Advertisement

புலம்புதடி இதுதான் லைப்…..  நீ இப்போது புலம்பி ஒரு பிரயோஜனம் கிடையாது, எப்படியாவது கொஞ்சம் கஷ்டப்பட்டு  படி முடியலைன்னா ஏதாவது டியூஷன் அரேஞ்ச் பண்ண முடியுமான்னு பார்ப்போம் கேட்டு சொல்லு….  நான் என்ன பண்ண.  உங்க அப்பா என்ன சொன்னாலும் பரவால்ல உனக்காக பேசுறேன்…..

     பாக்கலாமா முடிஞ்ச அளவு ட்ரை பண்றேன்….  என்னால முடிஞ்ச அளவு நல்லாவே படிக்க ட்ரை பண்றேன் பயப்படாம இரு மா….

     மகிய பத்தி எனக்கு கவலை இல்லை…  அவன் படிச்சு முடிச்சு ஒரு லெவலுக்கு வந்துவிடுவான்  நம்பிக்கை இருக்கு….  அவன  ஒரேடியா கட்டாயப் படுத்த மாட்டார்கள்….. உங்க தாத்தாவும் அப்பாவும் கட்டாயப் படுத்த  முடியாது…. உங்க அத்தை பேச்சு எடுபடவே படாது…..  ஆனா உன்ன தாண்டி எல்லாரும் பிடிச்சு பாடாப் படுத்திருவாங்க…. எனக்கு அதுதான் பயமா இருக்கு….  நீ எப்படியாவது நல்ல படித்து ஒரு வேலைக்கு போய் இருந்தா…  அம்மா க்கு அது போதும்…..

     தன் பேச்சு அவ்வீட்டில் எடுபடாத ஒரு குடும்பத் தலைவியின் நிலையில்தான் மித்ராவின் தாய் இருந்தாள்…

        ஏன்மா இப்படி இருக்காங்க எல்லாரும்….

     உங்க அப்பா கல்யாணம் முடிஞ்ச புதுசில ஒழுங்காகத்தான் இருந்தாரு….  அப்புறம் உங்க தாத்தா இப்படி இருக்கணும் அப்படி இருக்கணும் என்று ஆயிரத்தெட்டு கண்டிஷனோடு தான் எப்பவும் வச்சிருப்பாரு…. அப்ப சரி தாத்தா  மட்டும்தானே கண்டிஷன் போடுவாரு ன்னு இருந்தா…. கொஞ்ச நாள்ல உன் அப்பாவையும் அப்படி பிரைன் வாஷ் பண்ணி மாற்றி வச்சிட்டாரு…. ரொம்ப இடம் கொடுக்கக்கூடாது பொம்பளைங்க னா இப்படித்தான் இருக்கணும்…. எல்லாத்தையும் செய்யணும் வீட்ல சர்வன்ட் வைக்கக்கூடாது ன்னு…. ஏகப்பட்ட கண்டிஷன் என்ன பண்ண முடியும் சரி சரி ன்னு போக வேண்டியது தான்….. உங்க பாட்டி வாயே திறக்கமாட்டார்கள்…. உங்க தாத்தாவிற்கு பயந்து உங்க அப்பா உன் தாத்தா ட்ட பேசவே மாட்டாரு….  அதுதான் கதை இப்படியே போயிட்டு இருக்கு…  இப்போ எல்லாரும்  ஒண்ணா வந்து உட்கார்ந்தாச்சு…. உன் அத்தையை ஏன் இங்க வந்திருக்கீங்க ன்னு கேட்க முடியுமா முடியாது….அவங்க பிள்ளைங்க தேவை அவங்களே  பார்த்துக் கொண்டாலும்…. நாம எப்பவாவது ப்ரீ யா பீல் பண்ணியிருக்கோமா…  மத்தபடி அவங்க அதிகாரம் எல்லாம் உன் கிட்டதான்  உன்ன பிடித்து கைகுள்ள வைக்கிறது ல இருக்காங்க என்ன பண்ண முடியும்….

     மித்ராவின் அம்மாவின் நிலையும் அப்படித்தான் வீட்டில் அனைவரும் அதிகாரம் செலுத்தும் நபர்களாக இருக்கவும்….  மாமியாரிடம் எல்லா விஷயமும் சொல்ல முடியாது அவர் அப்படியே போய் மாமனாரிடம் சொல்லிவிடுவார்…..  எனவே பிள்ளைகள் வளர்ந்த பிறகு தன் மனபாரத்தை பிள்ளைகளிடம் மட்டுமே இறக்கி வைப்பார்…  மகளும் மகனும் நல்ல நட்போடு அவர்கள் தாயுடன் இருந்து கொண்டிருந்தனர்…. அதனால் அந்த வீட்டில் அவர்களுக்கான உலகம் ஏதோ மகிழ்ச்சியாக போய்க் கொண்டிருந்தது போல இருந்தது……

     அவள் அம்மா பள்ளிக்கு கிளம்பும் நேரம் இவளும் கல்லூரிக்கு கிளம்பி வர அதே நேரம் மகேந்திரனும் சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியே வர  மூவரும் சேர்ந்து நடக்கத் தொடங்கினார்கள்….. இவள் கல்லூரி பேருந்து நிறுத்தம்  அருகில்தான் அவள் அம்மா  பள்ளிக்கு செல்ல வேண்டிய பஸ்சும் வரும்…. அதன் பிறகு மகேந்திரன் சைக்கிளில் அங்கிருந்து சென்று விடுவான் மூவரும் பேசிக்கொண்டே நடக்கும் போது தான் மித்ரா அவள் தாயிடம் கேட்டாள்.,..

      ஏன்மா இப்ப தாத்தா கல்யாண பேச்சு எடுத்தாங்க…. அத்தை அதுக்கு மேல பேசுறாங்க…  அப்பா வாயை திறந்து ஒண்ணுமே சொல்ல மாட்டேங்குறாங்க … அம்மா எல்லாரும் ஏன் இப்படி இருக்காங்க…. பிஜி பண்ணனும் மா….  ஏதோ உள்ள படிக்க போயாச்சு என்ன  படிச்சாலும் பிஜி பண்ணாம  இருந்தா  வேல்யூ கிடையாது…. சும்மா படிச்சேன்.., எனக்கு பெயருக்கு பின்னாடி ஒரு டிகிரி இருக்கு அப்படின்னு அதுக்காகலாம் படிக்கக்கூடாது….  கண்டிப்பா நீங்க சொன்ன மாதிரி வேலைக்கு போக ட்ரை பண்றேன்…. ஆனா இதெல்லாம் இல்லாம என்னால கேம்பஸ் இன்டர்வியு போக  முடியாது…. முடிஞ்ச அளவு ஏதாவது  எக்ஸாம் அந்த மாதிரி எழுதி உள்ள போக முயற்சி பண்ணுறேன்………

     முயற்சி பண்ணு…. அப்பாட்ட உனக்கு எக்ஸாம் கோச்சிங் போகிறதற்கு நான் ஏதாவது ரெடி பண்ண முடியுமா என்று பார்க்கிறேன்….  பேசிப் பார்க்கிறேன் அப்படி இல்லை னா எனக்கு அரியர் வரும் போது உனக்கு அம்மா காசு ஒதுக்கி தர்றேன் வீட்டில் சொல்லாத…. என்ன பண்ண வீட்டுக்கு தெரியாம தான் எல்லா காரியமும் பண்ண வேண்டியதா இருக்கு…..  நீ எப்படியாவது படிச்சிரு எனக்கு அது போதும்…..  ஏன்னா  இவங்க மாப்பிள்ளை பார்க்கும் போது கூட என்ன தலையிட விட மாட்டாங்க…. அவங்க இஷ்டத்துக்கு தான் பார்ப்பார்கள் என்று ஒரு தாயாக அவள் வருத்ததை முன் வைக்கவும்…….

     என்னமா கண்டிப்பா நல்லா படிப்பேன் நான் பிஜி பண்ணனும் அதுக்கு மட்டும் ஏதாவது பண்ணுங்க…. பிஜி மூடிக்காட்டி கல்யாணத்தை பத்தி பேச விடாதீங்க அது மட்டும்  பேசுங்கள் என்றாள்…,..

      அக்கா நீ படிப்ப  முடிப்பதற்கு நான் பாத்துக்கறேன்…..  அப்ப எனக்கும் ஸ்கூல் முடிச்சிடும்…. நீ யூஜி  முடிக்கும்போது… அதுக்கப்புறம் நான் உன்னை படிக்க ஏதாவது செய்றேன்…  நீ எதுக்கு கவலைப் படுற நம்ம மூணு பேரை கூட்டணி போட்டு ட்ரை பண்ணனும் கவலப்படாத…. அம்மா நீங்க ரொம்ப வொரி பண்ணாதீங்க…. நாங்க ரெண்டு பேரு இருக்கோம் நீங்க எதுக்கு பயப்படறீங்க…..

    உன்ன பத்தி எனக்கு கவலை இல்ல டா நீ எப்படியாவது உங்க அப்பாட்ட தாத்தா கிட்ட எல்லாம் பேசி சமாளிச்சி தாஜா பண்ணியிருப்ப…. இவளுக்கு ஒழுங்கா பேசவும் தெரியாது பயப்படுவா என்ன பண்றதுன்னு தெரியல… அதான் பயமா இருக்கு நான் சப்போர்ட் பண்ணி பேச போனால் அதை வச்சு ஒரு பெரிய சண்டையே உருவாக்கி விடுவார்கள்….  உங்க அத்தை காதுக்கு போச்சு குடும்பமே உண்டு இல்ல ன்னு ஆகிருவாங்க அதுதான் பயமா இருக்கு…..

     பயப்படாதீங்க நான் பாத்துக்குறேன் என்று படி பஸ் ஸ்டாண்ட் அருகில் வந்து விடவும்….  சற்று நேரத்தில் மித்ராவின் அம்மாவிற்கு பஸ் வர  ஏறி சென்றார்…. அதன் பின்பு மித்ராவின் தோழி வரவும்., அவள் தம்பி கிளம்பினான்…  மித்ராவின் தோழியோடு பேசிக்கொண்டு இருந்த சற்று நேரத்திற்கெல்லாம்  பஸ் வர அவளும் ஏறி அமர்ந்தாள்…  பின் அவளது நினைவு எல்லாம் அவளது படிப்பு பற்றியும் குடும்ப சூழ்நிலையை பற்றியுமே ஓடிக்கொண்டிருந்தது…..

     அம்மா சொல்ற மாதிரி எப்படியாவது படிக்கனும்…. ஏன்னா மேரேஜ் விஷயத்தைப் பொறுத்தவரைக்கும் வீட்டில் தாத்தா அப்பா அத்தை இவங்க வச்சதுதான் சட்டம்..  பாட்டி கூட எனக்காக சப்போர்ட் பண்ணி பேச முடியாது… அம்மா சுத்தம் பேசவே முடியாது… தம்பி ஏதாவது பேசுவதற்கு வாய்ப்பு இருக்கு ஆனா கல்யாண விஷயத்தை பொருத்தவரைக்கும் பேச விடமாட்டாங்க… இவங்ககிட்ட இருந்து தப்பிக்க வழி…. ஒழுங்கா படிச்சா மட்டும்தான் இப்போதைக்கு இந்த கல்யாண விஷயத்தில் இருந்து தப்பிக்க முடியும்…. பிஜி  முடிகிறவரை கல்யாணத்தை பத்தி பேச விடாம  ஒழுங்கா படிக்கணும் என்று மனதிற்குள் உறுதி எடுத்துக் கொண்டாள்……

      அதற்கேற்றார் போல் அவளுடைய படிப்பிற்காக சித்தார்த் சொல்லி வைத்திருந்த சாரிடமிருந்து அன்று அவளுக்கு அழைப்பு வந்தது… சித்தார்த் சொன்னான் மா உனக்கு என்ன டவுட் னாலும் கேட்டு கிளியர் பண்ணிக்கோ…. உன்னை நல்ல மார்க் எடுக்க வைக்க வேண்டியது…. இங்க உள்ள பிரபஸர் பொறுப்பு ன்னு ஒரு நாலஞ்சு பேர் ட்ட பொறுப்பை ஒப்படைத்துவிட்டு போய் இருக்காப்புல…. என் கிட்ட கேளு என்று சொல்லுறேன்…..  அந்தந்த பாட சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை பற்றி அவளுக்கு சொன்னார்… சித்தார்த் பற்றியும் அவர்கள் குடும்பத்தை பற்றியும் தெரிந்த பேராசிரியர், அதனால் எல்லோருமே அவளிடம் மரியாதையாக நடந்து கொண்டனர்……

    மனதிற்குள் நினைத்துக் கொண்டால் தள்ளி இருந்தாலும் தன் படிப்பிற்காக மெனக்கெடும் அவனை….  சிரித்த முகத்துடன் அவளது படிப்பைத் தொடர., மனதிற்குள் உறுதியோடு எப்படியும் படித்து தன் வாழ்க்கையில் முன்னேறி விட வேண்டும் என்ற வெறியோடு உறுதி எடுத்துக்கொண்டு படிக்கத் தொடங்கினாள் அன்றிலிருந்து….

பெண்ணாகப் பிறந்ததால்

அவள் நடைபாதையில்

எத்தனை தடைக்கற்கள்….

தடையைத் தகர்த்தெறியும்

மார்க்கம்தான் என்ன….

 

தன்னம்பிக்கையும்

விடாமுயற்சியும்

ஒரு பெண்ணின்

சிறந்த உறுதுணை…. என்றால்

 

அவளை கைப்பிடித்து

தடைக்கற்களை தாண்ட

வைக்க பக்கத் துணையாய்

யாரோ ஒருவர்….

 

அதுவாழ்க்கை துணையா

பெற்றவரா இல்லை நட்பா….

 

போய்க் கொண்டேதான்

இருக்கிறது பாதை…..

தடைக்கற்களும் சேர்ந்தே

 

பெண்ணவளும் தாண்டி

கொண்டேதான் இருக்கிறாள்….       

 

தன்னம்பிக்கையோடு.,

தாங்கிப் பிடிக்க யாருமில்லை

தகர்த்தெரிய தைரியம் உண்டு

முயற்சி தான் வெற்றிக்கு

அடிப்படை….”

Advertisement