Advertisement

அத்தியாயம் 4

 

கல்லூரி செல்லும் நாள்கள் போல காலையிலே குளித்துக் கிளம்பி கொண்டிருந்தவனிடம் காமாட்சி தான் கேட்டார்….

    காலையிலே எங்கடா கிளம்புற அதுதான் படிப்பு முடிந்ததுல….

     மா ரிசல்ட் வந்துச்சு மார்க் எல்லாம் பார்த்தாச்சு…. எல்லாம் தெரியும் எப்ப மார்க் ஷிட் , டி சி எல்லாம் கையில கிடைக்கும் ன்னு போய் ஜஸ்ட் பார்த்துட்டு…  பிரெண்ட்ஸ் எல்லாம் வருவாங்க மா பாத்துட்டு வரேன்…..

    அதுக்காக எப்பவும் காலேஜ் போற மாதிரி அரக்கபரக்க கிளம்பனுமா சாப்பிட்டு நிதானமா போ….

    பிரண்ட்ஸோட வெளியே சாப்பிடுவேன் பேசாம இருங்க…. சின்னப்பிள்ளை மாதிரி ட்ரீட் பண்ணாதீங்க….

    நீ சொன்ன பேச்சைக் கேட்காத டா…. உனக்கு ஏதும் காரியம் என்றால் மட்டும் வந்து அம்மா அம்மான்னு பேசு…. மத்தபடி அம்மா சொல்றத காதிலேயே வாங்காத….

    சிரித்துக்கொண்டே கிளம்பி அவனுடைய காரை எடுத்துக்கொண்டு கிளம்பினான்…. அவன் படிக்கும் காலத்திலேயே அவன் ஆசைப்பட்ட காரை அவனது தந்தை வாங்கிக் கொடுத்துவிட்டார்…

    ஏனெனில் எவ்வளவு தான் மற்ற விஷயங்களில் அப்படி இப்படி இருந்தாலும் படிப்பு விஷயத்தில் அவனை அடித்துக் கொள்ள முடியாது…. அதுவே அவன் தந்தையிடம் அவனுக்கு செல்வாக்கைப் பெற்றுத் தந்திருந்தது….

     கல்லூரியில் நண்பர்களோடு கேண்டினில் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் போது சற்று தொலைவில் இவர்களுடைய ஜூனியர் களும் இப்போது புதிதாக வந்திருப்பவர்களுக்கு சீனியர்களான  மாணவர்கள் அமர்ந்து புதிதாக வந்திருந்த மாணவர்களை ராக்கிங் செய்து கொண்டிருந்தனர்….

    டேய் சித்தார்த் இங்க பாத்தியா நம் படிக்கும்போதெல்லாம் ராகிங் பண்ணா பிரின்ஸி கிட்ட கம்ப்ளைன்ட் போகும்….. இப்ப பாரு இவனுங்க எல்லாம் உட்கார்ந்து ராகிங் பண்ணிட்டு இருக்காங்க…

     புதுசா வந்த யாராவது போய் கம்ப்ளைன்ட் பண்ணும்போது மாட்டுவார்கள் நமக்கு என்ன என்று., சிரித்தபடி பேசிக் கொண்டிருக்கும்போது அவ்வழியே கடந்து போன ஒரு பெண்ணை மாணவர்கள் அழைப்பது தெரிந்தது…. இங்கிருந்து பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஏனோ அவள் தடுமாறுவதை சித்தார்த் உணர்ந்தான் உடனே நண்பர்களிடம் ஒரு நிமிஷம் இருங்க டா இப்ப வரேன் என்று சொல்லிவிட்டு வெளியே சென்றான்….

    நேராக மாணவர்கள் அமர்ந்து புதிய மாணவர்களை ராக்கிங் செய்து கொண்டிருந்த இடத்திற்கு சென்றான்….

     இவனைப் பார்த்தவுடன் மற்ற மாணவர்கள் அவசர அவசரமாக எழுந்து சீனியர் சார்….  நீங்க எங்க இங்க என்று கேட்டபடி நின்றனர்….

    எப்ப இருந்துடா ராகிங் பண்ண ஆரம்பிச்சேங்க என்று இவனும் சற்று அதட்டலாக கேட்கவும்….

       இல்ல சீனியர் சும்மா ஜாலிக்கு என்று பேசும் போதே…..  அருகிலிருந்த மாணவன் அவனை இவர்கள் படுத்திய பாடு சொல்லி இவனிடம் புகாரளிக்கவும்….

     இவன் அந்த மாணவர்களை நோக்கி பிரின்சிபால் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணி…. நீங்க மாட்டீனிங்க னா டிஸ்மிஸ் லெவலுக்கு போகும்… ராகிங் பண்றதை விட்டுட்டு இடத்தைக் காலி பண்ணுங்க என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே…. அந்த பெண் அமைதியாக நின்று கொண்டிருப்பதை பார்த்தான்…..

     உன்கிட்ட என்ன கேட்டாங்க என்று அந்த பெண்ணை பார்த்து கேட்கவும்….

     நேத்து எந்தெந்த டிவியில் என்னென்ன சீரியல் போட்டாங்கன்னு… சொல்ல சொன்னாங்க….  அதோட கதை எல்லாம் சொல்ல சொன்னாங்க என்று சொல்லவும்….

      சொல்லிட்டியா என்றான்….

       இல்ல எங்க வீட்டில டிவி பார்க்கிற பழக்கம் கிடையாது….  என்று அவள் திணறி சொல்லும்போது மாணவர்கள் குனிந்துகொண்டே நின்றனர்…..

     ஏண்டா நீங்க இன்னும் போகல என்று கேட்கவும்… இல்லை சீனியர் சும்மா ஜாலிக்கு தானே இந்த ஒரு தடவை பண்ணிக்கிறேன்… என்று கேட்க தொடங்கினார்….

      என்னவோ பண்ணிட்டு போங்க….  இந்த மாதிரிலாம் எல்லாரையும் இரிட்ரேட் பண்ற மாதிரி எதுவும் பண்ணாதீங்க… போங்க என்று சொன்னதோடு இவளை நீ போ… முதல்ல இந்த இடத்தை விட்டு காலி பண்ணு…. என்று அவளை விரட்டினான்….

      அதற்கு ராக்கிங் செய்து கொண்டிருந்த மாணவர்கள் சீனியர் சார் அந்த பொண்ணு கதைசொல்லல…..  அந்த பொண்ண அனுப்பாதீங்க என்று கேட்கவும்….

     திரும்பி அவர்களைப் பார்த்து முறைத்து விட்டு பசங்க பசங்களோட நிறுத்திக்கோங்க…. பொண்ணுங்க கிட்ட போக கூடாது என்று சொன்னான்….

     அவள் அங்கிருந்து நகர தொடங்கவும் அவளை ஏய் இங்க கொஞ்சம் வா என்று அழைத்தான்….

     அவள் வரத் தொடங்கும் போதே… இவன்  அவர்களிடம் இருந்து சற்று தள்ளி நின்று கொண்டு அவன் அருகே அழைத்தான்…

     இவளும் பயந்துகொண்டே அங்கு செல்லும்போது உன் பெயர் என்ன….  எந்த மேஜர் எடுத்திருக்க….  என்று அவளிடம் கேட்டுக் கொண்டிருந்தான்….

     அவள் எடுத்த பாடப்பிரிவை பற்றி சொன்னாள்….  அது அவனுடையது.,  மனதிற்குள் நினைத்துக் கொண்டான்… அவளிடம் வேறு எதுவும் கேட்காமல் மறுபடியும் பெயரைச் சொல்லு என்று கேட்டான்…

    மித்ரா என்று மெதுவாக சொல்லிவிட்டு அவனை நிமிர்ந்து பார்க்கும் போது….  அவன் இவளை அளவெடுப்பது போல பார்த்துக் கொண்டே இருந்தான்….

   அவள் பார்வை பயத்திற்கு மாறுவதை கண்டவன்….

     முதலில் தைரியமா இருக்க கத்துக்கோ…. சரியா இப்படியே யார் கேட்டாலும் பயந்துட்டே  நின்னு பதில் சொன்னா அப்புறம் உன்னை எல்லாரும் கூட கொஞ்சம்  தான் ராகிங் பண்ற மாதிரி  நடத்துவாங்க…. தைரியமா எல்லாத்தையும் பேஸ் பண்ண கத்துக்கோ…. தைரியமா பேச கத்துக்கோ….  என்று சொன்னான். அவள் அவனிடம் தலையை ஆட்டிவிட்டு நான் போகட்டுமா என்று கேட்கவும், போ என்று சொல்லி அனுப்பி வைத்தான்… அவள் போகும் போது தள்ளி நின்று பார்த்துக் கொண்டே இருந்தவன்… அங்கு உள்ள மற்ற பெண்களின் உடைகளோடு அவளை ஒப்பிட்டு பார்த்தான்… மற்றவர்கள் எல்லாம் புதிதாக மாடல் என்ற பெயரில் விதவிதமாக வர இவள் மட்டும் குடும்ப பாங்காக தெரிந்தாள்…. பொட்டு வைப்பதை பாவம் என்பவர்கள் போல் இருந்த இடத்தில் பொட்டும் அதற்குமேல் சிறியதாக திருநீரும் வைத்துக்கொண்டு வந்தவளை பார்க்கும்போது சற்று வித்தியாசமாகவே இவனுக்குத் தோன்றியது…. அவளது நீளமான பின்னலே முதலில் அவனை ஈர்த்தது….

     கேன்டீனுக்கு திரும்பவும் நண்பர்கள் என்ன விஷயம் என்று கேட்க இவன் சொல்லிக்கொண்டு இருந்தான்…. நண்பர்கள் கூட இவனை அப்போதே கிண்டல் செய்து கொண்டிருந்தனர்… என்னடா ஸ்பெஷலா ஒரு பொண்ணுக்கு மட்டும் ஹெல்ப் பண்ணிட்டு வந்து இருக்க, என்று கேட்கவும் அப்படியெல்லாம் இல்ல பொண்ணுங்களை கிண்டல் பண்ணாதீங்க ன்னு…  சொல்லிட்டு பசங்கள வேண்ணா பண்ணிக்கோங்க அதுவும் ஜஸ்ட் ப்ன் ஆ இருக்கனும் னு சொல்லி விட்டு வந்தேன்.,  என்று சொல்லிக் கொண்டிருந்தான்….

       ஏனோ அதன் பிறகு அடிக்கடி தனக்கு வேண்டப்பட்ட நண்பர்களோடு கல்லூரிக்கு செல்வதை வழக்கமாக்கிக் கொண்டான்…. முதலில் எல்லாம் அவளைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை வெகுவாக குறைத்து பார்த்தான்… அவனால் முடியவில்லை அதன் பிறகு தினமும் காலையில் கல்லூரிக்கு அவள் போகும் போதும் மாலையில் வரும் போதும் ஏதாவது ஒரு ஓரமாக நின்று அவளைப் பார்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தான்…. அதன் பிறகு பார்ப்பதோடு தனக்கு போதாது என்று தொடங்கிய பிறகுதான் பேச தொடங்கினான்….  தற்செயலாக பார்ப்பது போல பார்த்து அவளிடம் பேச தொடங்கியவன், அதன் பிறகு அவ்வப்போது பார்ப்பதற்கு ஏற்ப சரியாக சூழ்நிலை அவனே உருவாக்கிக் கொண்டான்…

      பின்பு அவள் கேண்டினில் இருக்கும் நேரம் அங்கு இருக்கும் ஆள் மூலமாக அவள் அங்கு வருவதைக்கண்டு போன் செய்யச் சொல்லி சரியாக வந்து சேர்ந்தான்…. அப்போதுதான் ஒருமுறை பரீட்சை நேரம் தலையை பிடித்து கொண்டு அங்கு உட்கார்ந்திருந்த அவளிடம் வந்து அமர்ந்தான்….

     என்ன ஆச்சு ஏன் இப்படி உட்கார்ந்திருக்க என்றவுடன் யாரென்று பதறி நிமிர்ந்து பார்த்தாள்…  அவனை பார்த்தவுடன் சிரித்தபடி பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு விட்டு…

     தனக்குப் புரியாத அப்பாடத்தை பற்றி அவனிடம் சொல்லிக் கொண்டு என்ன செய்வது என்று புரியவில்லை…. ப்ரொபசர் நடத்துவதும் சரியாக புரிந்து கொள்ள முடியவில்லை கேட்கவும் தயக்கமாக இருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருந்தாள்…. அப்போதுதான் குடு நான் சொல்லி தரேன் என்று சொல்லி அவளுடன்  அதிக நேரம் இருக்கும் சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொண்டு அவள் அருகிலேயே அமர்ந்து சொல்லிக்கொடுக்க தொடங்கினான்…. இது கல்லூரியில் நிறைய பேருக்கு தெரியும்.,  அவளுக்கு சொல்லிக் கொடுப்பதை யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள் தெரிந்தவர்கள் என்று நினைத்துக் கொண்டார்கள்….

Advertisement