப்பாங்க  என்று சொன்னதும் எப்படி அதுக்கும் ஒத்துக்கிட்ட.. நீ கொஞ்சம் டைம் கேட்டு இருந்தா நல்லா இருந்து இருக்கும்.. பார் இப்போ என் டால் பீல் பண்றா..  நாம கல்யாணம் செய்துக் கொண்டாலும்  நான் உங்களுக்கு இரண்டாம் மனைவி தானே என்று.. அது எப்படி நான் எது கேட்டாலும் உடனே ஒத்துக்கிட்ட.. 

ஒரு வேள எங்க அம்மா சொன்னது போல் என் வசதி பார்த்து தான்.. எல்லாமா..?” என்று  அவன் மீது   வைத்த காதலையே கொச்சை செய்த பின்  சசிகலாவுக்கு அடுத்து பேச என்ன இருக்கிறது..

காதல் திருமணம்.. அவனை மட்டுமே நம்பி அந்த வீட்டுக்கு சென்றது.. அவனே பொய்த்து போன பின், அவளுக்கு அந்த வீட்டில் என்ன இருக்கிறது..தன் வீட்டுக்கே வந்து விட்டாள்..

என்ன தான் மகள் மீது கோபம் என்றாலுமே, அவள் கஷ்டப்படும் போது பார்த்துக் கொண்டு சும்மா இருக்க அந்த பெற்றோர்களால் முடியவில்லை..  நல்ல படியாக தான் பார்த்துக் கொண்டனர்..

குழந்தை சாரு   பிறந்த மூன்றாம் மாதம்  சரண்  தன் உண்மையான காதல்  அவள் தான் என்று சொன்ன பெண் அவன் வீட்டுக்கே வந்து விட.. சரணுக்கு உடனடியாக விவாகரத்து தேவைப்பட்டது..

சசி கொடுக்க மாட்டேன் என்று சொன்னதும் திரும்பவும் முதலில் இருந்து என்பது போல் சரணின் அம்மா வீதியில் சத்தம் இட… சசி என்ன நினைத்தளோ விடியலில் அவள் தனக்கு இது தான் விடியல் என்று நினைத்து மரணத்தை அவள் தழுவிக் கொண்டாள்..

முடிந்தது.. அனைத்தும் முடிந்தது என்று இவர்கள் இருக்க, இது தான் ஆரம்பம் என்பது போல் தான் அடுத்த அடுத்த நடந்த நிகழ்வுகள் இருந்தன..

குணசேகர் சசிகலா இறந்த ஆறு மாதத்தில் அவரும்  ஹார்ட் அட்டாக்  வந்து இறந்து போக, மகள்  போன துக்கம் தான் என்று  அனைவரும் நினைத்தனர்.. ஏன்  தாட்சாயிணி,  சக்தியும்,  கூட இதை தான் நினைத்தார்கள் .

ஆனால் அவர் இறந்த அடுத்த மாதமே மகேந்திரா பைனான்ஸ்சில் இருந்து வந்த ஆட்கள்  தாட்சாயிணியிடம் சொன்னது இது  தான்..

 “உங்க வீட்டுக்காரார் போட்ட ஜாமீனுக்கு அவர்  தான் பொறுப்பு என்று அவருக்கு  நோட்டிஸ் அனுப்பி ஒரு மாதம் ஆகிறது.. என்ன ஒரு பதிலும் காணும்..” என்று கேட்ட போது.. அவருக்கு ஏன் ஹார்ட் அட்டாக் வந்தது என்ற உண்மை நிலவரமே புரிந்தது..

இருபது லட்ச தொகைக்கு  ஜாமின் கைய்யெழுத்து போட்டு இருக்கிறார்.. அது வட்டி .. வட்டிக்கு வட்டி என்று சேர்ந்து  நாற்பத்தி ஐந்து லட்சம் சேர்ந்து உள்ளது.. அதற்க்கு ஈடு என்று இப்போது அந்த மகேந்திரா பைனான்ஸ் தங்கள் வீட்டை கேட்டுக் கொண்டு இருக்க..

அது பேச தான்  சக்தி அந்த பைனான்ஸ்க்கு செல்ல.. தாட்சாயிணி இந்த வீடே வேண்டாம். போனால்  போகிறது என்று சொல்வது.. தன் மகளை மரணத்துக்கு கொடுத்து தான் வயிறு எரிந்துக் கொண்டு இருக்க, எதிர் வீட்டு சரண் இன்னொரு திருமணம் செய்துக் கொண்டு புதுமனைவியோடு கைய் கோர்த்துக் கொண்டு செல்வதை தாட்சாயிணியால் தாங்க  தான் முடியவில்லை.. அனைத்துக்கும் ஒரு முடிவு இந்த வீடு போனால் போகிறது என்ற நிலைக்கு அவர் வந்து விட்டார்..

ஆனால் சக்திக்கு அது எப்படி தன் அப்பாவா கடன்  வாங்கியது.. பேசி தான் பார்ப்போம் என்று நினைத்து முதலிலேயே   அந்த மகேந்திரா பைனான்ஸ்ஸில் முதலாளி  ஷ்யாம் அங்கு எத்தனை மணிக்கு வருவான் என்று  தெரிந்துக் கொண்டு சரியாக  அந்த நேரத்துக்கு அங்கு இருப்பது போல் கிளம்பியவளை தாட்சாயிணி தடுக்க..  குழந்தை சாரு அழ என்று தடங்கள் வந்தாலுமே, சக்தி தன் அன்னையையும் சமாதானம் படுத்தி குழந்தையையும்  தயார் செய்து  கைய்யோடு அவளையும் அழைத்துக் கொண்டு சென்று விட்டாள்..

சாருவுக்கு மூன்று வயது ஆகிறது, அவள் சக்தியை தான்  அம்மா என்று  நினைத்துக் கொண்டு இருக்கிறாள்.. தந்தை எதிர் வீட்டில் இருந்தாலுமே அந்த உறவை இது வரை அவளுக்கு அறிமுகம் படுத்தவில்லை.

மூன்று வயதாகும் சாரு புத்திசாலியான குழந்தை.. புத்திசாலி என்றால் அதை வார்த்தையால் சொல்ல முடியாது.. ஒரு முறை சொன்னால் என்ன மற்றவர்கள் பேசுவதை வைத்தே அனைத்தும் புரிந்துக் கொள்ளும் தன்மை அவளுக்கு இருக்கிறது..

சமீபகாலமாக அவள் டீச்சர் சொல்வது இது தான்… “ இந்த குழந்தையிடம் ஏதோ திறமை இருக்கு சக்தி.. “ என்று சாருவிடம் சக்தி புகுந்துக் கொண்டு இருப்பது போல் அவர் சொல்வதை கேட்கும் போது சிரிப்பாக இருந்தாலுமே, இப்போது எல்லாம் அவளுமே சாருவின் கேள்வியில் திணறி தான் போகிறாள்..

அவள் கேட்கும் கேள்வி அனைத்துமே மூன்று  வயது குழந்தை போல் இல்லாது, வளர்ந்த பிள்ளைகள்  போல் தான் இருக்கும்.. அதுவும் இதோ இப்போது தன் ஸ்கூட்டியில் பின் அமர வைத்து அவளை அழைத்துக் கொண்டு செல்லும் போது,  அந்த வண்டி இயங்குவதை விவரித்து சொல்ல சொல்ல. இவளுக்கு இது எப்படி தெரியும்.. அதுவும் தனக்கே தெரியாத போது… என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போதே தாங்கள் வரவேண்டிய இடம் வந்து  விட்டதால்,  சாருவின் நினைவு பின் சென்று ஷ்யாமிடம் எப்படி பேச  என்ற யோசனையே அவளை ஆக்கிரமித்துக் கொண்டது..

 சக்தி வர வேற்ப்பு பெண்ணிடம்.. “ ஷ்யாம் சாரை பார்க்கனும்..” என்று கேட்டதற்க்கு..

அந்த பெண்  கேட்ட.. “ அப்பாயிண்ட்மென்ட் இருக்கா…?” என்ற கேள்வியில்,   சக்திக்கு என்னவோ ஐடி கம்பெனி வெச்சி இருப்பது போல என்ன பில்டப்பு.. நடத்துவது வட்டிக்கடை.. இதுக்கு என்ன அப்பாயிண்ட் மென்ட்.. என்று நினைத்தாலும், இன்று அவனை பார்த்தே ஆக வேண்டும்  என்ற முனைப்பில், அந்த வரவேற்ப்பு பெண்ணிடம் ஏதேதோ பேசிக் கொண்டு இருந்ததில் கை பிடித்து இருந்த சாருவை  எப்போ  தன் கை பிடியை தகர்த்தினால் என்று தெரியாது..

ஆனால் குழந்தை சக்தியிடம் இருந்து மெல்ல மெல்ல நழுவி ஷ்யாம் இருக்கும் பகுதிக்கு வந்து விட்டாள்..

ஷ்யாம் அந்த தளத்தில் நடந்து வந்தவன் பக்கத்தில் வந்தவர்களிடம்… “ அது எப்படி விட்டு விடலாம்.. ? பணம் வாங்கும் போது எல்லாத்துக்கும் தலையாட்ட வேண்டியது.. பின்   நேரம் கேட்டால் கொடுத்து விடுவிங்களா..  அவன் வீட்டு முன் எப்போதும் ஆடி கார் நிற்க்குமே அதையாது தூக்க வேண்டியது தானே..” என்று பேசிக் கொண்டு வந்தவனின் காலை யாரோ பிடித்து கொள்வது போல் இருக்க , தன் பேச்சை விடுத்து குனிந்து  அந்த ஆறடி மனிதன்  மிக குனிந்து தான் நம் சாருவை பார்க்க வேண்டியதாயிற்று ஷ்யாமுக்கு,

முதலில் அந்த குழந்தையை  தூக்காது.. யாருடையது..? என்று தான் அந்த தளத்தை ஓட்டி  தன் பார்வையை ஒட விட்டான்..

அவன் பார்வைக்கு பதில் கிடைக்கவில்லை என்றாலுமே, அக்குழந்தை மூலம் ஷ்யாமுக்கு பதில் கிடைத்தது.. 

“ மம்மி பஸ்ட் ப்லோர்ல உங்கல பார்க்க வேண்டும் என்று கேட்டாங்க.. அதுக்கு அந்த ஆன்ட்டி அப்பாயிண்ட்மென்ட் இல்லாம பார்க்க  முடியாதுன்னு சொன்னாங்கலா.. ஆனா மம்மி உங்ளை பார்த்து தான் ஆகனும் என்று அங்கே பேசிட்டு இருக்காங்க.. “ என்று அக்குழந்தை பேச்சில், ஷ்யாமின் கை தன்னால் அக்குழந்தையை வாரி அணைத்துக் கொண்டது..

“ ஓ உங்க மம்மி என்னை பார்க்க வந்து இருக்காங்கலா..? எதுக்கு..?” என்ற கேள்வியும், நான்  தான் ஷ்யாம் என்று உனக்கு எப்படி தெரியும்..?  என்ற கேள்வியும் கேட்டான்..

“ எதுக்கா..? எங்க தாத்தா உங்க கிட்ட பணமே வாங்கல..  நாங்க எதுக்கு எங்க வீட்டை  உங்களுக்கு கொடுக்கனும்..அது கேட்க தான் எங்க மம்மி வந்து இருக்காங்க..” என்ற குழந்தையின் பேச்சில் ஷ்யாமின்  குரலில் இருந்த ஸ்ருதி தன்னால் குறைந்து போனது..

“ ஓ பணம் கட்ட முடியாதவங்க.. அதுக்கு டைமோ கொடுக்காத்திற்க்கு ஏதோ காரணமோ   சொல்ல தான்.. இதை எல்லாம் ஷ்யாம் எப்போதும் அனுமதிக்க மாட்டான்..

அதனால் அவன் அடுத்த கேட்ட கேள்வியான என்னை எப்படி உனக்கு தெரியும்..? என்ற கேள்வியை ஷ்யாம் மறந்து இருந்தாலும், சாரு மறக்காது..

“ நேத்து பாட்டியும், மம்மியும்.. உங்கல பார்க்க வரதுல டிஷ்யூ டிஷ்யூ.. நீங்க கெட்டவங்க என்று பாட்டி சொன்னாங்க.. மம்மி நான்  அங்கு போய் தான் ஆவேன் என்று சொன்னாங்க.. 

அது தான் நீங்க கெட்டவங்களா..? நல்லவங்களா..? என்று தெரியிறதுக்கு நேத்து மம்மி சொன்ன  பெயரையும், இந்த  பைனான்ஸ் பெயரையும் கூகுலில் போட்டு பார்த்தேன்.. உங்க போட்டோ அதில் இருந்தது.. அப்படி தான் நான் உங்களை அடையாளம் தெரிந்துக் கொண்டேன்..” என்ற சாருபேசிய பேச்சில், ஷ்யாம் மட்டும்  அல்லாது அவன் பக்கத்தில் இருந்த அனைவரும் அதிசயம் போல் அந்த குழந்தையை பார்த்தனர்..

Advertisement