Advertisement

அப்போது அவன் தான் சொன்னான் சரி அப்படி என்றால் நாம் அந்த ஆறு மதத்தையும் ஹனிமூன் மாதமாக கொண்டாடி விட்டு வருவோம், என்று சொன்னான்…. அவள் திரும்பி அவனை முறைக்கவும் வேலைக்கு வேலையும் முடியும்., ஹனிமூன்னுக்கு ஹனிமூன் என்று சொல்லவும்… ஒற்றை விரலை மட்டும் காட்டி அவனை மிரட்டுவது போல செய்தாள் ஆனாலும் முகத்தில் வரும் வெட்கச் சிகப்பை அவளால் மறைக்க முடியாமல் திணறினாள்….

மித்ராவின் வீட்டினர் சொல்லிக்கொண்டு கிளம்பவும்.., மித்ராவும் சித்தார்த்தும் ஒருமுறை மித்ராவின் வீட்டுக்கு சென்றுவிட்டு உடனே சித்தார்த்தின் வீட்டிற்கு கூட்டி செல்லப்பட்டனர்… பின் வீட்டிற்கு போனவுடன் அவளுக்கு வேறு இடத்திற்கு வந்தது போல் தெரியாத அளவிற்கு சித்தார்த்தின் அம்மா அவளை நன்றாக பார்த்துக் கொண்டார்….

அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் தெரிந்தவர்களும் வந்து பார்த்து விட்டு சென்றாலும், சில உறவினர்கள் இருந்தாலும், எல்லோரும் சொல்லிக் கொண்டது காமாட்சி பொம்பள பிள்ள இல்ல ரொம்ப வருத்தப்படுவா., இப்ப மருமகள் வந்து சேர்ந்தாச்சி… கேட்கவா வேணும்., பெண் பிள்ளை இல்லாத ஏக்கத்தில் இருந்த பரசுராமனும், காமாட்சியும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்…

அப்போது பரசுராமன் தன் வாயை திறந்து சொன்னார்.. ஆமாப்பா வீட்டுக்கு வர்ற மருமக தான் மக அப்படி ன்னு நினைத்தால் எந்த வீட்டிலேயும் பிரச்சினை வராது.., எங்க வீட்டுப்பொண்ணு.., எங்களுக்கு பெண் பிள்ளை கிடையாது என்கிறத நாங்க இப்படித்தான் தீர்த்துக்கணும்… அவங்களோட பொண்ணு இப்ப எங்க பொண்ணு மாதிரி…, மாதிரி என்ன எங்க பொண்ணு தான்…. என்று சந்தோஷமாக சொல்லிக் கொண்டிருந்தார்.. அதை மற்றொரு அறையில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த மித்ராவிற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது…, இப்படி ஒரு மாமியார் மாமனார் கிடைப்பதற்கு பெண்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று.., அந்த வகையில் தனக்கு அது வாய்த்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டாள்…. இவளுடைய மற்ற பொருள்கள் உடைகள் எல்லாம் சித்தார்த்தின் அறைக்குச் என்றாலும் இவள் மட்டும் கீழே காமாட்சியுடன் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தாள்….

வீட்டிற்கு வந்த பின்பு அலங்காரங்களையெல்லாம் கலைத்துவிட்டு…, சாதாரண பருத்தி புடவையில் அமர்ந்திருந்தாள்.., மாலை வீட்டின் சமையல் ஆள் டீயோடு சிற்றுண்டியும் கொண்டு வந்து கொடுக்க அனைவரும் பேசிக்கொண்டே உண்டனர்., சித்தார்த் அவள் இருந்த அறைக்கு எடுத்துக்கொண்டு வந்து அவளோடு அமர்ந்து கொண்டிருந்தான்… அப்போதுதான் அவளிடம் கேட்டான் புடிச்சிருக்கா வீடு எல்லாம் என்று கேட்கும் போது..,

மித்ரா எனக்கு உங்களை விட உங்க அம்மா அப்பா ரொம்ப பிடிச்சிருக்கு, என்று சொன்னாள்….

அடிப்பாவி.., கல்யாணம் பண்ணிக்கிட்டவன புடிச்சிருக்குன்னு சொல்லாம., எங்கம்மா அப்பாவ., சொல்லுற, இது உனக்கே நியாயமா இருக்கா.., இரு எங்கம்மா ட்ட நியாயம் கேட்கேன் என்று சொல்லவும்….

உங்கள பிடிக்கலை ன்னு ஒன்னும் சொல்லலையே…. புடிச்சிருக்கு ஆனால் அதையும் விட அவங்களை புடிச்சிருக்கு ன்னு சொன்னேன் அவ்வளவுதான்…

வெளியே சண்டை போல் பேசினாலும் அவனும் மனதிற்குள் ரசித்து கொண்டான்…, அம்மா அப்பாவின் ஏக்கம் தீரும்., பிரச்சினை இல்லாத ஒரு குடும்பமாக இருக்கும்,

சண்டை இல்லாத குடும்பமும்.., பிரச்சினை இல்லாத குடும்பங்களும் இல்லை., ஆனால் எது வந்தாலும் பொருத்துப் போகிற மனம் அனைவருக்கும் இருந்துவிட்டால் அனைத்தையும் எடுத்து போட்டுவிட்டு போய்க்கொண்டே இருக்கலாம்….

சற்று நேரத்தில் சித்தார்த்தின் அம்மா வந்து.., ஓடுறா, உனக்கு என்ன வேலை நானே மருமகளிடம் பேச வேண்டியது நிறைய இருக்கு…. என்று அவனை கட்டாயப்படுத்தி வெளியேற்றி அனுப்பினார்… அம்மா இதெல்லாம் நியாயமே இல்லை எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிட்டு நீங்க உக்காந்து பேசிடிருக்கீங்க என்று கேட்கவும்……

எனக்கு பேச்சுத்துணைக்கு ஆளில்லாமல் தாண்டா…, உனக்கு கல்யாணம் பண்ணி வைச்சேன்., நீ என்னமோ உனக்காக கல்யாணம் பண்ணி வைச்சேன் நினைச்சுட்டியா… தப்பு பண்ற டா மகனே.., அங்க தான் தப்பு பண்ற.., நான் எனக்காக தான் உனக்கு பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி வச்சேன்… எனக்கு பேசுது ஆள் கிடைச்சிருக்கு…, பேசவிடாமல் வந்து டிஸ்டர்ப் பண்ணிட்டு இருக்கான் போடா என்று சொல்லவும்…, அம்மா நான் அப்பாட்ட சொல்லிக் கொடுப்பேன்…, என்று அவன் கொஞ்சிக்கொண்டு வெளியே செல்லவும் இருவரையும் பார்த்து சிரித்துக் கொண்டாள் மித்ரா…..

அய்யோ அத்தை உங்களையும் அவங்களையும் பார்க்கும்போது ரொம்ப நல்லா இருக்கு…, ரெண்டு பேரும் நல்ல பிரெண்ட் மாதிரி பேசுறீங்க.., பார்க்கவே நல்லாயிருக்கு என்று அவள் சொல்லவும்…

இதுக்குதான் உன்னை பார்த்த உடனே எனக்கு பிடித்திருந்தது… நாங்க ரெண்டு பேரும் பேசுவதை பார்த்து உனக்கு சின்ன பொறாமை கூட வரல பாத்தியா…, நாங்க ரெண்டு பேரும் பிரெண்ட்ஸ் மாதிரி பேசுறோம் ன்னு புரிஞ்சுகிட்ட பத்தியா., இதுதான் இந்த இருந்த ஒரு விஷயத்துக்காக தான்…. உன்ன பாத்த உடனே பிடிச்சிடும் ன்னு சொன்னான்…

கண்டிப்பா அந்த பொண்ணு உன் கிட்ட நல்லா பழகுவா…, அப்படின்னு சொன்னான்.. எங்களுக்கு இருந்த ஒரே பயம் எல்லாம் வர்ற பொண்ணு பிரிக்கிறவளா இருந்தா, என்ன பண்ண., உங்க மாமா உன்ன பார்த்தா உடனே அதை தான் சொன்னாரு… இந்த பொண்ணு நம்ம குடும்பத்தை பிரிக்காது ன்னு… நமக்கு அது போதும் என்று சொன்னார்…

அத்தை ஏதோ பேசணும் சொன்னீங்க… அது சொல்லித்தான் அவங்களை வெளியே அனுப்பினிங்க…. என்ன விஷயம் என்று கேட்கவும்….

சித்தார்த்த்தின் அம்மா.., சித்தார்த் ஆஸ்திரேலியாவில் வாழும் வாழ்க்கை பற்றி பேசிக்கொண்டிருந்தார்… அவனது பழக்கவழக்கம் எல்லாத்தையும் சொல்லி விட்டு., அவன் அவள் கொடுத்த பொம்மையை எப்படி வைத்திருக்கிறான்., என்று சொல்லத் தொடங்கினார்…. இவள் கொடுத்த குட்டி டாம் அண்ட் ஜெர்ரி பொம்மையை பத்திரமாக அவன் படுக்கை அறையில் வைத்திருப்பதாகவும்., எப்போதும் அவனோடு தூக்கிக்கொண்டு சுற்றுவதாகவும்., சொன்னார்… எங்கு போனாலும் அந்த பொம்மையை அவனோடு எடுத்துக்கொண்டு சென்று விடுவான்…இப்போது கூட அவன் இங்கு வந்து இருக்கும்போது அவனுடைய கையில் தான் இருக்கும் என்று சொல்லிக்கொண்டிருந்தார்… அதுமட்டுமன்றி அவன் அவள் மீது கொண்ட நேசத்தையும்., அதனால் அவன் விடுபட்டு வந்த பழக்கவழக்கங்களையும் சொல்லி…, தப்பு தான் இல்லன்னு சொல்ல மாட்டேன்.., ஆனா என் பிள்ளையை நீ நல்ல பார்த்துக்கோ.., எதையும் எந்த சூழ்நிலையும் சொல்லி காட்டிராத அவன் மனசு தாங்காம போனால் எனக்கும் மாமாவுக்கும் பொறுக்க முடியாது…, இனி உன் கையில தான் இருக்கு எல்லாம் என்று சொன்னார்…..

இல்லத்தை., கண்டிப்பா அப்படி எல்லாம் சொல்லிக் காட்ட மாட்டேன்… எனக்கும் தெரியும் அந்த மாதிரி தப்பை மட்டும் பண்ண மாட்டேன்… கண்டிப்பா பத்திரமா பாத்துக்கிறேன் போதுமா… உங்கள் பிள்ளைக்கு ஒரு தொட்டில் கட்டி போட்டு பாத்திரமா பார்த்துக்கலாம் என்று கேட்கவும்…

காமாட்சியும் சிரித்துக்கொண்டே அடி பெண்ணே என் பையனுக்கு தொட்டில் கட்ட வேண்டாம்.., என் பேரப்பிள்ளைகளுக்கு தொட்டில் கட்ட ரெடி பண்ணு என்று சொல்லவும்…

வெட்கத்தில் சிரித்துக்கொண்டே… ம்ம்ம்…என்று சொன்னாள்…,

நீ எனக்கு பேரனோ பேத்தியோ பெற்று தந்து விட்டால்., அதன் பிறகு நான் வளர்த்துக் கொள்வேன்., முடிந்தளவு பேத்திதான் வேண்டும் என்றார்…

அது என் கையில் இல்லத்தை என்று இவள் சொல்லிக் கொண்டிருந்தாள்… தோழியிடம் பேசுவது போல மனம் இருந்தது மித்ராவிற்கு….

மித்ரா நினைத்துக்கொண்டால் தன் வீட்டில் கூட இப்படி பேசியது இல்லை… ஆனால் இவர்களிடம் பேசும்போது மட்டும் பதிலுக்கு பதில் பேசுவதும் ஒரு நெருங்கிய தோழியிடம் பேசிய உணர்வும், வருவதை கண்டு மனதிற்குள் ஆச்சரியமாக உணர்ந்தாள்…, அதையே காமாட்சியிடம் சொல்லவும் செய்தாள்.

அப்போது காமாட்சி தான் சொன்னார்., மாமியார் வந்து ஒரு மாமியாரா இருக்கக்கூடாது மா…. அம்மாவா இருக்கலாம்…, குடும்பத்தில் சிறந்த மாமியார் மருமகள் ஆக இருப்பது மட்டுமின்றி.., ஒரு மருமகளை அந்த குடும்பத்தின் சிறந்த குடும்பத் தலைவியாகவும் மாமியாரால் மட்டுமே மாற்ற முடியும்.., அதை எந்த மாமியாரும் புரிந்து கொள்வதில்லை., எனக்கு எங்க மாமியார் அம்மா வா தான் இருந்தாங்க என்று சொல்லி… தன் மாமியாரை பற்றிய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார்…….

மித்ராவிற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது… ஒரு அம்மாவாக என்பதை விட தோழி போன்ற முறையில் மிக நெருக்கமாக உணர்ந்தாள்… அதையே சொல்லிக் கொண்டு அவர் கையைப் பிடித்து கோர்த்துக் கொண்டு., அவள் தலையை அவர் தோளில் தலைசாய்க்கவும்., சித்தார்த் வரவும் சரியாக இருந்தது…..

அன்பை பகிரும் போது

அளப்பரிய ஆனந்தம்..,

உன்னோடு சேர்ந்து

உளமார்ந்து சிரித்தது

உயிர் உள்ளவரை

வேண்டும்….

உள்ளத்தில் நீ

காதல் தந்தாய்…

காற்றிலே கலந்து

சொல்லவேண்டும்

உயிர் உள்ளவரை

காவலாய் நான் என்று….”

Advertisement