Advertisement

பரசுராம் மனைவியின் சாதுர்யமான பேச்சு நினைத்து சிரித்துக் கொண்டு அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார் அம்மாவிற்கும் மகனுக்குமான பேச்சை….

     அவனோ காமாட்சியின் மடியில் படுத்துக்கொண்டு கதை பேசிக் கொண்டிருந்தான்…. காமாட்சி மகனின் தலையை கோதிக்கொண்டே எனக்கு ஒரே ஒரு தடவை அந்த பொண்ண மட்டும் காட்டிடு  டா….  என்று கேட்கவும் அம்மா என்று அதிர்ச்சியோடு அவர் முகத்தை நிமிர்ந்து பார்த்தான்….

    ஏம்மா ஏன் நான் தான் சொன்னேன்ல வெளியவே தெரிய கூடாது அப்படின்னு…  அதுமட்டுமில்லாம நான் உன்கிட்ட என்ன சொன்னேன்…. அதெல்லாம் தேவதை மா… அப்படியும் திரும்பவும் கேக்கறீங்க நீங்க என்று கோபமாக கேட்கவும்….

     இல்லடா காரை விட்டு இறங்கவே மாட்டேன்….  நீ தூரத்திலிருந்து காமிச்சு தந்தா போதும் ஒரே ஒரு தடவை பார்த்து விடுவேன் என்று கேட்டார்…..

     ஏனெனில் வீட்டில் அனைவருமே மாநிறம்தான்… அடித்தட்டில் இருந்து அரசியல் மூலமாகவும் ஆள்பலம் மூலமாகவும்  பணத்தை சம்பாதித்துக் கொண்டு தொழில் தொடங்கி பெரிய நிலைக்கு வந்தவர் தான் பரசுராம்….  அவர் சொந்தத்திற்குள் அழகு என்றால் மாநிறமாக வாட்டசாட்டமாக இருக்கும் பெண்ணை தான் அழகு என்பர்…. இவன் வேறு தேவதை என்று மூச்சுக்கு முன்னூறு தரம் சொல்வதால்., அந்த பெண் எப்படி இருப்பாள் என்று பார்க்க வேண்டும் என்ற ஆசை அவர்களுடைய சொந்தத்தில் பெண்களெல்லாம் கம்பீரமாக இருப்பதுதான் அழகு என்பார்கள்….  அவர்களிடம் மென்மை என்ற குணம் உள்ளே இருக்கும் போல….  ஆனால் அதிகாரம் செய்யும் அந்த குரலும் அதிகாரம் செய்யும் அந்த பேச்சும் தான் அவர்கள் குடும்பத்துக்கு உரிய குணமாக இருந்து கொண்டிருந்தது….  எனவே மகன் சொல்லும் பெண் எப்படி இருப்பாள் என்று பார்க்க அவருக்கு ஆசை…

    சரிமா பாக்கலாம் என்ற  அவன் ஏர்போர்ட்டிற்கு அழைத்து செல்ல சம்மதித்தது….   இருவரும் ஒரு வழியா சம்மதித்தானே என்று எண்ணிக்கொண்டனர்…. போகும் வழியில் காட்டி தருவதாகவும் சொன்னான்…..

       வீட்டிலிருந்து கிளம்பும் முன் அப்பாவிடம் தனியாக சென்று சில விஷயங்களை மட்டும் பேசிவிட்டு வந்தான்…. கேட்டதற்கு பிசினஸ் சம்பந்தமாக என்று சொல்லிவிட்டான்…. அம்மாவிடம்  சில அறிவுரைகளை மட்டும் வாங்கிக்கொண்டு., உங்க ஹெல்த் அ பார்த்துக்கோங்க…. இதைப்பத்தி யோசிக்காதீங்க… தினமும் போன் பண்றேன் தினமும் வீடியோ கால் ல வர்றேன்… சந்தோஷமாயிருங்க எதைப்பற்றியும் யோசிக்காதீங்க என்று பேசி விட்டு கிளம்பும் முன்…. கஜாவிடம் சொல்லி அவனுடைய பெட்டி எல்லாவற்றையும் எடுத்து காரில் வைக்க சொன்னான்….அவனுடைய கார் சாவியை எடுத்துக்கொண்டு செல்லும்போது என்னோட கார் வேண்டாம் அப்பாவோட கார்  எடுங்க என்று சொல்லி விட்டான்…

     ஏண்டா உன் காரில் போவது தானே உனக்கு பிடிக்கும்….  திடீர்னு அதிசயமா அப்பா காரில் போலாம்னு சொல்லுற என்று கேட்கவும்….

    மா என் காருனா அடையாளம் தெரிஞ்சிடும்…. அவளுக்கும் தெரியும் காலேஜ்லயும் தெரியும்…. அப்பா காரு னா யாருக்கும் தெரியாது என்று காரணம் சொன்னான்..,..

     ஏண்டா என்று அவள் அம்மா கேட்கவும்…

    இந்தப் பிரச்சினை வந்ததுக்கப்புறம் நான் வந்து காலேஜ் போறது இல்ல…. போனா பிரச்சினையாகும் அப்படிங்கிறது காக அதுமட்டுமில்லாம அந்த பொண்ணுக்கு என்னால எந்த பிரச்னையும் வந்துடக் கூடாது…. அது முக்கியம் என்று சொல்லிவிட்டு அப்பா காரு னா யாருக்கும் தெரியாது…. அதுமட்டுமில்லாம முன்னாடி அந்த பொண்ணு க்கு பாடம் எதுவும் டவுட்  கேக்குறதுக்கு எனக்கு போன் பண்ணும்…..  இப்போ நம்பர் மாத்துறேன்….  என்னோட நம்பர் உங்களுக்கு மட்டும் தான் தெரியும் வேற யாருக்கும் நம்பர் கொடுக்கக்கூடாது…  என்று சொல்லிவிட்டு கிளம்பவும் காரில் ஏறிய பிறகு அவன் அம்மா கேள்வி மேல் கேள்வியாக கேட்டுக் கொண்டே வந்தார்….

    இல்லம்மா அவ என் ட்ட இதுவரை பேசினது தெரியக்கூடாது…. இனி பேசவும் கூடாது…. அதனாலதான் அவளை என்கூட பேசாத ன்னு சொல்லி இருக்கேன்…. என்  போன் நம்பர் மாற்றிட்டேன் பண்ணாத ன்னு சொல்லி இருக்கேன்…  அவ போன் பண்றது  கிடையாது அது மட்டும் இல்ல என்னோட வாட்ஸப் நம்பர் கூட மாத்திருவேன்….   நான் எல்லாத்தையும்  ஊருக்கு போயிட்டு உங்களுக்கு  சேஞ்ச் பண்ணி அனுப்புறேன்…  அப்பா ட்ட ஏற்கனவே சொல்லியிருக்கேன்…  அப்பா பார்த்துக்குவாரு என்று சொன்னான்…

     அந்த பொண்ணு உன்கிட்ட பேச மாட்டாளா என்று ஆர்வமாக கேட்கவும்….

     என்ன இது இப்படி கேக்குறீங்க… பேசாம தெரிஞ்ச பொண்ணு ன்னா பேச தான் செய்வா….

     ஏண்டா அந்த பொண்ணுக்கு ஒன்ன புடிக்குமாடா என்று ஆர்வமாக கேட்கவும்….

     மா உங்கள அப்பா திட்டுறது தப்பே இல்ல…   என்னமா இப்படியே பேசிட்டு இருக்கீங்க விடுங்க…. அதெல்லாம் பேசாதீங்க காலேஜ்க்கு போனா தூரத்திலிருந்து பார்க்கணும்….  காரை விட்டு இறங்கினா அதுக்கப்புறம் நான் இந்தியா பக்கமே வரமாட்டேன்… அதையும் ஞாபகம் வச்சுக்கோங்க என்று சொன்னான்….

     போடா இப்படியே சொல்லி எப்பவுமே மிரட்டு என்று சொல்லிவிட்டு அமைதியாக இருந்து கொண்டார்…. அதே நேரம் காலேஜ் கேட் தாண்டி உள்ளே  கார் செல்லவும்… அவள் காலேஜ் பஸ்ஸில் ஏறும் இடத்தில் சற்று தள்ளி காரை நிறுத்தச் சொன்னான் கஜா வை…

     அவனுடைய அம்மாவும் அப்பாவும் பின் இருக்கையிலிருந்து பார்த்துக்கொண்டிருக்க இவன்  டிரைவர் சீட்டுக்கு அருகில் இருந்த சீட்டில் இருந்து பார்த்துக் கொண்டே இருந்தான்…  சற்று தொலைவில்  அவளை பார்த்தவுடன் அவன் கண்டுகொண்டான்…. கஜாவிற்கு கூட அடையாளம் தெரியாது அதிகம் என்பதால் சற்று நேரம் அமைதியாக பார்த்துக் கொண்டே இருந்தான்….  அவள் அருகில் வரவும் தான் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் காட்டித்தந்தான்…..

        அம்மா அந்த ரோஸ் கலர் சுடிதார் பாருங்க என்று காட்டினான்…..

     எந்த ரோஸ் கலர் டா என்று.. அவள் அம்மா தேடவும்….

     அந்த பஸ் பக்கத்துல பாருங்கம்மா ரோஸ் கலர் சுடிதார்…  கருப்பு கலர் ஸ்கூல் பேக் மாதிரி பின்னாடி போட்டு இருக்கா பாருங்க…  என்று காட்டவும் பார்த்தவருக்கு விழி எடுக்க மனமில்லை… நீண்ட பின்னல் முன்புறம் தூக்கி போட்டிருக்க… அதில் காலையில் வைத்த பூச்சரம் பாதி வாடியும் வாடாமலும் இருந்தது….  காலையில் பூத்த பூ போல் இருக்கும் அவளது முகம்…. சூரிய வெப்பத்தில் வாடிய பூவாக இருந்தது போல் அவன் அம்மாவிற்கு தோன்றியது…

     பெரிய கண் ,வளைந்த புருவம் மஞ்சள் நிறம் சேர்ந்தது போன்ற முகம்  பார்த்தவுடனே தெரிந்தது…. மிக அழகும்  மென்மையும் அவள் முகத்தில் தெரிந்தது அவளுடைய மென்மையான குணமும்….

      அவன் தந்தையோ ஆராய்ச்சியாக இவனது முகத்தை கொஞ்சம் சற்று உற்றுப் பார்க்கத் தொடங்கினார்…. பையன் கவுந்துட்டான்  போலயே என்ற எண்ணங்களுடன்…

      டேய் நீயும் வெளிநாடு போற…. நீ எப்ப வர போறியோ…  அந்தப் பொண்ணுட்ட ஒரு வார்த்தை பேசிட்டு வரியா டா… என்று அம்மா கேட்கவும் திரும்பி பார்த்து தன் தாயை முறைதான்….

        இல்லடா  உண்மையை தான் சொல்லுறேன்….  காலேஜில் உன்  நல்ல பெயரை காப்பாத்தி இருக்கா….  பிரச்சனை ல இருந்து உன்னை காப்பாற்றிவிட்டா என்று சொன்ன….  அப்போ  ஒரு வார்த்தை போய்ட்டு வாரேனு சொல்லிட்டு வருவதில் தப்பு இல்லையே….. என்று அவர் கேட்கவும்  இவனும் யோசிக்க தொடங்கினான்…. சொல்லிட்டு போறதுல தப்பில்லை என்று மனதிற்குள் தோன்றியது ஒரே ஒரு முறை கடைசியாக பேசிக் கொள்வோம் என்ற எண்ணம் மனதிற்குள் இருந்தது புரிந்தாலும் ஒரு பெருமூச்சுடன் காரை விட்டு இறங்கினான்….

     அவன் இறங்கவும் அவனுடைய அம்மா டேய் பொண்ணு முகம் எனக்கு தெரிகிற மாதிரி நின்னு பேசு என்று சொன்னார்…

    அவன்  கார் கதவை சாத்தவும்…. ஆனா  எதுக்கு அப்படி சொன்னே என்று காமாட்சியிடம் கேட்கவும்…

       என் பையன் பக்கத்துல நின்னா எப்படி இருக்கு ஜோடி பொருத்தம்  பாக்கணும் எனக்கு ஒரு ஆசை என்று சொல்லவும்…

    காமாட்சி நான் ஏற்கனவே சொல்லிட்டேன் மனசுக்கு போட்டு குழப்பிக்காத….   நடக்கிற விஷயத்தை யோசி…  அது எல்லா பொண்ணையும் மகனோட பக்கத்துல நிப்பாட்டி ஜோடி சேர்த்து பார்க்காதே….  என்று சற்று கடினமாகவே சொன்னார்…. இருந்தும் அவர் மனதிற்குள்ளும் ஒரு ஆசை வந்தது எப்படி இருக்கு என்று பார்க்க வேண்டும் என்று…….

ஏனடி இப்படி இருக்கிறாய்

வண்டுகள் மொய்த்து விடக்கூடாதே….

என்ற கவலை எனக்கு

பூக்களுக்கும் உனக்கும்

வித்தியாசம்  தெரியாமல்….”

Advertisement