Advertisement

அத்தியாயம் 3

 

      சித்தார்த்தை பார்த்தவள் அங்கேயே நின்றுவிட்டாள்… கையை தூக்கி காட்டி ஹாய் என்று எப்போதும் சொல்வது போல் சொன்னாள்….

    அவனும் சிரித்துக் கொண்டே அருகில் வந்து….  எப்படி இருக்க என்று பேசத் தொடங்கினான்….  பஸ்ஸில் ஏற போனவள் சற்று தள்ளி வந்து நின்று கொண்டு அவனிடம் பேச தொடங்கினாள்…

    ம்ம் ம்ம்… நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க என்று கேட்டாள்…

    நல்லா இருக்கேன் உன்ன பாக்குறதுக்கு தான் வந்தேன் என்று சொல்லவும்….

      நீங்க வருவீங்கன்னு இன்னிக்கு என்னவோ என் மனசுல தோணுச்சு…. மதியமே எதிர்பார்த்தேன்….. ஆள காணோம்…, வருவீங்களா மாட்டீங்களா யோசிச்சிட்டு இருந்தேன்….   உங்க பிராப்ளம் சால்வ் ஆயிரிச்சா யோசிச்சிட்டே இருந்தேன்…..  அப்ப தான் உங்களை யோசிச்சுட்டு இருந்தேன்….  கரெக்டா வந்துட்டீங்க., என்று சொல்லவும் மனதிற்குள் ஒரு வலியோடு கூடிய வித்தியாசமான உணர்வு தோன்றியது போல் இருந்தது…..  அவளது முகத்தையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தவன்….

    பிரச்சினை எல்லாம் முடிஞ்சிடுச்சி நீ கேர்புல்லா  இரு….  நீ ஹெல்ப் பண்ணது  வெளியே தெரியக்கூடாது என்று சொன்னவன்…..  சற்று நேரம் சென்று நான் ஆஸ்திரேலியா போறேன் அங்க இருக்கிற எங்களோட பிசினஸை பார்ப்பதற்காக கிளம்புறேன்…..  நீ கேர்ஃபுல்லா இரு போன் நம்பர் மாத்திட்டேன்….  இனிமேல் போன் ட்ரை பண்ணாத என் போனுக்கு எல்லாம்.., எனக்கு வாட்ஸ் அப்  பண்றது யாருக்கும் தெரிஞ்சு  உனக்கு ஏதும் ப்ராப்ளம் வந்துடக்கூடாது….   என்று சொல்லியபடி கிளம்பட்டுமா என்று கேட்டுக் கொண்டிருந்தான்….

     ஆஸ்திரேலியா வா திடீர்னு ஏன் உங்களோட பிசினஸ் இங்கே இருக்குல்ல என்று கேட்கவும்…

      இங்க இருக்கு.,  இங்க இருக்கிறது அப்பா பாத்துப்பாங்க நான் கொஞ்ச நாளைக்கு அங்க போய் இருக்கலாம் ன்னு கிளம்புறேன்….  போயிட்டு வரேன் என்று சொல்லவும்… அவள் ஒரு நிமிஷம் என்று  அவனை நிறுத்தினாள்…. தன் தோளில் கிடந்த பேக்கை கையில் எடுத்து திறந்து எதையோ தேடுவது தெரிந்தது…. இவன் பேசாமல் பார்த்துக் கொண்டிருக்கவும்.,  உள்ளிருந்து அழகான குட்டி டாம் அண்ட் ஜெர்ரி பொம்மையை எடுத்தாள்… அது பேக்கிங் கவர் கூட பிரிக்காமல் அப்படியே இருந்தது…  அவனிடம் கொடுத்து ஹாப்பி ஜர்னி என்னோட ஞாபகமா இந்த பொம்மையை வச்சுக்கோங்க என்று கொடுத்தாள்….

    அவனும் மனதிற்குள் உன்னை மறப்பதற்காக தான் நாடு விட்டு நாடு போறேன்…. நீயோ மறக்காமல் இருக்க இந்த பொம்மையை வைத்துக்கோ ன்னு கொடுக்கிற  என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டு கைக்குள் அடங்கும் வகையில் இருந்த பொம்மை வாங்கி கைக்குள் அடக்கி கொண்டான்….

   உனக்கு ன்னு வாங்கி இருப்ப என் கையில் கொடுத்து டியே என்று கேட்டவன்… கடைசி நேரத்தில் தான் உன்ன பாக்கணும்னு முடிவோட வந்தேன்…. அதனால உனக்கு எந்த கிப்ட் ம் நான் வாங்கல என்று சொல்லவும்….

     அவளோ நீங்கள் கிப்ட்  கொடுக்காமலே உங்களை நெனச்சுப்பேன்…. ஏன்னா இந்த பொம்மை நான் ஆர்டர் கொடுத்து செஞ்சது அந்த பொம்மை உங்ககிட்ட இருக்கிறதால பொம்மையை யோசிக்கும் போதெல்லாம் உங்க ஞாபகம் கண்டிப்பா வரும் என்று  சொன்னாள்….

        அவனும் அப்புறம் எதுக்கு என் ட்ட கொடுக்கிற நீ வச்சுக்கோ என்று சொல்லவும்…

           இல்ல வேண்டாம் உங்க கிட்ட இருக்கட்டும்…. உங்களுக்கு தான் ஞாபகம் இருக்காது வச்சுக்கோங்க…. எனக்கு எப்பவுமே ஞாபகம் இருக்கும் என்று சொல்லி அவனிடம் கொடுத்துவிட்டு சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தாள்…. அவனோ மனதிற்க்குள் என் உயிர் இருக்கும் கடைசி நிமிடம் வரை உன் நினைவு இருக்கும் என்று நினைத்து கொண்டு இருந்தான்……

       படிப்பு சந்தேகத்தை எப்படி கேட்க என்று அவனிடம் கேட்கவும்…. அவன் அவர்களுடைய அந்தப் பாடம் எடுக்கும்  சாரை பற்றி சொல்லி அவரிடம் கேட்டுக் கொள்…. அவர் சொல்லித் தருவார் என்று சொல்லிவிட்டு திரும்பியவன்….. மறுபடியும் அவளை பார்த்து ஏதும் ஹெல்ப் வேண்டும் என்றால் தன்னுடைய நண்பர்களை தொடர்பு கொள்ளுமாறு சொல்லிவிட்டு சென்றான்….

   அவளும் அவனும் பேசிக் கொண்டிருக்கும் போது காரினுள் இருந்து பார்த்துக் கொண்டிருந்த சித்தார்த்தின் அம்மா தன்னுடைய செல்போனை கஜாவிடம் கொடுத்து அவர்கள் இருவரையும் சேர்த்து புகைப்படம் எடுத்து தருமாறு கேட்டார்….

     பரசுராம் ஏதோ சொல்ல வருவதற்குள் அவரை தடுத்து நிறுத்திய காமாட்சி தயவுசெய்து எதுவும் சொல்லாதீங்க….  ஒரு பிள்ளையோட விருப்பம் என்ன என்று ஒரு அம்மாவை விட வேற யாருக்கும் அதிகமாக தெரியாது…. நீங்க வெளிய நின்னு அவன் முகத்த  மட்டும்தான் பார்ப்பீங்க…. நான்  முகத்தை வச்சி அவனோட விருப்பம் என்ன ன்னு என்னால் சொல்ல முடியும்…. நீங்க தயவுசெய்து எதுவும் தலையிடாதீர்கள் என்று சொல்லியபடி கஜாவை போட்டோ எடுத்து தர சொல்ல அடுத்தடுத்த அழகான புகைப்படங்களாக எடுத்து காமாட்சி இடம் கொடுத்தான்……

    அவளிடம் விடை பெற்று காரில் ஏறியவன்ஒரு பெருமூச்சோடு இருக்கையில் அமர்ந்து தலை சாய்த்துக் கொண்டான்….  சற்று நேரம் எதுவும் பேசவில்லை அவளும் அதே நேரம் கல்லூரி பேருந்தில் ஏறி அமரவும் கல்லூரி பேருந்து கிளம்பியது… கல்லூரி பேருந்து கல்லூரியிலிருந்து போவதை பார்த்துக் கொண்டே இருந்தவன் கிளம்பலாம் என்று கஜாவிடம் சொன்னான்….

    அந்த நேரம் பரசுராம் ஏதோ வாய் திறந்து சொல்ல தொடங்கும் முன் காமாட்சி அவர் கையைப் பிடித்து அழுத்தி பேச விடாமல் செய்தார்…. அதன்பின் தன் செல்போனில் இருந்த போட்டோ வை பார்த்துக்கொண்டே இருந்தவர்….

       சித்தார்த் அம்மா உனக்கு வாட்சப்ல போட்டோ அனுப்பி இருக்கேன் பாரு டா என்றார்…

    அம்மா உங்களுக்கு வாட்ச்ப் சொல்லிக் கொடுத்தாலும் சொல்லி கொடுத்தேன்….. எப்ப பாத்தாலும் அதுல இருந்து எந்த போட்டோ னாலும் அனுப்புறது…  மெசேஜ் எல்லாம் அனுப்புறீங்க அது என்ன மெசேஜ் கூட பாக்க மாட்டிங்களா….  பேசாம எனக்கு அனுப்பி வைத்துவிடுறீங்க என்று சொல்லியபடி தனது போனை எடுத்து ஆன் செய்து பார்த்தான்….. அப்போது தான் தெரிந்தது அவன் அவளுடன் பேசிக் கொண்டிருக்கும் போட்டோவை அவள் அம்மா எடுத்து அனுப்பி இருப்பதை பார்த்து..,  அவன் சிரித்துக் கொண்டே  போனை வைத்து விட்டான்….

    பின் மெதுவாக காமாட்சி சித்தார்த்திடம் அந்த பொண்ணு ஏதோ கொடுத்துச்சு என்னது டா என்று கேட்கவும்… தன் கையிலிருந்த சிறிய பொம்மையை காட்டினான்…

    என்னடா இது எப்ப பார்த்தாலும் சண்டை போடுற பூனையும் எலியும் சேர்ந்திருக்க மாதிரி ஒரு பொம்மையைக் கொடுத்து இருக்கா…  என்று சொல்லவும் அவன் சிரித்துக் கொண்டான் ஏனெனில் அதற்கான விளக்கம் அவளிடம் ஏற்கனவே அவன் வாங்கி இருந்தான்….

        அவள் அப்போது சொன்னதை இப்போது மனதிற்குள் நினைத்துக் கொண்டான்…

     ஏய் என்ன டாம் அண்ட் ஜெர்ரி பொம்மை  கொடுக்குற எப்பவும் சண்டை போட்டுட்டே இருக்கும் தெரியுமா…..

     தெரியுமே அது எப்பவும் சண்டை போட்டுட்டே இருக்கும்…. ஆனா ஒன்னு இல்லாம ஒன்னு இருக்காது அது தெரியுமா…  என்று அவர் கேட்கவும் அதற்கு மேல் அவன் பதில் பேசவில்லை…..

     அப்போதுதான் சிரித்துக்கொண்டே தன் கைகளுக்குள் அடக்கிக் கொண்டான்…..

        பொம்மை தாங்கமா என்று திருப்பி அவன் தாயின் கையிலிருந்து வாங்கி கொண்டவன்…. தன் கைகளில் வைத்திருந்தான்….

       அப்போது அவன் அம்மா தான் அந்த பொம்மையை தாடா வீட்ல ஷோகேஸில் வைக்க அழகா இருக்கே என்று கேட்கவும்….

   வேண்டாம் வேண்டாம் என்ட்ட இருக்கட்டும் என்று சொல்லிவிட்டு கைக்குள் அடக்கி கொண்டான்…. மறுபடியும் ஏர்போர்ட் வந்து இறங்கும் வரை ஏதேதோ பேசியபடி வந்தாலும் அவனது நினைவுகள் அவளை சுற்றி கொண்டிருந்ததை அவன் மட்டுமே அறிவான்….

     ஏர்போர்ட் வந்ததும் தன் கையில் வைத்து இருக்கப்போகும் பேக் என்று அவன் கையில் வைத்திருந்த பேக்கில் அவள் கொடுத்த பொம்மையை பத்திரப்படுத்திவிட்டு மற்றவற்றை செக் இன் போட்டுவிட்டு…  அவன் திரும்பி வந்து பெற்றோர்களை கிளம்புங்கள் என்று சொல்லிவிட்டு…. அவன் உள்ளே செல்லவும் காமாட்சி கண் கலங்கி நின்றார்… காரில் வரும்போது தான் பரசுராம் இடம்  கஜாவுக்கும் தெரிய வேண்டும் என்ற எண்ணத்திலேயே சொல்லத் தொடங்கினாள்…

    அவனுக்கு அந்தப் பொண்ணைப் புடிச்சிருக்கு….  இங்க நீங்க என்னன்னு கொஞ்சம் விசாரிங்க பொண்ணு குடும்பம் எப்படி என்ன எதுன்னு விசாரிங்க மீதியை பார்ப்போம்…..  பொண்ணு படிப்பு  முடியல, படிப்பு முடியட்டும் அதுவரை காத்திருப்போம்….  படிப்பு முடிஞ்சு உடனே பேசி முடிச்சதுக்கு அப்புறம் அவனை வர சொல்லுவோம்… அதுக்கப்புறம் அவன் கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போகட்டும் என் புள்ள மனசில் ஆசை இருப்பது எனக்கு தெரியுது…   உங்களுக்கு தெரிய மாட்டேங்குது என்று சொல்லவும்….

     காமாட்சி அப்ப சொன்னது தான் இப்பவும் சொல்லுதேன் யாருக்கு என்ன என்று எழுதி இருக்கும்…அதுதான் நடக்கும் மனசுல ஆசையை வளர்த்துக்காத  அதுக்காக விசாரிக்க மாட்டேன்னு சொல்லல….  விசாரிக்கேன் கொஞ்சம் பொறுமையா இரு என்று சொன்னவர் யோசனையோடு அமர்ந்திருந்தார்….

      எத்தனை எத்தனையோ விதமான தொழில்துறை போட்டிகளிலும் பிரச்சினைகளிலும் சமாளித்து வந்த அவருக்கு தன் மகன் விஷயத்தில் மட்டும் முடிவெடுக்க அதிக யோசனை தேவைப்பட்டது…. அதிக நேரமும் தேவைப்பட்டது பெற்றவர்களாய் இருந்து யோசிக்கும்போது பிள்ளைகளின் வாழ்க்கை எவ்வளவு முக்கியம் என்பதை பெற்றவர்கள் யோசிக்கத் தொடங்கினர்…  ஒரு வயதுக்குப் பிறகு எந்த பெண்ணை பார்த்தாலும் தன் மகனுக்கு பொருத்தமாக இருக்குமா என்று தோன்றும் தாயாகவும் தந்தையாகவும் தான் அவர்களும் இருந்தனர்…..  ஆனால் அவன் விருப்பம் இதுதான் என்று அறிந்தபின் ஏதாவது செய்ய முடியுமா என்று மட்டுமே யோசித்தனர்…. ஒரே மகன் அவனுடைய ஆசையை நிராகரிக்க அவர்களுக்கு மனம் வரவில்லை…..

   அதேநேரம் கல்லூரி பேருந்தில் தோழியோடு அமர்ந்திருந்தவளிடம் அவள் தோழி கேட்டுக்கொண்டே வந்தாள்…. ஏண்டி உன்ன மட்டும் பார்க்க வந்திருக்காரே என்ன விஷயம் என்று கேட்கவும்…

       அதெல்லாம் ஒன்னும் இல்ல அவங்க வெளியூர் போறத சொல்லிட்டு போவதற்காக வந்து இருக்காங்க…. மத்தபடி நீ சும்மா இரு எதையாவது பேசிட்டு இருக்காத என்று சொல்லி அவள் வாயை அடைக்க முற்பட்டாள்….  ஆனால் அவள் மனதிற்குள்ளும் சில நேரம் சிறு சந்தேகம் வருவது போலவே தோன்றும்… அது அவனை சந்தித்த நாளிலிருந்து இந்நாள் வரை கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக….  அவனது நடவடிக்கை கல்லூரியில் அவன் படிப்பை முடித்து இருந்தாலும் அடிக்கடி வருவதும் இவளிடம் பேசுவதும் சில நேரங்களில் உள்ளுக்கு சந்தேகத்தை உண்டு பண்ணினாலும்…..  அவன் பேச்சு  அவளிடம் கண்ணியமாகவே இருந்ததால் அவளால் அவனை சந்தேகிக்க முடியவில்லை…..

        தோழி சாதாரணமாக சொன்னாலும் அவளுக்குள்ளும் மனதில் ஒரு சின்ன உறுத்தல் இருந்தது….. தானும் சரி இல்லையோ என்ற எண்ணம் அவளுக்குள் தோன்றத் தொடங்கியது…  இருந்தாலும் அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு தன் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்ற முடிவோடு வீட்டின் அருகில் உள்ள கல்லூரி பேருந்து நிற்கும் இடத்தில்  இறங்கி மெதுவாக நடக்கத் தொடங்கினாள்…. அப்போது பழைய ஞாபகங்கள் அவளுக்கு   வந்தது….  ஏன் என்று பலமுறை யோசித்த விஷயத்தை மறுபடியும் யோசிக்க தொடங்கினாள்…. ஏனோ இன்று அவன் முகம் பார்த்ததே கண்ணுக்குள் ஓடிக்கொண்டிருந்தது…. எதனால் ஏன் இன்று அவனின் பார்வை அப்படி இருந்தது…  எதற்காக அப்படி ஒரு பார்வை என்று யோசித்தாள்… அங்கு வைத்தே கேட்க வேண்டும் என்று தோன்றியது ஆனால் சரி அவன் வெளிநாடு செல்வதாக சொல்லி கொண்டு போகும் இடத்தில் இதைப் பற்றி கேட்க கூடாது…  என்ற எண்ணத்தில் தான் அவனிடம் மறுபடியும் கேட்கவில்லை….  ஏதாவது பேசி வேறு ஏதும் பிரச்சினை வளர்த்துக் கொள்ளக் கூடாது….  அவன் சாதாரணமாகவே பேசியிருந்தாலும் தான் சந்தேகப்பட்டு கேட்பது தவறு என்பதற்காகவே அமைதியாக வந்து விட்டாள்…..  ஆனால் இப்போது ஏனோ கேட்டு இருக்கலாமோ என்று மனம் கிடந்து தவித்துக் கொண்டிருந்தது…. கிளம்பி இருப்பானோ போன் நம்பர் தரமாட்டேன் என்று சொன்னது அவளுக்கு ஞாபகம் வந்தது…

     இரு நாள்களுக்கு முன்பு அவளிடம் இருந்து போன் வந்தது கட் செய்துவிட்டான்…  எடுக்காமல் நிராகரித்தான்… அதை கேட்க வேண்டும் என்று எண்ணும் போது தான் உங்கள் போன் நம்பர் என்று அவள் பேச்சை தொடங்கவும்…..  அவன் மறுபடியும் சொன்னான் என் போன் நம்பர் தர மாட்டேன் இனிமேல் நீ கால் பண்ணாத என் நம்பர் என்கிட்ட இல்ல என்று சொன்னதோடு நம்பர் மாத்திருவேன்….  இவளோ ஏதும் அவசரமென்றால் நான்  உங்களிடம் எப்படி பேசுவது என்று கேட்கும் போது நீ பேசணும் நினைக்காத….  உனக்கு எதுவும் கஷ்டம் அப்படின்னா கண்டிப்பா யாராவது ஹெல்ப்புக்கு அனுப்புவேன்… ஆனா யார்ட்ட சொல்லுவேன் எல்லாம் சொல்ல மாட்டேன்… உனக்கு யாரை காண்டாக்ட் பண்ணனும்னு என்கிற ஆள் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு கேன்டீனில் இருக்கும் அவனது ஆளான ஒரு நபரை சொல்லி அவனிடம் சொல் அவன் உனக்கு என் நண்பர்கள் யாரையாவது வர சொல்லி பேச வைப்பான்…  மற்றபடி ஏதும் அவசரம் என்றால் மட்டுமே அழைக்க வேண்டும் மற்றபடி அழைக்கக்கூடாது என்று சொல்லிவிட்டு சென்றான்… உங்களுடைய போன் நம்பர் என்று கேட்டதற்கு வேண்டாம் எதுவாக இருந்தாலும் இனி போனில் எல்லாம் பேச வேண்டாம் என்று சொல்லி விட்டான்.  இவளுக்கு சற்று வருத்தமாக இருந்தாலும்  அவன் சொன்ன  இது உனது நன்மைக்காக என்ற வார்த்தையில் அமைதியாகிவிட்டாள்…

     ஏனோ அன்று அவளால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை…. ஏதேதோ ஞாபகங்கள் வந்து அவளை உலுக்கிப் போட்டது போல் இருந்தது… அவள் அம்மாவே பார்த்துவிட்டு இன்னைக்கு படிக்கிற மாதிரி தெரியலையே என்று கேட்டவுடன்…

     அப்புறமா படிக்கிறேன் அம்மா…  இப்ப வேண்டாம் என்று சொன்ன படி அவளுடைய அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்…  அவளுக்கு சற்று தெளிய வேண்டியது இருந்தது போல் தோன்றியது….

     கிளம்பும் முன் பார்த்த அவள் முகத்தை நினைத்துக் கொண்டே இருந்தான் மற்றவர்களுக்கு வேண்டுமானால் அவள் சாதாரணமாகத்தான் தோன்றலாம்….  ஏனோ தனக்கு மட்டும் அவள் அத்தனை அழகாக தோன்றியது போலவே இருந்தது…  ஏனோ இன்று அம்மா கேட்டதால் போய் பார்த்தேன் என்று நினைத்துக் கொண்டான்…  இல்லை எனில் அந்தப் பக்கம் போக கூடாது என்ற எண்ணத்தில் இருந்தவனை…..  அவன் அம்மா ஆசை என்று கேட்டதால் கூட்டிக்கொண்டுபோய் காட்டினான் அப்படித்தான் அவன் மனதை சமாதானப்படுத்திக் கொண்டு இருந்தான்… ஏனெனில் அவன் இரண்டு மூன்று நாட்களாகவே நினைத்துக் கொண்டுதான் இருந்தான்….  ஒருமுறை பார்த்து விட்டு செல்ல வேண்டும் என்று ஏனோ  இப்போது அது மனதிற்கு நிம்மதியாக தோன்றியது….

   விமானத்தில் ஏறி அமர்ந்த பின் கிளம்புவதற்கான அறிவிப்பு வரவும் கண்ணை மூடி இருக்கையில் சாய்ந்து அவன் அவளது நினைவுகளுக்குள் மூழ்க தொடங்கினான்…

       அவனது வீட்டில் அவனது அம்மாவும் அதை தான் யோசித்துக்கொண்டிருந்தார்…  மகன் கிளம்பி இருப்பான் எப்படி இந்தப் பெண்ணை திரும்பவும் பார்ப்பது என்ற எண்ணத்தில் பரசுராம் இடம் போய் கேட்க போகவும்….  அவர் சொன்னார் எதைப்பற்றியும் யோசிக்காதே விசாரித்துக் கொள்வோம் அவசரப்படாதே என்பதோடு நிறுத்திவிட்டார்…. ஆனால் மகன்  கிளம்பி சென்ற அந்த நேரத்திலிருந்து அவளது மனம் யோசித்தது அந்த பெண்ணை எப்படி வீட்டிற்கு மருமகளா கொண்டுவருவது என்ற எண்ணம் மட்டுமே….

உன்னை மறக்க வேண்டும்

என்ற எண்ணத்தோடு

உன்னை மட்டும் நினைத்துக்

கொண்டிருக்கும் எனக்கு….

 

ஏதோ ஒரு மூலையில்

உன் மனதின் ஓரத்தில்

சிறு இடம் கிடைத்தாலும்

போதும் அமைதி கொள்வேன்…

 

என்றோ ஒரு நாள்

உன்னைக் காணும்

பாக்கியம் மறுபடியும்

எனக்கு கிடைக்குமா

என்ற எண்ணத்தோடு

என் பயணத்தை

தொடங்குகிறேன்…..

 

மீண்டும் உன்னை பார்ப்பேனா

என்று தெரியாது அதுவரை

இன்று உன்னை விழிகளுக்குள்

ஏற்றியது என் மனதில்

உறைந்து போகட்டும்….

 

எனக்காக வேண்டிக்கொள்

நீ தள்ளியே நின்றாலும்

உன் உருவம் எனக்குள்

பதிந்து போகட்டும் என்று….

 

இன்னொரு முறையும்

வேண்டிக்கொள்

உன் நினைவுகளோடு

என் நினைவுகள்

வாழ்ந்து விடட்டும் என்று…..”

Advertisement