Advertisement

அத்தியாயம் 14

 

      திருமணம் நிச்சயக்கப்படுவது என்னவோ சொர்க்கத்தில் தான்…. ஆனால் நடப்பது என்னவோ இப்புவியில் தான்., அத்திருமணத்தை சொர்க்கலோகமாக மாற்றிக்காட்டினார் தொழிலதிபர் பரசுராம்., அவரின் ஒரே மகனின் திருமணம் என்பதால் பார்ப்பவர் வியக்கும் வண்ணம் நடந்தது… முதல் நாள் நிச்சயதார்த்தத்தின் போதே அனைவரும் அதிசயிக்கும் அளவு நிச்சயதார்த்த மேடை அலங்காரம் தனிச் சிறப்பாக இருந்தது…. அதைத் தொடர்ந்து நடந்த வரவேற்பும் உணவுப் பதார்த்தங்களிலும் அனைவரும் அசந்து போகும் அளவுக்கு இருந்தது….. தொழில்துறை நண்பர்களும் சரி அவரின் பழைய அரசியல் வட்டங்களும் சரி வந்து சென்றனர்… மறுநாள் திருமணத்திற்கு மணமேடை அலங்காரம் வேறு விதமாக இருந்தது…. ஒவ்வொன்றிலும் தனி கவனம் எடுத்து செய்தவர்., மருமகளை மட்டும் விட்டுவிடவா செய்வார், சென்னையிலேயே பெரிய அழகு நிலையத்தில் இருந்து வர வைக்கப்பட்ட பெண்கள் ஏற்கனவே அழகாக இருந்தவளை வானிலிருந்து இறங்கி வந்த தேவதை போல அலங்கரித்திருந்தனர்… அவளுக்கே அவளை நம்ப முடியாத அளவிற்கு இருந்தது., தான் தானா இது, என்று ஒரு முறைக்கு இரு முறை பார்த்துக் கொண்டாள்….

வீட்டினர் அனைவரும் சுற்றிப் போட வேண்டும் என்று சொன்னதோடு., அவ்வப்போது கன்னம் வழித்து திருஷ்டி கழித்து கொண்டு இருந்தனர்…. காமாட்சியோ மருமகளின் அழகில் பிரமித்துப் போய் இருந்தார்., மகனுக்கு இதைவிட அழகான பெண் எங்கேயும் கிடைத்து இருக்காது என்ற எண்ணம் அவருக்குள் ஓங்கியிருந்தது…..

திருமண வரவேற்பிற்கு தனி அலங்காரம் என்றும்., திருமணத்திற்கு தனி அலங்காரம் என்றும்., அதற்கு ஏற்ப நகைகளும் மாற்றி மாற்றி அணிய வைத்திருந்தனர்., ஒவ்வொன்றிலும் அவள் ஒவ்வொரு விதத்தில் அழகாக இருந்தாள்., சித்தார்த் தான் திணறிப் போனான்…..

அத்தனை அழகும் எனக்கே சொந்தம் என்ற கர்வம் அவனுள் ஒரு நிமிடம் தலை தூக்கவே செய்தது…, அவள் கழுத்தில் மாங்கல்யம் அணிவித்து மூன்று முடிச்சு போட்டு காலில் மெட்டி அணிவிக்கும் போது அவனுள் வந்த மாற்றம் அவன் மட்டுமே அறிந்த ஒரு விஷயம்… அதன் பின்பு அவளிடம் சற்று நெருக்கமாகவே நெருங்கி நின்றான்… அவள் தான் அவ்வப்போது அவனை ஒருவிதமாக பார்த்துக் கொண்டு சற்று தள்ளி நிற்பாள்…..

திருமணம் முடிந்த சற்று நேரத்தில் திருமணத்திற்கு என்று வந்தவர்கள்., சற்றுத் தள்ளி உள்ள சொந்தம் எல்லாம் கிளம்பியிருந்தனர்.., நெருங்கிய சொந்தமும் நட்பும் மட்டும் இருக்க சற்று படபடப்பு குறைந்து அமைதி நிறைந்த அந்த நேரத்தில் அவளருகே நெருங்கி அமர்ந்து தோளை சுற்றி கையைப் போட்டு பிடித்துக்கொண்டு, ஏன் தள்ளி தள்ளி போற என்று கேட்டுக் கொண்டிருந்தான்….

அவளோ நீங்கள் நேற்று வரவேற்பின் போது கூட இப்படி இல்லை.., இப்போது நீங்கள் சரி இல்லை என்று சொன்னாள்….

அவனும் சிரித்துக் கொண்டே ஆமா., நேற்று ஈவ்னிங் வரைக்கும் டென்ஷன் தான் எனக்கு., காலைல உன் கழுத்துல தாலி கட்டுற அந்த நிமிஷம் வரைக்கும் படபடப்பு இருந்திட்டே இருந்துச்சு.,என்னால நம்பவே முடியல., இப்போ ஓகேவா இருக்கேன்…, என் வொய்ப் பக்கத்தில் உட்கார நான் உட்காரேன்.., இப்ப யார் கேட்க முடியும்., என்று சொல்லவும் அவனை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு சிரித்துக்கொண்டாள்….

நீ இப்ப எதுக்கு., என்னை பார்த்து ஒரு மாதிரி சிரிச்ச என்று அவன் கேட்கவும்… அவளும் ஒன்றும் இல்லை என்று தலை ஆட்டினாள்., ஏய் நீ ஏதோ மறைக்குற மாதிரி இருக்கு… உண்மையை சொல்லு என்று அவன் கேட்கவும்,

அப்புறமா சொல்றேன் என்று மட்டும் சொன்னாள்……

நிஜமா…

நிஜமா சொல்லுவேன் சின்ன பிள்ளை மாதிரி கேட்காதீங்க என்றாள்..

அன்று அதிகாலையில் ஜெகதீஷ் திருமணத்திற்கு வந்து இருந்தான்., திருமணம் முடிந்ததும் அவனும் கிளம்பிவிட்டேன்., அவர்கள் வீட்டினரோடு… ஏன் என்றால் இன்னும் இரண்டு நாளில் அவனுக்கு திருமணம் என்பதால் காலையில் முதல் பிளைட்டில் வந்தவர்கள் திருமணம் முடித்து அடுத்த பிளைட் ல் கிளம்பிவிட்டனர்…

பிரதீபா உடன் வந்திருந்தால் இருவருமே சொன்ன ஒரே வார்த்தை., ஜோடிப்பொருத்தம் அழகாக இருக்கிறது…, எங்கள் கண்ணே பட்டுவிடும், என்று

அதன் பிறகு நால்வரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்… அந்த நேரம் சித்தார்த்தும் சரி, ஜெகதீஷ் ம் சரி, பெண்களும் சரி , மகிழ்ச்சியாக உணர்ந்த ஒரு தருணம்… இரு வீட்டினரும் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தனர்….

இருவருக்கும் இடையே சண்டை இழுத்து விட்டு வேடிக்கை பார்த்த அவனுக்கு சரியான மண்டகப்படி கொடுக்கப்பட்டிருந்தது ஜெகதீஷ் ன் தந்தையால்…..

முதல் நாள் நிச்சயதார்த்தத்தின் போது, வரவேற்பின் போது , எடுக்கப்பட்ட போட்டோ ஷூட்டில் அருகில் நெருங்கி நிற்கவே தயங்கி தயங்கி நின்ற சித்தார்த் தான் இன்று போட்டோவிற்கு விதவிதமாக போஸ் கொடுக்கத் தயங்க வில்லை…. அவன் கொடுத்ததில் மித்ராவிற்கு தான் அடிக்கடி முகம் சிகப்பு நிறம் பூசிக் கொண்டது… அவள் எதிர்பார்க்காத ஒன்று அத்தனை பேர் முன்னிலையிலும் கட்டிப் பிடிப்பது போன்றும்., முத்தம் கொடுப்பது போன்றும்., எடுக்க அவன் தயங்கவே இல்லை….

கிடைக்கும் இடைப்பட்ட நேரங்களில் அவனிடம் சண்டை கிளம்பினாள்… எல்லாருக்கும் முன்னாடி இப்படி எல்லாம் கை வைக்காதீங்க…., எனக்கு என்னவோ மாதிரி இருக்கு என்று எவ்வளவோ சொல்லியும்., அவன் அவள் இடுப்பில் கை போட்டு இழுப்பதைப் நிறுத்தவே இல்லை., ஒவ்வொரு போட்டோ விற்க்கும் தோளில் தலை சாய்ப்பது போலும்., பின்னால் இருந்து அணைப்பது போலும்., எடுக்க அவன் தயங்காத போது., இவளுக்கு மட்டும் வெட்கம் வந்து கொன்றது.,லூசு பக்கி கைய எடு டா என்றுகூட திட்டி விட்டாள்…..

அவனோ ஏன் என் வொய்ப் கூட போட்டோ எடுப்பதற்கு., நான் எதுக்கு தயங்கனும்., வெட்கப்படனும்., என்று கேட்டான்…

நேத்திக்கெல்லாம் பக்கத்துல நின்னு போட்டோ எடுக்கவே அவ்வளவு யோசிச்சிங்க…. இன்னைக்கு என்ன என்று கேட்கவும்…, அப்போ வேற, இப்ப வேற, என்று சமாளித்தான்…

போட்டோ எடுக்கும் இடத்தில் இருந்து நண்பர்களையும், சிறியவர்களையும்., தவிர மற்றவர் அனைவரும் நகர்ந்து சென்றனர்…

அவன் செய்த சில குறும்புத்தனங்களில் இவள் முகம் சிவக்க…. போட்டோகிராபரிடம் என் பொண்டாட்டி எப்பவாவது தான் வெட்கத்தில் முகம் சிவப்பா…. போட்டோ எடுத்துருங்க என்று சொல்லிக் கொண்டிருந்தான்….

உடனே ஒரு வாரத்தில் கிளம்ப வேண்டியது இருப்பதால் மற்ற போட்டோ எதுவும் வேண்டாம்…, என்று சொல்லிவிட்டு கொஞ்சம் மட்டுமே எடுத்துக் கொண்டனர்..,, விதம் விதமாக எடுப்பதற்கு போட்டோகிராபர் சொல்லிக் கொண்டிருந்தாலும், அதற்கெல்லாம் நேரமில்லை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லிவிட்டான்..,

அதேநேரம் சித்தார்த்தின் உறவினர் ஒருவர் பரசுராமனிடம் ஒரே பையன் கல்யாணம் ஜாம்ஜாம்னு வைத்து சாப்பாடும் பிரமாதப்படுத்திட்டிங்க… இன்னும் அடுத்த பங்ஷன் உங்க வீட்ல எப்போ வரும் தெரியலையே…, என்று கேட்கவும்..,

கவலைப்படாதீங்க., கூடிய சீக்கிரத்தில் மருமகளுக்கு வளைகாப்பு வரும்.., அப்புறம் பேரப் பிள்ளைகள் பிறந்து பெயர் வைக்கிற பங்ஷன் வரும்.., இன்னும் வரிசையா எங்க வீட்ல பங்ஷன் தானே, என்று அவர் சத்தமாக சொல்லி சிரிக்கவும்…, இவளுக்கு முகத்தை எங்கே கொண்டு போய் வைப்பது என்று தெரியவில்லை….

சித்தார்த் அதை வேறு பெருமையாக, எங்க அப்பா என்னை ரொம்ப நல்லா புரிஞ்சு வச்சிருக்காரு…, மித்ரா என்று சொல்லி சிரித்தான்…..

 பரசுராமன் பேச்சில் உறவினர்களும் பெரியவர்களும் சிரித்துக் கொண்டாலும்., சரி சீக்கிரம் எல்லாம் நல்ல காரியமும் நடக்கட்டும் என்று பேசிக் கொண்டிருந்தனர்.,

அப்போது தான் மற்றொரு உறவினர் ஆஸ்திரேலியா போனா எப்படிப்பா மருமகளுக்கு வளைகாப்பு என்று கேட்கவும்., இல்லை ஆறு மாதம்தான் ஆஸ்திரேலியா., அதன்பிறகு தொழிலை முன்புபோல அங்குள்ளவர்கள் பார்த்துக்கொள்வார்கள்…, இடையிடையே நானும் , என் மகனும் மாறி மாறி சென்று பார்த்துக் கொள்வோம்., மருமகளும் மகனும் ஆறு மாதத்தில் இங்கே வந்து விடுவார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார்…….

அப்போது சித்தார்த் மித்ராவிடம் கேட்டுக்கொண்டிருந்தான்…. ஆறு மாதத்தில் திரும்ப இங்கு வருவது உனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லையே., என்று கேட்கவும்.,

நான் இப்பவே இங்கே இருக்க ரெடியா இருக்கேன்., நீங்க தான் அங்க போகணும் இருக்கீங்க., உங்களுக்காக தான் வர்றேன்…. எனக்கு இங்கே இருக்கத்தான் பிடிக்கும்., நம்ம ஊர்ல இருக்கிற மாதிரி வேற எங்கேயும் ஃப்ரீயா இருக்க முடியாது,, அதனால இங்க தான் பிடிக்கும் என்று சொன்னாள்….,

Advertisement