Advertisement

அந்த பாடத்தில் சம்பந்தப்பட்ட பேராசிரியருக்கும் தெரியும்…. இருந்தாலும் அவருக்கும் தெரியும் இவன் அந்த பாடத்தில் நல்ல மதிப்பெண் எடுப்பவன் என்று அதனால் அவனிடம் இவள் சந்தேகம் கேட்பது அவரும் பெரிதாக எடுக்கவில்லை….  அதன் பிறகு அவளுடைய செல்போன் நம்பர்  இவனிடமும்…. அவனுடைய செல்போன் நம்பர் அவளிடமும் இருந்தது…. படிக்கும்போது இல்லை வேறு ஏதேனும் சந்தேகம் என்றாலும் அவனிடம் தான் கேட்பாள்…. அவனுக்கு கல்லூரியில் நல்ல பெயர் இருந்தது….

       அதன் பிறகு அவனிடம் சாதாரணமாக பேசுவது அவளுக்கு நன்றாக தான் இருந்தது தனக்காக சொல்லிக் கொடுக்கிறான் என்று….

     அப்படித்தான் இந்த முறை இவளுக்கு அவன் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான்…. கேண்டினில் அமர்ந்து அன்று ஏனோ அவளைப் பார்க்க வேண்டும் போல் அதிகமான எண்ணம் மனதில் இருந்து கொண்டே இருந்தது…. அதனால் அன்று சீக்கிரமே வந்து  அமர்ந்து விட்டு தான் கேண்டினில் இருப்பதாக அவளுக்கு ஒரு செய்தி மட்டுமே அனுப்பினான்….

     அவளும் சற்று நேரத்தில் எல்லாம் வந்து விட்டாள்….  வகுப்பில் பேராசிரியர் எடுக்கும் பாடத்தை விட இவன் நடத்துவது நன்றாக புரியும் என்பதால் கிளம்பி வந்து அவனோடு உட்கார்ந்து படிக்கத் தொடங்கி இருந்தாள்…. தற்செயலாக அப்போது கல்லூரியில் இருக்கும் இரண்டு மூத்த பேராசிரியர்கள் அவனோடு அமர்ந்து பாடம் படித்துக் கொண்டிருப்பதை பார்த்து விட்டு சென்றனர்….

     அனைவரும் அவளை அவனுக்கு வேண்டப்பட்ட அல்லது சொந்தக்கார பெண்ணாக இருக்கவேண்டும் என்றே நினைத்துக் கொண்டனர்…. ஏனெனில் அவன் யாரிடமும் அவ்வளவு எளிதாக இறங்கி பேசி விட மாட்டான் என்பது அனைவருக்கும் தெரியும்…. என்னவென்றால் என்னவென்பது நிறுத்திக் கொள்வான்… அவனுடைய பழக்க வழக்கங்களும் அனைவருக்கும் தெரியும் ஆனால் இவளிடம் ஒரு கண்ணியம் காப்பது அனைவருக்கும் தெரிந்து இருந்ததாலே சொந்தமாக இருக்க வேண்டும் அல்லது வேண்டப்பட்ட பெண்ணாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டனர்….

      அது இரண்டாவது வருட முடிவின் தேர்வு நேரம் என்பதால் அவன் பாடம் சொல்லிக்  கொடுத்து கொண்டிருந்தது அனைவருக்கும் தெரியும்…  இது ஒரு பக்கம் இருக்க அன்று தான் அவனுக்கு பிரச்சனையும் வந்தது…. பாடம் சொல்லிக்  கொடுத்து விட்டு அவன் அங்கிருந்து போக கூட இல்லை….  அதற்குள் பிரின்சிபல் அவசர அவசரமாக கேன்டீனுக்கு வந்தார் வந்தவர்….

      சித்தார்த் எவ்வளவு நேரமா கேன்டீன்ல இருக்க என்று கேட்டார்….  உடனே அவனும் அவன் வந்த நேரத்தை குறிப்பிட்டு அப்போது இருந்து இப்போது வரை இங்கு தான் இருக்கிறேன்….  இன்னும் இருவரும் உணவுக்கு கூட செல்லவில்லை என்பதை தெரிய படுத்தவும்…. அதற்கு கேன்டீன் ல் உள்ள ஊழியர்களும்.,  சரி…. பார்த்த பிரப்சர்களும் சரி ஆம் என்று சொல்லும்போது….

         சரி நீ என் கூட ஆபீஸ் ரூம் வா என்று அழைத்துக் கொண்டு செல்லும்போது…  மித்ரா என்னுடன் வா என்று அழைத்தார்… அப்போது தான் அவரின் படபடப்பும் டென்ஷனும் சித்தார்த்திற்கு புரிந்தது…  ஏதோ விவகாரம் என்று…

     அவள் புத்தகங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு மெதுவாக வரத் தொடங்கும் முன்….  சித்தார்த் வேகவேகமாக பிரின்ஸ்பல் உடன் சென்று என்ன பிரச்சனை என்று கேட்டான்…. அப்போது பிரின்ஸ்பல் சொன்னது வெளியே ஒரு பெண் உன் மீது போலீசில் கம்ப்ளைன்ட் செய்திருப்பதாகவும்….  நீ அந்த பொண்ணு ட்ட  தப்பா நடக்க முயற்சிப்பதாக போலீஸ்ல கம்ப்ளைன்ட் போயிருக்கு…. போலீஸ் விசாரிக்கும் போது நீ அங்கு இல்லை எங்கே இருக்க அப்படின்னு விசாரிச்ச உடனே நீ அடிக்கடி காலேஜுக்கு வருவே ன்னு….  இப்ப  காலேஜ் க்கு போன் வந்துச்சு அதுதான் கேட்டேன் அப்படின்னு சொல்லி பிரின்ஸிபால் சொல்லவும்….  இப்ப போலீஸ் வருவாங்க நீ இங்கே இருந்ததுக்கு சாட்சி பிரபஸர்ஸ் இருக்காங்க…. கேன்டீன் ஸ்டாப் இருக்காங்க…. ஆனாலும் மித்ராவும் உங்க கூட தான் இருந்தா அப்படிங்கறதை சொல்லிட்டானா….  உனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது என்று சொல்லவும்……

     இல்ல சார் மத்தவங்க சொல்லட்டும் மித்ரா சொல்ல வேண்டாம் என்று சொல்லும் போது….  அவளுக்கு அதனால் எந்த பிரச்சினையும் வந்து விடக்கூடாது என்று சொன்னான்….

     இல்ல மத்தவங்க சொல்றதைவிட மித்ரா கூடத்தான் நீ பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த அப்படின்னு சொல்றது தான் பெரிய பிளஸ் ஆ இருக்கும்…. அதனால அவ சொல்றது தான் நல்லது என்று மறுபடியும்  சொல்லவும் வேறு வழி இல்லாமல் தான் மித்ராவை அவன் சொல்ல சம்மதித்தான்…. முதலில் அவளுக்கு விஷயம் தெரியாது, அதன் பின் விஷயம் தெரிந்த பிறகு அவளே தைரியமாக  பேசுவதாக ஒப்புக்கொண்டாள்…..  தடுத்துப் பார்த்தும் அவள் வேண்டாம் நீங்க இங்க தான் இருந்து எனக்கு பாடம் சொல்லிக் கொடுத்தீங்க…. அப்படி இருக்கும் போது நீங்க எப்படி அந்த மாதிரி இருக்க முடியும்…. அதுவும் வேணும்னு சொல்ற மாதிரி இருக்கு வேண்டாம் பார்த்துக்கலாம்….  என்று சொல்லி அங்கு வந்த போலீஸ் அதிகாரிகளிடம் இங்க உட்கார்ந்து பாடம் சொல்லிக் கொடுத்து  இருந்ததையும் அவன் எழுதி சொல்லிக் கொடுத்த அந்த விஷயங்களையும் அவருக்கு சொல்லவும்… கேன்டீன் ஊழியர்களும் பிரபஸர்களும்  பார்த்தோம் என்று சொல்லவும் வேறு வழி இன்றி  போலீஸ் அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்…. அதற்குள் சித்தார்த்தின் தந்தையும் மற்றவர்களிடம் பேசி எப்படி வந்தது என்று விசாரித்து அந்த பெண்ணை மறுபடி அதற்கான முறையில் விசாரிக்கும் போது அவள் பொய்  சொன்னதாக ஒத்துக்கொண்டாள்…. ஆனாலும் யார் சொல்லிக் கொடுத்து சொன்னால் என்பதை மட்டும் சொல்ல முடியாது என்று விட்டாள்… அது தன்னுடைய சொந்தப் பகை என்று தனியே மாற்றி சொல்லிவிட்டாள்….  ஆனால் யார் சொன்னது என்பதை கண்டு கொண்டனர்….   கல்லூரியில் அவன் படிக்கும்போது இருந்த அவனுடைய எதிரி அதாவது  படிப்பில் போட்டி போட்டு அவனுடன் தோற்று கொண்டிருந்தவன்… எல்லாவிதத்திலும் அவனுடன் தோற்றதால்  மனதிற்குள் ஒரு கோபம்… இவனை ஏதாவது ஒரு விதத்தில் பழிவாங்க வேண்டும் கஷ்டப்படுத்த வேண்டும் என்று… அதன்படியே இன்று பெண்ணிடம் தப்பாக நடக்க முயற்சி செய்தான் என்றால் மிகவும் கேவலப்படும் என்று எதிர்பார்க்க அதில் எளிதாக தப்பி விட்டானே என்ற வருத்தம் அவனுடைய போட்டியாளரான அந்த எதிரிக்கு இருந்தது….

     அதன் பிறகு சித்தார்த் அவன் தந்தையின் சொல் கேட்டு வெளிநாட்டில் இருக்கும் தங்கள் தொழிலில் கிளையை பார்ப்பதற்காக கிளம்ப முடிவு செய்தான்…. அதன்பிறகு எந்த பிரச்சினையும் வந்து விடக்கூடாது என்பதற்காக தான் அவளை தன்னுடன் போனில் கூட தொடர்பு கொள்ளக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தான்…. ஏனென்றால் தன்னை ஏதாவது ஒரு விதத்தில் கஷ்டப்படுத்த வேண்டும் என்று நினைக்கும் அவன் தனக்கு உதவி செய்தவர்கள் யார் என்று தெரிந்தால்…. அவனுடைய கோபம் அவர்கள் பக்கமும் திரும்பலாம் என்ற எண்ணம் இருந்தது…. பிரபஸரிடம் அவனுடைய கோபத்தை காட்ட முடியாது என்பதும் அவனுக்கு தெரியும்….   வெளி உலகுக்குத் தெரிந்தது புரபசர் சொன்னது மட்டும் தான்…. இதில் மற்றவர்கள் அறியாத ஒன்று போலீஸ் அதிகாரிகளிடம் கீழ் வேலை பார்த்த மற்றொரு போலீஸ் அதிகாரி அவனுக்கு வேண்டப்பட்டவர் என்பது அவன் மூலமாக அவன் சில விஷயங்கள் தெரிந்து கொண்டான் என்பதும்….

       இருவரும் அவரவர் போக்கில் நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருந்தாலும்… அவனுக்குத் தெரியாத விஷயம் யார் உதவி செய்தது என்பதை அவனுடைய போட்டியாளரான அந்த எதிரி தெரிந்து கொண்டது….

       மித்ராவிற்கு யார் என்ன பிரச்சினை என்று எந்த விஷயமே தெரியாது…. ஏதோ கல்லூரியில் பிரச்சினை அவன் படிக்கும்போது உள்ள காலத்தில் உள்ள பிரச்சனையை பெரிதாக்கி இருக்கிறார்கள் என்பது மட்டும் தான் தெரியும் மற்றபடி வேறு எதுவும் எந்த பிரச்சினையும் அவளுக்கு தெரியாது….  அவனைப்பற்றிய எல்லா விஷயங்களும் அவளுக்கு தெரிந்தாலும்….  முழுதாகப் புரிந்து கொள்ளவில்லையோ என்ற எண்ணம் அவளுக்குள் இருந்து கொண்டே இருந்தது….  சரி நடப்பது நடக்கட்டும் என்ற எண்ணத்தோடு தான் அமைதியாக இருந்தாள்…. இன்று அவன் கிளம்பவும் ஏனோ அவளுக்கு மிகவும் மனபாரம் அதிகமானது போல உணர்ந்தாள்….

நினைவுகள் புரட்டிப்

போட்டுக் கொண்டிருக்கிறது…

உன்னையும் என்னையும்.,

 

ஏனோ வாழ்வின்

அத்தியாயங்கள்

புரண்டு கொண்டே

இருந்தாலும்…. 

 

நினைவுகள்

திருப்பி பார்த்துக்கொண்டே

இருக்கிறது…..

 

என்றாவது

ஒரு இடத்தில் முற்றுப்புள்ளி

வருமா என்று தெரியாமல்.,

தொடர் புள்ளியாக

தொடர்ந்து கொண்டு…..”

Advertisement