Advertisement

அத்தியாயம் 16

 

    சித்தார்த் மித்ரா வாழ்க்கை ஆஸ்திரேலியாவிலும் சந்தோஷமாகவே கழிந்தது…

          சித்தார்த் சொன்னது போலவே, அது அவர்களுக்கு நீண்ட நாள் ஹனிமூன் ஆகவே இருந்தது…  இன்னும் ஒரு மாதத்தில் கிளம்ப வேண்டும் என்று இருந்த நாளில்…., ஒரு நாள் காலை எழுந்து அவன் எப்பொழுதும் அலுவலகம் செல்லும் நேரத்தைக் கணக்கிட்டு, அதற்கு தகுந்தாற்போல் சமைக்க வேண்டும்… என்ற எண்ணத்துடன் சமையலுக்கு ரெடி செய்ய தயார் செய்து விட்டு…,  குளித்துவிட்டு ஒரு கோப்பை தேநீரோடு பால்கனியில் நின்று தூரத்தில் தெரிந்த கடலைப் பார்த்துக் கொண்டிருந்தாள்….  அவ்விடம் கடற்கரையோரம் வாக்கிங் சென்றவர்கள் இங்கிருந்து பார்த்தால் தெரியும் அளவிலே இருந்தது…  அவர்களை பார்த்துக் கொண்டிருக்கும் போது அங்கு ஒரு  ப்ரக்னன்ட் லேடி  ஐ பார்த்தவுடன் சிரித்துக் கொண்டே இருந்தவள்…. திடீரென மனதில் நாள் கணக்கு பார்க்க தோன்றியது.., அது வரை தோன்றாத எண்ணம் அப்போது தான் தோன்றியது..,  யோசித்துப் பார்க்கும்போது 45 நாளை கடந்து இருப்பது கண்டு கொண்டாள்…

        சித்தார்த்திடம் இதை எப்படி சொல்வது என்ற யோசனையோடு அமர்ந்திருந்தாள்… ஏனென்றால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சொல்வார்கள் என்று கேள்வி பட்டிருக்கிறாள்…., இவனிடம் எப்படி சொல்வது.., முதலில் இதை உறுதிப்படுத்த வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது…,  பின்பு அவளுக்கே அப்படி தான் இருக்கும் என்ற ஒரு எண்ணம் தோன்றியது….,  அவளுக்கு இது போல எப்போதுமே நாட்கள் தள்ளிப் போனது கிடையாது…அதனால் இது உறுதியாக அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்…

      சித்தார்த் வாக்கிங் கிளம்பப் போகிறேன் என்று கிளம்பவும் சரி என்று தலையை மட்டும் ஆட்டினாள்…..  ஏன் அமைதியா இருக்க…. உன்னை யோசிக்காத ன்னு சொல்லி இருக்கேன்…. நீ ஏதோ குழம்புற அப்படின்னு சொல்லவும்….

      இல்லை இல்ல நீங்க போயிட்டு வாங்க என்று சொல்லி அனுப்பி விட்டு அவன் வருவதற்குள் காலை டிபன்  எப்போதும் செய்வது போல ஒரு வகையோடு நிறுத்தாமல்.., சிறிதளவு பொங்கல்.,  சிறிதளவு இனிப்பு.,  இருவருக்கும் தேவையான அளவில் மட்டும் ஒரு நான்கு இட்லி.,   இரண்டு தோசை., இரண்டு வடை.,  என்று விதவிதமாக  தயார் செய்தாள்…,  எல்லாம் இருவர் மட்டுமே சாப்பிடக் கூடிய அளவு தான்… அதிகமாக எதுவும் செய்யவில்லை., சட்னி சாம்பார் என்று வைத்துவிட்டு அவன் வந்து ஏன் இவ்வளவு வெரைட்டி என்கவும் சும்மாதான் என்று அவனிடம் சொன்னாள்……

     அவன் மறுபடியும் ஒரு தேனீர் அருந்திவிட்டு.., குளித்து விட்டு சற்று நேரம் செய்தி சேனலை இருந்து பார்த்து விட்டு, பின்பு கிளம்பி வந்து சாப்பிட அமர்ந்தான்..,  அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்திருந்தாள்….,  அவனுக்கு தட்டு வைத்து அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வைத்து பரிமாறினாள்..,  பின்பு அவளுக்கும் சேர்த்து எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள்…  ஏன்  இத்தனை வெரைட்டி என்ன  விசேஷம்  என்று கேட்கவும்…

     வீட்டுக்கு புதுசா யாரும் வந்தா..,  நம்ம வீட்டுக்கு வர்றவங்களுக்கு நல்ல படியா ரிசிவ் பண்ணனும்., நல்ல படியா புட் எல்லாம் கொடுத்து கவனித்தால் தான்.,  அவங்க  ஹேப்பியா இருப்பாங்க என்று சொல்லவும்….

       யாரும்  கெஸ்ட் வராங்களா வீட்டுக்கு என்று கேட்டான்…..

       கெஸ்ட் இல்ல நியூ மெம்பர் என்ற உடன் முதலில் அவனுக்கு புரியவில்லை…. என்ன என்று யோசித்து விட்டு…, என்ன சொல்ற புரியிற மாதிரி சொல்லு என்று சொல்லிக் கொண்டிருந்தான்…. அவன் அருகில் சேர் இழுத்துப் போட்டு அமர்ந்து., தட்டையும் சேர்த்து அவன் அருகில் இழுத்து வைத்தவள்., மெதுவாக அவன் கையை எடுத்து தன் வயிற்றின் மேல் வைத்துக்கொண்டாள்…

         சற்று நேரம் சென்று  புரிய நிஜமாவா….

என்றான் மகிழ்ச்சியாக….

         அப்படித்தான் நினைக்கிறேன் போய் கன்பார்ம் பண்ணனும்….

         பின்னே எப்படி சொல்லுற….,

       இல்லை கண்டிப்பா இது அப்படித்தான் எனக்கு தோணுது., என்று சொல்லவும்

        சரி  டாக்டர் ட்ட போவோம் என அழைத்தான்….

        இல்ல நீங்க  அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிக்கோங்க…, அப்புறமா போகலாம் என்று சொல்லிவிட்டு அவனை அலுவலகத்திற்கு கிளம்ப செய்தால்…,

    அங்கெல்லாம் உடனே அப்பாயின்மென்ட் கிடைக்காது.., எனவே அவன் வாங்கி விட்டு மறுநாள் அழைத்து சென்றான்…..

    அவளுக்கு சந்தேகம் என்றவுடன் அம்மாவிடம் சொல்வோமா.., வீட்டில் சொல்வோமா.., என்று கேட்கவும்… இவள் வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்..,

       டாக்டரிடம் போய் வந்து விட்டு கன்பார்ம் என்று சொன்ன பிறகே சொல்ல வேண்டும் என்று சொல்லி விட்டாள்….  அதுபோலவே டாக்டரிடம் சென்று கன்ஃபார்ம் என்று தெரிந்த பிறகு வீட்டில் அனைவருடனும் பகிர்ந்து கொண்டாள்…, காமாட்சிக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை…, எப்போது வருவீர்கள் என்று கேட்டுக்கொண்டே இருந்தாள்…..

அதன் பிறகு ஒரு மாதம் மட்டுமே இருக்க வேண்டியது இருந்ததால்… எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு சரியாக இங்கே அனைத்து தொழில்களையும் இதற்கு முன் பார்த்தவர் வசம் ஒப்படைத்து விட்டு…, வந்தால் தங்குமிடமாக இந்த வீட்டை மட்டும் எப்போதும் பர்னிச்சர் இருப்பதுபோல் வைத்துவிட்டு அவர்கள் இந்தியாவிற்கு கிளம்பி வந்தனர்….

      இந்தியாவிற்கு வந்த பிறகு காமாட்சி மருமகளை கையில் வைத்து தாங்குவது  எப்படி என்பதை காட்டினார்…

அவ்வளவு பக்குவமாக பார்ப்பதும்., சமைத்துக் கொடுப்பது.,  கண்ணின் மணியாக மருமகளை பார்த்துக்கொண்டார்.

            பரசுராம் அதேபோல்தான் தங்கள் வீட்டின் வாரிசு வருகிறது… என்பதை விட தங்கள் வீட்டிற்கு இன்னொரு புது உறவு  சந்தோஷம் என்று மட்டுமே எண்ணினார்…

    சித்தார்த்த எப்போதும் போல் அவன் அம்மாவிடம் வம்பு வளர்த்துக் கொண்டிருந்தான்.

             அம்மா  டீல்  முடிஞ்சுச்சு என் பொண்டாட்டியை என்கிட்ட விடு என்று கேட்டுக் கொண்டிருந்தான்…

                காமாட்சியோ பதிலுக்கு பேரனோ ,பேத்தியோ பிறந்து  என் கைக்கு வரட்டும், அதுக்கப்புறம் தான் உன் பொண்டாட்டி உனக்கு அது வரைக்கும் என் மருமக எனக்கு தான் என்று அவனிடம் போட்டி போட்டுக்கொண்டு இருந்தாள்….

    அம்மா இதெல்லாம் போங்கு ஆட்டம்..,

எது டா.. எல்லாம் சரி தான்…  பிறந்த பிள்ளையும் உன் பொண்டாட்டி கிட்ட இருக்கிற வரைக்கும் அவ என்கூடதான் இருக்கணும்…. பிள்ளையோட முழு பொறுப்பும்  என்னைக்கு என் கிட்ட வருதோ.,   அன்னைக்கு தான் உன் பொண்டாட்டி உனக்கு…, என்று சொல்லவும்.

       இதெல்லாம் சரியே கிடையாது…,   நீங்க என்ன சொன்னீங்க…, பேரனோ., பேத்தியோ.,  வந்த பிறகு உன் பொண்டாட்டி உனக்கு ன்னு, சொன்னீங்க இல்ல , என்று சொல்லவும்…

         அதெல்லாம் கிடையாது நான் தரவே முடியாது…. என்று அவர் பதிலுக்கு வம்பு வளர்த்துக் கொண்டிருந்தார்….

            அம்மா., குழந்தை பிறந்த உடனே  அங்க வைச்சே குழந்தைய உங்க கிட்ட தந்துருவேன்…. நீங்க மித்ரா வ எங்கிட்ட தந்திறனும்.,  இந்த டீல் உங்களுக்கு ஒகே வா…. என்று கேட்டு கொண்டிருந்தான்…

       அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டே சித்தார்த் வாக்கு வாதம் செய்து கொண்டிருந்தான்…

        அவன் தலையை தடவி விட்டு கொண்டே பதில் அளித்தார்… காமாட்சி…

         இவளோ பரசுராமனை மாமா இங்க வாங்க ரெண்டு பேரும் சண்டை போடுறாங்க…. என்னன்னு வந்து கேளுங்க என்று சொல்லி கொண்டு இருந்தாள்……

       பரசுராமோ., மருமகளே இவங்க இரண்டு பேரையும் கணக்குல சேர்க்காத., எப்ப வேண்டும் என்றாலும் இரண்டு பேரும் சேர்ந்து நம்மை கவுத்து விடுவாங்க…. என்றார் குடும்ப சந்தோஷத்தை கண் நிறைய கண்ட படி….

    மித்ராவின் குடும்பத்தினருக்கும் மிகுந்த சந்தோஷம்., நல்ல மாமியார் கிடைத்திருக்கிறார்., மகளை தங்கமாக பார்த்துக் கொள்கிறார் என்ற எண்ணமே அவர்களுக்கு நிம்மதியை அளித்தது…

    பரசுராம் சொன்னதுபோலவே மித்ராவின் ஏழாவது மாதம் ஊர்கூடி வளைகாப்பு மிகச் சிறப்பாக நடத்தினார்….

       எல்லா வீட்டிலும் பெண்ணின் கணவன் டெலிவரிக்கு அனுப்ப மறுத்தால் இங்கு காமாட்சி அனுப்பவே முடியாது என்று சொல்லிவிட்டார்… மித்ராவின் அம்மாவிடம் இங்க பாரு அமரா நீ வந்து டெலிவரி நேரத்தில் கூட இருந்து உன் மகளை பார்த்துக்கோ.,  வேண்டாம்னு சொல்லலை.,  ஆனா டெலிவரி விஷயம் பொருத்த வரை நான் தான் பார்ப்பேன் என் மருமகளுக்கு…,

         என் பேரப்பிள்ளை., என்கிட்ட தான் வளரவேண்டும் என்று மிகவும் ஆசையோடு சொல்லவும்., சித்தார்த் தான் அம்மா அவர்களுக்கும் பேரப் பிள்ளை தானே.., என்று சொல்லவும்.,

         அதுக்கு என்னடா அடுத்து இன்னொரு டீல் போட்டுக்கோ., உன்  மாமியார் கூட .,  இன்னொரு பிள்ளையை பெத்து உன் மாமியார் கையில் கொடுங்க., அது வரைக்கும்  உன் பொண்டாட்டிய உன் மாமியார் கையில் ஒப்படைத்து விடு என்று சொல்லவும்..,

         அம்மா  இந்த ஆட்டத்துக்கு வரலை.., இதெல்லாம் சரி கிடையாது என்று  அவன் சொல்லிக் கொண்டிருக்க….,

           என்ன டீல் என்று அமராவதி கேட்க சித்தார்த்தின் அம்மா பழைய விஷயங்களை சொல்ல சிரித்துக் கொண்டே., அப்ப சரி நானும் சொல்றேன் இன்னொரு பேரப் பிள்ளை பெற்றுக் கொடுத்தது க்கு அப்புறம் என் பொண்ண கூட்டிட்டு போங்க என்று சொல்லவும்…

       அதெல்லாம் கிடையவே கிடையாது என் பொண்டாட்டி ஆளாளுக்கு உரிமை கொண்டாடுறீங்க., நான் தரமாட்டேன் என்று சிரித்துக்கொண்டே சொல்லிக் கொண்டிருந்தான்…..

        பரசுராம் அதை பார்த்து மகிழ்ச்சியோடு பார்த்துக் கொண்டிருந்தார்…,

  அதன் பிறகு அவளுடன் கிடைத்த தனிமையான நேரத்தில்… மித்து என்றான் சிரிப்போடு…

     என்ன… அவ்வளவு சிரிப்பு…

      சிரிக்காம… பின்னே… இரண்டு பேரும் உன்னை உரிமை கொண்டாடுறாங்களே…

நான் இல்லாமல் பேரப் பிள்ளை எப்படி என்று மேற்கொண்டு சில விஷயங்களை அவன் பேச., வாயை மூடுங்க., உங்க பேச்சை என்ன பண்ண., குழந்தை பக்கத்தில் இருக்கும் போது இப்படி பேச கூடாது….

      இப்ப  குழந்தை வயிற்றில் தானே இருக்கு…

      ஆனாலும் பேசுறது கேட்கும்… அதனால் பேசக்கூடாது….

       ஒகே… ஒகே..  பேசலை போதுமா…

           டாக்டர் கொடுத்த நேரத்தில் சித்தார்த்தின் மகள் அழகு தேவதையாக அவ்வீட்டிற்கு பிறந்து வந்தாள்…  மகிழ்ச்சியுடனும்.,  சந்தோஷத்துடனும்., வரவேற்றனர்…

ஒருவருக்கு ஒருவர் புரிந்து கொண்டு., ஒருவருக்காக ஒருவர் விட்டு கொடுத்து., வாழும் இடங்களில் கண்டிப்பாக மகிழ்ச்சியும் , நிம்மதியும் ,சந்தோஷமும், தங்கும்… அவ்வகையில் சித்தார்த் மித்ரா குடும்பத்தினரும் அதே சந்தோஷம் மகிழ்ச்சி., நிம்மதியை அடைந்தனர்… புரிந்து கொள்ளும்  உறவு கிடைப்பது பெரிய கொடுப்பினை… உறவுகளை புரிந்துகொண்டு உறவுகளோடு கைகோர்த்து வாழ்வோம்….

3 வருடத்திற்கு பிறகு

 

சித்தார்த்துக்கும்.,  சித்தார்த்தின் அம்மாவிற்கும் விவாதம் நடந்துகொண்டிருந்தது… மித்ரா எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து அவள் பெண்  சிவானிக்கு சாப்பாடு ஊட்டி கொண்டிருந்தாள்…

    குட்டி பெண்ணும் மித்ராவின் மடியில் ஏறி அமர முயற்சிக்கவும்…. பரசுராம் வந்து குட்டிம்மா.,  தாத்தா ட்ட வந்து உட்காரு.,

  தன் பேத்தியை தன்னிடம் அழைத்து மடியில்  வைத்துக்கொண்டவர்.,   மருமகளிடம் இருந்து உணவையும் வாங்கி தானே ஊட்டத் தொடங்கினார்…

      என்னமா இன்னும் ரெண்டு பேருக்கும் சண்டை போட்டு முடியலையா., என்று கேட்கவும்…

        ஐயோ மாமா நான் தலையிடமாட்டேன்., நீங்களாட்சி… அவங்களாட்சி…. பார்த்துக்கோங்க., என்று சொல்லவும்…

   ரெண்டு பேருக்கும் எப்ப பாத்தாலும் பேத்தி ஸ்கூலுக்கு போவது அவசியம்தானா என்று பட்டிமன்றமே நடக்குது….  நீங்களே போய் பேசுங்க  மாமா நான் போகமாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருந்தாள்….

    பேத்திக்கு உணவை ஊட்டி முடித்தவர் அவளுக்கு தண்ணி கொடுத்து அவள் வாயைத் துடைத்துவிட்டு., அவளையும் தூக்கிக்கொண்டு காமாட்சியும் சித்தார்த்தும் பேசிக் கொண்டிருந்த இடத்திற்கு சென்றார்..,  என்ன ரெண்டு பேருக்கும் இன்னும் பேச்சு முடியலையா எப்ப பார்த்தாலும் ரெண்டு பேருக்கும் பேத்தி விஷயத்தில் வாக்கு வாதம் தானா என்று கேட்கவும்…

       இங்க பாருங்க நான் சொல்றதை தான் நீங்க கேக்கணும்.., அவன் பிள்ளைக்கு மூன்று வயசு கூட முடியல…,  கொண்டுபோய் ஸ்கூல்ல விடனும் சொல்றான்…, இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்ல பிள்ளை  நாலு வயசு தாண்டி அதுக்கப்புறம் ஸ்கூலுக்கு அனுப்பி வைக்கலாம்… இப்பவே ஸ்கூலுக்கு அனுப்பி என்ன செய்ய போறான்….  இருக்கிற சொத்தை கட்டி ஆளுற  அளவுக்கு என் பேத்தி படிச்சா போதும்…. இப்பவே  படிக்க வைத்து  என்ன செய்ய போறான்….. ஸ்கூலுக்கு அனுப்பி எம் பேத்திய என்ட இருந்து பிரிக்க பார்க்கான்…

      இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே சித்தார்த் ன் மகள் அவன் கைக்கு மாறியிருந்தாள்…

   அப்பா அது தான் சொல்றேன் பாப்பாக்கு ஸ்கூல் அட்மிஷன் போட்டுட்டு….. உங்களுக்கும் சேர்த்து  அட்மிஷன் வாங்கி தரவா… நீங்களும் சேர்ந்து பாப்பா கூட போய் உட்கார்ந்து படிங்க ன்னு சொன்னா… கேட்க மாட்டேன் ங்காங்க…,  பேத்தியும் ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டார்கள்…  என்னப்பா நீங்களாவது சொல்லுங்களேன் என்று சொல்லிக் கொண்டிருந்தான்…..

   விடுடா கொஞ்சம் லேட்டா தான் சேரட்டுமே..  இப்பவே சேர்த்து என்ன பண்ண போற… மூன்றரை வயசுல கொண்டுபோய் சேர்க்கலாம்… என்று சொல்லி பரசுராம் சத்தம் போடவும்…  போங்கப்பா நீங்களும் சரி இல்லை.. அவளாவது வாயை திறக்காளா பாருங்க…    அவன் சத்தம் போடவும்…

     எனக்கு தெரியாது அம்மாவும் பையனும் என்னமோ பண்ணுங்க….

அப்பாவும் பொண்ணும் என்னமோ பண்ணுங்க….  அப்பாவும் பொண்ணும் சேர்ந்து ஸ்கூலுக்கு போனாலும் சரி….  இல்லை பாட்டியும் பேத்தியும் சேர்ந்து ஸ்கூலுக்கு போனாலும் சரி….. இல்ல நீங்க குடும்பமா சேர்ந்து ஸ்கூலுக்கு போனாலும் சரி என்ன ஆள விடுங்க….. நானும் என் வயிற்றுக்குள் இருக்குற குழந்தையும் நிம்மதியா இருக்கிறோம் என்று சொல்லிக்கொண்டிருந்தாள்…

   ஆம் இது மித்ராவிற்கு இரண்டாவது குழந்தை…, வயிற்றில் 6 மாதம் முடிந்து ஏழாம் மாதம் நடந்து கொண்டிருக்கிறது… எப்போதும் போல் காமாட்சிக்கும் இவளுக்கும் நன்றாக ஒத்துப் போய் விடும்..,  சித்தார்த் பிள்ளை விஷயத்தில் ஏதாவது செய்தால் மட்டும் காமாட்சிக்கு பிடிக்காது…  தன் பேத்தியை சிறிய விஷயத்தில் கூட கஷ்டப்படுத்துவது பிடிக்காது…..  ஒரு வழியாக ஆறு மாதம் கழித்து மித்ராவை பள்ளியில் சேர்ப்பது என்று முடிவு செய்து கொண்டனர் அதன் பிறகே வீட்டில் அமைதி திரும்பியது…

     அவனுக்கு உணவு பறுமாறிக்கொண்டே மித்ரா., சித்தார்த் திடம் கேட்கவும்….

     ஸ்கூல் திறக்க டைம் இருக்கு மித்து., ஆனால் இப்போ இந்த பேச்சை ஆரம்பித்து வைத்தால் தான்… குட்டி ஸ்கூல் போக சரியாக இருக்கும்…. அந்த டைம் ல சொன்னா அம்மா ரொம்ப டென்ஷன் ஆவாங்க….

       சரியான கேடி….

       அத என்னை பார்த்து சொல்லு…

        உங்கள….  அதே நேரத்தில் சிவானியோ ப்பா… என்ற மழலை அழைப்போடு இவனை தேடி வர தூக்கி மடியில் வைத்துக்கொண்டான்….

அடுத்த குழந்தையை பற்றி… பேரனோ பேத்தியோ என்று பேசும்போது காமாட்சியும் பரசுராமன் சொன்ன ஒரே வார்த்தை எந்தக் குழந்தையாக இருந்தாலும் அதுதான் இவ்வீட்டில் வாரிசு பையன் பெண் என்ற  பாகுபாடே கிடையாது…..

     பெண்ணாக இருந்தாலும் என் பேத்திகள் தொழிலை எடுத்து நடத்துவார்கள்… என்று  கூறினார்… பரசுராம் பையனாக இருந்தாலும் பேத்திக்கும் சேர்த்து தொழிலை கற்றுக் கொடுப்பேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார்….

அன்பில் வளரும் குழந்தை., அழகாய் ஆட்சி செய்யும் வாழ்க்கையை….  குழந்தைகளுக்கு அன்பை பகிர்ந்து அளியுங்கள்….  புரிந்து கொள்ளுதலையும்., விட்டுக் கொடுத்தலையும்., சொல்லிக்கொடுங்கள் வளரும் தலைமுறை நன்றாய் வாழ வழி வகுத்துக் கொடுங்கள்…

 

அன்பைத் தேடும்

ஒவ்வொரு நொடிகளிலும்

உன் முகம் மட்டுமே

நினைவுக்கு வருகிறது

நீ தான் அன்பின்

மொத்தம்  என்றால்

இன்னுமொரு ஜென்மத்திலும்

நீயே என்னோடு வரவேண்டும்

உன்னை தேடிக்கொண்டு

உன்னுள்ளே தொலைவதில்

மகிழ்ச்சிதான்…..”

Advertisement