Advertisement

  மித்ராவிற்கு பாஸ்போர்ட் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது…, அதற்கான வேலையை சித்தார்த் பார்த்துக்கொண்டிருந்தான்…,  அவளுடைய பரீட்சை நேரம் இருவரும் சாதாரணமாக போனில் பேசிக் கொண்டாலும் இன்னும் சில தயக்கங்கள் இருவருக்கும் இடையே இருக்கதான் செய்தது…

      பரசுராமும்.,  காமாட்சியும் அவளை தங்கள் பெண் போல பார்த்துக் கொண்டனர்…, எது வாங்கினாலும் மித்ராவுக்கு பிடித்திருக்கிறதா, என்று ஒரு முறைக்கு பலமுறை கேட்ட பிறகே காமாட்சி வாங்கினார்..,

         பெண் பிள்ளை இல்லை,தங்கள் ஆசையை தீர்த்து கொள்ள வேண்டும்., என்று பார்த்து பார்த்து உடை தேர்வு செய்வதாகட்டும்., நகை தேர்வு செய்வது ஆகட்டும்., காமாட்சி ஒருபுறம் வாங்கிக் கொண்டிருந்தார்., மித்ராவின் தாய் தடுத்ததற்கு உங்க புள்ளைக்கு நீங்க செய்றதை செய்யுங்க…, என் மருமகளுக்கு நான் வாங்குவதை வாங்கிக்கிறேன்.,  என்று சொல்லிவிட்டார்….

        வீட்டில் அனைவருக்கும் அது மகிழ்ச்சியாகவே இருந்தது.., பரீட்சை மும்மரத்தில் இருந்தாலும் சமையல் கற்றுக் கொள்வதிலும் கவனம் செலுத்தத் தொடங்கினாள்.,  ஏனெனில் திருமணம் முடிந்து ஒரு வாரத்தில் ஆஸ்திரேலியா கிளம்ப வேண்டும், என்பது சித்தார்த்தின் திட்டம் சில அலுவலக வேலைகளை மட்டுமன்றி அனைத்து பொறுப்புகளையும் இத்தனை வருடங்களாக இவனேப் பார்த்துக் கொண்டிருந்ததால்.,  இப்போது அவனுக்கு அப்படியே விட மனம் இல்லை.,  அதனால் உடனே கிளம்ப வேண்டும் என்று மட்டுமே சொன்னான்……

      மித்ரா., ஒருமுறை உடனே கிளம்ப வேண்டுமா என்று கேட்டதற்கு கண்டிப்பாக திருமணத்திற்குப் பிறகு நான்கு நாட்கள் மட்டுமே இங்கே., திருமணம் முடிந்த மறுநாளே கோயம்புத்தூர் செல்கிறோம்., அங்கு ஜெகதீஷ் திருமணத்தை அட்டெண்ட் செய்து விட்டு., உடனே சென்னை திரும்பி அதிலிருந்து இரண்டு நாள்களில் ஆஸ்திரேலியா கிளம்ப வேண்டும் என்று சொன்னான்….

     பரசுராம் தான் வருத்தப்பட்டார் மருமகளோடு கூட கொஞ்ச நாள் இருக்க முடியாம ஆக்குறீயே., என்று சொல்லியிருந்தார்…,

          நீங்கள் இருவரும் அங்கே வாருங்கள்., என்று அவன் தாய் தந்தையை அங்கு அழைத்துக் கொண்டிருந்தான்…..

         அவளது பரீட்சை ஒரு பக்கம்., அவனது அலுவலக வேலைகள் ஒரு பக்கம் இருந்தாலும்., கல்யாண வேலையும் ஒருபுறம் வேகமாக நடந்து கொண்டிருந்தது.., விரைவில் கல்யாணம் என்னும் நிலையில் அவளுக்கு தேவையானதை அங்கு கொண்டு செல்ல  பேக் செய்வதில் வீட்டினர் இருந்தனர்…

     இன்னும் திருமணத்திற்கு ஒரு வாரம் என்ற நிலையில் வீட்டில் ஒரு நாள் அனைவரும் சேர்ந்து இருக்கும்போது நான் உங்க எல்லார்ட்டையும் பேசணும் என்று அனுமதி கேட்டு இருந்து கேட்டுக் கொண்டிருந்தாள் மித்ரா….

     என்ன பேசணும்.., திடீர்னு பெர்மிஷன் கேட்டுக்கிட்டு இருக்க., என்று தாத்தாவும் அத்தையும் சொல்லவும்,

         அவளோ  அவள் அப்பாவின் முகத்தை பார்த்துக்கொண்டே எல்லோரிடமும் பேச வேண்டிய விஷயம் தான்.. இதில் தனிப்பட எதுவும் கிடையாது அனைவருக்கும் தெரிந்திருக்க வேண்டியது தான் என்று சொல்லி விட்டு பேச தொடங்கினாள்….

    பொதுவா தான் பேசுறேன் தாத்தா..,  நீங்க என்னை தப்பா எடுத்துக்க கூடாது..,  நீங்க உங்க காலத்திலேயே இருக்கீங்க,  கட்டுப்பாடா வைக்கிறது., பிள்ளைகளைக் கண்ட்ரோல் பண்ணுறது.,  எல்லாம் சரிதான் ஆனா எங்களுக்கு எதுவுமே தெரியாது நினைக்கிறீங்க பார்த்தீங்களா அதுதான் தப்பு.., எங்களுக்கும் சில விஷயங்கள் தெரியும், நல்லது கெட்டது தெரியும்., எங்களை நீங்க நல்லபடியா வளர்த்து இருக்கீங்க ன்னு நம்பும்போது எங்களுக்கும் சில விஷயங்கள் தெரியும் ங்கிறத  நீங்க ஏற்றுக் கொள்ளுங்கள்.,

        பொதுவா நீங்க சொல்ற விஷயங்கள்., எங்களுக்கு நல்லதா தானிருக்கும் இல்லன்னு சொல்லல..,  ஆனா  கல்யாணங்கறது வாழ்க்கை சம்பந்தப்பட்டது.., ஆனா நீங்க அந்த விஷயத்துல ரொம்ப அடம் பிடித்தது தான் என்னால தாங்கவே முடியல..,

       தாத்தா நல்லா யோசிச்சு பாருங்க..,  இந்த விஷயத்தில் உண்மையிலேயே ஜெகதீஷ் அப்படிப்பட்ட டைப்பா இருந்து இருந்தா என் நிலைமை என்ன ஆயிருக்கும்..,  இல்ல சித்தார்த் எனக்காக வந்து பண்ணல அப்படின்னா…, என்னோட நிலைமை என்ன ஆயிருக்கும் யோசிச்சு பாருங்க..,

            மத்தபடி.,  உங்களோட வளர்ப்பில் நான் எந்தக் குறையும் சொல்ல மாட்டேன்.,  எல்லாமே கரெக்டட் தான்., ஆனால் நீங்க நாங்க சொல்வதையும் ஒரு நிமிஷம் சில விஷயங்கள்  அப்படி இருக்குமோ ன்னு.,  யோசிச்சு பாருங்க..,  அது மட்டுமில்லாம எங்க அப்பாவை இன்னும் நீங்க கைக்குள்  அடக்கற மாதிரி வைத்திருப்பது., எங்களுக்கு பிடிக்கல.,  எங்கப்பாவும் பேங்க் ல ஒர்க் பண்றார்.., எங்க அப்பா ஒன்னும் வேலை பார்க்காமல் உங்க சம்பாத்தியத்துல சாப்பிடல.., அப்படி இருக்கும்போது எத எடுத்தாலும் எங்கப்பாவை கன்ட்ரோல் பண்ணாதீங்க..,  அவருடைய குடும்பம் தனி தாத்தா..,   நீங்க உங்க புள்ளைங்கள வளர்த்து மேரேஜ் பண்ணி கொடுத்துட்டீங்க…. உங்களுக்கு  வருஷம் முடிஞ்சிடுச்சி., பேரன் பேத்தி பார்த்தாச்சு, எல்லாம் முடிஞ்சிடுச்சி இன்னும் எங்கப்பாவ கண்ட்ரோல் பண்ண நினைக்காதீங்க, தாத்தா…, அது எனக்கு பிடிக்கல என்று சொல்லிவிட்டு…

     அவள் அப்பாவிடம் பேச தொடங்கினாள்.,  அப்பா உங்க அப்பா உங்களை கண்ட்ரோல் பண்றாங்க இல்லன்னு சொல்லல..  ஆனா கண்ட்ரோல் பண்ணினாலும் உங்களுக்குன்னு ஒரு எதிர்ப்பு இருக்கணும்…    உங்க குடும்பத்தை எப்படி கொண்டு போனும் ன்னு… நீங்க தான் ஒரு முடிவு எடுக்கனும்., எதுக்கெடுத்தாலும் அப்பாட்ட போய் நிற்கக் கூடாது., அப்படி நிற்பதா இருந்தா நீங்க எதுக்கு கல்யாணம் பண்ணிகிட்டீங்க…, அம்மா க்கு ஒரு இண்டிபெண்டன்ஸ் வேண்டாமா… அம்மா என்ன எதிர்பார்ப்போட கல்யாணம் பண்ணி இருப்பாங்க…,  அதாவது உங்களை தனிக்குடித்தனம் போயி குடும்பத்தை விட்டுட்டு இருக்கணும் அப்படி ன்னு  நான் சொல்ல வரல.., நீங்களே ஒரு நிமிஷம் இப்ப யோசிச்சு பாருங்க.., நான் மேரேஜ் பண்ணிக்க போறது உங்களுக்கு சந்தோஷமா இல்லையாப்பா..,

     சந்தோஷம் தான் டா….

           அதே நேரம் என்னை சித்தார்த் தை  ப்ரீயா விடாம என்னோட மாமியார் மாமனார் கன்ட்ரோலில் வச்சிருந்தா.,   உங்களுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும்,  நம்ம பொண்ணு இப்படி போய் இன்னொருத்தன் கிட்ட அடிமை மாதிரி இருக்கு., அப்படின்னு தோணுமா தோணாதா யோசிச்சு பாருங்க பா..,

        எப்பவுமே பொண்ணுங்க  பிறந்த வீட்டில் இளவரசி மாதிரி வளர்ந்தவங்க தான்…, ஆனால் போற இடத்தில் அவங்க  அடிமை மாதிரி இருக்கணும்னு அவசியம் கிடையாது…. யோசிங்க  அம்மாவும் இன்னொரு இடத்தில் இளவரசி மாதிரி வாழ்ந்தவங்க தான்….  ஈக்குவலா ட்ரீட் பண்ணுங்க… இந்த வீட்ல என்ன வசதி குறை ன்னு., நீங்க  நினைக்கிறீங்க.., எல்லாரும் சம்பாதிக்கிறீங்க.,  எல்லாரும் என்ன பண்றிங்க., நினைச்சா வீட்டில் கார் இருக்கு நீங்க யூஸ் பண்ணலாம்., ஆனா காரை யூஸ் பண்ண மாட்டேங்கறீங்க.,

      வண்டியில அனுப்ப மாட்டேங்குறீங்க பஸ்ஸில்தான் போறோம்., அது எதுக்கு என்ன பண்ண போறீங்க.., காசை மிச்சம் பிடிக்க வேண்டியதுதான்..  ஆனால் கஞ்சத்தனமா இருக்கக்கூடாது… அதையும் யோசிச்சுக்கோங்க..,  பிள்ளைகளுக்கு செலவு பண்றதுக்கு  யோசிக்கிறீங்கப்பா., ஒவ்வொன்றுக்கும் கணக்கு கேக்கறீங்க,  எதுக்குப்பா கேட்கணும் உங்க பிள்ளைகளுக்கு என்ன வேண்டும் ன்னு.,  உங்களுக்கு தெரியாதா, வெளியே  மட்டும் நீங்க பழகாம இருக்கீங்களா.., உங்களுக்கு எத்தனை பிரண்ட்ஸ் இருக்காங்க எத்தனை பேரோட பழகுறீங்க…., ஏதாவது பிள்ளைகளுக்கு செய்யணும் இதுவரைக்கும் நீங்க யோசிருப்பீங்களா..,

         எங்க ஸ்டடிஸ்யோ.,  எதிலேயோ உங்க இஷ்டத்துக்கு தான்.,  எல்லாமே பண்ணுறீங்க.., உங்க அப்பா என்ன சொன்னாலும் அத தான செய்றீங்க யோசிங்க…,  நெஜமா சொல்றேன், அந்த விஷயத்தில் எனக்கு  கண்டிப்பா சித்தார்த் நல்லாப் பாத்துப்பாங்க.,  சித்தார்த்  எதற்கெடுத்தாலும் அவங்க பேரன்ஸ் ட்ட போய் நிற்கிறவரு இல்ல… அதே மாதிரி அவங்க பேரன்ஸ் ம் டாமினேடட் கிடையாது..,   நீங்கள் கொஞ்சம் மாறி  இருந்துக்கோங்க.., பா.

          ஏன்னா  நான்  இன்னொரு வீட்டுக்கு போகப் போற பொண்ணு…  நான் ஒரு வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் எங்க அம்மா அப்பா குடும்பம் எப்படி இருக்கணும் அப்படின்னு ஆசை வரும்.,  அது தான் உங்க கிட்ட சொல்றேன் அவ்வளவுதான்…

     அப்புறம் அத்தை உங்க கிட்ட தான்… நீங்க நான்  சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க… மாமா  பெரிய ஆபிஸர் ரேங்கில்  இருக்கிறவரு அவரை மதித்து நடத்துங்க…  யாரோ மாதிரி நடத்தாதீங்க.,  இதெல்லாம் கொஞ்சம் யோசிச்சு பார்த்தீங்கன்னா உங்களுக்கே புரியும்…

  இதோட முடியபோறது கிடையாது இன்னும் எவ்வளவோ போகவேண்டிய பாதை இருக்கு…  அவங்க உங்க ஹஸ்பன்ட்., தான்.,  அவங்க தான் உங்க கூட கடைசி வரைக்கும் வர போற ஆள்…, அதனால கொஞ்சம்  உங்க வாழ்க்கை துணையும் அனுசரித்து நடத்த கத்துக்கோங்க….

          பாட்டி அப்புறம் நீங்கதான் எதுக்கெடுத்தாலும் தாத்தா சொல்வதற்கெல்லாம் ஆமாம் சாமி போடாதீங்க….  உங்க மனசுல சரின்னு பட்டுச்சின்னா சரின்னு எடுத்துக்கோங்க… தப்புன்னு பட்டுச்சின்னா தைரியமா சொல்லுங்க…  காலம் போன கடைசியில் என்னத்தை சொல்ல சொல்றேன்னு கேட்காதீங்க….  ஏன்னா இது வந்து உங்களுக்கான உரிமை., நீங்க வந்து இவ்வளவு நாள் தாத்தா சொல்றத கேட்டு நடந்தீங்க.. ஏன் உங்களுக்கு உள்ள ஆசைகளை கூட நீங்க சொல்லக் கூடாதா..,  உங்களுடைய எண்ணங்களை கூட நீங்க சொல்லக் கூடாதா பார்த்துக்கோங்க….

     நெஜமா சொல்லனும்னா…  இந்த வீட்டில ஒவ்வொரு நிமிஷமும் என்னோட படிப்புக்காக தவிர எதிலையும்  நான் வந்து ரொம்ப பேசினது கிடையாது…. காரணம் என்னன்னா இந்த வீட்டோட ஃபேமிலி சிட்டுவேஷன் அப்படி…. இப்போ என்னால  தைரியமா பேச முடியுது.,  அப்படின்னா எனக்குனு ஒரு சப்போர்ட்…,  இருக்கு அப்படி ங்கிற நம்பிக்கை.., அந்த நம்பிக்கையை கொடுத்தது சித்தார்த்…

             இந்த வீட்டில் இருந்த வரைக்கும் எனக்கு சப்போர்ட் இருந்துச்சு… எங்க அம்மாவோட சப்போர்ட்டும்.., என் தம்பியோட சப்போர்ட்டும், இருந்துச்சு…, ஆனா அவங்களே பயந்து போய் இருக்கும் போது…. நாம பேசி அவர்களுக்கு ஏதும் பிரச்சினை ஆயிரக்கூடாது..,  என்பதற்காகத் தான் ., எதையும் எதிர்த்து கேட்க மாட்டேன்…, ஆனால் இப்போ எனக்கே எனக்கென்று ஒரு சப்போர்ட் இருக்கப்போ என்னால தைரியமா உன் கிட்ட கேக்க முடியுது…,

      வாழ்க்கை என்கிறது ரொம்பப் பெரிய விஷயம் தாத்தா அதுக்கு கதவை  அடைத்து வைத்து வரும் காற்றை  மாற்றிவிடக்கூடாது….  இருட்டு ன்னுஅஞ்சி அஞ்சி இருப்பதை விட கொஞ்சம் ஃப்ரீயா கதவு ஜன்னல் திறந்து விட்டு காற்றோட்டமான நிலைக்கு மாறி இருந்தால்தான்…, வாழ்க்கை வசந்தமாக இருக்கும் சந்தோஷமா இருக்கும்…, எல்லாம் கிடைக்கும்,  இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு, இன்னும் ஒரு வாரத்தில் நான் இன்னொரு வீட்டுக்கு போயிடுவேன்…  அதுக்கப்புறம் ஒன் வீக் ல சித்தார்த் கூட ஆஸ்திரேலியா போயிருவேன்….  அதுக்கப்புறம் நான் சொல்லாம வந்துட்டே ன்னு என் மனசுக்குள கிடந்து தவிச்சிட்டிருக்க கூடாது., அதனால் அதான் சொல்லிட்டேன் பார்த்துக்கோங்க…  நமக்குன்னு ஒரு  ஸ்டேட்டஸ் இருக்கு.., அதை நாம விட்டுக் கொடுக்க கூடாது… நீங்க அப்படித்தான் இருக்கிறீங்க…

      உங்களுக்கு என்ன ஒன்னுமே இல்லாத மாதிரி வெளியே காட்டிக்கிறீங்க…   இரண்டு பேர் வொர்க் பண்ற அம்மா அப்பா எல்லாம் பாருங்க, எப்படி இருக்காங்க…  எல்லாருமே நல்லா தான் இருக்காங்க நீங்க தான்  ஏதேதோ யோசிச்சுட்டு எல்லாத்தையும் குறைச்சுக்கிட்டு இருக்கீங்க……

    அப்போது மித்ராவின் அப்பா சொன்னார் பெரிய மனுஷியாகிட்ட , கல்யாணம் பேசின உடனே என் பொண்ணுக்கு பொறுப்பு வந்துருச்சு… அப்பா பார்த்துக்கிறேன் டா… இனிமேல் எதுவும்  இப்படி நடக்காது…. அப்பா இந்த கல்யாண விஷயத்தில் பிரச்சனை வந்த உடனே யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்…..  நான் இனிமேல் பார்த்துக்குறேன் மா… நீ கவலைப்பட எதுவும் இருக்காது.,  நீ அங்க போயிட்டு போன் பண்ணும் போது இங்க வீட்ல எல்லாம் நல்லா இருக்குன்னு சொல்லுவாங்க..,  அப்பாவை நம்பு என்று சொன்னார்….

     முதல் முதலாக அத்தனை வருடங்களில் ஆதரவுடன் தந்தையின் தோளில் சாய்ந்து கொண்டு கண்கலங்க நின்றால் மித்ரா….

அன்பு செய்ய ஆயிரம்

பேர் வந்தாலும்…

அத்தனை உறவையும்

மொத்தமாய்

குத்தகைக்கு எடுத்தாயா

உன்னால் மட்டுமே…

நான் மீட்டெடுக்க

படுகிறேன்…

ஒவ்வொரு முறையும்.,”

Advertisement