Advertisement

அன்றைய விருந்து, அதன் பின் நடந்த சில சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு,  கோயம்புத்தூருக்கு ஜெகதீசன் திருமணத்திற்கும் சென்று வந்தனர்… திருமணத்திற்கு போயிட்டு திரும்பி வரும்போது சித்தார்த் மித்ரா விடம் வம்பு வளர்த்துக் கொண்டிருந்தான்…  என்ன பத்தி ஒன்னுமே சொல்ல மாட்டேங்கறியே…, நீ என்ன நெனச்சிருந்த, நான் எப்படி இருக்கேன் என்று கேட்கவும்…

          நீங்க சரியில்லை., ஆனால்  இப்படி நினைக்கவே இல்ல உங்கள….  நீங்க ரொம்ப மோசம் என்று சொல்லவும்….

      சரி அப்ப நல்ல பையனா எப்படி  மாறுனும்… என்று சொல்லி குடு.., என்னென்ன விஷயத்தில் மாறணும்னு சொல்லிக் கொடு.., என்று அவன் நிறைய வெளிப்படையாக பேசிக்கொண்டே செல்லவும்…, அவள் காதில் இருந்து ரத்தம் வருவதற்கு பதிலாக வேறு ஏதாவது வந்துவிடுமோ என்னும் அளவிற்கு பேச தொடங்கினான்…,

         ப்ளீஸ் பேசாதீங்க…, ஐயோ நீங்க ஓவரா பேசுறீங்க….  என்று சத்தம் கொடுத்துக் கொண்டே வந்தாள்….

    உன்கிட்ட மட்டும் தான்  இப்படி எல்லாம் பேச முடியும்…. நீ  ஐயோ ன்னு சொன்னா.,  நான் எங்க போய் பேசுவேன் என்று கேட்கவும்…,

            ஓஹோ அதுக்கு வேற இடம் பாப்பீங்களா… கொன்னுடுவேன் பேசுங்க எதுனாலும் என் கிட்டே பேசனும் என்று சொன்னதோடு..,  அவன் பேசுவதற்கு எல்லாம் அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே இருக்கத் தொடங்கினாள்…,

        ஊருக்கு கிளம்புவதற்கு முதல் நாள், அவளை கொண்டு அவளுடைய அம்மா வீட்டில் விட்டு விட்டு , அவன் அப்பாவின் அலுவலகம் வரை சென்று விட்டு வருகிறேன்,  என்று சொல்லி விட்டு சென்றான்…

          ஆஸ்திரேலியா கிளம்புவதை பற்றி.., தாத்தா கேள்வி கேட்க… இவள் சில விஷயங்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தாள்…. அன்று இவள்  வருகிறாள் என்று தெரிந்து அனைவருமே வேலைக்கு விடுப்பு எடுத்து விட்டு வீட்டில் இருந்தனர்…. அப்போது தான் ஆறு மாசத்துல திரும்பி வந்து விடுவோம் என்பதை சொல்லிக் கொண்டிருந்தாள்…

         பாட்டியும் ஆமாமா வந்திருங்க… அதுதான் நல்லது… இங்க இருந்தா தான் எல்லாத்துக்கும் எங்களுக்கு வசதியா இருக்கும்…   நாங்களும் பார்க்க வர முடியும்..,  சரி என்று சொல்லிக்கொண்டு இருந்தாள்…. மகி தான்  நீ இல்லாம எனக்கு தான் போரடிக்கும் டெய்லி போன் பண்ணிரு என்று சொல்லிக் கொண்டிருந்தான்…. அவளும் கண்டிப்பாக உன் கிட்ட பேசாம எனக்கும் முடியாது என்று சொல்லி அவன் கையை பிடித்துக் கொண்டிருந்தாள்….. மதிய உணவிற்கு சித்தார்த் வீட்டிற்கு வந்தான்…. அங்கு உணவருந்தி விட்டு அவர்கள் சற்று நேரம் பேசிக் கொண்டிருக்கும்போது., சித்தார்த்திற்கு ஒரு அழைப்பு வந்தது…, சரி என்று பேசிவிட்டு மகி என் கூட வா என்று அழைத்துக் கொண்டு வெளியே சென்றான்… வெளியே ஒருவர் புது பைக் ஒன்றின் சாவியை கையில் வைத்திருந்தார்.. அவரிடம் இருந்து சாவியை வாங்கி மித்ரா கையில் கொடுத்தான்… கொடு அவன்கிட்ட என்று சொல்லவும்., அவள் யோசித்துக் கொண்டே அவன் முகத்தைப் பார்க்கக்கவும்…,  கொடுக்க சொன்னேன் என்று சொல்லவும்..,  அவள் கையில் கொடுக்கவும் முதலில் வாங்க மறுத்தான் இல்ல வேண்டாம் என்று சொல்லவும்… சித்தார்த் சத்தம் போட்டான்.,  ஏன் உங்க அக்கா வாங்கி கொடுத்தா வாங்க மாட்டீயா…  என்று கேட்கவும்…,  இல்லத்தான் வேண்டாம் இருக்கட்டும் என்று சொல்லவும்….  அதெல்லாம் நாங்க வட்டியோட வசூல் பண்ணிருவோம்.,  எங்க பிள்ளைகளுக்கு நீதான் தாய்மாமா கட்டு செய்யணும்.., அப்போ மொத்தமா உன்கிட்ட இருந்து வசூல் பண்ணிட்டு விட்டுர்றோம்.,  அதனால இப்ப வாங்கிக்கோன்னு என்று சொல்லி., உங்க அக்கா கொடுக்கிற முதல் கிப்ட் அதனால வாங்கிக்கோ.., வேண்டான்னு சொல்ல கூடாது…, என்று சொல்லி கட்டாயப் படுத்தி அவனை வாங்க வைத்தான்… அவனுக்காக புது பைக் ஒன்றை வாங்கி கொடுத்திருந்தான்….

   பின்பு வீட்டிற்கு  அவனோடு காரில் செல்லும்போது கேட்டுக்கொண்டே வந்தாள்…

      அத்தை மாமா ட்ட சொல்லிட்டீங்களா என்று கேட்கவும்….

       அதெல்லாம் சொல்லியாச்சு., உனக்கு ஒரு சர்ப்ரைஸ் அ இருக்கட்டுமேன்னு கொடுத்தா திரு திருன்னு முழிக்கிற…. எனக்கு தெரியாது என்கிற மாதிரி காட்டிக் கொடுக்கிற…. வாங்கி நல்ல புள்ளையா தம்பிய வாங்க சொல்லி கட்டாயப் படுத்தி கொடுக்கணும்…. அதுதான் நல்ல புள்ளைக்கு அடையாளம் திருதிருன்னு முழிச்ச ன்னா., யாரோ மாதிரி ஃபீல் பண்ண வைக்கிறே என்னை…  எனக்கு தம்பி கிடையாது ., உனக்கு  தம்பி ன்னா எனக்கும் தம்பி தான் சரியா…, எனக்கு கூடப் பிறந்தவர்கள் என யாரும் கிடையாது… ஒரே பிள்ளை அப்படிங்கும் போது எனக்கு இந்த மாதிரி உன் வீட்டு சொந்தம் தான்..,  எனக்கும் சொந்தம் புரியுதா.., எனக்கு சித்தி பசங்க கூட பெரியப்பா பசங்க அந்த மாதிரிலாம் உறவுகள் இருந்தாலும்…, அவங்க எல்லாம் ரொம்ப க்ளோஸ் கிடையாது..,  ஏன்னா எங்க அப்பா வந்து முன்னேறி மேல வந்தது நிறைய பேருக்கு பிடிக்கல…, அதனால நாங்க எல்லாருமே ஒரு டிஸ்டன்ஸ் மெயிண்டெயின் பண்ண தான் செய்வோம்…, அதுக்காக உங்க வீட்ல உள்ளவங்க கிட்டையும் அப்படி இருப்போம் நினைக்கிறாயா…  அப்படி எல்லாம் இருக்க முடியாது….  ஒழுங்கா வீட்ல ஒருத்தவங்க மாதிரி இருக்கனும் புரிஞ்சிச்சா…,  நீயும் அந்த வீட்ல ஒருத்தி நீ … அந்த வீட்டிலிருந்து வந்திருக்கும் போது.., உங்க வீட்டிலுள்ள எல்லாரும் எங்களுக்கும் சொந்தம் தான்..,  அதை புரிஞ்சுக்கோ.., சரியா இப்படி திருதிருன்னு முழிச்சி கஷ்டப்படுத்தாத இன்னொரு தடவை எதுவும்  கொடுக்க சொன்னா.,என்று சொல்லவும் சிரித்துக் கொண்டே தலையை  ஆட்டினாள்….

      என்ன சிரிப்பு வித்தியாசமா இருக்கு..,

        இல்லை யோசிச்சேன்….

       தாயே…  நீ தயவு செய்து யோசிக்காத நீ யோசிச்சாலே ஏதாவது வில்லங்கம் தான்..,   அதனால யோசிக்கிறத நிறுத்து என்று சொல்லிக் கொண்டிருந்தான்……

   அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கவும்., ஏன் அப்படி பார்க்கிற…

          இல்ல…  உங்களுக்கு ஒரு உம்மா கொடுக்கலாம்னு நினைச்சேன்.., அவ்வளவுதான்…

        வீட்டுக்கு வந்து மொத்தமாக குடும்மா.., உம்மா மட்டுமில்லாமல் எல்லாம் கொடு என்று அவன் கேட்க…

       உன் கிட்ட போயி பேசினேன் பாரு…. என்று சொல்லி கொண்டு திரும்பவும் …

    அஞ்சு நாளா டிரெய்னிங் கொடுக்குறேன்.. நீ சரியா வரலையே.., உனக்கு இன்னும் ட்ரைனிங் பத்தாது என்று சொல்லவும்..,

          ஐயோ சாமி போதும்.., நீங்க ஓவரா பேசுறீங்க நிறுத்துங்க., என்று சொல்லிவிட்டு காதிலிருந்து இரத்தம் சிவப்பு கலரில் வருவதுக்கு  பதிலா பச்சை கலர்ல வந்துரும்….  நீங்க அந்த அளவுக்கு பேசுறீங்க என்று சொல்லவும்…

        ஓகே… ஓகே.. பேசல.. பேசல… நாம மட்டும் தனியா இருக்கும் போது பேசலாம்., என்று சொல்லி அவளை மேலும் சிவக்க வைத்தான்….

    மறுநாள் கிளம்பி ஆஸ்திரேலியா செல்ல… அனைவரும் ஏர்போர்ட்டில் வந்து அவர்களை வழியனுப்பி வைத்து விட்டு வந்தனர்….  அம்மாவை  குடும்பத்தை விட்டுப் பிரிய  எவ்வளவு வருந்தினாலும்… அதைவிட அதிகமாக காமாட்சியை விட்டு பிரிவதற்கு அவளுக்கு வருத்தமாக இருந்தது….  காமாட்சியோ தினமும் போன் செய்ய வேண்டும்., வீடியோ காலில் வர வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருந்தார்…  அது மட்டுமல்லாமல் ஆறு மாசத்தில் வந்துவிடவேண்டும்.., பேரனோ பேத்தியோ உடனே வேண்டும் என்று ஏர்போர்ட்டில் வைத்து அனைவருக்கும் கேட்கும் விதமாகவே சொன்னார்….

   சிந்தார்த்தோ அம்மா என்று சத்தம் போடவும்…. போடா போ எனக்கு டீல் க்கு   சரின்னு சொல்லி இருக்க…. அதனால டீல் ஓகே ஆனா மட்டும் தான்..,   உன் பொண்டாட்டி உனக்கு…, இல்லாடி என் மருமகள  நானே வச்சுக்குவேன் பார்த்துக்கோ…,  என்று மிரட்டவும் தயங்கவில்லை…

திரும்பத் திரும்ப

தொலைந்து போகிறேன்…

என்னுள் தொலைந்த உன்னுள்.,

உன்னுள் தொலைந்த

என்னை தேடி….

தேடலின் முடிவில்

ஒவ்வொரு முறையும்.,

மறுபடியும் தொலைந்து

தான் போகிறேன்…,

உனக்குள் மொத்தமாய்…”

Advertisement