Advertisement

அத்தியாயம் 13

 

       அவர்கள் அனைவரும் சந்தித்துக் கொள்ளும் இடம் வரும்வரை காரில் இருவரும் தனியாக வந்தாலும்., இருவரும் பேசிக்கொள்ளவில்லை… ஏதோ இருவருக்கும் இடையில் ஒரு மௌனத் திரை இருந்துகொண்டே இருந்தது… என்ன பேசுவது என்று அவனுக்கு யோசனை, எப்படி பேச்சைத் தொடங்குவது என்ற யோசனை….  ஜெகதீஷ் பிரதீபாவை வரும் வழியில் பார்த்து அழைத்துக்கொண்டு வரும் முன்…, இவர்கள் இருவரும் வந்துவிட்டதால் அவர்களுக்காக ரிசர்வ் செய்த டேபிளில் அமர்ந்து இருந்தனர்…  அருகில் அமர்ந்து இருந்தாலும் அவளது அமைதி அவனுக்கு என்னவோ போலிருந்தது….  நான்கு வருடங்களுக்கு முன்புவரை இவனிடம் மிகவும் சகஜமாக பேசியவள்…, இப்போது பேசுவதற்கே யோசிக்கிறாள், ஒருவேளை திருமணத்தில் இஷ்டமில்லையோ ஜெகதீஷ் செய்த பிரச்சனையால் தான் சம்மதித்து விட்டாளோ என்று தோன்றியது…. அவனுக்கு., அவளிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினான்…..

    ஜெகதீஷ் போன் எடுக்கலை..,

    வந்துட்டு இருப்பாங்களா இருக்கும்….

     ஓகே… நீ ஏன் இவ்ளோ அமைதியா இருக்க…. எதுவும் பேசணும்னு தோணலையா….  கேட்க வேண்டியது எதுவும் இருக்கா அல்லது மேடம் கோபத்தில் இருக்கீங்களா என்று சிரித்துக்கொண்டே பேச்சைத் துவங்கினான்…..

    மெதுவாக திரும்பி பார்த்தவள் அவனைப் பார்த்துக் கொண்டே இருந்தாள்…,

     என்ன என்று அவன் கேட்கவும்…,

     ஒன்றும் இல்லை என்று தலையை ஆட்டினாள்….,

    நிஜமாவே என்று அவன் கேட்கவும்…, அவள் அவனை முறைத்தாலும்..,

       எதுவா இருந்தாலும் பேசுமா.., பேசினால் தான் தெரியும் உன் மனசுல வெச்சிட்டனா.,  எனக்கு எப்படி தெரியும் என்று கேட்டான்….

    அவளிடம் பதிலேதும் இல்லை,என்றவுடன் என் புடவையோட வராம சுடிதார் மாத்திட்டு வந்துட்ட என்று கேட்டான்…

    அவளும் பதில் பேசத்தொடங்கினாள்…. இல்ல பட்டு புடவை கட்டிட்டு வெளியே வந்தா என்னவோ வித்தியாசமாக தெரியும்…,  அதனால தான் என்று சொல்லவும்.,

       ஓகே என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது, சொல்லு என்று அவன் தொடங்கவும்.,

அவனைத் திரும்பிப் பார்த்து மறுபடியும் முறைத்துக்கொண்டே.., எனக்கும் உங்களை பத்தி எதுவுமே தெரியாது., நான் எப்படி உங்களை பத்தி தெரிஞ்சுகிறது., நீங்க வாய் திறந்து பேசவே மாட்டேங்கிறீங்க என்று சொல்லவும்…

     அவனும் அதையே திருப்பி சொன்னான் நான் அப்புறம் எப்படி உன்ன தெரிஞ்சிக்கிறது.., நீயும் சொல்ல மாட்டேங்குற இல்ல சொல்லு என்கவும்…  இருவரும் சற்று நேரம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தனர்…

      பின்பு ஓகே இப்ப நம்ம ரெண்டு பேரும் ஒரு டீல் வச்சுக்கலாம் என்று அவனே பேசத் தொடங்கினான்.., உனக்கு எக்ஸாம் முடியுற வரைக்கும் நம்ம ரெண்டு பேருக்கும் டைம் இருக்கு…, அந்த டைம்ல நம்ம ரெண்டு பேரும் உனக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது எனக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது தெரிஞ்சுக்கலாம் சரியா என்று கேட்கவும்…,

இவளும் சரி என்று மட்டும் தலையை ஆட்டினாள் ஆனால் வாய் திறந்து எதுவும் சொல்லவில்லை….

    அப்போது வரை ஜெகதீஸ் வரவில்லை என்றவுடன் மெதுவாக நெருங்கி அமர்ந்து அவள் கையோடு கைகோர்த்து கொண்டு.,  கோபம் எல்லாம் இருக்கட்டும், அப்புறம் தனியா சண்டை போட்டுக்கலாம்., இப்ப நம்ம புரிஞ்சுக்கலாம் சரியா என்று கேட்கவும் சிரித்துக் கொண்டே சரி என்று கையை உருவினாள்.,  ஆனால் கையை விடாமல் பற்றிக் கொண்டு., சரி இப்ப நம்ம ஜெகதீஷ் ட்ட பேசி முடிச்ச அப்புறம் ப்ராப்ளம் சால்வ்ட்…

      இதுக்கப்புறம் அவங்களுக்கும் நமக்கும் எந்த பிரச்சினையும் கிடையாது., எப்போதாவது பார்த்தா ஹாய் சொல்லிக்க போறவங்க தான் என்று சொல்லவும் சரி என்றாள்……

        நீ சாதாரணமா பேசு உன்னை பேசினது எதையும் மனசுல வச்சுக்காத எழுதிக் கொடுத்து பேசுறத  வச்சிட்டு தப்பா எடுக்க கூடாது….  யாரையும் என்று சொல்லி அவளுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டிருந்தான்…

      ஜெகதீஷ் க்கு தேங்க்ஸ் சொல்லணும் என்று சொல்லவும்….

       எதற்கு என்றான்., வரட்டும் அப்ப சொல்றேன் என்றாள்…..

       சற்று நேரத்தில் அவர்களும் வந்து சேர்ந்தவுடன் அனைவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டனர்…. தங்களுக்கு பிரச்சினை ஏற்பட காரணமாக இருந்த அவனைப் பற்றி பேசி  முடிவு எடுத்தவுடன் அவன் ஜெகதீஸ் சொந்தக்காரன் என்பது தெரியும்.,அவனை அவன் தந்தை பார்த்துக் கொள்வதாக சொல்லி இருந்ததால் மற்ற விஷயங்களை பேசி இருவரும் ஒருவருக்கொருவர் மன்னிப்பு கேட்டுக்கொண்டு…,  நட்போடு கடைசி வரை இருக்கலாம், என்று பேச்சை முடித்துக் கொண்டனர்..,

      அப்போதுதான் பிரதீபா சொன்னாள்.,  எந்த உறவாக இருந்தாலும் அடுத்தவரின் தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்…,  அது நட்பாக இருந்தாலும் சரி வீட்டிலுள்ள உறவாக இருந்தாலும் சரி நடுவில் சம்பந்தம் இல்லாதவர் ஒருவர் உள்ளே நுழையும் போது அவ்விடத்தில் பிரச்சினைகளை தொடங்கி விட்டு வேடிக்கை பார்க்க தொடங்கி விடுவார்கள்..,

           சிலர் மட்டுமே சமாதானப்படுத்த முயல்வார்கள்…..  மற்றவர்கள் பிரச்சினைகளை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பார்கள்., இது நிறைய இடங்களில் நடக்கிறது முக்கியமாக கணவன் மனைவிக்குள், எனவே மற்றவர்களை குடும்பத்திலோ.,  நட்புகுள்ளோ., அனுமதிக்கும் முன் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிந்த பின்பே அனுமதிக்க வேண்டும்…. என்று பேசிக் கொண்டிருந்தார்கள்., அதுவும் உண்மைதான் என்று ஒத்துக் கொள்ள வேண்டியதாய் இருந்தது…

          அந்த நேரத்தில்தான் ஜெகதீஷ் இடம் மித்ரா, ஆக்சுவலா நான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும்., ஜெகதீஷ்  நீங்க சொல்ல போய் தான் இவங்க விஷயமே எனக்கு தெரியும்… இல்லாட்டி தெரிஞ்சிருக்காது அதனால தான் கல்யாணம் வரைக்கும் வந்துச்சு., இல்லாட்டி அது கூட வந்து இருக்காது., இவங்க இன்னும் சொல்றதுக்கு யோசிச்சிட்டே அங்கே உட்கார்ந்து கிட்டு இருப்பாங்க..,

          நான் இங்க படிச்சு முடிச்சிட்டு எங்க தாத்தா யாரையாவது சொன்னா…,  கல்யாணம் பண்ணிட்டு போயிட்டு இருந்திருப்பேன்…, அக்சுவலி தேங்க்ஸ்  என்றவுடன்…,

             சித்தார்த் சிரித்துக் கொண்டே நீ கல்யாணம் பண்ணிட்டு போற வரைக்கும் என்ன பார்த்துட்டு இருப்பேன் நினைக்கிறாயா…,  பின்னே எதுக்கு உனக்கு பின்னாடி பார்டி காட் போட்டிருந்தேன்., கல்யாணம் வந்துச்சுன்னா உன்ன தூக்கி இருப்பேன் தெரியுமா என்று சொல்லிக் கொண்டிருந்தான்…..

    பதிலுக்கு மித்ரா.., ஐயோ தூக்குற ஆள பாரு சரியான பயந்தாங்கொள்ளி தெரியுமா என்று பேசிக் கொண்டிருந்தாள்….

     நான் ஒன்னும்.., பயந்தாங்கொள்ளி இல்ல.,  ஐயோ பாவம் புள்ள படிப்பு முடியட்டும் ன்னு., வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.,  இல்லாடி எப்பவோ தூக்கி இருப்பேன் தெரியுமா என்றான்…

    அப்போது ஜெகதீஷ் சிரித்துக் கொண்டே அப்ப மேரேஜ்க்கு முக்கியமான காரணம் நான் தான் சொல்லுங்க…, ஓகே.., கல்யாணம் முடிஞ்ச உடனே கண்டிப்பா எங்க ஊருக்கு வந்துட்டு தான் நீங்க போகனும்..,  என்று தங்கள் ஊருக்கு அழைத்து கொண்டு இருந்தான்..,

         அப்போது சித்தார்த் சொன்னான்.,  கல்யாணத்திற்கு தேதி குறிக்கும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.., சற்று நேரத்தில் பிரதீபா சித்தார்த்திடம் பேச வேண்டும் என்று சொல்லவும் சித்தார்த் எழுந்து சென்றான்…..

    பிரதீபா மறுபடியும் சித்தார்த்திடம் ஜெகதீஸ் சார்பாக மன்னிப்பு கேட்டாள்.,  பேசத் தெரியாமல் பேசியதற்காக மன்னித்து விடுங்கள்., என்று…

            அதேநேரம் ஜெகதீஷ் , மித்ராவிடம் சாரி., சொல்லிக் கொண்டிருந்தான்., சாரி நான் உன்னை பார்த்தது கூட இல்லை., இப்படி எல்லாம் பேசியிருக்க கூடாது என்று…

        அங்கு சித்தார்த் பிரதீபா விடம் யாரோ ஒருத்தன் உள்ள இருந்து ஆட்டி படைச்சிருக்கான்…, அது தெரியாம நாங்க சண்டை போட்டுகிட்டு இருந்திருக்கோம்…,  ஆனா நாங்க தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும்…, நீங்க கண்டுபிடித்து சொன்னதுக்கு.., என்று அவன் பிரதீபா விடம் சொல்லிக்கொண்டிருக்க..,

       மித்ராவும் ஜெகதீஷ் இடம் அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்ல…,  தெரியாதவர்கள் பேசுறதெல்லாம் மைன்ட் பண்ணவே கூடாது…., மறப்போம் மன்னிப்போம்..,  இனிமேலாவது நீங்க ஜாக்கிரதையா இருங்க.., யார் என்ன சொன்னாலும் ஒரு தடவைக்கு பத்து தடவை யோசிச்சு முடிவு பண்ணுங்க.,என்று அவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.,

         பின்பு அனைவரும் அவரவர் வீட்டிற்கு கிளம்ப தயாராக திருமணத்தோடு பார்ப்போம் என்று விடை பெற்றுக் கொண்டனர்… அவனும் மித்ராவை காரில் அழைத்து வரும்போது.,  சித்தார்த் என்னை பாத்தா உனக்கு பயந்த மாதிரி இருக்கா… தூக்க மாட்டேன் ன்னு.., நினைச்சியா உனக்கு மட்டும் வேற யாரையும் பிக்ஸ் பண்ணி இருந்தால்.., இந்நேரம் உன்னை தூக்கிட்டு போய் இருந்திருப்பேன்…,

           இந்நேரம் ஆஸ்திரேலியாவில் இருந்திருப்பே என்று சொல்லிக் கொண்டிருந்தான்…, காரில் வரும் போது அவளும் சிரித்துக் கொண்டிருந்தாள்..,

            அவளிடம் பேசத்தொடங்கினான்…,  சமைக்க தெரியுமா என்று கேட்கவும்., ஏதோ கொஞ்சம் கொஞ்சம் செய்யத் தெரியும்…,  என்று சொல்லவும் கொஞ்சம் நல்ல சமையல் கற்றுக் கொள்.,  எனக்கு நாக்கு செத்து போயிருக்கு., நானே சமைச்சு நானே சாப்பிட்டு அது  எல்லாம் ஒரு சாப்பாடு அப்படிங்கற லெவலுக்கு ஆகிப் போனேன்.., நீ  வந்து ஒழுங்கா சமைச்சு போடுவே தானே என்று கேட்டுக் கொண்டிருந்தான்…

      ஓ சமைக்கிறதுக்கு தான் ஆள் தேடிட்டு இருக்கீங்களா…, அதுக்குதான் கூட்டிட்டு போறீங்களா என்றாள்….

       அதற்கும் சேர்த்து தான் கூட்டி போகிறேன், என்றான்…

         அதுக்கும் சேர்த்து என்றால்., வேறு  என்ன என்று கேட்கவும்..,

       கல்யாணம் பண்ணிட்டு சொல்றேன் என்றான்…..

    அவளுக்கும் இன்னும் பத்து பதினைந்து நாள்களில் பரீட்சை முடிய இருப்பதால்.,  பரீட்சை முடிந்த ஒரு வாரத்திற்குள் திருமணம் என்று பேசி வைத்துக் கொண்டனர்.,

Advertisement