Advertisement

அத்தியாயம் 15

 

          என்ன நடக்குது இங்க மாமியாரும் மருமகளும் கொஞ்சிகிட்டு இருக்கீங்க…. இதெல்லாம் சரி இல்ல ம்மா…  நீங்க எனக்கு போட்டிக்கு  வாறீங்க…..

     அதுதாண்டா…. நானும் சொல்றேன் நான் ஒரு விஷயத்தை சொல்லி இருக்கேன்.,  மருமக கிட்ட.., அது முடிஞ்சதும் நான் போட்டி போட மாட்டேன்…, நான் ஒதுங்கிக்கிறேன்.,  அதுக்கப்புறம் நீயாச்சு உன் பொண்டாட்டி ஆச்சு, ஆனா நான்  சொன்ன டீலுக்கு ஓகே னா மட்டும் தான்….  என்று சொல்லவும்.,

             அவன் என்னவென்று தெரியாமல் டீலுக்கு நானும் ஓகே அம்மா என்று சொல்லவும்., மித்ராவும் காமாட்சியும் அடக்க முடியாமல் சிரித்து விட்டனர்…

          டேய் நான் என்ன சொன்னேன் என்று தெரியாமல்  ஓகேங்க…,

        அது என்ன இருந்தாலும் ஓகே மா…, என் பொண்டாட்டி ய என் கிட்டே விட்டுடு என்று கேட்டுக் கொண்டிருந்தான்….

          மித்ராவும் மனதிற்குள் சிரித்துக் கொண்டே….,  அவங்க ஆறு மாசம் ஹனிமூன் சொன்னாங்க., அத்தை சொல்லுறதுக்கும்  ஓகே சொல்லி இருக்காங்க…, அத்தையோ பேரன் பேத்தி கேட்டாங்க…., இவங்க என்ன விஷயம் தெரியாமல் ஓகே., ஓகே ன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க…, என்று நினைக்க..,  இவர்கள் மூவரும் சிரிப்பதை பார்த்து பரசுராமனும் வந்து என்ன விஷயம் என்று கேட்கவும்.,  அப்பா அம்மா என்கிட்ட ஒரு டீல் போட்டு இருக்காங்க…, ஆனால் என்ன விஷயம் அதெல்லாம் எனக்கு தெரியாது….,  ஏதோ சொல்லி இருக்காங்க..,  அந்த டீல் ஓகே னா.., அம்மா எனக்கு என் பொண்டாட்டி ய விட்டுக் கொடுத்துடுவேன் ன்னு  சொல்லியிருக்காங்க..,

    இரண்டு பேரும் சேர்ந்து கதை பேசுறாங்க ப்பா., என்னை பக்கத்திலேயே வரக்கூடாது ன்னு சொல்லுறாங்க., என்ன ன்னு கேளுங்க…,

           பரசுராமோ., என்ன டா மகனே என்ன நடக்குதுடா இங்கே என்று கேட்டார்….

           அதுதான் எனக்கும் தெரியல..,   எனக்கு கல்யாணம் பண்றேன்னு, சொல்லிட்டு அவங்க பேச்சுத் துணைக்கு ஆள் கூட்டிட்டு வந்திருக்காங்க ன்னு சொல்றாங்கப்பா… என்ன நியாயம் ன்னு கேளுங்கப்பா என்று கேட்டுக் கொண்டிருந்தான்…,

         அங்கு ஒரு சந்தோஷமான குடும்ப சூழ்நிலை இருப்பதை அன்று அனைவருமே உணர்ந்தனர்…, பரசுராம் மனதளவில் மிக சந்தோஷமாக உணர்ந்தார்., காமாட்சியும் அதை நினைத்துக் கொண்டே அவரை பார்க்க., அவரும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தார்…, இருவரும் கண்களாலே தங்கள் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டனர்…,

            அவர்களுக்கான தனிமை நேரம் கொடுப்பதற்கு முன் காமாட்சி மித்ராவை அழைத்து கொண்டு மாடிக்கு சென்றார்…

            சித்தார்த்தின் அறையை காட்டிக் கொடுத்து விட்டு.,மாடியில் உள்ள ஹாலில் அமர்ந்து மித்ராவிடம் கதை பேச தொடங்கினார்….,  சற்று நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு நான் கீழே சென்று விடுவேன், என்று சொல்லி விட்டு அவளிடம் பேச தொடங்கினார்…

       கீழே சித்தார்த் , அவன் தந்தை மற்றும் நண்பர்கள் , உறவினர் சிலரோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான்…. பெண்கள் வேறு யாரும்  அன்றைய தினம் இல்லாததால் மித்ராவிடம் .,  காமாட்சி மட்டும் பேசிக் கொண்டிருந்தார்.,

         மித்ரா எல்லா மாமியாரும் எப்படி சொல்வாங்க ன்னு தெரியாது… ஆனால் நான் சொல்கிறேன்., நீ என் மகனை முந்தானையில் முடிந்து வச்சுக்கோ என்று சொன்னார்…

               அவள் சிரிக்கவும்., எதற்கு சிரிக்கிற என்று கேட்கவும்., உங்க பையன முடிஞ்சி வைக்க முடியாது அத்தை என்று சொல்லவும்….,

             சொல்றத கேளு, ஒழுங்கா பிடித்து வைத்துக்கோ, அவனை என்று சொல்லிவிட்டு அவள் நெற்றியில் ஒரு முத்தமிட்டு சீக்கிரம் பேரனோ பேத்தியோ பெற்றுக்கொடுத்து விடு., என்று சொல்லிவிட்டு, அவளை தோளில் கைப்போட்டு சேர்த்து பிடித்து கொண்டு.., என் பையன் உன்மேல எந்த அளவு ஆசை வைத்திருந்தான் ன்னு.,  ஒரு அம்மாவா எனக்கு நல்லாவே தெரியும்.., அவனை நல்லபடியா பார்த்துக்கோ என்று சொல்லிவிட்டு கீழே இறங்கி சென்று விட்டார்…,

      இவள் அங்குள்ள சோபாவிலே அமர்ந்து அதைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தாள்…, இப்படி ஒரு மாமியாரா பையன முந்தானையில் முடிந்து வைத்துக்கோ ன்னு சொல்ற, அம்மாவை முதன் முதலில் இங்குதான் பார்க்கிறேன் என்று நினைத்துக் கொண்டாள்….

    காமாட்சியோ கீழே இறங்கி செல்லும் போது வீட்டின் மருமகளாக அல்ல இவள் என் மகள் ஆகவே இருக்க வேண்டும்..,  என் பிள்ளைகளை நல்லபடியாக வை என்று கடவுளிடம் பிரார்த்தனையோடு கீழே இறங்கி சென்றார்…,

     அவர் கீழே இறங்கி வந்ததை பார்த்த உடன் அனைவரும் கலைந்து சென்றனர்…,  சித்தார்த்திடம் இனிமேல் உனக்கு  பொறுப்பு வரணும்…  என் மருமகளா நல்லபடியா பார்த்துக்கோ என்று  சொல்லி அனுப்பினார் சித்தார்த்த்தின் அம்மா …

   அவள் ஹாலில் அமர்ந்து இருப்பதை பார்த்து சித்தார்த்தும் ஹாலில் அமர்ந்தான்..,  அமர்ந்து சற்று நேரம் அவளிடம் பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்று அருகில் அமர்ந்து கையை கோர்த்துக்கொண்டு., சொல்லு மாமியார் மருமகள் என்ன பிளான் போட்டீங்க   என்று கேட்கவும்…, ஒண்ணுமே இல்லையே என்று சொன்னாள்.,

           பொய் சொல்லாத எங்க அம்மா கண்டிப்பா சொல்லி இருப்பாங்க… என் பிள்ளையை பிடித்துவைச்சிக்கோ ன்னு சொன்னாங்களா… இல்லையா… என்று கேட்கவும்…,

       சிரித்துக்கொண்டே., நல்லம்மா நல்ல பையன் நீங்க.,  உண்மையிலேயே ஆச்சரியமா இருக்கு இப்படி ஒரு அம்மா உண்மையிலேயே நீங்க லக்கி என்று சொன்னாள்…  கண்டிப்பா எங்க மகிக்கு கல்யாணம் ஆனா கூட எங்கம்மா இந்த அளவு இருப்பாங்களா ன்னு தெரியாது…, எங்க அம்மா ஃப்ரெண்ட்லியா பேசுறவங்க தான்.., ஆனா இந்த அளவு ஃப்ரெண்ட்லியா நடந்துப்பாங்க லா ன்னு., எனக்கு தெரியல உங்க அம்மா உண்மையிலேயே சூப்பர் என்று சொல்லவும்…,

       பார்ரா மாமியார் மெச்சிய மருமகள்…  மருமகள் மெச்சுற மாமியார்.., சூப்பர் தான் போ என்ன டில்ல விட்டுடாதே, என்று சிரித்துக் கொண்டிருந்தான்….

    அவனும் மெதுவாக சிரித்துக் கொண்டே அவளை கைப்பிடித்து  அவனது அறைக்கு அழைத்து சென்றான்…..

     மறுநாள் காலைக்காக சித்தார்த்தின் அம்மா எடுத்து வைத்த சேலை அங்கிருந்த டிரெஸ்ஸிங் டேபிளில் இருந்தது.. ஏற்கனவே  சொல்லி இருந்தார்.,  காமாட்சி அந்த புடவையை கட்டிக்கொண்டு நாளைக்கு காலைல கோயில் போகனும் என்று…,  அதனால் அதை பார்த்து விட்டு திரும்பி பொண்ணு இல்ல, ன்னு  அத்தைக்கு ரொம்ப வருத்தமா என்று கேட்டாள்…

    ஆமா அம்மாக்கு ரொம்ப ஆசை.,  பெண் குழந்தை வேணும்னு , எங்க வெளியே போனாலும் மத்த பொண்ணுங்க டிரஸ் பண்ணி இருப்பதை பார்த்தால் அம்மா சொல்லுவாங்க…  ஒரு பொண்ணு இருந்தா விதவிதமாய் இப்படி டிரஸ் வாங்கி கொடுக்கலாம்., அப்பிடி டிரஸ் வாங்கி கொடுக்கலாம்., அப்படின்னு சொல்லி பேசுவாங்க… ஏன் ஊருல என்ன விசேஷம் அப்படின்னாலும் கொஞ்சம் பூ வீட்டில் இருந்தாலே அம்மா அப்படித்தான் சொல்லுவாங்க…, ஒரு பொம்பளைப் பிள்ளை இருந்தால் தலைநிறைய பூ வெச்சுட்டு கொலுசு சத்தத்தோடு வீட்டுக்குள் சுத்துறது ஒரு அழகு டா… அப்படி சொல்லி  ரொம்ப ஆசை படுவாங்க…. அம்மாவோட ஹெல்த் சரியில்ல… அதனால தான் ரெண்டாவது பேபி பிறக்காது ன்னு டாக்டர் சொல்லிட்டாங்களாம்… என்று கேட்காத  அந்த தகவலையும் சேர்த்து சொன்னான்….

    இருவரும் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருக்கும் போதே…, அவளை சேர்த்தணைத்து அவன் அப்புறம் என்று கேட்டான்.., இவளும் அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளி விட்டு., அப்புறம் என்று கிண்டலாக கேட்கவும்,, நான் உன்கிட்ட ஒன்னு சொல்லனும்னு சொல்லுவியே,  சொல்லவா என்று கேட்கவும்.,  சிரித்துக்கொண்டே எப்போ சொல்லப் போறீங்க.,  இப்ப வா என்று கேட்கவும்.,  ஆமா இப்பதான் சொல்லட்டா,என்று கேட்டுக்கொண்டே முதலில் நெற்றியில் முத்தம் வைத்து ஐலவ் யூ என்றான்….  பின்பு ஒவ்வொரு முத்தத்திற்கும் ஒவ்வொரு ஐ லவ் யூ வை., அவள் காதில் சொல்லிக்கொண்டே இருந்தான்…

    காலை நேரம் எழுந்துகொள்ள மனமில்லாமல் போர்வைக்குள் சுருண்டு கிடந்தவளை.,  சேர்த்து அணைத்துக் கொண்டு… கீழே போக வேண்டாமா என்று கேட்டான்.., அதற்கு அவள் காலையில் அத்தை கோயிலுக்கு போகனும் ன்னு சொன்னாங்க… கீழே போகனும் என்று சொல்லவும்.., கலைந்து கிடந்த அவள் தலைமுடியை கோதி நெற்றியில் முத்தமிட்டு ஐ லவ் யூ என்று சொன்னான்…. அவன் வாயை கை கொண்டு மூடி போதும் நைட் புல்லா இதை தான் சொல்லிட்டு இருந்தீங்க..,  உங்களுக்கு பனிஷ்மெண்ட்  கேட்கிற எனக்கு எதற்கு பனிஷ்மென்ட் என்று கேட்டாள்…

   ஓ இதுக்கு பேரு பனிஷ்மென்ட் ஆ மேடம்… ஐ லவ் யூ சொல்றது பனிஸ்மென்ட் னா., அப்ப மத்ததெல்லாம் என்ன பேரு வச்சிருக்க…,  என்று கேட்டுக்கொண்டே காலை நேரத்தில் அத்துமீறலை தொடங்கும் போதும்…, கோயிலுக்கு போகனும் என்று எழுந்து குளிக்க ஓடினாள்…. குளித்து அவள் காமாட்சி கொடுத்த புடவையை உடுத்திக் கொண்டு கீழே இறங்கும் முன் அவன் சொன்னான்….  கொஞ்ச நேரம் இரு நானும் வந்துவிடுகிறேன், எனவும் இல்லை நான் போறேன், நீங்க அப்புறமா வாங்க…, என்று சொல்லிவிட்டு அவன் குளிக்க சென்றவுடன்..,  அங்கு இருந்த பூக்களை சுத்தம் செய்து விட்டு  போர்வைகளை எடுத்து துவைக்க போட்டுவிட்டு., அறையை லேசாக சுத்தம் செய்து விட்டு, கீழே இறங்கி சென்றாள்… அவளது சிரித்த முகத்தை பார்த்தவுடன் காமாட்சி மகிழ்ச்சியோடு  காபி குடி என்று அழைத்து சென்றார்… காமாட்சியை நிமிர்ந்து பார்க்க முடியாமல் கொஞ்சம் முகம் சிவக்க நின்றவளை அவர் தோளோடு அணைத்துக் கொண்டார்…

   அவளை காபி குடிக்க வைத்து விட்டு.,  அவன் வந்தவுடன் காபி குடித்துவிட்டு இருவரும் கோயிலுக்கு மட்டும் போய்விட்டு வந்து விடுங்கள்.., அதன் பிறகு காலை உணவை முடித்துக் கொண்டு  உங்கள் வீட்டிற்கும் ஒருமுறை போய்விட்டு வந்து விடுங்கள் என்று முறைகளைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்…. பின் அன்று காலை செய்ய வேண்டிய சமையலை பற்றி சமையல்கார அம்மாவிடம் அவர் சொல்லிக் கொண்டிருக்க., இவள் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்…

        அதேநேரம் பரசுராம வந்துவிட அவர் காமாட்சியை தனியே அழைத்து பேசிக் கொண்டிருந்தார்…

       அன்றைய மதிய உணவு மிக நெருங்கிய  சொந்தங்களுக்கும்., மித்ராவின் வீட்டிற்கு மட்டும் பரசுராம் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது…, அந்த அசைவ உணவு விருந்து தயார் செய்ய சமையல்காரர்கள் வரவும்…, வீட்டில் வேலை பார்ப்பவர்களை விட்டு அதை கவனிக்க செய்ய சொன்னார்….

Advertisement