Advertisement

அத்தியாயம் 1

 

             மத்திய சென்னையில் ஆள் பலம், பண பலம், அரசியல் பலம் பெற்ற சிறந்த தொழிலதிபர் பரசுராம் அவர் மனைவி காமாட்சி…

          என்றும் போல் இல்லாமல் அன்று அவர்கள் வீடு சற்று அமைதியைக் கொண்டிருந்தது…. அவர்களது ஒரே மகன் சித்தார்த்தன் இன்று வெளிநாடு கிளம்பிக் கொண்டிருக்கிறான்…. அவர்களது தொழிலை மேற்கொண்டு விரிவுபடுத்தவும் வெளிநாட்டில் இருக்கும் கிளையை கவனிப்பதற்கும் செல்கிறான்….

          சென்னையில் இருக்கும் முக்கிய தொழில் அதிபர்களில் முக்கிய தொழிலை கொண்ட ஒருவர் தான் சித்தார்த்தனின் தந்தை., அவரால் நினைத்தால் முடியாதது எதுவும் இல்லை என்னும் அளவிற்கு பலம் பொருந்திய ஒருவர்… அவரின் செல்ல மகன் இன்று வெளிநாடு செல்லவிருப்பது அவருக்கு பெருமை தான்….  தன் தொழிலை எடுத்து நடத்த இறங்கி விட்டான் என்று., ஆனால் அதற்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திக் கொண்டிருப்பவர் சித்தார்த்தன் அம்மா காமாட்சி….

       சித்தார்த்தா அம்மா சொல்றதை ஒரு தடவை கேளுடா….

    அம்மா நீங்க என்ன சொன்னாலும் சரி,  நான் அங்க போய் தான் இருக்க போகிறேன்..  என்னை கட்டாயப்படுத்தாதீர்கள்…. ப்ளீஸ்மா கிளம்புற நேரத்துல  என் முன்னே கண்ணு கலங்காதீர்கள்.,  எனக்கு கஷ்டமா இருக்கு…

     இங்க உனக்கு என்னடா குறை…  இங்க இல்லாதது என்ன இருக்கு ன்னு… அங்க போக போற, உங்க அப்பா மாதிரி அப்பப்ப போய் கவனிச்சிட்டு வா…. அங்க நம்பிக்கையான ஆட்கள் இருக்காங்க இல்ல அப்புறம் எதுக்கு நீ அங்க போய் இருக்கணும்னு நினைக்கிற….

    அம்மா புரியாம பேசாதீங்க இப்ப நடந்த பிரச்சனை சாதாரண பிரச்சினை கிடையாது…. அதிலிருந்து நான் வெளிய வந்ததே பெரிய விஷயம் என்னை எப்படி மாட்டிவிட ட்ரை பண்ணலாம்னு பார்த்தான்…  இது தொழில் போட்டி இல்லம்மா……   காலேஜ்ல என் கூட படிச்சவன் மா… நல்ல லெவல்ல   இருக்கிறவன் தான்….  என்னை மாட்டி விட  எவ்வளவு அழகா ப்ளான் பண்ணி இருக்கான் ன்னு தெரியுமா…. அதிலிருந்து நான் தப்பித்ததே பெரிய விஷயம் பேசாம இருங்க மா…..  இங்க இருந்தா என்ன வேற எதும் பிரச்சினையில் மாட்டி வைத்து விடுவான்…..

     அதுதான் ஈசியா  எந்த பிரச்சினையும் இல்லாம தான் ஆக்கிட்டாங்களே….  அப்புறம் என்ன உங்க அப்பா நினைச்சா முடியாதா….

      இந்த தடவ அப்பா நினைச்சிருந்தா கூட முடியாதுமா….  அது புரிஞ்சுக்கோங்க யார் நினைத்தாலும் முடியாது….  ஆனால் அந்த பொண்ணு நினைக்க போய் தான் நான் தப்பித்து வெளியே வந்தேன் நினைச்சுக்கோங்க…  அப்பவும் நான் வேண்டாம்னு சொன்னேன் அந்த பொண்ணு தான் கேட்காமல் லைப் வீணாப் போயிடும்….  உங்க பிசினஸ் லைப் உங்க பியுச்சர் என்னாகும் என்று சொல்லி என்னை காப்பாற்றி விட்டாள்….  அவப்பெயர் வெளியே வந்து விடக்கூடாது என்பதற்குதான் அப்பா ஹெல்ப்  பண்ணினாறே  ஒழிய மற்றபடி அந்த பொண்ணு சொல்லலைன்னா நான் இன்னைக்கு வெளியே  இருக்கமுடியாது தெரிஞ்சுக்கோங்க….

    ஏண்டா அந்த பொண்ணு உனக்கு எப்படி பழக்கம் ….

     அம்மா நான் படிச்ச காலேஜ்ல  படிக்கிற பொண்ணு தற்செயலா அந்த நேரம் அவகிட்ட பேசிகிட்டு இருக்க போய் தப்பிச்சேன்…. இல்லாட்டி அன்னைக்கு மட்டும் நான் வெளியே எங்கேயாவது இருந்தா  மாட்டியிருப்பேன்…. அத ஞாபகம் வச்சுக்கோங்க….

    உனக்கு அந்த பொண்ணு ரொம்ப புடிக்குமாடா என்று ஆர்வமாக கேட்டாள் சித்தார்த்தின் அம்மா….

   மா என்றால் அதட்டலான ஒரு சத்தத்துடன் முறைப்புடன்….

      இப்படி எங்கேயும் போய் சொல்லி வச்சிடாதீங்க மா…..  ஒரு பொண்ணு  லைப் வீணாப் போயிடும் சும்மா இருங்க…. என்னை பத்தி உங்களுக்கு தெரியும்….  அந்த பொண்ணு பிடிக்கும் வெளியே போய் நீங்க சொல்லிட்டீங்க ன்னா… கதையவே  வேற மாதிரி கொண்டு போயிருவாங்க…….

      ஏண்டா உனக்கு என்னடா குறைச்சல்….

    மா அவங்க  அவங்க பிள்ளை அவங்களுக்கு நல்ல பையன் தான் சரியா…. தப்பு பண்ணி இருந்தா கூட…..

       நான் தப்பு பண்ணுனா… நீங்க சொல்லுவீங்க நான் நல்லவன் ன்னு….. நான் அப்படி இல்ல ன்னு எனக்கு தெரியும்….  அந்த மாதிரி பொண்ணுங்களுக்கு எல்லாம் சான்ஸே இல்ல மா….  எனக்கும் எவளாவது ஒருத்தி இருப்பா…. என்னை மாதிரியே அப்பா சம்பாதிக்கிறத செலவு செய்து ஊர் சுத்திட்டு., அந்த மாதிரி பாரு…..

   ஏண்டா இப்போ உள்ள பொண்ணுங்க எல்லாம் எப்படி இருக்காங்கன்னு…. தெரியாமலா  டா இருக்கேன்…. நானும் பார்க்காமலா இருக்கேன்… நீ சொல்லுடா அந்த பிள்ளை எப்படிடா….

     எம்மா திரும்பத்திரும்ப பேசாதீங்கம்மா…. அதெல்லாம் சான்சே இல்ல…  அதெல்லாம் தேவதை மாதிரி தூரத்தில் நின்னு பார்த்துட்டு போயிட்டே இருக்கணும்…..

   ஏண்டா நம்ம வீட்டுக்கு என்னடா குறைச்சல்… நம்ம வீட்டுக்கு தேவதை மாதிரி ஒரு பொண்ணு வரக் கூடாதா என்ன…..

    அம்மா என்ன பத்தி ஊருக்கே தெரியும் நான் எப்படிப்பட்டவன் ன்னு எனக்கு இல்லாத கெட்ட பழக்கமே கிடையாது…. எல்லா கெட்ட பழக்கம் பழகி தான் இருந்தேன்….அது எல்லாருக்கும் தெரியும் அப்புறம் நம்ம வீட்டுக்கு தேவதை எப்படிமா வரும் பேசாம இருங்க…..

     அந்த பொண்ணுக்கு உன்ன புடிக்குமாடா…..

     அம்மா அவளை பத்தின பேச்ச விடவே மாட்டீங்களா…..  நான் பேக் பண்ணி கிளம்ப வேண்டாமா என பேக் பண்ண விடுங்கம்மா…..

    பாக்கணும் போல இருக்குடா…..

      அம்மா முதல்ல கீழே போங்க….  உங்களை மேல இன்னைக்கு  விட்டதே தப்பு…  போங்க கீழ போயி உங்க வீட்டுக்காரர் இருப்பாரு…. அவர் கூட உட்கார்ந்து கதை பேசுங்க போங்க.,  என்று விரட்டாத குறையாக விரட்டவும்…..

    நீ வெளிநாடு போறதே, எனக்கு புடிக்கல உங்க அப்பாட்ட சொன்னாலும் கண்டுக்க மாட்டாரு, அவருக்கு அவர் பிசினஸ் காப்பாற்ற ஆள் கிடைச்சுட்டு, என்னைய பத்தி  நினைக்கிறதே இல்ல…. நான் தனியா இருக்கணும் டா….  உங்கப்பா பிசினஸ் பிசினஸ்னு சுத்துவார்…. நான் என்ன பண்ணுவேன் ன்னு   நினைச்சு பார்க்க மாட்டியா…..

     மா இவ்வளவு நாள் மட்டும் நான் வீட்ல உன் கூடவே வா மா  சுத்திட்டு  இருந்தேன்…..  வீட்ல நீ அப்பவும் தனியா தான் இருந்த இப்பவும் அப்படித்தான் இருக்க போற….  கூட ரெண்டு ஆள் வேணா வேலைக்கு சேர்த்து வச்சுக்கோ நல்ல நேரம் போகும்…. பேச்சு துணைக்கு  ஒரு ஆளை  ஊரிலிருந்து கூட்டிட்டு வந்து வச்சுக்கோ…..

    நீ சரி பட்டு வர மாட்ட டா…. உன் கிட்ட பேசி பிரயோஜனம் இல்லை…..

     தெரியுது இல்ல கிளம்புங்க…. இடத்தைக் காலி பண்ணுங்க முதல்ல….

     அம்மா வ  விரட்டுற டா நீனு….

     அம்மா நான் பாக் பண்ணனும்… எனக்கு   எட்டு மணி பிளைட் நான் ஆறு மணிக்காவது ஏர்போர்ட்ல இருக்கணும்…. பேக் பண்ண ஆரம்பிச்சா தானே  சரியா வரும்….. நீங்க இப்படி உட்கார்ந்து ஒன்னு ஒன்னா கேட்டுட்டு இருந்தீங்க ன்னா….  நான் எப்ப தான் நான் பேக் பண்ணி முடிகிறது…..

     போடா என்று சலிப்புடன் அவர் இறங்கி கீழே செல்லவும்…..

     எப்போதும் போல் ஆள்கள் கூட்டம் அதிகம் இல்லாமல்., அவர்கள் வீட்டில் எப்போதும் இருக்கும் நாலைந்து ஆள்களை தவிர வேறு யாருமில்லை….  மற்ற வேலையாட்கள்  எல்லாம் உள்ளே இருக்க…   கணவர் பேசிக்கொண்டு இருக்கும் இடத்தில் வந்து அமர்ந்தார் காமாட்சி….

     அவர் வந்து பேச அமரவும் பரசுராமன் கை தடிகளாக இருக்கும் ஐந்து பேரும்   வேறு இடம் சென்றனர்… என்ன காமாட்சி  இங்க வந்து பேச மாட்டியே., என்ன விஷயம் என்று கேட்கவும்…  அவர் மகிழ்ச்சியாக இருப்பது  அவர் பேசும் தோணியிலே தெரிந்தது…..

     ஒரே ஒரு புள்ள வச்சிருக்கேன்…. அவனை ஏன் இப்ப வெளிநாட்டுக்கு பிசினஸை பார்க்க அனுப்புறேங்க….   எப்பவும் நீங்க போற மாதிரி ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை மூணு மாசத்துக்கு ஒரு தடவை ன்னு போய் பார்த்துட்டு வர வேண்டியதுதானே….  என்கிட்ட இருந்து என் பிள்ளையை பிரிக்கிறதுல  உங்களுக்கு அவ்வளவு சந்தோசம் என்ன…..  என்று சண்டை போடும் தொனியில் காமாட்சி கேட்க…..

     பரசுராமனோ சிரித்துக்கொண்டே… இப்ப தான் அவன் உருப்படியாக மாற ஆரம்பித்து இருக்கான் ன்னு நான் நினைக்கேன்….. நீ உருப்பட விட மாட்டியா அவன எப்பவும் கைக்குள்ளேயே வைத்திருந்தா எப்ப தான் அவன் தனியா வாழ கத்துக்குறது…. தொழில் கத்துகிறது….  அவனுக்கும் கல்யாணம் பண்ண வேண்டாமா இப்பவே வயசு 25 முடிய போகுது…  ரெண்டு மூணு வருஷத்துல பார்க்க ஆரம்பிச்ச தானே நல்ல பொண்ணா கிடைக்கும் அவன் என்ன  பண்ணுறான் ன்னு பொண்ணு வீட்ல என்ன சொல்லுவ….

    ஏன் நமக்கு இல்லாத வசதியா நீங்க என்ன பிசினஸ் பண்றீங்கன்னு ஊருக்கு தெரியாமலா இருக்கு…. இன்னார் மகன் ன்னு சொன்னா தெரியாமலா இருக்கு என்று அவர் கேட்கவும்….

   சும்மா  என் பையன் சொல்லிட்டு இருந்தால் போதாது… என் தொழில் எடுத்து நடத்த தெரியணும் இல்ல…  அப்ப  தானே பொண்ணு வீட்ல சரி பையன் தொழில் பார்க்குறான் ன்னு  நம்பி  பொண்ணு குடுப்பாங்க…. நீ இப்படி சொன்னா அப்புறம் ஒரு பய பொண்ணு கொடுக்க மாட்டான்.,  பார்த்துக்கோ வசதி இருந்தா பத்தாது அவனுக்கு அதை கட்டிக் காப்பாற்ற தெரியணும்…. உக்காந்து சாப்பிட்டு சொத்தை கரைக்கவா….  நாளைக்கு அவன் குடும்பத்துக்கு அவன் வாரிசுகளுக்கு எதை சேர்த்து வைப்பான்….  புரியாம பேசாத காமாட்சி அவன் வேலையை அவன் பார்க்கட்டும்….. நீ இன்னும்  சின்னப் புள்ளை மாதிரி கைக்குள்ள வைக்கணும்னு நினைக்காத…..  அப்புறம் கல்யாணம் முடிஞ்ச அப்புறம் உனக்கும் மருமகளுக்கும் சண்டைதான் வரும் பார்த்துக்கோ…..

     கலங்கிய கண்ணை துடைத்த படி நான் என்ன சொல்லிட்டேன்…. என் பிள்ளை நல்லா இருக்க கூடாது ன்னா நினைக்கிறேன்…. இங்கிருந்து பிசினஸ் பார்க்க சொல்லுங்க…  நீங்க வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கீறீங்கள…….

      இங்கப்பாரு இதுக்கெல்லாம் கண்ண கசக்காத சரியா…  நம்ம புள்ள நல்லா இருக்கணும்னு நினைக்கிறயா… இல்லையா…  இப்பவும் எவனோ ஒருத்தன் யாருன்னே தெரியாத ஒருத்தன் காலேஜ் படிக்கும்போது அவன் கூட போட்டியா இருந்தவன் இப்ப நம்ம புள்ளைய பிரச்சினையில் மாட்டி வைக்க பார்த்தான்…. அதை யோசிச்சியா இங்க இருந்து முதல்ல தம்பி வெளிய போட்டும்…. அதுக்கு அப்புறம் தம்பிக்கு எந்த பிரச்சினை இல்லாதபடி நான் பார்த்துக்கிறேன்… கொஞ்ச நாள் கழிச்சு வந்து இங்க வந்து செட்டில் ஆகட்டுமே…  யார் வேண்டாம்னு சொன்னா அங்க போய் கொஞ்ச நாள் எல்லாத்தையும் பார்த்து எல்லாம் சரி பண்ணி வச்சுட்டு வரட்டும்…..  நீ பேசாம இரு அவன் கொஞ்ச நாளைக்கு வெளியே இருந்தால் தான் அவனுக்கும் பொறுப்பு வரும்… என்ன புரியுதா….  நான் சொல்றத கேளு… முதல்ல அழுகிறத நிறுத்து  காமாட்சி என்று அழுவதை பார்த்து சத்தம் போடவும்….

     சரி நான் மத்தத கேட்கல….  எனக்கு நீங்கள் இதுக்கு பதில் சொல்லுங்க….

    என்ன கேளு….  கேட்டா தானே என்ன பதில் சொல்ல முடியும்…..

    தம்பி அந்த பிரச்சினையில் மாட்டாம காப்பாற்றிவிட்ட பொண்ணு யாரு…. நீங்க பாத்தீங்களா அந்த பொண்ண…..

     இல்ல காமாட்சி பாக்கல…. ஆனா அந்த பொண்ணு உதவி செய்யாட்டி தம்பி இந்த பிரச்சினையில் பெரிசா மாட்டி இருப்பான்… காலேஜ்ல படிக்கிற பொண்ணு ன்னு சொன்னான்…. மத்தபடி  சரியா தெரியல என்று சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில் அவர்கள் வீட்டில் பிள்ளை போல கூடவே சுத்தும் கஜா வந்தான்….

          அதே நேரம் பரசுராம் க்கு போன் வர அவர் போன் பேசுவதற்காக எழுந்து அலுவலக அறைக்குள் சென்றார்….

   என்னம்மா கண்ணு கலங்கி போய் இருக்கிங்க….  தம்பி ஊருக்கு போறதுக்கு எல்லாம் வருத்தப்படுத்தி கிட்டா எப்படி என்று கேட்டபடி கஜா வர….

    ஏன் கஜா நீயாவது  சொல்லக்கூடாதா…. அவனை வெளிநாடு அனுப்ப வேண்டாம் என்று…..  மறுபடி பழைய பல்லவியை தொடங்கவும்….

    கஜாவும் சிரித்துக்கொண்டே இல்லம்மா… தம்பி கொஞ்ச நாள் அங்க இருந்திட்டு வரட்டும்…..  அதுக்குள்ள நாங்க  பிரச்சினையெல்லாம் முடிச்சிடுவோம்…. அதுக்கப்புறம் தம்பி இங்க வந்தா நிம்மதியா இருக்கலாம்….

     அப்படி யாருடா அவன் கூட போட்டி போட ஆளு…

      இல்லம்மா அந்த பையன் வேற  ஊரு பையன்… இங்க உள்ளவன் கிடையாது… தம்பி நல்லா படிப்பாபுள்ள இல்ல…. அதுல  கொஞ்சம் போட்டி பொறாமை ஜாஸ்தியாகி பிரச்சனை ல இறங்கி இருக்கான்…. காலேஜ்ல இருந்து தம்பி பேர கெடுக்க  கொஞ்சம் முயற்சி பண்ணினான்…  வேற ஒன்னும் இல்ல ஆனா நல்லபடியாக வெளியே வந்தாச்சு….  இன்னும் தம்பிக்கு பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொள்ளலாம்….  அந்தப் பையனுக்கும் கொஞ்சம் புத்தி சொல்லி அவங்க வீட்டுக்கும் கொஞ்சம் மிரட்டி  அனுப்பி இருக்கு…. அதனால இனிமேல் பிரச்சினை வராது….  ஆனால் தம்பி கொஞ்ச நாள் இங்க இல்லாம வெளியே இருந்தா இன்னும் கொஞ்சம் நல்லா இருக்கும் அதுக்காகத்தான்….

     கஜா நீயாவது சொல்லுடா அந்த பொண்ணு எப்படி இருக்கும்… தம்பியை காப்பாத்தின பொண்ணு…..

     அம்மா வெளியே தெரியக்கூடாது மா அந்தப் பொண்ணா ல தான் தம்பி மேல தப்பு இல்ல ன்னு நிரூபிக்க முடிஞ்சது…  இது தெரிஞ்சா அந்த பொண்ணுக்கு பிரச்சினை ஆயிடும்….  அதனால வெளியே தெரியக்கூடாது….  காலேஜ்ல  சொல்லி இருக்காங்க…. அந்த பொண்ணு தம்பிக்கு ரொம்ப ரொம்பத் தெரிஞ்ச பொண்ணு அவ்வளவு தான்……

      தம்பி படிச்ச காலேஜ்ல படிக்கிற  பொண்ணு ன்னு.. சொன்னானே டா என்று ஆவலாக விசாரிக்கவும்…..

     ஆமா மா…  இப்பதான்  இரண்டாவது வருஷம் படிச்சிட்டு இருக்கு…..

      பொண்ணு எப்படிடா இருக்கும் தம்பிக்கு ரொம்ப பிடிக்குமா…..

      அம்மா நான் ஒரு விஷயம் சொல்லுவேன்…. வெளியே நீங்க சொல்லக் கூடாது….  என்று சொல்ல தொடங்கவும் பரசுராமன் போனில் பேசிவிட்டு வந்து விட்டார்…..

     அவர் வந்தவுடன் கஜா பேசுவதை நிறுத்தி விடவும்….. காமாட்சி விடாமல் நீ சொல்லியே ஆகவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க பரசுராம் என்ன விஷயம் என்று கேட்டார்…

      அதுவரை கஜாவிடம் தன் பேசிக்கொண்டிருந்த விஷயங்களை பரசுராமனிடம் காமாட்சி சொல்ல பரசுராம் கேள்வியாக கஜாவை நோக்கினார்….

    பொண்ணு யாரு டா….  பொண்ணு தம்பிட்ட  வலிய வந்து பேசுமா…  இல்ல தம்பி போய் பேசுவானா….  இரண்டும் விரும்புற மாதிரி எதுவும் இருக்கா டா என்று கேட்கவும்…..

       கஜாவோ… மனதிற்குள் அய்யோ தம்பிக்கு தெரிஞ்சா நான் தொலைஞ்சேன்….  அம்மா  நம்மள பிரச்சினையில் மாட்டி வைத்து விடும் போலயே….  என்று பயந்து கொண்டே சொன்னான்….

     இல்லை அந்த மாதிரிலாம் எதுவும் கிடையாது….  அந்த பொண்ணு இப்பதான் படிச்சிட்டு இருக்கு இரண்டாவது வருஷம்… அந்த பொண்ணு வந்து காலேஜ்ல சேந்த புதுசுல இருந்து தம்பிக்கு தெரியும் போல… அந்த பொண்ண ராகிங் பண்ணும் போது தம்பி போய் காப்பாற்றிவிட்டு இருப்பார் போல… அதிலிருந்து அந்த பொண்ணு  பார்த்த சிரிச்சிட்டு போகும் அவ்வளவுதான்… மற்றபடி தம்பிக்கு பிடிக்கும்னு நினைக்கிறேன்…. ஆனா முழுசா எனக்கு தெரியல என்று தயங்கி தயங்கி சொல்லவும்….

    அது எப்படி உனக்கு தெரியாம இருக்கும் நீ தான் பாதி நேரம் அவன் கூட போற… சிலநேரம் கார் ஓட்டுவது நீதான்…. அப்புறம் எப்படி உனக்கு தெரியாம இருக்கும் என்று பரசுராம் கேள்வி கேட்கவும்…..

     அவன்  மனதிற்குள் பயந்து கொண்டு… சித்தார்த் தம்பி காதுக்கு விஷயம் போச்சு… நான் இன்னைக்கு தொலைந்தேன் என்று மட்டுமே மனதிற்குள் நினைத்துக் கொண்டு…. ஐயோ அய்யா எதுவும் தப்பா முடிவு பண்ணி விடக்கூடாதே…  என்ற பயத்துடன் சில விஷயங்களை மட்டும் பரசுராம் இடம் சொன்னான்…..

 

“தன் போக்கில் வாழ்ந்த

தனியன் நான்….

கண்கொண்டு காண

முடியா தேவதை நீ….

 

வாழும் வரம் கேட்கும்

யாசகனாய் நான்…

வரம் தரும் தேவதை நீ…

கிடைக்காத வரம்

என்று தெரிந்தும்

மனதிற்குள் ஆயிரம்

ஆசை வளர்த்துக் கொண்ட

யாசகன் நான்…

நான் வரம் கேட்பதே

தெரியாமல் மகிழ்ச்சியாய்

உலாவரும் தேவதை நீ…..

 

என்றோ ஒரு நாள் இந்த

பக்தனின் குரல் கேட்டால்

சற்று திரும்பிப் பாரேன்….

உன்னிடம் வாழ்க்கையை

வரமாய்….  வாழ்வே நீயாய்….

சுவாசித்துக் கொண்டிருப்பேன்…

 

நீ திரும்பிப் பார்ப்பாய்

என்ற நம்பிக்கையுடன்

வாழ்நாளை நீட்டித்துக்

கொண்டு வாழும்….

வாழத்  தெரியாமல் வாழ்ந்த

தனியன் நான்….”

Advertisement