Advertisement

அத்தியாயம்…2

தாம்பரம் மத்திய வர்க்கத்தினர் அதிகம்  வசிக்கும் அந்த பகுதியில்,  ஏனைய வீடு போல் தான் இரண்டு படுக்கை அறையும், ஒரு கூடம்,, சின்ன சமையல் அறை என்ற அமைப்பு கொண்ட  அந்த இல்லத்தில், ஏனைய வீடு போல் பிரச்சனை இல்லாது, பல  விதத்தில் பல ரூபத்தில் வருவது போல் இருந்தது அந்த வீட்டின் இல்லத்தரசி தாட்சாயிணிக்கு..

  அஷ்டம சனி அந்தரங்கத்தில்  ஊஞ்சலாடும்  என்று அந்த ஜோசியக்காரன் சொன்னது போல் தான், ஒன்று விட்டால் இன்னொன்றென்று, பிரச்சனை துரத்திக் கொண்டு  அவர்கள் குடும்பத்துக்கு வருகிறது..

 ஏதேதோ மனதில் ஓட   தாட்சாயிணி  தன் பேத்தி   சாருக்கு  பால் கலக்கியவர்,  கூடவே  தன் மகளுக்கும்  காபி கலந்துக்  கொண்டு மகளின் அறைக்கு  கொண்டு சென்றார்..

மகள்  சக்தி படுக்கையில் படுத்துக் கொண்டு இருப்பாள் எந்று நினைத்துக் கொண்டு இருக்க, அவளோ   வெளியில் போவது போல் கிளம்பிக் கொண்டு இருந்தவளை பார்த்து..

“ எங்கு போற சக்தி…?” என்று தாட்சாயிணி தன் மகளை பார்த்து பதட்டத்துடன் கேட்டார்..

“ நேத்து  அவ்வளவு சொல்லியும் எங்கு என்று கேட்கிறிங்க…?” என்று திருப்பி தன் அன்னையை பார்த்து கேள்வி கேட்டாலுமே, வெளியில் போவதற்க்காக வாரிக்  கொண்டு இருந்த தலையை நிறுத்தாது அனைத்தும் செய்து முடித்து விட்டு,

படுக்கையில் இருந்த குழந்தையையும்  எழுப்பிக் கொண்டு இருந்தவளை கை பிடித்து தடுத்து நிறுத்திய தாட்சாயிணி..

“ நானும் நேத்தே வேண்டாம் என்று சொன்னதா எனக்கு நியாபகம் டீ…” என்று பல்லை கடித்துக் கொண்டு தன் கோபத்தை அடக்கிக் கொண்டவராக பேசினார் தாட்சாயிணி..

“ அம்மா  இந்த வீடு..” என்று ஏதோ சக்தி பேச்சை ஆரம்பிக்க..

“ வேண்டாம்.. போகட்டும்… இந்த எழவு பிடிச்ச வீடு போனா போகட்டும்… உயிரோட மொத்தமா பெண்ணையும், புருஷனையும்,  பரி கொடுத்த பின் இது எல்லாம் எம்மாத்திரம் டீ.. வேண்டாம்..  நீ போக வேண்டாம்..” என்று தாட்சாயிணி சொன்னதே திருப்பி திருப்பி சொல்லிக் கொண்டு இருந்தவரை  எதிர்த்து பேசாது கை கட்டி அமைதியாக தன் அன்னையை பார்த்து கொண்டு இருந்தாள் சக்தி..

மகளின் இந்த அமைதி தாட்சாயிணிக்கு மேலும் கோபத்தை கொடுத்தது என்று தான் சொல்ல வேண்டும்..  நம்மல கத்த விட்டு விட்டு இது போல் அமைதியாக இருந்து இருந்து தான் அனைத்திலும்  அவள் நினச்சதை சாதித்துக் கொள்கிறாள்..

தாட்சாயிணி இப்போது தன் கோபத்தை கை விட்டவராக.. “ வேண்டாம் சக்தி.. வீடு போனா போகட்டும். இன்னும் கேட்டால் இங்கு இருப்பது எனக்கு சுத்தமா பிடிக்கல..  இந்த வீட்டை பார்த்தா நான் இங்கு இழந்தது தான் நியாபகத்தில் வருது..வீட்டுக்குள்ளேயே அடஞ்சிட்டு..” என்று சொன்னவரின் பேச்சை சக்தி..

“ ஏன் வீட்டிலேயே இருக்கிங்க.. முன்னாடி தோட்டம்  நீங்க தானே ஆசையா வெச்சது.. போங்க தண்ணீர் ஊத்திட்டு கொஞ்சம் நேரம் ரிலாக்சா குழந்தைய வெச்சிட்டு  அங்கு டைம் ஸ்பென் பண்ணுங்க..” என்ற  மகள் சொன்னதும்..

தாட்சாயிணி.. “ எதுக்கு…?  அந்த விலங்காதவனை பார்த்து,  இன்னும் இன்னும் நான் வயிறு எரிஞ்சு போகவா…? “ என்று கோபத்துடன் கேட்டவர்.. மீண்டும் அமைதியை  கையில் எடுத்தவராக..

மகளின் தாடையை பிடித்து… “ வேண்டாம் சக்தி.. இது போல் கடன் கொடுத்தவங்க எப்படி எப்படி எல்லாம்  வசூல் செய்வாங்கலாம்.. இருக்கும் பிரச்சனையில் வேறு ஏதாவது புதுசா வந்துட போதுடா.. நான் சொல்றது உனக்கு புரியுதா…?

வீடு போனா போகட்டும்டீ.. இப்போ எனக்கு இருப்பதே நீயும் சாருவும் தான்.. இந்த  வீடால் உங்களுக்கும் ஏதாவது  பிரச்சனை வந்துட போகுது.. வேண்டாம்.. 

நீ  நாற்பாதியிரம் சம்பாதிக்கிற.. ஆறு ஆயிரத்தில்  வாடகைக்கு ஒரு வீடு எடுத்துட்டு போனா போதும்.. இந்த வீடும் எனக்கு நிம்மதிய கொடுக்கல சக்தி.. வேறு வீடு போனாலாவது விமோச்சனம் கிடைக்காதான்னு இருக்கு..” என்று தாட்சாயிணி தன் மகளிடம் கெஞ்சி கொண்டு இருந்தார்..

ஆம் ஒரு வகையில், அவர்கள் வீட்டில் நடந்ததை கேட்டால்,  அவர் சொல்வதும் நியாயம்  போல்  தான் தோன்றும்..

இந்த  இடம் அவர் மாமனார் வாங்கியது. அதில் இருக்கும் சேமிப்பு அனைத்தையும் போட்டு தான் இந்த வீடு கட்டியது.. ஒரு மத்திய வர்க்கம் இருக்க சொந்தனாக ஒரு  வீடு..

 அழகான இரு பெண் குழந்தைகள்.. கணவனுக்கு நல்ல வேலை என்று நல்ல படியாக  தான்  தாட்சாயிணி  குடும்பம் சென்று கொண்டு இருந்தது..

தாட்சாயிணி அம்மா வீட்டு பக்கம் எல்லாம் அவளை பெருமையாக தான் பேசுவார்கள்..” உனக்கு என்னம்மா..?” என்று ..

அப்படி இருந்த குடும்பத்தில் யார் கண் பட்டதோ…குழந்தைகள்  வளர்ந்த பின் தன் கணவன் குண சேகரிடம்..

“ முன் பக்கம் அவ்வளவு இடம் இருக்கே… நான் தோட்டம் போடட்டுமாங்க..? நம்ம வீட்டுக்கு தேவையானதை   நாமே பயிரடலாம்..” என்று அனுமதி கேட்டதற்க்கு குணசேகர் உடனே  ஒத்துக் கொண்டார்..

குணசேகர் பெயரை போலவே தங்கமான குணம் உடையவர் தான்.. குடும்பத்தின் நியாயமான ஆசைகளை  பூர்த்தி செய்து கொடுத்து விடுவார்.. மிகவும் இரக்க குணம் உடையவர்..

 பின் நாளில் அந்த குணமே அவருக்கு வினையாக போகும் என்று அவர் நினைத்தும்   பார்த்து இருக்க மாட்டார்..

மனைவிக்கு தோட்டம் வைக்க அனுமதி கொடுத்தவர் “ வைத்த உடனே  பலன் கிடைக்கும் என்று எதிர் பார்க்க கூடாதும்மா…உன் மனசு  திருப்திக்கு  தான்  சரின்னு ஒத்துக்கிட்டேன்..” என்று சொன்னதோடு விட்டு விட்டார்..

தாட்சாயிணியும் கணவர் அனுமதி கிடைத்ததும், உடனே  தோட்டம் அமைக்கும் வேலையில் இறங்கி விட, குணசேகர் சொன்னது போல் இல்லாது தாட்சாயிணிக்கு நல்ல பலனே கிடைத்தது, அந்த இடத்தின் மண் வளத்தால்..

அனைத்தும் நல்ல  படியாக தான் சென்று கொண்டு இருந்தது.. எதிர் வீட்டை  அவர்கள் விற்க்கும் வரை.. அந்த வீட்டை வாங்கியவர்கள் பெரியதாக கட்டி மத்திய தரவர்க்கம் மட்டுமே இருந்தவர்களை அந்த வீட்டை அதிசயத்து பார்க்கும் படி வீடு கட்டி குடியேறியதும்..

எதிர் வீடு என்று  அந்த வீட்டு அம்மாவை  பார்த்தால் சிரிப்பது என்று  தாட்சாயிணி இருந்தார்.. அதே போல் தான் குணசேகரும் அந்த வீட்டு தலைவனிடம்.

“ என்ன..?” என்று கேட்டால் பதில் சொல்லும் படி ஒரு சுமுகமான உறவு போய் கொண்டு இருக்க, பெரியவர்கள் இதுவே போதும் என்று இருக்க அடுத்த தலை முறையாக தாட்சாயிணியின் பெரிய மகள் சசிகலா.

அந்த வீட்டு மகனிடம் நட்பையும் தான்டி ஒரு உறவு ஏற்படுத்திக் கொள்ள தான் ஆசைப்பட்டு அமைத்த அந்த தோட்டத்தையே  பயன் படுத்தி அவர்கள் காதல் பயரை வளர்த்துக் கொண்டது பாவம் இரு வீட்டாருக்கும் தெரியாது போயிற்று..

தாட்சாயிணியின் இரு மகள்களும், அழகிலும் சரி… படிப்பிலும் சரி.. குறை சொல்ல முடியாது தான் இருந்தனர்..

சசிகலா கல்லூரி விட்டு வந்ததும்.. நேராக தோட்டத்துக்கு போய் தண்ணீர் ஊற்றுவதை பார்த்து  தாட்சாயிணி…” பரவாயில்ல என் பொண்ணுக்கு பொறுப்பு வந்துடுச்சி..” என்று பாராட்ட, அதற்க்கு சக்தி..

“ அது தான்மா எங்கேயோ இடிக்குது..?” என்று தன் அக்காவை கிண்டல் செய்தவளிடம்.. தாட்சாயிணி..

“ நீ சும்மா இரு சக்தி.. அவளும் பெரிய பெண் ஆகிட்டு வரா . அந்த பொறுப்பு  தானா வந்து விடும்..” என்ற தாட்சாயிணியின் பேச்சில், சக்தி..

“ அப்போ மாப்பிள்ளை  பார்த்து விடலாம் என்று சொல்றிங்க.. ஒகே ஒகே.. “ என்ற பேச்சில் சசிகலா வெட்கப்பட்டு கொண்டு ஓடி விட்டாள்..

அதை பார்த்தும் சக்தி.. “ என்னம்மா உங்க  செல்ல பெண் கல்யாணம் என்றதும்.. இப்போ வேண்டாம் என்று சொல்லுவா என்று பார்த்தா வெட்கப்பட்டு ஓடுறா.. அப்போ அவள் கல்யாணத்திற்க்கு ரெடி தான் போல..” என்ற சின்ன மகளின் பேச்சில் அவள் தலையில் நோகாது ஒரு  கொட்டு வைத்த தாட்சாயிணி..

“ உனக்கு அவள வம்பு இழுக்கலேன்னா தூக்கம் வராதே.. நானே இந்த வருஷத்தோட அவள் படிப்பு முடிய  போகுதே.. இடம் பார்க்கனும்.. அதுக்கு இவள் ஒத்துக் கொள்வாளோ ..

இப்போ இருக்கும் பெண்கள் போல இரண்டு வருஷம் வேலைக்கு போன பின் தான் எனக்கு இடம் பார்க்கனும் என்று சொல்வாளோ என்று பயந்துட்டு இருந்தேன்… இப்போ தான் எனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கு..” என்று சொல்லி விட்டு  சசிகலா குடித்து வைத்த காபி கப்பை வீட்டிக்குள் எடுத்து செல்லும் தாயின் காதில் விழும் மாறு..

“ அவளுக்கு நம்ம வீட்டு கிட்டயே மாப்பிள்ளை பாருங்க.. சொல்லிட்டேன்..” என்று சத்தமாக பேசினாள்.. அது அவளின்  போறாத காலமா என்று தெரியவில்லை.. எதிர் வீட்டில் இருந்த அந்த பெண்மணியின் காதில் சக்தி சொன்னது நன்றாகவே விழுந்தது..

மனதில் பட்டதை பேசி.. மனதில் தோன்றியதை செய்து.. என்று மகிழ்ச்சியோடு போன அவர்கள் வாழ்க்கையில், ஒரு நாள்  இரவு அனைவரும் சாப்பிட்டு  முடித்து இரு பெண்களின் உதவியோடு பாத்திரத்தை ஒதுக்கி வைத்துக் கொண்டு இருந்தார் தாட்சாயிணி..

அவர்கள் வீட்டு  வெளியில் ஏதோ சத்தம் கேட்கவும், முதலில் ஏதோ என்று தான்  சக்தியும், அவள் தாயும் தொடர்ந்தனர், ஆனால் சசிகலாவின் கை அந்த டையினிங்  டேபுல் துடைக்கும் போது நடுங்க..

“ ஏன்டி உன் கை இப்படி நடுங்குது.. ?” என்று சக்தி தன் அக்காவிடம் கேட்டுக் கொண்டு  இருக்கும் போதே, ஒரு பெருங் குரலாக..

“ பெண்ணுங்க  கிட்ட சொல்லி வளர்ப்பிங்களா..? நீயே நல்ல வசதியான பைய்யனா பார்த்துக்க என்று.. அன்னைக்கு கூட உன் சின்ன பெண் சொன்னாளே வீட்டு கிட்டயே பார்த்துக்க என்று.. அப்போ எனக்கு தெரியாம போச்சே அது என் பைய்யன் தான் என்ற பேச்சில்..

குணசேகர் பதறி போய்  தன் இருமகள்களையும் பார்த்தார்.. இப்போது தாட்சாயிணியின் கைகள் உதறல் எடுக்க ஆரம்பித்து விட்டது..

Advertisement